Wednesday, November 12, 2008

தேன்குழம்பு

கொஞ்சம் கூட சந்தேகமே வேண்டாம், இது சமையல் குறிப்புதான். அதுவும் நான்வெஜ் சமையல் குறிப்பு. என்ன தாமிரா சமையல் குறிப்பெல்லாம் கொடுப்பாரா என அதிர்ச்சியடைய (சந்தோஷ?) அடைய‌ வேண்டாம். வேலைப்பளு மற்றும் கிளாஸ் காரணமாக சினிமா, சமையல், கவிதை மாதிரி லைட்டான பதிவுகளை போட்டு ஒரு பத்து நாளை ஒப்பேத்தலாம் என்ற ஐடியாவும் ஒரு காரணம். மற்றும் நாம் செய்வதை ஊருக்கும் சொல்லலாமே என்ற ஒரு நல்ல எண்ணமும்தான்.

(தங்கமணி வெரைட்டி கேட்டு ரொம்ப சலிச்சுக்கிறதா வெண்பூ ஒன்றும் போனெல்லாம் பண்ணி சமையல் குறிப்பு கேட்க‌வில்லை என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்). மேலும் பின்வரும் இந்த சமையல் குறிப்பை நீங்கள் வேரெங்கும் படித்திருக்க வாய்ப்பு மிகக்குறைவு. ஏனெனில் இது என் நண்பர் ஒருவர் ரசித்துக்கூற, ஜொள் விட்டவாறே நான் கேட்டு மகிழ்ந்தது. நேரே செய்முறைக்குப்போகலாம். இடுபொருட்களை அதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள். அதைவேறு தனியாக லிஸ்ட் போட நேரமில்லை.

செய்முறை :

நேரே சிரமம் பார்க்காமல் பக்கத்திலிருக்கும் குளம் அல்லது ஊருணிக்கு செல்லுங்கள். குறிப்பாக கண்மாயில் சிறிய ஓடை அமைத்து, குழாய் பதித்து அயிரை மீன் பிடித்துக்கொண்டிருக்கும் அமைப்புடைய குளமாக விசாரித்துவிட்டு செல்லுங்கள். சென்னையிலிருப்பவர்களும் தமிழகத்துக்கு வெளியே இருப்பவர்களும் இந்த குறிப்பை படிப்பதில் பயனில்லை என‌ நினைக்கிறேன். நான் குறிப்பிடும் அயிரை மீன்கள் நெல்லை, மதுரை பக்கம் கண்டிப்பாக கிடைக்கும், இப்போ நல்ல சீசன் வேற.. கோவையிலும் கிடைப்பதாக சொல்கிறார்கள். பிற பகுதிகளைப்பற்றிய தகவலில்லை.

அப்படியே குழாயிலிருந்து தெறித்து விழுந்து இன்னமும் துள்ளிக்கொண்டிருக்கும் குட்டி அயிரை மீன்களை 20 அல்லது 30 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளுங்கள். பெரும்பாலும் எடையெல்லாம் போடாம‌ல் கைய‌ள‌வில் அள்ளிக்கொடுப்பார்க‌ள். பாலிதீன் பேக்கில் அங்கேயே சிறிது நீர் நிர‌ப்பி வாங்கிக்கொள்ளுங்க‌ள். இந்த‌ மீனில் ஒரு சிற‌ப்ப‌ம்ச‌ம் உண்டு. அதுதான் கிளீனிங் வேலை. ம‌ண்டை, வால், செதிள்க‌ள் ப‌குதிக‌ளை நீக்குவ‌து, சுத்த‌ம் செய்வ‌து, துண்ட‌ங்க‌ள் ஆக்குவ‌து போன்ற‌ எந்த‌ வேலைக‌ளுமே கிடையாது. மொத்த‌ மீனே குட்டியூண்டுதான் இருக்கும். ஒரு சிம் கார்டில் 5 மீன்க‌ளை வ‌ரிசையாக‌ அடுக்கிவிட‌லாம். ஆக‌வே ம‌ண்டையையும், வாலையும் நீங்க‌ள் க‌ழித்தால் அங்கே மீன் என்ற‌ ஒன்று மிஞ்சுவ‌‌து ச‌ந்தேக‌மே. ச‌ரி க‌தையை விடுத்து சீக்கிர‌ம் ச‌மைய‌லுக்குப் போக‌லாம்.

வீட்டிற்கு வ‌ந்த‌தும் மீன்க‌ளை ஒரு ச‌ட்டியில் போட்டு லேசாக‌ கல் உப்பு போட்டு ஒரு பெய‌ருக்கு கிளீன் ப‌ண்ணி வ‌ழ‌வ‌ழ‌ப்பு போக‌ச்செய்து, ஏற்க‌ன‌வே த‌யார் செய்து வைத்துள்ள போதுமான அளவு தேங்காய் பாலில் போட்டுவிட‌வும். தேங்காய்ப்பாலில் விழுந்து ஆன‌ந்த‌மாக‌ நீச்ச‌லிடித்துக்கொண்டே அதைக்குடித்து மெல்ல‌ மெல்ல‌ மீன்க‌ள் ப‌ர‌லோக‌ம் போய்ச்சேர்ந்துவிடும்.

இப்போது ச‌ட்டியை அடுப்பில் வைத்து நேரே தாளிச‌த்திலிருந்து ஆர‌ம்பித்துவிடுங்க‌ள். எண்ணையை காய‌வைத்து க‌டுகு, உளுத்த‌ம்ப‌ருப்பு, க‌றிவேப்பிலையுட‌ன் ம‌ற‌க்காம‌ல் வெந்த‌ய‌ம் தேவையான‌ அள‌வு சேர்க்க‌வும். வெந்த‌ய‌ம் மிக‌ முக்கிய‌ம். ந‌ன்கு பொரிந்த‌வுட‌ன் பொடிப்பொடியாக‌ ந‌றுக்கிவைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சின்ன‌ வெங்காய‌த்தை போட்டு வ‌த‌க்க‌வும். (பெரிய‌ வெங்காய‌ம் க‌ண்டிப்பாக‌ கூடாது) பின்ன‌ர் ச‌ரியான‌ அள‌வில் வெட்டிவைக்க‌ப‌ட்டுள்ள‌ மாங்காய், த‌க்காளியை போட்டு க‌ரைத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சிறிது புளியை ஊற்ற‌வும். இப்போது தேங்காய்ப்பாலில் ஊற‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ மீனை எடுத்து த‌னியே வைத்துவிட்டு அந்த‌ தேங்காய்ப்பாலில் சிறிது வெங்காய‌ம், சீர‌க‌ம் சேர்த்து அரைத்துக்கொள்ள‌வும். இதில் நீர‌ள‌வு அதிக‌மிருப்ப‌தாக நீங்க‌ள் நினைத்தால் முன்பே புளிக்க‌ரைச‌லில் நீர‌ள‌வை குறைத்திருக்க‌வேண்டும். க‌வ‌ன‌ம்.

இப்போது தேங்காய், வெங்காய‌ அரைச‌லை (க‌ரைத்து வைத்தால் க‌ரைச‌ல், அரைத்து வைத்தால் அரைச‌ல்தானே.. ஜோக் வேண்டாம், பீ சீரியஸ்..) ஊற்றி லேசாக‌ சூடேறிய‌தும் தேவையான‌ அள‌வு ம‌ஞ்ச‌ள், மிள‌காய், கொத்த‌ம‌ல்லிப் பொடிக‌ளையும், உப்பையும் போட்டு க‌ல‌க்க‌வும். இப்போது இன்னும் மீனை சேர்க்காத‌ போதே, மீன் குழ‌ம்பு வாச‌ம் அடுக்களையைத் தாண்டி ஹாலுக்கு போயிருக்கும். அடுத்துதான் முக்கியமான இறுதிக் க‌ட்ட‌ம். த‌ட்டில் மினுமினுப்பாக‌ குவித்துவைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ மீன்க‌ளை குழ‌ம்பில் போட்டு அரை நிமிடம் மூடி வையுங்கள். ஏற்க‌ன‌வே அயிரை மீனே குட்டி மீன் வ‌கையைச்சார்ந்த‌து, அதிலும் நீங்க‌ள் குள‌க்க‌ரைக்கே போய் இள‌ம் மீன்க‌ளாக‌ வாங்கி வ‌ந்திருப்ப‌தால் அரை நிமிடம்தான் ஒரே கொதிதான்.. இற‌க்கிவிடுங்க‌ள். இப்போது ம‌ண‌ம் உங்க‌ள் வீட்டைத்தாண்டி உங்க‌ள் தெருவையே அல்லது அப்பார்ட்மென்டையோ ம‌ய‌க்கும்வ‌ண்ண‌ம் ப‌ர‌வியிருக்கும். த‌வ‌ற‌விடாதீர்க‌ள், ஆவி ப‌ற‌க்க‌ சோற்றை போட்டு அப்போதே சாப்பிட்டுவிடுங்க‌ள். குளித்துவிட்டு சாப்பிட‌லாம் என‌ நினைத்து லேட் ப‌ண்ணுவீர்க‌ளானால் திரும்பி வந்து பார்க்கும்போது ச‌ட்டி காலியாயிருக்க‌க்கூடும், ஜாக்கிர‌தை.!

இந்த‌ ப‌க்குவ‌த்தில் யாராவ‌து இந்த தேன்குழம்பை ஸாரி, மீன்குழம்பை செய்து த‌ருவீர்க‌ள் எனில் போன் ப‌ண்ண‌வும், இப்போதே கிள‌ம்பிவ‌ர‌த்தயாராக‌ இருக்கிறேன்.. எங்கு வேண்டுமானாலும்.!

டிஸ்கி : என் ர‌மா வெஜிடேரிய‌ன் என்ப‌தை அறிக‌.

33 comments:

Mahesh said...

நான் சுத்த சைவம்... முட்டை கூட சாப்பிடுவதில்லை... இருந்தாலும் நீங்க சொல்லியிருக்கற விதம் அழகா இருக்கு... அசைவம் சாப்பிடறவங்க்ளுக்கு படிக்கும்போதே எச்சில் ஊறலாம்...

Mahesh said...

ஐ... மீ தி பஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ட்ட்ட்ட்ட்ட்டு !

கிழஞ்செழியன் said...

யாத்தீ, மணக்க மணக்க ஒரு கட்டு கட்டியது போல் இருக்கே...

மங்களூர் சிவா said...

/
(க‌ரைத்து வைத்தால் க‌ரைச‌ல், அரைத்து வைத்தால் அரைச‌ல்தானே.. ஜோக் வேண்டாம், பீ சீரியஸ்..)
/

என்னது 'பீ' சீரியஸா???? சீக்கிரம் கொண்டுபோய் ஆஸ்பத்திரில சேருங்க!

மங்களூர் சிவா said...

/
நான் சுத்த சைவம்... முட்டை கூட சாப்பிடுவதில்லை... இருந்தாலும் நீங்க சொல்லியிருக்கற விதம் அழகா இருக்கு... அசைவம் சாப்பிடறவங்க்ளுக்கு படிக்கும்போதே எச்சில் ஊறலாம்...
/

ரிப்ப்பீட்ட்ட்டு

விஜய் ஆனந்த் said...

:-)))...

விலெகா said...

என் ர‌மா வெஜிடேரிய‌ன் என்ப‌தை அறிக‌.

அதன் உங்களுக்கு தேன் குழம்பு வைக்கதெரியுது:-)))))))))

கார்க்கி said...

மீனா? ஆஜர் மட்டும் போட்டுக்குறேன். நான் வெஜ் தான்.. (அதாம்ப்பா நான் சைவம்)

dharshini said...

then kozhambunnu vanthu paatha meen kozhambu....nalla emathetennga sir...
naanum vegeteriane....

வருங்கால முதல்வர் said...

சென்னையிலிருப்பவர்களும் தமிழகத்துக்கு வெளியே இருப்பவர்களும் இந்த குறிப்பை படிப்பதில் பயனில்லை என‌ நினைக்கிறேன். //

இத்தோட நிறுத்திட்டேன்:)

புதுகை.அப்துல்லா said...

என் ர‌மா வெஜிடேரிய‌ன் என்ப‌தை அறிக‌.
//

hiya.. anniyum nambala maathiriyaa???

விஜய் said...

வீட்டுல அண்ணி இல்லாததால் சமையலறையை ரணகளம் ஆக்கி வச்சுரிக்கீங்கன்னு தெரியுது. வந்தப்புறம் இருக்குது, உங்களுக்கு!!!

கும்க்கி said...

ஒரு வேளை கம்பேனியில் பயிற்ச்சி பலமாக கொடுக்கப்பட்டு....இப்படி ஆயிருக்குமோ..?
நல்லாருந்த மனுசன.....தங்க மணிகளின் தலைவர்ன்னு பட்டமெல்லாம் வாங்கியவரை இப்படி ஆக்கீட்டாங்களே...

Anonymous said...

இவ்வளோ கஷ்டப்பட்டு செய்யணுமா, இருந்தாலும் ரங்கமணிய படிக்க சொல்லறேன்

வால்பையன் said...

//தேங்காய்ப்பாலில் விழுந்து ஆன‌ந்த‌மாக‌ நீச்ச‌லிடித்துக்கொண்டே அதைக்குடித்து மெல்ல‌ மெல்ல‌ மீன்க‌ள் ப‌ர‌லோக‌ம் போய்ச்சேர்ந்துவிடும்.//

எல்லோரும் செத்த பிறகு பால் ஊத்துவாங்க.
நீங்க சாவுறதுக்கே பால் ஊத்த சொல்ரிங்க

வால்பையன் said...

படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுது!
இந்த குழம்பு வைக்கும் போது கூப்பிடுங்க

வால்பையன் said...

எனக்கு ஒரு சந்தேகம்
வேலைக்கும் போய்கிட்டு எப்படி வீட்டிலையும் சமையல் பண்றிங்க
உண்மையிலேயே நீங்க பெரிய ஆள் தான்

அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்படிங்க இப்படியெல்லாம், அப்பப்ப தேன் குழம்பு சாரி மீன் குழம்பு வெக்கற நமக்கே இந்த மாதிரி பக்குவம் சொல்ல வராது
ஒரு கொதியாம்
அப்புறம் புளி கரைசல்ல அதிகம் தண்ணியிருக்கக்கூடாதாம்மா
அரைசலாம்மா

நம்ம செஃப் தாமோதரன் (ஜெயா டி.வி புகழ்) தோத்தாருப்பா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

என் ர‌மா வெஜிடேரிய‌ன் என்ப‌தை அறிக‌.

அதான் ஆள் வீட்ல இல்லாத சமயமா பார்த்து அதகளம் பண்றீங்க.

பாபு said...

நம்ம வீட்டுல அப்படியே உல்டா
நான் veg,தங்கமணி non-veg

முட்டை சைவமா,அசைவமா?

தாமிரா said...

நன்றி மகேஷ்.!
நன்றி கிழஞ்செழியன்.!
நன்றி சிவா.!
நன்றி விஜய் ஆனந்த்.!
நன்றி விலெகா.!
நன்றி கார்க்கி.!
நன்றி தர்ஷினி.!
நன்றி முதல்வர்.!
நன்றி அப்துல்.!
நன்றி விஜய்.!
நன்றி அம்மிணி.!
நன்றி வால்பையன்.!
நன்றி அமிஷு அம்மா.!
நன்றி பாபு.!

தாமிரா said...

சின்ன அம்மிணி said...
இவ்வளோ கஷ்டப்பட்டு செய்யணுமா, இருந்தாலும் ரங்கமணிய படிக்க சொல்லறேன்//

எவ்வ‌ள‌வு முர‌ண்.! பாத்துக்க‌ங்க ஆண்க‌ளே..

வால்பையன் said...
படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுது!
இந்த குழம்பு வைக்கும் போது கூப்பிடுங்க//

சென்னையில் ஒக்காந்துகிட்டு அயிரை மீனா? போங்க‌ப்பா..

அமிர்தவர்ஷினி அம்மா said...
நமக்கே இந்த மாதிரி பக்குவம் சொல்ல வராது// த‌லைக்க‌ன‌ம் கூடாதுங்க‌. இதை வெச்சுத்தானே ஏமாத்திக்கிட்டு திரிய‌றீங்க‌.. என்னைய‌வே இப்பிடி கேக்குறீங்க‌ளே, வெண்பூவோட‌ திற‌மையையெல்லாம் சொன்னா என்ன‌வாவீங்க‌...

அத்திரி said...

தங்கமணி ஊர்ல இல்லைனது சமையல்ல கில்லாடி ஆயிட்டீங்க போல. பதிவர் சந்திப்பில் இன்று நேரில் சந்திக்கலாம்

Syam said...

தங்கமணி ஊருக்கு போகட்டும் மீன் வாங்கி வெச்சுட்டு போன் பண்றேன் ஒரு கோட்டரோட வந்துடுங்க :-)

தாமிரா said...

நன்றி அத்திரி.!
நன்றி ஷ்யாம்.!

Saravana Kumar MSK said...

அட.. அட.. அட.. படிக்கும் போதே சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது..

Saravana Kumar MSK said...

//இந்த‌ ப‌க்குவ‌த்தில் யாராவ‌து இந்த தேன்குழம்பை ஸாரி, மீன்குழம்பை செய்து த‌ருவீர்க‌ள் எனில் போன் ப‌ண்ண‌வும், இப்போதே கிள‌ம்பிவ‌ர‌த்தயாராக‌ இருக்கிறேன்.. எங்கு வேண்டுமானாலும்.!//

நானும்.. :))

Saravana Kumar MSK said...

//டிஸ்கி : என் ர‌மா வெஜிடேரிய‌ன் என்ப‌தை அறிக‌.//

அச்சோ பாவம்.... [மும்தாஜ் ஸ்டைலில் படித்து கொள்ளவும்..]

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மகேஷ் சார் சொல்லிருக்க மாதிரி ஆகிடுச்சே:):):)

புதுகைத் தென்றல் said...

பொண்டாட்டி சைவம்னா, இவரு அசைவ சமையற்குறிப்பு போடுறாரு//

enna kodumai ithu

குசும்பன் said...

//யாராவ‌து இந்த தேன்குழம்பை ஸாரி, மீன்குழம்பை செய்து த‌ருவீர்க‌ள் எனில் போன் ப‌ண்ண‌வும், இப்போதே கிள‌ம்பிவ‌ர‌த்தயாராக‌ இருக்கிறேன்.. எங்கு வேண்டுமானாலும்.!//

துபாய் பாலைவனத்தில் இருக்கும் குட்டையில் உங்களுக்கா மீன் பிடிச்சு சமைச்சு தருகிறேன் இங்கே வரவும் தோழர்!!!

ஸ்ரீமதி said...

ஹை நான் சைவம் அண்ணா.. :)) அதனால நீங்க வேற ஏதாவது சைவத்துல செய்யற சமையல் குறிப்பு சொல்லுங்க வரேன்... ஆனா, சமையல் குறிப்பும் நல்லாத்தான் சொல்றீங்க... :))))))))))

தாமிரா said...

நன்றி MSK.!
நன்றி ராப்.!
நன்றி புதுகைத்தென்றல்.!
நன்றி குசும்பன்.!
நன்றி ஸ்ரீமதி.!