Thursday, December 4, 2008

சொல்லாமலே விடைபெறும் இளமை..

அவனுக்கு வயது 25. அவளுக்கு வயது 23. அப்போதுதான் குளித்திருப்பாளோ? உடையில் ஆங்காங்கே ஈரம். இன்னும் காயாத கூந்தல். படுக்கையில் கிடந்த காதலனை நெருங்குகிறாள். இடது கை அவன் தலையை சுற்றியிருக்க முகத்தோடு முகம் நெருங்கியிருக்க வலதுகை விரலினால் அவன் முகத்தில் கோலமிடுகிறாள். இருவரின் மூச்சுக் காற்றும் கலக்கிறது. இவன் தூங்கும் அழகுதான் என்னை கொல்கிறதே.. எழுந்தால் தொல்லை செய்வான். முத்தமிட்டே அவனை எழுப்புகிறாள்.

‍‍‍ஊஞ்சலாடிய‌ இளமையை யாரும் மறுக்கவே மாட்டீர்கள். மறக்கவே மாட்டீர்கள். இன்று உங்களுக்கு என்ன வயதாகிற‌து? எத்தனை வருடங்கள்? எத்தனை மாதங்கள்? எத்தனை நாட்கள்? என்ன இரண்டு மூன்றுதானே பார்த்தமாதிரி இருந்தது. எப்போது இத்தனை முடிகள் நரைத்துப்போயின? போன வருடம் எடுத்த போட்டோவில் கூட எவ்வளவு அழகாயிருந்தேன்? என்ன இந்த படத்தில் இருப்பது நான்தானா? கழுத்தின் சதை தளர்ந்து எவ்வளவு சுருக்கங்கள்? கன்னங்கள் தடித்திருக்கின்றனவா? சைட் வாக்கில் கண்ணாடியை பார்த்துக்கொண்டால் கொஞ்சம் இளமை மிச்சமிருப்பதைப்போல தோன்றுகிறது. இன்னும் பல சமிக்ஞைகள் தெரிகின்றன‌வே? எப்போது இந்த‌ மாற்ற‌ம் நிக‌ழ்ந்த‌து? இதை தடுத்து நிறுத்த‌முடியுமா? முடியாது.

இன்னும் 30 வ‌ய‌து ஆக‌வில்லையா? கால‌ம் த‌ன் லாவகமான கைக‌ளுட‌ன் உங்க‌ள் பின்னாலேயே வ‌ந்து கொண்டிருக்கிறான். எந்த‌ நேர‌மும் உங்க‌ள் ப‌ர்ஸ் காணாம‌ல் போய்விடும். முன்னதாக ஒன்று செய்துகொள்ளுங்கள். அப்படியே கொண்டாடிக்கொள்ளுங்கள் உங்கள் இளமையை. ஆடிப்பாடுங்கள், கூத்தாடுங்கள், துள்ளிக்குதியுங்கள், இணையை முத்தமிட்டு மகிழுங்கள், கூடிக்குலாவுங்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருநாள் திடுமென அது காணாமல் போய்விடும். இளமை திருடுபோவதை த‌டுப்ப‌து இய‌லாத‌ காரிய‌ம். 30 வ‌ய‌தை தாண்டிய‌வ‌ரோ, இளைய‌வ‌ரோ? இளமையை கொஞ்ச‌ கால‌ம் நீடித்திருக்கச் செய்ய‌ ஒரு வ‌ழியுண்டு. ஆனால் அதைச் சொல்வது‌ மிக‌ எளிது. செய்வ‌து உல‌க‌ க‌டின‌ம். சொல்கிறேன், முடிந்தால் செய்துகொள்ளுங்க‌ள்.

25 வ‌ய‌துக்கு இன்னும் வ‌ர‌வில்லையா? உங்களுக்கு தின‌மும் 2 கிமீ ர‌ன்னிங். 25லிருந்து 30 வ‌ய‌து. உங்களு‌க்கு தின‌மும் 2 கிமீ ஜாக்கிங். 30தை தாண்டிவிட்டாயா? உங்களு‌க்கு தின‌மும் 2 கிமீ வாக்கிங். நான் நன்கு அறிவேன். நீங்க‌ள் கேட்க‌ப்போவதில்லை. உங்க‌ள் இள‌மையை ஒருநாள் திடுமென‌ ப‌றிகொடுத்துவிட்டு அவ்வ்வ்.. என‌ அழுது கொண்டிருக்கப் போகிறீர்க‌ள். ஆல் தி பெஸ்ட்.!

டிஸ்கி : திரும‌ண‌த்திற்கும் இத‌ற்கும் மிக‌ நெருங்கிய‌ தொட‌ர்பு உண்டு, அதை குறிப்பிட‌ ம‌ற‌ந்துவிட்டாய் என‌ சில‌ர் அழுதுகொண்டிருப்பதையும், திருமணமாகாத 20 க‌ளிலிருப்ப‌வ‌ர்க‌ள் கெக்கேபிக்கேவென‌ சிரித்துக்கொண்டிப்ப‌தையும் என்னால் கேட்க‌முடிகிற‌து.

.

28 comments:

சந்தனமுல்லை said...

நாந்தான் ப்ர்ஸ்டா??

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு சுவாரசியமா!!
அனுபவப் பதிவுகளா? :-)

அத்திரி said...

தாமிரா இப்பவெல்லாம் பதிவுக்கு பதிவு வித்தியாசப்படுத்துறீங்க..

கலக்கல்

தராசு said...

இதுல இப்ப நீங்க எங்க இருக்கீங்க தாமிரா,

ரன்னிங்கா, வாக்கிங்கா, ஜாகிங்கா??

கும்க்கி said...

ரன்னிங்..,ஜாக்கிங்., வாக்கிங் எல்லாம் முடித்தாயிற்று...
சீக்கிறம் படுக்க போகலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிரேன்..

அத்திரி said...

kumki said //ரன்னிங்..,ஜாக்கிங்., வாக்கிங் எல்லாம் முடித்தாயிற்று..//

.
இதெல்லாம் முடிஞ்சிருச்சா அப்ப உங்க வயசு??????

மங்களூர் சிவா said...

கலக்கல் தாமிரா? சீக்கிரம் போய் டை அடிங்க!!

:))

கும்க்கி said...

நடிகைங்க கிட்ட கேட்டாலும் கேட்கலாமே தவிர என்னிடம் வயசு கேட்கபடாது....அத்திரி.

கும்க்கி said...

ரிப்பீட்டர்...ஒரு வழியா பார்ம்முக்கு வந்துட்டாப்ல தெரியுது...

Mahesh said...

//தாமிரா இப்பவெல்லாம் பதிவுக்கு பதிவு வித்தியாசப்படுத்துறீங்க..//

ர்ர்ர்ர்ர்ர்ர்ரிப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்டு....

விஜய் ஆனந்த் said...

அண்ணே...
என்னே உங்க பாசம்!!!

தன்னால முடியலன்னாலும், மத்தவங்களாவது இளமையா இருக்கட்டும்னு டிப்ஸ் கொடுத்திருக்குற உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது!!!

அமர பாரதி said...

அருமை தாமிரா. வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

என்ன வயதாகிறதே எனப் பயமாக இருக்கிறதா??? நல்ல பதிவு தாமிரா.
அன்புடன் அருணா

Saravana Kumar MSK said...

2 கிமீ ர‌ன்னிங்???
தின‌மும் ??

Saravana Kumar MSK said...

அங்கிள் தாமிரா..வாழ்க.. ;)

கடைசி பக்கம் said...

ஹாய் தாமிரா,

ஆனா நிச்சயமா கல்யாணத்துக்கும் இளமைக்கும் தொடர்பு உண்டு.

கல்யாணம் முடிஞ்சு 2-3 வருடம் கழித்து நிச்சயமாய் கொஞ்சமாவது உங்களுடைய இளமை குறையும்.

உங்களுடைய எழுத்து நடை அருமை.

keep going

Anonymous said...

//உங்க‌ள் இள‌மையை ஒருநாள் திடுமென‌ ப‌றிகொடுத்துவிட்டு அவ்வ்வ்.. என‌ அழுது கொண்டிருக்கப் போகிறீர்க‌ள். ஆல் தி பெஸ்ட்.!//

இப்படி பயமுறுத்தறீங்களே. சரி இது வழக்கம்போல ரங்கமணிகளுக்கு மட்டும்தானா.

Anonymous said...

// Saravana Kumar MSK said...
அங்கிள் தாமிரா..வாழ்க.. ;)

//

ஹஹஹா

புதுகை.அப்துல்லா said...

தாத்தா தாமிரா வாழ்க :))

கோவி.கண்ணன் said...

முப்பது வயது வரை வாழ்க்கை மிக மெதுவாகவும் மகிழ்ச்சியாகவும் செல்லும் அதன் பிறகு மின்னல் வேகம் தான். திடிரென்று ஒரு நாள் 'தாத்தா...' என்று கூப்பிடும் போது தான் உணர்வே வரும். அட மரணவாசலுக்கு அருகில் வந்துவிட்டோம் என்கிற உண்மை.

தமிழ் பிரியன் said...

தனிமையிலும் தனிமை! கொடுமையிலும் கொடுமை! இனிமை இல்லை வாழ்க்கை எதற்கு இந்த இளமை..:(

தாரணி பிரியா said...

:)நல்ல பதிவு தாமிரா. படிக்க சுவாரஸ்யமா இருக்குங்க‌

தாமிரா said...

நேற்று இணையம் பக்கம் வரமுடியவில்லை. அதான் உடனே பதில் போட முடியாம போச்சுது.

நன்றி முல்லை.!
நன்றி அத்திரி.!
நன்றி தராசு.! (க‌த்திரிக்கா என்ன‌ விலைங்க‌?)
நன்றி கும்க்கி.! (நீங்க‌ யூத்துன்னு யாரோ சொன்னாங்க‌ளே..)
நன்றி மங்களூர்.! (கூடிய‌ சீக்கிர‌ம் ஆர‌ம்பிச்சிற‌ வேண்டிய‌துதான் தல.. நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டீங்களாமே.. அப்பிடியா?))
நன்றி மகேஷ்.!
நன்றி ஆனந்த்.!
நன்றி பாரதி.!
நன்றி அருணா.!
நன்றி MSK.! (மருமான் MSK.. வாழ்க‌!)
நன்றி கடைசிபக்கம்.!
நன்றி அம்மிணி.! (ஆமாமா.. பெண்க‌ளுக்கு வ‌ய‌சே ஏறாதாமே.. ஆல‌ங்குடி ஜோசிய‌ர் சொன்னாரு..)
ந‌ன்றி அப்துல்லா.! (பேராண்டி அப்துல் வாழ்க‌!)
ந‌ன்றி கோவிஜி.! (நீங்க‌ எப்போ தாத்தாவானீங்க‌.. நீங்க‌ளும் யூத்துன்னுதானே நென‌ச்சிக்கிட்டிருந்தேன்)
ந‌ன்றி தமிழ்.! (டைமிங் சாங் த‌ல‌, ர‌சித்தேன்)
ந‌ன்றி தார‌ணி.!

தாமிரா said...

என்ன கூட்டம் கம்மியா இருக்குது, இன்னிக்கு ஏதாவது மொக்கை போட்டுற வேண்டியதுதான்..

narsim said...

//கால‌ம் த‌ன் லாவகமான கைக‌ளுட‌ன் உங்க‌ள் பின்னாலேயே வ‌ந்து கொண்டிருக்கிறான்//

ஆமா தல..ஆமா..

நல்ல நடை தாமிரா..

தராசு said...

மொக்கை போடறதுணு முடிவு பண்ணீட்டிங்க, அப்புறம் வொய் வெய்டிங்??

கும்க்கி said...

ஆமா தல..ஆமா..

நல்ல நடை தாமிரா..

வாக்கிங்க சொல்றாரு போல..

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதுல இப்ப நீங்க எங்க இருக்கீங்க தாமிரா,

ரன்னிங்கா, வாக்கிங்கா, ஜாகிங்கா??

எனக்கு முன்னாடியே ஒருவர் கேட்டுட்டார்.