Thursday, December 25, 2008

என் இனிய இயந்திரா.!

சென்ற மாதத்தின் ஓர் கடும் மழைநாள். திருவொற்றியூரில் ஒரு நண்பரை பார்க்கச்சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கிறோம். முந்தின நாள் கொஞ்சம் அடங்கியிருந்த மழையைப்பார்த்துதான் பைக்கிலேயே சென்று வரலாம் என திட்டமிட்டு வந்திருந்தோம். கிளம்பும் தருணத்தில் தூறலாக துவங்கிய மழை வலுக்கத்துவங்கியிருந்தது. ஏனோ டோல் கேட்டிலேயே கடற்கரைச்சாலை வழியை நோக்கித்திரும்பாமல் தண்டையார் பேட்டை வழியாக மிண்ட் நோக்கி வந்துகொண்டிருந்தோம். மழை வலுக்கத்தொடங்கியது. ரெயின் கோட்டுக்குள் தண்ணீர் புகுந்து ஈரமாகத்தொடங்கியிருந்தது. மணி மாலை 5. கண்ணன் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம்டா மழை வெறிக்குதான்னு பார்க்கலாம் என்றான். பாண்டியன் திரையரங்கம் அருகே நின்றோம். டீ குடித்துவிட்டு சிகரெட் பிடித்தோம். மழை நாளில் ஈரக்கைகளுடன் சிகரெட் நனையவிடாமல் புகைப்பது அழகான அனுபவம்.

நேரம் செல்லச்செல்ல மழை வலுத்துக்கொண்டிருந்ததே தவிர குறைகிற வழியை காணோம். நன்கு இருட்டியிருந்தது. ஏற்கனவே நனைஞ்சாச்சு, முழுக்க நனைஞ்சாலும் பரவாயில்லை கிளம்பிடலாம், இல்லேன்னா ரிஸ்க் என்றேன். கிளம்பினோம். மிண்ட் வருவதற்குள் ரெயின் கோட் பல்லிளிக்க முழுதும் தொப்பலாக நனைந்திருந்தோம். ஹெல்மட்டின் கண்ணாடி வழியாக பார்க்கமுடியாத அளவு மழை கொட்டியது. கண்ணாடியை தூக்கிவிட்டிருந்ததால் ஹெல்மட்டின் உட்புறமெல்லாம் நனைந்து ஊறி கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருந்தது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துக்கொண்டிருந்தது. வெப்பேரியின் தெருக்கள் எப்படியிருக்கும் என்று பயந்ததில் சென்ட்ரல் வழியை மறந்து மீண்டும் பாரிஸ் செல்ல முடிவெடுத்து இதுவரை சென்றிராத பெத்தநாயக்கன்பேட்டைக்குள் புகுந்தோம். தெருக்கள் அதற்குள் வெள்ளக்காடாயிருந்தன. கொத்தவால் சாவடிக்குள் புகுந்தபோது தெருக்கள் நிரம்பி வழிந்தன. வழிநெடுக டூ வீலர்களும், ஆட்டோக்களும் நீரில் சிக்கிக்கொண்டிருந்தன. வண்டி கால வாறிடுச்சுன்னா என்னடா பண்றது? டாக்சி எவனாவது வருவானா? வண்டிய எங்க நிறுத்தறது என்று கண்ணன் புலம்பத்துவங்கியிருந்தான்.

பாரிஸை நெருங்கியபோதுதான் தெரிந்தது பஸ்கள், ஆட்டோக்கள் எதுவுமே ஓடாத அளவில் பல சாலைகள் வெள்ளத்தால் தடைபட்டிருந்தன. ரிஸர்வ் வங்கிக்கு அடுத்த சிக்னலைத்தாண்டிய போது மலைத்தேன். சாலை முழுதும் ஆறாய் ஓடியது வெள்ளம். நிச்சயம் எஞ்சின் முழுகிவிடும். சில பெரிய கார்கள் மட்டுமே தைரியமாய் போய்க்கொண்டிருந்தன. குட்டிக்கார்கள், பைக்குகள் ரிஸ்க் எடுக்கத்தயாரில்லாமல் இருபுறமும் காத்துக்கொண்டிருந்தன. வெயிட் பண்ணலாமா? மழைவிடுவது போலில்லை. சும்மா நின்றுகொண்டிருப்பதை விட இறங்கிப்பார்த்துவிடலாம். வேண்டாம் வேண்டாம் என புலம்பிக்கொண்டிருந்தான் கண்ணன். இந்த ஒரு இடம்தான், இதை தாண்டிட்டோம்னா பீச் ரோட்ல பிராப்ளம் இருக்காது. நம்ப ஆளுடா இவன், சொன்னா தாமிரபரணியிலேயே குறுக்கால இறங்குவாண்டா.. ஆ.:ப்ட்ரால் இந்த சென்னை மழைவெள்ளம் என்றவாறே பெட்ரோல் டாங்கை அணைத்தேன். இறங்கிவிட்டோம். வெள்ளத்தில் இறங்கிய ஒரு டவேராவை நெருக்கமாக பின்தொடர்ந்தோம். அது இருபுறமும் மழையாக வாரியிறைத்த நீரில் நனைந்தோம். செகண்ட் கியரில் பிடியாய் பிடித்தேன். ம்..ம்.. இன்னும் கொஞ்சம்தான், கைவிட்டுடாதே தோழா.. சரியாக வெள்ளத்தைக்கடக்கவும் டுப்.. டுப்.. சத்தம் மாற எஞ்சின் நின்று போக வண்டி நின்றது. கண்ணன் கொலைவெறிப்பார்வை பார்த்தான். சைட் ஸ்டாண்ட் போட்டுவிட்டு வண்டியைத்தழுவியவாறே இறங்கினேன். பொறுடா.. ஒரு தம்மடிக்கலாமா? பக்கத்தில் ஏதும் கடைகளில்லை. ஷவர் போல மழை கொட்டிக்கொண்டிருந்தது. ஒரே நிமிடம்தான். மீண்டும் முயற்சிக்கலாம். முதல் கிக். புகைக்கு பதிலாக மோட்டார் பம்ப் போல சைலன்சரில் இருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. இரண்டாவது கிக். இன்னும் நீர். மூன்றாவது கிக். தோழன் உயிர்த்தான். கிர்ர்ர்..கிர்ர்ர்ர்ர்ர்..

கண்ணனைப் பார்த்தேன். “போலாமா.?”

20 comments:

அத்திரி said...

i am first

அத்திரி said...

//மழை நாளில் ஈரக்கைகளுடன் சிகரெட் நனையவிடாமல் புகைப்பது அழகான அனுபவம்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

அப்படியே கீழப்பாவூர் மணி தியேட்டரில் படம் பார்த்த அனுபவத்தை எழுதவும்

Raj said...

ஹி...ஹி..என் ஆளு ( பைக் ) கூட இப்படித்தான்...இரண்டு மூணு நாள் மழையில முழங்கால் அளவு வெள்ளத்துல சும்மா மிரட்டினாலும் என்னை கை விடாம போக வேண்டிய இடத்துக்கு பத்திரமா கொண்டு போய் சேர்ர்த்தான்.

ராம்.CM said...

#/ஒரே நிமிடம்தான். மீண்டும் முயற்சிக்கலாம். முதல் கிக். புகைக்கு பதிலாக மோட்டார் பம்ப் போல சைலன்சரில் இருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. இரண்டாவது கிக். இன்னும் நீர். மூன்றாவது கிக். தோழன் உயிர்த்தான்.\#

என் இயந்திராவும் இப்படித்தான்...

SUREஷ் said...

//பொறுடா.. ஒரு தம்மடிக்கலாமா? பக்கத்தில் ஏதும் கடைகளில்லை. //தம் அடைச்சா தண்டனையாமே

SUREஷ் said...

இதுல ரஜினிய ஏன் கூப்பிட்டீங்க

புதுகை.அப்துல்லா said...

:(

Mahesh said...

உங்க இனிய இயந்திராவின் பெயர் என்ன? அடாத மழையிலும் விடாது செயல்பட்ட அந்த நண்பன் வாழ்க. நல்லா சர்வீஸ் பண்ணி அவரை மகிழ்விக்கவும்.

PoornimaSaran said...

:))

கும்க்கி said...

:-((
me too.

ச்சின்னப் பையன் said...

அது என்ன வீரபத்ரன் வண்டியா??????

புதுகை.அப்துல்லா said...

// ச்சின்னப் பையன் said...
அது என்ன வீரபத்ரன் வண்டியா??????

//

ச்சின்னபையன் அண்ணே இந்த கமெண்டை படித்துவிட்டு இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் இன்னும் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. (அந்த விளம்பரத்தை அறியாதவர்களுக்கு உங்க கமெண்ட் புரியாது)

தாமிரா said...

அனைவருக்கும் நன்றி தோழர்களே.!

அப்துல் மற்றும் கும்க்கிக்கு : எல்லா பதிவும் சும்மா லட்டு மாதிரியே எழுதிக்கினுருக்க முடியாது.. புடிக்கலன்னாலும் பாராட்டி வெப்பீங்களா, பாத்தீங்கல்ல எத்தினி பேற் பாராட்டிருக்காங்கன்னு.. அட போங்கப்பா.!

புதுகை.அப்துல்லா said...
// ச்சின்னப் பையன் said...
அது என்ன வீரபத்ரன் வண்டியா??????

//

ச்சின்னபையன் அண்ணே இந்த கமெண்டை படித்துவிட்டு இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் இன்னும் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. (அந்த விளம்பரத்தை அறியாதவர்களுக்கு உங்க கமெண்ட் புரியாது)/////

ROTFL..! :‍))))

வால்பையன் said...

நான் புத்தக விமர்சனத்தை எதிர்பார்த்து வந்தேன்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கண்ணனைப் பார்த்தேன். “போலாமா.?”//

ரைட் ரைட்
உங்க ஆளு தாமிரபரணி குறுக்காலவே இறங்குற போது நம்ம சென்னை மழை வெள்ளமெல்லாம் எம்மாத்திரம்.
ரைட் ரைட்

Saravana Kumar MSK said...

//மழை நாளில் ஈரக்கைகளுடன் சிகரெட் நனையவிடாமல் புகைப்பது அழகான அனுபவம்.//

அட.. கவிதை.. கவிதையான நிகழ்வு..

Saravana Kumar MSK said...

//கண்ணனைப் பார்த்தேன். “போலாமா.?”//

தம்மடிக்கதானே.. ;)

தாமிரா said...

நன்றி வால்.!
ந‌ன்றி அமிஷு அம்மா.!
நன்றி MSK.!

ஸ்ரீ said...

Unga bike odacha 3vathulaye start aayiduchu. Indha kadha dhaana venaaguradhu :P

மங்களூர் சிவா said...

#/ஒரே நிமிடம்தான். மீண்டும் முயற்சிக்கலாம். முதல் கிக். புகைக்கு பதிலாக மோட்டார் பம்ப் போல சைலன்சரில் இருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. இரண்டாவது கிக். இன்னும் நீர். மூன்றாவது கிக். தோழன் உயிர்த்தான்.\#

good!