Tuesday, February 10, 2009

குறும்படம் எடுப்பது எப்படி? -பகுதி 1

  

   பரிசல், செல்வேந்திரன், வெயிலான் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் விருட்டென எழுந்து ஒரே குரலில், “அப்ஜெக்ஷன் யுவர் ஹானர், எதிரணி வழக்கறிஞர் என்ன தகுதியிருக்கிறது என இந்த வழக்கில் இப்படியொரு அரிய வாதத்தை துவக்குகிறார் எனத் தெரியவில்லை. ஆகவே அவரை தடுத்து நிறுத்த வேண்டும்.

   நீதிபதி வடகரை வேலன், “அப்ஜக்ஷன் ஓவர் ரீல். தாமிரா புதியவராக இருந்தாலும், மிக இளமையானவராகவும் இருப்பதால் அவரை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமையாகிறது. நீங்கள் துவங்குங்கள் தாமிரா”

  இப்போ அவுரு இளமையைப் பற்றி யாரு பேசினது? இப்பிடித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவாரய்யா இவுரு என்று முனகியவாறு தாமிராவை முறைத்தவாறே வெயிலான் அமர்கிறார். பார்வையாளர் பகுதியில் விசிலடிக்காத குறையாக அப்துலும், வெண்பூவும் அமர்ந்திருக்கின்றனர். வெண்பூ கையில் சமோசா பொட்டலம் இருக்கிறது.

 தாமிரா, “தேங்க்யூ யுவர் ஹானர்”... வழக்கு தொடர்கிறது.

************

  நமக்கு என்ன அடிப்படைத்தகுதி இருக்கிறது என்று இறுதியில் பார்த்துக்கொள்ளலாம். முதலில் விஷயத்துக்குள் போகலாம்.

 டெக்னிகல் :    முதலும் முக்கியமானதும் ஆன டெக்னிகல் தேவை என்று ஒன்று உள்ளது. அதுதான் காமிரா மற்றும் கம்ப்யூட்டர். ஆபீஸ் கம்ப்யூட்டரை நம்ப முடியாது. ஏனெனில் ஏற்கனவே பாதி நேரம் பிளாக்கை நோண்டிக்கொண்டிருப்பதால் நம்மைக் கட்டம் கட்டி வைத்திருப்பார்கள். இந்த லட்சணத்தில் இந்த வேலையையும் ஆபீஸில் திட்டமிட்டீர்கள் என்றால் முழு நேரமும் பொங்கலாகிவிட சீட்டு ‘டும்மா’வாகிவிடும்.

  ஆகவே வீட்டிலோ, நண்பர் வீட்டிலோ கம்ப்யூட்டரை பயன்படுத்த ஏற்பாடுசெய்துகொண்டுதான் களத்திலேயே இறங்கவேண்டும். எடுத்த கிளிப்பிங்குகளை வெட்டி ஒட்டி, பின்னணி இசை, ஒலி சேர்க்கப்போகிறோம் என்பதால் அதில் குறைந்த பட்சமாக ‘நீரோஸ்மார்ட்’டோ, ‘வின்மூவிமேக்கரோ’ இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு காமிரா. நம்மிடம் இருக்கும் சொம்பை ‘H3’ யில் போட்டோதான் புடிக்கமுடியும் என்பதால் எப்பிடியாவது ஆட்டையைப் போட்டு நண்பரிடமிருந்து ஒரு நல்ல ‘மூவிகேமை’ பத்து நாளைக்கு இரவல் வாங்கிவிடுங்கள். குறிப்பாக உங்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் சக ஊழியர்களை விசாரித்தால் தண்டத்துக்கு வாங்கி பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதை படம்பிடித்துவிட்டு தூசியடைய போட்டிருப்பார்கள். எதற்கு என்று கேட்டால் ஏதாவது சொல்லி சமாளியுங்கள். உண்மையைச்சொன்னால் அவர்களுக்கும் நடிக்க சான்ஸ் கொடுக்கவேண்டியது நேரலாம்.

  பார்ட்னர் : நடிகர்கள் தவிர பெரும்பாலும் கூட்டம் சேர்க்காதீர்கள். ஒரே ஒருவரை மட்டும் அசிஸ்டெண்டாக வைத்துக்கொள்வது நலம். உங்கள் நெருங்கிய நண்பராக (மேலே கம்ப்யூட்டருக்கு நாடினோமே அவராக இருந்தால் நலம்) கொஞ்சம் சமோசா, டீ, செலவு பாராதவராக பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஒண்ணும் திரைக்கதை அறிவோ, ஆர்வமோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இருந்தால் நீங்கள் அசிஸ்டெண்டாக மாறிவிடக்கூடிய ஆபத்திருக்கிறது. ஆனாலும் அவருடனும் அவ்வப்போது கதைவிவாதம் பண்ணுங்கள். நம்மைவிட உருப்படியான யோசனைகள் வந்தாலும் வரலாம்.

கதை : உண்மையிலேயே இந்த ஏரியா மிகவும் சிக்கலானது. உங்கள் மனதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நீங்காத கதை இருக்கும். அது வேண்டாம், அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். எப்படியாவது குப்புறப்படுத்து யோசித்தாவது ஒரு கதையை பிடித்துவிடுங்கள். வேறு யாரிடமும் நாம் காண்பிக்கப்போவதில்லை என்பதால் ஏதாவது பழைய எழுத்தாளர்களின் கதையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பாருங்கள் அவர்கள் கதையை நாம் எடுத்துமுடித்திருக்கும்போது நமக்கே குற்ற உணர்ச்சி வந்துவிடக்கூடாது. டிவியிலிருந்தோ, வார இதழ்களிலிருந்தோ சுடலாம் என்று பார்த்தால் அதைவிட நீங்கள் யோசித்துவைத்திருப்பதே நல்ல கதையாக தோணும்.

 கதையை முடிவு செய்யும் முன்னர் நான் கூறும் விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஹீரோ பிளைட்டில் இருந்து இறங்கி, பென்ஸ் காரில் கிளம்பி வீட்டுக்குப்போகிறார் என்பது போல காட்சிகள் இருக்கக்கூடாது. பட்ஜெட் தாங்காது. அதற்காக பஸ்ஸில் போகிறார் என்பதாகவும் வேண்டாம். அது முன்னதைவிடவும் ரொம்பக்கஷ்டம். காதல் கதையாக இருந்தால் நடிக்க ஆள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். இல்லை உங்கள்/அல்லது நண்பரின் காதலி இருக்கிறார் என்றால் அவரின் அழகு உங்கள் கதைக்கு போதுமானதா என்பது சிக்கலாகிவிடும். மேலும் நீங்களோ, உங்கள் நண்பரோ ஹீரோவாக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். நமது பிரதான குறிக்கோள் இயக்கமே தவிர நடிப்பது அல்ல, ஏனெனில் அது எவ்வளவு சிரமம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உதாரணத்துக்கு ஏதாவது விஷால் படத்தைப் பார்த்துக்கொள்ளவும். கவனம், அதைப்பார்த்து நாமும் நடித்தால் என்ன என்ற தைரியம் வந்துவிடக்கூடாது. பெரும்பாலும் ஆண்களும், தேவைப்பட்டால் குழந்தைகளும் வருவது போன்ற, மொத்தத்தில் நான்கைந்து கேரக்டர்கள் கொண்ட ஒரு கதையை அமைத்துக்கொள்ளுங்கள். இவ்வளவு கண்டிஷன் போட்டதால் பெரும்பாலும் கமர்ஷியல் கதையாக இல்லாமல், ஒரு ஆர்ட் பிலிம் ரேஞ்சுக்கு கதை வந்திருக்கும். ஒருவழியாக கதை முடிவு செய்தபின்னர் நண்பருடன் அமர்ந்து திரைக்கதை எழுதுங்கள். அதற்கும் முன்னதாக சில வெற்றிபெற்ற திரைப்படங்களின் திரைக்கதைப்புத்தகங்களை வாசித்துவிடாதீர்கள். பிறகு திரைக்கதை என்றால் என்ன என்ற பெருத்த சந்தேகம் வந்து விட்டால் கதை கந்தலாகிவிடும்.. அதோடு வசனங்களையும் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

லொக்கேஷன் : பெரும்பாலும் உங்கள் வீடு, தோட்டம்(இருந்தால்), மொட்டைமாடி, அதிகபட்சம் உங்கள் தெரு இதற்குள்ளாகவே கதை நிகழும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மகாபலிபுரத்தில் சில காட்சிகள் வைத்துக்கொள்ளலாம். ஒரே நாளில் அந்தப்பகுதியை ஷூட்டிங் முடித்து வந்திடலாம் என குறுக்கு வழியில் சிந்திக்காதீர்கள். பின்னால் மேலும் இரண்டு தடவை போக வேண்டி வந்து பிராஜக்ட் பாதியிலேயே நின்று வருத்தப்படும்படி ஆகிவிடும்.

நடிப்பு : நான் சொல்லும் முன்னரே நண்பர்களையோ, உறவினர்களையோ அரை நாள்தான், ஒருநாள்தான் என்று கெஞ்சி எப்படியாவது சம்மதிக்க வைத்திருப்பீர்கள்.. நமக்கும் அவர்களை விட்டால் வேறு கதியில்லை என்றாலும் ரொம்ப இறங்கிப்போக வேண்டியதில்லை. முதலிலேயே 'கொஞ்சம் கோபப்படுங்கள், சோகமாக இருங்கள்' என்று நடிக்கச்சொல்லி சாம்பிள் பார்த்துவிடுங்கள். இல்லையென்றால் பின்னர் சிக்கலாகிவிடும். கொஞ்ச காட்சிகள் லாங் ஷாட்டில் ஒப்பேற்றிவைத்திருப்பீர்கள், பின்னர் குளோஸப் வரும்போது சொதப்பி, பாலாவைப்போல வேறு நடிகரைப் போட்டு ரீஷூட் பண்ண வேண்டியநிலை வந்துவிடும். கதையெல்லாம் அவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. சொன்னால் ஓடிவிடக்கூடும். ஆகவே சொன்னதைச்செய்தால் போதும் என்று ஸ்ட்ரிக்ட் ஆன இயக்குனர் போல நடந்துகொள்ளுங்கள். குழந்தைகள் சினிமாவில் அழகாக நடிப்பதைப்பார்த்திருப்பீர்கள். நிஜத்தில் அது ரொம்ப கஷ்டம், படுத்திவிடுவார்கள். ஆகவே குழந்தை காரெக்டர் கதையில் இருந்தால் ஜாக்கிரதை.

ஷூட்டிங் : எல்லாம் தயாராகிவிட்டதால் அடுத்து ஷூட்டிங்தான்...

-தொடரும் (பயப்படவேண்டாம், மொத்தம் மூன்றே பகுதிகள்தான்). 

49 comments:

இய‌ற்கை said...

//அடுத்து ஷூட்டிங்தான்//

yaarai shoot pannaporeenga?:-)
kurumpadam yedukkarennu thalippu vachittu kolai(shoot)panna plan podareenga:-)

ஆதவன் said...

please visit our website for short film and documentary films...

www.thamizhstudio.com

visit and write your comments and suggestions about this site.

thanks,
thamizhstudio.com

வால்பையன் said...

ஒரு இயக்குனருகுண்டான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறதே!

ஒரு ஓரமா நின்னுகிட்டு போகுற மாதிரி எனக்கு எதாவது வேடமுண்டா?

முரளிகண்ணன் said...

\\ஒரு இயக்குனருகுண்டான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறதே!
\\
ஆமா ஆமா.
எனக்கு ஒரு வேடம் பிளீஸ்

Mahesh said...

இயக்குனர் இமயம் தாமிரா வாழ்க !!

ரமேஷ் வைத்யா said...

//பரிசல், செல்வேந்திரன், வெயி......
..........
.............

ண்டாம், மொத்தம் மூன்றே பகுதிகள்தான்).//

ஆஹ் ஹாஹ்ஹா
ஓஹ்ஹோஹ்ஹோ
ஏஹ்ஹேஹ்ஹே

சந்தனமுல்லை said...

//கதையெல்லாம் அவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. சொன்னால் ஓடிவிடக்கூடும். //

:-)) நல்ல புரிதல்!!

தாமிரா said...

நன்றி இயற்கை.!

நன்றி ஆத‌வ‌ன்.! (அலோ.. நீங்க‌ ப‌திவையே ப‌டிக்கலைன்னு நெனைக்கிறேன். நான் ஏதோ மொக்கைப்ப‌திவு போட நீங்க‌ ஏதோ குறும்ப‌ட‌ இய‌க்குன‌ர் ரேஞ்சுக்கு ச‌ஜ‌ஷ‌ன் கொடுக்க‌ கூப்பிடுறீங்க‌ளே.. ஐயோ..ஐயோ..)

நன்றி வால்.! (குடுத்துற‌லாம்.. ப‌ட‌ம் எடுத்தால்)

நன்றி முர‌ளி.! (ஆமா.. எத்த‌னை பேரு கிள‌ம்பிருக்கீங்க‌ இப்பிடி?)

நன்றி ம‌கேஷ்.! (ஏதாச்சும் சொல்லிப்புடுவேன்)

நன்றி ர‌மேஷ்.! (அடிக்க‌டி எங்காச்சும் தொலைஞ்சு போயிட‌றீங்க‌ளாமே..)

தாமிரா said...

நன்றி முல்லை.! (என்ன‌ ஆளைக்காணோமேன்னு பார்த்தேன். ந‌ம்ம‌ க‌டைக்கு ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ரே உங்க‌ளைச்சேத்து ஏழு பேருதான்)

வெண்பூ said...

நல்ல இன்ஃபர்மேட்டிவ் பதிவை நடுநடுவுல காமெடி கலந்து போர் அடிக்காம குடுத்திருக்கீங்க.. பாராட்டுகள்..

//
வெண்பூ கையில் சமோசா பொட்டலம் இருக்கிறது.
//
ஹி..ஹி..

//
உங்கள் நெருங்கிய நண்பராக (மேலே கம்ப்யூட்டருக்கு நாடினோமே அவராக இருந்தால் நலம்) கொஞ்சம் சமோசா, டீ, செலவு பாராதவராக பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஒண்ணும் திரைக்கதை அறிவோ, ஆர்வமோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை
//
அப்ப எனக்கு எல்லா தகுதியும் இருக்குன்றீங்களா தாமிரா?

எம்.எம்.அப்துல்லா said...

ரெகுலர் கஸ்டமர் 7 பேருல ஒரு ஆள் வந்து இருக்கேன் :))

எம்.எம்.அப்துல்லா said...

//நல்ல இன்ஃபர்மேட்டிவ் பதிவை நடுநடுவுல காமெடி கலந்து போர் அடிக்காம குடுத்திருக்கீங்க.. பாராட்டுகள்..

//


ரிப்பீட்டு...

அனுஜன்யா said...

சான்சே இல்ல தாமிரா! இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். ரமேஷ் சொன்னதுபோல் முதல் வார்த்தையிலிருந்து, கடைசி வார்த்தை வரை ...அட்டகாசம்.

சீக்கிரம் அடுத்த பாகங்கள் வரட்டும். ஏற்கனேவே என்னிடம் கேக் வெட்டியதை ஷூட் பண்ணிய மூவீ-காம் இருக்கு. நானும் டைரக்டர் தான் டைரக்டர் தான்

அனுஜன்யா

புதுகைத் தென்றல் said...

ஆணி எல்லாம் முடிச்சாச்சு போல இருக்கு.

இயக்குநர் இமயத்தை நானும் வாழ்த்திக்கறேன்.

P N A Prasanna said...

Nice blog. Keep it up
http://pnaprasanna.blogspot.com
http://pnaptamil.blogspot.com

குசும்பன் said...

தல ஹீரோயினோடு டிஸ்கஸன் எல்லாம் உண்டா? உண்டு என்றால் நான் உங்க அசிஸ்டண்டாக வருகிறேன்.

குசும்பன் said...

வால்பையன் said...
ஒரு ஓரமா நின்னுகிட்டு போகுற மாதிரி எனக்கு எதாவது வேடமுண்டா?//

கொடுக்கலாம் தாமிரா கொஞ்சம் டிபரண்டானா ஆள் அதனால் ஓரம்மா நின்னு ஒன்னுக்கு போறமாதிரி வேண்டும் என்றால் வாய்ப்பு வழங்குவார் அப்பொழுதும் மூஞ்சை காட்டாமல்... போதும் நிறுத்திக்கிறேன்!

குசும்பன் said...

இப்படி எல்லாம் படம் எடுத்தபிறகு குமுதத்தில் ஒரு இயக்குநரின் கதை என்று டைட்டிலில் எழுத வாய்ப்பு இருக்கிறதா? பொங்களூரு சீனிவாசலூஊஊ என்ற பெயரில்:)

வெண்பூ said...

//
குசும்பன் said...
தல ஹீரோயினோடு டிஸ்கஸன் எல்லாம் உண்டா? உண்டு என்றால் நான் உங்க அசிஸ்டண்டாக வருகிறேன்.
//

என்னாது ஹீரோயின் டிஸ்கஷனுக்கு அசிஸ்டென்டா? டார்ச் லைட் நீங்களே வாங்கிட்டு வந்துடுவீங்களா? இல்லை அண்ணனை வாங்கி வெக்க சொல்லவா? :))))

ராம்.CM said...

நன்றாக இருந்தது.. படம் ரிலீஸ் எப்போது?..

ச்சின்னப் பையன் said...

இயக்குனர் இமயம் தாமிரா வாழ்க !!

MayVee said...

சாமி... முடியலே.
என் நண்பன் ஒருவன் மீடியால இருக்கான். ஆனால் என்ன வருத்தம் என்றால் அவன் எடுக்க இருக்கும் படத்தில் என் முகம் சின்ன அளவில் கூட எடுக்க முடியாதம்.......
சான்ஸ் ஆ இல்லை ..... அருமை.
அசினையும், என்னையும் ஜோடியா நடிக்க வைச்சு பாருங்க...... அடுத்த gloden globe awards உங்களுக்கு தான்.....
slum dog millionaire மாதிரி கிளைமாக்ஸ் வேணும்......
அப்படி வைச்ச உங்களுக்கு ஒரு டி வங்கி தருகிறேன்

MayVee said...

"ச்சின்னப் பையன் said...
இயக்குனர் இமயம் தாமிரா வாழ்க !!"

once more repeatuu

கார்க்கி said...

// குசும்பன் said...
தல ஹீரோயினோடு டிஸ்கஸன் எல்லாம் உண்டா? உண்டு என்றால் நான் உங்க அசிஸ்டண்டாக வருகிறேன்//

என்ன குசும்பரே இப்படி ஆயிட்டிங்க? டிஸ்கஷன் நடக்கறப்ப எதுக்கு உதவி?

தாமிரா said...

வெண்பூ : கொஞ்ச‌ம் சமோசா, டீ, செலவு பாராதவராக பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஒண்ணும் திரைக்கதை அறிவோ, ஆர்வமோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை
//அப்ப எனக்கு எல்லா தகுதியும் இருக்குன்றீங்களா தாமிரா?////

அலோ.. சமோசா, டீ சாப்பிடுபவர் என சொல்லவில்லை. அதற்காக செலவு செய்பவர் என கூறினேன்.. தகுதி இருக்குன்றீங்களா? மகாஜனங்களே கவனிங்க.. ஒரு ப்ரடியூசர் சிக்கியிருக்காரு..

தாமிரா said...

அப்துல் :நல்ல இன்ஃபர்மேட்டிவ் பதிவை// யோவ் இன்னா கலாய்க்கிறியா.?

அனுஜன் :ஏற்கனேவே என்னிடம் கேக் வெட்டியதை ஷூட் பண்ணிய மூவீ-காம் இருக்கு. நானும் டைரக்டர் தான் டைரக்டர் தான் // இது டைர‌க்ட‌ருக்கு அழ‌கு.. அடுத்து உங்க‌ளை இய‌க்குன‌ராக‌த்தான் மீட் ப‌ண்ணுகிறேன்.! டீல்.!

தென்றல் : இய‌க்குன‌ர் இம‌ய‌மா// இந்த‌ ந‌க்க‌லுக்கு ஒண்ணும் குறைச்ச‌லில்லை..

ந‌ன்றி பிர‌ச‌ன்னா.!

தாமிரா said...

யோவ் குசும்பு, //கொடுக்கலாம் தாமிரா கொஞ்சம் டிபரண்டானா ஆள் அதனால் ஓரம்மா நின்னு // பாவ‌ம் வாலு..ஆனாலும் கொஞ்ச‌ம் ஓவ‌ரு.!

வெண்பூ :டார்ச் லைட் நீங்களே வாங்கிட்டு வந்துடுவீங்களா? இல்லை அண்ணனை வாங்கி வெக்க சொல்லவா? :))))// இது அத‌விட‌வும் ஓவ‌ர்.!

கார்க்கி :என்ன குசும்பரே இப்படி ஆயிட்டிங்க? டிஸ்கஷன் நடக்கறப்ப எதுக்கு உதவி?/// இது ரொம்ப‌ ரொம்ப‌ ஓவ‌ர்..!

தாமிரா said...

நன்றி ராம்.!
நன்றி ச்சின்னவர்.!

நன்றி மேவீ.! (அசினையும், என்னையும் ஜோடியா நடிக்க வைச்சு பாருங்க...// என்னியப்பாத்தா இளிச்சவாயி மாதிரி இருக்குதா உங்களுக்கு.!)

அன்புடன் அருணா said...

மூணு பாகம்தானா?? நான் 108 அறிவுரைகள் போல....108 பாகம் உண்டோன்னு பயந்துட்டேன்.....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

//இந்த லட்சணத்தில் இந்த வேலையையும் ஆபீஸில் திட்டமிட்டீர்கள் என்றால் முழு நேரமும் பொங்கலாகிவிட சீட்டு ‘டும்மா’வாகிவிடும். //

சிரித்து சிரித்து .....இன்னும் சிரித்துக் கொண்டே!!!
அன்புடன் அருணா

கபீஷ் said...

//அப்ஜக்ஷன் ஓவர் ரீல்// ??

தமிழ்நெஞ்சம் said...

தமிழில் வெளிவந்த 200+ குறும்படங்களைக் காண : http://SFinTamil.blogspot.com

பரிசல்காரன் said...

வர வர எல்லாருமே சீரியஸா எழுதறீங்க.. நகைச்சுவையா எழுதுங்க.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறோம்' என்று என்னிடம் பேசும்போது சொன்ன நண்பருக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

narsim said...

வேலன் அண்ணாச்சியை சட்டை இல்லாமல்(அவரோட புது போட்டோ) ஆனால் படத்துல வருமே அதுமாதிரி.. வெள்ளை முடி ஹிப்பி ஜட்ஜா கற்பனை ஓடுது,, கலக்கல் தாமிரா,,

narsim said...

//எம்.எம்.அப்துல்லா said...
ரெகுலர் கஸ்டமர் 7 பேருல ஒரு ஆள் வந்து இருக்கேன் :))
//

இந்தாள் அலும்புக்கு எல்லையே இல்லையா

MayVee said...

"தாமிரா said...
அசினையும், என்னையும் ஜோடியா நடிக்க வைச்சு பாருங்க...// என்னியப்பாத்தா இளிச்சவாயி மாதிரி இருக்குதா உங்களுக்கு.!)"
அசினுக்கு ஓசில ஒரு முத்தம் தருலாம்னு பார்த்த..... விட மாட்டிங்களே

Anonymous said...

// narsim said...

வேலன் அண்ணாச்சியை சட்டை இல்லாமல்(அவரோட புது போட்டோ) ஆனால் படத்துல வருமே அதுமாதிரி.. வெள்ளை முடி ஹிப்பி ஜட்ஜா கற்பனை ஓடுது,, கலக்கல் தாமிரா,,//

நர்சிம் அது பிரவுன் கலர் டீ சர்ட்டுப்பா. சட்டையக் கழட்டிப் போஸ் கொடுக்க எங்கிட்ட சிக்ஸ் பேக்கா இருக்கு.

செல்வா சொன்னதுதான் நினைவுக்கு வருது இரவு 7 மணிக்கப்புறம் தமிழ்நாடே ஏதோ ஒரு ஜட்ஜ் சொல்லுறத்தத்தான் கேட்குது.

தாமிரா கலக்கீட்ட. அடுத்த பாகத்துக்கு வெயிட்டீஸ்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

ஆண்ட்ரு சுபாசு said...

script அப்படின்னு சொல்லுறாங்களே ..அது என்ன அண்ணா ....எதாவது எடுத்துகாட்டு ..அல்லது ஒரு Model Script காட்ட முடியுமா?

வெயிலான் said...

:)))))

குறும்படமே மூணு பகுதிகளா? அப்ப பெரும்படத்துக்கு முந்நூறா?

மங்களூர் சிவா said...

இயக்குனர் இமயம் தாமிரா வாழ்க !!

மங்களூர் சிவா said...

ரெகுலர் கஸ்டமர் 7 பேருல இன்னொரு ஆள் வந்து இருக்கேன் :))

மங்களூர் சிவா said...

/
தல ஹீரோயினோடு டிஸ்கஸன் எல்லாம் உண்டா? உண்டு என்றால் நான் உங்க அசிஸ்டண்டாக வருகிறேன்.
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

தல நயந்தாரா கால்சீட்டு கெடச்சிருச்சா???

சுரேகா.. said...

இதுல இவ்ளோ இருக்கா!?

நாம்பாட்டுக்கும்...
ரெண்டுமூணுதடவை சர்ரு புர்ருன்னு வெவரமில்லாம எடுக்க ஏற்பாடு பண்ணிட்டேனேப்பா!
இனிமே உங்களுக்கு அஸிஸ்ட்டெண்ட்டா வர தயார்!
:)

தாமிரா said...

நன்றி அருணா.!
நன்றி கபீஷ்.!
நன்றி தமிழ்நெஞ்சம்.!
நன்றி பரிசல்.!
நன்றி நர்சிம்.!
நன்றி வேல‌ன்.!
நன்றி சுபாஷ்.! (உங்க‌ளுக்காக‌ இன்னொண்ணு எழுதிர‌வேண்டிய‌துதான்)
நன்றி மங்களூர்.!
நன்றி வெயில்.!
ந‌ன்றி சுரேகா.!

My said...

entha mathiri camera use panna sir?

My said...

thank u sir.........

My said...

voices elam epadi sir record panna?
shoot panni mudicha piaragu voice kekkalina?