Thursday, February 5, 2009

தத்துவம் 0123.!

முதலில் வாழ்வின் சுமைகள் தெரியாத பள்ளிப்பருவம், விளையாடிக்களித்திருந்தோம். பிறகு உருகி வழியவிடும் காதலில் வழிந்துகிடந்தோம். பின்னர் மயங்கிக்கிறங்க வைக்கும் மதுவில் சரிந்திருந்தோம். அடுத்து காற்றிலே மிதக்கவைக்கும் காமத்திலே உவத்திருந்தோம். அதோடு பெண்மையின் பேறுகண்டு பிரமித்தோம். பின்னர் அதிகாலை மழை போன்ற மழலைக்காலத்தில் இனித்திருக்கிறோம். இனி ஏறிச்செல்லும் பொறுப்புகளில் அமிழ்ந்திருப்போம். பின்னர் கனிந்திருப்போம், நிழல் தேடி ஓய்ந்திருப்போம்.

ஏதாவது ஒரு பகுதியிலேயே தங்கிவிடுவோர் தேங்கிய நீராகிவிடுகிறார்கள், அல்லாமல் தெள்ளிய நீரோடையாய் அனைத்தையுமே தாண்டிவாருங்கள்..

மேலும், கூடுதலாக துவக்கத்திலிருந்து இறுதி வரை கருவிகளைப்போன்று சிலவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.. நல்லிசை, புத்தகங்கள், நட்பு, காதல்.. என இந்தப்பட்டியலும் பெரிதுதான்.. வாழ்க்கை இனிதானது. இதைப்போன்றதாகவே அனைவருக்கும் வாழ்க்கை அமைய இயன்றதைச்செய்திருக்கலாம், கூடிக்குலவியிருக்கலாம்.!

வாருங்கள், இப்போது கொஞ்சமாய் ரசித்திட‌லாம்.. கமலஹாசனையும் அமலாவையும், ரஜினிகாந்தையும் மாதவியையும்.!

டிஸ்கி:
வழக்கம்போல எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும், நேரமில்லாமல் வேலைப்பளு படுத்துகிறது. (அலோ.. யாரு? தன்ராஜா? நா ரொம்ப பிசி.!) மேலும் மொக்கைபோட்டு ரொம்ப நாளாவுதுன்னு கண்ணன் கடிந்துகொண்டான். அவன் வேண்டுகோளுக்காக நேற்று நள்ளிரவில் இசையருவியில் சில பாடல்களை கண்டு கொண்டிருந்த போது தோன்றிய அற்புதமான தத்துவமுத்து இது.! ஹிஹி.. கூல்டவுன்.. கூல்டவுன்.!

.

27 comments:

Mahesh said...

//ஏதாவது ஒரு பகுதியிலேயே தங்கிவிடுவோர் தேங்கிய நீராகிவிடுகிறார்கள், அல்லாமல் தெள்ளிய நீரோடையாய் அனைத்தையுமே தாண்டிவாருங்கள்..//

எப்பிடிண்ணே... எப்பிடி இதெல்லாம்?

மிக ரசித்தேன்..

தாமிரா said...

இயன்றதைச்செய்திருக்கலாம், கூடிக்குலவியிருக்கலாம்.!///

இந்த வரிகள் இறந்த காலத்தை குறிப்பனவல்ல.. கூடிக்குலவி வாழலாம் என்ற எதிர்காலத்தை குறிப்பதாக எழுதப்பட்டுள்ளது. அதற்குள் நண்பர் ஒருவர் குழப்பிக்கொண்டார். கருத்துமாறி புரிதல் நிகழக்கூடாது என்பதால் இந்த விளக்கம். நன்றி.!

தாமிரா said...

விளக்கம் கொடுப்பதற்குள் வந்து புல்லரிக்கச்செய்த மகேஷ்.. வாழ்க.!

சந்தனமுல்லை said...

//ஏதாவது ஒரு பகுதியிலேயே தங்கிவிடுவோர் தேங்கிய நீராகிவிடுகிறார்கள், அல்லாமல் தெள்ளிய நீரோடையாய் அனைத்தையுமே தாண்டிவாருங்கள்..//

ஊரில் இருக்கறவங்க யாருக்காவது மெசேஜ் சொல்றீங்களா பாஸ்?!!

ஏடிஎம் பதிவு பார்த்துதான் நினைச்சேன்...என்னடா வழக்கமா இருக்கற மொக்கை ஜோஷ் கம்மியா இருக்கேன்னு!! நன்றி..தாண்டி வந்துட்டீங்க!!

தாமிரா said...

இந்த இனிய நேரத்தில் தமிழிஷில் இருந்து அதிகமாக வருவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து வாக்களித்தும் பெருமைப்படுத்துகிற இனிய நண்பர்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அப்படியே ரெகுலர் கஸ்டமர்கள் யாரும் ஓட்டு போடுவது போல தெரியவில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளேன். மருவாதியாக போட்டுவிடவும். இரண்டாவது முறையாக இதுவரை தமிழ்மண வாசகர் பரிந்துரையில் இடம்பெறாமல் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் அறிவிக்கிறேன்.

தாமிரா said...

சந்தனமுல்லை அக்காவுக்கு நன்றி.! (அக்காவா என்று திகைக்கிறீர்களா? சும்மா ஜாலி மூடில் இருக்கிறேன். அதோடு பப்புவைவிட பாரதிக்கு வயது கம்மிதானே.. அப்பிடிப்பாத்தா அக்காதானே.. எப்பிடி நம்ப கால்குலேஷன்?)

முரளிகண்ணன் said...

:-))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

narsim said...

90க்கு மேலயா தல‌...super

vforu said...

You write only mokkai, ofcourse there are few exceptions Then why do you mention that its long back that you wrote so

குசும்பன் said...

//ஏதாவது ஒரு பகுதியிலேயே தங்கிவிடுவோர் தேங்கிய நீராகிவிடுகிறார்கள், அல்லாமல் தெள்ளிய நீரோடையாய் அனைத்தையுமே தாண்டிவாருங்கள்..//

நாங்க எல்லாம் காட்டறுவி வெண்பூவையே தாண்டி வந்துவிடுவோம்!!!

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷ், தமிழ்மணம இரண்டுலேயும் ஓட்டு போட்டாச்சுங்க...

தத்துவம் எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சுங்க...

வாழ்க உங்களின் தத்துவத்தொண்டு... வளர்க உங்கள் புகழ்

ராம்சுரேஷ் said...

கலக்கல்.. இந்த பதிவுக்கு யூத்ஃபுல்.விகடனில் லிங்க் கொடுத்துள்ளார்கள். கலக்கல்

ச்சின்னப் பையன் said...

:-)))))

இய‌ற்கை said...

:-)

கார்க்கி said...

யூத்ஃபுல் விகடனில் லின்க் கொடுத்து இருக்காங்க. வாழ்த்துகள்

தாமிரா said...

நன்றி முரளி.!
நன்றி அமித்து.!

நன்றி நர்சிம்.! (அப்பிடில்லாம் ஒண்ணுமில்ல தல.. நேத்து வீட்டுக்கு வரவே 11.30 ஆயிடுச்சு)

நன்றி விஃபார்யு.! (கொஞ்சம் ஜாலியா இருந்தா பொறுக்காதே உங்களுக்கு.. நடத்துங்க..)

நன்றி குசும்பர்.!
நன்றி ராகவன்.!

நன்றி ராம்சுரேஷ்.! (இதெப்போ.? சொல்லவேயில்ல.. பாத்துக்கங்கப்பா.. நானும் யூத்துதான், யூத்துதான்)

நன்றி ச்சின்னவர்.!
நன்றி இயற்கை.!
நன்றி கார்க்கி.!

அன்புடன் அருணா said...

விகடன் லிங்குக்கு வாழ்த்துக்கள்....

//கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் அறிவிக்கிறேன்.//
அச்சோ...பயம்மாருக்குப்பா...
அன்புடன் அருணா

தாமிரா said...

நன்றி அருணா.!

ஸ்ரீமதி said...

:)))

ராம்.CM said...

விகடன் லிங்குக்கு வாழ்த்துக்கள்....

வெண்பூ said...

ஒண்ணு மட்டும் தெரியுது.. ப்ளான் பண்ணி குடும்பத்த ஊர்ல விட்டுட்டு வந்துட்டு இங்க வந்து ஒவ்வொரு நாளும் எஞ்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்க.. உங்க வீட்டம்மா ஃபோன் நெம்பர் வேணுமே... :)))

வாழ்த்துகள் சார்.. விகடனில் இடம் பிடித்ததற்கு.. வேர் இஸ் தி பார்ட்டி?

MayVee said...

nalla irukku

ASSOCIATE said...

//ஒண்ணு மட்டும் தெரியுது.. ப்ளான் பண்ணி குடும்பத்த ஊர்ல விட்டுட்டு வந்துட்டு இங்க வந்து ஒவ்வொரு நாளும் எஞ்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்க.. ///

//ஏதாவது ஒரு பகுதியிலேயே தங்கிவிடுவோர் தேங்கிய நீராகிவிடுகிறார்கள், அல்லாமல் தெள்ளிய நீரோடையாய் அனைத்தையுமே தாண்டிவாருங்கள்..//

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

தாமிரா said...

நன்றி ஸ்ரீம‌தி.!
நன்றி ராம்.!
நன்றி வெண்பூ.!
நன்றி மேவீ.!
நன்றி அசோசியேட்.!
நன்றி விஜி.!

மங்களூர் சிவா said...

nice!