Tuesday, November 25, 2008

லீன் என்றால் என்ன?

ஊருக்குப் போய்விட்டு நல்லபடியாக திரும்பியாயிற்று.வேலை விஷயமாக, சொந்த விஷயமாக என்று இரண்டு வாரங்களாக அலுவலகத்தில் இல்லாததால் ஒரு பெரிய வேலைப்பளு காத்திருக்கிறது. இருப்பினும் கடையும் நான்கு நாட்களாக காத்து வாங்கிக்கொண்டு கிடக்கிறது, அதையும் கவனிக்க வேண்டும். எழுதுவதற்காக நிறைய தங்கமணி மேட்டர்கள் மண்டைக்குள் கிடந்து குழம்பிக்கொண்டிருந்தாலும், லைட்டாக ஒரு பதிவு போடலாமே என்று ஒரு ஐடியா. துறை சார்ந்து நான் எழுதிய சில பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது நினைவுக்கு வருகிறது. குறிப்பாக "சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்" நல்ல வரவேற்பைப்பெற்றது. அதன் தொடர்ச்சியை எழுத சில நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். மொத்தமாக மூன்று பகுதியாக அதை எழுத திட்டமிட்டிருந்தேன். மீதி இரண்டு பகுதிகளையும் விரைவில் கண்டிப்பாக எழுதுவேன். இந்த 'லீன்' என்ற விஷயமும் கிட்டத்தட்ட 'சிக்ஸ்சிக்மா' வைப்போலவே தொழிற்துறையில் பரவலாக பேசப்பட்டு, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம்தான். ஆகவே அதையும் தெரிந்து கொள்வதில் தவறில்லை.சொல்லப்போனால் இரண்டும் அக்கா, தங்கை போலத்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இதுவும் மெக்கானிகல் துறைக்கு மட்டுமே என்றில்லாமல் அனைத்து துறைகளிலுமே பயன்படுத்தத் தகுந்த‌தே. நிறைய தொடர்புகள் இருப்பதால் இதைத் தொடரும் முன்பு 'சிக்ஸ் சிக்மா' முதல் பகுதியை படிக்காதவர்கள் படித்துவிட்டு வந்துவிடுவது நல்லது.


'லீன் என்றால் என்ன?'


சிக்ஸ் சிக்மாவைப்போல முறுக்கு சுற்றாமல் ஒரே வரியில் இதற்கு பதில் சொல்லிவிடலாம். "ஒரு செயலை (Process) நன்குஆராய்ந்து அதில் நிகழும் விரயங்களை (Wastages) கண்டு பிடித்து அதை நீக்கி/ அல்லது முடிந்த வரை குறைத்து அந்த செயலின் உற்பத்தித்திறனை(Productivity) உயர்த்துவதே 'லீன்' வழிமுறைகள் எனப்படுகிறது" இன்னும் நன்றாக சொல்லவேண்டுமெனில் பொது மருத்துவருக்கும், ஸ்பெஷலிஸ்ட்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப்போல பிற விரயங்களையும் லீன் கணக்கில் கொள்கிறது எனினும் "நேர விரயத்தை" குறைப்பதிலேயே லீன் ஸ்பெஷலிஸ்ட்டாக செயல்படுகிறது.


ஒரு உதாரணம் பார்க்கலாம்.
நான் ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறேன். அங்கே இட்லி தயாரிப்பது ஒரு செயல். மாஸ்டர் கார்க்கிக்கு(இவர் இட்லி ஸ்பெஷலிஸ்ட்) மூன்று பங்கு மாவு, சட்டி பானைகள், அடுப்பு எல்லாம் தரப்படுகிறது.அவர் சரியாக 30 நிமிடத்தில் 150 இட்லிகளை தயாரிக்கிறார். (எனக்கு மேலும் 50 இட்லிகள் தேவைப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? நான் அவருக்கு மேலும் பத்து நிமிடம் மற்றும் ஒரு பங்கு மாவு தரவேண்டும்.. சரிதானா? இது ஒரு சாதாரண செயல். இது உற்பத்தித்திறனில் விரிவாக்கம் (Expansion) செய்தலாகும். இதில் 'லீன்' எல்லாம் இல்லை.)


சோதனை :

எனது இன்னொரு மாஸ்டரான வெண்பூவை இட்லி சுட அழைக்கிறேன் (இவர் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட், இருப்பினும் லீனில் இது போன்ற சோதனைகளெல்லாம் செய்யப்படவேண்டும்).அவருக்கும் அதே அளவு மாவு, மற்றும் வசதிகள் தரப்படுகின்றன.என்ன ஆச்சரியம்? இவர் அதே மாவில் அதே 30 நிமிடத்தில் 152 இட்லிகளை தயாரித்துவிடுகிறார். புதிதாக சேர்ந்துள்ள மாஸ்டர் அப்துல்லாவும் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்படுகிறார். அவர் கார்க்கியைப்போலவே 150 இட்லிகளைத் தயாரித்தாலும் இன்னொரு ஆச்சரியமாக 28 நிமிடங்களில் வேலையை முடித்துவிடுகிறார்.

சோதனை முடிவுகள்:

கார்க்கியும், அப்துல்லாவும் வெண்பூவைப் போலில்லாமல் இரண்டு இட்லிகளுக்கான மாவை சிந்தியும் சிந்தாமலும் விரயம் செய்கிறார்கள். அப்துல்லாவைப் போலில்லாமல் வெண்பூவும், கார்க்கியும் சொந்தக்கதையை யோசித்துக்கொண்டோ, பராக்கு பார்த்துக்கொண்டோ 2 நிமிடங்களை விரயம் செய்கிறார்கள்.


இவையே லீனில் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவரும் கையாளும் வழிமுறைகளில் சிறப்பானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதையே அனைவரும் கடைபிடிக்கும் படி செயல்திட்டத்தை (Procedure) ஏற்படுத்தப்படவேண்டும். இடுபொருட்களில் எந்த பெரிய மாற்றமும் செய்யாமல் செயல்முறைகளில் சிறிய மாற்றங்களைச்செய்து விளைபொருட்களில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதே லீன் சிஸ்டம் எனப்படுகிறது.


மனிதர்களை எந்திரங்களாக கருதி அவர்களின் விநாடிகளைக்கூட அளவிடும் நேர அளவீடு (Time study),ஸ்பெஷலிஸ்ட்டுகளை இல்லாமல் செய்தல் (De-skilling) போன்ற விஷயங்களை இந்த லீனின் குறைபாடுகளாக காணும் மாற்றுக்கருத்துகளும் உண்டு.மொத்தத்தில் லீன் எனப்படுவது ஒல்லியாகவும் இல்லாமல்,குண்டாகவும் இல்லாமல் "கச்சிதமாக" இருப்பதையே குறிக்கிறது.


எளிய சந்தேகங்களையும்,மேலும் தெளிவான விளக்கங்களையும், தவறு இருப்பின் திருத்தங்களையும் பின்னூட்டங்களில் தெரியப்படுத்தலாம். வரவேற்கிறேன்.

52 comments:

வால்பையன் said...

இதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் உதாரண மாஸ்டர்கள் தான் மாஸ்டர் பீஸ்

வால்பையன் said...

ஆக மொத்தம் லீன் என்றால் இட்லி சுடுவது என்று மக்கள் நினைத்து கொள்ள போகிறார்கள்

வால்பையன் said...

வாழ்த்துக்கள்
நான் கேள்வி பட்ட விசயத்திற்க்கு

வால்பையன் said...

கும்மிக்கு மன்னிக்கவும்,
பழக்க தோஷத்தில் வந்து விட்டது

விஜய் said...

தாமிரா,
நீங்கள் கொடுத்திருக்கும் உவமை தான் புல்லரிக்குது.
சரி, இந்த லீன் பிராஸசினால் எப்படி இந்த விசயங்களை சரி செய்ய முடியும். அத்த சொல்லவே இல்லை.

ஆஃபீசுல நிறைய பயிற்சி முகாமெல்லாம் நடத்துறாங்க போலிருக்கே!!

rapp said...

//வாழ்த்துக்கள்
நான் கேள்வி பட்ட விசயத்திற்க்கு//

என்ன விஷயம்? என்ன விஷயம்? என்ன விஷயம்?:):):)

சந்தனமுல்லை said...

ம்ம்..இன்டெரெஸ்டிங் தாமிரா!
கடைசில அப்துல்லா இட்லி சுட்றதுதான் எங்க எல்லாருக்கும் தெரியுமே! juz kidding! :-))

rapp said...

//இதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் உதாரண மாஸ்டர்கள் தான் மாஸ்டர் பீஸ்//

வழிமொழிகிறேன்:):):)

rapp said...

//கடைசில அப்துல்லா இட்லி சுட்றதுதான் எங்க எல்லாருக்கும் தெரியுமே!//

:):):)super

rapp said...

me the 10TH:):):)

வால்பையன் said...

////வாழ்த்துக்கள்
நான் கேள்வி பட்ட விசயத்திற்க்கு//

என்ன விஷயம்? என்ன விஷயம்? என்ன விஷயம்?:):):) //

அதை நான் சொல்வது நாகரிகமாக இருக்காது.
நீங்கள் எதை வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளலாம்,
குறிப்பாக ”ப்ரமோஷன்”

அனுஜன்யா said...

தாமிரா,

நல்ல தகவல்களுடன் தரமான பதிவு. ஆயினும் கும்மியைத் தவிர்க்க முடியவில்லை. வெண்பூ 152 இட்லிகள் செய்தாலும், அவர் சாப்பிட்டது போக 94 இட்லிகளே இருந்ததையும் நீங்கள் குறிப்பிட வேண்டும். அதே போல அப்துல்லா கடிகாரத்தை திருப்பி வைத்ததை நீங்கள் கவனக் குறைவால் பார்க்கவில்லை.

சாரி நண்பா, எளிதில் புரிந்து கொள்ள இந்த மாதிரி உதாரணங்கள் தேவை. நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

பரிசல்காரன் said...

@ தாமிரா

வாழ்த்துக்கள்.

அப்புறம் உங்கள் உதாரணங்கள் சூப்பர்!

நீங்கள் குறிப்பிட்டுள்ளதை நான் எங்கள் நிறுவனத்தில் ஆராய்ந்துவருகிறேன். Time Motion Study மூலம்....

Ŝ₤Ω..™ said...

உதாரணமும் சூப்பர் விளக்கமும் சூப்பர்..
விரைவிலேயே 6சிக்மா - Part 2 ரிலீஸ் பண்ணுங்க..

narsim said...

//மனிதர்களை எந்திரங்களாக கருதி அவர்களின் விநாடிகளைக்கூட அளவிடும் நேர அளவீடு (Time study),ஸ்பெஷலிஸ்ட்டுகளை இல்லாமல் செய்தல் (De-skilling) போன்ற விஷயங்களை இந்த லீனின் குறைபாடுகளாக காணும் மாற்றுக்கருத்துகளும் உண்டு.மொத்தத்தில் லீன் எனப்படுவது ஒல்லியாகவும் இல்லாமல்,குண்டாகவும் இல்லாமல் "கச்சிதமாக" இருப்பதையே குறிக்கிறது.
//

Nice Boss!!

muru said...

/// கார்க்கிக்கு(இவர்
இட்லி ஸ்பெஷலிஸ்ட்) மூன்று பங்கு மாவு, சட்டி பானைகள், அடுப்பு எல்லாம் தரப்படுகிறது.அவர் சரியாக 30 நிமிடத்தில் 150 இட்லிகளை தயாரிக்கிறார்///

///கார்க்கி சொந்தக்கதையை யோசித்துக்கொண்டோ, பராக்கு பார்த்துக்கொண்டோ 2 நிமிடங்களை விரயம் செய்கிறார்கள்.///

ஆமாம் தமிரா, கார்க்கி சிங்கையில் வேலை செய்யும் போது, "லீர்ன் குரு கோபால்" என்பவரிடம் மாட்டிக்கொண்டார். ஹா ஹா,

muru said...

லீர்ன்க்கு கார்க்கி மிக மிக பொருத்தமான உதாரணதாரி, ஹா... ஹா....

Mahesh said...

பெரிய விஷயத்தை ரொம்ப சுளுவா விளக்கிட்டீங்க...

process re-engineersனு போர்டு போட்டுக்கிட்டு, ப்ளாக் பெல்ட், ரெட் பெல்ட் எல்லாம் வாங்கி, "மாவை கீழ சிந்தாம இருங்க"ன்னு அட்வைஸ் பண்ணி, அதுக்கு 300 பக்க ரிபோர்ட் குடுத்து, 3 மணி நேரம் ப்ரசண்டேஷன் செஞ்சு (..அய்யோ மூச்சு வாங்குது...) மணிக்கு 5157$ பில்ல நீட்டுவாங்களே !!

இப்பல்லாம் time study, motion study கூட ambience study, sequence study ன்னு என்னென்னமோ பண்றாங்க. குவாலிடி துறை எங்கயோ போக்கிட்டுருக்கு.

குவாலிடி கடவுள் மாதிரி. எப்படி இருக்கும்னு யாருக்கும் தெரியாது.

கார்க்கி said...

//ஆமாம் தமிரா, கார்க்கி சிங்கையில் வேலை செய்யும் போது, "லீர்ன் குரு கோபால்" என்பவரிடம் மாட்டிக்கொண்டார். ஹா //


இது யாருடா இது? நம்ம வரலாறெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்காரேனு போய் பார்த்தேங்க.. அண்ணன் இன்னும் அறிமுக பதிவு கூட எழுதல. அதுக்குள்ள Followers போட்டு மொத ஆளா யாரு வர்றீங்கனு கேட்கறாருங்க.. சரி நம்ம சாதனைல இதுவும் ஒன்னா இருக்கட்டுமேனு செஞ்சிட்டு வந்துட்டேன்..

அண்னே நீங்க எந்த ஊரு?

கார்க்கி said...

ஆங்ங்ங்ங்ங்ங்ங்/// பதிவ பத்தி சொல்லனும் இல்ல.. என்ன பொறுத்த வரைக்கும் லீன் அப்படின்னு சொன்னா அது இலியானா தாங்க.. எவ்ளோ லீனா இருக்காங்க தெரியுமா?

தாமிரா said...

நன்றி வால்பையன்.! (அளவான கும்மி ஏற்புடையதே.! ஆமாம் என்ன கேள்விப்பட்டீர்கள் வாழ்த்துச்சொல்லுமளவு?)

நன்றி விஜய்.! (சரி, இந்த லீன் பிராஸசினால் எப்படி இந்த விசயங்களை சரி செய்ய முடியும். அத்த சொல்லவே இல்லை.// அத‌ற்கு வ‌ழ‌க்க‌மான‌ அதே 'ப்ராப்ள‌ம் சால்விங்'டெக்னிக்ஸ்தான். சிற‌ப்பாக‌ ஒண்ணுமில்லை.. என‌து நோக்க‌ம் சிறிய‌ அள‌வில் ஒரு அறிமுக‌ம் அவ்வ‌ள‌வுதான். எனினும் சில‌ 'ப்ராப்ள‌ம் சால்விங்' குக‌ளை 'சிக்ஸ்'ஸின் அடுத்த பகுதிகளில் காணலாம்)

நன்றி ராப்.! (என்ன விஷயம்? என்ன விஷயம்?// அனேக‌மாக‌ அது என் குழ‌ந்தை குறித்த‌தாக‌ இருக்கும் என‌ நினைக்கிறேன். என‌து 'ப‌ப்புவும் ச‌ந்த‌ன‌முல்லையும்' ப‌திவை ப‌டித்து விட்டு எனக்கு குழந்தை பிறந்திருப்பதாக நினைத்து ப‌ல‌ரும் (சரி..சரி.. சிலர்தான்) மெயிலிலும், போனிலும் வாழ்த்து சொன்னார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி. ஆனால் அது புதிய‌ செய்தியில்லை. என் குழ‌ந்தைக்கு வ‌ரும் ஜ‌ன‌வ‌ரியில் முத‌ல் பிற‌ந்த‌ நாள் கொண்டாட‌ போகிறேன். ப‌திவுக‌ளில் இது போன்ற‌ குடும்ப‌ விஷ‌ய‌ங்க‌ளை எழுதியிராவிட்டாலும். சில‌ பின்னூட்ட‌ங்க‌ளில் ப‌கிர்ந்துகொண்டுதான் வருகிறேன். மேலும் நேரில் ச‌ந்திக்கும் ந‌ண்ப‌ர்க‌ளிட‌மும் ப‌கிர்கிறேன்)

நன்றி முல்லை.! (உதார‌ண‌ம் எழுதுகையில் என‌க்கே சிரிப்பு வ‌ந்த‌து)

நன்றி அனுஜன்யா.! (வெண்பூ குறித்த கமெண்டை சிரித்து ம‌கிழ்ந்தேன் பதிவின் இறுதியில் முத்தாய்ப்பான விஷயம் இல்லாமல் தவித்தேன், இது பொருத்தமாக இருந்திருக்கும். ந‌ம்ப‌ க‌டைப்ப‌க்க‌ம் வ‌ர‌வே மாட்டேங்குறீங்களே..)

நன்றி பரிசல்.!

நன்றி சென்.! (பொறுங்க‌.. வ‌ரும்ங்க‌..)

நன்றி நர்சிம்.!

நன்றி முரு.!

நன்றி மகேஷ்.! (ச‌ரியா சொன்னீங்க‌ த‌ல‌.. சில‌ உருப்ப‌டியான‌ விஷ‌ய‌ங்க‌ள் ந‌ட‌ந்தாலும், பெரும்பாலான‌வை 3 ம‌ணி நேர‌ ப‌வ‌ர்பாயிண்டாக‌ ம‌ட்டுமே இருப்ப‌து வேத‌னை.)

தாமிரா said...

ந‌ன்றி கார்க்கி.! (அதென்ன‌மோ உண்மைதானுங்க‌.. )

SK said...

ரொம்ப எளிமையா விளக்கி இருக்கீங்க தாமிரா :)

வாழ்த்துக்கள்

SK said...

இதுக்கு எதாவது 'Numerical tool' இருக்கா தலை.

கும்க்கி said...

very nice.

கும்க்கி said...

கமெண்ட் கூட இப்படி லீனாத்தான் போடனும்,.

Anonymous said...

தாமிரா,

எளிமையாகச் சொல்லியிருகிறீர்கள். இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்.

நடைமுறை உதாரனங்கள் வசீகரமானவை. பைனரியை விளக்க இரண்டு டம்ளர்களை வைத்துச் சொல்லித்தந்தார் சுஜாதா, மயன் என்ற பத்திரிக்கையில். அது பெரும் வரவேறபைப் பெற்றது.

தாமிரா said...

நன்றி SK.!
நன்றி கும்க்கி.!
நன்றி வேலன்.! (இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்..// உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம் தல.. **இப்பிடி சொல்லி சொல்லியே புண்ணாக்குங்கப்பா**)

T.V.Radhakrishnan said...

உதாரணங்கள் சூப்பர்!

முரளிகண்ணன் said...

nice thamira

RAMASUBRAMANIA SHARMA said...

SUPERB ARTICLE. I THINK, THE WRITER IS GOING TO BECOME A MANAGEMENT GURU. VERY SIMPLE & EASILY UNDERSTANDABLE EXPLANATION FOR A MAJOR MANAGEMENT PROCESS, WHICH IS BEING FOLLOWED BY ALL THE CORPORATE COMPANIES IN VARIOUS TIME LINES...EXCELLENT...KEEP WRITING SUCH ARTICLES..WISHES..

Itsdifferent said...

The Lean in the manufacturing world is mostly around JIT - Just In Time to keep the inventory turns at an efficient level.

There is a another re-engineering methodology from GE, which is called "Workout". Thats what it actually means, taking "Work" , "out" of an existing processes to save time. You basically white board the process flow of the status quo, and get the experts to question each of the steps of the flow, and eliminate, combine to reduce time.
In any of these processes "Execution" is the key. Most companies start all of these studies and come up with reams of recommendations, but slowly go back to the original steps. I would suggest Ram Charan's Execution book as a must read, for anyone who is coming out of such trainings.
Japanese learnt from the Americans, but Americans forgot that after a while, and Japanese perfected it. They call their process as "Kaizen" - which translates to "Continuous Improvement", and it can be applied to all aspects of life.
Just imagine if we can apply one of these processes to any one of the workflows in our Government offices and gain a modest 10% efficiency.

வெண்பூ said...

சூப்பர் தாமிரா.. கடினமான ஒரு விசயத்தை அழகான உதாரணம் மூலம் தெளிவாக விளக்கிட்டீங்க.. அருமை..

தமிழ்ப்பறவை said...

நல்ல பதிவு. வரவேற்கிறேன்...

கடைசி பக்கம் said...

thaamira,

keep going

nice. We expect u to give some applied usage instad of examples only

Chuttiarun said...

நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

புதுகை.அப்துல்லா said...

உங்ககிட்ட பழகுன பாவத்துக்கு நாங்கெல்லாம் இட்லி மாஸ்டரா??
நடத்துங்க...நடத்துங்க..
இதுல சந்தனமுல்லை வேற??

( உண்மையச் சொல்லனும்னா உங்க ரெண்டு பேரு சேட்டையையும் மிகவும் இரசித்தேன்)

:))

சந்திப்பு said...

அலிபாபாவும் 108 அறிவுரைகளும்

தோழரே! விஷயத்தை பேட்டாக சொல்லியிருக்கிறீர்கள். லீனை புரிந்து கொள்வதற்கு... ம்... நன்றிகள்..... நல்லாத்தான் இருக்குது........ லீனாக இனிமேல் மேட்டரை போட முயற்சிப்போம்.

மிஸஸ்.டவுட் said...

அடடா....லீன் தலைப்பைப் பார்த்து நான் ஏதோ சைனீஸ் பட விமர்சனம் போலனு உள்ள வந்தேன் ...நல்லா இருக்கு உங்க உதாரணங்கள்...லீன் தத்துவத்தை வச்சு குடும்ப வாழ்க்கைல என்ன மேம்பாடுகள் பண்ண முடியும்னும் ஒரு பத்தி எழுதி இருக்கலாமே நீங்க?! ஆகா மொத்தத்துல நல்லாத்தான் இருக்கு .

தாமிரா said...

நன்றி முரளி.!
நன்றி ஷர்மா.! (மேனேஜ்மென்ட் குரு என்பதெல்லாம் பெரிய வார்த்தை மிஸ்டர். ஷர்மா)

நன்றி Itsdifferent.!
நன்றி வெண்பூ.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி கடைசி பக்கம்.!
நன்றி சுட்டிஅருண்.!
நன்றி அப்துல்.!
நன்றி மிஸஸ்.!

தாமிரா said...

நிறைய‌ புதிய‌வ‌ர்க‌ள் வ‌ந்திருக்கிறார்க‌ள். அனைவ‌ருக்கும் ந‌ன்றி. பதிலுக்கு அவர்கள் பதிவுக்கு விசிட் செய்யமுடியாத படிக்கு தடை செய்யப்பட்டுள்ளேன். அலுவலகத்தில் தெரிவது தமிழ்மணமும், அதன் சில இணைப்புகளும் மட்டுமே.

நிக‌ர‌ன் said...

Very nice..

Naresh said...

தாமிரா,

முதலில் துறை சார்ந்த பதிவுகளை மிக எளிய முறையில், புரியும்படி பதிவு போடும் உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.

என்னுடைய வருத்தம் என்னவென்றால் இது போன்ற பதிவுகளில் சற்று மொக்கையை குறைத்துக் கொண்டால் மிக நல்லது. தவிர நீங்கள் சொன்ன சிக்ஸ் சிக்மாவோ, லீன் மானேஜ்மெண்ட் சிஸ்டமோ உற்பத்தித் தொழிற்சாலைகளில் மட்டுமின்றி, சேவைத் துறையிலும், மற்ற எல்லா துறைகளிலும் பயன்படுத்தலாம் என்பதாம் நம் மக்கள் அதைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளலாம்....

என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், லீன், சிக்ஸ் சிக்மா, கெய்ஸன், ஜஸ்ட் இன் டைம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால் நீங்கள் இது போன்ற பதிவுகளை சற்று விளக்கமாகவும், தொடர்ந்தும் எழுத வேண்டும்...........

நரேஷ்
http://www.nareshin.wordpress.com/

வால்பையன் said...

//இது போன்ற பதிவுகளில் சற்று மொக்கையை குறைத்துக் கொண்டால் மிக நல்லது. //

அண்ணே உங்க அறிவுரைக்கு நன்றி
எனக்கு ஒரு சந்தேகம், நமக்கு தேவை பதிவு தானே!
பின்னூட்டத்தில் மொக்கை இருந்தால் அது பதிவை எந்த வகையிலும் பாதிக்குமா?

Naresh said...

//அண்ணே உங்க அறிவுரைக்கு நன்றி
எனக்கு ஒரு சந்தேகம், நமக்கு தேவை பதிவு தானே!பின்னூட்டத்தில் மொக்கை இருந்தால் அது பதிவை எந்த வகையிலும் பாதிக்குமா?//

வால்பையன், பின்னூட்டத்தின் அருமையை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா?

கும்மி அடிப்பதற்கென்றே போடும் பதிவுகளில் எப்படி வேண்டுமானாலும் பின்னூட்டம் போடலாம்...

ஆனால் இது போன்ற துறை சார்ந்த விஷயங்களில், நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் பதிவுகளில் போடும் கும்மி, அந்த பதிவின் நோக்கையே திசை திருப்பி விடும் அபாயம் இருக்கிறதே!!

தவிர பின்னூட்டம் என்பது இந்த பதிவு சம்பந்தப் பட்ட விஷயங்களை மற்றவர்களும் பகிர்ந்து கொள்வதற்கான தளம்தானே!

புரிதலுக்கு நன்றி!!!!

Naresh said...

லீன் என்றவுடன் எனக்கு ஞாபகம் வந்தது, கல்லூரியில் மாருதியில் லீன் சிஸ்டத்தை வெற்றிகரமாக ந்டைமுறப் படுத்தியது பற்றி வந்த கட்டுரை!!

மாருதியில், மற்ற கார்களுக்கு, மாருதி காரை வேறுபடுத்தி பார்க்க, அதன் விலையை பிரதானமாக வைத்து மேலும் விலையை குறைக்க அவர்கள் செய்த காரியங்களில் ஒன்றுதான் இந்த 'லீன் சிஸ்டம்'

லீன் சிஸ்டத்தில் அவர்கள் செய்தது, அந்த தொழிற்சாலையில் நிகழுல் ஒவ்வொரு செயலையும், பொருளையும் அதன் முக்கியத்துவம், தேவையை அவர்கள் ஆராய்ந்தார்கள் (இதில் டேபிள் விளக்கு கூட அடங்கும்)

இதில் முதல் மாற்றம் அவர்கள் செய்தது, தொழிலாளர்கள் நடந்து சென்று டூல்ஸை எடுக்க வேண்டிய நடையின் எண்ணிக்கையில்..

அதாவது ஆரம்பத்தில், ஒரு தொழிலாளி ஒரு பொருளை எடுக்க 15 - 16 ஸ்டெப்கள் நடக்க வேண்டியிருந்ததை, 4 - 6 ஸ்டெப்களுக்குள் கொண்டு வந்தனர்..

இதற்காக அவர்கள் அந்த டூல்ஸ் வைக்க வேண்டிய ராக்கை அவர்கள் இடம் மாற்றியும், டூல்ஸை இடம் பறிமாறிக் கொள்ள கன்வேயர் சிஸ்டமும் அறிமுகப் படுத்தப் பட்டது...

இந்த குறிப்பிட்ட செயலின் மூலம் மாருதி ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் சேமித்தது (இந்த நேரத்தில் அவர்களால் ஒரு நாளில் இரண்டு கார்களை அதிகமாக உற்பத்தி செய்ய முடிந்தது)

இதைத் தொடர்ந்து, தொடர்ந்து அவர்கள் செய்த பல மாற்றங்கள், மாருதியின் வெற்றிக்கு முக்கிய காரணியான குறைந்த விலையில் கார் என்ற என்ற முறைக்கு அடிப்படையாக அமைந்தன.....

நன்றி
நரேஷ்
http://www.nareshin.wordpress.com/

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் உதாரண மாஸ்டர்கள் தான் மாஸ்டர் பீஸ்

வழி மொழிந்து கொள்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

என் குழ‌ந்தைக்கு வ‌ரும் ஜ‌ன‌வ‌ரியில் முத‌ல் பிற‌ந்த‌ நாள் கொண்டாட‌ போகிறேன். ப‌திவுக‌ளில் இது போன்ற‌ குடும்ப‌ விஷ‌ய‌ங்க‌ளை எழுதியிராவிட்டாலும். சில‌ பின்னூட்ட‌ங்க‌ளில் ப‌கிர்ந்துகொண்டுதான் வருகிறேன். //

ஏன் உங்கள் குறும்பை ரசிக்கும் நாங்கள் உங்களின் குழந்தை செய்யும் குறும்புகளை எழுதினால் ரசிக்காமல் போய்விடுவோமா.

எழுதுங்கள் உங்கள் குட்டி இளவரசர் (அ) இளவரசியைப் பற்றி.

இது எனது அன்பு வேண்டுகோள் நண்பரே.

நாடோடி இலக்கியன் said...

எனக்கே புரியுதுங்க,கலக்கலா பாடம் நடத்துறீங்க தாமிரா.
வாழ்த்துக்கள்.

தாமிரா said...

ஐ...... மீ த 50.!

நன்றி நிகரன்.!

விளக்கமான விரிவான கருத்துப்பகிர்தல், பாராட்டுகள், உதாரணம், பின்னூட்டங்கள் குறித்த கருத்து .. அனைத்துக்கும் நன்றி நரேஷ்.!

நன்றி அமிஷு அம்மா.! குழந்தை குறித்த பதிவுகள் எழுத எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது. இருப்பினும் உங்கள் அன்புக்காகவாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறது, எழுதுவேன்.

நன்றி இலக்கியன்.!

Saravana Kumar MSK said...

//வால்பையன் said...

இதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் உதாரண மாஸ்டர்கள் தான் மாஸ்டர் பீஸ்

November 25, 2008 4:09 AM
வால்பையன் said...

ஆக மொத்தம் லீன் என்றால் இட்லி சுடுவது என்று மக்கள் நினைத்து கொள்ள போகிறார்கள்

November 25, 2008 4:10 AM
வால்பையன் said...

வாழ்த்துக்கள்
நான் கேள்வி பட்ட விசயத்திற்க்கு//

இந்த மூன்று பின்னூட்டங்களுக்கும் பெரிய ரிப்பீட்டு.

Krish said...

Thanks dude....I have a blog for lean www.mylean.blogspot.com

Interested people can share their experiences...Thank you