Monday, January 12, 2009

உங்கள் 'கலைங்ஙர்' தொலைக்காட்சியில்..

முதலில் ஒரு ஜோக் :

பல ஆண்டுகளுக்கு முன்னர் விகடனில் வந்த திரு. கோபுலுவின் ஜோக். இதற்காக கோபுலு வரைந்த படம் இன்னும் அழகு.

மனைவி : ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என சர்க்கார் சட்டம் போட்டிருக்காங்களாமே.. இதுக்காக பெண்குலமே சர்க்காருக்கு கடமைப்பட்டிருக்கு..
கணவன் : அதே சர்க்கார் ஒரு பெண்ணையும் கூட திருமணம் செய்துகொள்ளக்கூடாது என சட்டம் போட்டிருந்தார்களானால் ஆண்குலமே சர்க்காருக்கு கடமைப்பட்டிருக்கும்.

இரண்டாவதாக ஒரு அறிவிப்பு :

தாமிரா அவர்கள் மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு நீண்ட விடுப்பு கிடைத்த மகிழ்ச்சியில் ஊரிலிருக்கும் சொந்தபந்தங்களை பார்த்துவிட்டு பொங்க‌ல் ம‌ற்றும் குடும்ப‌விழாக்க‌ளை கொண்டாடி ம‌கிழ்ந்துவிட்டு அங்கே டேரா போட்டிருக்கும் மனைவி, புள்ளைகுட்டிகளை அழைத்துக்கொண்டு வர திருநெல்வேலி செல்கிறார். அவர் மீண்டும் சென்னை வ‌ர‌ இர‌ண்டு வார‌ங்க‌ளாகி விடும். அத‌ற்குள் அவ‌ரை நீங்க‌ள் ம‌ற‌ந்துவிடாது இருக்கும்ப‌டி கேட்டுக்கொள்கிறார். மேலும் அவ‌ர் உங்க‌ளுக்கு த‌ன் மனங்கனிந்த இனிய‌ த‌மிழ்ப்புத்தாண்டு ம‌ற்றும் பொங்க‌ல் வாழ்த்துக‌ளை தெரிவித்துக்கொள்கிறார்.

அடுத்து ஒரு பொங்க‌ல் ப‌ரிசு :

நம்மையும் ரவுடியாக ஒப்புக்கொண்ட‌ அன்புத்தோழி 'அன்புட‌ன் அருணா' அவ‌ருக்குக்கிடைத்த‌ ப‌ட்டாம்பூச்சி விருதை நான் உட்ப‌ட‌ ப‌ல‌ருட‌ன் ப‌கிர்ந்துகொண்டுள்ளார். விதிமுறைக‌ள் மிக‌ எளிமையான‌வை. நாம் ர‌சிக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கு ப‌கிர‌வேண்டும். விருதை வ‌லைப்பூவில் இட‌வேண்டும். கொடுத்த‌வ‌ர், கொடுக்க‌ப்ப‌டுப‌வ‌ர் அனைவ‌ருக்கும் இணைப்புக‌ள் த‌ர‌வேண்டும். பின்னூட்ட‌ அறிவிப்புகள் செய்ய‌ வேண்டும். ந‌ல்ல‌ காரிய‌ம்தானே.. செய்திட‌லாம். (ஆமா.. இந்த‌ ப‌ட்டாம்பூச்சியை உருவாக்கி உலாவ‌ விட்ட‌வ‌ர் யாருங்க‌.?). இதுவ‌ரை பெண்க‌ள் ம‌ற்றும் அவ‌ர்க‌ளுக்கு பிடித்த‌ (நான் கார்க்கியை சொல்ல‌வில்லை) ப‌திவ‌ர்க‌ளையே சுற்றி வ‌ந்த‌ ப‌ட்டாம் பூச்சியை கொஞ்ச‌ம் க‌ர‌டுமுர‌டான‌ ஆண்க‌ள் ப‌க்க‌மும் திருப்ப‌லாம் என‌ எண்ணி கீழே த‌ர‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு விருதை அறிவிக்கிறேன். அவ‌ர்க‌ள் த‌யைகூர்ந்து ஏற்றுச்சிறப்பிக்கும்ப‌டி கேட்டுக்கொள்கிறேன். ந‌ன்றி.

1. ந‌ர்சிம்
2. அப்துல்லா
3. ப‌ரிசல்
4. வேலன்
5. ஒற்றைஅன்றில்
6. ச‌ர‌வ‌ண‌குமார்
7. ம‌கேஷ்

இறுதியாக 'க‌லைங்ங‌ர்' தொலைக்காட்சி.. :

எழுதும் போதும், அச்சிடும்/உள்ளிடும் போதும் ஏராள‌மான எழுத்துப்பிழைக‌ளைச் செய்கிறோம். குறிப்பாக‌ வ‌லையுல‌கில் எழுத்துப்பிழைக‌ள் மிக‌ ம‌லிந்துகிட‌க்கின்ற‌ன‌. பொறுமையோடு பிழைதிருத்தி வெளியிட‌ நேர‌மில்லாம‌ல் போகிற‌து ந‌ம‌க்கு. என‌து ப‌திவுக‌ளில் பிழைக‌ள் வ‌ராது பார்த்துக்கொள்ள‌ மிக‌ முய‌ல்கிறேன். இருப்பினும் சந்திப்பிழைக‌ள் ஆங்காங்கே தென்ப‌டுன்ற‌ன‌. க‌வ‌ன‌க்குறைவு பெரிய‌ த‌வ‌று, அறியாமை பெரிய‌ வெட்க‌க்கேடு. தாங்க‌ள் அனைவ‌ருமே இந்த‌த் த‌மிழ்ப்புத்தாண்டிலிருந்து இவ்விஷ‌ய‌த்தில் மிகக் க‌வ‌ன‌மோடு இருக்க‌ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துகிறேன்.

எப்ப‌டி 'ழ‌க‌ர‌ம்' த‌மிழின் சிற‌ப்போ அதைப்போல‌வே 'ஞ‌க‌ர‌மும்' மிக‌ச்சிற‌ப்பே. எழுதுவ‌தில் 'ஞ' கொஞ்ச‌ம் த‌ப்பித்துவிட்டாலும் ப‌ல‌ விஐபிக்க‌ளின் வாயில் சிக்கிக்கொண்டு 'க‌லைஞ‌ர்' என்ற‌ சொல் ப‌டும்பாடு சொல்லிமாளாது. மேடையில் ஒருவ‌ர் 'க‌லைஞ்ச‌ர்' என்பார். பக்கத்திலிருப்ப‌வ‌ர் ச‌ரியாக‌ சொல்வ‌தாக‌ நினைத்துக்கொண்டு 'க‌லைஞ்ஞ‌ர்' என்பார். அடுத்த‌வ‌ர் ரொம்ப‌ புத்திசாலியாகி 'க‌லைந‌ர்' என்பார். அவ‌ருக்க‌டுத்த‌வ‌ர் நீங்க‌ள் சொல்வ‌தெல்லாம் த‌வ‌று நான் சொல்கிறேன் பாருங்க‌ள் என்று 'க‌லைங‌ர்' என்பார். சில‌ர் இன்னும் அழுத்த‌மாக‌ 'க‌லைங்க‌ர்', இதில் 'க‌' ஒலி வ‌ருகிற‌தே என்று சிந்திக்கும் ம‌ற்ற‌வ‌ர் ச‌ரியாக‌ பிழை திருத்தி 'க‌லைங்ங‌ர்' என்றிடுவார். இவர்கள் அனைவருமே பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிற துறைகள் சார்ந்த விஐபிக்கள். அப்ப‌ப்பா.. இதே நிலைதான் தொலைக்காட்சியிலும். த‌மிழ‌க‌மே கேட்கும் ப‌டி உர‌த்த‌ குர‌லில் அறிவிக்கிறார் ஒரு அறிவிப்பாளர். "...... ஊங்க‌ள் க‌லைங்ங்ங்ங‌ர் தொலைக்காட்ச்சியில்.. வ‌ரும் ஞாயிர‌ன்று....."

.

18 comments:

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள்..நீங்களும் இந்த சின்ன பசங்க விளையாட்டுக்கு வந்துட்டீங்களா!! :-)) இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், குடும்பத்தினர் அனைவருக்கும்!


//கலைங்ங்ர்//

lol!!

வால்பையன் said...

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்,

விடுமுறையே இனிதே களியுங்கள்,

பதிவு போட மேட்டர் தேடி பூரிகட்டை அடிவாங்காதிருக்க வாழ்த்துக்கள்

பாபு said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

narsim said...

//கொஞ்ச‌ம் க‌ர‌டுமுர‌டான‌ ஆண்க‌ள் ப‌க்க‌மும் திருப்ப‌லாம் என‌ எண்ணி கீழே த‌ர‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு விருதை அறிவிக்கிறேன்//

ஆண்களுக்கு அழகே கரடுமுரடுதான் என்பதால்.. என்னை அந்த லிஸ்டில் முதலாக சேர்த்ததால்.. விருதுக்கு நன்றி தல‌

தாமிரா said...

நன்றி முல்லை,
நன்றி வால்,
நன்றி பாபு,
நன்றி தல..

கெளம்புறேங்கோ......பை..பை.!

தாமிரா said...

மின்னல் தேர்வில் தமிழ்மண விருது 2008 க்கும் ஓட்டுகளை வாரி வழங்கியாச்சுங்க.. மறக்காதீங்க.. உங்கள் பொன்னான வாக்குகளை தாமிராவுக்கே வழங்கும் படி உங்கள் பொற்பாதம் தொட்டு, இருகரம் கூப்பி வேண்டி விரும்பி, தங்கி தவங்கி கேட்டுக்கொள்கிறேன், நன்றி வணக்கம்..

வெண்பூ said...

ஜோக் கூட உங்க ஏரியாலருந்தே புடிக்கிறீங்க... :))

பொங்கல் வாழ்த்துக்கள்...

Mahesh said...

அண்ணே.... நன்றி... நன்றி... நன்றி
விருதுக்கு நன்றி...

அவ்வ்வ்... அழுகாச்சியா வருது....

விடுமுறைய முறையா சந்தோசமா கழிச்சிட்டு வர வாழ்த்துகள் !!:)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கலுக்கு அப்புறம் நெறைய தங்கமணிக் கதைகள் வெளிவரும்னு நினைக்கிறேன்.

விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்.

என‌து ப‌திவுக‌ளில் பிழைக‌ள் வ‌ராது பார்த்துக்கொள்ள‌ மிக‌ முய‌ல்கிறேன். //
மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

கும்க்கி said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கலுக்கு அப்புறம் நெறைய தங்கமணிக் கதைகள் வெளிவரும்னு நினைக்கிறேன்.

விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்.

என‌து ப‌திவுக‌ளில் பிழைக‌ள் வ‌ராது பார்த்துக்கொள்ள‌ மிக‌ முய‌ல்கிறேன். //
மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

வழிமொழிகிண்றேன்..

ச்சின்னப் பையன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Pattaampoochi said...

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் :)))

" உழவன் " " Uzhavan " said...

மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்

தமிழன்-கறுப்பி... said...

:)

அன்புடன் அருணா said...

//ரவுடியாக ஒப்புக்கொண்ட‌ அன்புத்தோழி 'அன்புட‌ன் அருணா' //

அச்சச்சோ....பட்டாம்பூச்சி அவார்ட் ரவுடிகளுக்கா கொடுக்கவேண்டும்???
இது தெரியாமப் போச்சே....
அன்புடன் அருணா

kajan's said...

நீங்க மட்டுமா யோசீப்பீங்க எல்லாட்டி குடும்பமா யோசீப்பிங்களா

தாமிரா said...

நன்றி வெண்பூ.!
நன்றி மகேஷ்.! (ச்சு ச்சு.. இதுக்குல்லாம் அழக்கூடாது.. கண்ண தொடச்சுக்குங்க..)
நன்றி அமித்து.!
நன்றி கும்க்கி.!
நன்றி ச்சின்னவர்.!
நன்றி பட்டாம்பூச்சி.!
நன்றி உழவன்.!
நன்றி தமிழன்.!
நன்றி அருணா.!
நன்றி கஜன்ஸ்.!

சுரேகா.. said...

இன்னுமா வரலை?

சீக்கிரம் வாங்க!!!