Thursday, January 8, 2009

கவிதை ஜாலம்

கவிதை எனக்கு மிகவும் பிடித்த எழுத்து வடிவம் என்று உறுதிபட கூறிவிட முடியாத அளவில் பிற வடிவங்களையே நான் பெரிதும் விரும்புகிறேன். ஆனால் கவிதைகளின் வீச்சு பிரமிக்கவைக்கும் அளவில் பேராற்றல் கொண்டதாய் இருக்கிறது. சமயங்களில் சில நல்ல கவிதைகளை வாசித்துவிட நேர்கையில், துக்கமோ மகிழ்ச்சியோ காதலோ எழுகின்ற உணர்ச்சிகளிலிருந்து அவ்வளவு எளிதில் நம்மால் மீண்டுவிடமுடிவதில்லை.
ஐந்நூறு பக்கங்களில் நாவலாக நீள வேண்டிய விஷயங்களை ஐந்து வரிகளில் அடக்கி அற்புதம் நிகழ்த்துகின்றனர் கவிஞர்கள். பேசிப்பேசித் தீராத விஷயங்களை அவ்வளவுதான், தீர்ந்துபோச்சுது என்று கூறி கெக்கலிக்கிறார்கள். மொழி வசமாகிக்கிடக்கிறது அவர்களிடத்தில். மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்து அல்லது சண்டையிட்டு நமது உணர்வுகளை நண்பனுக்கோ, மனைவிக்கோ கடத்துகிறோம், அப்படியும் அதை முழுமையாகச் செய்தோமா என்ற சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கிறது. நினைப்பதை எப்படிச் சொல்வது எனத் தெரிவதில்லை, வார்த்தைகளுக்காக அல்லாடவேண்டியதாகிறது. என்ன செய்வது.? ஒரு அருமையான காதல் நிகழும்போதான மகிழ்ச்சியையும் சிரித்துதான் வெளிப்படுத்துகிறேன். ஒரு மொக்கை ஜோக்கிற்கான எதிர்வினையையும் சிரித்துதான் வெளிப்படுத்துகிறேன்.

இதோ தோழன் சரவணக்குமாரின் இந்தக்கவிதையை வாசியுங்கள்.. அன்பில்லாது வாழச்சொல்லிதான் இந்தச்சூழல் என்னைப்படுத்துகிறது, ஆனால் அன்பில்லாது என்னால் இருக்கமுடியுமா என்பதுதான் கேள்வியே..

அன்பை தொலைத்தலும், ஒரு நிகழ்வும்...

ஒரு வெறுப்பான தினத்தின் முடிவில்
என்னிடமிருந்த
எல்லையற்ற அன்பை
மலையுச்சியிலிருந்து தூக்கி எறிந்தேன்...

பொத்தென்று
விழுந்து சாகாமல்
பள்ளத்தாக்குகளில் மெல்ல மெல்ல
எதிரொலித்து வீழ்ந்ததை
கொடூர புன்சிரிப்போடு ரசித்துவிட்டு

வீடு
திரும்பிய போதுதான்
திறந்து கிடந்த கதவின் பின்மறைவில்
அப்பெரும் உருவை கண்டேன்..

பயத்தில் செய்வதறியாது
எங்கெங்கோ அலைந்து திரிந்து
குற்றுயிராய் எதிர்பட்ட
என் எல்லையற்ற அன்போடு
வீடு திரும்பிய போது
அப்பெரும் உருவத்தை காணவில்லை...


பெரிய எதிர்காலம் சரவணகுமாருக்காக காத்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது, இப்போதே வாழ்த்துச் சொல்லிக்கொள்கிறேன்.
சரவணக்குமாரின் மேலும் ஒரு அற்புதம் இங்கே..! அப்படியே என்னையும் நான் ஒரு கேள்வி கேட்டுக்கொள்கிறேன். "இவ்வளவுக்குப் பிறகும் நீ தொடர்ந்து கண்டிப்பாக கவிதை எழுதித்தான் ஆகணுமா?"

14 comments:

Raj said...

//வார்த்தைகளுக்காக அல்லாடவேண்டியதாகிறது. என்ன செய்வது.? ஒரு அருமையான காதல் நிகழும்போதான மகிழ்ச்சியையும் சிரித்துதான் வெளிப்படுத்துகிறேன்//

வீட்டிலயா....வெளியிலயா....தங்கமணி மேடம், கவனிச்சுகுங்க.

சந்தனமுல்லை said...

//ஒரு அருமையான காதல் நிகழும்போதான மகிழ்ச்சியையும் சிரித்துதான் வெளிப்படுத்துகிறேன். ஒரு மொக்கை ஜோக்கிற்கான எதிர்வினையையும் சிரித்துதான் வெளிப்படுத்துகிறேன்.//

:-)

//இவ்வளவுக்குப் பிறகும் நீ தொடர்ந்து கண்டிப்பாக கவிதை எழுதித்தான் ஆகணுமா?//


உங்கள் கவிதைகள் கொஞ்சமும் குறைந்தவை அல்ல! அப்புறம் அவார்டுல்லாம் குட்டிபசங்க விளையாட்டு..கண்டுக்காதீங்க! உங்க பதிவு அதையெல்லாம் தாண்டியது!! ஓக்கே!!

சந்தனமுல்லை said...

//பேசிப்பேசித் தீராத விஷயங்களை அவ்வளவுதான், தீர்ந்துபோச்சுது என்று கூறி கெக்கலிக்கிறார்கள். மொழி வசமாகிக்கிடக்கிறது அவர்களிடத்தில்.//

இதைப் படிக்கும்போது இதுவே ஒரு கவிதை மாதிரிதான் இருக்கிறது!!

புதுகைத் தென்றல் said...

இவ்வளவுக்குப் பிறகும் நீ தொடர்ந்து கண்டிப்பாக கவிதை எழுதித்தான் ஆகணுமா?" //

காசா பணமா! எழுதுங்க பாஸ்

வால்பையன் said...

//திறந்து கிடந்த கதவின் பின்மறைவில்
அப்பெரும் உருவை கண்டேன்..//

//அப்பெரும் உருவத்தை காணவில்லை...//


இது மட்டும் தான் என்னான்னு புரியல!
தயவுசெய்து அவர் எதை அந்த பெருவுருவமாக சொல்ல வருகிறார் என விளக்கமுடியுமா?

அன்புடன் அருணா said...

உங்களுக்கு என் வலைப்பூவில் ஒரு பட்டாம்பூச்சி!!!
அன்புடன் அருணா

ச்சின்னப் பையன் said...

//இவ்வளவுக்குப் பிறகும் நீ தொடர்ந்து கண்டிப்பாக கவிதை எழுதித்தான் ஆகணுமா//

அப்போ 'லேபிள்லே' கவிதை மாதிரின்னு போட்டுடுங்க... ஹிஹி...

தாமிரா said...

நன்றி ராஜ்.! (வெளியில காதல் நிகழும்போதா? யோவ்.. நல்லா திரிச்சு விடுறீங்கையா..)

நன்றி முல்லை.! (உங்கள் கவிதைகள் கொஞ்சமும் குறைந்தவை அல்ல// சரி, நம்புறேன்)

நன்றி தென்றல்.! (காசா பணமா! எழுதுங்க பாஸ்// அதானே.!)

நன்றி வால்.! (இதே கேள்வியை நானும் அவரிடம் கேட்டேன். அவரது பதிவில் பின்னூட்டத்தில் விளக்கியிருக்கிறார். செல்லுங்கள்)

நன்றி அருணா.! (நானும் ஒரு தட்டாம்பூச்சி விருது கிரியேட் பண்ணலாமான்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன், முதல் விருது உங்களுக்கே தந்துடலாம் பாருங்க)

நன்றி ச்சின்னவர்.! (இனி போட்றலாம் தல..)

புதுகை.அப்துல்லா said...

ங்கொய்யால...நேத்து இரவு நம்ப ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்ததப் பர்றி இன்னைக்கு ஒரு பதிவாவே போட்டுடீங்களே. எனக்கு இந்த யோசனை தோணாமப் போச்சே!!!

Saravana Kumar MSK said...

நன்றி அண்ணா.. :)

நேரமின்மை காரணமாக இப்போதைக்கு அட்டண்டன்சொடு செல்கிறேன்.

KaveriGanesh said...

அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......


அன்புடன்

காவேரி கணேஷ்

kaveriganesh.blogspot.com

வெண்பூ said...

அருமையான கவிதை தாமிரா.. பகிர்தலுக்கு நன்றி..

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை எழுத மெனக்கெடனும் பாஸ், ஆனா நீங்க தங்கமணியானாலும், நக்மா, ச்சே சிக்மான்னுலும் புயலென புறப்பட்டு விடுகிறீர்கள்.

எனக்கு உங்க எழுத்து நடை ரொம்ப பிடிக்கும்.
தேன் குழம்பாகட்டும், பப்பு வாகட்டும், அப்புறம் திருநெல்வேலியாகட்டும், எஸ்ஃபெஸலி 3 கல்லு கிரைண்டர்
கவிதையெல்லாம் ட்ரை பண்ணாதீங்க, நீங்க ஓட்டு போட சொல்லும் விதத்தில் கூட ஒரு கவிதை ஒளிஞ்சிருக்கு. (வடிவேல் காமெடி ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்ல பாஸ்)

தாமிரா said...

நன்றி அப்துல்.!
நன்றி சரவணா.!
நன்றி கணேஷ்.!
நன்றி வெண்பூ.! (என்னண்ணே இப்பிடி ஒரேயடியா காணாப்பூட்டிங்களே.. அவ்வ்வ்)
நன்றி அமித்.! (புகழ்ச்சியில சந்தோஷமா இருக்கும்போதே வடிவேலு காமெடின்னு சொல்லி கலாய்ச்சுட்டீங்களே தோழி)