Wednesday, December 31, 2008

தொடரும் தாமதம்

நீங்கள் அலுவலகத்துக்கு/ கல்லூரிக்கு தினமும் லேட்டாக செல்கிறீர்களா? இதோ ஒரு மற்றுமொரு லேட் ஸ்டோரி. ஒரு நல்ல மாணவனுக்கு அல்லது ஊழியனுக்கு திறன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு ஒழுக்கமும் முக்கியம்தானே, பிற ஒழுக்கங்களை விட்டு விடுவோம்.. இன்று நாம் பேசவிருக்கும் தாமதமாக செல்தல் என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டால் அது ஒரு மிக முக்கியமான ஒழுக்கம்தானே..

ஒரு மாணவன் வீட்டிலிருந்து 20 கிமீ தூரமுள்ள‌ கல்லூரிக்கு தாமதமாக செல்லக்கூடாது என்பதால் 1 கிமீ தூரத்தில் அறை எடுத்து தங்குகிறான், அன்று அவனது வீட்டிற்கு வெளியேயான வாழ்க்கை துவங்குகிறது. அப்படியும் அவனால் முதல் நாள் முதல் வகுப்பிற்கு நேரத்தோடு செல்ல முடியவில்லை. 20 நிமிடம் தாமதமாகிறது. மறுநாளும் அவ்வாறே. அடுத்தடுத்த நாட்களும் அவ்வாறே. முதலில் வெளியே நிறுத்தப்படுகிறான். பின்னர் பிரின்ஸிபாலைப்பார், அதைச்செய், இதைச்செய் என அலைக்கழிக்கப்படுகிறான். அவன் தாமதமாக வருவது மட்டும் சரியானபாடில்லை. படிப்பில் அவனது திறன் சோதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அவன் தாமதமாக வருவதே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னாட்களில் 5 நிமிடம் தாமதமான மாணவன் வெளியே நிற்க நேர்வதும், அவனுக்கு பின்னே வந்த இவன் உள்ளே வருவதும் சகஜமானது. இது சக மாணவர்கள், ஆசிரியர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது போல வேறெங்கும் நிகழ்ந்திருக்குமா? அப்படி இருப்பினும் அது சரியா?

அவன் பள்ளிப்பருவத்திலும் இதையேதான் செய்துகொண்டிருந்தான். அதற்காகவே பெற்றோரை பலமுறை அழைத்துச்சென்றிருக்கிறான். இப்போதும்நான்கைந்து நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமிருப்பினும், ஒவ்வொரு இடத்திலும் திறனுக்காக ஓரிருவராவது அவனை நினைவுகூர்ந்தாலும் அனைத்து இடங்களிலும் மாற்றமில்லாத அவனது லேட் சாதனை தொடரத்தான் செய்கிறது. மாலை நேரங்களில் நேரம்பாராது உழைப்பதை காரணமாக அவன் சொன்னாலும் அது ஏற்புடையதா?

அவன் எத்தனை முறைகள் ரயிலைத்தவற விட்டிருக்கிறான்? எத்தனை திருமணங்களுக்கு முகூர்த்தம் தவறி சென்றிருக்கிறான்? எத்தனை படங்கள் அவன் உள்வருமுன்னேயே டைட்டில் முடிந்து ஆரம்பித்திருக்கின்றன?

இப்போது, இனி அலுவலகத்துக்கு சீக்கிரமே செல்வது என தீவிரமாக உறுதி ஏற்கிறான் அவன், ஒவ்வொரு வருடமும் போலவே..

19 comments:

மங்களூர் சிவா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அவனுக்கு!!
:)))

மங்களூர் சிவா said...

மீ நாட் த லேட்டு
மீ தி பர்ஸ்ட்டு!!

சந்தனமுல்லை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அந்த அலிபாபாவிற்கு! :-)

லதா said...

தயவு செய்து தலைப்பை மாற்றிவிடுங்களேன்.
:-(

நான் ஆதவன் said...

தலைப்பை மாற்றுங்கள் தாமிரா...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

இவ்வ்ளோ சோம்பேறியா அவன்???
அச்சச்சோ...
அன்புடன் அருணா

Anonymous said...

It is better to be late than to be Mr.Late

நையாண்டி நைனா said...

என்னிடம் முன் அனுமதி பெறாமல் என்னை பற்றி பதிவு போட்ட தாமிரவை வன்மையாக கண்ணடிக்கிறேன்.... அட..ச்..சே, கண்டிக்கிறேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்

இப்படி யோசிங்க பாஸ்


புத்தாண்டு வாழ்த்துக்கள்....

(சீக்கிரம் போக நினைக்கும் உங்கள் முயற்சிக்கு BEST OF LUCK)

இராகவன் நைஜிரியா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தாமிரா..

லேட் என்பது ஒரு வித வியாதிதானா.. புரியவில்லை..

நீங்கள் சொல்வது போல் நிறைய பேர், தாங்கள் லேட்டாக வருவதற்கு சொல்லும் காரணம்,மாலை நேரங்களில் நேரம்பாராது உழைப்பது, பல நிறுவனங்கள் இதை அனுமதிப்பதில்லை.

TVS போன்ற நிறுவனங்களில், அவர்கள் சம்பளத்தை பிடித்து விடுவார்கள்.. அங்கு யாரும் தாமதமாக வருவதில்லை.

கொடுக்கப்படும் மெமோக்களுக்கு அஞ்சாவதர்கள், சம்பள பிடித்தம் செய்யப்படும் போது, சரியாகி விடுகின்றார்கள்.

நம்ம ப்ளாக் பக்கமும் எட்டி பார்த்தீர்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

www.raghavannigeria.blogspot.com

தாமிரா said...

டென்ஷனாக வேண்டாம் நண்பர்களே.! தலைப்பு மிக சாதாரணமாக பதிவுலகத்துக்கு பழக்கமான ஒன்றுதான். விபரீதமாகவெல்லாம் சிந்திக்காதீர்கள்.. ஹிஹி.. அதோடு மாற்றினாலும் தமிழ்மணத்தில் அப்பிடித்தான் வந்து தொலைக்கும்.!

சில சமயங்களில் எளிமையான விஷயங்களுக்கும் அர்த்தம் புரியமாட்டேங்குது. தமிழிலேயே சொல்லிடுங்கண்ணே.. வேலன்ண்ணே.!

அனைவருக்கும் நன்றி. வருடக் கடைசியில் மொக்கை போட்டதுக்காக ஸாரி.. புத்தாண்டில் புதிய சிந்தனைகளோடு சந்திக்கலாம். அனைவருக்கும் வாழ்த்துகள்.!‌

ராம்.CM said...

கண்டிப்பாக இது நீங்கள்தானே?

Saravana Kumar MSK said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா..

Itsdifferent said...

New Year Greetings Thamira. Wish you and your family good luck and success in everything you do.
On the late policy, thats why in most of the US west coast offices (where production is not scheduled by the time or not customer facing, like shops/showrooms, medical offices), there is no fixed time, rather there will be fixed deliverables, and they inject high amount of accountability in individuals. Thaht gives them responsibility as well, making sure that they deliver on their goals.
Something that can be tried in some places. The accountability will become a practice in their life also, making them decent human beings in all aspects of life.

ஸ்ரீமதி said...

//This blog does not allow anonymous comments.//

Why?? :)))))))))

ஸ்ரீமதி said...

பங்சுவாலிடின்னா ஸ்ரீமதி, ஸ்ரீமதின்னா பங்சுவாலிட்டின்னு எங்க ஆபீஸ்ஸே சொல்லும்.. ;)))))))))))

தாமிரா said...

நன்றி ராம்!
நன்றி MSK!
நன்றி Itsdifferent!
நன்றி ஸ்ரீமதி!

எம்.ரிஷான் ஷெரீப் said...
This comment has been removed by the author.
எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் தாமிரா,

இப்பதிவினைப் பார்க்கவும்... :)
//http://blogintamil.blogspot.com/2009/01/blog-post_6945.html

உங்கள் சேவை தொடரட்டும் நண்பரே !