முன்குறிப்பு 1: முந்தைய பதிவில் விட்டுப்போன மேலும் சில பூக்கள், இயற்கைக்காட்சிகள், விடியோக்கள் சென்னை வந்ததும் பதிவேற்றப்படும். தந்த வரவேற்புக்கு நன்றி..
முன்குறிப்பு 2: கீழ் வரும் கவிதைகள் எனது முதல் முத்தம் வலைப்பூவில் துவக்கத்தில் பதிவேற்றப்பட்டவை. முதல் முத்தம் இன்னும் செப்பனிடப்படாமல் இருக்கிறது. புதிய கவிதைகளை போடலாம் எனில் கவிதைக் குறிப்பேட்டை சென்னையிலேயே விட்டுவந்துவிட்டேன்..
*****
காற்றுக்கும் மழைக்கும்
பல்வேறு வடிவங்கள்
உனக்கிருப்பதைபோலவே !
*****
ஒளி உன்னை ஊடுருவுகிறது
மலர்கள் உன்மீது மிதக்கின்றன
தென்றல் உன்னுடன் சலசலக்கிறது
வேட்கை தணிவிக்கிறாய்
நான் நீடித்திருக்க உயிர்ப்பொருளாகிறாய்..
நீரைப் போலவே நீயிருக்கிறாய் !
*****
இத்தனை வருடக் காத்திருத்தலுக்குப்பின் வந்த
அந்த முதல் இரவு கூட
சில மணி நேரங்களே விழித்திருந்தது.
*****
நீ முத்தமிடும் அழகை
ஒவ்வொரு முறையும் என் கவிதை சொல்ல முயன்று
தோற்றுப்போகும்.!
*****
நீ எப்போதெல்லாம்
பச்சை சேலை கட்டிக்கொள்கிறாயோ
அப்போதெல்லாம் நான் சீக்கிரமாக
வேலைக்குச் செல்லமுடிவதில்லை!
.
25 comments:
இதுவரை 49 பாலோயர்ஸ் வந்துள்ளனர். ஐம்பதாவது பாலோயருக்கு விரைவில் வெளியாக இருக்கும் எனது கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா மேடையிலேயே கிடைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். (விரைவில் என்றால் எப்படியும் இருபது வருஷத்துக்குள்..)
ஏற்கெனவே படிச்சிட்டேன்! என்னடா படிச்ச மாதிரி இருக்கேன்னு முன்குறிப்பைப் பார்த்தேன்..முன்குறிப்பெல்லாம் முதல்லே படிக்கற வழக்கமெல்லாம் கிடையாது!!
அண்ணே கலக்கல்..!!
அசத்துறிங்க...
//நீ எப்போதெல்லாம்
பச்சை சேலை கட்டிக்கொள்கிறாயோ
அப்போதெல்லாம் நான் சீக்கிரமாக
வேலைக்குச் செல்லமுடிவதில்லை!.//
மத்த நிற சேலைகள் கட்டினால்? சீக்கிரமாக இல்லை.. மொத்தமாகவே போக முடியலியா????? ஹிஹி...
இன்னும் நிறைய உண்மைகள் வெளி வரும் போல இருக்கே ;) அதனாலதானே இருக்கற குறிப்பேட்டை இல்லைன்னு சொல்றிங்க...;)
அட்டகாசம் தாமிரா அண்ணா..
//நீ முத்தமிடும் அழகை
ஒவ்வொரு முறையும் என் கவிதை சொல்ல முயன்று
தோற்றுப்போகும்.!.//
அடடா.. அசத்தல்..
//நீரைப் போலவே நீயிருக்கிறாய்.. //
இந்த ஒரு லைனே கவிதை...
உங்களைப் பாத்தா பொறாமையா இருக்கு... நமக்கு கவிதை எழுத வரமாட்டேங்குதே :(
//நீ முத்தமிடும் அழகை
ஒவ்வொரு முறையும் என் கவிதை சொல்ல முயன்று
தோற்றுப்போகும்.!//
இந்த வரிகளை பற்றி சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்......
கவிதைக்கும்,நமக்கும் ரொம்ப தூரம் அண்ணே
*****
//நீ எப்போதெல்லாம்
பச்சை சேலை கட்டிக்கொள்கிறாயோ
அப்போதெல்லாம் நான் சீக்கிரமாக
வேலைக்குச் செல்லமுடிவதில்லை!//
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!!!!!!!!!!!!
//சில பூக்கள், இயற்கைக்காட்சிகள், விடியோக்கள் சென்னை வந்ததும் பதிவேற்றப்படும். தந்த வரவேற்புக்கு நன்றி..//
எத்தனை நாள் லீவு? குடுத்து வச்ச ஆளுப்பா??
குட்டி பாப்பாவை கேட்டதாக சொல்லவும்.
அடுத்த மாதம் கடையத்தில் பதிவர் சந்திப்பு இருக்கு... அதுவரைக்கும் ஊர்ல இருங்க
ஒவ்வொரு வாட்டியும் மிரட்ட வேண்டியிருக்கு ஏன் என் கட பக்கம் வரலை...........
//ச்சின்னப் பையன் said...
//நீ எப்போதெல்லாம்
பச்சை சேலை கட்டிக்கொள்கிறாயோ
அப்போதெல்லாம் நான் சீக்கிரமாக
வேலைக்குச் செல்லமுடிவதில்லை!.//
மத்த நிற சேலைகள் கட்டினால்? சீக்கிரமாக இல்லை.. மொத்தமாகவே போக முடியலியா????? ஹிஹி...
//
ரிவீட் ரிபீட்டே
அடடா.. தாமிராவ அண்ணேனு சொல்லிட்டேனா..
சூப்பரா இருக்கு கவிதை
51 பேர் வந்துட்டாங்க
ஊர்லேந்து வந்தவுடனே கவிதை
வெளியிட்டு விழாவா
2 வாரம் தானே ஊர்ல இல்லன்னு சொன்னிங்க
20 வருசத்துக்குள்ள வெளியிட்டு விழா சொல்றிங்க :))))))
//நீ எப்போதெல்லாம்
பச்சை சேலை கட்டிக்கொள்கிறாயோ
அப்போதெல்லாம் நான் சீக்கிரமாக
வேலைக்குச் செல்லமுடிவதில்லை!//
ஏன் டாஸ்மாக் ஞாபகம் வந்துருதா?
(காதல் என்பதும் ஒரு போதை தானே)
நீரைப்போலவே நீயிருக்கிறாய்
இந்த வரிகளே கவிதையைப் போல்தான் இருக்கிறது.
ரசிக்கிறேன்.
தாமிரா,
தலைவரே... அயர்ந்துபோய்விட்டேன். உங்கள் ஏரியா புதுக்கவிதைதான். வெளுத்துக்கட்டுங்கள்.
நான் தான் 32000 ஆவது வாசகன்...
//நீரைப் போலவே நீயிருக்கிறாய் !//
நீரைப் போலவே தெளிந்த அழகு கவிதை.
அன்புடன் அருணா
//நீரைப்போலவே நீயிருக்கிறாய்//
இந்த வரியே கவிதைதான்
நன்றி சந்தனமுல்லை.!
நன்றி தமிழன்கறுப்பி.!
நன்றி ச்சின்னப்பையன்.!
நன்றி சரவணா.!
நன்றி மகேஷ்.!
நன்றி அத்திரி.!
நன்றி நர்சிம்.!
நன்றி கார்க்கி.!
நன்றி ஸ்மைல்.!
நன்றி வால்பையன்.!
நன்றி அமித்து.!
நன்றி ரமேஷ் வைத்யா.!
நன்றி விஜய்கோபால்.!
நன்றி அருணா.!
நன்றி தாரணிப்பிரியா.!
Post a Comment