Thursday, February 19, 2009

கணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள் : டாப் 10

இந்தப்பதிவுக்கு எதிர்பதிவு எழுதவில்லை எனில் நாளை இந்த சமூகம் என்னை நிற்க வைத்து கேள்வி கேட்கும் ஆபத்திருப்பதால் கொஞ்சம் பிஸியாக இருக்கும் நேரத்திலும் இதை எழுத நேர்கிறது.. இனி..

1. வார‌த்துக்கு ரெண்டு த‌ட‌வையாவ‌து பால் பொங்கி வ‌ழிவ‌து, மூணு தடவையாவ‌து ப‌ருப்பு அடிபிடிப்ப‌து என‌ உங்க‌ள் வேலையையும் உருப்ப‌டியா செஞ்ச‌தில்லை.. எப்போவாவ‌து இந்த‌ ஷ‌ர்ட்டை ம‌ட்டும் அய‌ர்ன் ப‌ண்ணிக்கொடேன்னு ஒரு சின்ன‌ வேலைத‌ந்தா அதையும் ஓட்டை போடுவ‌து என‌ உருப்ப‌டியா ஒரு வேலையுமே செஞ்ச‌தா ச‌ரித்திரம் இல்லையே.. அது ஏன்?

2. நாங்கள் மறக்கிறோமோ, நீங்கள் மறக்கிறீர்களோ நான்கு முறை க‌டைக்குப் போய் வ‌ந்த‌ பின்னும் ஐந்தாவ‌து முறையும் க‌டைக்கு இர‌க்க‌மில்லாம‌ல் அனுப்ப‌ முடிகிற‌தே.. அது எப்ப‌டி?

3. ஷாம்பூ இன்னும் நாலு நாளைக்குதான் வ‌ரும், .:பேஸ் வாஷ் காலியாகப்போகுதுன்னு எல்லாம் நல்லா பிளான் போட்டு நடக்குதே.. ஒரு மாதமாவது பேப்பர்காரரையும், கேபிள்காரரையும் இரண்டாவது தடவை அலையவைக்காமல் பணம் தந்ததுண்டா?

4. டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போதோ, ச‌மைத்துக்கொண்டிருக்கும் போதோ உங்க‌ளுக்கு திடீரென‌ தோன்றும் அரிய‌ சிந்த‌னைக‌ளை ப‌கிர்ந்துகொள்ள‌ நாங்க‌ள் ம‌ட்டும்தான் கிடைத்தோமா? ந‌ண்ப‌ர்க‌ளோ, ரிலேடீவ்ஸோ உங்க‌ளுக்கு கிடைய‌வே கிடையாதா?

5. உற‌வுச்சிக்க‌ல்க‌ள் நிறைந்த‌ சீரிய‌ல்க‌ளை பார்ப்ப‌தோடு ம‌ட்டுமில்லாம‌ல் அத‌ன் க‌தைக‌ளை இனிய‌ இர‌வுக‌ளில் எங்க‌ளோடு ப‌கிர்ந்துகொள்ள‌த்தான் வேண்டுமா? அதையும் க‌வ‌னத்தோடு க‌வ‌னிக்க‌வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்ப‌டி?

6. ஒரு இஞ்ச்சுக்கு ப‌வுட‌ர் அப்பிக்கொள்ளும் போதும், ப‌ட்டுப்புட‌வை க‌ட்டிக்கொள்ளும் போதும் உங்க‌ள் முக‌த்தில் இருக்கும் டென்ஷ‌ன், கான்சென்ட்ரேஷ‌ன், எங்க‌ளுக்கு ஒரு பிர‌ச்சினைன்னா ஏன் இருக்க‌ மாட்டேங்குது?

7. ஏதாவது முக்கிய அலுவலகச்சிக்கலை பற்றி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம மூஞ்சிய வெச்சுக்கறீங்க?

8. எங்க‌ வீட்டுக்குப்போய் இர‌ண்டு நாள் ஆவ‌த‌ற்குள் 'போலாம்.. போலாம்'னு அவ‌ச‌ர‌ப்ப‌டுத்துற‌ நீங்க‌ உங்க‌ வீட்டுக்குப்போய் இருப‌து நாள் ஆன‌பிற‌கு 'கிள‌ம்ப‌லாம்'னு சொன்னாலும்கூட‌ 'ஏங்க‌.. அவ‌ச‌ர‌ப்ப‌டுத்துறீங்க‌?'க‌ங்கிறீங்க‌ளே.. அது ஏங்க.?

9. நாங்க ரசிச்சு வாங்கி வருகிற புடவை, அதெப்படி உங்ககிட்ட ஏற்கனவே இருக்கிற கலர்லேயோ, டிஸைனிலேயோ அமைந்துவிடுகிறது? அதே மாதிரி என்னைக்காவது வாங்கிவருகிற மல்லிகைப்பூவில் கூட வாடிப்போச்சு, எண்ணிக்கை கம்மியா இருக்குதுன்னு எப்படிங்க‌ உங்களால் குறை சொல்ல முடியுது?

10. சினிமாவுக்கு கிள‌ம்பும் போது ம‌ட்டும் 'லேட்டாச்சு.. லேட்டாச்சு'ன்னு குதிக்கிறீங்க‌ளே.. திரும்பி வரும்போது ஹோட்டலுக்குப் போகலாமா, பீச்சுக்குப்போகலாமான்னு சிந்தனை வருகிறதே தவிர‌ 'வீட்டுக்குப்போக‌ணும் லேட்டாவுது'ன்னு குதிக்க‌ வேண்டாம், லேசாக‌ தோண‌க்கூட‌ மாட்டேங்குதே உங்க‌ளுக்கு.. ஏங்க?


.

69 comments:

இராகவன் நைஜிரியா said...

Me the First..

இராகவன் நைஜிரியா said...

ரங்ஸ் சார்பாக பதிவு போட்டதற்கு நன்றிகள் பல

இராகவன் நைஜிரியா said...

// உற‌வுச்சிக்க‌ல்க‌ள் நிறைந்த‌ சீரிய‌ல்க‌ளை பார்ப்ப‌தோடு ம‌ட்டுமில்லாம‌ல் அத‌ன் க‌தைக‌ளை இனிய‌ இர‌வுக‌ளில் எங்க‌ளோடு ப‌கிர்ந்துகொள்ள‌த்தான் வேண்டுமா? அதையும் க‌வ‌னத்தோடு க‌வ‌னிக்க‌வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்ப‌டி?//

சரியான கேள்வி... யார் பதில் சொல்ல போறீங்க...

கோவி.கண்ணன் said...

சபாஸ் சரியான போட்டி !
:)

T.V.Radhakrishnan said...

:-))))))))

புதுகைத் தென்றல் said...

போட்டி நல்லா இருக்கு ஃப்ரெண்ட்.
இதுல எந்தக் கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியாது.

அயித்தான் கடைக்கு போனதில்லை,
அம்மாவீட்டுகு அயித்தானை விட்டு போனதில்லை, 14 வருடத்தில் எத்தனை சினிமா போனேன் என விரல் விட்டு எண்ணிவிடலாம்,
சீரியல் பாப்பதே இல்லை.... இப்படி நிறைய இல்லைகள் நிறைந்த கேள்வி என்பதால் எல்லாம் கேள்வியையும் சாய்ஸில் விடுகிறேன்.

நீங்க சொல்லியிருப்பதெல்லாம் செய்யறவங்க பதில் சொல்லட்டும்.

:)))

புதுகைத் தென்றல் said...

உங்க ரமா ஊருலேர்ந்து அடுத்த வாரம் தான் வர்றாங்களா?

இல்ல இந்தப் பதிவை இன்னைகு போட்டிருக்கீங்களே!! அதான் கேட்டேன்.

:)))))))))

நட்புடன் ஜமால் said...

\\நாங்கள் மறக்கிறோமோ, நீங்கள் மறக்கிறீர்களோ நான்கு முறை க‌டைக்குப் போய் வ‌ந்த‌ பின்னும் ஐந்தாவ‌து முறையும் க‌டைக்கு இர‌க்க‌மில்லாம‌ல் அனுப்ப‌ முடிகிற‌தே.. அது எப்ப‌டி?\\

ooooooo!

நட்புடன் ஜமால் said...

\\நாங்க ரசிச்சு வாங்கி வருகிற புடவை, அதெப்படி உங்ககிட்ட ஏற்கனவே இருக்கிற கலர்லேயோ, டிஸைனிலேயோ அமைந்துவிடுகிறது?\\

வாழ்க தாமிரா

அசோசியேட் said...

நடக்கட்டும்! நடக்கட்டும்!

ஆண்ட்ரு சுபாசு said...

திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை????????

பாபு said...

இதை இதை இதைதான் எதிர்பார்த்தேன்
சூப்பர் எதிர்பதிவு

இளைய பல்லவன் said...

உலக ரங்கமணிகளின் உண்மைத் தலைவர் தாமிரா வாழ்க.

அது சரியண்ணே. இப்படி கேட்டுப்புட்டீங்க. இத யார் கிட்ட போய் கேக்கறது????

பாச மலர் said...

கலக்கல்தான்..சில இடங்களில் same side goal...என்னிக்காவது வாங்கிட்டு வர்ற மல்லிகைப்பூ...

குசும்பன் said...

ஓ இப்படி எல்லாம் வேற நாட்டில் நடக்குதா? அய்யோபாவம்:)))))

பரிசல்காரன் said...

ங்கொய்யால.. என்னோட நாளைய பதிவ எவன்யா ஒனக்கு திருடிக் குடுத்தான்?

பரிசல்காரன் said...

சூப்பர் தாமிரா.. நாளைக்கு பொங்கி எழுவீங்கன்னு எதிர்பார்த்தேன். இன்னைக்கேவா! என்னா வேகம்யா! இந்த வேகத்தை தங்கமணிய கவனிக்கறதுல காமிங்கப்பா!

narsim said...

தாமிரா.. என் தங்கமே.. வாழ்க நீ எம்மான்..(அந்த 6வது பாயிண்ட்.. கொல குத்து தல)

அனுஜன்யா said...

தாமிரா, அதகளம். இன்னிக்கு பரிசல் பதிவைப் படிச்சுட்டு நமுட்டுச் சிரிப்புடன் காத்திருக்கும் அவளுக்கு என்ன சொல்வது என்று யோசித்தேன். ரொம்ப தாங்க்ஸ் பா.

அனுஜன்யா

தேனியார் said...

பரிசல் கடையில பொருள்வாங்கபோனா வெரைட்டி இல்ல, சரி தாமிரா கடையில கெடைக்குமுன்னு இங்க வந்தா,ஹூஹும், சரி அடுத்த கடை யாருப்பா?

சாய்ஸ் வேணுங்கண்ணா,சாய்ஸ்.

கார்க்கி said...

ச்சே.. என்ன ஒரு மனிதாபிமானமற்ற செயல்?

எனக்கு உடன்பாடில்லை... :))

வால்பையன் said...

why blood
same blood

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அமுதா said...

:-))
தங்க்ஸ் எல்லாம் கேள்வி கேட்டால், ரங்ஸ் எல்லாம் பதில் சொல்லமாட்டேங்கறாங்க... ஆனால் எதிர் கேள்வி மட்டும் டாண் டாண்னு வந்துடுது... :-))

மின்னுது மின்னல் said...

இந்த சமூகத்திற்காக குறைந்த பட்சமாகவாவது என்ன செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? ஒரே ஒரு மரம் நடுங்கள்.!
//

மரம்..???

:)

அருண் said...

சூஊஊஊஊஊஊஊஊஊஊப்பர்!

Vinitha said...

Super!

முரளிகண்ணன் said...

சிரிச்சுக்கிட்டே இருக்கேன். சூப்பர்

palz said...

// உற‌வுச்சிக்க‌ல்க‌ள் நிறைந்த‌ சீரிய‌ல்க‌ளை பார்ப்ப‌தோடு ம‌ட்டுமில்லாம‌ல் அத‌ன் க‌தைக‌ளை இனிய‌ இர‌வுக‌ளில் எங்க‌ளோடு ப‌கிர்ந்துகொள்ள‌த்தான் வேண்டுமா? அதையும் க‌வ‌னத்தோடு க‌வ‌னிக்க‌வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்ப‌டி?//

ஆமாம் இத எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்! உற‌வுச்சிக்க‌ல்க‌ள் மட்டுமல்ல நிறைய குடும்ப வன்முறைகளையும் விதைகிரர்கள்!

மிஸஸ்.டவுட் said...

ஐயோ ...ஐயோ சிரிச்சு மாளலை...இப்படியெல்லாம் தங்கமணி இல்லாதப்ப கேள்விகளா கேட்டுத் தள்ளரதுக்கு பேசாம "மூணு கல் கிரைண்டரை " திருநெல்வேலியில இருந்தே வாங்கி டிரெயின்ல வச்சுக் கொண்டாந்திரலாமே!!!

ச்சின்னப் பையன் said...

யப்பா.. .சாமி... முடியல.. விடியற்காலைலே 6 மணிக்கு சிரிச்சிக்கிட்டே இருக்கேன்....

:-))))))))

ச்சின்னப் பையன் said...

ஆபாச தலைவர் தாமிரா வாழ்க வாழ்க!!!

ஆபாச = ஆண்கள் பாதுகாப்பு சங்கம்

:-))))))))))

வால்பையன் said...

//ஆபாச தலைவர் தாமிரா வாழ்க வாழ்க!!!

ஆபாச = ஆண்கள் பாதுகாப்பு சங்கம்//


ஜூப்பரு!!!!!!!

MayVee said...

நல்ல பதிவு.....
சாரிங்க....
என்னக்கு கலயணம் ஆகல......
அதனால்.....
கல்யாணம் செய் செய் என்று சொல்லி torture செய்யும் அப்பா அம்மா கிட்ட கேட்க சில கேள்விகள் தந்தால் நல்ல இருக்கும்........

அமிர்தவர்ஷினி அம்மா said...

1. வார‌த்துக்கு ரெண்டு த‌ட‌வையாவ‌து பால் பொங்கி வ‌ழிவ‌து, மூணு தடவையாவ‌து ப‌ருப்பு அடிபிடிப்ப‌து என‌ உங்க‌ள் வேலையையும் உருப்ப‌டியா செஞ்ச‌தில்லை.. எப்போவாவ‌து இந்த‌ ஷ‌ர்ட்டை ம‌ட்டும் அய‌ர்ன் ப‌ண்ணிக்கொடேன்னு ஒரு சின்ன‌ வேலைத‌ந்தா அதையும் ஓட்டை போடுவ‌து என‌ உருப்ப‌டியா ஒரு வேலையுமே செஞ்ச‌தா ச‌ரித்திரம் இல்லையே.. அது ஏன்?//

ஒரே சமயத்துல ரெண்டு வேளை செஞ்சா இப்படித்தான் இருக்கும். அடுப்பங்கரையும் கவனிச்சுட்டு, அயர்ன் பண்றதையும் சேர்த்து.

2. அது ஒன்னுமில்ல, இப்படியாவது நடந்து உங்க தொப்பையை குறைக்க வைக்கும் முயற்சியா இருக்கும்.

புதுவை சிவா said...

உலக ரங்கமணிகளின் உண்மைத் தலைவர் தாமிரா வாழ்க.
என் தங்கமே.. வாழ்க நீ

வெயிலான் said...

கலக்குற 'தல'

SanJai காந்தி said...

ஹாஹா.. :))

சபாஷ் சரியான போட்டி :)

கும்க்கி said...

அமுதா said...

:-))
தங்க்ஸ் எல்லாம் கேள்வி கேட்டால், ரங்ஸ் எல்லாம் பதில் சொல்லமாட்டேங்கறாங்க... ஆனால் எதிர் கேள்வி மட்டும் டாண் டாண்னு வந்துடுது... :-))

இதுக்கு பல ரிப்பீட் போட்டுக்கறேன்...

Truth said...

2. நாங்கள் மறக்கிறோமோ, நீங்கள் மறக்கிறீர்களோ நான்கு முறை க‌டைக்குப் போய் வ‌ந்த‌ பின்னும் ஐந்தாவ‌து முறையும் க‌டைக்கு இர‌க்க‌மில்லாம‌ல் அனுப்ப‌ முடிகிற‌தே.. அது எப்ப‌டி?

நச் :-)

அறிவிலி said...

உங்களோட வழில நானும் ஒரு எதிர்பதிவு போட்டுட்டனே....

Massattra Kodi said...

:-))))) அருமை.

"இந்த வேகத்தை தங்கமணிய கவனிக்கறதுல காமிங்கப்பா!"

ரிபிட்டேய்

அன்புடன்
மாசற்ற கொடி

ஓவியா said...

//இந்த சமூகத்திற்காக குறைந்த பட்சமாகவாவது என்ன செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? ஒரே ஒரு மரம் நடுங்கள்.!//

ஏன்? யாராவது தூக்கில தொங்கிறதுக்கா? :)

ஓவியா said...

//வார‌த்துக்கு ரெண்டு த‌ட‌வையாவ‌து பால் பொங்கி வ‌ழிவ‌து, மூணு தடவையாவ‌து ப‌ருப்பு அடிபிடிப்ப‌து என‌ உங்க‌ள் வேலையையும் உருப்ப‌டியா செஞ்ச‌தில்லை.//

இனியாவது இந்த வேலைகளை நீங்கள் எடுத்து திறமையாக பண்ணலாமே?!

ஓவியா said...

//உற‌வுச்சிக்க‌ல்க‌ள் நிறைந்த‌ சீரிய‌ல்க‌ளை பார்ப்ப‌தோடு ம‌ட்டுமில்லாம‌ல் அத‌ன் க‌தைக‌ளை இனிய‌ இர‌வுக‌ளில் எங்க‌ளோடு ப‌கிர்ந்துகொள்ள‌த்தான் வேண்டுமா?//

அதானே? ஏற்கனவே வெளில காட்டிக்காமல் ஓரக்கண்ணால் முழு சீரியலும் பாத்திருப்பீங்க.. இதில தெரிந்த கதையை சொன்னா வெறுப்பு வரத்தானே செய்யும்!!

ஓவியா said...

//டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போதோ, ச‌மைத்துக்கொண்டிருக்கும் போதோ உங்க‌ளுக்கு திடீரென‌ தோன்றும் அரிய‌ சிந்த‌னைக‌ளை ப‌கிர்ந்துகொள்ள‌ நாங்க‌ள் ம‌ட்டும்தான் கிடைத்தோமா?//

புத்திசாலிகளுக்கு சொல்வதைவிட உங்களுக்கு சொல்லலாம் என்று எண்ணியிருப்பார்... :)

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

ஓ இப்படி எல்லாம் வேற நாட்டில் நடக்குதா? அய்யோபாவம்:)))))
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

வால்பையன் said...

//ஆபாச தலைவர் தாமிரா வாழ்க வாழ்க!!!

ஆபாச = ஆண்கள் பாதுகாப்பு சங்கம்//

ஜூப்பரு!!!!!!!

Anonymous said...

பரிசல் மாதிரி சேம் சைடு கோல் போடுறா ஆட்கள் இருக்குமிடத்தில் நம்ம மானத்தக் காப்பாத்த நீ இருக்கே. அது போதும் ராசா.

தமிழ் பிரியன் said...

:))

தமிழ் பிரியன் said...

மீ த 50!

RAMYA said...

//
கணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள் : டாப் 10
//


ம்ம்ம், ஊரிலே ரமா இல்லைங்கற தைரியம் வரட்டும் வரட்டும், நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்????

RAMYA said...

//
நாங்கள் மறக்கிறோமோ, நீங்கள் மறக்கிறீர்களோ நான்கு முறை க‌டைக்குப் போய் வ‌ந்த‌ பின்னும் ஐந்தாவ‌து முறையும் க‌டைக்கு இர‌க்க‌மில்லாம‌ல் அனுப்ப‌ முடிகிற‌தே.. அது எப்ப‌டி?
//

தப்பு தப்பா எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது.

முதல் தடவை கடைக்கு அனுப்பும் போது மறந்து போய் இருப்பாங்க. அதனாலே மறுபடியும் அனுப்பி இருப்பாங்க.

RAMYA said...

//
ஷாம்பூ இன்னும் நாலு நாளைக்குதான் வ‌ரும், .:பேஸ் வாஷ் காலியாகப்போகுதுன்னு எல்லாம் நல்லா பிளான் போட்டு நடக்குதே.. ஒரு மாதமாவது பேப்பர்காரரையும், கேபிள்காரரையும் இரண்டாவது தடவை அலையவைக்காமல் பணம் தந்ததுண்டா?
//

அஹா!!! நல்ல கேள்வி காரணம்....
ஆயிரம் ரூபாயா இருந்திருக்கும் எல்லாம் சில்லறை தட்டு பாடுதான்.

RAMYA said...

//
. டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போதோ, ச‌மைத்துக்கொண்டிருக்கும் போதோ உங்க‌ளுக்கு திடீரென‌ தோன்றும் அரிய‌ சிந்த‌னைக‌ளை ப‌கிர்ந்துகொள்ள‌ நாங்க‌ள் ம‌ட்டும்தான் கிடைத்தோமா? ந‌ண்ப‌ர்க‌ளோ, ரிலேடீவ்ஸோ உங்க‌ளுக்கு கிடைய‌வே கிடையாதா?
//

ம்கூம் அவங்க சொந்தக்காரங்க கிட்டே
எல்லாம் சொல்லி பார்த்தாங்களாம்
எந்த reaction இல்லையாம்.
அதான் உங்க கிட்டேயே சொன்னாங்களாம்.

இதுக்கு போயி ..............

RAMYA said...

//
7. ஏதாவது முக்கிய அலுவலகச்சிக்கலை பற்றி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம மூஞ்சிய வெச்சுக்கறீங்க?
//

அதெல்லாம் ரகசியமாம் !!!

அருமையா கேள்வி கேட்டிருக்கீங்க
இதற்கு எல்லாம் யாரு பதில்
சொல்லுவாங்க???

உங்க தங்க்ஸ்ஆஆஆஆஆஆ!!!

Saravana Kumar MSK said...

//ச்சின்னப் பையன் said...
ஆபாச தலைவர் தாமிரா வாழ்க வாழ்க!!!
ஆபாச = ஆண்கள் பாதுகாப்பு சங்கம்//

ரிப்பீட்டு.. :)

Anonymous said...

வீட்டில கேட்க முடியாது என்பதால் இங்கு வந்து கேட்கிறிங்களா!!!

Anonymous said...

அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருந்தும் எழுதவில்லை..இருந்தாலும் இதற்கு பதில் சொல்லாம போகமுடியலை

/////நாங்க ரசிச்சு வாங்கி வருகிற புடவை, அதெப்படி உங்ககிட்ட ஏற்கனவே இருக்கிற கலர்லேயோ, டிஸைனிலேயோ அமைந்துவிடுகிறது?////

அண்ணிட்ட என்ன புடவை இருக்குன்னு கூட உங்களுக்கு தெரியாதா?

:P

உங்க சேர்ட்டை எரிப்பது நியாயமான செயல் தான்.

அத்திரி said...

//எங்க‌ வீட்டுக்குப்போய் இர‌ண்டு நாள் ஆவ‌த‌ற்குள் 'போலாம்.. போலாம்'னு அவ‌ச‌ர‌ப்ப‌டுத்துற‌ நீங்க‌ உங்க‌ வீட்டுக்குப்போய் இருப‌து நாள் ஆன‌பிற‌கு 'கிள‌ம்ப‌லாம்'னு சொன்னாலும்கூட‌ 'ஏங்க‌.. அவ‌ச‌ர‌ப்ப‌டுத்துறீங்க‌?'க‌ங்கிறீங்க‌ளே.. அது ஏங்க.?//

// ச்சின்னப் பையன் said...
ஆபாச தலைவர் தாமிரா வாழ்க வாழ்க!!!

ஆபாச = ஆண்கள் பாதுகாப்பு சங்கம்//
ரிப்பீட்டேய்.......

அண்ணே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................. நம்மளால கேள்வி....கேக்க முடியலையே.........

அத்திரி said...

இந்தக் கேள்விய எல்லாம் அண்ணிக்கு கொரியர் மூலம் அனுப்பிட்டேன்.. ஹைதையிலிருந்து வந்தவுடன்..... மண்டகப்படிக்கு ரெடியா இருங்க......

அத்திரி said...

அண்ணே உங்களை எல்லோரும் புகழ்ந்துட்டாங்க........ வார்த்தையை தேடிக்கிட்டு இருக்கேன்....... அடுத்த மாதம் ஊருக்கு போறேன்

கோவி.கண்ணன் said...

ஆண்கள் பாடுதான் திண்டாட்டம் போலும், பரிசல் பதிவுக்கு மேல் உங்கள் பதிவு சூடான இடுகையில் இருக்கு.
:)

தாமிரா said...

கடையில் கூட்டம் அம்முதே.. சரி ஹிட்டுதான் போலயிருக்கு.. லீட் கொடுத்த பரிசலுக்கும், அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.!
ஊருக்குப்போயிருந்ததாலும், பயணத்திலிருந்ததாலும், பிஸியினாலும் உடனுக்குடன் பதில் போடாது 'பத்து கேள்விகள்' சீஸனை என்ஜாய் பண்ண முடியாமல் போய்விட்டது. :((

தாமிரா said...

நன்றி இராகவன்.! (ரங்ஸ் சார்பாக பதிவு போட்டதற்கு// என்ன ராகவன் இப்பிடிச்சொல்லிட்டீங்க.. அதுக்குதானே வலைப்பூவுக்கே வந்தேன்)

நன்றி கோவிஜி.!
நன்றி டிவிஆர்.!

நன்றி தென்றல்.! (நீங்க சொல்லியிருப்பதெல்லாம் செய்யறவங்க பதில் சொல்லட்டும்.// அப்ப நீங்க ரொம்ப நல்லவருன்னு சொல்றீங்க..)

நன்றி ஜமால்.!
நன்றி அசோசியேட்.!

நன்றி சுபாசு.! (திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை?? // புதிய வருகையா தோழரே.. உங்களுக்காகத்தான் திருமணமாகதவர்களுக்கான லேபிளை இடதுபக்கம் தந்துள்ளேன். அனைத்தையும் படித்து கருத்துக்கூறவும்)

நன்றி பாபு.!
நன்றி பல்லவன்.! (நல்லா வெக்கிறீங்கய்யா பேரு?)

நன்றி பாசமலர்.! (என்னிக்காவது வாங்கிட்டு வர்ற மல்லிகைப்பூ...// அதையும் குறை சொன்னா எப்பிடி?)

நன்றி குசும்பன்.! (என்ன நக்கலா?)

நன்றி பரிசல்.! (இன்னைக்கேவா! என்னா வேகம்யா! // கடமையைச்செய்யும் போது என்ன தடை வந்தாலும் அஞ்சோம்!)

நன்றி நர்சிம்.! (தாமிரா.. என் தங்கமே..// ஆஹா.. என்ன பாசம்)

நன்றி அனுஜன்யா.! (பழைய பதிவுகளையும் காட்டி ஒரேயடியாய் தாக்கிடுங்க..விட்டுறாதீங்க‌)

நன்றி தேனியார்.! (இன்னிக்கு எங்க போனாலும் இந்த பத்து கேள்விகள்தான் உங்களுக்கு.. பேட் லக்.!)

நன்றி கார்க்கி.!
நன்றி வால்.!
நன்றி அமுதா.! (உங்களுக்கே இது ஓவரா தெரியல அமுதா? எதுத்து கேள்வி கேக்குறது யாரு? ஆண்களா? உலகப்பொய்யா தெரியல இது.!)

நன்றி மின்னல்.! (நன்னா சிந்திக்கிறீங்க பிரதர்.. உங்க சிந்தனைகளை ஒரு கல்வெட்டுல எழுதிவெச்சுட்டு பக்கத்திலேயே உக்காந்துக்குங்க.. பின்வரும் சந்ததிகள் பாத்து புரிஞ்சு நடந்துப்பாங்க.. **சும்மா ஜாலிக்கு**:)))

நன்றி அருண்.!
நன்றி வினிதா.!
நன்றி முரளி.!
நன்றி பல்ஸ்.!

தாமிரா said...

நன்றி மிஸஸ்.டவுட்.!

நன்றி ச்சின்னவர்.! (ஆபாச தலைவர் தாமிரா// நல்லா பட்டப்பெயர் வெக்கிறீங்கையா.. என் வென்று.! அப்புறம் உங்களை என்னன்னு சொல்றதாம்?)

நன்றி வால்.! (இதுன்னா ரொம்ப பிடிக்குமே..)

நன்றி மேவீ.! (சொந்தமா சிந்திங்கையா..)

நன்றி அமித்து.! (ஆமா.. பெருசா ரெண்டு வேலையெல்லாம் ஒரே நேரத்தில செஞ்சுட்டாலும்..)

நன்றி சிவா.!
நன்றி வெயில்.!
நன்றி சஞ்சய்.!

நன்றி கும்க்கி.! (இந்த மாதிரி பண்றதுக்கு தனியா ஒரு நாள் உங்களை கவனிக்க வேண்டியிருக்குது தல..)

நன்றி ட்ரூத்.!
நன்றி அறிவிலி.!
நன்றி மாசற்றகொடி.!

நன்றி ஓவியா.! (பதிவைக்குறித்த உங்கள் கிண்டலை ரசிக்கமுடிகிறது.. ஆனால் மரம் நடுவதைப்பற்றிய கேப்ஷனை கிண்டல் செய்வதை புரிந்துகொள்ளமுடியவில்லை.. ஸாரி)

நன்றி சிவா.! (ஓ இப்படி எல்லாம் வேற நாட்டில் நடக்குதா? அய்யோபாவம்:)))))/
ரிப்பீட்டு.!)/// எத்தனை நாளுக்கு இந்தப்படம்னு நானும் பாக்குறேன்..)

நன்றி வேலன்.! (எல்லாம் உங்க ஆசீர்வாதம்ணே..)

நன்றி தமிழ்.! (பணிக்கு திரும்பியாச்சு போலயிருக்குது.. வாங்க வாங்க.. பதில் போட நேரமில்லாமல் எல்லா கடைக்கும் விசிட் பண்றீங்க போல..)

நன்றி ரம்யா.! (ம்கூம் அவங்க சொந்தக்காரங்க கிட்டே
எல்லாம் சொல்லி பார்த்தாங்களாம் எந்த reaction இல்லையாம்.// நாங்க மாட்டிக்கிட்டோமேங்கிறதுதானே விஷயமே..)

நன்றி சரவணா.!
நன்றி தூயா.! (அண்ணிட்ட என்ன புடவை இருக்குன்னு கூட உங்களுக்கு தெரியாதா?// ஒரு பத்து பதினைஞ்சு இருந்தா பரவாயில்லை.. ஆனா..)

நன்றி அத்திரி.! (இந்தக் கேள்விய எல்லாம் அண்ணிக்கு கொரியர் மூலம் அனுப்பிட்டேன்..// யோவ்.. நேர்ல பாக்கும் போது எங்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது உங்களுக்கு நல்லது)

நன்றி கோவிஜி.! (ஆண்கள் பாடுதான் திண்டாட்டம் போலும்// சூடானாதான் நம்புவீங்களா? நல்லா ஆளுய்யா நீரு.. கல்யாணமாயி ரொம்ப வருஷமாச்சுன்னு சொன்னாய்ங்க.. ஏதோ யூத்து மாதிரி கேள்வி கேட்னுக்கிறீரே..)

நையாண்டி நைனா said...

அண்ணே ...
கொஞ்சம் நம்ம வீட்டுக்கும் வந்து தலைய காட்டுங்க...

எம்.எம்.அப்துல்லா said...

நல்ல ஆளய்யா நீரு...நான் இங்க வரலன்னவுடனே நம்ப கடைக்கே வந்து வெத்தல,பாக்கு வச்சு அழைக்கிறீரு....

உங்க பத்தை படிச்சால் நம்ம பத்து டம்மியா இருக்கதா எனக்குத் தோணும் (என்ன இருந்தாலும் எழுத்தாளர் இல்லையா நீங்க!!!). அதுனாலதான் வரல.

(இது வராததுக்கு முதல் ரீசன். இன்னும் 9 ரீசன் அப்புறமா வந்து சொல்லுறேன்)

Anonymous said...

:-))

ஊர் சுற்றி said...

அங்கேயும் PASS...
இங்கேயும் PASS...

நாங்க இன்னும் எந்த அணியிலேயும் சேரலீங்கோ!!!