Monday, November 10, 2008

பாஸ்வேர்ட் உலகம்

என்ன உலகமடா இது?

என்னிடம் இருப்பது இரண்டு பேங்க் அக்கவுண்ட்கள். அதில் ஒன்றை நீண்டநாட்களாக உபயோகப்படுத்தாமலே இருந்தேன். (ஒரு அக்கவுண்டில் போடுறதுக்கே இங்கே பணத்தை காணவில்லை. இந்த லட்சணத்தில் இரண்டாவது வேற..) சமீபத்தில் நேர்ந்த பணநெருக்கடியில் அந்த பேங்க் அக்கவுண்டை திறந்துபார்க்கலாம், ஒரு நூறு இரநூறு தேறாதா என்று எண்ணி நெட்டைத்திறந்தால் ஐடி, பாஸ்வேர்ட் ஞாபகமில்லை. நானும் பர்ஸிலுள்ள குப்பைகளை கிளறிப்பார்க்கிறேன், தலையை தட்டிப்பார்க்கிறேன், தண்ணி குடித்துப்பார்க்கிறேன். இப்போது பயன்படுத்துகிற அத்தனை பாஸ்வேர்ட்களையும் போட்டுப்பார்க்கிறேன். நான்கைந்து முறைகளுக்கு மேல் தவறாக போட்டால் லாக் ஆகிவிடும் என்று ராஜன் வேறு பயமுறுத்தினார். ஆகவே முயற்சியை பாதியிலேயே நிறுத்தினேன். வீட்டில் போய் தேடிப்பார்க்கலாம்.
எதிலாவது எழுதிவைத்திருப்பேன்.

என்ன உலகமடா இது?

யோசித்துப்பார்க்கிறேன். சராசரியாக ஒருநாளில் எத்தனை ஐடிக்கள், பாஸ்வேர்ட்களை பயன்படுத்துகிறோம்? அலுவ‌ல‌க‌த்தில் நுழையும் போதே கார்ட் ப‌ஞ்ச்சிங்கில் துவ‌ங்குகிற‌து. ந‌ல்ல‌ வேளையாய் அங்கு பாஸ்வேர்ட் இல்லை. அத‌ற்கும் பாஸ்வேர்ட் இருந்தால் எத்த‌னை நாள் அலுவ‌ல‌க‌த்துக்குள் போகாம‌ல் வெளியேவே நிற்க‌வேண்டிய‌ சூழ‌ல் வ‌ந்திருக்குமோ?

சீட்டில் உட்கார்ந்த‌தும், க‌ம்யூட்ட‌ரைத்திற‌க்க‌ ஒரு ஐடி, பாஸ்வேர்ட். ஆ.:பீஸ் மெயிலை திற‌க்க‌ அடுத்த‌து. SAP திற‌க்க‌ அடுத்த‌து. முக்கிய பைல்களை திறக்க அடுத்தது. யாகூ மெயிலுக்கு ஒன்று. ஜிமெயிலுக்கு ஒன்று. ICICI க்கு ஒன்று. அத‌ற்குள், ப‌ணமாற்ற‌லுக்கு இன்னொன்று. பிளாக‌ருக்கு ஒன்று. அத‌ற்குள் த‌மிலிஷ், த‌மிழ் இன், க‌வுண்ட‌ர் போல‌ ப‌ல‌வ‌ற்றுக்கும் ப‌ல ஐடிக்க‌ள், பாஸ்வேர்டுக‌ள். விக‌ட‌னுக்கு ஒன்று. ர‌யில்வே டிக்கெட் புக் செய்ய‌ ஒன்று. அவ‌ச‌ர‌ ப‌ஸ்டிக்கெட் புக் செய்ய இன்னொன்று. சினிமா டிக்கெட் புக் செய்ய‌ இர‌ண்டு (ச‌த்ய‌ம் ஒன்று, ஐநாக்ஸ் ஒன்று) புக் செய்து ரொம்ப‌ நாளாகிவிட்ட‌தால் ஞாப‌க‌த்தின் ஆப‌த்தான‌ நிலையிலிருக்கிற‌து. LIC க்கு ஒன்று. அலுவ‌ல‌க‌த்தின் சிறப்பு வேலைக‌ளுக்காக எப்போதாவது ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் சில‌ பாஸ்வேர்ட்க‌ள். மேலும் சில‌ முக்கிய‌ த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ ஐடி, பாஸ்வேர்ட்க‌ள். இதில் பல இடங்களில் ஒரே பாஸ்வேர்டடை பயன்படுத்தினாலும், சில விஷயங்களில் சில நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்ட்களை மாற்ற வேண்டிய கட்டாயம் வேறு.

அலுவ‌ல‌கத்துக்கு வெளியே வ‌ந்தால், ATM-ல் பின் ந‌ம்ப‌ர், CVV ந‌ம்ப‌ர், நெட் யூச‌ர் ஐடி, பார்வேர்ட், மேலும் சில‌ ப‌ல‌ப‌ய‌ன் அட்டைக‌ளின் ந‌ம்ப‌ர்க‌ள்.... ந‌ம்ப‌ர், ந‌ம்ப‌ர்.... பாஸ்வேர்ட், பாஸ்வேர்ட்.....

"சார், உங்க‌ போன் ந‌ம்ப‌ர் என்ன‌?"

"நைன், செவ‌ன், சிக்ஸ்.. எயிட்....திரி...ம்ம்... ரிஸ்க் வேண்டாம் உங்க‌ ந‌ம்ப‌ர் குடுங்க‌ மிஸ்ட் கால் குடுத்திர்றேன்"

டிஸ்கி : ஒரு வ‌ழியாக‌ அந்த‌ இர‌ண்டாவ‌து அக்க‌வுண்டின் ஐடி பாஸ்வேர்ட் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டு செக் ப‌ண்ணிய‌ பொழுது அதில் இருந்த‌ ப‌ண‌ம் ரூ.32. என்ன உலகமடா இது?

49 comments:

புருனோ Bruno said...

இதுக்குத்தால் சாமி எங்கள மாதிரி அனைத்திற்கும் ஒரே கடவு சொல் வைத்துக்கொள்ளவேண்டும்

கார்க்கி said...

/இதுக்குத்தால் சாமி எங்கள மாதிரி அனைத்திற்கும் ஒரே கடவு சொல் வைத்துக்கொள்ளவேண்டும்//

அப்படி வைத்திருப்பது ரிஸ்க் சார்.. நான் ஒரு வழி வைத்திருக்கிறேன்.. ஆனால் சொல்ல முடியாதே..

ஸ்ரீ said...

மும்தாஜ்: அய்யோ பாவோம்.

all account one password no worries. Aaana onnu leak aachunaaalum Sangudhaanne Usaare

பாபு said...

நேத்து எனக்கும் இதே பிரச்னை,உங்கள மாதிரி netbanking பண்ற ஆளெல்லாம் கிடயாது,தமிழ் வெளி யிலேருந்து ஒரு மெயில் வந்து ,சரி லாகின் பண்ணி பார்க்கலாம்னா அந்த name & password ரெண்டுமே மறந்து விட்டது.
சில நேரத்துல ATM பின் நம்பர் மறந்துட்ட மாதிரி தெரியும்,ஆனா keyboard கிட்ட போன உடனே தன்னால விரல் அந்த நம்பர் க்கு போகும் கவனித்திருக்கிறீர்களா?

rapp said...

me the 5TH:):):)

rapp said...

இப்போ நீங்க இதயெல்லாம் சொல்லி யாரை நம்ப வெக்கப் பாக்கறீங்க. எனக்கென்னமோ நீங்க புருனோ சார் மாதிரி இருப்பீங்கன்னு தோனுது:):):)

kumar said...

:) :)

kumar said...
This comment has been removed by the author.
SK said...

ஆல் இன் த கேம் யா

அண்ணே சினிமா பதிவு போட்டு இருக்கேன் :) :)

Raghavan said...

நமக்கெல்லாம் இந்த பிரச்சினை கிடையாதப்பா. ஒரு கூகுல், யாஹீ, சிஃபி மெயில், விகடன் அவ்வளவுதானப்பா. நெட் பாங்கிங், கிரெடிட் கார்டு இந்த பெரிய விஷயங்கள் எல்லாம் நமக்கு கிடையாதப்பா.. தப்பிச்சுகிட்டோமில்ல..இராகவன், நைஜிரியா

அமிர்தவர்ஷினி அம்மா said...

மறக்காம இருக்க இரு ஈஸி வழி சொல்லவா.

உங்களுடைய எல்லா கேர்ள் ப்ரண்ட் பேரையும் பாஸ்வேர்டா கொடுத்திடுங்க.

லைஃப்ல எப்பவும் மறக்க மாட்டீங்க.

இத நா சொல்லல, ஒரு கவிதையே இருக்கு.

சந்தனமுல்லை said...

:-))...பாஸ்வேர்ட் செட் பண்ணும்போது 8/9 ரூல்ஸ்.அதை சொல்லாம் விட்டுட்டீங்களே!! உங்அ நாய்குட்டி பேர், உங்க பிறந்த தேதி, ஸ்பொஸ் பேர் இதையெல்லாம் வைக்காதீங்க..ஈசியா கண்டுபிடிக்கற மாதிரின்னு!!

Saravana Kumar MSK said...

அட.. ஆமாம்... என்ன கொடும சார் இது.. :))

Me the 11th..

Mahesh said...

என்ன கொடுமை சார் இது? நானும் பாஸ்வேர்ட் எல்லாம் ஒரு ஃபைல்ல எழுதி வெச்சு... அதுக்கு ஒரு பாஸ்வேர்ட் போட்டு வெச்சுருக்கேன்... அந்த பாஸ்வேர்ட் மறந்து போயி... அட போங்க... bio metrics தான் சரி வரும்னு தோணுது...

நையாண்டி நைனா said...

Mr. Thaamira...
Don't worry.. Please post all your username and password in this blog.

You can see and use it at anytime.

How is my wonderful Idea?
If you want to keep it as secret mail to me. I will keep it for you.

Please choose your options soon.

SK said...

என்னமா ஐடியா தராங்க எல்லாரும் :) :)

பொடியன்-|-SanJai said...

பயன்பட்டின் முக்கியத்துவத்திற்கேற்ற மாதிரி பயன்படுத்த 5 பாஸ்வேர்ட் வைத்திருக்கிறேன்ன். அம்புட்டு தான்.. 2 பாஸ்வேர்ட்கள் மட்டுமே பல சமயங்களில் குழப்பும். மத்தபடி எல்லாம் நலமே.. :)

//"நைன், செவ‌ன், சிக்ஸ்.. எயிட்....திரி...ம்ம்... ரிஸ்க் வேண்டாம் உங்க‌ ந‌ம்ப‌ர் குடுங்க‌ மிஸ்ட் கால் குடுத்திர்றேன்"//

ஹிஹி.. நல்ல வேளை நான் ஆரம்பம் முதல் இன்று வரை மொபைல் எண் மாற்றியதில்லை.. ;)

பொடியன்-|-SanJai said...

// புருனோ Bruno said...

இதுக்குத்தால் சாமி எங்கள மாதிரி அனைத்திற்கும் ஒரே கடவு சொல் வைத்துக்கொள்ளவேண்டும்//

இது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை டாக்டர்.

smile said...

ஒரே பாஸ்வேர்ட் வைச்சிகிட்டு
மாத்தி மாத்தி போட்டுக்க வேண்டியது தான்
(அந்நியனில் பிரகாஷ்ராஜ் & விவேக் சொல்ற மாதிரி)

தாமிரா said...

நன்றி டாக்டர்.!
நன்றி கார்க்கி.!
நன்றி ஸ்ரீ.!
நன்றி பாபு.! (என்னாச்சு எனக்கு நடப்பதெல்லாம் உங்களுக்கும் நடக்குது.? ஏதாவது பிசாசு வேலையாய் இருக்குமோ?)

நன்றி ராப்.! (நீங்கதான் சரியா இந்தப்பதிவின் நுண்ணரசியலை புரிந்துகொண்டுள்ளீர்கள். பதிவு படிக்கும் ஒரு நண்பரிடம் கொஞ்சம் கைமாத்து கேட்டிருந்தேன். அவருக்கு என் நிலைமையை விளக்கவே இந்த ஸ்டோரி.!)

தாமிரா said...

நன்றி குமார்.!
நன்றி SK.!
நன்றி ராகவன்.! (நைஜீரியாவுல ஒக்காந்துகிட்டு என்ன பண்றீங்க.. எனக்குல்லாம் இங்கன டெல்லிக்கு தனியா போறதுக்கே பயமாயிருக்குது..)

ந‌ன்றி அமிஷு அம்மா.!
ந‌ன்றி முல்லை.!
ந‌ன்றி MSK.!
ந‌ன்றி ம‌கேஷ்.! (பாஸ்வேர்டுக்கு பாஸ்வேர்ட் வ‌ச்ச‌ கொடுமையெல்லாம் நானும் பண்ணியிருக்கேன். உங்க‌ ப‌திலை ர‌சித்தேன்)
ந‌ன்றி நைனா.! (என்னா சேவை ம‌ன‌ப்பான்மை உங்க‌ளுக்கு?)
ந‌ன்றி SK.!
ந‌ன்றி பொடிய‌ன்.! (கிட்ட‌த்த‌ட்ட‌ உங்க‌ பாலிஸில‌தான் வ‌ண்டி ஓடிக்கிட்டிருக்குது)
ந‌ன்றி ஸ்மைல்.!

கும்க்கி said...

என்க்கென்னவோ நைனா சொல்றதுதான் சரியா படுது..
அவ்வப்போ பாஸ் வேர்டு மறந்துட்டாலும்..எங்க கிட்ட பாஸ் வேர்ட்ட கேட்டு (சாப்பிட்டது போக) மிச்சம் மீதிய எடுத்து உபயோகப்படுத்தலாமே..?
ஹி..ஹி.

gopinath said...

there is a software called password corral, where you can store all of them with one password that is familiar to you. Its a freeware.

பிரேம்குமார் said...

ஆகா ஆகா, மக்கள்ஸ் கிட்ட எத்தனை எத்தனை யோசனைகள் இருக்கு....

எல்லா கடவுச்சொற்களையும் ஒரு excelல போட்டு அதுக்கு ஒரு கடவுச்சொல் போடுறது தான் உத்தமம்....

தகவல் தொழில்நுட்ப வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணம் / சதா ரணம் அண்ணே :)

ஆனாலும் அவ்வளவு சிரமப்பட்டது அந்த 32 ரூபாய்க்கு தானா?? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

SK said...

இதுக்கும் ஒரு சாப்ட்வேர் :( :(

என்ன கொடுமை இது எல்லாம்.

SK said...

me the 25th yaaaaaaaa

Anonymous said...

கடன வாங்கினாத் திருப்பிக் கொடுக்கனும். இப்படி பாநொர்ட் மறந்து போச்சு, செக் புக் தீர்ந்து போச்சுனெல்லாம் சொல்றது பழய பார்முலா.

ஒரு என்ஜினியரான உங்ககிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன் :-))).

தாமிரா said...

நன்றி கும்க்கி.!
நன்றி கோபிநாத்.!
நன்றி பிரேம்குமார்.!
நன்றி SK.! (நம்ப கடையில கூட்டமேயிருக்காது, நிதானமா மீ த 25 போடலாம். அவசரமே வேண்டாம்)
நன்றி வேலன்.! (இன்னும் பெட்டரான்னா மண்டபத்துல யாராவது எழுதித் தர்றாங்களான்னுதான் பாக்கணும் அண்ணே..)

தாமிரா said...

இங்கேயே அறிவிப்பு கொடுத்துடறேன்.. இன்னிலிருந்து நான் ஏற்கனவே சொன்னமாதிரி இறுதி சுற்று வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன. சனிக்கிழமை வரை இருக்குது. சனிக்கிழமை மாலை பதிவர் சந்திப்புக்கு தாமதமாகவே வருவேன் என எண்ணுகிறேன். மாலை ஆறு மணிவரை கிளாஸ் இருக்கும். நம்பாதவர்கள் "பிராசஸ், மீன், சிக்மா" பதிவைப் போய் பார்த்துக்கொள்ளவும். ஆகவே பிற கடைகளுக்கு வரவில்லை எனில் பொறுத்துக்கொள்ளவும். கடையை காத்தாடப் பண்ணிவிடாதீர்கள். மாலை நேரங்களில் பதிவுகள் போட முயல்கிறேன். ஆதரவளிக்கவும்...

கார்க்கி said...

//தாமிரா said...

இங்கேயே அறிவிப்பு கொடுத்துடறேன்.. இன்னிலிருந்து நான் ஏற்கனவே சொன்னமாதிரி இறுதி சுற்று வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன. சனிக்கிழமை வரை இருக்குது. சனிக்கிழமை மாலை பதிவர் சந்திப்புக்கு தாமதமாகவே வருவேன் என எண்ணுகிறேன். மாலை ஆறு மணிவரை கிளாஸ் இருக்கும். நம்பாதவர்கள் "பிராசஸ், மீன், சிக்மா" பதிவைப் போய் பார்த்துக்கொள்ளவும். ஆகவே பிற கடைகளுக்கு வரவில்லை எனில் பொறுத்துக்கொள்ளவும். கடையை காத்தாடப் பண்ணிவிடாதீர்கள். மாலை நேரங்களில் பதிவுகள் போட முயல்கிறேன். ஆதரவளிக்கவும்...//

நீங்க போய்ட்டு வாங்க சகா.. எவன் வந்து பின்னூட்டம் போடுறான்னு நான் பார்த்துக்கிறேன். உங்க கடைய நீங்க விட்ட மாதிரியே பார்த்துக்க வேன்டியது என் பொறுப்பு.. ஏன்னா நான் பருப்பு... (அய்யோ இன்னும் டீ.ஆர் ஆவி விடலையே)

மிஸஸ்.டவுட் said...

பாஸ் வேர்ட் மறக்காம இருக்க நான் ஒரு வழி சொல்றேன் கேளுங்க தாமிரா ;
பேசாம "அம்மா+மீசை=மாமா
அத்தை+மீசை=சித்தப்பா
அப்பா-மீசை=அத்தை
மாமா-மீசை=சித்தி " இதை தங்லிஷில் டைப் செய்து வைத்துக் கொண்டு அதை ஒரு டைரியில் எழுதி வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் ரெபெர் செய்து கொண்டு யூஸ் பண்ணலாம் .தங்கமணியிடம் சொல்லிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டால் போகிறது .எப்போதும் மறக்கவே மறக்காது இல்லையா ?

முரளிகண்ணன் said...

சனிக்கிழமை விரைவாக வந்து சேருங்க சகா

Anonymous said...

கடன் திருப்பிக்குடுக்கணும்னு இந்த மாதிரி ஏன் கதை விடறீங்க. உங்க பட்ஜெட் பதிவு படிச்சப்பறம் இதை எல்லாம் நாங்க நம்பணுமா. தங்கமணி ஊரில இருந்த வரும்போது அக்கவுண்ட்ல பணம் இல்லேனா தகராறுன்னு தானே இன்னொரு அக்கவுண்ட்ல பணம் இருக்கான்னு பாத்தீங்க.!!

ஆட்காட்டி said...

ஆமா, ஒரெ சொல்லை பாவிக்கலாம். மனைவி கிட்ட மட்டும் சொல்லக் கூடாது. அப்புறம் மெயில்ல வாற இன்பொக்ஸுக்கு பதில் கூறுவதுக்கு பதில் அடிக்கடி பாஸ்வேர்டையே மாத்திரலாம் எண்று தோணும்.

தமிழ்நெஞ்சம் said...

ஒவ்வொரு பாஸ்வேர்டையும் தனியாக ஒரு கோப்பில் விளக்கமாக எழுதி, அந்தக் கோப்புக்கு மட்டும் தனிப்பாஸ்வர்டு வைத்து, அதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.

புதிய பாஸ்வேர்டுகளை ஒவ்வொரு முறை உருவாக்கும்போதும், இந்த மெயின் கோப்பை அப்டேட் செய்து கொண்டே இருங்கள்.

உங்கள் நினைவில் இருக்கவேண்டியது மெயின் கோப்பைத் திறக்கவேண்டிய மெயின் பாஸ்வேர்டு மட்டுமெ..

ஆனால் அந்தக் கோப்பை நீங்கள் அழித்துவிடாமல், தொலைத்துவிடாமல், மெயின்பாஸ்வேர்டை மறந்துவிடாமல், இன்னும் சில விடாமல்....விடாமல்..

இருக்க வேண்டும்..

எப்படி.. நாங்களும் ரெடியாகிட்டோம்ல..

selvamani.s said...

Sorry i know tamil but i dont know how to type Tamil .

Nan oru vali vaithu irukken

yennda password example : $ghcTFG5^&cndhT

ippadithan irukum .Yennakku palagi pochu niraya password use pannuren .But the problem vecation one month appuram vantha oru password niyabagam illai .so then i got one application

KEEPASS ( open source )

Very secure and Very good .But one master password and one Authentication File .if you missed the password or authentication File no way to access .

if you want use this application .

But from my side Few NOTE :

1 .Change the master key file 10 days once
2 .change master password 10 days once

3.Copy and save password DB file and Authentication key file in more than one place .


USE PEN DRIVE and also zip and save in to your mail

i this this is useful to every one

thanks
selvamani.s
s.selvamani@yahoo.com

Basaki said...

//"நைன், செவ‌ன், சிக்ஸ்.. எயிட்....திரி...ம்ம்... ரிஸ்க் வேண்டாம் உங்க‌ ந‌ம்ப‌ர் குடுங்க‌ மிஸ்ட் கால் குடுத்திர்றேன்"//

நீங்க பரவாலீங்க, கல்லூரியில் படிக்கும்போது ஒருசில மாதங்களில் ரெண்டு மூன்று எண்கள் மாத்தியிருக்கேன். அப்போ ஒரு சமயம் நண்பர் வீட்டுக்கு போனபோது அவரில்லாத்தால் அவர் அப்பா என்னோட செல்பேசி எண் கேட்க, எனக்கு சுத்தமா நியாபகமில்லை. இருந்தாலும் நியாபகமில்லைனு எப்படி சொல்லறதுன்னுட்டு ஏதோ ஒரு எண்ணை சொல்லிட்டு வந்துட்டேன். அப்புறமா என் நண்பன் என் வீட்டுக்கு வந்து என்னை திட்டவுமில்லை, மத்த பசங்ககிட்ட சொல்லி ஓட்டவும் இல்லை :-)

வெண்பூ said...

நான் அதனால்தான் முக்கிய பாஸ்வேர்டுகளை கோட்வேர்டு போல் குறித்து வைத்துக் கொள்கிறேன். இப்போது பரவாயில்லை.. :)))

தாமிரா said...

ரசித்தேன் கார்க்கி.!

வாங்க டவுட்.! (இவ்ளோ கஷ்டமான வழிய வேற யாராவது சொல்லியிருப்பாங்களா தெரியல..)

முயற்சி பண்றேன் முரளி, கடைசி நாள்ங்கறதால மிச்சம் இருக்குறத மண்டைக்குள்ள திணிக்கப்பாப்பானுங்க.. ஆறு மணின்னாலும், 6.45க்குள்ள வந்துடுவேன்.

தெரிஞ்சத வெளில சொல்லக்குடாது அம்மிணி..!

கரக்டுதான் ஆட்காட்டி.!

மேல மகேஷும் அதேதான் சொல்லிருக்காரு பாத்தீங்களா தமிழ்நெஞ்சம்?

$ghcTFG5^&^&cndhT// இதான் பாஸ்வேர்டா செல்வமணி..? ஆ..தொம்.. (மயங்கி விழுந்துட்டேன்யா..)

ந‌ன்றி ப‌சாகி.!
ந‌ன்றி வெண்பூ.! (வேற‌ வ‌ழி? நானும் அதான் ப‌ண்றேன்)

பரிசல்காரன் said...

எனக்கு எல்லாத்துக்குமே ஒரே ஐ.டி. ஒரே பாஸ்வேர்ட்தான்!

பரிசல்காரன் said...

//Mr. Thaamira...
Don't worry.. Please post all your username and password in this blog.

You can see and use it at anytime.

How is my wonderful Idea?
If you want to keep it as secret mail to me. I will keep it for you.

Please choose your options soon.//

ங்கொய்யால.. என்னா ஒரு ஐடியாடா சாமியோவ்!

பரிசல்காரன் said...

//சனிக்கிழமை மாலை பதிவர் சந்திப்புக்கு தாமதமாகவே வருவேன் என எண்ணுகிறேன். /

காய விட்டுடாதீங்க நண்பா. ப்ளீஸ்..

சண்டே வாட்டீஸ்த ப்ரோக்ராமூ?

தாமிரா said...

பரிசல் : விட்டுடாதீங்க நண்பா. ப்ளீஸ்..// பாருங்கப்பா இந்த அநியாயத்த.. இவ்ரு‌தான் சீப்பு கெஸ்ட்டுன்னாங்க‌.. இவ்ரு ந‌ம்ம‌ள‌ க‌ண்டுக்கிடாம காயவுடாம இருந்தா பத்தாதா..

சண்டே வாட்டீஸ்த ப்ரோக்ராமூ?// கான்டாக்ட் சங்கத்தின் உள்ளூர் தலைவர் அப்துல்..

மங்களூர் சிவா said...

//
அலுவ‌ல‌க‌த்தில் நுழையும் போதே கார்ட் ப‌ஞ்ச்சிங்கில் துவ‌ங்குகிற‌து. ந‌ல்ல‌ வேளையாய் அங்கு பாஸ்வேர்ட் இல்லை. அத‌ற்கும் பாஸ்வேர்ட் இருந்தால் எத்த‌னை நாள் அலுவ‌ல‌க‌த்துக்குள் போகாம‌ல் வெளியேவே நிற்க‌வேண்டிய‌ சூழ‌ல் வ‌ந்திருக்குமோ?
//

ஆஹா
நிஜம்தான்!

மங்களூர் சிவா said...

//
நையாண்டி நைனா said...

Mr. Thaamira...
Don't worry.. Please post all your username and password in this blog.

You can see and use it at anytime.

How is my wonderful Idea?
If you want to keep it as secret mail to me. I will keep it for you.

Please choose your options soon.
//

:))))))))))))
ROTFL

தாமிரா said...

ந‌ன்றி ம‌ங்க‌ளூர்.!

தமிழ்ப்பறவை said...

y blood...? same blood...

ஸ்ரீமதி said...

:))

Muthukumar said...

ஆஹாஆஆஆஆ ... நீங்களும் நம்மாளுதான் ...

அலுவலக (பயன்)பாடு :

Personal workstation ;
Office mail ;
Office messenger ;
Ticketing system ;
10 Unix Servers (3 usernames in each servers) ;
5-8 users in 6 Databases ;

தனிப்பட்ட (பயன்)பாடு :

Hotmail ;
Gmail ;
Yahoo ;
Online Banking ;
Credit Card ;
ICICI Bank ;
Electicity company ;
Gas company ;
...

ஐயோ ஐயோ அய்ய்யய்ய்யோஓ ... எவனாவது ஒரு Public Single Sign-On software எழுதிவெச்சா நம்ம மாதிரி ஆளுங்களால பிச்சிகிட்டு போகும்னு நினைக்கிறேன். (செல்வமணி சொல்றது கிட்டத்தட்ட அதுபோலத்தான் இருக்கும்போல, பாப்போம்)

செல்வமணிக்கு அண்ணன் நான் வேல பாத்த ஒரு கம்பெனில Unix Sysadmin-ஆ இருக்காரு, அவரு production Unix server-la 2 usernames-க்கு இதே மாதிரி ஙங்ஞமுஞ்ங-ன்னு பாஸ்வேர்ட் செட் பண்ணி இருந்தாரு பாருங்க ... யப்பாஆஆஆ ...

இதுல சில Unix Servers username பாஸ்வேர்ட் மறந்துபோனா எங்க பாஸ்கிட்ட கேப்பேனா, அவரும் you knucklehead-ங்கிற suffix-ஒடத்தான் சொல்லுவாரு. ஹி..ஹி

ஒலகமே username/password-களால ஆகிபோச்சு ... ஹ்ம்ம்ம்ம்ம்

அன்புடன்
முத்துக்குமார்