Friday, December 12, 2008

சார் நான் லீவு.! ஆப்பிஸ்ல மண்டகப்படி நடக்குது..

தோழர்ஸ், ஆப்பிஸில் நொந்து நோக்காடாகிக் கொண்டிருப்பதால் இந்த வாரம் முழுதும் வரமுடியவில்லை. இன்னும் பிரச்சினை முடிந்தபாடில்லை. தொடர்ந்து ஆப்பிஸ்ல மண்டகப்படி நடந்துகொண்டிருப்பதால்.. மேலும் நாலு நாளைக்கு லீவு சொல்லிக்கிறேன். முந்தைய பதிவு ரொம்ப நல்ல பதிவென நான் நினைத்துக்கொண்டிருந்தால் அதற்கு வரவேற்பு சொல்லிக்கிறா மாதிரியில்லை. அதற்கு பின்னூட்டம் போடாதவர்கள் மருவாதியாக போய் பின்னூட்டிவிட்டு வரவும். புடிக்கலைன்னாலும் சொன்னாத்தானே தெரியும்.! அதற்கும் முந்தைய கும்மிப்பதிவு உங்களுக்கு பிடிக்கலைன்னாலும் சொல்லவேண்டியதுதானே. ஒரு ஆள் ஒரு தடவை கும்மி அடிச்சா தப்பா? அதற்கு வராதவர்கள் நேரில் பார்க்கும்போது கடித்துவைக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன். இப்போதும் ஒண்ணும் கெட்டுப்போகவில்லை. போய் கும்மியில்லாவிட்டாலும் அட்டென்டன்ஸாவது போடவும். போட்டால் பிழைப்பீர்கள், இல்லைன்னா கடி நிச்சயம். நாலு நாளா ஆளைக்காணோமேன்னு ஒருத்தரும் வருத்தப்பட்டாமாதிரியே தெரியலை.. (வினோத் மாதிரி நானும்..)அவ்வ்வ்வ்..

தற்காலிக தண்டனையாக இந்த மீள்பதிவு. உங்களுக்காக இந்தப்பதிவில் கூடுதல் ரசனையான(?) வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே இதை மீள்பதிவு என்பதை விட திருத்தப்பட்ட சிறப்புப்பதிவு என சொல்லலாம். நான் ஒரு மீள்பதிவு போட்டதுக்கே என்னிய சுத்தி வெச்சு ரவுண்டு கட்னீங்களே.. கார்க்கி மீள்பதிவா போட்டு தாக்கிட்டிருக்காரே.. அங்கே போய் மட்டும் ஈன்னு இளிக்கத்தெரியுதா.. ஒழுங்கா மருவாதியா இதையும் ப‌டித்து ஓட்டு போட்டு பின்னூட்ட‌ம் போட்டு விட்டு போக‌வும். ஜாக்கிர‌த‌.!

******

கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -4

பொதுத்துறையோ, தனியார் துறையோ, சிறிய நிறுவனமோ, பெரிய கார்ப்பரேட்களோ, ஸா.:ப்ட்வேரோ, ஆட்டோமொபைலோ பணியிடம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் கல்யாணம் ஆகாதவர்களும், ஆனவர்களும் கலந்தே பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். (என்ன அரிய கண்டுபிடிப்பு என ந‌க்கல் பண்ணாமல் மேலே போகவும், விஷயம் இருக்கிறது)

பொதுவாக நாம் ஒரு பிரச்சினையை அனுபவிக்கும்போது என்ன செய்கிறோம்? ஒரு படத்தைப் பார்க்கிறோம். பின்விளைவுகளை அனுபவிக்கிறோம். நண்பர்கள், வேண்டியவர்களிடம், 'போகாதே.. போனால் ரண்டு நாளைக்கு வயித்தாலே போகும்' அப்படினு எச்சரிக்கிறோம். ஆனால் இந்த கல்யாணம் ஆனவர்கள் என்ன செய்கிறார்கள்.. கல்யாணமாகாதவர்களை ஒருவிதமான பொறாமையோடேயே பார்த்துவிட்டு, இவனுக்கும் கல்யாணம் நடக்கும் இவனும் சீர் கெட்டு போவான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டுஎதைப்பற்றியுமே எச்சரிக்கை செய்யாமல் எதுவுமே நடக்காததுபோல பாவனை செய்துகொண்டு ஒரு வித 'ஸாடிஸ்ட்' போல இருந்துவிடுகிறார்கள்.

யாருக்காவது கல்யாணம் என்றால் சந்தோஷமாக சிரித்து வாழ்த்துகிறார்கள், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கல்யாணத்துக்கும் ஒரு எட்டு போய்வந்துவிடுகிறார்கள். நன்றாக உற்றுக்கவனிப்போமேயானால் அந்தச்சிரிப்பின் பின்னால் ஒரு சைக்கோ ஒளிந்துகொண்டிருப்பதையும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்து உள்ளூர மகிழத்தான் கல்யாணத்துக்கும் போகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளமுடியும். இதுவரை எனது மூன்று எச்சரிக்கை பாகங்களையும் படித்தவர்களுக்கு லேசாக ஒரு சந்தேகம் வந்திருக்கக்கூடும். இவ்வளவு சொல்றானே இந்த ஆளு, ஏதாவது விஷயம் இருக்குமோ என்று. (சந்தேகம் வராதவர்களும், இந்த எச்சரிக்கைப்பதிவுகளை வெறும் காமெடிப்பதிவுகளாகவும் நினைப்பவர்கள் பிற பதிவுகளைப் படிக்க போகலாம் என்றும் இனி இந்த எச்சரிக்கைப் பதிவுகளை படிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்)

அவ்வாறு வந்தவர்களுக்கு இன்னுமொரு காரணம் சொல்கிறேன், படித்துவிட்டு நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.அதே அலுவலக‌ச்சூழல். கல்யாணமாகாதவர்களை கவனியுங்கள். லேட்டாக வந்தாலும் சரியான நேரத்துக்கு வெளியேறிவிடுவார்கள். அவர்களுக்கென்று நிறைய வேலைகள் இருக்கும், யாராவது அவர்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கக்கூடும், அல்லது இவர்கள் யாருக்காவது வெயிட் பண்ணப்போகவேண்டியிருக்கும். ஷாப்பிங், சினிமா, பார்ட்டி என நிறைய கமிட்மென்ட்ஸ். இப்போது மெதுவாக கல்யாணம் ஆனவர்களைக் கவனியுங்கள். நிச்சயமாக ஆ.:பீஸ் நேரத்துக்கு முன்னமே வந்துவிடுவார்கள். உங்களுக்கு முன்னால் அவர்கள் கிளம்பியதை உங்களால் ஒரு நாள்கூட பார்த்திருக்கமுடியாது. கேட்டால் நாங்கள் என்ன யூத்தா? பெண்டாட்டி, பிள்ளைகுட்டி ஆகிவிட்டது. வேலை, சின்சியாரிட்டி, சம்பாத்தியம் என இருந்தால்தானே முடியும் என்று ஜல்லியடிப்பார்கள். (நிஜம்தானே.. என்று உங்களில் சிலர் பயத்துடன் ஒப்புக்கொள்வது கேட்கிறது)

ஏன்.?

யாராவது யோசித்ததுண்டா? இன்னும் விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள். புதிதாக கல்யாணம் ஆனவர் யாரையாவது அவருக்குத் தெரியாமல் கண்காணியுங்கள். கல்யாணம் ஆனப்புதிதில் லேட்டாக வந்து ஜொள்ளுவிட்டுக்கொண்டே சீக்கிரமும் ஓடிப்போவார்கள். (அவர்களுடைய மானேஜர்களும் கண்டுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத்தெரியும், என்ன நடக்கப்போகிறதென்று.) நாளாக நாளாக இந்த அலுவலக நேரம் கூடிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் செக்யூரிட்டி, சீட்டுக்கே வந்து சார் ஆ.:பீஸ பூட்டணும் என்று (கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுவதைத்தான் டீஸன்டாக எழுதியிருக்கிறேன்) சொல்லும்வரை கிளம்ப மாட்டார்கள்.

ஏனென்று யோசித்து வையுங்கள். தேவைப்படுவோர்கள் இதையும் (எச்சரிக்கை ஒன்று, இரண்டு, மூன்று) படியுங்கள். அடுத்த எச்சரிக்கையில் சந்திக்கிறேன். (அடுத்த காரணம் கிடைக்காமல் இதை ஒப்பேறியிருக்கிறார் தாமிரா என்று நினைப்பவர்களைப்பார்த்து நான் சிரிக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது. இருப்பினும் காரணங்களை நான் மட்டுமே கூறிக்கொண்டிருப்பதைவிட வாசகர்களையும் சிந்திக்கத்தூண்டுவது ஒரு எழுத்தாளருடைய சரி.. சரி.. பதிவருடைய கடமையல்லவா?)

25 comments:

Mahesh said...

நாந்தான் பஷ்ட்.....

கார்க்கி said...

ஹிஹிஹி.. என்ன ஏன் தாளிக்கறீங்க? இனிமேல கொஞ்ச காலத்துக்கு காதல் பதிவு எழுதக் கூடாதுனு இருக்கேன். ஆனா இந்த மாசம் சிலபல விஷய்ங்கள் இருப்பதால் போடாமலயும் இருக்க முடியல.. அதான்..

Mahesh said...

எங்களையெல்லாம் கேக்கறீங்களே... மருவாதியா நம்ம கடைக்கு வந்து விட்டுப் போனதெல்லாம் படிச்சு பின்னூட்டம் போடவும். இல்லேன்னா.. ராத்திரி ரத்தக் காட்டேரி கனவுல வந்து பயமுறுத்தி பெட்லயே சூச்சா போயிடுவீங்க.... ஜாக்ரத.... :))))

தராசு said...

//தொடர்ந்து ஆப்பிஸ்ல மண்டகப்படி நடந்துகொண்டிருப்பதால்.. மேலும் நாலு நாளைக்கு லீவு சொல்லிக்கிறேன்.//

மண்டகப்படின்னா - இந்த ஆப்புரைசல் சொல்வாங்கள்ளே அதுவா??

//நாலு நாளா ஆளைக்காணோமேன்னு ஒருத்தரும் வருத்தப்பட்டாமாதிரியே தெரியலை.. //

சத்தியமா தினமும் உங்க கடைக்குப்போய் பார்த்துகிட்டுத்தான் இருந்தேன்.

//கார்க்கி மீள்பதிவா போட்டு தாக்கிட்டிருக்காரே.. அங்கே போய் மட்டும் ஈன்னு இளிக்கத்தெரியுதா.. ஒழுங்கா மருவாதியா இதையும் ப‌டித்து ஓட்டு போட்டு பின்னூட்ட‌ம் போட்டு விட்டு போக‌வும். ஜாக்கிர‌த‌.!****** //

ஏன் இந்த கொலைவெறி??? அந்த மகிழுந்துச்சாவி வேற திசையில போய்கிட்டிருக்கிறார் போல. அனுபவிக்கட்டும் விடுங்க.

தாரணி பிரியா said...

//தோழர்ஸ், ஆப்பிஸில் நொந்து நோக்காடாகிக் கொண்டிருப்பதால் இந்த வாரம் முழுதும் வரமுடியவில்லை. இன்னும் பிரச்சினை முடிந்தபாடில்லை. //

ஆஹா எங்களையே மாதிரியே நீங்களும் ஆபிஸில் மண்டகப்படி வாங்கிட்டு இருக்கிங்களா ரொம்ப சந்தோஷம்.

தாரணி பிரியா said...

//இப்போதும் ஒண்ணும் கெட்டுப்போகவில்லை. போய் கும்மியில்லாவிட்டாலும் அட்டென்டன்ஸாவது போடவும். போட்டால் பிழைப்பீர்கள், இல்லைன்னா கடி நிச்சயம். //


இப்படி எல்லாம் மிரட்டுவீங்களா? :)

தாரணி பிரியா said...

//நான் ஒரு மீள்பதிவு போட்டதுக்கே என்னிய சுத்தி வெச்சு ரவுண்டு கட்னீங்களே.. கார்க்கி மீள்பதிவா போட்டு தாக்கிட்டிருக்காரே.. அங்கே போய் மட்டும் ஈன்னு இளிக்கத்தெரியுதா.. ஒழுங்கா மருவாதியா இதையும் ப‌டித்து ஓட்டு போட்டு பின்னூட்ட‌ம் போட்டு விட்டு போக‌வும். //

நான் புதுசா கடை திறந்து இருப்பதால் எனக்கு எல்லாமே புது பதிவுதான்.

தாரணி பிரியா said...

//காரணங்களை நான் மட்டுமே கூறிக்கொண்டிருப்பதைவிட வாசகர்களையும் சிந்திக்கத்தூண்டுவது ஒரு எழுத்தாளருடைய சரி.. சரி.. பதிவருடைய கடமையல்லவா?//

சரி நான் யோசிக்கிறேன். நீங்க உங்க வீட்டில எப்படி எல்லாம் வாங்க போறீங்கன்னு ஒ.கே.

SUREஷ் said...

பெண்டாட்டி, பிள்ளைகுட்டி ஆகிவிட்டது. வேலை, சின்சியாரிட்டி, சம்பாத்தியம் என இருந்தால்தானே முடியும் என்று ஜல்லியடிப்பார்கள்

SUREஷ் said...

ஒரு கட்டத்தில் செக்யூரிட்டி, சீட்டுக்கே வந்து சார் ஆ.:பீஸ பூட்டணும் என்று (கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுவதைத்தான் டீஸன்டாக எழுதியிருக்கிறேன்) சொல்லும்வரை கிளம்ப மாட்டார்கள்.

ராஜ நடராஜன் said...

கடிச்சு வெச்சுருவீங்கன்னு பயத்திலயெல்லாம் பின்னூட்டம் போடலீங்கண்ணா!பதிவு கண்ணுல பட்டாத்தானே பொசுக்குன்னு மனசுல பட்டத சொல்லமுடியும்?இன்னைக்கு மேய்றபோது பதிவு கண்ணுல மாட்டிக்கிச்சு.

நீங்க சொன்னாப்ல பிரம்மக்கட்டைகளுக்கு யாருமே அட்வைஸ் சொல்றதேயில்லை.ஏதோ நீங்களாவது அந்த புண்ணியத்தை தேடிக்கிறீங்களே!மகிழ்ச்சி.

புதுகை.அப்துல்லா said...

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
//(அடுத்த காரணம் கிடைக்காமல் இதை ஒப்பேறியிருக்கிறார் தாமிரா என்று நினைப்பவர்களைப்பார்த்து நான் சிரிக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது.//

ஹை!எங்கப்பன் குருதுக்குள்ள இல்லையே!

//


மேல உள்ளது அந்த பதிவில் நான் போட்ட கமெண்ட். அதையே இங்க மீள்கமெண்ட்டா போட்டுக்குறேன்.ஹி...ஹி...ஹி..

(நீங்க கடை திறந்த அந்தக் காலத்திலிருந்தே நாங்க வர்றோமாக்கும்)

தமிழ் பிரியன் said...

ஹிஹிஹி பிரசெண்ட் போட்டுக்குறோம்!

ஆட்காட்டி said...

ரொம்பவே நொந்துக்கிறீங்க..

அத்திரி said...

உள்ளேன் ஐயா

பாபு said...

உள்ளேன் ஐயா

அத்திரி said...

யாராவது இருக்கீங்களா???

தாமிரா said...

நன்றி மகேஷ்.!
நன்றி கார்க்கி.!
நன்றி தராசு.! (சத்தியமா தினமும் உங்க கடைக்குப்போய் பார்த்துகிட்டுத்தான் இருந்தேன்// நம்பளையும் நம்புது பாரேன் இந்த ஊரு.!)

வாங்க தாரணி.!
நன்றி சுரேஷ்.!
வாங்க நடராஜன்.!
நன்றி அப்துல்.!
நன்றி தமிழ்.!
நன்றி ஆட்காட்டி.!
நன்றி அத்திரி.!
நன்றி பாபு.!

சந்தனமுல்லை said...

//ஒரு ஆள் ஒரு தடவை கும்மி அடிச்சா தப்பா? //

:-)) மண்டகப்படின்னா?

புதுகைத் தென்றல் said...

நேரில் பார்க்கும்போது கடித்துவைக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன்.//

இன்னைக்கு சந்திச்சோமே!

:))))))))))

தாமிரா said...

நன்றி சந்தனமுல்லை.! (மண்டகப்படி என்றால் தமிழில் ஆப்பு என்றும், ரெய்டு என்றும் அர்ச்சனை என்றும் பல்வேறாக மொழிபெயர்க்கலாம்..)

நன்றி புதுகைத்தென்றல்.! (கனவு கண்டீங்களா? மூணு நாளா வேலை விஷயமா ஹைதராபாத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்ங்க..)

வால்பையன் said...

லீவ் கிரேண்ட்டட்

வனம் said...

வணக்கம் தாமிரா

\\எதுவுமே நடக்காததுபோல பாவனை செய்துகொண்டு ஒரு வித 'ஸாடிஸ்ட்' போல இருந்துவிடுகிறார்கள். \\

இப்பத்தான்யா தெரியுது

இந்த முகத்தையா நான் நேற்று பார்த்தேன்

ம்ம்ம்ம்

நன்றி
இராஜராஜன்

கும்க்கி said...

ஆயிரம் வாசல் இதயம்...
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்..
யாரோ வருவார் யாரோ செல்வார்..
வருவதும் போவதும் தெரியாது...
(பதிவுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லீங்னா..எதொ தோணிச்சி...)

Ragavachari said...

unmai.
enakku eppadi tamil la ezhudhuradunnu solli thara mudiuma....