Wednesday, January 7, 2009

மூணு கல்லு கிரைண்டர்

காலையில் லேட்டாக எழுந்து அவசர அவசரமாக அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்த போது ரமாவிடமிருந்து போன். மணி 8.30.

'ஏதும் முக்கியமான விஷயமா? ஆபிஸ் போய்ட்டு கூப்பிடட்டுமாம்மா?'
'என்னோட பேசற‌துக்குன்னா உங்களுக்கு நேரமிருக்காதே?'
'காலைலே எட்டரைக்கு கூப்பிட்டுட்டு, என்ன விளாடுறியா?'
'எத்தனை நாள் 9.30, 10 மணிக்கு போயிருக்கீங்க.. இன்னிக்கு மட்டும் என்ன ஒழுங்கா ஆபிஸ்க்கு போற மாதிரி அவசரப்படுறீங்க?'
'அது வேற, இது வேறம்மா, எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது.. இன்னிக்கு முக்கியமான ஒரு வேல இருக்குது, போயாவணும்'
'அப்பிடி என்ன முக்கியமான வேல, போன வாரம் பூரா இதத்தான சொன்னீங்க..'
'சொன்னா புரியுமாடி உனக்கு?, இந்த வாக்குவாதம் பண்ணி டைம் வேஸ்ட் பண்றதுக்கு.. என்ன விஷயம்னே சொல்லிடலாம், சொல்லு என்ன?'
'ஆபிஸ்க்கு போய்ட்டே கூப்டுத்தொலைங்க'

‌மணி 10.10. மானேஜர் அறையில் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். சரியாகச்சொன்னால், அதாவது அவர் பேச நான் மண்டையை ஆட்டிக்கொண்டிருக்கிறேன். போன் வருகிறது. கட் பண்ணுகிறேன். ஐந்து நிமிடத்தில் அடுத்தும் போன் அழைக்கிறது. கட் பண்ணுகிறேன். ஒரே நிமிடத்தில் அடுத்தும் அழைக்கிற‌து. மூஞ்சி க‌டுப்பாக‌ இருந்தாலும் ஏதோ பெரிய‌ வ‌ள்ள‌ல் மாதிரி, 'முத‌ல்ல‌ போன‌ அட்ட‌ண்ட் ப‌ண்ணுங்க‌, அப்புற‌ம் பேசுவோம்' என்கிறார் மானேஜ‌ர்.

'ஏன்டீ படுத்துற? கட் பண்ணினா பிஸியா இருக்கேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். கொஞ்சம் நேரம் வெயிட் பண்ண மாட்டியா?'
'...'
'என்ன‌ம்மா விஷ‌ய‌ம்? சொல்லித்தொலையேன்'
'நீங்க‌ எப்ப‌தான் .:பிரீயாவுறீங்க‌ன்னு நானும் பாக்குறேன்' தொட‌ர்பு துண்டிக்க‌ப்ப‌ட்ட‌து. சை.!

12.30. சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். மிக அருகே சக ஊழியர்கள். போன் வந்தது. 'சாப்பிட்டுட்டு இருக்கேன், பத்து நிமிஷம் கழிச்சு கூப்பிடவா?'

01.10 நானே அழைத்தேன்.

'வேல நிறைய கெடக்குது. சொல்லும்மா, என்ன‌ விஷ‌ய‌ம்?'
'...'
'என்ன‌ கோவ‌மா?'
'வீட்டுக்கு கெஸ்ட் வ‌ந்திருக்காங்க‌, அப்புற‌மா பேசுறேன்'
'யாரு? சிஎம்மா வ‌ந்திருக்காங்க‌, வெளிய‌ வ‌ந்து பேசேன்டி, ஏம்மா இம்ச‌ ப‌ண்ற?'
'வீட்டுக்கு ஆள் வ‌ந்திருக்கும் போது எப்பிடி வெளிய‌ போக‌முடியும்? உங்க‌ளுக்கு ம‌ட்டும்தான் வேல‌யிருக்குமா?'
'நீதானே காலையில கூப்பிட்ட, என்ன‌ விஷ‌யம்னு சொல்லிட்டு போயேன்..' போன் க‌ட்டான‌து.

03.30 எக்செல்லில் 'வி லுக்க‌ப்'பில் ம‌ண்டை காய்ந்து கொண்டிருந்தேன். போன் வ‌ந்த‌து.

'ம்.. சொல்லும்மா'
'.:பிரியா இருக்கீங்க‌ளா?'
'இருக்கேன்.. சொல்லு'
'கோவ‌ப்ப‌ட‌க்கூடாது'
'அப்பிடி என்ன‌ விஷ‌ய‌ம்? சொல்லு'
'நா எங்க‌ சித்திகூட‌ ஜ‌ங்ஷ‌ன் போறேன். அப்பிடியே 'டேபிள்டாப் கிரைண்ட‌ர்' ஒண்ணு வாங்கிக்க‌ட்டுமா?'
'இதக்கேக்கதான் காலைலேருந்து இம்ச பண்ணிகிட்டிருக்கியா? ஏதோ எல்லாத்தியும் சொல்லிட்டுதான் வாங்குறமாதிரி. சரி, தாராள‌மா வாங்கிக்கோ.. ஆனா இங்க‌ வ‌ந்து வாங்கிக்க‌லாம்மா, இல்லின்னா தூக்கிட்டு வ‌ர‌ணும்லா, டிரெஸ் துணிம‌ணின்னா ப‌ர‌வால்ல‌..'
'நீங்களா சொமந்துகிட்டு வரப்போறீங்க, டிரெயின்லதான வரப்போகுது. நா அப்பிடித்தான் வாங்குவேன்!'49 comments:

புதுகைத் தென்றல் said...

ஜனவரில தங்கமணி வீட்டுக்கு வந்திடுவாங்க. அதுக்கப்புறம்தான் திட்டி பதிவு போடணு்ம்னு சொன்னீங்க!!!

இப்ப போன்ல பேசினதுக்கே கோபமா?

உங்ககிட்ட கேட்டுட்டுத்தான் வாங்கனும்னு அவங்க நினைப்பத் தப்பாக்கிபுடுவீங்க போல இருக்கே!

தாமிரா said...

கல்யாணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கைத் தொடரின் அடுத்த பாகம். எழுதி ரொம்ப நாளாச்சு இல்லையா? தொலைவிலிருந்தாலும் தொடரும் இம்சையை எண்ணிப்பாருங்கள் இளைஞர்களே? சிந்தியுங்கள்.. அப்படியே மறக்காமல் வாக்குகளையும் அளித்துவிட்டுச்செல்லுங்கள்.!

Raji said...

ayyo pavam anna neenga?(sad face)

புதுகைத் தென்றல் said...

அவங்க கூப்பிட்டப்ப நீங்க பேசாததால,நீங்க கூப்பிட்டப்பா அவங்க மொளனம் காத்ததை மிக ரசித்தேன்.

:))))

தாமிரா said...

அதற்குள் வந்து பதிலிட்ட எதிர்கல்லூரி புரொபசர் தென்றலுக்கு நன்றி. பதிலடி கொடுக்க எவ்வளவு குளோஸா வாட்ச் பண்றாங்க.. பாருங்க தோழர்களே.. ஆகவே வாக்களித்து நம்பக்கத்தை வெற்றிபெற வையுங்கள்.

தாமிரா said...

நன்றி ராஜி.!

புதுகைத் தென்றல் said...

எதிர் கட்சி்யில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கத்தானே ஃபாலோ செய்யறோம்.

(அடடா! என்ன வாக்கு வாக்குன்னு சொல்லிகினே இருக்கீக! நல்லா குத்துக்குங்ப்பா இவரை)

ச்சின்னப் பையன் said...

வீட்டுக்கு வீடு மண்டகப்படி.. :-)))

சந்தனமுல்லை said...

:-))

//அப்பிடி என்ன முக்கியமான வேல, போன வாரம் பூரா இதத்தான சொன்னீங்க..'//

சூப்பர்! இது கேள்வி!!

சந்தனமுல்லை said...

//அவங்க கூப்பிட்டப்ப நீங்க பேசாததால,நீங்க கூப்பிட்டப்பா அவங்க மொளனம் காத்ததை மிக ரசித்தேன்.
//

ரிப்பீட்டு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹாஹா

நல்லா வகையா மாட்டியிருக்கீங்க போல

'நீங்களா சொமந்துகிட்டு வரப்போறீங்க, டிரெயின்லதான வரப்போகுது. நா அப்பிடித்தான் வாங்குவேன்!'
ஹே ஏ ஹே ஹைய்யோ ஹைய்யோ
என்ன பாஸ் நீங்க, மொதல்லயே போனை அட்டெண்ட் பண்ணியிருந்தா இப்படி மொக்கை வாங்கியிருக்க வேணாமே.

சிந்தியுங்கள்..
இதில் சிந்திப்பதற்கு ஒன்றுமே இல்லை, உரலுன்னு இருந்தா இடி வாங்கித்தான் ஆகனும்.

அப்படியே மறக்காமல் வாக்குகளையும் அளித்துவிட்டுச்செல்லுங்கள்.!
குத்தறோம் எசமான் குத்தறோம்

வால்பையன் said...

என்னான்னு ஆறுதல் சொல்ல!
இந்த ஆண்வர்க்கதுக்கு விடிவு காலமே இல்லையா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அனுஜன்யா said...

ஹா ஹா, தாமிரா! எவ்வளவு முறை தோற்றாலும், சற்றும் மனந்தளரா உன் முயற்சியை மெச்சுகிறேன். ஆனா, மாமு, நாம தோக்கற கச்சிதான். ஒட்டு மட்டும் உனக்கு தான். :))

அனுஜன்யா

வனம் said...

வணக்கம் தாமிரா

\\கல்யாணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கைத் தொடரின் அடுத்த பாகம். எழுதி ரொம்ப நாளாச்சு இல்லையா? தொலைவிலிருந்தாலும் தொடரும் இம்சையை எண்ணிப்பாருங்கள் இளைஞர்களே? சிந்தியுங்கள்..\\

இதையேதான் நான் கல்யாணம் பண்ணாம சொல்லிகிட்டு இருக்கேன் என்ன உங்களமாதிரி அனுபவஸ்தராலதான் சரியா சொல்ல முடியுது

சரி இந்த வார இறுதியில் புத்தக கண்கட்சிக்கு வரலாம் என இருக்கின்றேன் ஒன்னும் புது மண்டக படி வராதுல ?

நன்றி

ஆயில்யன் said...

//தொலைவிலிருந்தாலும் தொடரும் இம்சையை எண்ணிப்பாருங்கள் இளைஞர்களே? சிந்தியுங்கள்.. அப்படியே மறக்காமல் வாக்குகளையும் அளித்துவிட்டுச்செல்லுங்கள்.!//

நல்லா பீதியை கிளப்புறீங்கப்பா :(

தராசு said...

கிரைண்டர் வாங்கியதும் முதல்ல உங்களத்தான் போட்டு அரைக்கப் போறாங்க போலிருக்குது,

போன் வந்தா முதல்ல பதில் பேசுங்கப்பா, ஆபீஸ்ல பாஸ் கோவிச்சா இன்னொரு பாஸ் உள்ள ஆபீஸுக்கு போயிக்கலாம், ஆனா தங்ஸ் கோவிச்சுட்டா இன்னொரு தங்ஸ் மாத்திக்க முடியுமா?

எப்படி தத்துவம் கலக்கலா இருக்கில்ல

கூட்ஸ் வண்டி said...

ஹா... ஹா... ஹா.....
நாலாம் உங்கள மாதிரி கிடையாது... என்னோட தங்கமணிக்கு நான் பயப்பட மாட்டேன்....

[அவ(இங்க) இப்ப ஊரிலே இல்லைங்கிறது, எனக்கு மட்டும் தானே தெரியும்.....]

SK said...

அழகா நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க தாமிரா :) :)

சந்தனமுல்லை said...

//'நீங்களா சொமந்துகிட்டு வரப்போறீங்க, டிரெயின்லதான வரப்போகுது. நா அப்பிடித்தான் வாங்குவேன்!'
ஹே ஏ ஹே ஹைய்யோ ஹைய்யோ
என்ன பாஸ் நீங்க, மொதல்லயே போனை அட்டெண்ட் பண்ணியிருந்தா இப்படி மொக்கை வாங்கியிருக்க வேணாமே.//

என்ன இருந்தாலும் யூஸ் பண்ணப் போறவர்கிட்ட்டே ஒரு வார்த்தை கேட்டுடறது நல்லதில்லையா!

மிஸஸ்.டவுட் said...

//'என்ன‌ம்மா விஷ‌ய‌ம்? சொல்லித்தொலையேன்'
'நீங்க‌ எப்ப‌தான் .:பிரீயாவுறீங்க‌ன்னு நானும் பாக்குறேன்' தொட‌ர்பு துண்டிக்க‌ப்ப‌ட்ட‌து. சை.!12.30. சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். மிக அருகே சக ஊழியர்கள். போன் வந்தது. 'சாப்பிட்டுட்டு இருக்கேன், பத்து நிமிஷம் கழிச்சு கூப்பிடவா?'01.10 நானே அழைத்தேன். 'வேல நிறைய கெடக்குது. சொல்லும்மா, என்ன‌ விஷ‌ய‌ம்?'
'...'
'என்ன‌ கோவ‌மா?'
'வீட்டுக்கு கெஸ்ட் வ‌ந்திருக்காங்க‌, அப்புற‌மா பேசுறேன்'//


ஹா ..ஹா ...ஹா...

எல்லா வீட்லயும் மனைவிகள் அவங்க அவங்க கடமையை சரியாத்தான் செய்றாங்க போல!!! நான் என்னவோ நம்ம மட்டும் தான் இப்படியோனு சில நாள் கவலை கூட பட்ருக்கேன்.அந்த கவலை இந்தப் பதிவை படிச்சப்புறம் இனிமே

கும்க்கி said...

ஹி...ஹி....ஹி...
ஓய்வறியா உழைப்பாளி நீங்கள்..எத்துனை துன்பங்களை தாங்கிக்கொள்ள நேருகிறது என எண்ணிப்பார்க்கையில்..எதற்க்கு இத்திருமண வாழ்வும் அதன் பிறகான எண்ணிலடங்கா துன்பங்களும் என மனது வருந்த...அது காலங்கடந்த எண்ணமல்லவா எனவும் இப்போழுது அது குறித்து சிந்தனை செய்து ஆகப்போவதென்ன என்று தோன்றுகிற அதே நேரத்தில் நமதனுபவங்களை பகிர்ந்துகொள்ளுவதும் எதிர்கால சந்ததியினர்க்கு ஏதேனும் புரிகிற விதத்தில் இது குறித்த ஒரு புரிதலை ஏற்ப்படுத்திவிட்டோமானால் அவர்தம் எதிகாலத்தினை தாமாக தீர்மானிக்கும்பொருட்டு நன்றாக சிந்தித்து ஒரு தீர்மானத்திற்க்கு வருமுன்னர் அவர்தம் குடும்ப உறுப்பினர்களின் தலையீடும் இது போன்ற முடிவுகளில் உண்டென்பதையும் கனக்கிலெடுத்துக்கொள்வதோடு.....

கும்க்கி said...

என்ன சொல்ல வந்தேன்னு மறந்துபோச்சுது....

இராகவன் நைஜிரியா said...

கொடுத்து வைத்தவர் ஐயா நீங்கள். உங்களிடம் சொல்லிவிட்டு வாங்குகின்றார்கள். என்னைப் போன்றவர்களூக்கு வாங்கி வந்தபிறகுதானே சொல்லுவார்கள்.

அன்புடன் அருணா said...

//நா அப்பிடித்தான் வாங்குவேன்!'//
just three words.....இதுக்குப் போய் இவ்வ்ளோ சண்டையா??
அன்புடன் அருணா

Mahesh said...

ஹ்ம்ம்ம்ம்... குட்த்து வச்ச மன்சன்யா நீ.... ஒங்கைல சொல்லிட்டு அப்பாலிக்கா வாங்கறாங்கோ... இங்க வாங்கி அதுல நாலு தபா தோசை இட்லி செஞ்சு துண்ணப்பறம்தான் நமக்கே தெரியும்....

இளைய பல்லவன் said...

என்ன சார் பண்றது. நாம பிசி(பெர்சனல் கம்ப்யூட்டர் இல்ல) யா இருக்கும் போதுதான் தங்ஸ் ஃபோன் பண்ணுவாங்கங்கறது மர்ஃபி லா மாதிரி ஆயிடிச்சி. ஆனா தங்ஸ் குலம் இதப் புரிஞ்சிக்க மாட்றாங்களே!

ஆனாலும் ரங்ஸ் சார்பா நீங்க ஒருத்தர் ஓயாம முழங்கிகிட்டிருக்கிறதப்பாத்தா அவ்வ்வ்வ்வ் என்ன சொல்றதுன்னே தெரியல போங்க.

RAMYA said...

ம்ம்ம்ம் முதல் தடவையே ஒழுங்கா
போன் அட்டென்ட் பண்ணி இருந்தால்
இந்த மாதிரி முடிவை (நீங்களோ சுமக்க போறீங்க) தெரிஞ்சுக்க வேண்டாம் இல்லை நல்ல மாட்டினீங்களா??

RAMYA said...

சரி சரி மனம் தளராதீங்க
போன் வந்தா கொஞ்சம்
Manager ஐ அட்ஜஸ்ட் பண்ணி
போன் அட்டென்ட் பண்ணி
என்னா ஏதுன்னு விளாவரி பண்ணிடுங்க அது தான் சரி

RAMYA said...

சரி சரி ஓட்டும் போட்டு
இந்த 3 கல்லு கிரைண்டர் தான்
வாங்க வேண்டும்னு சொல்லிடறோம்!!!

வீணாபோனவன் said...

உங்கள் பாவனைக்காக அவ்வ்வ்ளோ தூரத்தில் இருந்து தூக்கிட்டு வாராங்க... சந்தோஷபடுங்கப்பா... (குத்தியாச்சி ஓட்ட)

-வீணாபோனவன்.

துளசி கோபால் said...

சும்மாப் படிச்சுட்டு ஒன்னும் சொல்லாமப் போகமுடியலையே(-:

எங்க வீட்டு கிரைண்டரை ப்ளேன் சுமந்துக்கிட்டு வந்துச்சு. மூணு கல். டேபிள் டாப்.பட்டர்ப்ளை ப்ராண்ட்.

பார்க்க நல்லா இருக்கு. நல்லா அரைக்குது. ஆனால்......

அரைச்ச மாவை எடுத்துப் பாத்திரத்தில் ஊத்துவது கஷ்டமான வேலை. கற்களை எடுக்கும் கம்பியில் பிடிச்சுத் தூக்கினாலும் மேசை முழுசும் மாவு வழிஞ்சு......

அதுக்குப்பிறகு ஆட்டுக்கல்லை சுத்தம் செஞ்சு வைப்பதும் சல்லியம். அடியில் மாவு புகுந்துக்கிட்டு அதைக் குச்சியால் நோண்டி எடுக்கணும்.

பேசாம டில்டிங் டைப் வாங்குனா கொஞ்சமாவது சுலபமா இருக்குன்னு தோணல்.
அதையும் அந்தப் ப்ளேன் சுமக்கட்டும்!

அத்திரி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
)))))))))))))))))))))))))))))

இடுக்கண் வருங்கால் நகுக

அத்திரி said...

எனக்கு எல்லாம் போன் வந்திச்சின்னா ((((((((((((((((((((((((((((((((((((((
நீங்க இவ்ளோ நேரம் தாக்குப்பிடிக்கிறீங்களே)))))))))))))))))

நான் ஆதவன் said...

//'ஏன்டீ படுத்துற? கட் பண்ணினா பிஸியா இருக்கேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். கொஞ்சம் நேரம் வெயிட் பண்ண மாட்டியா?'
'...'
'என்ன‌ம்மா விஷ‌ய‌ம்? சொல்லித்தொலையேன்'//

குருவே '...' அப்படின்னா என்ன?????
சிஷ்யன்கிட்ட இதையெல்லாம் மறைச்சா எப்படி????

தாமிரா said...

அப்பாடி ரொம்ப‌ நாள் க‌ழிச்சு க‌டை க‌ளை க‌ட்டியிருக்கு போல‌ருக்கே.. ப‌திவும் காலைலேயே சூடாயிருச்சு.. ச‌ந்தோஷ‌ம்ப்பா.!

தாமிரா said...

நன்றி ச்சின்னவர்.!

நன்றி முல்லை.! (அவங்க கூப்பிட்டப்ப நீங்க பேசாததால,நீங்க கூப்பிட்டப்பா அவங்க மெளனம் காத்ததை மிக ரசித்தேன்./// ந‌ல்லா ர‌சிப்பீங்க‌ளே..)

நன்றி அமித்து.! (ஹே ஏ ஹே ஹைய்யோ ஹைய்யோ
என்ன பாஸ் நீங்க/// என்னா சிரிப்பு, பாருங்க மக்களே..)

நன்றி வால்.!

நன்றி அனுஜன்யா.! (என்ன‌ இந்த‌ப்ப‌க்க‌மும் காத்த‌டிக்கிற‌ மாதிரி இருக்குது..// ஆனா, மாமு, நாம தோக்கற கச்சிதான்// நீயா நானான்னு பாத்துறனும் தல..)

நன்றி ராஜராஜன்.! (போலாம், வாங்க‌.. ர‌மா பொங்க‌ல் முடிஞ்சுதான் வ‌ர்றாங்க‌..)

நன்றி ஆயில்யன்.! (என்ன‌ யூத் மாதிரி .:பீல் ப‌ண்றீங்க‌.. நா ஒங்க‌ள‌ பெர்சு லிஸ்ட்ல‌ அல்ல‌வா வ‌ச்சுருக்கேன்)

நன்றி தராசு.! (தங்ஸ் கோவிச்சுட்டா இன்னொரு தங்ஸ் மாத்திக்க முடியுமா?// ஆகா என்ன‌ பிர‌மாத‌மான‌ த‌த்துவ‌ம்.!)

நன்றி கூட்ஸ்வண்டி.!
நன்றி SK.!
நன்றி முல்லை.! (என்ன இருந்தாலும் யூஸ் பண்ணப் போறவர்கிட்ட்டே ஒரு வார்த்தை கேட்டுடறது// ஒக்காந்து யோசிச்சிருக்கீங்க‌ போல‌ தெரியுது.. ந‌க்க‌லு..ம்?)

நன்றி டவுட்.! (நான் என்னவோ நம்ம மட்டும் தான் இப்படியோனு சில நாள் கவலை கூட பட்ருக்கேன்// அட‌டா.. என்னா க‌வ‌லை? என்னா ம‌ன‌சு?)

நன்றி கும்க்கி.! (வெள‌ங்கிரும்)

நன்றி இராகவன்.! (உங்களிடம் சொல்லிவிட்டு வாங்குகின்றார்கள்// ஒரு போர்ட்ட‌ர் போல‌ வேலையிருப்ப‌தான‌லேயே அது கேட்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை நீங்க‌ள் புரிந்துகொள்ள‌வேண்டும்)

தாமிரா said...

நன்றி அருணா.!

நன்றி மகேஷ்.! (ரசனையான ஆளுய்யா நீரு..)

நன்றி பல்லவன்.! (ரங்ஸ் சார்பா நீங்க ஒருத்தர் ஓயாம முழங்கிகிட்டிருக்கிறதப்பாத்தா// அத ஒரு கொள்கையாவே நாம வெச்சிருக்கோம்ல‌..)

நன்றி ரம்யா.! (ஓவ‌ராத்தான் பிர‌ச்சார‌ம் ப‌ண்ணிட்ட‌னோ.. எல்லாரும் ஓட்டுப்போட்ட‌தை ஒத்துக்கிறீங்க‌ளே, பிரியாணி செல‌வு வெக்காம‌ இருந்தா ச‌ரிதான்)

நன்றி வீணா.! (அவ்வ்வ்ளோ தூரத்தில் இருந்து தூக்கிட்டு வாராங்க..// யோவ் எவ்ளோ சொன்னாலும் பிரியாதா ஒங்களுக்கு? யாரு தூக்கிட்டு வர்றாங்கன்றதுதான் பிரச்சினையே..)

நன்றி துளசி.! (உண்மையிலேயே நல்ல விஷயம்ங்க, பட்டர்பிளை மூணு கல்லுன்னுதான் சொல்லிக்கிட்டிருந்தாள். ஒடனே ரமாகிட்ட சொல்லணுமே, இல்லையின்னா எனக்குதானே பிரச்சினை.. ஆமா, பிளேன் பிளேன்னு சொல்றீங்களே, யாரு ரங்ஸையா சொல்றீங்க?)

நன்றி அத்திரி.!

நன்றி ஆதவன்.! (அது பின் டிராப் சைலன்ட்னு அர்த்தம், அது கோபத்தை விட எவ்வளவு வீரியமானதுன்னு அனுபவிச்சாதான் புரியும்.!)

துளசி கோபால் said...

குதிரைக்கு குர்ரமுன்னா ஆனைக்கு அர்ரமா?

ப்ளேனு ப்ளேனுன்னா ரங்குஸா?

அப்போ....ரயிலு ரயிலுன்னாலும் ரங்க்ஸ்தானா?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தூக்கிக்கிட்டுப் பறந்து வருவானாக்கும்:-))))

ராம்.CM said...

அழகா நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க...

கும்க்கி said...

ராம்.CM said...
அழகா நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க...

நகைச்சுவையா..? ..ஆம்பிளைங்க கஷ்டத்த வேற எப்படி சொல்லி புரியவைக்கறதோ... அரே ராம ராம.

அத்திரி said...

வரவர நம்ம கட பக்கம் ஆளை பாக்க முடியல

இதெல்லாம் நல்லதுக்கில்ல..

சொல்லிட்டேன்

ராம்.CM said...

ஹாய் குமிக்கி.! கஸ்டபடும் போது சிரிக்கனும்பாங்க..அதுதாங்க நம்ம நேரங்கிறது...

கும்க்கி said...

ஒரு வேளை வாழ்க்க பூரா சிரிச்சிக்கிட்டிருக்கனுமின்னு கல்யாணத்துல சொல்றது இதுக்குதானோ....?

தமிழ்ப்பதிவன் said...

தொலைபேசியிலும் தொடரும் தங்கமணிகளின் தொல்லைகளின் தொல்லையியல் ஆவணப்பதிவாக தொன்றுதொட்ட நாளைய தொகுப்பு வரலாற்றில் இது இடம்பிடிக்க இருப்பதை எண்ணி, ஆண்வர்க்கத்தின் அங்கீகரிக்கப்படாத அவதாரப்பதிவராக ஆக்கப்பட்டுவிடுவீர்களோ என்ற ஆர்வமும் ஆதங்கமும் ஆங்காங்கே எழக்கூடும் என்பதை இயல்பாகவும் எளிதாகவும் எடுத்துச்சொல்லவேண்டியதை இப்பின்னூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிற அதே நேரத்தில்.... கிரைண்டர் தூக்குவதற்கு கூடவே தான் இல்லையே என்கிற கவலையையும் குறிப்பிடுவதால் இது தங்கமணிகளின் தூக்கு(கூஜா)ப்பதிவு என்று துல்லியமாக தள்ளிவைக்கப்படும் தருணமும் வாய்க்கலாம் என்ற சங்கதி தென்னகக்குறிப்புகளில் தென்படும் தாக்கத்தையும் வரா-லாறு தாமதமாகவாவது விளக்கக்கூடும்.

Saravana Kumar MSK said...

//என்னான்னு ஆறுதல் சொல்ல!
இந்த ஆண்வர்க்கதுக்கு விடிவு காலமே இல்லையா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

Rippeettu.. :)

தாமிரா said...

நன்றி துளசி.!
நன்றி ராம்.!
நன்றி கும்க்கி.!
நன்றி அத்திரி.!
நன்றி தமிழ்பதிவன்.! (தங்க்ஸாலர்ஜியும், பின்னவீனக்கிருமியும் உங்களை ஒரே சமயத்தில் தாக்கியுள்ளதாக சந்தேகிக்கிறேன். எனது "Warnig to bacholers" பதிவுகள் அத்தனையும் படிக்க சிபாரிசு செய்கிறேன்)
நன்றி சரவணா.!

மங்களூர் சிவா said...

/
ச்சின்னப் பையன் said...
வீட்டுக்கு வீடு மண்டகப்படி.. :-)))
/

ripeatuu

மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...
என்னான்னு ஆறுதல் சொல்ல!
இந்த ஆண்வர்க்கதுக்கு விடிவு காலமே இல்லையா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

repeatttu

வாழவந்தான் said...

எனக்கு சில சந்தேகம்:
1. கிரைண்டர் எல்லாம வெளியூருல வாங்குவாங்க. [நான் ஊருக்கு போனா(தீபாவளி தவிர)கூட அங்க போய்த்தான் எதாவது தின்பண்டம் இல்ல, கிப்ட் வாங்குவேன்.?!!]

2. காலை 8:30 மணியா? ஒன்னு அந்த அதிகாலை பொழுதில் தூங்கிட்டிருப்பேன், அப்படியே ஆபீஸ் கிளம்பிடிருந்தா அன்னிக்கு எதோ அவசரமா இருக்கும், இந்த ரெண்டு சந்தர்ப்பங்கள்+சில சமயம் பேருந்து நெரிசல், சினிமா போன்ற இடங்களிலும் போன் வந்தா 'நான் அப்பறம் பேசுறேன்' இந்த ஒரு வரில முடிச்சிடுவேன். நீங்க என்னடானா போனை கட் செய்யறதுக்கே ரெண்டு நிமஷம் பேசுறீங்க?

இந்த சந்தேகங்களின் அடிப்படையில்..'bachelor lives like a king' இது உண்மை தானோ?