Thursday, January 29, 2009

மசினகுடியில் நிகழ்ந்த ரகசிய பதிவர் சந்திப்பு (புகைப்படங்களுடன்)
கடல் மட்டத்திலிருந்து 2000 m உயரத்தில் சரிவான மலைச்சாலையில் அந்த 'டெம்போ டிராவலர்' பயணித்துக்கொண்டிருந்தது. அந்த மதிய நேரத்திலும் அதிகாலையோ என்று எண்ணும் நிலையில் வானிலை நிலவ, குளிர்காற்று சில்லிடச்செய்து கொண்டிருந்தது. ஒரு புறம் நீண்டு உயர்ந்திருந்த பெயர் தெரியாத மரங்களுடன் மலை. மறுபுறம் பச்சையின் அத்தனை கிளை வண்ணங்களையும் அள்ளித் தெளித்ததைப்போன்ற பசுமைப் பள்ளத்தாக்குகள். அந்த அடியாழங்களில் நாம் காண்பது இடப்புறம் இருப்பதைப்போன்ற பெரும் மரங்கள்தானா? அல்லது அவை சிறு புதர்களா? சுற்றித்திரிந்த வெண்மேகங்கள் பரவசப்படுத்தின. உதகையையும் தாண்டி அந்த வண்டி எங்கே சென்று கொண்டிருக்கிறது.? அதனுள்ளே ஒரு வளரும் இளம் எழுத்தாளர் ஆறு ரசிகர்களால் கடத்தப்பட்டு எங்கே கொண்டு செல்லப்படுகிறார்.?

ஆ..வ்வ்வ்.. சரி சரி அடிக்க வரவேண்டாம், விஷயத்துக்கு வருகிறேன்.

பயணம் இனிது, ஒத்த ரசனையுள்ள நண்பர்களுடன் பயணிப்பது அதனினும் இனிது, அதுவும் நோக்கமற்ற பயணம் இனிதோ இனிது, அதிலும் அந்த பயணம் இயற்கையின் மடியினை நோக்கியதாக அமைந்துவிட்டால் அற்புதம்.! அண்ணன் வடகரை வேலனின் முன்முயற்சியிலும் ஏற்பாட்டிலும் இது சாத்தியமானது. முதல் பாராட்டுக்குரியவர் அவர். நான் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்தால் கடைசி மணித்துளி வரை முழுமையாக வீட்டுப்பறவையாகவே இருக்க விரும்புவேன். பெரும்பாலும் அலுவலக, நண்பர்கள் தொடர்பில்லாமலே இருந்துவிடுவேன். பயணங்களிலும், நண்பர்களுடனான கொண்டாட்டங்களிலும் மிக விருப்பம் இருப்பினும் சென்னையில் இருக்கும் போது திட்டமிடக்கூடாதா என்றே புலம்பிக்கொண்டிருப்பேன். என்னை வலுவாக தொடர்ந்து சுற்றுலாவுக்கு அழைத்துவந்தவர் கும்க்கி. அவர் கட்டாயப்படுத்தியிருக்காவிட்டால் இந்த அழகான அனுபவத்தை நான் இழந்திருக்கக்கூடும். அவருக்கு என் அடுத்த நன்றி.
நான் கோவை வந்த இரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த போதும் அன்போடு காத்திருந்து அணைத்து வரவேற்று அன்பு செய்தார் பரிசல். உடன் வேலன். முன்பு ஒரேமுறை அதுவும் சில நிமிடங்களே பார்த்திருந்தாலும் ஒரு தம்பியின் மீதான பாசமாக இருந்தது அவர் என் மீது காட்டியது. சுற்றுலாவில் இணைந்து கொள்ளமுடியாத சூழலில் இருந்தாலும் இரயில் நிலையத்தில் காத்திருந்து சந்தித்த தமிழ்பிரியனின் நட்பு இணையற்றது
அடுத்த இரண்டு நாட்களில் நான் கொண்ட அனுபவம் புதிது. இந்த வலைப்பூவும், எனது எழுத்துக்களுமா இத்தனை நட்பையும், அன்பையும் பெற்றுத்தந்தது.? வலைப்பூவில் இயங்குவதற்காக பெருமை கொள்கிறேன். எனது சிறு முயற்சிக்கு இதை விட வேறென்ன ஊதியம் கிடைத்துவிடமுடியும்? அதுவும் சில காலமாக திசைமாறி எந்திரமயமாகிக்கொண்டிருந்த என் வாழ்வில்தான் வலைப்பூவினால் எத்தனை பெரிய மாற்று.!!

நோ செண்டிமெண்ட்ஸ்.. விஷயத்துக்குப்போகலாம். தமிழ்பிரியனை வழியனுப்பிவிட்டு குழு தங்கியிருந்த சஞ்சய்'யின் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்ற போது கார்க்கி தூங்கிவழிந்தவாறே நெட்டில் மேய்ந்துகொண்டிருந்தார். விழிப்பதே கணினியின் முகத்தில்தான் போலிருக்கிறது. முந்தின நாளின் கிறக்கம் தணியாத கும்க்கி குளிக்கலாமா, வேண்டாமா என்பது போல சுயசிந்தனையில் இருந்தார். கிளம்ப ஆயத்தமாக இவ்வளவு .:பிரெஷ்ஷாக யாரிந்த அழகன் எனக்குப்போட்டியாக.? பிறகுதான் தெரிந்தது அது பின்வந்த சுற்றுலா முழுதிலும் அனைவரையும் ஆக்ரமித்த 'செல்வேந்திரன்', தயாராக இருந்த இன்னொருவர்? இந்த அமுல் பேபியைத்தான் தெரியுமே.. அழகான பெயரான், 'வெயிலான்'.


கண்டிப்பாக குளிக்கத்தான் வேண்டும் என வேலன் விதிமுறையிட்டுவிட்டதால் பாவம் கார்க்கியும் குளிக்கவேண்டியதாகப் போயிற்று. பின் ஒருவர் பின்னொருவராக கிளம்ப அந்த சுற்றுலா ஆரம்பமானது. கிளம்புகையில்தான் தெரிந்தது 'சஞ்சய்' கலந்துகொள்ளவில்லை என்பது. ஓட்டுனர் ரமேஷுடன் எட்டு பேராக துவங்கியது பயணம். அன்னபூர்ணாவில் காலையுணவு. பசி மிகுதியில் உணவும் மிகுதியாகி நிமிரமுடியாது போனேன். இன்னொருவரும் என் நிலையில். பெயர் வேண்டுமா?
நீண்ட பயணத்தின் இடைவேளையாக 'வ்யூபாய்ண்டில்' சிறிய இளைப்பாறுதல். குப்பை போடுவதாக எங்களை தவறாக எண்ணி அங்கிருந்த வனக்காவலர் எங்களைப்படுத்த, அனைவரும் வருத்தம் தெரிவித்து கிளம்புகையில் மாற்றுக்கருத்தை தெரிவித்து அவருடன் மோதக் கிளம்பினார் கும்க்கி. அந்த விஷயத்திலிருந்தே துவங்கியது, சந்திப்பு முழுமைக்குமான விவாதம். உதகையையும் தாண்டி எங்கே போகிறோம்?. அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் மசினகுடியை நோக்கி பயணமானோம். முன்னதாக தொட்டபெட்டா சிகரத்தில் சிறிது நேரம் இயற்கையை ரசித்தோம். அந்த இடத்தில் நான் எடுத்த ஒரு இயற்கைக்காட்சி அனைவரையும் பரவசப்படுத்தியது.


எனக்கே தெரியாமல் எனக்குள் உறங்கிக்கிடந்த புகைப்படத்திறமை(?) அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. எல்லோரும் என்னை படமெடுங்கள், என்னை படமெடுங்கள் என்று என்னைப் படுத்திவிட்டார்கள். (இந்தக்கட்டுரையில் ஆங்காங்கே சில கற்பனைச்செய்திகளும் உள்ளன என்பதை உங்களுக்கு இந்நேரத்தில் நினைவூட்டிக்கொள்ள விரும்புகிறேன்). அங்கே திரு.லதானந்த் அவர்களையும் சந்தித்தோம். அவர் தந்த ஒரு முக்கிய பரிசுப்பொருளையும் பெற்றுக்கொண்டோம். இயற்கையின் பேரழகில் வழியெங்கும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே பயணத்தைத்தொடர்ந்தோம்


பின்னர் திட்டப்படி நாங்கள் மசினகுடி விடுதியை அடைந்த போது இருள் சூழ்ந்திருந்தது. மிகவும் தாமதமாகவிட்டதால் சபாரி செல்ல இயலவில்லை. அடர்ந்த வனப்பகுதில் அமைந்திருந்தது அந்த விடுதி. பாதுகாப்புக்காக மின்வேலி அமைக்கப்படிருந்தது. இரவு நேரக்கொண்டாட்டங்களும், சீட்டாட்டமும் வெகுநேரம் தொடர்ந்தது. உணவு அருமையாக இருந்தது. மறுநாள் காலை சபாரியும் சில பல காரணங்களால் ரத்தானது. தாமதமாக தூங்கியும் காலையிலேயே மான்களைப்பார், மயில்களைப்பார் என வேலன் எழுப்பிவிட்டுவிட்டார். காலை நேரம் அந்தச்சூழல் அற்புதமாக இருந்தது. பச்சைப்பசுமை, மரங்கள், அருகே ஓர் சிறிய காட்டு ஓடை, தெள்ளிய நீர். பிரம்மாண்டமான மூங்கில் புதர்கள்.. இயற்கையின் எழில் கொஞ்சியது. கார்க்கியின் கலகலப்பு அனைவரையும் தொற்றியிருந்தது. செல்வேந்திரனைப் பற்றி சொல்லவே வேண்டாம். பரிசலின் பதிவில் தெரிந்திருப்பீர்கள். கொஞ்சம் அமைதியாக இருந்தாலும் வெயிலான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக தோன்றினார். மீண்டும் புகைப்படங்கள்.


சீக்கிரமே எழுந்ததால் பசி வயிற்றைக் கிள்ள காலை உணவு தாமதமாகி சோதனை ஏற்பட்டது. பிறகு உண்டு கிளம்பவே 10 மணியாகிவிட, இப்போது கிளம்பினால்தான் நான் எனது 8 மணி பஸ்ஸை பிடிக்கமுடியும் என்ற நிலைமை.மீண்டும் என்னாலேயே வேறு சில நிறுத்தங்களைத் துறந்து வண்டி கிளம்பியது. குளியலை மட்டும் மீளும் வழியில் உள்ள ஒரு அழகிய சிற்றாற்றில் வைத்துக்கொண்டோம். பளிங்கு போன்ற நீர், .:ப்ரீஸிங் குளிர். கார்க்கியும், செல்வேந்திரனும் குளிக்காமல் ஜகா வாங்க முயற்சிக்க இழுத்து உள்ளே போடப்பட்டார்கள். (அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளது)


கட்டுரை மிக நீண்டு கொண்டிருப்பதால் விரைந்து முடித்துக் கொள்கிறேன். விடுபட்ட பகுதிகளையும், வசனப்பகுதிகளையும் பரிசல், வேலன், வெயிலான் எழுதுவார்கள் என நம்புகிறேன். அப்துல்லா, நர்சிம், வெண்பூ போன்ற சென்னை நண்பர்கள் இல்லாத ஒரே குறையுடன் கோவை வந்து சேர்ந்தோம். சரியான நேரத்தில் வந்து சேர்ந்ததால் உணவுப்பொட்டலம், தண்ணீர் பாட்டிலுடன் காத்திருந்த சஞ்சய் என்னை பஸ்ஸுக்குள் தள்ளி கதவை அடைத்து வழியனுப்பினார். சொல்லொணாத நிறைவுடன் சாப்பிடக்கூடத்தோன்றாத மனநிலையில் சென்னை வந்து சேர்ந்தேன். மீண்டும் இது போன்ற ஒரு சுற்றுலாவை நடத்த அனைவருமே பேசிக்கொண்டோம். அதற்காக காத்திருக்கிறேன்.
நீண்ட விடுமுறை, அழகான சுற்றுலா என களித்திருந்த நான் மறுநாள் கொஞ்சம் சோகமாகவே அலுவலகம் திரும்பினேன். கணினியைத் திறந்தபோது வேலனிடம் இருந்து மெயில் வந்திருந்தது, சுற்றுலாவுக்கான உனது ஷேர் இவ்வளவு என்று.. இன்னும் சோக‌மானேன்..!


.

29 comments:

எம்.எம்.அப்துல்லா said...

மீ த ஃபர்ஸ்ட்டு :)

எம்.எம்.அப்துல்லா said...

//அதனுள்ளே ஒரு வளரும் இளம் எழுத்தாளர் //

யாரச் சொல்றீங்க??? கும்கியவா???

எம்.எம்.அப்துல்லா said...

//எனது எழுத்துக்களுமா இத்தனை நட்பையும், அன்பையும் பெற்றுத்தந்தது.? //

புருஞ்சாச் சரி :)))

எம்.எம்.அப்துல்லா said...

//கார்க்கியும் குளிக்கவேண்டியதாகப் போயிற்று//

ஹா...ஹா...ஹா...

எம்.எம்.அப்துல்லா said...

//அனைவரும் வருத்தம் தெரிவித்து கிளம்புகையில் மாற்றுக்கருத்தை தெரிவித்து அவருடன் மோதக் கிளம்பினார் கும்க்கி. //

இந்தக் கம்யூனிஸ்ட்டு ஆளுகளே இப்படித்தன்பா

:)))))))

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா, நர்சிம், வெண்பூ போன்ற சென்னை நண்பர்கள் இல்லாத ஒரே குறையுடன் கோவை வந்து சேர்ந்தோம். //

யோவ் அண்ணே படிச்சுக்கிட்டே வரயில நம்ப போகலையேன்னு நான் நினைக்கத் துவங்கிய இடத்தில் கரெக்ட்டாக வருகிறது இந்த வரிகள் :((


நான் அபுதாபில் இருந்தாலும் என் நினைவெல்லாம் மசினக்குடியிலேயே இருந்தது.

அபிஅப்பா உங்கள் அனைவரின் நலத்தையும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்.

singainathan said...

:)
Anputan
Singai Nathan

அத்திரி said...

//கார்க்கியும் குளிக்கவேண்டியதாகப் போயிற்று//

//ஹா...ஹா...ஹா...//ரிப்பீட்டேய்.....................

மிஸஸ்.டவுட் said...

நல்ல பயணக் கட்டுரை . இப்படி ஊர் சுத்த அனுமதித்த தங்கமணி அண்ணி வாழ்க... வாழ்கவே ...!

அத்திரி said...

//கணினியைத் திறந்தபோது வேலனிடம் இருந்து மெயில் வந்திருந்தது, சுற்றுலாவுக்கான உனது ஷேர் இவ்வளவு என்று//

அண்ணாச்சியோட தனி சிறப்பு இது தானோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

//எனக்கே தெரியாமல் எனக்குள் உறங்கிக்கிடந்த புகைப்படத்திறமை(?) அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.//

ஆங்..............சொல்லவேயில்லை...

அன்புடன் அருணா said...

ம்ம்ம் .கலக்குங்க...கலக்குங்க!
அன்புடன் அருணா

ச்சின்னப் பையன் said...

கலக்கல் டூர் போயிருக்கீங்க எல்லாரும்....

வெயிலான் said...

// கொஞ்சம் அமைதியாக இருந்தாலும் வெயிலான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக தோன்றினார். //

எனக்கும் அப்படித்தான் தோன்றியது. நன்றி!

மொதப் படத்துல இருக்கும் கருப்புக் கண்ணாடியர் யார்?

மிக அழகான என் படங்கள் பல இருக்கையில் இந்தப் படத்தை போட்டு என் இமேஜை டேமேஜ் பண்ணீட்டீங்களே 'தல' :(

Mahesh said...

அட... அன்னிக்கி பரிசல் கூட பேசும்போது நீங்களும் வந்தாலும் வரலாம்னு சொன்னாரு.... போய் எஞ்சாய் பண்ணீங்களா?

என்னமோ இயற்கை காட்சி.. பாராட்டுமழைன்னு பில்டப்பை போட்டுட்டு படத்தை போடலயே தல.... (அப்பறம் அது என்ன முக்கியமான பரிசு லதானந்த் அங்கிள் கிட்டயிருந்து? எனக்கு மட்டும் காதுல சொல்லுங்க)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஏம்ப்பா..

இப்படி வரிசை, வரிசையா குல்லா மாட்டிக்கின்னு போஸ் கொடுக்குற நேபாளி போட்டோவா போடுறீங்களே..?

போட்டால இருக்குறவுக யாருன்னு சொல்ல வேண்டாமா? நாங்க யாருன்னு நினைச்சு புல்லரிச்சுக்கிறது..?

பரிசல்காரன் said...

தாமிரா...

தங்கமணிக்கு அல்வா குடுத்துட்டு வந்ததை சிம்பாலிக்கா எங்களுக்கு அல்வா குடுத்து புரியவெச்சீங்களே.. அதச் சொல்லலியே...

//அந்த இடத்தில் நான் எடுத்த ஒரு இயற்கைக்காட்சி அனைவரையும் பரவசப்படுத்தியது.//

ங்கொய்யால.. ஒத விழாம தப்பிச்சோம்!

மங்களூர் சிவா said...

/
இப்படி ஊர் சுத்த அனுமதித்த தங்கமணி அண்ணி வாழ்க... வாழ்கவே ...!
/
ரிப்பீட்டு(குறுந்) தொழிலதிபர் சஞ்சய் தி க்ரேட். வாழ்க.

தாரணி பிரியா said...

ஊம் நல்லாத்தான் ஊர் சுத்தி இருக்கிங்க. :)

இராகவன் நைஜிரியா said...

மசினகுடி.. மிக அழகாக இருக்கும். அதிலும் அந்த சிறு ஓடை பார்க்கவே ரொம்ப அழகு. பொழுது சாயும் நேரத்தில் அந்த ஓடையின் கரையில் அமர்ந்து பார்த்தால் மான், நரி, செந்நாய் போன்றவற்றைப் பார்க்கலாம்.

மேலும் காட்டு இலாகாவின் லாக் ஹவுஸ் ஒன்றும் அங்கு உண்டு... அதுவும் மிக அழகாக இருக்கும்.

மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். ஒருவரையும் விடாமல், அவர்களைப் பற்றி தனித்தனியே சொல்லியுள்ளது மிக அழகு.

தாமிரா said...

முதலிலேயே ஒரு சின்ன தன்னிலை விளக்கம். அலுவலகத்தில் பிளாக் உபயோகிக்க முடியாததால், பதிவை எழுதியது மட்டுமே நான். போட்டோக்களை தேர்ந்தெடுத்தது, இடம் பார்த்து இணைத்தது அனைத்துமே என் நண்பரே.. ஆகவே இந்தப்பதிவில் அவர் ரசனையும் கொஞ்சம் இணைந்திருப்பது தவிர்க்கவியலாதது. புகழ்ச்சி எனில் அவருக்கும் பங்குண்டு. இகழ்ச்சி எனில் அவருக்கு மட்டுமே பங்குண்டு. நாங்கல்லாம் யாரு..எப்பிடி..?

MayVee said...

ஊர் சுற்றிய வாலிபன் பதிவு நல்ல இருக்கு......
போடோஸ் எல்லாம் சூப்பர்.... உங்களை mind ல i keeping........
எழுது நடை அருமை.....

தாமிரா said...

நன்றி அப்துல்.!

(அபி அப்பாவுக்கும் நன்றி, ஆமா போன் ஆ.:ப் அண்ணி வெச்சுட்டு என்னய்யா பண்ணிட்டுருக்கீங்க.?)

நன்றி சிங்கைநாத‌ன்.!

நன்றி அத்திரி.!

நன்றி மிஸஸ்.!

நன்றி அருணா.!

நன்றி ச்சின்ன‌ப்பைய‌ன்.!

நன்றி வெயிலான்.! (த‌ன்னிலை விள‌க்க‌த்தை ப‌டிச்சுட்டிங்க‌ளா?)

நன்றி ம‌கேஷ்.! (ப‌ரிச‌ல் சொல்லும்வ‌ரை ச‌ஸ்பென்ஸ்)

நன்றி உண்மைத்த‌மிழ‌ன்.!

நன்றி ப‌ரிச‌ல்.!

ந‌ன்றி சிவா.!

ந‌ன்றி தார‌ணி.!

ந‌ன்றி ராக‌வ‌ன்.!

ந‌ன்றி மௌவி.!

ரமேஷ் வைத்யா said...

தங்கமணிக்கு அல்வா குடுத்துட்டு வந்ததை சிம்பாலிக்கா எங்களுக்கு அல்வா குடுத்து புரியவெச்சீங்களே.. அதச் சொல்லலியே...

//அந்த இடத்தில் நான் எடுத்த ஒரு இயற்கைக்காட்சி அனைவரையும் பரவசப்படுத்தியது.//

ங்கொய்யால.. ஒத விழாம தப்பிச்சோம்!//

எனக்கொரு காப்பி பார்சேல்ல்ல்!

செல்வேந்திரன் said...

தாமிரா, பின்னிட்டீங்க... கும்கீயைப் பற்றி தனிப்பதிவு போட அனுமதிக்கும்படித் தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

காட்டேஜ் முன் நாம் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோக்கள் எதுவும் டிவிடியில் காப்பி ஆகவில்லை. அனுப்பிவைத்தான் தன்யானாவேன்.

Anonymous said...

மிஸஸ்.டவுட் said...
நல்ல பயணக் கட்டுரை . இப்படி ஊர் சுத்த அனுமதித்த தங்கமணி அண்ணி வாழ்க... வாழ்கவே ...!
//
:))

ஸ்ரீமதி said...

:))

வெயிலான் said...

// காட்டேஜ் முன் நாம் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோக்கள் எதுவும் டிவிடியில் காப்பி ஆகவில்லை. அனுப்பிவைத்தால் தன்யானாவேன். //

ரிப்பீட்டேய்.......

எனக்கு டிவிடியே வரவில்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த வலைப்பூவும், எனது எழுத்துக்களுமா இத்தனை நட்பையும், அன்பையும் பெற்றுத்தந்தது.? வலைப்பூவில் இயங்குவதற்காக பெருமை கொள்கிறேன். எனது சிறு முயற்சிக்கு இதை விட வேறென்ன ஊதியம் கிடைத்துவிடமுடியும்? அதுவும் சில காலமாக திசைமாறி எந்திரமயமாகிக்கொண்டிருந்த என் வாழ்வில்தான் வலைப்பூவினால் எத்தனை பெரிய மாற்று.!!//

மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் திரு. தாமிரா.