Thursday, November 20, 2008

கொஞ்சம் மண்ணெண்ணையும் கொஞ்சம் சமூக சிந்தனையும்..

"கடும் தாகத்துடன் அந்த அறைக்குள் வந்த நான் நீரென நினைத்து அந்த வாட்டர் பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை அவசரத்தில் குடித்து விருட்டென வாந்தியெடுத்தேன்."

மேற்சொன்ன வரிகள் ஒருவருக்கு நிஜமாகவே நடந்தவை. இதில் என்ன சிறப்பு இருக்கிறது? இது அனேகருக்கும் நடப்பதுதானே. வாருங்கள் ஏதாவது சிறப்பு இருக்கிறதா என பார்ப்போம்.

நல்ல வெயிலில் கடும் தாகம் மற்றும் களைப்புடன் அறைக்குள் நுழைகிறேன். தண்ணீர்க்குடம் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. பாட்டில்கள் காலியாக கிடக்கின்றன. இடது பக்கத்து அறை பூட்டப்பட்டிருக்கிறது. வலப்பக்க அறை பூட்டப்படவில்லை. சும்மா திறந்திருந்த கதவை தள்ளியவுடன் திறந்துகொண்டன. யாரும் இல்லை. எங்கே போயிருப்பான்கள்? பக்கத்து கடைக்கு போயிருப்பான்கள். அல்லது கீழே நின்று தம்மடித்து கதையளந்து கொண்டிருப்பான்கள். இங்கேயாவது தண்ணியிருக்கிறதா? அவசரத்தில் தேடினேன். ந‌டு அறையில் பாயின் மேல் ஒரு பிஸ்லெரி வாட்ட‌ர் பாட்டிலில் அந்த‌ நீர்ம‌ம் இருக்கிற‌து. கொஞ்சங்கூட எனக்கு சந்தேகப்படத் தோன்றவில்லை. அது நீரா? பிற‌ ஏதுமா? என்று ஆராயும் அள‌வில் நான் நிதான‌மாக‌ இல்லை. அப்ப‌டியிருந்த‌து என் தாக‌ம்.

விருட்டென‌ போய் குனிந்து அதை எடுத்தேன். நிமிரும் முன்பாக‌வே மூடியை திற‌க்க‌ ஆர‌ம்பிக்கிறேன். என்ன‌ எங்கோ லேசான‌ கேஸ் க‌சியும் வாடை வ‌ருகிற‌தே? இந்த அறையில் கேஸ் கிடையாதே.. ந‌ன்கு நிமிர்ந்துவிட்டேன். மூடி முழுவதுமாய் திற‌க்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து. ந‌ன்கு வாடை வீசுகிற‌தே, இப்போது அறைக்குள் வ‌ரும்போது கூட‌ இல்லையே.. திடீரென‌ எப்ப‌டி? பாட்டில் வாய‌ருகே சென்று கொண்டிருக்கிற‌து. அய்ய‌ய்யோ க‌டும் கேஸ் லீக்.! கீழே இருக்கும் இரும்புப்ப‌ட்ட‌றையிலிருந்துதான் கேஸ் லீக் ஆகிற‌து. ஆப‌த்து.! உட‌னே எச்ச‌ரிக்க‌வேண்டும். சில‌ விநாடிக‌ள்தானே த‌ண்ணீரைக்குடித்துவிட்டு ஓடிப்போய் சொல்ல‌லாம். அய்யோ.. சிலிண்ட‌ர் வெடித்தே போய்விட்ட‌து...

.... FROOOOOOCSH....

வான‌வில்லை ஏற்ப‌டுத்திக்கொண்டு அறையிலேயே ம‌ண்ணெண்ணையை விசிறித்துப்பினேன். பாட்டிலை போட்டுவிட்டு வெளியே ஓடி வ‌ந்து ஓங்க‌ரித்து துப்பிக்கொண்டிருந்தேன். ம‌ட‌த்த‌ன‌மாக‌ ம‌ண்ணெண்ணையை குடித்துவிட்டு சில விநாடிகளுக்குள் என்னே ஒரு சோஷிய‌ல் சிந்த‌னை.. சை.!

சில துளிகள் உள்ளேயும் போய்விட்டது போல இருக்கிறது. வாய் முழுதும் ஒருமாதிரி சொல்லொணாத வண்ணம் குறுகுறுவென உறுத்திக்கொண்டிருந்தது. கையில் ம‌ண்ணெண்ணை ப‌ட்டாலே சோப்பு போடாம‌ல் போய்த்தொலையாது. வாயில் எப்ப‌டி சோப்பு போடுவ‌து? போடலாமா? இன்னும் கொஞ்சம் குமட்டிக்கொண்டு வருமோ? அப்புற‌ம் தைரிய‌ம‌ற்று அரைம‌ணிநேர‌ம் வாய்க்கொப்ப‌ளித்துக் கொண்டிருந்தேன்.

டிஸ்கி : அவ‌ச‌ர‌மாக‌ ஊருக்குப்போவ‌தால் (செவ்வாய்க்கிழ‌மைதான் ரிட்ட‌ர்ன்) க‌டையை காத்தாட விட்டுவிடாம‌ல் ப‌ழைய‌ ப‌திவுக‌ளை ப‌டித்துக்கொண்டிருக்க‌வும். வந்து பார்க்கும் போது ஹிட்ஸ் 25000த்தை தொட்டிருக்கவேண்டும். இதோ ஓடி வ‌ந்துவிடுவேன். யாருக்கெல்லாம் அல்வா வேண்டும்.?

19 comments:

புதுகை.அப்துல்லா said...

மீ த ஃபர்ஸ்டு

புதுகை.அப்துல்லா said...

//யாருக்கெல்லாம் அல்வா வேண்டும்.?
//

அய்.. எனக்கு அல்வா! எனக்கு அல்வா!

:)))

குசும்பன் said...

//"கடும் தாகத்துடன் அந்த அறைக்குள் வந்த நான் நீரென நினைத்து அந்த வாட்டர் பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை அவசரத்தில் குடித்து விருட்டென வாந்தியெடுத்தேன்."//

குடிச்சதுதான் குடிச்சிட்டீங்க அப்படியே ஒரு திரிய வாயில் பொட்டு பத்த வெச்சிருந்தா மின்சாரம் இல்லாததுக்கு வீட்டில் வெளிச்சமாவது
இருந்திருக்கும்!!!

விஜய் ஆனந்த் said...

ம்ம்ம்ம்...

அப்போ திருநெல்வேலி பயணமா??

ஹைதராபாத் என்ன ஆச்சு???

தமிழ் பிரியன் said...

மீ த மூணு

தமிழ் பிரியன் said...

வரும் போது இருட்டுக்கடை அல்வா ஒரு கிலோ பார்சல்.. சாப்பிடத்தான்... :))

தமிழ்ப்பறவை said...

நல்லா நடையில் இருந்தது உங்கள் குடி அனுபவம்...அதைத் குடிநீர்ன்னு நினைச்சுக் குடிச்சீங்களா... இல்லை குவாட்டர் வோட்கான்னு நினைச்சுக் குடிச்சீங்களா...?!

விலெகா said...

புதுகை.அப்துல்லா said...
//யாருக்கெல்லாம் அல்வா வேண்டும்.?
//

அய்.. எனக்கு அல்வா! எனக்கு அல்வா!

:)))

மணிவண்ணனிடம் கேளுங்க:-))))))

rapp said...

ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், என்னதிது? ஏன் இந்த கொலைவெறி?

Anonymous said...

//யாருக்கெல்லாம் அல்வா வேண்டும்.?//

மண்ணெண்ணைய் குடிச்சா அல்வா சாப்பிடணுமா?

கபீஷ் said...

//
குசும்பன் said...

குடிச்சதுதான் குடிச்சிட்டீங்க அப்படியே ஒரு திரிய வாயில் பொட்டு பத்த வெச்சிருந்தா மின்சாரம் இல்லாததுக்கு வீட்டில் வெளிச்சமாவது
இருந்திருக்கும்!!!
//

அதே

Mahesh said...

அல்வாவெல்லாம் கேட்டுக்கிட்டு குடுக்கக்கூடாது.. இப்பக் கூடப் பாருங்க.... நீங்க குடுத்திருக்கறது அல்வான்னு தெரியாம பின்னூட்டம் போட்டுக்கிட்டிருக்கோம் :))))))))

பாபு said...

நானும் கூட ஒரு தடவை குடிச்சிருக்கேன்,மண்ணெண்ணைய சொன்னேன்

கும்க்கி said...

எனக்கு ஒரு கிலோ...
அப்ப்டியே பக்கத்து வீட்டுலயும் கேட்டாங்க..
என்னது எதுத்த வீட்டுக்காரங்க சண்டைக்கு வருவாங்களா...சரி அவங்களுக்கும்...

அய்யய்யோ லைன் கட்டறாங்களே..

சரி சரி தாமிரா ரொம்ப நல்லவர்ன்னு எல்லோரும் சொல்லிகிறாங்க...

அவர் பதிவ எல்லாம் குடும்பத்தோட உக்கார்ந்து எவ்வளவு பொருமையா(?)
படிக்கிறோம்..

நமக்காக அட்லீஸ்ட் ஒரு லோடு அல்வா கூடவா வாங்கி அனுப்பமாட்டார்..?

என்னது மீள் பதிவா....அதுதான் அல்வாவா....நா என்னமோ நெனச்சிட்டனே....

வால்பையன் said...

அதான் மண்னெண்ணை உங்களுக்கு அல்வா கொடுத்துருச்சே, நீங்க வேற எங்களுக்கு கொடுக்கனுமா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

அய்யோ பாவம்.

நல்லவேளை பெட்ரோல் வைக்கல, தாகத்துக்கு கோகோ கோலா ந்னு அத நெனச்சி குடிச்சிருப்பிங்க.

எல்லாம் வீட்டுல அம்மணி இல்லாத தொந்தரவுதான்
அடுத்த வாரம் எல்லாம் சரியாகிடும்.

வெண்பூ said...

என்னய்யா... நீங்க பச்சத்தண்ணிய தவிர வேற எது குடிச்சாலும் பதிவு போடுறதுன்ற முடிவு பண்ணியிருக்கீங்க போல.. நடத்துங்க.. :)))

சந்தனமுல்லை said...

//வால்பையன் said...

அதான் மண்னெண்ணை உங்களுக்கு அல்வா கொடுத்துருச்சே, நீங்க வேற எங்களுக்கு கொடுக்கனுமா?//

ரிப்பீட்டு!

தாமிரா said...

ந‌ன்றி அப்துல்.!

ந‌ன்றி குசும்பன்.! (ர‌சித்தேன்)

ந‌ன்றி விஜய்.!

ந‌ன்றி தமிழ்.! (ஒரு கிலோ போதுமா?)

ந‌ன்றி பறவை.!

ந‌ன்றி விலெகா.!

ந‌ன்றி ராப்.!

ந‌ன்றி அம்மிணி.!

ந‌ன்றி கபீஷ்.!

ந‌ன்றி மகேஷ்.! (சரியா புடிச்சுட்டீங்களே.. இதெல்லாம் வெளிய சொல்லப்புடாது.. ஆமா.!)

ந‌ன்றி பாபு.!

ந‌ன்றி கும்க்கி.! (என்னது மீள் பதிவா....// சை.. இந்த ஐடியா மறந்துபோச்சே..)

ந‌ன்றி வால்.! (ரசித்தேன்)

ந‌ன்றி அமிஷு அம்மா.! (இது நடந்து பல வருடமாச்சு மேடம்..)

ந‌ன்றி வெண்பூ.!

ந‌ன்றி முல்லை.!