Monday, January 5, 2009

தமிழ்மணத்திற்கு ஒரு (ஜாலி)கண்டனம்!

தமிழ்மணம் விருதுகள் 2008 அறிவித்தவுடன் ஒரே குதூகலமாகி விட்டேன். பின்னே? எப்படியும் இந்த பதினைந்து நிமிட புகழை மேலும் ஒரு ஐந்து நிமிடம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பல்லவா? அதெப்படி விடமுடியும்? எப்படியும் இப்போதே பத்திரிகை வரை போய்விட்ட பதிவர்கள் இதில் போட்டியிட வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான் (லக்கி, பரிசல், நர்சிம் கவனிக்கவும்). மேலும் மூத்த பதிவர்களும் குட்டி பதிவர்களிடம் தோற்பது என்ற பயம் காரணமாக போட்டியை நிராகரிக்க வாய்ப்புள்ளது. பிறகு நமது பிரதான சப்ஜெக்ட்டில் போட்டி வேறு குறைவு என்பதால் எப்படியும் குழம்பிய குட்டையில் குறைந்தபட்சம் மூன்று பரிசுகளையாவது வென்றிடலாம் என திட்டமிட்டு வைத்திருந்தேன். பரிந்துரைக்கான அறிவிப்பு வெளியான உடனேயே இணைப்புக்கான மடலுக்காக காத்திருந்தேன்.

என‌க்கும் இதுபோன்ற‌ டெக்னிக‌ல் விஷ‌ய‌ங்க‌ளுக்கும் கொஞ்ச‌ம் ல‌டாய் இருப்ப‌தால் மெயில் வ‌ருமா என்று ச‌ந்தேக‌மாக‌ இருந்த‌து. ஏனெனில் நெட்டில் ர‌யில் டிக்கெட் புக் செய்யும் போது, கிரெடிட் கார்ட் எண் கொடுத்து எல்லாம் ச‌ரிபார்க்க‌ப்ப‌ட்டு டிக்கெட் வ‌ரும் நேர‌மாக‌ பார்த்து, ஒன்று "Internet Explorer can't find the webpage" என்று ஸ்கிரீனில் வ‌ரும். அல்ல‌து திகில் ப‌ட‌ம் பார்ப்ப‌து போல‌ விநாடிக‌ள் நிமிட‌ங்க‌ளாகி ம‌ணிக்கண‌க்காகிவிடுமோ என்று ப‌ய‌ந்துகொண்டே ஸ்கிரீனில் மணல் கடியாரத்தை பார்த்துக்கொண்டிருக்க‌ நேரிடும். நமது அதிர்ஷ்டத்தைப்பற்றிதான் உங்களுக்குத் தெரியுமே..

தமிழ்மணத்தை பொறுத்தவரை என்று எடுத்துக்கொண்டாலும் கூட ப‌ல‌ வார‌ங்க‌ள் முய‌ன்றும் த‌மிழ்ம‌ண‌த்தில் என் வ‌லைப்பூவை வ‌ர‌வைக்க‌முடியாம‌ல் அவ‌ஸ்தைப்ப‌ட்டுக்கொண்டிருந்தேன். பிற‌கு ஒருநாள் திடீரென தேவதை நான்கு கோடாரிகளுடன் தோன்றியது போல தமிழ்மணம் ஏழு டூல்பார்களுடன் என் ப‌திவில் தோன்றியது. அதைப்போக்க‌ ப‌ல‌ அறிஞ‌ர்க‌ளை தேட‌ வேண்டிவ‌ந்த‌து. ஆனால் நான் பயந்தது போல அப்ப‌டியெல்லாம் சோதிக்காம‌ல் ப‌ரிந்துரை மெயில் உட‌னேயே வ‌ந்துவிட்ட‌து.

அப்புற‌ம்தான் தெரிந்த‌து அந்த‌ அதிர்ச்சித்த‌க‌வ‌ல். நான் மிக‌வும் எதிர்நோக்கிய‌ "மொக்கைக‌ள், பொலம்பல்கள், ப‌திவெதிர் ப‌திவுக‌ள்" என்ற‌ பிரிவு இல்லாத‌தைக்க‌ண்டு அதிர்ச்சியுற்றேன். இர‌ண்டாவதும், தலையாயதுமான‌ "இல்ல‌ற‌ அனுப‌வ‌ங்க‌ள், த‌ங்க‌ம‌ணிக‌ள்/ர‌மாக்க‌ள் நினைவோடைக‌ள்" என்ற‌ த‌லைப்புமில்லாத‌து க‌ண்டு வேத‌னையுற்றேன். அய்யகோ.. இது என்ன சோதனை? நான் எந்த‌ பிரிவில் என‌து ப‌டைப்புக‌ளை போட்டிக்கு அனுப்புவேன்? பெரிய‌ண்ண‌ன் பினாத்த‌ல் சுரேஷ், அண்ண‌ன் ச்சின்ன‌ப்பைய‌ன், பெரிய‌க்கா புதுகைத்தென்ற‌ல் ஆகியோர் அனைவ‌ரும் எந்த‌ப்பிரிவுக‌ளில் போட்டியிடுவார்க‌ள்? அவர்களும் என்னைப்போல எந்த அளவு வேதனைக்குள்ளாயிருப்பார்கள் என புரிந்தது. சரி குறைந்த பட்சம் நமது சிறந்த படைப்புகளான‌ சிறுகதை* அல்லது காதலை பங்குபெறச்செய்யலாம் எனில் 01.11.08க்கு பிந்தைய படைப்புகள் ஏற்கப்படமாட்டாது என அறிவித்து தமிழ்மணம் சதிசெய்துவிட்டது. அதெப்படி இரண்டு மாதங்கள் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான படைப்புகளை போட்டியில் ஏற்றுக்கொள்ளாமல் போட்டித்தலைப்பை "விருதுகள் 2008" என்று வைக்கமுடியும்? சிந்திப்பார் இல்லையா?

நான் பரிசை வெல்லக்கூடாது என்ற எனக்கெதிரான தமிழ்மணத்தின் சதி உங்களுக்கெல்லாம் இந்நேரம் விளங்கியிருக்கும். முதலில் போட்டியை ப‌கிஷ்க‌ரித்துவிட‌லாம் என‌ எண்ணி தொட‌ர்ந்து வாச‌க‌ர்க‌ளையும், த‌மிழ்ம‌ண‌த்தையும் ப‌ழிவாங்க‌ முடிவு செய்து"அர‌சிய‌ல்/ச‌மூக‌ம்" ம‌ற்றும் "சுய‌தேட‌ல்/ப‌குத்த‌றிவு" போன்ற‌ ப‌குதிக‌ளிலேயே என‌து த‌ங்க‌ம‌ணி சிந்த‌னைக‌ளை வைத்துள்ளேன். அந்த‌ந்த‌ பிரிவுக‌ளிலேயே அதிக‌ வாக்க‌ளித்து நிறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவ‌ற்றை வெற்றி பெறச்செய்து என‌க்கெதிரான‌ ச‌தியை வேறோடு முறிய‌டிக்க‌ வேண்டுமாய் உங்க‌ளை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் நாட்களை மறவாதீர். ந‌ன்றி, வ‌ண‌க்க‌ம்.! அடுத்து அண்ண‌ன் வால்பையன் அவ‌ர்க‌ள் பிர‌ச்சார‌த்தை தொட‌ர்வார்க‌ள்.


*பின்குறிப்பு : முந்தைய‌ ப‌திவான‌ க‌ற்ப‌க‌ம் என்ற எனது இரண்டாவது சிறுக‌தை என‌து ப‌திவுக‌ளிலேயே மிக‌ அதிக‌ வ‌ர‌வேற்பைப் பெற்ற‌ ஒன்றாகும். இதுவ‌ரை ஞாயிற்றுக்கிழ‌மை ஒரு மொக்கைப்ப‌திவு போட்டால் கூட‌ குறைந்த‌ப‌ட்ச‌ம் 300 ஹிட்ஸ் பெற்ற‌ நான் முத‌ல் முறையாக‌ வெள்ளிக்கிழ‌மை வெளியிட்டும் 80 ஹிட்ஸ் கூட‌ பெற‌முடியாம‌ல் சாத‌னை நிக‌ழ்த்தியுள்ளேன். இத‌ன் மூல‌ம் க‌தை எழுதுவ‌த‌ற்கு என்னை எந்தளவுக்கு‌ நீங்கள் ஊக்குவிக்கிறீர்க‌ள் என்ப‌தை அறிய‌முடிகிற‌து.


26 comments:

கார்க்கி said...

தமிழ்மணத்துல வர்றதுக்கு முன்னாடியே வந்துட்டேன் பாருங்க‌

கார்க்கி said...

// வெள்ளிக்கிழ‌மை வெளியிட்டும் 80 ஹிட்ஸ் கூட‌ பெற‌முடியாம‌ல் சாத‌னை நிக‌ழ்த்தியுள்ளேன். இத‌ன் மூல‌ம் க‌தை எழுதுவ‌த‌ற்கு என்னை எந்தளவுக்கு‌ நீங்கள் ஊக்குவிக்கிறீர்க‌ள் என்ப‌தை அறிய‌முடிகிற‌து.//

அப்ப்டியெல்லாம் இல்லை சகா.. போன வாரம் முழுவதுமே பதிவுலகம் டல்.. என்னுடைய 'புது தேசம் உருவாகிறது' வெறும் 200 ஹிட்ஸ் தான் பெற்றது.. ஆனால் சூடாகிவிட்டது.. எல்லோர் கடையும் ஒரு வாரமாக டல் தான்..

நட்புடன் said...

\\”தமிழ்மணத்திற்கு ஒரு (ஜாலி)கண்டனம்!"\\

இப்பவே நம்மளது வர மாட்டேங்குது இப்படியெல்லாம் கண்டனம் விட்டா வருமோ ...

வால்பையன் said...

எனக்கும் அந்த மெயில் வந்தது!
எனது பழைய இடுக்குகளை நானே மறுமுறை படித்து பார்த்த போது வாந்தி வந்து விட்டது, அதனால் போட்டியில் கலந்து கொள்ளவில்லை,


உங்களை போல் பெரிய தலைகள் இருக்கும் போது வாலாடக் கூடாது,


(பிரச்சாரதிற்கு பணமுடிப்பு உண்டா)

புதுகைத் தென்றல் said...

பெரிய‌க்கா புதுகைத்தென்ற‌ல் ஆகியோர் அனைவ‌ரும் எந்த‌ப்பிரிவுக‌ளில் போட்டியிடுவார்க‌ள்? //

ஹா ஹா. நாங்க போட்டில குதிச்சாச்சு. பயண அனுபவம் பகுதில வர்றோம்ல :))(சும்மா தங்கமணிகளை திட்டி மட்டும் பதிவு போடக்கூடாதுன்னு இதுக்குத்தான் சொல்வது.)

இராகவன் நைஜிரியா said...

Internet connection எல்லா இடங்களிலும் பிரச்சினை என நினைக்கின்றேன். எனக்கு 2 நாளாக சாவடிச்சிட்டு இருக்கு. இந்தியாவில் உள்ள நண்பர்கள் பலரும் பிரச்சினை என்றே சொன்னார்கள்.

அதனால்தான் ஹிட்ஸ் குறைந்திருக்கும். எங்கள் தங்க தாமிராவை நாங்கள் மறப்போமா?

இளைய பல்லவன் said...

போட்டியில் கலந்து கொள்ளனும் வெற்றில்லாம் தேவையில்லைனுதான் நானும் நெனைக்கிறேன். ஆனா லிங்கே வரலையே.:(((

புதுகை.அப்துல்லா said...

பெரியண்ணன் பினாத்தலார், அண்ணன் ச்சின்னப்பையன், அக்கா தென்றலோடு தம்பியான என்னையும் சேர்த்துக்கங்க :)

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...
எனக்கும் அந்த மெயில் வந்தது!
எனது பழைய இடுக்குகளை நானே மறுமுறை படித்து பார்த்த போது வாந்தி வந்து விட்டது, அதனால் போட்டியில் கலந்து கொள்ளவில்லை,


உங்களை போல் பெரிய தலைகள் இருக்கும் போது வாலாடக் கூடாது,


(பிரச்சாரதிற்கு பணமுடிப்பு உண்டா)//

பிரச்சாரத்திற்கு பணமுடிப்பு எதாவது இருந்தா சொல்லுங்கப்பு, நாங்களும் வந்திடரோம்..

பாபு said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Mahesh said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

அதே போல நான் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துங்கள் :)))

நீங்க ஜெயிச்சா என்னா நான் ஜெயிச்சா என்ன நம்ம நண்பர்கள் ஜெயிச்சா என்ன ....

கும்க்கி said...

ஹி...ஹி.
(நமக்கு சம்மந்தமில்லீங்னா :-)))

கும்க்கி said...

Mahesh said...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

அதே போல நான் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துங்கள் :)))

நீங்க ஜெயிச்சா என்னா நான் ஜெயிச்சா என்ன நம்ம நண்பர்கள் ஜெயிச்சா என்ன ....

இதுதான்...இதேதான்....இங்கதான் நிக்கறாரு சிங்கை சிங்கம்.

சந்தனமுல்லை said...

//நீங்க ஜெயிச்சா என்னா நான் ஜெயிச்சா என்ன நம்ம நண்பர்கள் ஜெயிச்சா என்ன ....//

அதானே!!

கபீஷ் said...

பினாத்த‌ல் சுரேஷ், didnt write only about thangmani topic. He is a all rounder :-):-)

Anonymous said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் தாமிரா.

உங்களுக்குக் கொடுக்கலைன்னா அப்புறம் தமிழ்மண அறிவிப்புக்கெல்லாம் எதிர்ப் பதிவு எழுதுவீங்கன்னு அவங்களுக்குத் தெரியும். அதுக்காகவாது உங்களுக்குக் கொடுப்பாங்க.

உஸ அப்பா.. எப்படியெல்லாம் உங்களத் தேத்த வேண்டியிருக்கு.

மங்களூர் சிவா said...

நடத்துங்க நடத்துங்க!!

தாமிரா said...

நன்றி கார்க்கி.! (வெறும் 200 ஹிட்ஸ் தான் பெற்றது.. :(( தொடர்ந்து லீவு வந்ததால் இருக்குமோ?)

நன்றி நட்புடன்.!

நன்றி வால்பையன்.! (உங்களை போல் பெரிய தலைகள் இருக்கும் போது வாலாடக் கூடாது// தேவைதான் எனக்கு)

நன்றி தென்றல்.! (ஊருக்கு போய் திரும்பியாச்சா?)

நன்றி ராகவன்.! (எங்கள் தங்க தாமிராவை நாங்கள் மறப்போமா?// புல்லரிக்குதுங்க)

நன்றி பல்லவன்.! (என் பதிவுக்கு தவறாமல் வந்தால் லிங்க் உடனே கிடைக்குதாம்)

நன்றி அப்துல்.! (ஒரு தங்கமணி பதிவுகூட‌ போடாத ஆட்களை எப்படி சேர்த்துக்கொள்ளமுடியும். ரிஜெக்டட்)

நன்றி பாபு.!

நன்றி மகேஷ்.! (அதே போல நான் போட்டியில் வெற்றி பெற எனக்கே வாழ்த்துக்கள் :)))// நமக்கு நாமே.. வாத்துகள்.! ஐ லைக் இட்.!)

நன்றி கும்க்கி.!

நன்றி முல்லை.!

நன்றி கபீஷ்.! (அரசியலா? ஐயா கபீஷ் அவர்களே, நான் மிக மதிக்கும் பதிவர்களையே இவ்வாறான கமென்டுகளுக்கு பயன்படுத்துகிறேன். நகைப்புக்காகவே சுரேஷின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுரேஷ் ஆல்ரவுண்டர் என்பது அனைவரும் அறிந்ததே! ஆமாம், ரொம்ப நாளா ஆளைக்காணோமே, ஏதாவது கட்சியில் சேர்ந்துவிட்டீர்களா?)

நன்றி வேலன்.! (தேத்துங்கண்ணே, தேத்துங்க.. நம்ம்பி..யிருக்கிறோமில்ல)

நன்றி மங்களூர்.!

கும்க்கி said...

வர வர நம்ம கண்டுகிறமாட்டேங்கிறீங்க....
செல்ல எடுத்தேன்னா...உங்க காதுல புகை வர்ரத யாரலும் தடுக்க முடியாது..ஆமா.சொல்லிபுட்டேன்.

கபீஷ் said...
This comment has been removed by the author.
கபீஷ் said...
This comment has been removed by the author.
Saravana Kumar MSK said...

போன வாரம் முழுதும் இண்டர்ணட் பிரச்சனை.. மற்றும் விடுமுறை காலம்.. மற்றும் அலுவலக பணி சுமை..

இதனால்தான் போன வாரம் முழுதும் பதிவுலகமே செம டல்.. நான் கூட வரல..

Saravana Kumar MSK said...

//"அர‌சிய‌ல்/ச‌மூக‌ம்" ம‌ற்றும் "சுய‌தேட‌ல்/ப‌குத்த‌றிவு" போன்ற‌ ப‌குதிக‌ளிலேயே என‌து த‌ங்க‌ம‌ணி சிந்த‌னைக‌ளை வைத்துள்ளேன். //

அட்டகாசம்..

தாமிரா said...

மன்னிச்சுங்கங்ண்ணா! அதுக்காக போன்லாம் பண்றேன்னு மெறட்டுறீங்களே.. நாயமா இது?

தாமிரா said...

Saravana Kumar MSK said...
//"அர‌சிய‌ல்/ச‌மூக‌ம்" ம‌ற்றும் "சுய‌தேட‌ல்/ப‌குத்த‌றிவு" போன்ற‌ ப‌குதிக‌ளிலேயே என‌து த‌ங்க‌ம‌ணி சிந்த‌னைக‌ளை வைத்துள்ளேன். //
அட்டகாசம்..////

நாங்கெல்லாம் எப்புடி.?

தாரணி பிரியா said...

போட்டியில் வெற்றி பெற எனக்கே வாழ்த்துக்கள் :)))