Sunday, December 28, 2008

பொய் சொல்லி விளையாடலாம், வாருங்கள்.!

சில பெரிய நிறுவனங்களில் ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் ஊழியர்களுக்கு வருடத்திற்கு ஒன்றிரண்டுமுறை ஏதாவது ஒரு சப்ஜெக்டில் பயிற்சி வகுப்பு நடக்கும். அது டெக்னிகலாகவோ அல்லது மேலாண்மை குறித்தோ அல்லது ஏதோ ஒரு சப்ஜெக்டிலோ இருக்கும். இவை பெரும்பாலும் ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை நடக்கும். எப்படி சமூகத்தில் மக்களை மேல்தட்டு, நடுத்தரவர்க்கம், வறுமைக்கோட்டுக்கு கீழ் என்று பல்வேறாக பிரிக்கிறோமோ அதைப்போலவே நிறுவனங்களிலும் ஊழியர்களை பிரிக்கலாம்.

இந்த மேல்தட்டு ஊழியர்களுக்கு நடக்கும் பயிற்சி வகுப்புகளில் சில சுவாரசியங்கள் உண்டு. சில சமயங்களில் பயிற்சிக்கு வருபவர்கள் பயிற்சியாளர்களைவிடவும் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள், அதிக அனுபவம் இருக்கும், அவர்களை விடவும் உயர்பதவியிலும் இருப்பதுண்டு. இதனால் இவர்களை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்தமுடியாது, அதற்கு தேவையும் இல்லாமல் இவர்களும் ஒழுக்கமாகவே நடந்துகொள்வார்கள். பிரச்சினை என்னவெனில் இவர்கள் அலுவலகத்தில் எந்நேரமும் பரபரப்பாக பிரச்சினைகளுக்கு ஊடே இருப்பவர்கள். இவர்களின் செல்போனை வேறு அணைத்து வைக்கச்சொல்லிவிட்டு காலையிலிருந்து மாலை வரை ஏசி அறையில் ஒரே சேரில் கம்மென்று அசைய விடாமல் இருத்தி வைத்து பாடம் நடத்தினால் எப்படியிருக்கும்? இவர்களுக்கு பிரச்சினைகளின்றி அமைதியாக இருப்பது என்பது அதிர்ச்சியாக இருக்கும். அதிலிருந்து அவர்களை மீட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமாக சொல்லிக் கொடுப்பதுபோல குவிஸ், கேம்ஸ், வீடியோ என அவர்களை ஏமாற்றி நைசாக பாடம் நடத்துவார்கள். இவர்களுக்கு பாடம் நடத்துவதே ஒரு பெரிய மேலாண்மைக்கலை.

குறிப்பாக மதிய இடைவேளையில் ஒரு பிரச்சினை வரும். நன்கு சூப், சிக்கன், ஐஸ்கிரீம் என புல் கட்டு கட்டிவிட்டு வந்து மீண்டும் வகுப்பில் உட்கார்ந்தால் ஒவ்வொருவருக்கும் தூக்கம் அள்ளிக்கொண்டு போகும். அப்போது அவர்களின் கண்கள் மேலே செருகிக்கொண்டு தலை தட்டாமாலை சுற்றுவது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். குர்ர்ர்... கிர்ர்ர்... என்று நமது கார்க்கி போல குறட்டைவிடாத குறையாக இருக்கும். அவர்களை மீண்டும் சப்ஜெக்டுக்குள் கொண்டு வருவதற்கென்றே சில பல சுவாரசியமான விளையாட்டுகளை வைத்திருப்பார்கள் பயிற்சியாளர்கள். அவை சில சமயங்களில் ஆட்டம் பாட்டம் அளவுக்குப்போய்விடும். அதிலிருந்து லைட்டாக ஒரு புதிரையும், ஒரு விளையாட்டையும் இப்போ பார்க்கலாம்.

ஏய்ய்.. இரு, இரு.. இதெல்லாம் எப்பிடி உனக்குத்தெரியும்? நீயும் அப்பிடியான ஒரு ஆளா? என்று கேட்காதீர்கள். நானெல்லாம் கீழ்நடுத்தரவர்க்கம். எங்கள் பயிற்சிகளிலெல்லாம் அரைமணிக்கொரு நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்பார்கள், இம்போசிஷன், ஹோம் வொர்க் என பின்னிவிடுவார்கள். ஸ்கூலில் கூட இப்பிடி ஹோம்வொர்க் பண்ணியதில்லை என்று நினைக்கும் அளவுக்கு ஆக்கிவிடுவார்கள். மேற்கண்ட அனுபவங்கள் எல்லாம் நர்சிம், அப்துல்லா போன்றோர் சொல்லி நான் கேள்விப்பட்டவையே.!

முதலில் புதிர் :
ஓர் பயிற்சி வகுப்பில் சுட்டது இது. கீழ்க்கண்ட முதல் படத்தில் குறிப்பிட்ட‌ அள‌வு செவ்வ‌க‌ப்ப‌குதி மூலைவிட்டம் இணைக்கப்பட்டு அதன் கீழ்ப்பகுதி நான்கு டிசைன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த டிசைன்கள் அப்படியே இரண்டாவது படத்தில் ஜஸ்ட் இடம்மாற்றம்தான் செய்யப்பட்டுள்ளது. ஆனால் என்ன ஆச்சரியம் ஒரு கிரிட் (குட்டிக்கட்டம்) மிச்சமாகிவிட்டதே. எப்படி?


குறிப்பு : சமீபத்தில்தான் இந்த புதிரை நான் அறிந்து ஆச்சரியப்பட்டேன். ஆனால் இது ஒன்றும் புதிய புதிர் அல்ல, தாத்தா காலத்து ஐட்டம் என்றான் ஒரு நண்பன். இதற்கு ஒரு பெயருண்டு, சொன்னால் கூகுளிட்டு தெரிந்துகொள்வீர்கள் என்பதால் அது வேண்டாம். தெரிந்தவர்கள் கம்மென்று அடுத்த விளையாட்டை விளையாடப்போகலாம் வாருங்கள்.

அடுத்து விளையாட்டு :

நான் என்னைப்பற்றி மூன்று அறிக்கைகள் தருவேன். அதில் ஒன்று நிச்சயமாக பொய். மற்ற இரண்டும் நிச்சயமாக உண்மை. பொய் எதுவென நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நம்மைப்பற்றிய சுவாரசியங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பைத்தரும் கேம் இது.

நான் :

1. எனது கவிதைகள் ஒரு பிரபல இதழில் வெளியாயிருக்கின்றன.

2. நான் செய்து கொண்டது காத‌ல் திரும‌ண‌ம் அல்ல‌.

3. முதல்வர் கலைஞர் கருணாநிதியை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.

எந்த வாக்கியம் பொய் எனக் கண்டு பிடியுங்கள், பின்னூட்டமிடுங்கள். இந்தக்கடைசி பகுதியை மட்டும் தொடர் விளையாட்டாக்கி அறிக்கை விட நான் அழைக்கும் அன்பு நண்பர்கள்.. (இந்த டேக் மூன்று மூன்று பேராக போக வேண்டும் என விரும்புகிறேன்)

வடகரை வேலன்
கார்க்கி
நர்சிம்


19 comments:

தாமிரா said...

தொடருக்கு அழைக்கப்பட்டவர்கள் இந்த கடைசி விளையாட்டுப்பகுதியை பதிவாக டெவலப் செய்யமுடியாமல் போனால் பிற பதிவுகளின் பின்னிணைப்பாக வழங்கலாம். புரிந்துணர்வோடு கூடிய ஒத்துழைப்புக்கு நன்றி.

கார்க்கி said...

கடைசி கேள்வி:

மூன்றாவதுதானே பொய்?

அப்புறம் இதே மாதிரி ஒரு கேள்வியை பரிசல் அவர் வீக் எண்ட் புதிரில் கேட்டார்.. ஆனால் லாஜிக்கை சொல்லவில்லை..

SUREஷ் said...

//ஆனால் என்ன ஆச்சரியம் ஒரு கிரிட் (குட்டிக்கட்டம்) மிச்சமாகிவிட்டதே. எப்படி?//


politics.........?

narsim said...

மாட்டிவிட்டீங்களே தல.. ம்.தொடருவோம்

அன்புடன் அருணா said...

//இந்த மேல்தட்டு ஊழியர்களுக்கு நடக்கும் பயிற்சி வகுப்புகளில் சில சுவாரசியங்கள் உண்டு//

சுவாரஸியங்கள் நிறைய உண்டுன்னாலும் பின்னிப் பெடலெடுக்கும் அறுவைகளும் உண்டுங்க.....
அன்புடன் அருணா

சந்தனமுல்லை said...

ஆமா..பயிற்சி வகுப்புகள் இப்படிதான் இருக்கும்..அதுவும் மதிய செஷன் சொல்லவே வேண்டாம்! lol!

அப்புறம் அந்த முக்கோணங்கள் right angle triagle சரியான அளவுகளில் இல்லையோ?!

பொய் எனக்குப் பிடிக்காது..சோ அந்த விளையாட்குக்கு நான் வரலை! lol

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதல்வர் கலைஞர் கருணாநிதியை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.
அந்தப் பொய் இதுவா???????


அவர்களின் கண்கள் மேலே செருகிக்கொண்டு தலை தட்டாமாலை சுற்றுவது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
நம்ம எம்.பிஸ் தூங்குவாங்களே பாராளுமன்றத்தில் அது மாதிரி
பார்க்க நல்லா இருக்கும்.

கார்க்கி said...

யுரேக்கா..யுரேக்கா..

ண்ணா...இந்த முக்கோணத்தின் சாய்வு கோடு, ஒரு நேர்க்கோடு அல்ல.. அது மூன்று புள்ளிகளை இணைக்கிறது.பார்ப்பதற்கு நேராக் தெரிந்தாலும் வளைந்து செல்கிறது.. அந்த மீதம் உள்ள ஒரு பெட்டி முதல் படத்தில் பல பெட்டிகளில் பிரிந்து இருக்கிறது. படத்தை zoom செய்து பார்த்தால் இது புரியும்

அத்திரி said...

என் மர மண்டைக்கு ஏர்ற மாதிரி ஏதாவது சொல்லுங்கண்ணே

வால்பையன் said...

புதிர் நல்லாருக்கு, ஆனா பதில் தான் தெரியல

தாமிரா said...

ஓகே.! இந்தப்பதிவை பீஸாக்கிட்டீங்களா? (ஹிட்ஸ் 100 கூட வர்ல) வட போச்சே.. பெட்ட‌ர் ல‌க் டுமாரோ.!


ந‌ன்றி கார்க்கி.! (தெரிஞ்ச‌ ஆளுங்க‌ ப‌தில் சொல்லாம‌ இருக்கிற‌துதானே? அறிக்கைக்கும் ச‌ரியான‌ விடை. குறிப்பாக‌ புதிருக்கு உங்க‌ள் விடை மிக‌த்தெளிவாக‌ இருந்த‌து. இத‌ன் விடையை சொல்ல‌ ப‌ல‌ரும் முறுக்கு சுற்றுவார்க‌ள் இன்ன‌ர் ஆங்கிள்ஸ்.. அப்பிடி இப்பிடின்னு ஆர‌ம்பிப்பாங்க‌. அது நேர்கோடு அல்ல‌. மூன்று புள்ளிக‌ளை இணைக்கும் கோடு என்ப‌து தெள்ள‌த்தெளிவான‌ விடை. அல்ல‌து ந‌ம‌க்கு முக்கோண‌மாக‌ தெரியும் உருவ‌ம் உண்மையில் முக்கோண‌ம‌ல்ல‌, நாற்க‌ர‌ம் என்று சொன்னாலும் எளிமையாக‌ இருக்கும். சிந்தித்தோருக்கு ந‌ன்றி.)

ந‌ன்றி சுரேஷ்.!
ந‌ன்றி ந‌ர்சிம்.!
ந‌ன்றி அருணா.!
ந‌ன்றி முல்லை.!
ந‌ன்றி அமிஷு அம்மா.!
ந‌ன்றி அத்திரி.!
ந‌ன்றி வால்பைய‌ன்.!

கும்க்கி said...

ஹி...ஹி..யாராச்சும் பதில் சொன்னப்பொறவு தலய காட்லாமேன்னுதான்........

கூட்ஸ் வண்டி said...

ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

SanJaiGan:-Dhi said...

அந்த 3 பேரும் ஒரே வலைபூவில் தான் எழுதுகிறார்களா? எனக்குத் தெரிந்து இது தான் அப்பட்டமான பொய் :))

ரமாக்கா நம்பர் குடுங்க.. எது பொய்னு கண்டுபிடிக்கிறேன்.. :)

தாமிரா said...

நன்றி கும்க்கி.!

குட்ஸ் வண்டி ஒழுங்கா ஓரமா போணும் என்னா., வாழ்த்துகள்.!

நன்றி சஞ்சய்.! (இப்போதுதான் கவனித்தேன், சரி செய்து விடுகிறேன் பாஸ்)

மங்களூர் சிவா said...

/
அவர்களின் கண்கள் மேலே செருகிக்கொண்டு தலை தட்டாமாலை சுற்றுவது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
/

:)))

மங்களூர் சிவா said...

/
கும்க்கி said...

ஹி...ஹி..யாராச்சும் பதில் சொன்னப்பொறவு தலய காட்லாமேன்னுதான்........
/

ரிப்பீட்டு

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம்ம் இந்த மாதிரி விளையாட்டெல்லாம் நெரெய விளையாடியாச்சு - ஆமா - சாப்பிட்டுட்டுத் தூங்கும்போது தான் இது விளையாட முடியும்

தராசு said...

வணக்கம் தாமிரா,

புத்தாண்டுக்கு நாடு கடந்து சென்றதால் (அட நம்ம கேரளத்து மண்ணுக்குத்தானுங்க) வலையுலகுடன் இருந்த தொடர்பு இல்லாமலிருந்தது.

புதிர் மிகவும் அருமை, உங்கள் நண்பர் சொன்னதுபோல் இது பழைய புதிர் தான் என்றாலும் ஒரு முறை தலையை சுற்ற வைக்கும்.

ஒட்டுமொத்தமாக, நன்றிகள், மற்றும் புத்தாண்டு வழ்த்துக்கள்.