Tuesday, January 27, 2009

தங்கமணி ரிட்டர்ன்ஸ்

நீண்ட(?) இடைவேளைக்குப் பின்னர் தாமிரா IS BACK. 

   கோடைகாலத்தில் வற்றிய கிணற்றின் உட்சுவர்கள் மழைக்காலத்தின் துவக்கத்தில் நீர் சுரக்கத் துவங்குவதைப்போல பிரிவினால் சுரக்கத் துவங்கியிருந்த காதல் கிணறு நிரம்பி வழியத் துவங்கிய நேரத்தில்தான் என் மனைவியைச் சந்தித்தேன். ரமாவிடமும் காதல் மெலிதாக துளிர்த்திருந்தது. முதல் நாள், காதல் வானிலே சிறகடித்திருந்தோம். 

  அந்நேரத்திலும் 'எத்தனை நாளைக்குடா இது.. அடங்குடா கைப்புள்ள..' என உள்ளிருந்த தாமிரா கெக்கலித்தான். அவன் சொன்ன நாள் கணக்கு கூட இல்லாமல் மணிக்கணக்கிலேயே அந்த நீர்க்குமிழ் உடைந்துபோனது. ஒருவரையொருவர் பிறாண்டிக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் கயிற்று மேல் நடப்பதுபோலவே இருக்குதே.. பின்னர் சமாதானமாகி விழாக்கால கொண்டாட்டங்களையும், விருந்துகளையும் முடித்துக்கொண்டு ஒரு வழியாக சென்னை கிளம்பினோம். எனக்கு அப்போதிருந்த மனநிலை பெயில் முடிந்து சிறை திரும்பும் கைதியின் ம‌ன‌ நிலைக்கு ஒப்பான‌தாக‌ இருந்திருக்கும் என‌ எண்ணுகிறேன். 

*இன்னுமா சிலிண்ட‌ர் வாங்கி வைக்க‌வில்லை, என்ன‌தான் ப‌ண்ணிக்கிட்டிருந்தீங்க.? 

*15 நாளா வெளிய கொடியிலயே இந்த சட்டை கிடந்திருக்கே.. உள்ள எடுத்துப்போட்டுட்டு வரணும்னு தோணவே தோணாதா ஒங்களுக்கு? 

*வண்டியை கவர் போட்டு வெச்சிட்டு வாங்கன்னு எத்தன தடவை போன்ல‌ சொன்னேன்.? 

*பேப்பர நிறுத்திட்டு வாங்கன்னு சொன்னேனா? இல்லையா? 

*இந்த வாட்ச்சுல கண்ணாடி உடைஞ்சிருக்கே.. என்ன பண்ணினீங்க.? 

...ர‌மா த‌ன் திருப்ப‌ணியை ஆர‌ம்பித்திருந்தாள். நான் வேலைக்குக் கிள‌ம்பிக்கொண்டிருந்தேன். 

29 comments:

வனம் said...

வணக்கம் தாமிரா

நல்லாத்தான்யா இருக்கு (சாலமன் பாப்பையா போல்)


இதத்தான் விரும்பாத வசதி என்று சொல்வார்களோ

நன்றி
இராஜராஜன்

சந்தனமுல்லை said...

ஹாய் தாமிரா..வெல்கம் பேக்!

Mahesh said...

வெல்கம் பேக் தாமிரா... பரிசலோட டூரெல்லாம் போய் வந்தீங்க போல... சிலிண்டரு, பைக் கவர் எல்லாம் வாழ்க்கைல ஜகஜம்... :)))

கும்க்கி said...

ஹி....ஹி...
நடக்கட்டும்..நடக்கட்டும்.

தாமிரா said...

நன்றி ராஜராஜன்!
நன்றி சந்தனமுல்லை!
நன்றி மகேஷ்!
நன்றி கும்க்கி!

இராகவன் நைஜிரியா said...

நமக்கு ஒரு அடிமை கிடைச்சுட்டாண்டா அப்படின்னு ஒரு படத்தில வடிவேலு சொல்லுவாரே அது மாதிரி உங்க தங்ஸ் எதாச்சும் சொன்னாங்களா?

இராகவன் நைஜிரியா said...

//நீண்ட(?) இடைவேளைக்குப் பின்னர் தாமிரா IS BACK. //

வாங்கோ... வாங்கோ...

தாமிரா said...

நன்றி ராகவன்.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏதோ மம்மி ரிட்டர்ன்ஸ் - அப்படீன்றா மாதிரி எழுதியிருக்கீங்க.

கோடைகாலத்தில் வற்றிய கிணற்றின் உட்சுவர்கள் மழைக்காலத்தின் துவக்கத்தில் நீர் சுரக்கத் துவங்குவதைப்போல பிரிவினால் சுரக்கத் துவங்கியிருந்த காதல் கிணறு நிரம்பி வழியத் துவங்கிய நேரத்தில்தான் என் மனைவியைச் சந்தித்தேன்//

கலக்கல்

னக்கு அப்போதிருந்த மனநிலை பெயில் முடிந்து சிறை திரும்பும் கைதியின் ம‌ன‌ நிலைக்கு ஒப்பான‌தாக‌ இருந்திருக்கும் என‌ எண்ணுகிறேன் //
கலக்கலோ கலக்கல்

..ர‌மா த‌ன் திருப்ப‌ணியை ஆர‌ம்பித்திருந்தாள். நான் வேலைக்குக் கிள‌ம்பிக்கொண்டிருந்தேன்.//

மனதில் பதிவுக்கு மேட்டர் கிடைத்ததை எண்ணிக்கொண்டே

சரியா பாஸ்

பரிசல்காரன் said...

எது எப்படியோ அவங்க வந்தாத்தான் உங்களுக்கு பதிவுக்கு மேட்டர் சிக்குதுய்யா!!!

அத்திரி said...

welcome back

SK said...

:)

attakasam :) veetukku ponga.. full picture odum :)

narsim said...

WEL COME..BACK

கார்க்கி said...

பேக்கு.. வெல்கம் back

sayrabala said...

ada aarampicchacha
(ithu summa trailor thaan kanna main picture a innam avunga aarampikkave illa )

ஸ்ரீமதி said...

அவங்க எவ்ளோ அக்கறையா கேட்கறாங்க?? நீங்க என்னமோ இப்படி கவலைப்படறீங்களே அண்ணா.. :))

வால்பையன் said...

என்னா தான் வருத்தப்பட்டாலும்,
இந்த வசவுகள் இல்லாமல் உங்களாலும் இருக்க முடியாது!
விடுங்க நண்பா இன்னுமா உங்களுக்கு பழகி போகல!

ச்சின்னப் பையன் said...

ஹி....ஹி...
நடக்கட்டும்..நடக்கட்டும்.:-))

சென்ஷி said...

:))))

அன்புடன் அருணா said...

Back to form!!!! Start music!!!
hahahahaha.
anbudan aruna

எம்.எம்.அப்துல்லா said...

வாண்ணே!வாண்ணே!வாண்ணே!

நீ இல்லாம எனக்கு இங்க பொழுதே போகலண்ணே :)))

rathnapeters said...

ஒரு கதையின் தொடர்ச்சியா அல்லது உங்கள் சென்னை விஜயத்திற்கு பிறகு நடந்த உண்மை சம்பவமா?

தாமிரா said...

நன்றி அமித்து.!
நன்றி ப‌ரிச‌ல்.! (யோவ்.. இன்னா அப்போ ம‌த்த‌துல்லாம் வேற‌ யாராவ‌தா எழுதிக்குடுக்குறாங்க‌?)
நன்றி அத்திரி.!
நன்றி SK.!
நன்றி ந‌ர்சிம்.!
நன்றி கார்க்கி.!
நன்றி பாலா.!
நன்றி ஸ்ரீம‌தி.!
நன்றி வால்.! (விடுங்க நண்பா இன்னுமா உங்களுக்கு பழகி போகல!// ஆபீஸுக்கு ஒழுங்கா கிள‌ம்பிக்கினுருக்கேனே.. ப‌‌ழ‌காமலேயா?)
நன்றி ச்சின்ன‌வ‌ர்.!
நன்றி சென்ஷி.!
நன்றி அருணா.!

ந‌ன்றி த‌ல‌.! (ஆமா இம்மா வேல‌ ந‌ட‌ந்திருக்கே சொல்ல‌வேயில்ல‌.. நான்கூட‌ ஏண்டா இவுரு பிளாக்க‌ பூட்டி வெச்சிருக்காருன்னு கொள‌ம்பிட்டேன்.. போன் வேற‌‌ லைன் கெடைக்க‌மாட்டேங்குது, ஊர்ல‌யிருந்து வ‌ந்துட்டீங்க‌ளா? என்ன‌ ந‌ட‌ந்துக்குனுருக்குது.. எப்ப‌ பாக்க‌லாம்?)

தாமிரா said...

நன்றி ரத்னாபீட்டர்.! (உண்மையா?// இப்பிடில்ல்லாம் பப்ளிக்ல கேக்கக்கூடாது..)

புதிய வருகைக்கு நன்றி மேடம். நேரமிருந்தால் லேபிளில் 'வார்னிங் டூ பேச்சிலர்ஸ்' படியுங்கள். தொடர்கதையா? தலைவிதியா? என புரியலாம்.

தாமிரா said...

நமக்கு நாமே திட்டத்தில் மீ த 25.!

Anonymous said...

இந்த பதிவு போட தங்கமணி கிட்ட அனுமதி வாங்கிட்டுதானே போட்டீங்க

Raj said...

/பிரிவினால் சுரக்கத் துவங்கியிருந்த காதல் கிணறு நிரம்பி வழியத் துவங்கிய நேரத்தில்தான் //

சிலேடையா ஏதோ சொல்றா மாதிரி கீது....வேணாம்பா...அப்புறம் உன் நினைப்பு அந்த மாதிரி!!!!!...நாங்க ஒயுங்கா ஒரு உதாரணம்தான் சொன்னோம்....இதுல உள்குத்து எதுவும் இல்லன்றுவீங்க!

Saravana Kumar MSK said...

என்ன அண்ணா.. ஊரில் இருந்து வந்தாச்சா??
அண்ணியை கேட்டதாக சொல்லவும்..

(அண்ணிதான் உங்களை ஆயிரம் கேள்விகள் கேட்கறாங்க..)

மங்களூர் சிவா said...

/
..ர‌மா த‌ன் திருப்ப‌ணியை ஆர‌ம்பித்திருந்தாள். நான் வேலைக்குக் கிள‌ம்பிக்கொண்டிருந்தேன்.
/

அண்ணி வணக்கமுங்க அண்ணன் பாவம் எதா இருந்தாலும் கொஞ்சம் பாத்து பண்ணுங்க !!

ஒரு கண்ணாலமான ஆம்பளையோட கஸ்டம் இன்னொரு கண்ணாலமான ஆம்பளைக்குதானே தெரியும்!!