Monday, November 17, 2008

தீராத காதலும் தாளாத காமமும்..

முன் குறிப்பு : ஒற்றை அன்றில் ஸ்ரீ, சாளரம் கார்க்கி, சரவணக்குமார் MSK.. போன்ற குட்டிப்பசங்களுக்குப் போட்டியாக இதோ சில காதல் கவிதைகள்.. இன்னும் நேரமின்மையால் முதல்முத்தம் வலைப்பூவை சரிபண்ணாமல் வைத்திருக்கிறேன். அதான் அப்பப்ப கவிதைப்படங்களையும் இங்கேயே மேட்னி ஷோ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

தீராத காதலும் தாளாத காமமும்..

காலங்களைக் கடந்தும்
தூரங்களைக் கடந்தும்
தொடர்ந்து வருகிறாய்
தொட்டுச்சிரிக்கிறாய்
எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு
மீண்டும்
உன்னிலிருந்து துவங்க‌
ஒரே ஆவலாயிருக்கிறது.!

***************

நீ என்னுள்ளே பதித்த தடயங்கள்
அத்தனையும்
காற்றிலே உடைந்து போய்விட்டன..
மீதம் ஏதுமில்லை,
சாட்சிகளே இல்லாமல் பரிதாபமாக நம் காதல்.!

***************

எல்லாத்திசைகளிலிருந்தும்
உன்னைத் தழுவமுடியவிலையே
இந்தக் காற்றைப்போல..

**************

சம‌ய‌ங்களில்
நாம் ச‌ங்க‌ கால‌த்திலா
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு..
வேலை நிமித்த‌மாய்
வெளியூர் செல்ல‌ பிடிப்ப‌தேயில்லை என‌க்கு
சென்றால்
கைவ‌ளை க‌ழ‌ல்கிற‌து என்கிறாய்.

***************

புய‌லைப்போன்ற‌
வேக‌த்துட‌னும் ப‌ல‌த்துட‌னும்
முத்த‌மிட்டுத்துவ‌க்குகிறாய்.
நீரிலே மித‌க்கும் உன் சேலை போல‌
என் மீது இல‌வ‌ம்ப‌ஞ்சாய்
த‌ழைந்து நிறைவு செய்கிறாய்.!

27 comments:

தாமிரா said...

ஹைதராபாத்துக்கும் நம்ப பதிவுக்கும் ஏழரைப்பொருத்தம் போல தோன்றுகிறது. இங்கே வந்தாலே ஒன்றும் பண்ண முடியவில்லை. சென்ற பதிவர் சந்திப்பில் எடுத்த சில போட்டோக்களை போடலாம் என்று கடந்த இரண்டரை மணி நேர‌மாக முயற்சிபண்ணி வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது, போட்டோக்களை ஏற்றம் செய்யும் போதெல்லாம் கிட்டத்தட்ட இப்படித்தான் ஆகிவிடுகிறது. கடைசிவரை முடியவில்லை. பரிசல் போன்றோரெல்லாம் எப்படித்தான் படங்களை சலிக்காமல் ஏற்றுகிறார்களோ தெரியவில்லை. நாளை மீண்டும் முயற்சிபண்ணி பார்க்குறேன். எரிச்சலில் கோபம் கோபமாக வந்து கடைசியில் என்னை நானே சமாதானம் செய்துகொண்டு இந்த கவிதைகளை போட்டுள்ளேன்..

ஸ்ரீ said...

/நீ என்னுள்ளே பதித்த தடயங்கள்
அத்தனையும்
காற்றிலே உடைந்து போய்விட்டன..
மீதம் ஏதுமில்லை,
சாட்சிகளே இல்லாமல் பரிதாபமாக நம் காதல்.!//

அண்ணேன் சோக்கா இருக்கு மேல இருக்குறது. பேசாம நான் கடைய சாத்திட்டு போயிடவா?

விலெகா said...

முடியல சாமி விட்ருங்க:)))

கார்க்கி said...

//எல்லாத்திசைகளிலிருந்தும்
உன்னைத் தழுவமுடியவிலையே
இந்தக் காற்றைப்போல//


அருமை

கார்க்கி said...

//ஹைதராபாத்துக்கும் நம்ப பதிவுக்கும் ஏழரைப்பொருத்தம் போல தோன்றுகிறது. இங்கே வந்தாலே ஒன்றும் பண்ண முடியவில்லை. சென்ற பதிவர் சந்திப்பில் எடுத்த சில போட்டோக்களை போடலாம் என்று கடந்த இரண்டரை மணி நேர‌மாக முயற்சிபண்ணி வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது, போட்டோக்களை ஏற்றம் செய்யும் போதெல்லாம் கிட்டத்தட்ட இப்படித்தான் ஆகிவிடுகிறது. கடைசிவரை முடியவில்லை. //

இங்கே அலுவலகத்தில் புடுங்க இன்னமும் ஆனி இருப்பதால் வர முடியல சகா.. இல்லைன்னா படத்த ஏத்தி இருக்கலாம்..

பிரேம்குமார் said...

//ஒற்றை அன்றில் ஸ்ரீ, சாளரம் கார்க்கி, சரவணக்குமார் MSK.. போன்ற குட்டிப்பசங்களுக்குப் போட்டியாக இதோ சில காதல் கவிதைகள்..//

இதை நான் வண்மையா கண்டிக்கிறேன். அதென்ன சின்ன பசங்க.....?? அப்போ நாம எல்லாம்?

ஏன் தல ஏன்???

பிரேம்குமார் said...

//எல்லாத்திசைகளிலிருந்தும்
உன்னைத் தழுவமுடியவிலையே
இந்தக் காற்றைப்போல//

அட்ரா அட்ரா! எப்படி இப்படியெல்லாம்???

நல்லா இருக்கு தாமிரா :)

ஸ்ரீமதி said...

//நாம் ச‌ங்க‌ கால‌த்திலா
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு..
வேலை நிமித்த‌மாய்
வெளியூர் செல்ல‌ பிடிப்ப‌தேயில்லை என‌க்கு
சென்றால்
கைவ‌ளை க‌ழ‌ல்கிற‌து//

Nice :))

விஜய் said...

போட்டுத் தாக்கறீயளே!!!

narsim said...

கார்க்கி பயலோட சேர்ந்து ரயில்ல போகாதீங்கனு சொன்னத கேட்கலையா தலைவா??

வார்த்தைகள் அதுவா வந்த மாதிரி இருக்கே..

நன்று..

அத்திரி said...

//எல்லாத்திசைகளிலிருந்தும்
உன்னைத் தழுவமுடியவிலையே
இந்தக் காற்றைப்போல//


அருமையான வரிகள். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் முடியலை....!!!!!!!!!!!!!

சும்மா கிண்ணுன்னு இருக்கு..........!!!!!!!!!!!!

தாமிரா said...

நன்றி ஸ்ரீ.!
நன்றி விலெகா.!
நன்றி கார்க்கி.!
நன்றி பிரேம்.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி விஜய்.!
நன்றி நர்சிம்.!
நன்றி அத்திரி.!

அதிரை ஜமால் said...

//சம‌ய‌ங்களில்
நாம் ச‌ங்க‌ கால‌த்திலா
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு..
வேலை நிமித்த‌மாய்
வெளியூர் செல்ல‌ பிடிப்ப‌தேயில்லை என‌க்கு
சென்றால்
கைவ‌ளை க‌ழ‌ல்கிற‌து என்கிறாய்.//

மிக அருமை.

rapp said...

:):):)

சந்தனமுல்லை said...

நல்ல கவிதைகள்!!

//சம‌ய‌ங்களில்
நாம் ச‌ங்க‌ கால‌த்திலா
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு..
வேலை நிமித்த‌மாய்
வெளியூர் செல்ல‌ பிடிப்ப‌தேயில்லை என‌க்கு
சென்றால்
கைவ‌ளை க‌ழ‌ல்கிற‌து என்கிறாய்//

:-))

SK said...

// எல்லாத்திசைகளிலிருந்தும்
உன்னைத் தழுவமுடியவிலையே
இந்தக் காற்றைப்போல //

மிகவும் ரசித்தேன் இதை :))

எதோ நல்ல இருங்க அப்பு.

குறிப்பு : அண்ணே, சினிமா பதிவு போட்டுட்டேன். :))))

தாமிரா said...

நன்றி ஜமால்.!
நன்றி ராப்.!
நன்றி முல்லை.!
நன்றி SK.!

கும்க்கி said...

உங்களுக்கு கோபம் கோபமாக வரும்போதெல்லாம் தாங்கிக்கொள்ள நாங்கள் இருக்கிறோமென்ற தைரியத்தில் கவிதை எழுதப்போக...

...நல்லா வந்திருக்கு.

Joe said...

//எல்லாத்திசைகளிலிருந்தும்
உன்னைத் தழுவமுடியவிலையே
இந்தக் காற்றைப்போல//

Awesome, Thamira!

Saravana Kumar MSK said...

// ஒற்றை அன்றில் ஸ்ரீ, சாளரம் கார்க்கி, சரவணக்குமார் MSK.. போன்ற குட்டிப்பசங்களுக்குப் போட்டியாக இதோ சில காதல் கவிதைகள்..//

குட்டி பசங்களை போட்டியாக எண்ணியதற்கு கண்டனங்கள்.. :)

Saravana Kumar MSK said...

//சம‌ய‌ங்களில்
நாம் ச‌ங்க‌ கால‌த்திலா
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு..
வேலை நிமித்த‌மாய்
வெளியூர் செல்ல‌ பிடிப்ப‌தேயில்லை என‌க்கு
சென்றால்
கைவ‌ளை க‌ழ‌ல்கிற‌து என்கிறாய்.//

ஜூப்பரப்பு..

Saravana Kumar MSK said...

//Blogger ஸ்ரீ said...

/நீ என்னுள்ளே பதித்த தடயங்கள்
அத்தனையும்
காற்றிலே உடைந்து போய்விட்டன..
மீதம் ஏதுமில்லை,
சாட்சிகளே இல்லாமல் பரிதாபமாக நம் காதல்.!//

அண்ணேன் சோக்கா இருக்கு மேல இருக்குறது. பேசாம நான் கடைய சாத்திட்டு போயிடவா?//


R I P P E E T T U.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

//சம‌ய‌ங்களில்
நாம் ச‌ங்க‌ கால‌த்திலா
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு..
வேலை நிமித்த‌மாய்
வெளியூர் செல்ல‌ பிடிப்ப‌தேயில்லை என‌க்கு
சென்றால்
கைவ‌ளை க‌ழ‌ல்கிற‌து என்கிறாய்.//

அழகான கவிதை.

எல்லாமெ நல்லாருக்கு.
உங்களின் திறம் வியக்கவைக்கின்றது.
ஆல் ரவுண்டரா இருக்கீங்களே.

தமிழ்ப்பறவை said...

இன்பத்துப் பாலின் தெளிக்கப் பட்ட துளிகள் தித்திப்பு.
//சாட்சிகளே இல்லாமல் பரிதாபமாக நம் காதல்.!
//
இதைவிட வேறேதும் தடயம் தேவையில்லையென அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.

//உன்னைத் தழுவமுடியவிலையே
இந்தக் காற்றைப்போல..//

குட்...
தொடடுங்கள் கவிச்சேவையை...

தாமிரா said...

நன்றி கும்க்கி.!
நன்றி ஜோ.!
நன்றி MSK.!
நன்றி அமிஷு அம்மா.! (ஆல் ரவுண்டரா இருக்கீங்களே.// ஹிஹி.. ரொம்ப புகழறீங்க..)
நன்றி தமிழ்பறவை.!

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

// எல்லாத்திசைகளிலிருந்தும்
உன்னைத் தழுவமுடியவிலையே
இந்தக் காற்றைப்போல //

superb one. After long time, I got to see a best one. Matha ella kavithaigalum nalla irukku...

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

nalla kavithaigal.