Friday, January 9, 2009

ஒனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு..

அவர் என்னைப்பார்த்து "உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு" என்று சொன்னபோது எனக்கு கோபமெல்லாம் வரவில்லை, பதிலாக‌ பரிதாபமாக அவரைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். வேறு யாரும் இந்த வார்த்தையை என்னை நோக்கி சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும், என் ஈகோ எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன்.

அவர் ஐம்பது வயதை தாண்டியவராக இருந்தார். மேலும் நான் சின்னப்பையனாக (அதாவது இளமையாக) அவருக்குத்தோன்றியிருக்கலாம். ஆகவே முதன்முறையாக அவர் முன்னால் உட்கார்ந்திருந்தபோதும், 'உங்களுக்கு' என்பதற்குப் பதிலாக 'உனக்கு' என்று கூறியபோதும் எனக்கு வித்தியாசமாகப் படவில்லை. கண்ணாடியை கழற்றியவாறே "வேறெந்த பிரச்சினையுமில்லை, இதுக்கு மருந்தெல்லாம் தேவையில்லை, ஒழுங்கா காலையிலேயே எந்திருச்சு சுறுசுறுப்பா வாக்கிங், ஜாக்கிங் போகப்பாரு.. அப்பிடியே டயட்டையும் பாத்துக்கோ" என்று மிரட்டலாக சொன்னார். விட்டால் நாளைக்கு காலையிலே ஜாகிங் போனாயா? என்று போன் பண்ணிக்கேட்பேன் என்று சொல்வார் போல இருந்தது. வேகமாகத் தலையாட்டினேன்.

அலுவலகத்திலிருந்து முப்பது வயதைத் தாண்டியவர்களையெல்லாம் வருடாந்திர‌ 'மெடிக்கல் செக்கப்'புக்காக தார்க்குச்சி வைத்து குத்தி த‌ள்ளிக்கொண்டிருந்த‌ன‌ர். அந்த‌ பிரப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னையில் சென்ற‌ வார‌ம் செக்க‌ப்புக்கு சென்றிருந்தேன். எக்ஸ்ரே, ஸ்கான், ஈசிஜி மற்றும்பல சோதனைகளும் எழுதக்கூச்சமாக இருக்கும் சில சோதனைகளையும் செய்துவிட்டு அனுப்பிவிட்டனர், அரைநாள் ஆகிவிட்டது. இன்று சோதனை முடிவுகள் குறித்து மருத்துவருடன் க‌ன்ச‌ல்ட் செய்துகொண்டிருக்கிறேன். முப்ப‌து வ‌ய‌தைத்தாண்டிய‌வ‌ர்க‌ள் எல்லாம் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை இந்த‌ செக்க‌ப்பை செய்துகொள்வ‌து ந‌ல்ல‌து என‌ நினைக்கிறேன். ஆர‌ம்ப‌ நிலை நோய் அறிகுறிக‌ளை தெரிந்துகொண்டு, முன்னெச்செரிக்கையாக‌ இருந்துகொள்ள‌லாம். நோய்க‌ள் இல்லையென‌ உறுதி செய்து கொண்டால் த‌ன்ன‌ம்பிக்கை சிற‌க்கும். மேலும் நோய்க‌ள் முற்றி பாதிக்கப்பட்ட‌‌பின்ன‌ர் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டால் இன்றைய‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளில் ம‌ருத்துவ‌ச்செல‌வுக‌ள் எவ்வ‌ள‌வு ப‌ய‌முறுத்துவ‌தாய் இருக்கின்ற‌ன‌ என்ப‌தை நீங்க‌ள் அறிவீர்க‌ள். இந்த‌ செக்கப்பை நமது ப‌ட்ஜெட்டுக்குள் அட‌ங்குவ‌து போல‌வே சில‌ பிர‌ப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் செய்து த‌ருகின்ற‌ன‌. அல்ல‌து வேறு காப்பீட்டுத்திட்ட‌ங்க‌ளில் வ‌ழியுள்ள‌தா என்ப‌தை அறிந்தோர் சொல்ல‌லாம். ப‌டிப்போருக்கு ப‌ய‌னுள்ள‌தாய் இருக்கும்.

ம‌ருத்துவ‌ருக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு எழுந்த‌போது அவ‌ரைப்பார்த்து ச‌ந்தேக‌த்துட‌ன் கேட்டேன், "சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?". அவ‌ர் விருட்டென்று ப‌க்க‌த்திலிருந்த‌ ர‌த்த‌ம் உறிஞ்ச‌ ப‌ய‌ன்ப‌டும் கோணிஊசிய‌ள‌வு இருந்த‌ சிரிஞ்ச்சை கோப‌த்தோடு எடுத்தார். நான் வெளியே பாய்ந்தேன்.!

.

36 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?". அவ‌ர் விருட்டென்று ப‌க்க‌த்திலிருந்த‌ ர‌த்த‌ம் உறிஞ்ச‌ ப‌ய‌ன்ப‌டும் கோணிஊசிய‌ள‌வு இருந்த‌ சிரிஞ்ச்சை கோப‌த்தோடு எடுத்தார். நான் வெளியே பாய்ந்தேன்

குத்தாம விட்டாரே, சந்தோஷப்பட்டுக்கோங்க..


ஆர‌ம்ப‌ நிலை நோய் அறிகுறிக‌ளை தெரிந்துகொண்டு, முன்னெச்செரிக்கையாக‌ இருந்துகொள்ள‌லாம். நோய்க‌ள் இல்லையென‌ உறுதி செய்து கொண்டால் த‌ன்ன‌ம்பிக்கை சிற‌க்கும். மேலும் நோய்க‌ள் முற்றி பாதிக்கப்பட்ட‌‌பின்ன‌ர் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டால் இன்றைய‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளில் ம‌ருத்துவ‌ச்செல‌வுக‌ள் எவ்வ‌ள‌வு ப‌ய‌முறுத்துவ‌தாய் இருக்கின்ற‌ன‌
நோய்நாடி நோய்முதல் நாடி // ந்னு வள்ளுவர் சொன்னது ஞாபகம் வருது

அப்புறம் மீ த பர்ஸ்ட்டு

Raj said...

//அவர் என்னைப்பார்த்து "உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு" என்று சொன்னபோது எனக்கு கோபமெல்லாம் வரவில்லை, பதிலாக‌ பரிதாபமாக அவரைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.//

எப்படி கோபம் வரும்...இதத்தான் தெனமும் வீட்ல கேட்டிட்ருக்கோமே.

புதுகைத் தென்றல் said...

தலைப்பு ரொம்ப நல்லா இருந்துச்சு தாமிரா. :)))))))

பலருக்கு உபயோகப்படும் பதிவு.

புதுகைத் தென்றல் said...

எப்படி கோபம் வரும்...இதத்தான் தெனமும் வீட்ல கேட்டிட்ருக்கோமே.//

ஆஹா, ஓஹோஹ்ஹஹோ

தாங்கமுடியலை.
:))))))))))))))))))

நையாண்டி நைனா said...

/*ச‌ந்தேக‌த்துட‌ன் கேட்டேன், "சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?". */

ஓ... சாப்பிடலாமே....
உங்களை பார்க்க வைத்து, நான்.

அது சரி said...

//
ம‌ருத்துவ‌ருக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு எழுந்த‌போது அவ‌ரைப்பார்த்து ச‌ந்தேக‌த்துட‌ன் கேட்டேன், "சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?".
//

அப்ப பிரியாணி சாப்பிட்டீங்களா இல்லியா?? சென்னைல எந்த கடை பிரியாணி நல்லா இருக்கும்னு சாப்ட்டு பாத்துட்டு சொல்லுங்க...

அது சரி said...

//
முப்ப‌து வ‌ய‌தைத்தாண்டிய‌வ‌ர்க‌ள் எல்லாம் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை இந்த‌ செக்க‌ப்பை செய்துகொள்வ‌து ந‌ல்ல‌து என‌ நினைக்கிறேன். ஆர‌ம்ப‌ நிலை நோய் அறிகுறிக‌ளை தெரிந்துகொண்டு, முன்னெச்செரிக்கையாக‌ இருந்துகொள்ள‌லாம்
//

நல்ல விஷயம்...ஆனால் இரண்டு வருடங்களுக்கு என்பதை விட வருடத்திற்கு ஒரு முறையாவது செய்வது நல்லது...மிகக் குறிப்பாக கொலஸ்ட்ரால் மற்றும் ஷுகர்...

நையாண்டி நைனா said...

தம் அடிங்க, தண்ணி அடிங்க... ஏன் கஞ்சா கூட அடிங்க...
பின் விளைவு கொஞ்சம் நாள் போயிதான்....

ஆனா
தங்கமணிய மட்டும் அடிச்சீங்க??
பின் விளைவு இல்லைங்க,
பின் மண்டையிலே "விளை"யும் உடனே தான்.

தாமிரா said...

நன்றி அமித்து .:பார் மீ த பர்ஸ்ட்டு.!

நன்றி ராஜ் நகைச்சுவைக் கமென்டுக்கு.!

நன்றி தென்றல் பாராட்டுக்கு.!

நன்றி நையாண்டி நைனா தங்கமணிகளை புரிந்துவைத்திருப்ப‌துக்கு.!

நன்றி அதுசரி பிரியாணி பிரியதராதலால்.!

அன்புடன் அருணா said...

நிஜம்மாவே கொழுப்பு ஜாஸ்திதானா??? பார்த்துப்பா....
அன்புடன் அருணா

வெண்பூ said...

முப்பது வயசாயிடுச்சா உங்களுக்கு? மூத்த பதிவர் தாமிராவுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ... :)))

அத்திரி said...

அண்ணி ஊர்ல இருந்து வந்துட்டா உஙக் கொழுப்பு தானா குறைஞ்சிடும் . எதுக்கு ஜாகிங்ன்னு ரிஸ்க் எடுக்குறீங்க

Anonymous said...

பிரியாணியா? ம்ம்கும் ஆசை தான்..

அப்புறம் உங்களுக்கு வயசு முப்பதுக்கு மேலா?? ;) கிகிகீ

பரிசல்காரன் said...

நல்ல நகைச்சுவை நடையுடன் உபயோகமான கருத்தைச் சொன்னதற்கு நன்றி தாமிரா!

இராகவன் நைஜிரியா said...

//அவர் என்னைப்பார்த்து "உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு" என்று சொன்னபோது எனக்கு கோபமெல்லாம் வரவில்லை, பதிலாக‌ பரிதாபமாக அவரைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். //

வேற வழி... சிங்கத்து குகைக்குள் போன மாதிரிதான்... பரிதாபமாக உட்கார்ந்து கொண்டு இருக்கவேண்டும்.

இராகவன் நைஜிரியா said...

//அலுவலகத்திலிருந்து முப்பது வயதைத் தாண்டியவர்களையெல்லாம் வருடாந்திர‌ 'மெடிக்கல் செக்கப்'புக்காக தார்க்குச்சி வைத்து குத்தி த‌ள்ளிக்கொண்டிருந்த‌ன‌ர் //

தார்க்குச்சியெல்லாம் ban பண்ணியாச்சுங்க...

(சரி எத்தன பேருக்கு தார்க்குச்சின்னாத் தெரியும்?)

ஆபீஸ்ல சொல்லுங்க, பேச்சு பேச்சாத்தான் இருக்கணும், ஒரு மனுஷன் இரண்டு இடத்துல குத்து பட முடியாது அப்ப்டின்னு...(அப்பவா தார்க்குச்சியால குத்தாம இருக்காங்களான்னு பார்க்கலாம்)

கும்க்கி said...

ஹி...ஹி..இது டாக்டரிடம் போய்தான் தெரிஞ்சுக்கணுமா..?
ஆபிஸ்லயும்..நண்பர்கள் வட்டாரத்துலயும் நெறய டாக்குட்டர்ஸ் சொல்லியிருப்பாங்களே..

இராகவன் நைஜிரியா said...

//ம‌ருத்துவ‌ருக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு எழுந்த‌போது அவ‌ரைப்பார்த்து ச‌ந்தேக‌த்துட‌ன் கேட்டேன், "சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?". அவ‌ர் விருட்டென்று ப‌க்க‌த்திலிருந்த‌ ர‌த்த‌ம் உறிஞ்ச‌ ப‌ய‌ன்ப‌டும் கோணிஊசிய‌ள‌வு இருந்த‌ சிரிஞ்ச்சை கோப‌த்தோடு எடுத்தார். நான் வெளியே பாய்ந்தேன்.! //

ஹா...ஹா... பிரியாணி கேட்குதா...

கும்க்கி said...

அதுக்காக ரொம்ப சிரமப்பட்டு வாக்கிங்.,ஜாக்கிங் எல்லாம் போகதேவையில்ல.
அக்கா ஊரிலிருந்து வந்தவுடன் உங்க வழக்கமான வீட்டு வேளைகளை ஒழுங்கா செய்தாலே கொலஸ்ட்ரால் தானா குறைஞ்சிடும்னு நெனக்கிறேன்.
ப்லாக்ல வழக்கமா எழுதறது போல எழுதிக்கலாம்...ஒன்னும் பிரச்னையில்ல...உங்க தங்ஸ் தலைவர் பதவியும் மெயிண்டெய்ன் பண்ணிக்கலாம்.

மிஸஸ்.டவுட் said...

//"சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?". //

இதல்லவோ டவுட்? பிரியாணி என்ன பெரிய ஆணி கூட சாப்பிடலாம் டயட்டுக்கு.

தாமிரா said...

கொழுப்பு ஜாஸ்தியான்னு கேட்டாலும் அருணாவுக்கு நன்றி.!

பிரியாணி பற்றி ஒன்றும் பேசாமல் எஸ்கேப்பான அண்ணன் வெண்பூவுக்கு நன்றி.! (அண்ணன் என்றால் அவர் வயதை கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள் நண்பர்களே)

யோசிக்கவைத்த அத்திரிக்கு நன்றி.!

நக்கலாக சிரிக்கும் தூயாவுக்கு நன்றி.!

தொலைந்துபோய் மீண்டு வந்த பரிசலுக்கு நன்றி.!

தார்க்குச்சி குடைச்சலை புரிந்துகொண்ட ராகவனுக்கு நன்றி.!

ஒருவழியாக எழுத ஆரம்பித்துவிட்ட கும்க்கிக்கு நன்றி.!

டவுட்டுக்கு விளக்கம் சொன்ன மிஸஸ்க்கு நன்றி.!

அனுஜன்யா said...

நல்ல சுவாரஸ்யம். நகைச்சுவையுடன் 'அலிபாபாவின்' அறிவுரை. கலக்குங்க.

அனுஜன்யா

மிஸஸ்.டவுட் said...

//"சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?". //

இதல்லவோ டவுட்? பிரியாணி என்ன பெரிய ஆணி கூட சாப்பிடலாம் டயட்டுக்கு.

Itsdifferent said...

It is good to know the hereditary (paramparai) ailments and be cautious about it.
Also, I know rice is our staple food (rice, idly, dosai) etc. So it is good idea to start reducing the rice intake and increase vegetables and fruits.
Diabetes is another prevailing ailment in India.
So definitely 30 to 90 minutes of exercise is a must. If you are in early 30s its a good time to start, and more than 35 and if you have not started, you are late already.
So, early to bed, early to rise.
And one more thing, dinner atleast 2 hours before hitting the bed.
We have a south asian heart association here in California, they have done lots of studies about ailments that we are exposed to generally. Good resource for getting to know our weaknesses and how to prevent.
http://www.southasianheartcenter.org/

ச்சின்னப் பையன் said...

பலருக்கு உபயோகப்படும் பதிவு.

கும்க்கி said...
This comment has been removed by the author.
Itsdifferent said...

Another good and important thing is drink Green tea. It helps to clean the toxins in the tracts.

வால்பையன் said...

//"சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?".//

இது வெண்பூ கேட்க வேண்டிய கேள்வி, அவரே சும்மா இருக்கார் உங்களுகென்ன! அடிச்சு நவுத்துங்க

Mahesh said...

நல்ல பதிவு....

அட... அண்ணே... நீங்க என்ன விட 15 வயசு பெரியவரு போல இருக்கே..... :)))

கும்க்கி said...

Mahesh said...
நல்ல பதிவு....

அட... அண்ணே... நீங்க என்ன விட 15 வயசு பெரியவரு போல இருக்கே..... :)))

கண்ணால் காண்பதுவும் பொய்...காதால் கேட்பதுவும் பொய்...தீர விசாரிப்பதே மெய் என்று ஒரு பழமொழி உள்ளது....அண்ணே..

Pattaampoochi said...

அடங்க மாட்டிங்களா நீங்க?பிரியாணி கேக்குதோ..

சாதாரணமான viral fever-கு நான் விட்ட அலப்பறையில் மருத்துவர் குடுத்த reaction-ம் இதேதான்.டிஎட்-ல பெரிசா ஒண்ணும் சிறப்பு அக்கறை எடுக்கணும்னு அவசியம் இல்லேன்னு சொல்லியும் "அப்போ இது சாப்டலாமா?இதுவும் சாப்டலாமா?ஒன்னியும் பிரச்சினை இல்லியா?",அப்படின்னு குடுத்த கொடச்சலுக்கு மனுஷன் மெர்சல் ஆகிட்டார். ஊசின்னா பயம் இல்லேனாலும் அவர் எடுத்து காட்டின ஊசி எம்மாம் பெரிசு தெரியுமா?உடனே switch தட்டுன மாதிரி ஆப் ஆகிட்டோம்ல.இதில் எனது அத்தானுக்கு பரம சந்தோஷம்.ரொம்ப நாளா என்னால பண்ண முடியாததை இவர் பண்ணிட்டாரே.உன்னோட வாய அடக்கி வைக்கும் வல்லவன் இவ்வளவு பக்கத்தில் இருக்காருன்னு இது வரைக்கும் தெரியாம போயிடுச்சேன்னு ரொம்ப வருத்தம்.பேசாமல் இதுக்காகவே பொறியியலுக்கு பதில் நான் டாக்டர்-கு படித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது என்று நக்கல் வேறு.

RAMASUBRAMANIA SHARMA said...

GOOD ARTICLE...108 ADVICES ARE VERY LESS, IF WE COME TO KNOW THE DETAILS ABOUT THE HISTORY OF MEDICINE, DIAGNOSTIC SKILLS,OUR BODY DEFENCE MECHANISM...AGAINST DISEASE'S...ITS A OCEAN...THE BEST SOLUTION IS TO FOLLOW OUR FAMILY PHYSICIAN'S ADVICE, WHICH IS ALWAYS RELIABLE...SPECIALIST DOCTOR'S ARE BEYOND COMPARISON, ONCE WE UNDERSTAND....EVERYDAY THEY SAVE THE LIFE OF...ATLEAST ONE AMONG US....PLEAE DON'T TAKE THIS LINE OTHERWISE....VISIT ONE OF THE GOVT. HEADQUARTERS HOSPITAL(IN CHENNAI, EITHER GENERAL HOSPITAL OR STANLEY)...AND PL WATCH THE DAILY ROUTINE OF THE "RESIDENT PHYSICIAN"...WHO IS ON DUTY....WE CAN'T IMAGINE...ITS A "NOBLE PROFESSION"...

தாரணி பிரியா said...

வருசத்துக்கு ஒருதடவை கண்டிப்பா செக் பண்ணிக்கறது நல்ல விசயம்தானே. அதுவும் இப்ப மாறுப்பட்ட நம்மோட உணவு முறையால எல்லாருக்குமே கொழுப்பு கொஞ்சம் அதிகமாதான் இருக்குது. டாக்ட‌ர் சொன்ன‌ப‌டி டெய்லி வாக்கிங் போங்க‌. இல்லாட்டி ஒரு ரெண்டு கி.மீ முன்னாடியே வ‌ண்டியை ஆப் செய்துட்டு வ‌ண்டியை த‌ள்ளிட்டே வீடு வ‌ந்து சேர்ந்திங்க‌ன்னா வாக்கிங் போன‌ மாதிரியும் இருக்கும். பெட்ரோல் செல‌வும் மீத‌மாகும்.

இந்த‌ மாதிரி ஐடியா நிறைய கைவ‌ச‌ம் இருக்கு என்ப‌தை ப‌ணிவோட‌ சொல்லிக்கிறேன்.

மங்களூர் சிவா said...

/
சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?".
/

நிஜம்மாவே கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு

:))))

மங்களூர் சிவா said...

//
Raj said...
//அவர் என்னைப்பார்த்து "உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு" என்று சொன்னபோது எனக்கு கோபமெல்லாம் வரவில்லை, பதிலாக‌ பரிதாபமாக அவரைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.//

எப்படி கோபம் வரும்...இதத்தான் தெனமும் வீட்ல கேட்டிட்ருக்கோமே.
//

:)))))))))

தாமிரா said...

நன்றி அனுஜ‌ன்யா.! (அடிக்க‌டி வ‌ர்ற‌மாதிரி இருக்குது, பெச‌ல் ந‌ன்றி பாஸ்..)

நன்றி ட‌வுட்.!
நன்றி இட்ஸ்.!
நன்றி ச்சின்ன‌வ‌ர்.!
நன்றி வால்.!
நன்றி ம‌கேஷ்.!
நன்றி கும்க்கி.!
நன்றி ப‌ட்டாம்பூச்சி.!
நன்றி ஷ‌ர்மா.!
நன்றி பிரியா.! (உண்மையிலேயே ந‌ல்ல‌ ஐடியாங்க‌..)
நன்றி ம‌ங்கு சிவா.!