Friday, November 7, 2008

பெண்ணென்னும் பேரெழில்.!

நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள் (1104)

இந்தக்குறள் காமத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறது என்று புரிபவர்கள், ஸாரி இங்கேயே விலகிவிடலாம். (அன்றைய காலங்களில் காமம் என்ற சொல் இன்றைய காதலுக்கு ஒப்பாக பயன்படுத்தப்பட்டதெனவும், காதல் என்பது அன்பு என்ற சொல்லுக்கு இணையாக பயன்படுத்தப்பட்டதெனவும், இங்கே நான் காமம் என்று குறிப்பது நாம் அந்தச் சொல்லுக்கு உருவேற்றி வைத்திருக்கும் இன்றைய அர்த்தத்தில்தான் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்)

உணவு, உறக்கம், கடமை மறந்து காதலன் காதலியை நினைத்துக்கிடக்கிறான். அது எதனால்? அதன் பயன் என்ன.? காலம், காலன், மனிதன் இவற்றை மீறி யாராவது அவள் அவனுக்குத்தான் என்ற உறுதியைத் தந்துவிடமுடியுமா? அப்புறமும் ஏன் இப்படிக்கிடக்கிறான்.? ஒருபொழுதில் இருவரும் சுகித்துக்கிடக்கிறார்கள். அதன் நினைவுகளில் நீந்திக்கிடக்கிறானா? அவள் உயிரோடு ஒப்புக்கொடுத்திருக்கிறாளே? அந்தக்கனமா? அவள் அருகிருந்தால் இந்த வெளியுலகு அவனுக்கு இயல்பாகத்தானிருக்கிறது.. அந்த‌ அன்போ? இவனுக்கான வார்த்தைகளை தேவ மொழிகளிலிருந்து திருடிக்கொண்டு வருகிறாள். காதோரம் கிசுகிசுக்கிறாள். அந்தப்போதையா?அருகில் செல்கையில் இதத்தையும், விலகிச்செல்கையில் வெப்பத்தையும் தரும் இந்த அற்புதத்தீயை எங்கே பெற்றாள் இவள்?

நேற்றிரவில் என் கன்னங்களில் நீர்..!


டிஸ்கி : "Warning to bachelors" தொகுப்பை எழுதிய தாமிரா ஊரிலில்லை எனவும் இது அவரது கோஸ்ட் எழுதியது எனவும் ஒப்புக்கொள்கிறோம்.

33 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

நேற்றிரவில் என் கன்னங்களில் நீர்..!

பிரிவினை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

நல்ல கணவன்
நல்ல மனைவி
அமைந்த வாழ்க்கை சங்கீதம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹய் மீ த பர்ஸ்ட்

வெண்பூ said...

பிரசன்ட் சார் மட்டும் போட்டுக்கிறேன்..

முரளிகண்ணன் said...

தாமிரா பிரிவுத்துயர் வாட்டுதா? இல்லை வீட்டில் திரும்பி வந்து பிளாக் படிக்க ஆரம்பித்துவிட்டார்களா?

rapp said...

//தாமிரா பிரிவுத்துயர் வாட்டுதா? இல்லை வீட்டில் திரும்பி வந்து பிளாக் படிக்க ஆரம்பித்துவிட்டார்களா?//

வழிமொழிகிறேன்:):):)

ரோஜா காதலன் said...
This comment has been removed by the author.
ரோஜா காதலன் said...

இது அண்ணிய நினைச்சு எழுதினிங்களா இல்ல அன்னியமா போய்விட்டவங்கள நினைச்சு . . . ?

பாபு said...

என்ன ஆச்சு???
நரசிம் பாதிப்பு தெரியுது

சந்தனமுல்லை said...

//தாமிரா பிரிவுத்துயர் வாட்டுதா? இல்லை வீட்டில் திரும்பி வந்து பிளாக் படிக்க ஆரம்பித்துவிட்டார்களா?//

ரிப்பீட்டு!

கார்க்கி said...

என்ன சகா????? கம்முனுப் போலாம்னு நினைச்சேன். அப்படிப் போனா என்ன அர்த்தம்னு நீங்கதானே எனக்கு சொன்னிங்க..

கும்க்கி said...

:))

கும்க்கி said...

ஹி..ஹி....
என்ன சொல்றதுன்னே தெர்ல...
(வீட்டம்மாவும் கூட உங்க ப்லோக் படிக்கிறதால)

வால்பையன் said...

:)

பிரேம்குமார் said...

////தாமிரா பிரிவுத்துயர் வாட்டுதா? இல்லை வீட்டில் திரும்பி வந்து பிளாக் படிக்க ஆரம்பித்துவிட்டார்களா?//

என்ன தாமிரா, எல்லோரும் உங்கள இந்த காய்ச்சு காய்ச்சுறாங்க :)

//டிஸ்கி : "Warning to bachelors" தொகுப்பை எழுதிய தாமிரா ஊரிலில்லை எனவும் இது அவரது கோஸ்ட் எழுதியது எனவும் ஒப்புக்கொள்கிறோம்.//

டிஸ்கி தான் டாப்பு ;)

பிரேம்குமார் said...

;)

பரிசல்காரன் said...

அருமை தாமிரா..

அடிவாங்காம தப்பிக்க என்னென்னல்லாம் பண்ணவேண்டியிருக்கு!

அத்திரி said...

என்ன தாமிரா என்ன ஆச்சு. தங்கமணி தாமிராவை பாக்கமுடியலையே.

தனிமையிலே இனிமை காண முடியுமா?..

இதனால் சகலருக்கும் அறிவிப்பு என்னவென்றால் அண்ணிக்கு ஆயிரம் தந்தி அனுப்பி உடனே சென்னைக்கு வருமாறு அழைப்பு அனுப்பவும்.

போதுமா சகா

நான் ஆதவன் said...

அப்ப கல்யாணம் பண்ணலாம்ன்னு சொல்றீங்க.....
கார்க்கி நல்லா கேட்டுகங்க....

தமிழ்ப்பறவை said...

:-) :-)

Anonymous said...

என்ன தாமிரா,

பசலையா? கைக்கடிகாரம் கழண்டு விழுதா?

சம்சார சாகரத்தில கொஞ்சம் கொஞ்சமா மூழ்குவது போலத் தெரியுது?

தாமிரா said...

நன்றி அமிஷு அம்மா.!
நன்றி வெண்பூ.! (என்னாச்சுன்னு சொன்னாத்தானே தெரியும்..)
நன்றி முரளி.! (கொஞ்சம் .:பீல் பண்ணவுடமாட்டீங்களே.. உடனே கலாய்ச்சுறணும், இப்ப திருப்தியா?)

நன்றி ராப்.!
நன்றி ரோஜா.!
(யோவ், ன்னா நக்கல் பண்ணுறியா?)

நன்றி பாபு.!
நன்றி முல்லை.!
நன்றி கார்க்கி.! (சும்மா போய்ட்டா வந்தானா இல்லையானு எப்பிடி தெரிஞ்சுக்கிறது?)

தாமிரா said...

நன்றி கும்க்கி.!
நன்றி வால்பையன்.!
நன்றி பிரேம்.! (என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?)

ந‌ன்றி ப‌ரிச‌ல்.! (ந‌‌ல்லா சொன்னீங்க‌ போங்க‌..)
ந‌ன்றி அத்திரி.!
ந‌ன்றி ஆத‌வ‌ன்.! (அடுத்து வ‌ரும் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌வும்)
ந‌ன்றி த‌மிழ்ப‌ற‌வை.!
ந‌ன்றி வேல‌ன்.! (கப்பல் த‌ரை த‌ட்டி எம்மா நாளாச்சு, இப்ப‌ கேக்குறாங்கைய்யா ந‌ல்லா கேள்வி..)

விலெகா said...

தாமிரா வரவர ரூம் போட்டு யோசிப்பார் போல !அப்புடி இல்லாட்டி இப்புடியெல்லாம் எழுதுவாரா:-)))

narsim said...

//தேவ மொழிகளிலிருந்து திருடிக்கொண்டு வருகிறாள். //

கலக்கலான மொழி.. தாமிரா..

தங்கமணி இருக்கும்போது புலம்பினீங்க.. இல்லாதப்ப ஆனந்தக்கண்ணீரா..? நடத்துங்க..

(பீர் பாட்டில் எல்லாம் கடைசிநாள் அவசரத்துல கடாசாம.. ரெண்டுநாள் முன்னாடியே கடைல போடுங்க தல.. நல்ல ரேட்டுக்குப் போகுது..ஹி ஹி..)


//பாபு said...
என்ன ஆச்சு???
நரசிம் பாதிப்பு தெரியுது//

வாங்க பாபு..நல்லா இருங்க!

நர்சிம்

பிரேம்குமார் said...

இணையத் தொடர்பு இல்லாம கொஞ்ச நாள் இந்த பக்கமே வர முடியல,....

ஒற்றை அன்றில் ஸ்ரீ நீங்க வச்ச ட்ரீட் பத்தியெல்லாம் சொன்னாரு...

நானும் அதே பழைய மகாபலிபுரம் சாலையில் தான் குப்பை கொட்டுறேன்.... ம்ம், ஒரு நல்ல ட்ரீட் மிஸ் ஆகிடுச்சு ;)

Saravana Kumar MSK said...

என்ன தாமிரா அண்ணா.. பசலையா..???????

Saravana Kumar MSK said...

அப்போ... கல்யாணம் பண்ணிக்கலாம் போல..

கொஞ்சம் சுதந்திரத்தை அடகு வச்சாலும், அந்த வாழ்கையும் நல்லாத்தான் இருக்கும் போல..

என்ன அண்ணா சொல்றீங்க..!!???

தாமிரா said...

வாங்க விலெகா.!
வாங்க நர்சிம்.! (அதானே.. பிரபுவைப்பற்றி ஒரு வரி எழுதினா உடனே பிரபு ரசிகரான்னு கேக்க‌ வேண்டியது.. ஒரு குறள் சொன்னா.. உடனே நர்சிம்மா?)
வாங்க பிரேம்.! (யோவ்.. இந்த மாதிரி ரகசியத்தெல்லாம் இப்பிடிதான் பப்ளிக்கா போட்டு ஒடைக்கிறதா?)
வாங்க MSK.! (ஸாரி தம்பி, இந்த மாதிரி உங்கள சிந்திக்க வெச்சுட்டேனே.. அய்யோ.. இந்த பாவம் என்ன சும்மா விடுமா?)

ஸ்ரீமதி said...

:))

ஸ்ரீ said...

//தாமிரா பிரிவுத்துயர் வாட்டுதா? இல்லை வீட்டில் திரும்பி வந்து பிளாக் படிக்க ஆரம்பித்துவிட்டார்களா?//

வழிமொழிகிறேன்:):):)

T.V.Radhakrishnan said...

என்ன ஆச்சு???

தாமிரா said...

நன்றி ஸ்ரீமதி, ஸ்ரீ, டிவிஆர்.!

மங்களூர் சிவா said...

புரியலை :(

அந்த கிஸ் போட்டோ நல்லா இருந்தது.