Friday, December 19, 2008

ஐஸ்.! (100வது பதிவு)

    இன்று காலை வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்திற்குள் நுழைந்தேன். வழக்கமான அதே உடைதான், பாலிஷ் பார்த்து மாதங்கள் ஆகிவிட்ட அதே ஷூக்கள்தான். பிரச்சினைகளின் தீவிரம் இன்னும் குறையவில்லை, அந்த டென்ஷனும் முகத்திலிருக்கிறது. வியர்த்து வழிந்ததற்கான காரணம் பைக் பஞ்சராகிவிட்டதால் மெயின் ரோட்டிலிருந்து உள்ளே அரை கிலோமீட்டர் நடந்து வந்தேன். அறைக்குள் வந்த போது ஏசி வேலை செய்யவில்லை. சந்தைக்கடை போல பொருட்கள், ஆட்கள், பிரச்சினைகள். ..

    சிறிது நேரத்தில் டீ குடிப்பதற்காக வெளியே வந்தேன். ஒரு போன் வந்ததால் ஆ.:பீஸுக்கும் கேண்டீனுக்கும் நடுவிலிருக்கும் மரநிழலில் ஒதுங்கினேன்.ஒரு புதிய டெக்னீஷியன் என்னை நெருங்கி 'ஒரு கேஸ்டிங்கில் சந்தேகமா இருக்குது. நீங்க பாத்துட்டீங்கன்னா நல்லது' என்றார். சரி வாங்க போகலாம் என்று போனில் பேசிக்கொண்டே அவ‌ருட‌ன் சென்றேன். அவ‌ருக்கு 20 வ‌ய‌திருக்க‌லாம். அவ‌ர் என்னை மேலும் கீழும் பார்க்கிறார், லேசாக‌ புன்ன‌கைக்கிறார். இத‌ற்கு முன்ன‌ரும் க‌வ‌னித்திருக்கிறேன். தூர‌த்தில் இருந்து கூர்மையாக அவர் க‌வ‌னிப்ப‌தை நான் க‌வ‌னித்திருக்கிறேன். என்ன‌ பிர‌ச்சினை ந‌ம்மிட‌ம் இன்று? ஸிப் போடவில்லையா? செக் பண்ணிக்கொண்டேன். நேர‌மின்மையால் முடிகூட‌ வெட்டிக்கொள்ளாத‌தால் ரொம்ப‌தான் க‌ண்றாவியாகி விட்டோமோ? என்று நினைத்துக்கொண்டு அவ‌ரிட‌மே கேட்டுவிட்டேன், 'என்ன‌ த‌ம்பி, ஏன் சிரிக்கிறீங்க‌?'

"சார், நீங்க‌ ரொம்ப‌ ஸ்டைலா இருக்கீங்க‌"


ட‌மால்.!


டிஸ்கி 1: இந்த‌ க‌மெண்டை ப‌ல‌ப்ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்துக்கேட்ட‌ அதிர்ச்சியில்தான் அந்த‌ ட‌மால்.! அத்த‌னை பிர‌ச்சினைக‌ளிலிருந்தும் சில‌ விநாடிக‌ள் விடுத‌லையாகி ஐஸ்லாந்தில் வாழ்ந்தேன்.


டிஸ்கி 2: இது நூறாவ‌து ப‌திவு. விதவிதமான டாப்பிக்குகள் யோசித்து பின்னர் சமாதானமாகி எண்களுக்கு மயங்கவேண்டாம், வழக்கம் போலவே போகலாம் என இதை எழுதியிருக்கிறேன். வாழ்த்துங்க‌ள் ஆவ‌லாயிருக்கிறேன்.

டிஸ்கி 3: ந‌ம்ப‌ க‌டையைத்தான் அப்ப‌ப்ப‌ காத்தாட‌ விடுகிறீர்க‌ள் என்றால் விருந்துக்கு போன‌ இட‌த்தில் வ‌லைச்ச‌ர‌த்திலும் காத்தாட‌ விடுகிறீர்க‌ள். அங்கேயும் வ‌ந்துபோங்க‌ள், ந‌ன்றி.!

62 comments:

கிரி said...

வாழ்த்துக்கள் தாமிரா

துளசி கோபால் said...

100க்கு வாழ்த்து(க்)கள்.

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள்!

தராசு said...

100 க்கு வாழ்த்துக்கள்.

அப்ப உங்க ரசிகர் மன்றத்துல இன்னொரு ஆள் சேர்ந்துட்டாரு,

ஆனாலும் நீங்க ஸ்டைலாத்தான் இருக்குறீங்க...,

சீக்கிரமா 150, 200னு கலக்குங்க.

விஜய் ஆனந்த் said...

:-)))...

100-க்கு வாழ்த்துக்கள்!!!

உங்க ஃபோட்டோ ஒண்ணு அனுப்பி வைக்கவும்....

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் தாமிரா!

தமிழ் பிரியன் said...

உண்மையிலேயே நீங்க ஸ்டைலா இருக்கீங்க.. குரல் கூட அழகா இருக்கு!
(டமால்... யாராவது தாமிராவைத் தூக்கி விடுங்கப்பா.. ;) )

வால்பையன் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

வால்பையன் said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

narsim said...

100க்கு வாழ்த்துக்கள்.. தலைவா.. பகடில பின்றீங்களே.. அதுக்கும் வாழ்த்துக்கள்

கார்க்கி said...

//"சார், நீங்க‌ ரொம்ப‌ ஸ்டைலா இருக்கீங்க‌" //

சூப்பர் மேன் ஸ்டைல்னு சொல்லி இருப்பானோ?

கார்க்கி said...

நைன்ன்ட்டி தாமிரா 100 அடிச்ச எப்படி?

நைன்ட்டி அடிக்கும் தாமிரா
செஞ்சூரி அடிச்சார் சூப்பரா
தங்க மெடல ஒன்னு எடுங்கடா
அண்ணன் கையில த கொடுங்கடா

Mahesh said...

100 அடிச்சு ஸ்டெடியா நின்னு ஆடுறதுக்கு வாழ்த்துக்கள் !!

// கார்க்கி said...

//"சார், நீங்க‌ ரொம்ப‌ ஸ்டைலா இருக்கீங்க‌" //

சூப்பர் மேன் ஸ்டைல்னு சொல்லி இருப்பானோ?//

அய்யய்ய... பேண்ட் மேல ஜட்டியா? அதான்... :)))

பரிசல்காரன் said...

சம்பிரதாயமா வாழ்த்து சொல்லலாம். ஒரு நல்ல நண்பனா சொல்லணும்னா, 100வது இப்படி எதிர்பார்க்கல...

சரி.. லூஸ்ல விடுவோம்.

நம்பர்ல என்ன இருக்கு? அடுத்தது ஒரு நல்ல பதிவா போடுங்க.

(இந்தப் பதிவுலயே எனக்குப் பிடிச்சது அந்த டமால்-தான்!)

அதிஷா said...

வாழ்த்துக்கள் நண்பா..

இன்னும் பல ஆயிரம் பதிவுகளை எதிர்ப்பார்க்கும் மனதோடு

அதிஷா

Anonymous said...

90 க்கே தாங்காத ஆளு, 100 அடிச்சதனால டமால்.

ஸ்டைல் ஆளாளுக்கு மாறுபடும். எப்படி இருந்தாலும் நீங்க ஸ்டைலான ஆசாமிதான்.

வாழ்த்துக்கள் தாமிரா/

Bee'morgan said...

வாழ்த்துகள் தாமிரா.. :)
இன்னும் நிறைய எழுதுங்க..

புதுகைத் தென்றல் said...

ஆஹா இன்றைக்கு 2 பேரு 100 அடிச்சிருக்காங்க.

எங்க புதுகை பிளாக்கர்களின் தல சுரேகாவும் இன்றைக்கு 100.

உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தாமிரா.

சீக்கிரம் 200 அடிக்க(பதிவுதாங்க) அட்வான்ஸ்
வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

நேர‌மின்மையால் முடிகூட‌ வெட்டிக்கொள்ளாத‌தால் ரொம்ப‌தான் க‌ண்றாவியாகி விட்டோமோ? //

தாமிரா உங்களை சந்தித்த போது
பிளாக்கில் இருக்கும் போட்டோவும் இவரும் வேற வேறான்னு கொயப்பமாவே இருந்துச்சு!!

அதை சரிபார்க்க உடனே கம்ப்யூட்டருக்கு வந்துதான் பதிவர் ச்ந்திப்பை உடன் பதிவு போட்டதும்

வனம் said...

வணக்கம் தாமிரா

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
ம்ம்ம்ம் தொடருங்கள்

\\தாமிரா உங்களை சந்தித்த போது
பிளாக்கில் இருக்கும் போட்டோவும் இவரும் வேற வேறான்னு கொளப்பமாவே இருந்துச்சு!!\\

எனக்கும் இருந்தது

நன்றி
இராஜராஜன்

வித்யா said...

100க்கு வாழ்த்துக்கள்.
சீக்கிரமே 500அடிக்கவும் வாழ்த்துக்கள்:)

ஆயில்யன் said...

சார், நீங்க‌ ரொம்ப‌ ஸ்டைலா இருக்கீங்க‌"


வாழ்த்துக்கள் :)))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

100 க்கு வாழ்த்துக்கள்.. :)

சுரேகா.. said...

அட..ஒரே கிள்ளு...
ஹி..ஹி..
எனக்கும் 100வது பதிவு ஓடிக்கிட்டிருக்கு அதான்...!

வாழ்த்துக்கள் தாமிரா..!

Ŝ₤Ω..™ said...

என்னங்க 100வது பதிவு இப்படி சப்புன்னு இருக்கு?? உங்க Six Sigma பதிவு என்னாச்சு??

சும்மா 100 அடிச்சிட்டு ஆடற ஆளா நீங்க.. சட்டு புட்டுன்னு குவாட்டர் ச்சே.. ஏதோ நினைப்பில சொல்லிட்டேன்.. சட்டு புட்டுன்னு 150 200 அடிங்க..

வாழ்த்துக்கள்..

தாமிரா said...

அப்பாடி.. பூச்சாண்டி புடிச்சுட்டு போன நண்பர்களில் பாதிபேர் திரும்பிவந்தா மாதிரியிருக்குதுப்பா, இப்போதான் நிம்மதியாயிருக்குது.

நன்றி கிரி.!
நன்றி துளசி.!
நன்றி முல்லை.!
நன்றி தராசு.!
நன்றி விஜய்.! (அதான் புரொபைலில் இருக்குதே..)
நன்றி தமிழ்.!
நன்றி வால்பையன்.!
நன்றி நர்சிம்.!
நன்றி கார்க்கி.!
நன்றி மகேஷ்.! (ஒருவேளை அப்பிடிகூட‌ இருக்குமோ?)
நன்றி பரிசல்.! (என்னியும் ம‌திச்சு 'ந‌ல்ல‌ ப‌திவு' கேக்கிறீங்க‌ளே.. ஆன‌ந்த‌க்க‌ண்ணீர் வ‌ருது.)
நன்றி அதிஷா.! (என்ன‌ அதிச‌ய‌ம், ஏதாவ‌து புய‌ல் வ‌ருதா.. பாருங்க‌ப்பா! புது ஆளுங்க‌ள்லாம் ந‌ம்ப‌ ப‌திவுக்கு வ‌ந்திருக்காங்க‌..)
நன்றி அண்ணே.!
நன்றி மோர்கன்.!
நன்றி தென்றல்.! (வேற வேறான்னு கொயப்பமாவே இருந்துச்சு// போட்டோவை விட‌ நேர்ல 'அளகா' இருப்ப‌தைத்தானே சொல்ல‌ வ‌ர்றீங்க‌?)
நன்றி ராஜராஜன்.! (உங்க‌ளுக்குமா?)
நன்றி வித்யா.!
நன்றி ஆயில்யன்.!
நன்றி கயல்விழி.!
நன்றி சுரேகா.! (வாழ்த்துக்க‌ள் தோழ‌ர்!)
நன்றி சென்.! (சீக்கிர‌ம் எழுதிப்புட‌றேம்ப்பா)

Itsdifferent said...

Good post.
Recognizing the positive things about an individual directly will do wonders.
Check out the following video, its really inspirational.
http://www.youtube.com/watch?v=Cbk980jV7Ao

கும்க்கி said...

கொஞ்சம் லேட்டாயிட்டு...
வல்லினம்..மெல்லினம்....எல்லாம் கலந்து....நாகரீகமான ...ஏற்றுக்கொள்ளத்தக்க ...மானசீகமான...நட்புறவோடு....நம்மைப்போன்று இவரோ என்று என்னத்தக்க...சொல்ல வந்ததை சொல்லிவிட்டாரே என்று.....எந்தக்குறை சொல்லவும் வாய்ப்பளிக்கமாட்டாரோ என அய்யப்படத்தக்க.....போதுமய்யா போதும்....

கும்க்கி said...

100ம் 101 - 1000000000000000000001
ம் அதற்க்கு மேலும் வளர்கவென வாழ்த்தும்........அமுக்கி சே குமுக்கி.

கும்க்கி said...

ஹூம்... சொல்ல வந்ததை சொல்லவர்ல....சொல்லவராததை சொன்னாப்போல ஆகிப்போச்சு.
யார்தான் சொல்லவந்ததை சொல்லியிருப்பாங்க..அல்லது ......
(அய்ய்யய்யோ)

Cable Sankar said...

வாழ்த்துக்கள் தாமிரா.. உங்கள் 100வது பதிவுக்கு..

Shakthiprabha said...

ஐஸ் மழையில் கொஞ்சமா நனைந்தால் போதாது என்று இதையே பதிவாய் போட்டு மேலும் நனைகிறீர்களோ?!

enjoy :)

வாழ்த்துக்கள் (100 பதிவிற்காக!)

சதங்கா (Sathanga) said...

வாழ்த்துக்கள்

PoornimaSaran said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :))

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள் தாமிரா..

:)))) இப்படி இருக்கிறதே பதிவர்களின் பெயர்கள்...

அதை ஈஸியாக பிக்ஸ் செய்யலாம்...!!!

Anonymous said...

வாழ்த்துக்கள் தாமிரா (நீங்க உங்க ப்ரொபைல் போட்டல கூட நல்லா இருக்கீங்க)

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள் தாமிரா

பாபு said...

வாழ்த்துக்கள்!

ராம்.CM said...

வாழ்த்துக்கள் தாமிரா.. உங்கள் 100வது பதிவுக்கு..

தாமிரா said...

நீங்களும் இதை ரசித்தீர்களா இட்ஸ்டிப்ரன்ட்.! நன்றி.!

நன்றி கும்க்கி.! (உள்குத்து புர்லயே..)
நன்றி கேபிள்.!
நன்றி சக்திபிரபா.! (கண்டுபுடிச்சிட்டீங்களே..)
நன்றி சதங்கா.!
நன்றி பூர்ணிமா.!
நன்றி செந்தழல்.! (விரைவில் செய்திடுகிறேன்)
நன்றி அம்மிணி.! (ஹிஹி..தேங்ஸ்ங்க..)
நன்றி TVR.!
நன்றி பாபு.!
நன்றி ராம்.!

தங்கராசா ஜீவராஜ் said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

சதங்கா (Sathanga) said...

100க்கு வாழ்த்துக்கள்.

gulf-tamilan said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

அத்திரி said...

100 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்...... லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்வோம்ல....

அண்ணே வேலைப்பளு முடிந்துவிட்டதா???????????????/

அத்திரி said...

யாராவது இருக்கீங்களா?? 50 அடிக்கப்போறேன்

அத்திரி said...

யாராவது இருக்கீங்களா?? 50 அடிக்கப்போறேன்

அத்திரி said...

யாராவது இருக்கீங்களா?? 50 அடிக்கப்போறேன்

அத்திரி said...

யாராவது இருக்கீங்களா?? 50 அடிக்கப்போறேன்

அத்திரி said...

49

அத்திரி said...

hi 50

அத்திரி said...

100வது பதிவுல 100 கும்மி இல்லைனா எப்படி??

அத்திரி said...

100வது பதிவுல 100 கும்மி இல்லைனா எப்படி??

குசும்பன் said...

//சார், நீங்க‌ ரொம்ப‌ ஸ்டைலா இருக்கீங்க‌"//

நிசமாதான் சொல்றீயான்னு கற்றது தமிழ் ஹீரோயின் மாதிரி கேட்கவேண்டியதுதானே!!!:))

100க்கு வாழ்த்துக்கள்!!!

ரோஜா காதலன் said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள் !

புதுகை.அப்துல்லா said...

inga naan potta pinnuttam enga??? kaka thookkikittu poiruchcha?

VIKNESHWARAN said...

வாழ்த்துக்கள்... மேலும் தொடரவும்...

Saravana Kumar MSK said...

அட்டகாசம்...

இந்த பொன்னான நேரத்திலே.. அண்ணனனுக்கு பதிவுகள் எழுத பின்புலமாக இருந்த அண்ணன் வாழ்வின் திருப்பு முனையான கல்யாணத்தையும், அண்ணியையும் கொடுத்த இறைவனுக்கு நன்றிகள் பல..

இன்னும் நீங்கள் இருநூறு, முன்னூறு, ... ஐந்நூறு என்று பதிவுகள் பல எழுதிட வாழ்த்துகிறேன்..

Saravana Kumar MSK said...

//"சார், நீங்க‌ ரொம்ப‌ ஸ்டைலா இருக்கீங்க‌"//

நூறாவது பதிவுலும் ரீல் சுத்திய அண்ணனை வன்மையாக கண்டிக்கிறேன்.. ;)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஸ்டைலான நண்பர் தாமிராவுக்கு வாழ்த்துக்கள் :)

http://rishanshareef.blogspot.com/2008/12/for-apple.html

இங்கேயும் பாருங்க..உங்களை இழுத்திருக்கிறேன்..மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவும் :)

மங்களூர் சிவா said...

100க்கு வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

ஆனாலும் நீங்க ஸ்டைலாத்தான் இருக்குறீங்க...,