Friday, November 28, 2008

துயரம்.. தவிப்பு.. ஆறுதல்..

பதைபதைக்கச் செய்யும் மும்பை தீவிரவாத தாக்குதலில் மனம் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்தச்சூழலில் ஒரு சிறப்புக்காவல் படையின் கமாண்டோவாக இருக்கும் துடிப்பான ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கவேண்டிய வாய்ப்பு கிடைத்தது. நூறு கோடியைத்தாண்டும் ஜனத்திரள் நிறைந்த தேசத்தில் இதுபோன்ற வன்முறைக்கூத்தாடும் தன்னிலை இழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கலாம்? சில நூறுகள்? சில ஆயிரங்கள்? சில ஆயிரங்கள் என்று வைத்துக்கொண்டாலுமே சதவீதத்தில் 0.00001 என்ற அளவில்தான் இருக்கக்கூடும்.

எங்கிருந்து கிளம்புகிறார்கள்? அவர்களுக்கான வேர்கள் எங்குள்ளன? வளரும் நாட்டின் பொருளாதார மற்றும் பல்துறை வளர்ச்சிகளைக் காணச்சகியாத சில வெளிநாட்டு சக்திகள் (இதில் வெளி வேஷமிடும் சில முக்கிய பெரிய நாடுகளும் இருக்கலாம்) நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை திடத்தன்மையை குலைக்க‌ ச‌தித்திட்ட‌மிடுகின்ற‌ன. பெரும் பிரிவினைகளுக்கான கூறுகள் மிகுந்த‌, கடும் ஊழ‌ல் கோலோச்சும் ஒரு பெரிய‌ ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் இந்த‌ அள‌வு ஆமை வேக‌த்திலான‌ வ‌ள‌ர்ச்சியே ஆச்ச‌ரிய‌மிகுந்த‌து. இது எதிர்பார்ப்புக‌ளில்லாத அனைத்து துறைகளிலும் இருக்கும் உழைக்கும் வ‌ர்க்க‌த்தின் சாத‌னை. இதையும் பொறுக்காத‌ கூட்ட‌த்தின் ச‌தித்திட்ட‌ங்க‌ளே இவை. அவ‌ர்க‌ள் மிக‌ எளிதாக‌ உள்நுழைய‌வும், திட்ட‌ங்க‌ளைத்துவ‌க்க‌வும் ஆர‌ம்பிக்க‌ வ‌ச‌தியாக‌ உள்நாட்டு ஓட்ட‌ர‌சிய‌லுக்காக‌வும், ப‌ண‌ அர‌சிய‌லுக்காக‌வும் ந‌ம‌து அர‌சிய‌ல்வாதிக‌ள் அணையாம‌ல் பாதுகாத்துவ‌ரும் இன‌ப்பிர‌ச்சினைக‌ள் மிக‌வும் உத‌வுகின்ற‌ன‌.

க‌ல்வி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌, முன்னேறும் வாய்ப்புக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌, முன்நிக‌ழ்வுக‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌, அர‌சால் க‌ண்டுகொள்ளாம‌ல் விட‌ப்ப‌ட்ட‌ சிறு சிறு ம‌க்க‌ள் கூட்ட‌ங்க‌ளையே ம‌த‌த்தின் பெய‌ராலும், க‌ட‌வுளின் பெய‌ராலும் (அவ‌ர்க‌ளை போன்ற‌ க‌ள‌ப்ப‌ணியாள‌ர்க‌ளை ப‌ண‌த்தால் வாங்குவ‌து அரிதாக‌வே இருக்க‌க்கூடும்) மூளைச்ச‌ல‌வை செய்து தீவிர‌வாத‌த்துக்கான‌ க‌ருவிக‌ளை த‌யார் செய்கின்ற‌ன‌ அந்த‌ பெரும் ச‌க்திக‌ள். அந்த‌ சிறு கூட்ட‌ங்க‌ள் நாள‌டைவில் த‌னித்து இய‌ங்கும் திற‌ன் பெறுகின்றன. அவற்றிற்கென கொள்கைகள் உருவாகின்றன. தனிமனித ஈடுபாட்டின் காரணமாகவோ பெரும் சுயந‌லத்திற்காகவோ சில‌ பேரிய‌க்க‌ங்க‌ளாக‌ வ‌ள‌ர்கின்ற‌ன‌. ச‌ம‌ய‌ங்க‌ளில் அவை த‌னித்து இய‌ங்கும் வ‌ல்ல‌மையும் பெறுகின்ற‌ன‌. அது போன்ற‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் அவ‌ற்றை உருவாக்கிய‌ ச‌க்திக்கே எதிராக‌வும் செய‌ல்ப‌ட‌ அவை த‌ய‌ங்குவ‌தில்லை.

அந்த‌ இய‌க்க‌ங்க‌ளின் உயிரைத்துச்ச‌மாக‌ ம‌திக்கும் முத‌ல்வ‌ரிசை தீவிர‌வாதிக‌ள் இதுபோன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் ப‌க‌டைக்காய்க‌ளாய் முன்னிற்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளை எப்ப‌டித்த‌டுப்ப‌து? இவ‌ர்க‌ளைத்த‌டுப்ப‌து மிக‌க்க‌டின‌மான‌ விஷ‌ய‌ம். இது எல்லையில் நிக‌ழும் போரோ, இர‌ண்டு ப‌டைக‌ளுக்கு ந‌டுவே நாடுக‌ளுக்கிடையேயான‌ போரோ அல்ல‌. அங்கு முத‌ல் வ‌ரிசைப்ப‌டைக‌ள் எப்போதும் உஷார் நிலையிலும், க‌ண்காணிப்பிலும் இருக்கும். பெரும்பாலான அந்த‌ ச‌ண்டைக‌ளில் சில‌ கிலோமீட்ட‌ர்க‌ள் த‌ள்ளியிருக்கும் எதிர்ப‌டையின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை நுட்பமான க‌ருவிக‌ள் கொண்டு தெரிந்துகொண்டு பெரும் லாஞ்ச‌ர்க‌ள், பீர‌ங்கிக‌ள், விமான‌ங்க‌ள் கொண்டு போர் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகிற‌து. ம‌னித‌ர்க‌ள் நேருக்கு நேராக‌ நின்று ச‌ண்டையிட்டுக்கொள்ளும் நிக‌ழ்வுக‌ள் மிக‌ அரிதே.

ஆனால் தீவிர‌வாதிக‌ள் அதுபோல‌ல்லாம‌ல் எண்ணிக்கையில் மிகச்சிறியதாக இருப்பதால் எளிதாக மிகுந்த‌ ஜ‌ன‌த்திர‌ளுக்குள் க‌ல‌ந்துவிடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளை பிரித்தெடுப்ப‌தோ, திட்ட‌ங்க‌ளை தெரிந்துகொள்வ‌தோ மிக‌வும் க‌டின‌மான‌ செய‌லாக‌ ஆகிவிடுகிற‌து. அவ‌ர்க‌ளின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும், திட்ட‌ங்க‌ளையும் தெரிந்துகொள்வ‌தில் உள‌வுத்துறையின‌ர் முன்னெப்போதுமில்லாத‌ நுட்ப‌த்துட‌னும், முக்கிய‌த்துவ‌த்துட‌னும் செய‌ல்ப‌ட்டால் ம‌ட்டுமே அவ‌ர்க‌ளைத்த‌டுக்க‌முடியும். அல்ல‌து உல‌கெங்கும் தீவிர‌வாத‌ அமைப்புக‌ள் என்று அறிய‌ப்ப‌டும் அமைப்புக‌ளை, இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் ஊற்றக்க‌ண்ணாக‌ இருக்கும் இய‌க்க‌ங்க‌ளை த‌ய‌வு தாட்ச‌ண்ய‌மின்றி அழித்தொழிக்க‌ உல‌க‌நாடுக‌ள் க‌ர‌ம்கோர்க்க‌ வேண்டும். அது நிக‌ழ்வ‌தும் அரிதே.

மும்பையில் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் தீவிரவாத வெறியாட்டத்தை எடுத்துக்கொண்டோமானால், இது போரைப்போலல்லாமல் ஒரு செயலைப்போல (Operation) நடத்தப்பட்டுள்ளது. மிகுந்த கூட்டம் நிறைந்த ஒரு ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு (Open fire) நிகழ்த்தி அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொல்வதென்பது அநியாயமான ஒரு செயலாகும். எந்த முன்னறிவிப்போ, முன்னேற்பாடோ இல்லாமல் காவல் படையினர் இந்த சம்பவத்தை எதிர்கொள்வது மிகக்கடினம். அதுபோலத்தான் பலநூறு அறைகள் கொண்ட தாஜ் விடுதியில் ஒளிந்துகொண்டு விருந்தினர்களை கொன்று குவித்துவரும் சில தீவிரவாதிகளை பிடிப்பதும் மிகச்சவாலான விஷயமே. சில மணி நேரங்கள் போராடும் சக்திகூட அற்ற அந்த சில தீவிரவாதிகளை ஒரு பெரும்படையினரே இரண்டு நாட்களாக போராடிவருகின்றனர் என்றால் அந்தச்சூழலே காரணம். உளவுத்துறையின் அதிதீவிர முன்னறிதலே இவற்றிலிருந்து நம்மைக்காக்கும் சிறு உபாயம்.

சினிமாக்க‌ளில் வ‌ருவ‌து போல‌வும், வீடியோ கேம்க‌ளில் வ‌ருவ‌து போல‌வும் ஒரு க‌ட்டிட‌ம் தீவிர‌வாதிக‌ள் பிடிக்குள் சிக்குகிற‌து. அவ‌ர்க‌ளை மீட்க‌ க‌மாண்டோக்க‌ள் ஹெலிகாப்ட‌ரில் இருந்து விடுதியின் மேல்த‌ள‌த்தில் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ துப்பாக்கிக‌ளுட‌ன் குதிக்கின்ற‌ன‌ர். இரண்டு வீரர்கள் அவர்களின் அடுத்த மூவ் குறித்து ஏதோ பேசிக்கொள்கிறார்கள், ஒருவர் விளிம்போடு ஒட்டிய நிலையில் உன்னிப்பாக டார்கெட்டை கவனித்துக்கொண்டிருக்கிறார். இந்த‌க்காட்சியை பார்த்த‌போது சில்லிட்டுவிட்டேன் நான். களத்தில் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?


ராணுவம், கப்பல்படை, விமானப்படை, தேசிய பாதுகாப்புப்படை, ரயில்வே இன்னும் பல முக்கிய சீருடைப்ப‌ணித்துறைகளிலும் தனித்தனியான துடிப்பான கமாண்டோ பிரிவுகள் உள்ளன. கமாண்டோக்களின் பணி மிகவும் சீரியது. அவர்கள் சூழலை மிக உன்னிப்பாக உள்வாங்கிக்கொள்வார்கள். புலன்கள் மிகவும் துல்லியமாக இருக்கும். துடிப்பானவர்கள். கடும் பயிற்சிபெற்றவர்கள். கமாண்டோ படைப்பிரிவிலிருந்து விலகும் வரை தொடர் பயிற்சியில் இருந்துகொண்டேயிருப்பார்கள். குழுவாக‌ இய‌ங்குவார்க‌ள். பெரும்பாலும் 20லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பர். தேசத்திற்காக, மக்களுக்காக என்ற உயரிய எண்ணம் இருப்பினும் தானிருக்கும் அந்தக்குழுவிற்காக, அதிலிருக்கும் தன் நண்பன் சக வீரனுக்காக என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கும். ஒரு குழுவின் ஒரு வீரன் அடிபட நேர்ந்தால் அந்தக்குழுவிற்கு கடும்வேகமும், உயிரையே துச்சமாக நினைக்கும் வெறியும் ஏற்படும். இந்த மும்பை மீட்புப்பணியிலும் துடிப்பான முன்வரிசை வீரர்களை நாம் இழந்திருக்கிறோம். அவர்களின் தியாகம் அளப்பரியது. சில நாட்களில் நாம் அவர்களை மறந்துபோகக்கூடும். இருப்பினும் அவர்களைப்போன்ற காக்கும் வீரர்கள்தான், மறைந்திருக்கும் இந்தக்கோழைக‌ள் சில ஆயிரம் பேர்களிடமிருந்து நம் நூறு கோடி பேரையும் காக்கவேண்டும்.

ஜெய் ஜவான்.!


டிஸ்கி : இந்த கொடும் தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாதிகளை விடவும் ஆபத்தானவர்கள், மீண்டும் பல்வேறு இடங்களில் தாக்குதல் என்று வதந்திகளை கிளப்பி மும்பையை மேலும் பரபரப்புக்குள்ளாக்கியவர்களும், வேடிக்கை பார்க்கவென ஆயிரக்கணக்கில் கூடி குழப்பத்தையும், ராணுவ நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலையும் விளைவித்தவர்களும்தான் என நான் நினைக்கிறேன்.

34 comments:

கிரி said...

//டிஸ்கி : இந்த கொடும் தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாதிகளை விடவும் ஆபத்தானவர்கள், மீண்டும் பல்வேறு இடங்களில் தாக்குதல் என்று வதந்திகளை கிளப்பி மும்பையை மேலும் பரபரப்புக்குள்ளாக்கியவர்களும், வேடிக்கை பார்க்கவென ஆயிரக்கணக்கில் கூடி குழப்பத்தையும், ராணுவ நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலையும் விளைவித்தவர்களும்தான் என நான் நினைக்கிறேன்//

இதில் ஒன்றுக்கும் உதவாத வீணா போன அரசியல்வாதிகளையும், ஒரு சில ஊடகங்களையும் சேர்த்து கொள்ளவும்.

வித்யா said...

trident ஹோட்டலுக்குள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்த ராணுவ வாகனத்தை சூழ்ந்துகொண்டு பாரத் மாதா கி ஜே என்று கோஷம் எழுப்பிய பொதுமக்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

கபீஷ் said...

//தேசத்திற்காக, மக்களுக்காக என்ற உயரிய எண்ணம் இருப்பினும் தானிருக்கும் அந்தக்குழுவிற்காக, அதிலிருக்கும் தன் நண்பன் சக வீரனுக்காக என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கும். ஒரு குழுவின் ஒரு வீரன் அடிபட நேர்ந்தால் அந்தக்குழுவிற்கு கடும்வேகமும், உயிரையே துச்சமாக நினைக்கும் வெறியும் ஏற்படும்.//

இது பாயிண்ட்.

கபீஷ் said...

//க‌ல்வி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌, முன்னேறும் வாய்ப்புக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌, முன்நிக‌ழ்வுக‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌, அர‌சால் க‌ண்டுகொள்ளாம‌ல் விட‌ப்ப‌ட்ட‌ சிறு சிறு ம‌க்க‌ள் கூட்ட‌ங்க‌ளையே ம‌த‌த்தின் பெய‌ராலும், க‌ட‌வுளின் பெய‌ராலும் (அவ‌ர்க‌ளை போன்ற‌ க‌ள‌ப்ப‌ணியாள‌ர்க‌ளை ப‌ண‌த்தால் வாங்குவ‌து அரிதாக‌வே இருக்க‌க்கூடும்) மூளைச்ச‌ல‌வை செய்து தீவிர‌வாத‌த்துக்கான‌ க‌ருவிக‌ளை த‌யார் செய்கின்ற‌ன‌ அந்த‌ பெரும் ச‌க்திக‌ள்.//

இதை விட டிப்ளமாடிக்கா சொல்றது ரொம்ப கஷ்டம்!

ராஜ நடராஜன் said...

நமது வளர்ச்சியில் பொறாமைப் படும் வெளி இயக்கங்களும்,மனிதர்களும் என்பது அவர்களது பார்வையிலிருந்து பார்த்தால் சரியெனக் கொண்டாலும் தனது தேசத்தையும்,சகமனிதனையும் நேசிக்காத மதம் பிடித்த மனிதர்களையும்,படிப்பிலும்,தனது சார்ந்த வளர்ச்சியிலும் தேறாத மனிதர்களையும்,கூடவே மூளைச் சலவை செய்யப்படும் மனிதர்களையும் நேர்படுத்துவது மட்டுமே இதற்கான நீண்ட கால முடிவுக்கு வழிவகுக்கும்.உள்நாட்டு துணையில்லாமல் இந்த மாதிரியான போர் முறைகள் சாத்தியமே இல்லை.

புதுகை.அப்துல்லா said...

அந்த தீவிரவாத நாய்கலைவிட மீடியா மேல்தான் கோபம் எனக்கு கோபம் அதிகம். லைவ் காட்டுறான்...வெளிய எந்த கமெண்டோ எங்க நிக்கிறாங்கன்னு. அத அந்த தீவிரவாத தேவிடியா பையங்க ஹோட்டல் அறையில் உள்ள டி.வி யில் பார்க்க மாட்டான்ங்கிற அறிவுகூடவா இந்த மீடியாக்களுக்கு இல்லை. முதல்ல லைவ் போடுற மீடியாவ உதைக்கனும்.

தமிழ் பிரியன் said...

அப்துல்லாவின் கோபம் தான் எனக்கும் வந்தது..:(

கபீஷ் said...

அப்துல்லா அண்ணே, நீங்க சொல்றது கரெக்ட், ஆனா அந்த கெட்ட வார்த்தை வேண்டாமே ப்ளீஸ்!

Anonymous said...

செவ்வாய் இரவு 9.30க்குத்தான் மும்பையிலிருந்து கிளம்பினேன். ஒரு சிறு அறிகுறிகூட இல்லை. நினைக்கவே பதைக்கிறது. மீடியாவின் பொறுப்பு அவர்களுக்கு இன்னும் உணர்த்தப்படவில்லை. பரபரப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

நாடோடி இலக்கியன் said...

கிரி சொன்னது ரொம்ப சரி.

புற்றீசல் போல நாளும் ஒரு தீவிரவாத இயக்கம் ,இதுக்கெல்லாம் ஒட்டுமொத்தமா ஒரு முடிவு வராதா?அநியாயமா அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடுறானுங்களே.

சரவணகுமரன் said...

ஜெய் ஜவான்.!

cheena (சீனா) said...

நல்ல பதிவு தாமிரா - நல்வாழ்த்துகள்

அனேகம் பேர் சிந்திப்பது இது மாதிரித்தான்.

நல்லதே நடக்கும் - நம்புவோமாக

cable sankar said...

//அத அந்த தீவிரவாத தேவிடியா பையங்க ஹோட்டல் அறையில் உள்ள டி.வி யில் பார்க்க மாட்டான்ங்கிற அறிவுகூடவா இந்த மீடியாக்களுக்கு இல்லை. முதல்ல லைவ் போடுற மீடியாவ உதைக்கனும்.//

சம்பவம் நடந்த அடுத்த் நாளே.தீவிரவாதிகள் கைப்ற்றிய இடங்களில் எல்லாம் கேபிள் மற்றும் டிவி கனைக்‌ஷன் துண்டிக்க பட்டுவிட்டது சார்.

மிக நல்ல பதிவு தாமிரா.

அது சரி said...

//
க‌ல்வி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌, முன்னேறும் வாய்ப்புக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌, முன்நிக‌ழ்வுக‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌, அர‌சால் க‌ண்டுகொள்ளாம‌ல் விட‌ப்ப‌ட்ட‌ சிறு சிறு ம‌க்க‌ள் கூட்ட‌ங்க‌ளையே ம‌த‌த்தின் பெய‌ராலும், க‌ட‌வுளின் பெய‌ராலும் (அவ‌ர்க‌ளை போன்ற‌ க‌ள‌ப்ப‌ணியாள‌ர்க‌ளை ப‌ண‌த்தால் வாங்குவ‌து அரிதாக‌வே இருக்க‌க்கூடும்) மூளைச்ச‌ல‌வை செய்து தீவிர‌வாத‌த்துக்கான‌ க‌ருவிக‌ளை த‌யார் செய்கின்ற‌ன‌ அந்த‌ பெரும் ச‌க்திகள்
//

தாமிரா,

மிக நல்ல பதிவு என்றாலும், இந்த ஒரு கருத்தில் மட்டும் மாறுபடுகிறேன்...இந்த தீவிரவாதிகளில் பலரும் படித்த, முன்னேற நல்ல வாய்ப்புகள் உள்ளவர்களே. இவர்களின் பெற்றவர்கள் பெரும்பாலும் டாக்டர், வக்கீல், அரசு அதிகாரி போன்ற நல்ல வசதி வாய்ப்புகள் உள்ளவர்களே.

லண்டன், பாலி தீவுகள், அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல்கள், கிளாஸ்கோவில் விமான நிலையத்தை தகர்க்க முயன்ற இரு விஷ ஜந்துக்கள் எல்லாம் படித்த அசிங்கமான ஜந்துக்களே.. கிளாஸ்கோவில் தகர்க்க முயன்ற ஒரு மிருகம் படித்த டாக்டர்!

லண்டனில் குண்டு வைத்தவன் இங்கு யார்க்ஷயரில் பிறந்து வளர்ந்த ஒரு மிருகம்.

உண்மை இப்படி இருக்க, கல்வி அறிவு மறுக்கப்பட்டவர்கள், அரசால் புறக்கணிக்கப்பட்டவர்கள், இவர்களை மூளை சலவை செய்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்வது பொலிடிக்கல்லி கரெக்ட் என்று வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் பிரச்சினையின் ஆணி வேரை அறிய அது உதவாது..

நன்றி!

பரிசல்காரன் said...

@ அப்துல்லா

அண்ணே..

என்ன இப்படி இருக்கீங்க?

கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த உடனேயே ஜாமர் வெச்சு ஹோட்டலுக்கு உள்ளே எந்த அலைபேசியும் செயல்படாம பண்ணிடுவாங்க.

உள்ள எந்த ஒளிபரப்பும் தெரியாதவாறு இணைப்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்டு விடும்.

நம்ம கமாண்டோக்கள், மீடியா குறித்து இவ்வளவு கீழ்த்தரமாக நீங்கள் நினைக்கிறீர்களா அப்துலலா? அப்படி மீடியா ஒளிபரப்பிக் கொண்டிருந்தால் NSG சும்மா விடுமா?

வித்யா said...

பரிசல் அண்ணா
இந்த முறை ஜாமர் கருவிகள் உபயோகப்படுத்தவில்லை. ஏனெனில் times now சேனலில் trident ஹோட்டலில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ஒருவர் தான் தங்கியிருந்த ரூம் நம்பரை குறிப்பிட்டு காப்பாத்தும்படி கேட்டுக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

புதுகை.அப்துல்லா said...

நம்ம கமாண்டோக்கள், மீடியா குறித்து இவ்வளவு கீழ்த்தரமாக நீங்கள் நினைக்கிறீர்களா அப்துலலா?

//

ஒழுங்கா பாருங்க நான் எங்க கமெண்டோகளை கீழ்தரப்படுத்தி இருக்கிறேன. என் தேசம் காக்கும் அந்த மகான்களை என் தாயதந்தைக்கு மேல் போற்றுகிறேன். ஜாமர் g.s.m. மை கட் செய்யலாம். அந்த நாய்ங்ககிட்ட இருந்து பறிமுதல் செய்த சாட்டிலைட் போனைப் பற்றி நீங்க படிக்கலயா? ஹோட்டலில் உள்ள தொலைக்காட்ச்சியை கட் செய்யலாம்.ஆனால் அவன் ஆளு எவனோ ஒருத்தன் வெளியில் எங்கயோ இருந்து டி.வி.யில் நம்ப வீரர்களின் நடமாட்டத்தை பற்றி சாட்டிலைட் போனில் தகவல் சொல்வதை என்ன செய்ய முடியும்.நான் கடுமையான் ஆத்திரத்திற்கு இடையிலும் நிதானமாக அனைத்தையும் யோசித்துவிட்டு தான் எழுதினேன். மீடிக்காளின் மேல் உள்ள கோபம் நீங்க என்ன சொன்னாலும் மாறாது. என் வீரர்கள் சிலரின் உயிர் இழப்பிற்கு மீடியாவின் நேரடி ஒளிபரப்பும் ஒரு காரணம்.

Indian said...

//என் வீரர்கள் சிலரின் உயிர் இழப்பிற்கு மீடியாவின் நேரடி ஒளிபரப்பும் ஒரு காரணம்.
//

I partly agree.
In the case of ATS chief Karkare, I guess he lost his life in a moment of his carelessness; removing the bullet-proof vest and helmet.
Let all the criticisms be taken up in the right spirit. There are lessons to be learnt for every one; the govt agencies for preventive protection, commando forces in fine tuning their operations, media to improve their conduct and reporting and finally for local public on how to behave in a emergency.

No lessons will be learnt anyway by the the media-hungry, vote-bank focussed political class.

Last but not least, Mr. Shivraj Patil, we don't expect anything from you in any case. Take orders from madam to eat sumptous meal three times a day and have a sound sleep in north block.

பாபு said...

இந்த வீணா போன ஷிவ்ராஜ் பாட்டில் ல ஏன் யாரும் கண்டுக்க மாட்டேன்றாங்க
மீடியா மற்றும் பொதுமக்கள் தொந்தரவு அதிகமாக இருந்தது
அந்த ஏரியா வை முதலில் block செய்திருக்க வேண்டாமா?

அத்திரி said...

இவ்வளவு நடந்தும் சிவ்ராஜ் பாட்டீல் இன்னும் ஏன் பதவில இருக்கார்னே தெரியல. நம்ம ஆற்காட்டாருக்கும் இவருக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை பல விசயங்களில் சொதப்புவதாலும்,

இன்னும் பதவில இருப்பதாலும்

அருமையாம் பதிவு தாமிரா.

பரிசல்காரன் said...

@ அப்துல்லா

கீழ்த்தரமா-ன்னு நான் சொன்னது ‘மீடியா ஒளிபரப்பினா ப்ராப்ளம் வரும்ன்னு தெரிஞ்சும் சும்மா விடற அளவு நம்ம படை வீரர்கள் கையாலாதவங்க-ன்னு நெனைச்சிட்டீஙக்ளா-ங்கற மீனிங்-லதான் அண்ணே.

உங்க கோபம் புரியுது. நீங்க யோசிச்சுதான் எழுதியிருக்கீங்கன்னா.. ஓக்கே. உண்மையாவே அரசு, அரசியல் விஷயங்கள்ல நான் பூஜ்யம்தான்!!!

நான் அங்கேயிருந்து தப்பி வந்த ஒரு தொழிலதிபர் பேட்டில தொலைக்காட்சிகள், செல்ஃபோன்கள் செயலிழந்தது-ன்னு சொல்லப்பட்டதைப் பார்த்து எழுதினேன்.

உங்ககிட்ட விளக்கம் கேட்டுட்டுதான் பின்னூட்டம் போடணும்ன்னு நெனைச்சேன். ஆனா, உங்க ஃபோன் ரெண்டுமே சட்டக்கல்லூரி போலீஸா இருந்தது. (எப்பவுமே ஆஃப்!!!) ஏன்.. என்ன ஆச்சு?

தாமிரா said...

நன்றி கிரி.! (அரசியல்வாதிகளையும், ஒரு சில ஊடகங்களையும் சேர்த்து கொள்ளவும்.// நிச்சயமாக.!)

நன்றி வித்யா.!
நன்றி கபீஷ்.!
நன்றி நடராஜன்.!
நன்றி அப்துல்.!
நன்றி தமிழ்.!
நன்றி வேலன்.!
நன்றி இலக்கியன்.!
நன்றி குமரன்.!
நன்றி சீனா.!
நன்றி கேபிள்.!

நன்றி அதுசரி.! (நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஆனால் நான் கூற விழைந்தது ஆரம்பத்தில் (சென்ற நூற்றாண்டில்?) எங்கு துவங்கியிருக்கக்கூடும் என்று. அதைச்சரியாக நான் கூறவில்லை என்றுதான் நினைக்கிறேன்.)

நன்றி பரிசல்.!
நன்றி இந்தியன்.!
நன்றி பாபு.!
நன்றி அத்திரி.!

ப‌ரிச‌லும் அப்துலும் ஏதோ ச‌ண்டை போட ஆர‌ம்பிச்சாங்க‌ போலிருக்குது. ஆனா அதுக்குள்ள சப்புனு முடிஞ்சுபோச்சே.!

அத்திரி said...

தாமிரா நியூஸ்பாத்தீங்களா..

பிரதமர் தலைமையில் நடக்கும் உயர்நிலை பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்திற்கு சிவ்ராஜ் பாட்டீலுக்கு அழைப்பு இல்லையாம்.

பரிசல்காரன் said...

//
ப‌ரிச‌லும் அப்துலும் ஏதோ ச‌ண்டை போட ஆர‌ம்பிச்சாங்க‌ போலிருக்குது. ஆனா அதுக்குள்ள சப்புனு முடிஞ்சுபோச்சே.!/

இதப்பார்றா...

நானா..சண்டையா... அதுவும் அப்துல்லாகூடவா..

அப்துல்லா.. எங்கிருந்தாலும் வரவும்.. தாமிராவை ஒருகை (இருகை?) பார்க்கலாம்..

R. பெஞ்சமின் பொன்னையா said...

தாமிரா,

அரசியல் வாதிகளை விட்டுவிட்டீர்களோ என தோன்றுகிறது.

ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவராக (அத்வானி அவர்கள்), ஊடகத்தின் வாயிலாக இந்த நெருக்கடி சமயத்தில் நாட்டு மக்கள், இன, மொழி, கட்சி பேதங்களை மறந்து அரசுக்கும் மீட்பு படையினருக்கும் முழு ஓத்துழைப்பு கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும்.

மேலும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் உடனடியாக தொடர்பு கொண்டு, இந்த நெருக்கடி சமயத்தில் தான் சார்ந்த கட்சி அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர தயாரயிருப்பதாகவும், தனது கட்சியினரின் சேவை எந்த தருணத்திலும் தேவைப்பட்டால் உடனே ஆணையிட வேண்டுமாறு கூறியிருக்க வேண்டும்.

இது எல்லா அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்.

இப்படி செய்திருந்தால் அவர் ஒரு இந்திய குடிமகனென்றும், சிறந்த அரசியல்வாதியென்றும் சொல்லலாம். மாறாக இதிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்ச்சிக்கும் ஈனப்பிறவிகளை என்னவென்று நினைத்து நொந்துகொள்வது?

வெண்பூ said...

நம்ம ஆளுங்க வேடிக்கை பாக்க கூடுனதும் அவங்களை நரிமன் ஹவுஸோட வாசல் வரைக்கும் அனுமதிச்சதும் ரொம்ப ஓவர். விட்டா இவனுங்க கார்கில் போருக்கு கூட வேடிக்கை பாக்க போவாணுங்கன்னு தோணுது.. :((

தாமிரா said...

அப்துல்லா.. எங்கிருந்தாலும் வரவும்.. தாமிராவை ஒருகை (இருகை?) பார்க்கலாம்..// லீவிட்.. லீவிட்.. சும்ம‌னாச்சுக்கும்தானே சொன்னேன்.!

ரொம்ப‌ நியாய‌மான‌ க‌ருத்துக‌ள் பெஞ்ச‌மின்.. ந‌ன்றி.!

விட்டா இவனுங்க கார்கில் போருக்கு கூட வேடிக்கை பாக்க போவாணுங்கன்னு தோணுது.. :((// ஆமா வெண்பூ.. ரொம்ப‌ க‌டுப்பாகுது அத‌ நினைச்சாலே..!

தாமிரா said...

யாராவ‌து ஓட்டு போடுங்க‌ப்பா.! ந‌ல்ல‌ ப‌திவுன்னு நெனைச்சேனே.. எப்பிடி எழுதுனாலும் ஓட்டு போட‌மாட்டீங்கிறீங்க‌ளே.. 300 ஹிட்ஸ், 30 பாலோய‌ர்ஸ்.. ஆனா ஒரு மூணு ஓட்டு கூட‌ விழ‌லை.. அட‌ போங்க‌ப்பா.!

புதுகை.அப்துல்லா said...

பரிசல்காரன் said...

இதப்பார்றா...

நானா..சண்டையா... அதுவும் அப்துல்லாகூடவா..

அப்துல்லா.. எங்கிருந்தாலும் வரவும்.. தாமிராவை ஒருகை (இருகை?) பார்க்கலாம்..
//

பெரிய ரிப்பீட்ட்ட்ட்டு :)

புதுகை.அப்துல்லா said...

உங்க ஃபோன் ரெண்டுமே சட்டக்கல்லூரி போலீஸா இருந்தது. (எப்பவுமே ஆஃப்!!!)

//

நைஸா நக்கல் அடிக்கிறதுல உங்கள மாதிரி.... ஹி...ஹி...ஹி...

Saravana Kumar MSK said...

ஜெய் ஜவான்.!

மங்களூர் சிவா said...

//
வடகரை வேலன் said...

மீடியாவின் பொறுப்பு அவர்களுக்கு இன்னும் உணர்த்தப்படவில்லை. பரபரப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
//

மிக வருத்தமான விசயம் :((

Mahesh said...

டிஸ்கவரி சானல்ல் ஒரு முறை இஸ்ரேல்ல் இது மாதிரி சூழ்னிலைகளை எப்படி கையாளுகிறார்கள்னு ஒரு டாக்குமெண்டரி ஒளிபரப்பினார்கள். அவங்க பண்ற மொதல் ஹோட்டல்லயே இருக்கற ஜாமரை இயக்கி தொடர்பை துண்டிக்கறது. பிறகு வேறொரு ரேடியோ தொடர்பு மூலம் அவர்களுக்குள்ளும், ராணுவத்துடனும் தொடர்பு கொள்வது. ஊடகங்களுக்கு அவர்களே எடுக்கும் ஒளிப்படங்கள் பிற்பாடு வினியோகிக்கிறார்கள்.

உள்ள என்ன நடக்குது, தீவிரவாதி எத்தனை பேர், எவ்வளவு பேர் பிடிபட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் எல்லாம் ராணுவம் என்ன சொல்லுதோ அதான். நம்மளை மாதிரி புடிச்சு வெச்சு ஊறுகாய் போடறதில்ல. அப்பறம் அவனை விடு, இவனை விடு நானும் விடறேன்னு சொல்றதுக்கெல்லாம் அவங்களுக்கு சந்தர்ப்பமே குடுக்கறதில்ல. மனித உரிமைன்னு எவன் ஆரம்பிச்சலும், இந்த மாதிரி விஷயங்கள்ல அதை காதுலயே போட்டுக்கறதில்ல.

இதெல்லாம் வேரோடு அறுக்க வெண்டிய விஷயம். பாராளுமன்ற தீவிரவாதத்தையே ஜீரணம் பண்ணவங்க நாம. தூக்குல போடலாமா இல்ல தூக்குப்போசில பொங்கல் குடுத்து அனுப்பலாமான்னு இன்னும் பேசிக்கிட்டுருக்கோம்.

ராணுவத்தினரை கேட்டுப் பாத்தா தெரியும். எவ்வளவு கட்டுப்பாடுகளோட இது மாதிரியான விஷயங்கள்ல அவங்க செயல்பட வேண்டியிருக்குன்னு. கை ரெண்டையும் பின்னால கட்டிப் போட்டுட்டு போய் நிலைமய சமாளிக்க அனுப்புவாங்க. துப்பாக்கி தூக்க அனுமதி, ரிலீஸ் செய்யா அனுமதி, சுட அனுமதின்னு போட்டு வெறுப்படிச்சுருவாங்க.

அப்துல்லா சொன்ன மாதிரி மீடியாக் காரனுகளுக்கு வெவஸ்தைங்கறது கொஞ்சம் கூடக் கிடையாது. CNNக்கு ரெண்டு நாள் நல்ல வியாபாரம்.

ராம்.CM said...

பதிப்பு அருமை.கடைசியில் கமோண்டோக்களுக்கு தனியாக ஒரு சல்யூட் அடித்திருக்கலாம்