Tuesday, December 16, 2008

தென்ற‌லை ச‌ந்தித்தோம்..

தொலைபேசி எண்ணை தேடிப்பிடித்து வாங்கி அவ‌ரை அழைத்த‌போது அந்த‌க்குர‌லில் இருந்த‌ நிஜ‌ம் என்னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌து. அவரது வீட்டுக்கு செல்ல‌ நினைத்த‌து மிக‌ச்ச‌ரியான‌ முடிவே என‌ ம‌கிழ்ந்தேன். போக்கிட‌மில்லாம‌ல் அவ‌ரை ச‌ந்திக்க முதலில் முடிவு செய்த‌ போது இருவ‌ருமே (நானும், கார்க்கியும்) சிறிது த‌ய‌க்க‌த்திலிருந்தோம். கார்க்கிக்கு எப்ப‌டியோ தெரிய‌வில்லை, என‌க்கு பெண் தோழிக‌ளே இருந்த‌தில்லை. குடும்பத்து பெண்க‌ளிட‌ம் த‌விர‌ பிற‌ருட‌ன் பேசிய‌து கூட‌ மிக‌க்குறைவே. பொதுவாகவே பெண்கள் என்றாலே ஒரு பயமும் உண்டு (அதுதான் உங்களுக்குத் தெரியுமே) மேலும் இந்த‌க்கால‌த்தில் சில தெரிந்த ஆண்க‌ளை பார்க்க‌ச்செல்லும்போதே சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் வாசலிலேயே வழியனுப்பப்பட்டுத் திரும்புகிறோம். ஒரு பெண்மணியை அதுவும் அவ‌ர் வீட்டுக்கே சென்று சந்திக்க வெறும் ச‌க‌ பிளாக‌ர் என்ற‌ ஒரே கார‌ண‌ம் போதுமான‌தாக‌ தோன்ற‌வில்லை என‌க்கு. இவ்வ‌ள‌வுக்கும் அவ‌ர‌து ப‌திவுக‌ளைக்கூட‌ முழுமையாக‌ ப‌டித்த‌தில்லை. (அடிக்க‌வ‌ர‌வேண்டாம் தோழி) இருப்பினும் எங்க‌ளுக்குத்தோன்றிவிட்ட‌து, செல்ல‌வேண்டும்.. அவ்வ‌ள‌வே. காரை அங்கே செலுத்தினோம்.

எந்த குழப்பமும் இல்லாம‌ல் காரோட்டி தெளிவாக‌ அப்பார்ட்மென்ட் வாச‌லில் ச‌ரியாக‌ நிறுத்திவிட்டார். இப்போதுதான் தோன்றிய‌து, அட‌டா.. குழ‌ந்தைக‌ள் இருக்கும் வீட்டுக்கு கையை வீசிக்கொண்டு வ‌ந்திருக்கிறோமே.! கொஞ்ச‌மாவ‌து ம‌ண்டையில் ஏதாவ‌து இருக்கிற‌தா என‌ ர‌மா அடிக்க‌டி திட்டுவ‌து நினைவுக்கு வ‌ந்த‌து. சரி, ப‌க்க‌த்தில் க‌டைக‌ள் இருப்ப‌து போல‌ தெரிய‌வில்லை, ப‌ர‌வாயில்லை போக‌லாம் என‌ முடிவு செய்து மேலே சென்றோம்.

ச‌ரியாக‌ வாச‌லிலேயே ஆஷிஷ் நின்று சிரித்த‌ப‌டி வ‌ர‌வேற்றான். முன்பே அவ‌னுக்கு த‌க‌வ‌ல் சொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டும். வாச‌லில் உள்ளே நுழையும் போதே டைனிங் டேபிளில் ராம் உண‌வ‌ருந்திக்கொண்டிருந்தார். அது எப்ப‌டிடா ச‌ரியாக‌ அடுத்த‌வ‌ர்க‌ளை தொல்லைப‌ண்ற‌ மாதிரியே நாம் நடந்துக்குறோம்? பாதியிலேயே எழுந்து வ‌ந்து வ‌ரவேற்றார். அவ‌ரை மீண்டும் சாப்பிட‌ச்சொல்லி வ‌ற்புறுத்தி அனுப்பிவிட்டு சோபாவில் அம‌ர்ந்தோம். அம்ருதாவும், ஆஷிஷும் எங்க‌ளிட‌ம் பேசுவ‌தா வேண்டாமா என‌ குழ‌ப்ப‌த்திலிருந்தார்க‌ள். பின்ன‌ர் இப்ப‌டி முடிவெட்டி ப‌ல‌நாட்க‌ளாகி, ஷேவ்கூட‌ செய்துகொள்ளாம‌ல் அநியாய‌த்துக்கு இருவ‌ருமே பூச்சாண்டி ரேஞ்சுக்கு இருந்தால் குழ‌ந்தைகள் பயப்படாமல் என்ன செய்வார்கள். இதுவும் நாங்கள் முதலில் தயங்கியதற்கு ஒரு காரணம். முத‌ல் முறையாக‌ ஒருவ‌ர் வீட்டுக்குச் செல்லும்போது கொஞ்ச‌மாவ‌து பார்க்கிற‌மாதிரி செல்ல‌வேண்டாமா?

உள்ள‌றையில் ஒரு இள‌ம்பெண் க‌ணினியில் அம‌ர்ந்திருப்ப‌து தெரிந்த‌து. அவர் தென்றலின் சகோதரி என பின்னர் அறிந்தோம். தென்றல் வெளியே சென்றிருப்ப‌தாக‌வும் சில‌ நிமிட‌ங்க‌ளில் வ‌ந்துவிடுவார் என்ப‌தாக‌வும்‌ ராம் தெரிவித்தார். சொன்ன‌து போல‌வே சில‌ நிமிட‌ங்க‌ளிலேயே வ‌ந்தார். சிரித்த‌ முக‌மாக‌ வ‌ர‌வேற்றார். குடும்பம் மொத்தமே மிக அன்பாக‌ ந‌ட‌ந்துகொண்டார்க‌ள். இல‌ங்கை, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பல்வேறு காலகட்டங்களில் இருந்த‌ வாழ்க்கை குறித்து ப‌கிர்ந்துகொண்டார். ஸ்டைலாக சிரித்தபடி பேசியது கேட்டுக்கொண்டேயிருக்கலாம் போல இருந்தது.

நிறைய‌ சினிமாக்க‌ள் குறித்து பேசினார். தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பரவலாக பேசினார். நான் த‌மிழ் மற்றும் சில ஆங்கில ப‌ட‌ங்க‌ள் த‌விர‌ வேறு ப‌ட‌ங்க‌ள் பார்த்த‌வ‌னில்லையாத‌லால் ம‌த்திய‌மாய் த‌லையாட்டிவைத்தேன். குறிப்பாக‌ தெலுங்குப்ப‌ட‌ங்க‌ளை அவ‌ர் சிலாகித்த‌து ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. முத‌ல் முறையாக‌ ஒருவ‌ர் தெலுங்கு ப‌ட‌ங்களை புக‌ழ்ந்து நான் காண்கிறேன். மேலும் விஜ‌ய் ப‌ட‌ங்க‌ளை தங்கையுடன் சேர்ந்து கேலி செய்து கார்க்கியை வெறுப்பேற்றினார். நான் உள்ளூர‌ ம‌கிழ்ந்தேன். பின்ன‌ர் ஸ்னாக்ஸ் வ‌ந்த‌து. நாங்க‌ள் அப்போதுதான் சாப்பிட்டுவிட்டு வ‌ந்த‌தால் அதை சாப்பிட‌ திண‌றினோம். பின்ன‌ர் ஒரு பெரிய்ய்ய்ய‌ க‌ப்பில் டீ வ‌ந்த‌து. இது ஒரு லிட்ட‌ர் பிடிக்குமா என‌ கார்க்கி காதில் கிசுகிசுத்தார். அதையும் முடித்து விடைபெற்றோம்.

தமக்கு ந‌ன்றாக‌ ம‌சாலா டீ போட‌த்தெரியும் என்ப‌தாக‌வும் (சரி, நம்பிவிட்டோம்), அன்று ம‌சாலா காலியாகிவிட்ட‌தால் வெறும் டீ த‌ர‌ப்ப‌ட்ட‌து என‌வும் புதுகைத்தென்றல் த‌ன‌து பதிவில் தெரிவித்திருக்கிறார். ஒருவேளை டீ காலியாகியிருந்தால் வெறும் ம‌சாலா ம‌ட்டும் த‌ந்திருப்பாரோ என‌ நினைத்துக்கொண்டேன். பாவ‌ம் ராம்.!


39 comments:

தாமிரா said...

அன்பு நண்பர்களே, பிரவுசிங் சென்டர் செல்லுமளவு நேரமின்மையால் பிற பதிவுகளுக்கு வரமுடியவில்லை. அலுவலகத்தில் பிரச்சினை காரணமாக பிளாக் பக்கம் வரமுடியவில்லை, வீடு திரும்பவும் தாமதமாகிவிடுகிறது. அவ்வப்போது திறந்தாலும் பின்னூட்டங்களிலிருந்தும், பாலோயர் ஐகானிலிருந்தும் உங்கள் பிளாகிற்கு வரமுடியாது. தமிழ்மணம் மட்டுமே ஒரே வழி. விரைவில் நிலைமை சரியாகிவிடும் என நம்புகிறேன். பொறுத்திருக்கவும். பதிவுகள் அவ்வப்போது எழுதப்பட்டு நண்பர் மூலமாக வெளியிடப்படுகின்றன. உங்கள் அன்புக்கு நன்றி.

சந்தனமுல்லை said...

:-)) சுவாரசியமா இருந்தது. பொய்யும் //பெண்கள் என்றாலே ஒரு பயமும் உண்டு // மெய்யும் //கொஞ்ச‌மாவ‌து ம‌ண்டையில் ஏதாவ‌து இருக்கிற‌தா என‌ ர‌மா அடிக்க‌டி திட்டுவ‌து நினைவுக்கு வ‌ந்த‌து// கலந்த நல்ல அனுபவப் பகிர்வு!!

Anonymous said...

//சந்தனமுல்லை said...

:-)) சுவாரசியமா இருந்தது. பொய்யும் //பெண்கள் என்றாலே ஒரு பயமும் உண்டு // மெய்யும் //கொஞ்ச‌மாவ‌து ம‌ண்டையில் ஏதாவ‌து இருக்கிற‌தா என‌ ர‌மா அடிக்க‌டி திட்டுவ‌து நினைவுக்கு வ‌ந்த‌து// கலந்த நல்ல அனுபவப் பகிர்வு!!//

யோவ் வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்கலாமில்ல. ஏன் இப்படி வாயக் குடுத்து வாங்கிக்கட்டிக்கிறே?

//இப்ப‌டி முடிவெட்டி ப‌ல‌நாட்க‌ளாகி, ஷேவ்கூட‌ செய்துகொள்ளாம‌ல் அநியாய‌த்துக்கு இருவ‌ருமே பூச்சாண்டி ரேஞ்சுக்கு//

இதுல ஏன் ச்சின்னப்பையன இழுக்குறே?

தமிழ் பிரியன் said...

சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க தாமிரா!

தமிழ் பிரியன் said...

///வடகரை வேலன் said...
//சந்தனமுல்லை said...
:-)) சுவாரசியமா இருந்தது. பொய்யும் //பெண்கள் என்றாலே ஒரு பயமும் உண்டு // மெய்யும் //கொஞ்ச‌மாவ‌து ம‌ண்டையில் ஏதாவ‌து இருக்கிற‌தா என‌ ர‌மா அடிக்க‌டி திட்டுவ‌து நினைவுக்கு வ‌ந்த‌து// கலந்த நல்ல அனுபவப் பகிர்வு!!//
யோவ் வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்கலாமில்ல. ஏன் இப்படி வாயக் குடுத்து வாங்கிக்கட்டிக்கிறே?
//இப்ப‌டி முடிவெட்டி ப‌ல‌நாட்க‌ளாகி, ஷேவ்கூட‌ செய்துகொள்ளாம‌ல் அநியாய‌த்துக்கு இருவ‌ருமே பூச்சாண்டி ரேஞ்சுக்கு//
இதுல ஏன் ச்சின்னப்பையன இழுக்குறே?///

கன்னா பின்னா என்று ரிப்பீட்டே போட்டுக்கிறேன்.. ;))

SK said...

ஆல் டுயிங் பதிவர் சந்திப்பு..

எங்க ஊருல எப்போ நடக்கும் :-) :-)

SK said...

// இப்போதுதான் தோன்றிய‌து, அட‌டா.. குழ‌ந்தைக‌ள் இருக்கும் வீட்டுக்கு கையை வீசிக்கொண்டு வ‌ந்திருக்கிறோமே//

இது நிறைய ஆம்பளைங்க செய்யறது தான் :(

SK said...

// காரோட்டி //

தேரோட்டி படகோட்டி லெவெலுக்கு காரோட்டி

கொய்யால :-)

SK said...

அண்ணே எங்கயோ பதிவுல இப்படி பின்னூட்டம் போடறவங்க பேரு தெரியாம '')) வர்றதுக்கு வழி சொல்லி இருந்தாங்க பார்த்தேன். நீங்க கவனிக்கலையா :-)

ச்சின்னப் பையன் said...

நல்ல வெளிப்படையான ஒரு அனுபவப் பகிர்வு...

ச்சின்னப் பையன் said...

என்னை எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் வேலன் ஐயாவுக்கும் தமிழுக்கும் என் உளமார்ந்த நன்றி.... அவ்வ்வ்...

புதுகைத் தென்றல் said...

ஆஹா,

பதிவர் சந்திப்பு பதிவு போட்டாச்சா!

என‌க்கு பெண் தோழிக‌ளே இருந்த‌தில்லை.//

நட்பில் ஆண் என்ன பெண் என்ன?
நட்பு ஒன்று போதும். தோழி என்று அழைத்தது பிடித்திருக்கிறது.

மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

விஜ‌ய் ப‌ட‌ங்க‌ளை தங்கையுடன் சேர்ந்து கேலி செய்து கார்க்கியை வெறுப்பேற்றினார். நான் உள்ளூர‌ ம‌கிழ்ந்தேன்//

:))))))))))))))))))

புதுகைத் தென்றல் said...

ஒரு பெரிய்ய்ய்ய‌ க‌ப்பில் டீ வ‌ந்த‌து.//

நீங்க சொல்ற மாதிரிதான் எங்க வீட்டுக்கு வர்றவங்க எல்லோரும் சொல்வாங்க.

கார்க்கியாவது ஒரு லிட்டர் பிடிக்குமான்னு கேட்டாரு, எங்க உறவுல ஒருத்தர் இங்க இருக்காரு,
தேக்சாவுல டீ கொடுக்கறன்னு சொ்ல்வாங்க.

இங்க நிறைய பேருவீட்டில் பாத்திருக்கிறேன். தொண்டைக்கூட நனையாத அளவுக்கு கப்பில டீ கொடுப்பாங்க.

அப்படிகொடுப்பது அயித்தானுக்கும் பிடிக்காது. சாப்பிட ஏன் அழைக்கவில்லை என்று திட்டிக்கொண்டிருந்தார். எங்கள் வீட்டு வழக்கம் அப்படி! :))))

புதுகைத் தென்றல் said...

ஒருவேளை டீ காலியாகியிருந்தால் //

கவலையே இல்லை வீட்டில் ஸ்டாக் எப்போதும் இருக்கும்.

:)))))))

புதுகைத் தென்றல் said...

பாவ‌ம் ராம்.!//

நேரம் தான். தோழி என்று என்னைச் சொல்லிவிட்டு சப்போர்ட் மட்டும் ரங்கமணிக்கு. நடக்கட்டும்.

:(

புதுகைத் தென்றல் said...

ஆல் டுயிங் பதிவர் சந்திப்பு..

எங்க ஊருல எப்போ நடக்கும் :-) :-)//

பதிவர் சந்திப்பு பதிவு போடும் இடத்தில் எல்லாம் இதே மாதிரி பின்னூட்டம் போடுங்க. சீக்கிரம் உங்க ஊருலயும் பதிவர் சந்திப்பு நடக்கும்.

என் அனுபவம் இது. :))))))

அன்புடன் அருணா said...

//பாவ‌ம் ராம்.!//

ஹஹஹஹா...
அன்புடன் அருணா

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) பதிவு ம் சுவாரசியம்.. பின்னூட்டங்களும் சுவாரசியம்..

ராஜ நடராஜன் said...

மண்டகப்படி,கடிச்சு வைப்பேன்னு பயமுறுத்தினீங்க.இந்த ஸ்னாக்ஸைத்தான் கடிச்சிவைப்பேன்னு சொன்னீங்களா:)

Anonymous said...

புதுகைத்தென்றல் தான் என்ன பேசினோம் போடலை. நீங்களாச்சும் போட்டீங்களே. நீங்க சொன்னதெல்லாம் நம்பறேன். நீங்க பெண்கள் என்றாலே பயப்படறேன்னு சொல்றதைத்தவிர

அத்திரி said...

//என‌க்கு பெண் தோழிக‌ளே இருந்த‌தில்லை. குடும்பத்து பெண்க‌ளிட‌ம் த‌விர‌ பிற‌ருட‌ன் பேசிய‌து கூட‌ மிக‌க்குறைவே.//

இதை என் மச்சானிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்..

அத்திரி said...

//பொதுவாகவே பெண்கள் என்றாலே ஒரு பயமும் உண்டு (அதுதான் உங்களுக்குத் தெரியுமே)//

ஆவ் ஆவ்.............................

அத்திரி said...

//கொஞ்ச‌மாவ‌து ம‌ண்டையில் ஏதாவ‌து இருக்கிற‌தா என‌ ர‌மா அடிக்க‌டி திட்டுவ‌து நினைவுக்கு வ‌ந்த‌து.//

பரவாயில்லை, அண்ணி நல்லாவே மிரட்டி வச்சிருக்காங்க

கார்க்கி said...

// விஜ‌ய் ப‌ட‌ங்க‌ளை தங்கையுடன் சேர்ந்து கேலி செய்து கார்க்கியை வெறுப்பேற்றினார்//

விஜயின் மத்த படத்த சொன்னா பரவாயில்ல சகா.. கில்லியே வேலைக்காவதுனு சொல்லிட்டாங்க.. அதான் ஒரே சோகமா போச்சு.. இது பத்தாதுனு டீன்னு அடுத்த சோகம்.. அந்த பசங்கதான் எனக்கு ரொம்ப புடிச்ச்து.. க்யூட்..

புதுகைத் தென்றல் said...

இது பத்தாதுனு டீன்னு அடுத்த சோகம்..//

அடுத்த முறை வாங்க கவனிச்சுக்கறேன்.

:)

புதுகைத் தென்றல் said...

அந்த பசங்கதான் எனக்கு ரொம்ப புடிச்ச்து.. க்யூட்..//

தாயைப்போல பிள்ளைன்னு பழமொழி இருக்கு கார்க்கி.

:)))))))))

தாமிரா said...

நன்றி முல்லை.!
நன்றி வேலன்.!
நன்றி தமிழ்.!
நன்றி SK.!
நன்றி ச்சின்னவர்.!
நன்றி தென்றல்.!
நன்றி அருணா.!
நன்றி கயல்.!
நன்றி நடராஜன்.!
நன்றி அம்மிணி.!
நன்றி அத்திரி.!
நன்றி கார்க்கி.!

ராம்.CM said...

நண்பரை சந்தித்த அனுபவதத்தை நன்றாக எழுதியுள்ளீர்கள்.

PoornimaSaran said...

30

PoornimaSaran said...

//கார்க்கிக்கு எப்ப‌டியோ தெரிய‌வில்லை, என‌க்கு பெண் தோழிக‌ளே இருந்த‌தில்லை.
//

ஓ! அப்படியா!!

கும்க்கி said...

கார்க்கி said...
// விஜ‌ய் ப‌ட‌ங்க‌ளை தங்கையுடன் சேர்ந்து கேலி செய்து கார்க்கியை வெறுப்பேற்றினார்//

விஜயின் மத்த படத்த சொன்னா பரவாயில்ல சகா.. கில்லியே வேலைக்காவதுனு சொல்லிட்டாங்க.. அதான் ஒரே சோகமா போச்சு..

விஜய்யே ஒரு வேஸ்ட்...இதுல பல்லியாவது...கில்லியாவது...ஹக்காங்.

கும்க்கி said...

புதுகைத் தென்றல் said...
பாவ‌ம் ராம்.!//

நேரம் தான். தோழி என்று என்னைச் சொல்லிவிட்டு சப்போர்ட் மட்டும் ரங்கமணிக்கு. நடக்கட்டும்.

ஆண்கள் வர்க்கத்தை நம்பாதிங்க..
இவர் ஏற்க்கென்வே ரங்ஸ் மன்ற தலிவர்....யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்..?

கும்க்கி said...

புதுகைத் தென்றல் said...
ஒருவேளை டீ காலியாகியிருந்தால் //

கவலையே இல்லை வீட்டில் ஸ்டாக் எப்போதும் இருக்கும்.

பணிஷ்மெண்ட் எப்போதும் ரெடின்றாங்க....

அப்படிகொடுப்பது அயித்தானுக்கும் பிடிக்காது. சாப்பிட ஏன் அழைக்கவில்லை என்று திட்டிக்கொண்டிருந்தார். எங்கள் வீட்டு வழக்கம் அப்படி! :))))

என்னங்க இது எல்லா வீட்டுலயும் தலைகீழ் வழக்கம்தாங்க...எங்க வீட்டம்மா என்னை திட்டுறதுதான் இங்க உள்ள வழக்கம்.

கும்க்கி said...

கும்க்கி said...
புதுகைத் தென்றல் said...
ஒருவேளை டீ காலியாகியிருந்தால் //

கவலையே இல்லை வீட்டில் ஸ்டாக் எப்போதும் இருக்கும்.

பணிஷ்மெண்ட் எப்போதும் ரெடின்றாங்க....

மண்ணிக்கணும்....அதுவும் தேக்ஸாவில்....என்பது விடுபட்டுவிட்டது..

தாமிரா said...

நன்றி ராம்.!
நன்றி பூர்ணிமா.!
நன்றி கும்க்கி.! (பூனை எங்காச்சும் ஓடிப்பூடுச்சோன்னு பயந்துகிட்டேயிருந்தேன். நம்ம செட்ட ஒரு வாராமா காணவில்லை கும்க்கி, பயமாயிருக்குது. அல்லாத்தையும் பூச்சாண்டி புடிச்சுட்டு போயிட்டானோ? என்னவோ நீங்களாவது வந்தீங்களே?..)

தாமிரா said...

விஜய்யே ஒரு வேஸ்ட்...இதுல பல்லியாவது...கில்லியாவது.../// ஓஹோஹோஹோஹ்ஹோ.. ஹிஹிஹ்ஹோ..

தாரணி பிரியா said...

பதிவர் சந்திப்பு ‍நல்லா இருக்குதே. நாம பின்னூட்டத்துல கலாய்கறவங்களை எல்லாம் நேர்ல பார்க்கணும் போல தோண வெச்சுட்டிங்களே ‍ தாமிரா

மங்களூர் சிவா said...

good! good!!