Friday, December 26, 2008

சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம் (நிறைவுப்பகுதி)

‘சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்’ முதல் பகுதியை நான் எழுதினாலும் எழுதினேன், நல்ல பேர் கிடைத்து சில பெரிய மனிதர்களின் (அதாவது டெக்னிகல் பெர்சுங்க) நட்பு கிடைத்தது ஒருபுறமிருக்க அடுத்த பகுதி எப்போ எப்போ என்று ரசிகர் பட்டாளத்தின் அன்புத்தொல்லை தாங்கமுடியவில்லை (நிஜமாங்க). இவனை இப்படியே டெக்னிகல் பாடம் நடத்த வெச்சு மற்ற சப்ஜெக்ட்லயிருந்து ஓரம்கட்டிடலாம்னு ஏதும் எனக்கெதிரா சதி நடக்குதோன்னு வேற சந்தேகமாயிருக்குது. இப்ப கூட பாருங்க மூன்று பகுதின்னு சொல்லிட்டு இரண்டாம் பகுதியையே நிறைவுப்பகுதியா ஆக்கினதுக்கு சண்டைக்கு வந்தாலும் வருவாங்க. நம்ம குறிக்கோள் அதில்லையே.. இப்படியே பத்தி எழுதி.. அப்புறம் சிறுகதை எழுதி.. நாவல் எழுதி.. குறும்படம் எடுத்து.. பெரும்படம் எடுத்து.. அப்புறம் அரசியல்ல இறங்கி.. அடுத்துதான் உங்களுக்கே தெரியுமே.!

சரி, ஆரம்பிச்சாச்சு.. சட்டுபுட்டுனு முடிச்சுடலாம். கொஞ்சம் டெக்னிகலா ஆழமா போகாம இந்த விஷயத்தை அவ்வளவு சீக்கிரம் முடிக்கமுடியாது. ஆகவே இந்தப்பகுதி ட்ரையா இருந்தா நான் பொறுப்பு கிடையாது. கவனமா கூடயே வாங்க, முதல் பகுதியை படிக்காதவங்க இருந்தா போய் படிச்சுட்டு வந்துடுங்க.. இப்போ விஷயத்துக்குள்ள போகலாம்.

சிக்ஸ் சிக்மாவின் பயன் என்ன என்பதை பார்த்தோம். இப்போது அதன் வழிமுறைகளை (கொஞ்சமாக) பார்க்கலாம். சிக்மா என்பது என்ன? அது ஒரு குறியீடு. இதை நாம் கணக்கிட்டு தெரிந்துகொள்ளலாம். பரீட்சையில் நீங்கள் எவ்வளவு மார்க் வாங்கியுள்ளீர்கள் என்று நான் கேட்கிறேன். கூச்சமில்லாவிட்டால் 100க்கு 32 என என்னைப்போல டாண் என பதில் சொல்லிவிடுவீர்கள். அதாவது மார்க் என்பது என்ன? நீங்கள் எழுதின லட்சணத்துக்கு தகுந்தாற்போல வாத்தியார் தரும் மதிப்பு. நன்கு எழுதியிருந்தீர்களானால் நல்ல மார்க் கிடைக்கும். அதைப்போலவே ஒரு செயல் தொடர்ந்து சரியாக நடக்குமானால் சிக்மா எண் கூடிக்கொண்டே போகிறது.

சரி, பரீட்சைக்கு படிப்பது என்றால் என்ன? என்ன முழிக்கிறீர்கள்.? குண்டக்கன்னா குண்டக்க.. மண்டக்கன்னா மண்டக்க.. ‘படிப்பதுன்னா.. படிப்பது!’ என்று வடிவேலு மாதிரி சொல்கிறீர்களா.. அதேதான். ‘சிக்ஸ் சிக்மான்னா.. சிக்ஸ் சிக்மாதான்’ அது ஒரு வழிமுறையியல் (Methodology). 100 மார்க்கு வாங்கு வாங்குன்னு உங்க கணக்கு வாத்தியார் மண்டையிலேயே போட்டிருப்பாரே.. (எல்லா கணக்கு வாத்தியாருமே அப்படித்தான் இருப்பாங்க போல, அதான் எனக்கு எங்க தமிழ் வாத்தியாரை ரொம்ப பிடிக்கும். மார்க்கைப்பற்றி பேசவே மாட்டாரே) ஏன்? அதற்கு மேல் வாங்கமுடியாதுன்னு இப்போ குசும்பன் குசும்பா பதில் சொல்லுவார். அதேதான், அதற்கு மேல் வாங்க முடியாது. அதே போல அதிக பட்ச சிக்மா எண் 6. (இப்போதைக்கு ஆறு. எதிர்காலத்துல 7, 8 என இதை இன்னும் அதிகப்படுத்திவிடுவான்கள் நமது டெக்னிகல் புலிகள். இப்போதே சிக்மா 6ஐத்தாண்டிய செயல்கள் மிகச்சில உள்ளன, அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் நமக்கு) ஒரு செயல் உச்ச பட்ச திறனோட தவறின்றி நடக்கையில் அதன் சிக்மா எண் 6ஐ நோக்கிச்செல்கிறது.

இன்னிக்கு எல்லாத்துறைகளிலும் நடக்கும் செயல்கள் அனைத்தையும் பர்பெக்டாக நடத்தி சிக்மா 6ஐ அடையுங்கள் என்று நம்மையெல்லாம் நமது மானேஜர்கள் புண்ணாக்கிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு மெஷினை இயக்கி பொருட்கள் தயாரிப்பதாகட்டும், ஸாப்ட்வேர் எழுதுவதாகட்டும், கஸ்டமர் கம்ப்ளெயிண்ட் கால் க்ளோஸ் செய்வதாகட்டும், டெலிவரி செய்வதாகட்டும், போக்குவரத்து இயக்கமாகட்டும்.. விதிவிலக்கேயில்லாமல் அனைத்து செயல்களுக்கும் இது பொருந்தும்.

இவ்வாறாக செயல்கள், சிக்மா எண் 6ஐ அடைவதற்கு என்ன செய்யவேண்டும்? சின்னப்பிள்ளைக்கூட சொல்லிவிடும்.. சொல்லுங்க பார்க்கலாம்.. ம்.. அதேதான்.. அதில் நடக்கும் தவறுகளை களையவேண்டும், செயல் இன்னும் முன்னேற்றமடைய என்ன என்ன வழிகள் உள்ளதோ அதை அனைத்தையும் செய்ய வேண்டும். அதே சமயம் செயலை முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று விளைபொருளின் விலையை கூட்டுமளவு அதிக பணம் செலவழியும் காரியங்களைப்பண்ணக்கூடாது. உதாரணத்துக்கு நீங்கள் கொசுவத்தி தயார் பண்ணுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் (நம்ப எல்லோரும் அடிக்கடி பண்ணுவதுதானே). நூறு கொசுவத்திகள் பண்ண ஆயிரம் ரூபாய் உற்பத்திச்செலவு ஆகுதுண்ணு வச்சுக்கலாம். 20% லாபம் வெச்சு 1200 ரூபாய்க்கு விற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். எல்லோரும் உங்களைப்போலவே 100 ரூபாய் முன்னப்பின்ன செய்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் மட்டும் என் செயலை சூப்பராக்குறேன் பார், வட்டக்கொசுவத்தியை உருண்டைக் கொசுவத்தியாக்கி காமிக்கிறேன் எனச் சொல்லிவிட்டு உற்பத்திச்செலவை 1000லிருந்து 990ஆக குறைப்பதற்கு பதிலாக 2000 ரூபாயாக ஆக்கிவிட்டீர்கள் என்றால் 2400 ரூபாய்க்கு வாங்க ஆளிருக்காது, போண்டியாயிருவீங்க.. அம்புட்டுதான்.!

இப்படியாக உங்கள் செயல்களை சரியான முறையில் ஆய்ந்து அதை முன்னேற்ற உதவும் வழிமுறைகளை சொல்லித்தருவதே ‘சிக்ஸ் சிக்மா வழிமுறையியல்’ (Six sigma methodology) எனப்படுகிறது. அது ஒன்றும் பெரிய வித்தையெல்லாம் இல்லை. எல்லோரும் பெரும்பாலும் ஏற்கனவே வெவ்வேறான இடங்களில் படித்த அல்லது தெரிந்த அல்லது செய்துகொண்டுள்ள Process study, Statistics tools, Probability, Cause & effect, Continues improvement, FMEA, 5S, கழுத, குருத.. இவையெல்லாமும்தான். என்ன ஒண்ணு எல்லாத்தையும் எங்கே எப்போ எப்படி பயன்படுத்துறதுங்கறதுதான் விஷயமே.

ஒரு மாசமா ஆக்சிலேட்டரை விட்டா எஞ்சின் நின்று போய் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். சிக்னலில் அணைந்து போய்விடக்கூடாதே என ஆக்சிலேட்டரை சும்மானாச்சுக்கும் முறுக்கி உறுமிக்கொண்டிருப்பீர்கள். மெக்கானிக்கிடம் கொண்டுபோனால் ஒரு திருப்புளியைக்கொண்டு அரை நிமிடத்தில் ஒரு ஸ்க்ரூவை முறுக்கி சரிசெய்துவிட்டு 50 ரூபாய் கேட்பார். இந்த குட்டி ஸ்க்ரூவை முறுக்கியதற்கு 50 ரூபாயா என நீங்களும் முறுக்கிக்கொள்வீர்கள். அவரிடம் கேட்டால் ஸ்க்ரூவை முறுக்கியதற்கு 1 ரூபாய்தான், எங்கே பிரச்சினை எனவும் அதை எப்படி சரிசெய்வது எனவும் நான் தெரிந்துவைத்திருப்பதற்குத்தான் அந்த மீதி 49 ரூபாய் என்பார்.

சரி, சரி.. குட்டிக்கதையெல்லாம் போதும், ஒரே ஒரு சந்தேகம்.! எல்லாம் புரிஞ்சுது.. கடைசி வரைக்கும் ஒரு செயலின் தற்போதைய சிக்மா எண்ணை கணக்கிடுவது எப்படி என்று சொல்லவேயில்லையே...

ஆங்.. அஸ்க்கு புஸ்க்கு.!

30 comments:

வால்பையன் said...

நான் தான் பர்ஸ்டா?

வால்பையன் said...

சிக்ஸ் சிக்மா நல்லாதான் சிக்குன்னு இருக்கு!

வால்பையன் said...

முடிக்க வேண்டாம் சில உதாரணங்களுடன் தொடரவும்,

என்னை போல் மரமண்டைகளுக்கு அப்பொழுது தான் புரியும்

A N A N T H E N said...
This comment has been removed by the author.
A N A N T H E N said...

தலைப்பே கிக்கா இருக்கு, கெக்கபுக்க
படிச்சு நாளைக்கு பின்னூட்டம் இடுறேன்

Anonymous said...

தாமிரா,

நல்லாத்தானே எழுதுறிங்க? அப்புறமென்ன ட்ரையா இருக்கும் கிரேவியா இருக்கும்னு?


//அப்புறம் அரசியல்ல இறங்கி.. அடுத்துதான் உங்களுக்கே தெரியுமே.!//

கவலைப்படாதீங்க 2051 ல நீங்கதான் முதலமைச்சர்.

narsim said...

// வால்பையன் said...
முடிக்க வேண்டாம் சில உதாரணங்களுடன் தொடரவும்,

என்னை போல் மரமண்டைகளுக்கு அப்பொழுது தான் புரியும்
//

வழிமொழிகிறேன்..

Mahesh said...

அண்ணே... சூப்பரா போகுது... தொடர்ந்து எழுதுங்க...

6 சிக்மாவில் 99.9997% ரிசல்ட் என்பதைய்ம் சொல்லியிருக்கலாமே...

சந்தனமுல்லை said...

டிரையால்லாம் இல்லை...ஏதோ கொஞ்சமா புரிஞ்சுக்க முடிஞ்சது..(என்ன புரிஞ்சதுன்னு கேக்கக் கூடாது!lol)
//நீங்கள் கொசுவத்தி தயார் பண்ணுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் (நம்ப எல்லோரும் அடிக்கடி பண்ணுவதுதானே).

:-))

ambi said...

ரொம்ப நல்லா, எளிமையா இருக்கு. முடிக்க வேண்டாம் சில உதாரணங்களுடன் தொடரவும்.

ஆயில்யன் said...

//சிக்மா எண்ணை கணக்கிடுவது எப்படி என்று சொல்லவேயில்லையே...

ஆங்.. அஸ்க்கு புஸ்க்கு.!//


கண்ட்னியூ பண்ணுங்க புதிதாய் நிறைய தெரிந்துக்கொள்ள காத்திருக்கிறேன்!

ஆயில்யன் said...

//Mahesh said...
அண்ணே... சூப்பரா போகுது... தொடர்ந்து எழுதுங்க...

6 சிக்மாவில் 99.9997% ரிசல்ட் என்பதைய்ம் சொல்லியிருக்கலாமே...
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

தாமிரா said...

வாங்க வால் பையன், நன்றி. தொடரலாமா என்பதை வரவேற்பைப் பொறுத்துதான் முடிவுசெய்ய வேண்டும்.

நன்றி ஆனந்தன்.!

நன்றி வேலன்.! (கவலைப்படாதீங்க 2051 ல நீங்கதான் முதலமைச்சர்.// சந்தோஷம் அண்ணாச்சி.!)

narsim said...
என்னை போல் மரமண்டைகளுக்கு அப்பொழுது தான் புரியும்
// வழிமொழிகிறேன்..// யோவ் இது கொஞ்ச‌ம் ஓவ‌ரா தெரிய‌ல‌.?

Mahesh said...
6 சிக்மாவில் 99.9997% ரிசல்ட் என்பதைய்ம் சொல்லியிருக்கலாமே...// ரெண்டு இட‌த்துல‌ லிங்க் கொடுத்தும் முத‌ல் ப‌திவை ப‌டிக்காம‌ க‌மென்ட் போடுற‌வ‌ங்க‌ளை என்ன‌ ப‌ண்ண‌லாம்னு ரூம்ல‌ ஒக்காந்து யோசிச்சுக்கிட்டு இருக்கேன். இந்த‌ ல‌ட்ச‌ண‌த்துல‌ ஆயில்ய‌ன் இதை ரிப்பீட்டு வேற‌ ப‌ண்ணியிருக்கார்.

நன்றி அம்பி.!

நன்றி ஆயில்ய‌ன்.!

Mahesh said...

ஹி ஹி ஆம்மா... அது... முதல் பகுதி படிச்சு ரொம்ப நாள் ஆச்சா? போட்டிங்களா போடலியான்னு பாக்கல...

ரூம் போட்டு யோசிச்சீங்களே? என்ன பண்ணலாம்னு ஐடியா கிடைச்சுதா? :)))

இராகவன் நைஜிரியா said...

//Mahesh said...
6 சிக்மாவில் 99.9997% ரிசல்ட் என்பதைய்ம் சொல்லியிருக்கலாமே...// ரெண்டு இட‌த்துல‌ லிங்க் கொடுத்தும் முத‌ல் ப‌திவை ப‌டிக்காம‌ க‌மென்ட் போடுற‌வ‌ங்க‌ளை என்ன‌ ப‌ண்ண‌லாம்னு ரூம்ல‌ ஒக்காந்து யோசிச்சுக்கிட்டு இருக்கேன். இந்த‌ ல‌ட்ச‌ண‌த்துல‌ ஆயில்ய‌ன் இதை ரிப்பீட்டு வேற‌ ப‌ண்ணியிருக்கார். //

இதுக்கும் சிக்ஸ் சிக்மா டூல்ஸ் உபயோகிக முடியுமான்னு நான் யோசனைப் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

கார்க்கி said...

அண்ணே தமிலிஷ் வோட்ட பார்த்திங்க இல்ல? சும்மா தகிரியமா அடிச்சு ஆடுங்க,,இல்லைன்னா அடிச்சு ஆட வச்சிட போறாங்க..

தராசு said...

தல,

இந்த ஆறு நக்மாவும் சாரி சாரி சிக்மாவும் முடிச்சிட்டு, அப்படியே அந்த TPM பத்தொயும் கொஞ்சம் சொல்லிடுங்களேன்,

உங்களுக்கு புண்ணியமா போகும்.

PoornimaSaran said...

:)

RAMASUBRAMANIA SHARMA said...

"PURINATHA MATHIRIUM IRUKKIRATHUS"...AND THE REVERSE IS ALSO TRUE....HOWEVER, NALLA PATHIVU...

கும்க்கி said...

:-))

ஈர வெங்காயம் said...

இவ்ளோ நாளா நல்லாத்தானே இருந்தீங்க...!!
ஏன் இப்படி..???

அடுத்து 5எஸ் கோட்பாடுகளை எழுதுங்களேன்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

ட்ரையா இல்ல, நல்லா நக்கலும் நையாண்டியுமா போட்டுதானே கிண்டியிருக்கீங்க, உப்மாவை ச்சே சிக்மாவை.

ஏன் முடிச்சிட்டீங்க, தொடருங்க. அடுத்த ஏதாவது குவாலிட்டி ஸ்டாண்டர்டை.

தாமிரா said...

நன்றி இராகவ‌ன்.!
நன்றி கார்க்கி.! (தமிழிஷ்ல ஹிட்டானா தமிழ்மணத்துல காத்துவாங்கிடுதே, கூட்டமே இல்லையே.! பார்க்கலாம்)

நன்றி தராசு.! (பின்னாடி பார்க்கலாம்.. பின்னாடி பார்க்கலாம்..)

நன்றி பூர்ணிமா.!
நன்றி ஷர்மா.!
நன்றி கும்க்கி.!
நன்றி ஆனியன்.!
ந‌ன்றி அமிஷு அம்மா.!

கே.ரவிஷங்கர் said...
This comment has been removed by the author.
கே.ரவிஷங்கர் said...

தாமிரா,

இந்த TQMமில் வரும் ஒரு கான்செப்ட் (Why why analysis)பற்றி நான் முன்னமே எழுதியுள்ளேன்.
படித்துக் கருத்துச் சொல்லவும்.

http://raviaditya.blogspot.com/search/label/கட்டுரை

கட்டுரைத் தலைப்பு

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

Syam said...

intro about six sigma - superma :-)

Indian said...

Good. Keep going.

Anonymous said...

Hi ,
Your writings are excellent.
I am regularly reading your articles.
Simply superb.

Would like to be a friend of you.

தாமிரா said...

நன்றி ரவிஷங்கர்.!
நன்றி ஷ்யாம்.!
நன்றி இன்டியன்.!
நன்றி எழினி.! (உங்கள் பெயர் அழகாக உள்ளது. நீங்கள் ஆணா பெண்ணா.? அப்போதுதான் நட்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என அறிவிக்க முடியும். எதற்கும் தனி மெயிலுக்கு வரவும், முகவரி ப்ரொபைலில் உள்ளது.)

மங்களூர் சிவா said...

30