Wednesday, December 3, 2008

எஸ்.. பாஸ் !

உங்களில் தொழில்தொடங்க ஆசை இருந்தும் அதற்கான தைரியம் இல்லாமல், அதற்கு கடும் உழைப்பு தேவைப்படும் என்று உணர்ந்த சோம்பேறித்தனத்தால் இன்னும் 'எஸ் பாஸ்!' போட்டுக்கொண்டிருப்பவர்கள் எத்தனைபேர்? (பணமில்லை என்று ஜல்லியடிக்க வேண்டாம்).

சுமார் பத்துவருடங்களுக்கும் மேலாக ஏழு நிறுவனங்களில் குப்பைகொட்டிவிட்டு இப்போது எட்டாவது நிறுவனத்தில் குப்பைகொட்டிக் கொண்டிருக்கிறேன். அப்படியானால் மதிப்புக்குரிய எட்டு பாஸ்களிடம் வேலைபார்த்திருக்கிறேனா? இல்லை, அதிகம். சில நிறுவனங்களில் பாஸ்கள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பாஸ்களிடம் வேலைபார்க்கும் கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.ஒன்று கரைக்கு இழுத்தால் இன்னொன்று தண்ணீருக்குள் இழுக்கும். அவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் குறித்து எனக்கு ஏதேனும் பிரமிப்பு இருந்ததா? அவர்களிடம் ஏதேனும் தனித்திறன் இருந்ததா? அவர்கள் எனக்கு பாஸாக இருக்க தகுதியானவர்கள்தானா? இது கொஞ்சம் ரிஸ்கியான பதிவு என்பதால் பெயர், சம்பவங்கள் குறிப்பிட்டால் அம்பேலாகிவிடும் ஆபத்திருப்பதால், நான் மேலோட்டமாகவே இந்தப்பதிவை முடித்துக்கொள்கிறேன்.

மறக்கமுடியாதஅற்புதமான பாஸ்களிடம் வேலைபார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வெகு சிலரே. இப்போது நினைத்தாலும் பிரமிப்பேன். ஒரு ஆட்டோமொபைல் சர்வீஸ் நிலையம். டூ வீலர் என்பது போல மனதில் சீன் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். 7 லோபெட் டிரைலர்கள், (இடைச்செருகல்: 40 டயர்கள், 10 ஆக்ஸில்கள் கொண்ட 100 டன் எடையை அனாயாசமாக இழுத்துச்செல்லும் டிரைலர்கள், இவற்றை சமயங்களில் துறைமுகங்களில் கப்பல்களின் நிலையை சற்று மாற்றியமைப்பதற்காக பயன்படுத்துவார்கள். பிரமாண்ட சரக்கு கப்பலை ஒரு கயிற்றில் இந்த வண்டியுடன் கட்டிவிடுவார்கள். திணறிக்கொண்டு அதை இந்த லாரி இழுத்துச்செல்லும் போது பார்த்தால் பிரமித்துப்போய்விடுவீர்கள்), பத்துக்கும் மேற்பட்ட கிரேன்கள் ஆகியவற்றை ஒரே நேரத்தில் பழுதுபார்க்கும் திறன்வாய்ந்த சர்வீஸ் நிலையம். கடைசி தொழிலாளி வரை அன்புடன் பழகி, பிறருக்கு வேலையை ஒதுக்கிவிட்டு மானேஜராக இருப்பினும் தினமும் தனக்கென சில சர்வீஸ் வேலைகளையும் ஒதுக்கிக்கொண்டு லாரிகளுக்கு அடியில் படுத்து உருண்டு கொண்டிருந்த அந்த என் முதல் பாஸ் இன்னும் மறக்க இயலாத 27 வயது இளைஞன். தொலைபேசியிலேயே சைட்களில் இருக்கும் மெக்கானிக்குகளுக்கு ஆலோசனை வழங்கும் திற‌ன். அந்த வயதிலேயே அந்த அளவு திறனும், அவ்வளவு பெரிய பதவியும் அவனிடம் எப்படி வந்தது.?

சென்னையில் ஒரு வாகன உதிரிபாக தயாரிப்பு தொழிற்சாலையில் சூப்பர்வைசராக இருக்கிறேன். நான் வேலையில் இணையும் போது தொழிற்துறையில் ஏற்பட்ட தொழில்முடக்கம் காரணமாக நிறுவனமே மூடப்படும் பரிதாப நிலையில் இருந்தது. அங்கே நான் கண்ட அந்த பாஸின் வெறி, இரண்டே வருடங்களில் 20 லட்சத்திலிருந்த நிறுவனத்தின் வரவுசெலவை 20 கோடிக்கு எடுத்துச்சென்ற வேகம், துணிச்சல், உழைப்பு, சக பணியாளர்களிடம் காட்டிய நெருக்கம், கண்டிப்பு என அவன் ஒரு அற்புதம். பிரச்சினைகளுக்கு தீர்வாய் அவன் இருந்தான். என்ன செய்வது எனத்தெரியாமல் திணறி பிரச்சினைகளோடு அவனிடம் சென்றால் அவன் தரும் பல தீர்வுகளில் பிரமிக்கலாம். தினம் தினம் உற்பத்தித்திறனை அதிகரிக்க குட்டி குட்டியாய் கருவிகளையும், வழிகளையும் கண்டுபிடித்துக்கொண்டேயிருந்தான். எங்கு கற்றான் அதை? எப்படி வளர்த்தான் அந்த திறனை?

இன்னொரு மல்டிநேஷனல் நிறுவனம். சிரிப்பு அள்ளிக்கொண்டு போகும்.. COOOOOL.. எவ்வளவு பிரஷர் அவனுக்கு இருந்தது என நான் அறிவேன். எப்போதும் எப்படி இவனால் சிரித்துக்கொண்டிருக்க முடிகிறது. உங்கள் எக்ஸ்பீரியன்ஸுக்கு என்னிடம் ஏன் இதை கொண்டு வர்றீங்க.. நீங்க என்ன பண்ணினாலும், நான் பண்றதை விட பெட்டராத்தான் இருக்கும். நீங்களே பண்ணிடுங்க என்று கீழேயிருக்கும் ஊழியர்களை ஊக்குவித்த அழகென்ன? ஆங்கிலத்தை அருவி மாதிரி அவன் பொழிந்த அழகென்ன? இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டேயிருக்கலாமே? ஆறுமாதங்கள் கழித்தே அவன் தாய்மொழி தமிழல்ல என்று அறிந்த போது பிரமித்தேன். தமிழில் நிறம் குணம் திடம் மாறாமல் எப்படி அவனால் பேச முடிந்தது? ஏழு மொழிகளில் கவிதை எழுதும் அளவு புலமையும், எப்பேர்ப்பட்ட மனிதர்களையும், சூழலையும் எதிர்கொள்ளும் இயல்பும் எப்படி வாய்த்தது அவனுக்கு?

மேற்சொன்னது போல மேலும் சிலர். அவர்களுடன் பணிபுரியும் போதெல்லாம், இவனிடம் நாம் ரிப்போர்ட் செய்கிறோம் எனில் அதற்கான தகுதி இவனுக்கு இருக்கிறது. நம்மிலும் சிறந்தவன். இவனிடமிருந்து கற்கவேண்டும் என நினைத்துக்கொள்வேன். தவறு நிகழ்ந்து அவன் கண்டிக்க நேரும்போது அவனிடம் மன்னிப்பு கோர எந்தத்தடையுமில்லை என்னிடம் என உணர்ந்திருக்கிறேன். தவறில்லையெனில் வாக்குவாதம் நிகழ்த்தியிருக்கிறேன். அவர்களிடமிருந்து ஆணை வரும்முன் அதை நிறைவேற்றும் ஆவலுடன் இருந்திருக்கிறேன்.

ஆனால்...சமயங்களில் சில மொக்கைச்சாமிகளிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி, நொந்து, பேசா மடந்தையாகி.. பின்னும் சொல்லநேருகிறது..
"எஸ்.. பாஸ்.!"


.

22 comments:

பரிசல்காரன் said...

சூப்பர் பாஸ்!

பரிசல்காரன் said...

இது சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே வைத்திருக்கிறேன்...!!!

Ramesh said...

After marriage, you tend to soften and settle somewhere. Take the boss, head on!

அன்புடன் அருணா said...

ரொம்ப நேர்த்தியான பதிவு...நானே ஒன்று எழுதவேண்டும் என நினைத்திருந்தேன்...good boss!!!
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

//ஆனால்...சமயங்களில் சில மொக்கைச்சாமிகளிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி, நொந்து, பேசா மடந்தையாகி.. பின்னும் சொல்லநேருகிறது..
"எஸ்.. பாஸ்.!"//

A Boss is always right thaamiraa!!
anbudan aruna

Mahesh said...

அட்டகாசமான பதிவு... வேடிக்கையா சொல்வதுண்டு...

Rule 1. Boss is always right
Rule 2. If boss is swrong, refer rule 1

கபீஷ் said...

நல்ல பதிவு!!

T.V.Radhakrishnan said...

"எஸ்.. பாஸ்.!"

அமர பாரதி said...

அருமையான பதிவு தாமிரா. நல்ல மேலாளர்கள் நல்ல நண்பர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தோழமையுடனே வேலையை வாங்குவார்கள். திறமையற்றவர்கள் தான் அதிகாரத்தின் மூலம் வேலை வாங்க முற்படுவார்கள்.

ஜோசப் பால்ராஜ் said...

எஸ் பாஸ்...
நீங்க சொன்னது அத்தனையும் உண்மையோ உண்மைங்க.

புதுகை.அப்துல்லா said...

நம்ப கேரியர்ல மொத்தம் 2 பாஸ்தான். 2 வது பாஸ பத்தி சொல்லனும்னா 100 பதிவு போடனும்.(அநேகமாக என் இறப்புவரை அவர்தான் பாஸ்):)

Raj said...

மிக முக்கியமான ஒரு பாஸை கவனக்குறைவாக விட்டு விட்டீர்களே....இல்லை நீங்கள் வேண்டுமென்றே தவிர்த்தீர்கள் என்று சொல்லி உங்களை மாட்டி விட விரும்பவில்லை....எனக்கு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும் பழக்கம் எப்போதும் இல்லை

Itsdifferent said...

There is a leadership principle:
If everyone in your team agrees with you, then you dont need a team. (this is not the execution team I am talking about, the decision makers team).
Me and my boss used to differ in opinions most of the time, and whenever we represent our group in meetings, people always asked both of us, how do you guys work together? My answer was: We respect each other's views and once the decision is made, we simply follow through that, whosoever owns it.
Another live example is, look how Obama is picking his cabinet members. He is continuously saying he wants very strong personalities in his cabinet, he already has two of his primary rivals (Hillary and Bill Richardson) in his cabinet, in strong positions.
Can our pols, ever take such a view?

கும்க்கி said...

wow excellent...post ..with tha excellent boss(s).

தமிழ் பிரியன் said...

எஸ் ஸார்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

Nice Boss

தாமிரா said...

யூ த பர்ஸ்ட் பரிசல், நன்றி.! (அந்த ஆராய்ச்சியையும் போட்றவேண்டியதுதானே..)

நன்றி ரமேஷ்.!

நன்றி அருணா.! (நீங்களும் எழுதுங்க..)

நன்றி மகேஷ்.!
நன்றி கபீஷ்.!
நன்றி TVR.!

நன்றி அமரபாரதி.! (சரியா சொன்னீங்க..)

நன்றி ஜோஸப்.!

நன்றி அப்துல்.! (ஒங்க பாஸ் என் பதிவ படிக்கிறாராமே, அப்பிடியா?)

நன்றி ராஜ்.!

நன்றி இட்ஸ்.!

நன்றி கும்க்கி.!

நன்றி தமிழ்.!

நன்றி அமிஷு அம்மா.!

மங்களூர் சிவா said...

யெஸ் பாஸ்
ஓகே பாஸ்
ஆகட்டும் பாஸ்
முடிச்சிருவோம் பாஸ்
ரைட் பாஸ்
வர்ட்டா பாஸ்!

வால்பையன் said...

அப்படியே மொக்கை மன்னர்களை பற்றியும் சீக்கிரம் எழுதிவிடுங்கள்.

எனக்கு படித்த முட்டாள்களை பற்றி படிப்பதென்றால் ரொம்ப பிடிக்கும்.

சும்மா லுலுலாயிக்கு பாஸ்

புதுகை.அப்துல்லா said...

நன்றி அப்துல்.! (ஒங்க பாஸ் என் பதிவ படிக்கிறாராமே, அப்பிடியா?)
//

சத்தியமா உண்மை

தமிழ்ப்பறவை said...

நல்ல பதிவு தாமிரா... இன்னும் சற்று விலாவாரியாகப் போட்டிருக்கலாம்.
எனக்கும் சில பாஸ்கள் நன்றாக அமைவதுண்டு. இப்போது இருக்கும் என் பாஸ்கூட மிகத் திறமையானவர். அவர் மெயில் கம்போஸ் பண்ணி அனுப்பும் அழகே தனி. அனுப்புவது ரிசீவருக்கு தெளிவாகப் புரியும் படி, வார்த்தைகள் கோர்த்து, நயமாக வேலை வாங்கி விடுவார்.
ஃபோனில் வேலை வாங்கும்போது, அப்படியே விட்டுப் பிடித்து அவனிடமே வேலை எப்போது முடிப்பான் என 'கமிட்' செய்து விடுவார்.
அவரிடம் ஒரு பிரசென்டேஷன் காண்பிப்பதற்கு முன் ,அவர் கேட்பார் என நினைட்து 100 கேள்விகளுக்குப் பதில் தயாரித்துச் சென்றிருப்பேன். கடைசியில் புதுவிதக் கோணத்தில், லாஜிக்குடன் 101 வது புதுக் கேள்வி கேட்பார்.
பிரசென்டெஷனில் ஒவ்வொரு புள்ளிக்கும் அர்த்தம் நம்க்குத் தெளிவாக இருக்க வேண்டும். நமக்கே தெளிவில்லையெனில் அடுத்தவருக்கு எப்படி விளக்க முடியும்? இது அவரின் பாலிஸி.
நல்ல பாஸ்கள் அமைவது வரம். கற்றுக்கொள்ள வேண்டியது நம் கடமை.
இது போன்ற தொழில் சார்ந்த பதிவுகளை நிறைய எதிர்பார்க்கிறேன்.

Kovilpatti Anandhan said...

unga boss ellorayum... avan ivannu than solluvingala.....

enna... boss... nalla illa...