Saturday, December 13, 2008

இளமைத்துள்ளலின் இலக்கணம்..

எத்தனையோ ரசனையான ஜோடிகளை காலங்காலமாக பார்த்துவந்திருக்கிறோம். சிவாஜி, பத்மினியில் தொடங்கி விஜய், திரிஷா வரையில் ரசித்திருக்கிறோம். நேற்று டிவியில் ஒரு காட்சியைக்காண நேர்ந்தது. முழு படம் கூட இல்லை, ஒருசில காட்சிகளே ஆனாலும் அத்தனை ஜோடிகளையும் பின்னுக்குத் தள்ளி காலத்தை வென்றார்கள் அவர்கள்.

இளமைத்துள்ளலின் விளக்கமாக அந்தக்காட்சிகள் என்றென்றும் கார்த்திக்கை நிலைநிறுத்தி வைத்திருக்கும். ஒரு தலைமுறை இளைஞர் கூட்டத்தையே கட்டிப்போட்ட கச்சிதம். கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்கிறார்களே அதுமட்டுமில்லாமல் பிஸிக்ஸ், பயாலஜி உட்பட அனைத்தும் நிரம்பி வழிய.. அந்தக்காட்சிகளில் இருந்த‌தைப்போன்ற உயிரோட்டம் பிரிதொரு படத்தில் நாம் கண்டதில்லை, இனியும் காண்போமா என்பதும் சந்தேகமே.


அந்த ஜோடி: கார்த்திக், ரேவதி
படம் : மௌனராகம்
இயக்குனர் : மணிரத்னம்

டிஸ்கி : இன்னும் அலுவலகத்தில் புயல் ஓயவில்லை ஆதலால் லைட் பதிவுகள் தொடர்கின்றன. ஆதரவு தொடரட்டும்.

14 comments:

கார்க்கி said...

அண்ணே திட்டாதீங்க.. அப்படியே ஒரு வீடியோ போட்டா நல்லாயிருக்குமோ????????????????http://in.youtube.com/watch?v=VrRiCWZhXng

http://in.youtube.com/watch?v=ibiiglNYR44

ராம்.CM said...

நானும் யோசித்துப்பார்த்தேன்.வேறு ஜோடி கிடைக்கவில்லை.. உங்களுக்குத்தான் ஓட்டு.

சந்தனமுல்லை said...

ம்ம்..ஆமா, அந்த பஸ் சீன், காலேஜ் சீன் எல்லாம் நினைவுப் படுத்திட்டீங்க! அப்புறம், அந்தப் பெப்பி ம்யூசிக்!!

பாபு said...

வேலை பளு அப்படின்னு சொல்லிக்கிட்டு, அதுக்கு நடுவுலேயும் ஒரு பதிவு போடுறீங்களே, எப்படி இதெல்லாம்?

புதுகைத் தென்றல் said...

இந்த ஜோடிதான் சூப்பர.

சந்தரமொளலி மிஸ்டர் சந்தரமொளிலி சீன் ஞாபகம் இருக்கா?

அருமையான ஜோடி ரேவதி, கார்திக் தான்

அத்திரி said...

//வேலை பளு அப்படின்னு சொல்லிக்கிட்டு, அதுக்கு நடுவுலேயும் ஒரு பதிவு போடுறீங்களே, எப்படி இதெல்லாம்?//

ரிப்பீட்டேய்

அண்ணச்சி சும்மா பில்டப் கொடுக்கிறார் போல

அத்திரி said...

//இன்னும் அலுவலகத்தில் புயல் ஓயவில்லை ஆதலால் லைட் பதிவுகள் தொடர்கின்றன. ஆதரவு தொடரட்டும்.//


எதுக்கு தாமிரா இவ்ளோ பில்டப்???

யப்பா பதிவ சூடாக்கிருங்கப்பா?

அப்பதான் அண்ணாச்சி நிம்மதியா வேலை பாப்பார்.

அத்திரி said...

மலரும் நினைவுகளா?

அத்திரி said...

இந்த படத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் உண்டா

விஜய் ஆனந்த் said...

:-)))...

Shakthiprabha said...

ஹ்ம்ம்ம் கார்த்திக்கின் smartnessக்கு ரேவதி :sigh:

கதை வசனத்தில் சொட்டும் romanceல் ஒளிந்து கொண்டு ரேவதி பரிசி தட்டிப்போகிறார். :)

ரேவதியை விட அதிகம் இளமைத்துள்ளல் இருந்த நடிகைகளுக்கு சரியான கதை வசன வாய்ப்பு கிட்டவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

தாமிரா said...

நன்றி கார்க்கி.! (விடியோஸ்க்கு ஸ்பெஷல் நன்றி)

நன்றி ராம்.!
நன்றி முல்லை.!
நன்றி பாபு.!
நன்றி தென்றல்.!
நன்றி அத்திரி.!
நன்றி விஜய்.!
நன்றி பிரபா.!

பொடியன்-|-SanJai said...

ஓயக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்.. :))

லைட் பதிவுகள் தான் சீக்கிறம் அல்லது முழுசா படிக்க முடியுது.. :)

தாமிரா said...

இனிமே வாணா குட்டிப்ப‌திவுக‌ளா போடுறேன். அதுக்காக‌ பிர‌ச்சினை ஓய‌க்கூடாது என‌ சாப‌ம் உடாதீங்க‌ த‌ல.. டார்ச்ச‌ர் தாங்க‌ முடிய‌ல்ல‌.!