Friday, January 16, 2009

இடைக்கால நிவாரணம்

  ஜூன் '08 பிளாக் துவங்கியதிலிருந்து இணையம் பக்கம் வராமல் நான்கு நாட்கள் இருந்திருக்கிறேன், முதல் முறையாக. மேலும் ஒரு வாரத்துக்கு இது தொடர இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு வேலைப்பளுவானாலும் இரண்டு நாட்களுக்கு மேலாக வராதிருந்தது இல்லை. பதிவிடாவிட்டாலும் பின்னூட்டங்களாவது இட்டிருக்கிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள். கடை காத்தாடிவிடக்கூடாது என்பதற்காக இந்த மின்னல் பதிவு. நன்றி.


  வெளியூர் அல்லது பிக்னிக் சென்று திரும்புபவர்கள் பெரும்பாலும் ரோஜாக்கள், அல்லது மாடர்ன் பூக்களை படம்பிடித்து வருவார்கள். ஒரு சேஞ்சுக்காக எனது கிராமத்தில் தென்பட்ட சில பூக்களை உங்களுக்காக பிடித்துத் தருகிறேன். இதன் பெயர்களையும், சிறப்புக்குறிப்புகளையும் நேரமில்லாததால் பின்னர் தருகிறேன். பெயர்களை நீங்களும் கணிக்கலாம், கூறலாம். மீண்டும் விடுமுறைகால வாழ்த்துகள், தற்காலிகமாக பை..பை.!


19 comments:

Saravana Kumar MSK said...

Me the first..

Saravana Kumar MSK said...

தொட்டால் சிணுங்கி பூ, எருக்கம்பூ,
மற்றவை எல்லாம் அறிந்த பூக்கள்தான்.. ஆனால் பெயர் தெரியவில்லை..

Saravana Kumar MSK said...

//ஒரு சேஞ்சுக்காக எனது கிராமத்தில் தென்பட்ட சில பூக்களை உங்களுக்காக பிடித்துத் தருகிறேன்.//

nice.. :)

சந்தனமுல்லை said...

வாடாமல்லி,தும்பை, பூவரசம்பூ...மீதியெல்லாம் முன்னாடி சொல்லிட்டாங்க!! சூப்பர் தாமிரா! எங்க ஊருக்குப் போன எஃபெக்ட இந்த பூக்களை பார்க்கும் போது!! ஹாப்பி ஹால்ஸ்!!

வால்பையன் said...

எல்லா படங்களும் நல்லா இருந்துச்சு!

என்ன கேமரா வச்சிருக்கிங்க?

வெண்பூ said...

உங்களுக்குள்ள இப்படி ஒரு கேமிரா கவிஞனா? நான் சின்ன வயதில் என் ஊரில் பார்த்த பூக்களே இவ்வளவு அழகாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது, முக்கியமாக அந்த எருக்கம் பூக்கள் அருமை..

Mahesh said...

அருமையான படங்கள்... நல்லா எடுத்துருக்கீங்க.

கும்க்கி said...

போட்டா அல்லாம் நல்லாருக்குங்னா..
ஊருக்கு போனாலும் எண்ணம்லாம் எங்க சுத்திவருது பார்தீங்களா....
சீக்கிரம் வந்து கச்சேரிய ஆரம்பிங்க.

அன்புடன் அருணா said...

மின்னல் பதிவு....மின்னியது பூக்கள்..
அன்புடன் அருணா

ச்சின்னப் பையன் said...

மிக்ஸி, அல்வாக்குள்ளே பணம் - இப்படி ஏதாவது கிடைக்கும்னு நினைச்சி வந்தேன்!!!

புதுகைத் தென்றல் said...

ஹை தும்பை பூ,

அம்மம்மா வீட்டுக்கு அருகில் நிறைய இருக்கும். அதை பறிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ரொம்ப லீவெடுக்காம சீக்கிரம் வாங்க.

அத்திரி said...

//மிக்ஸி, அல்வாக்குள்ளே பணம் - இப்படி ஏதாவது கிடைக்கும்னு நினைச்சி வந்தேன்!!!//]ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அத்திரி said...

நம்ம ஊரு பூக்கள் எல்லாம் நல்லாயிருக்கு ஆங்.,...............

Anonymous said...

ஏம்பா,

குறைஞ்சது ஒரு மாசச் சம்பளமாவது கிடைக்கும்னு வந்தா ஏமாத்திட்டியே.

படமெல்லாம் நல்லா இருக்கு. தொட்டாச்சினுங்கியப் பாக்கும்போது வயல் வரப்புல நடந்த மாதிரி ஒரு உணர்வு.

Anonymous said...

பட்டாம்பூச்சி விருது பதிவு போட்டாச்சு வந்து பாருங்க.

தாமிரா said...

நன்றி சரவணா.! (எனக்கும் சில பூக்களின் பெயர்கள் தெரியவில்லை. பிறகு முயற்சிக்கிறேன்.)

நன்றி சரவணா.! (எங்க ஊருக்குப் போன எஃபெக்ட இந்த பூக்களை பார்க்கும் போது// பலருக்கும் இந்த .:பீல் வந்துள்ளதை காணும்போது அடிப்படையில் கிராமத்து ஆட்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. மகிழ்ச்சி.! )

நன்றி வால்.! (சோனி H3)

நன்றி வெண்பூ.! (உங்களுக்குள்ள இப்படி ஒரு கேமிரா கவிஞனா?// ஹைய்யா.. இது நல்லாருக்கே.. )

நன்றி மகேஷ்.! (இன்னும் இருக்கு.. சென்னை வந்ததும் போட்டுறலாம்.)

நன்றி கும்க்கி.! (கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, பண்ணிடலாம். ஆமா, உங்க கடை எப்பிடி போகுது?)

நன்றி அருணா.!
நன்றி சின்னவர்.!
நன்றி தென்றல்.! (27 ல் வருகிறேன்.. பை தி வே.. அது தும்பை அல்ல.. காட்டுத்தும்பைன்னு நெனைக்குறேன்.)

நன்றி அத்திரி.!

நன்றி வேலன்.! (தற்காலிகமா அடைக்கப்பட்ட பொட்டிக்கடையில் ஒருமாச சம்பளமா? உங்களுக்கே ஓவரா தெரியல?)

இய‌ற்கை said...

very beautiful with nativity

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் இடைக்கால நிவாரணப் பூக்கள் மிகவும் அழகு.

ரோஜவையே விதம் விதமாக பார்த்த கண்ணுக்கு, மிகவும் ஆறுதலளித்தது உங்களின் இடைக்கால நிவாரணம்

தாமிரா said...

நன்றி இயற்கை.! (நீங்கதான் ஐம்பதாவது பாலோயரா? மைன்ட்ல வெச்சுக்கிறேன்)
நன்றி அமித்து.!