Wednesday, February 11, 2009

குறும்படம் எடுப்பது எப்படி? -பகுதி 2


(படிக்காதவர்கள் பாக‌ம் 1ஐ பார்த்துவிட்டு வந்துவிடவும். இதுவும் யூத்ஃபுல்விகடனில் இணைப்பு த‌ர‌ப்ப‌ட்ட‌ ஒரு ப‌திவு. விக‌ட‌னுக்கு ந‌ன்றி.)

ஷூட்டிங் :

எல்லாம் தயாராகிவிட்டதால் அடுத்து ஷூட்டிங்தான்... முன்னதாக காட்சிகளைச்சொல்லி நடிகர்களை பிராக்டிஸ் பண்ணச் சொல்லுங்கள். முடிந்தால் உங்கள் முன்னிலையில் ரிகர்சல் பாருங்கள். நல்ல ஒரு சண்டேயாக பார்த்து நடிகர்களுடன் லொகேஷனுக்கு கிளம்புங்கள். உதாரணமாக பக்கத்தில் உள்ள பிளே கிரவுண்டில் ஷூட்டிங் என்றால் ஸ்நாக்ஸ், கூல்டிரிங்ஸ், வாட்டர் பாட்டில் சகிதம் கிளம்புங்கள். அதற்காக பிக்னிக் போகிற எபெஃக்ட் வேண்டாம். இதுக்குதான் சொன்னேன், ஷூட்டிங் ஸ்பாட் வீடாக இருந்தால் சாப்பாட்டு பிரச்சினை இருக்காது. மறக்காமல் திரைக்கதை, வசனம் எழுதிவைத்த டைரி எடுத்துக்கொள்ளுங்கள். காமிராவில் பாட்டரி ஃபுல்லாக சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். மெமரி கார்ட், அல்லது டிவைஸின் கொள்திறன் எவ்வளவு என்பதையும் எவ்வளவு நேரம் தாங்கும் என்பதையும் முதலிலேயே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சாப்பாட்டுக்கு முன்னர் 40% ஷூட்டிங் முடிச்சுடணும்னு ஸ்ட்ரிக்டா இருங்க. நீங்கள் நடிகர்களுக்கு காட்சிகளை விளக்க, உங்கள் நண்பர் காமிராவைப் பிடிக்கட்டும். சினிமா மாதிரி ஆக்ஷன், கட் என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

                         (படமெடுக்குற இயக்குனரையே படமெடுக்கறாங்கப்பா)

   பொதுமக்களுக்கு நீங்கள் யாரோ நண்பர்கள் பேசிக் கொண்டிருப்பது போலவோ, போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போலவோ தோன்றும் படி நடந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் எந்த விதமான் பிற உபகரணுங்களும் (பெரிய ஸ்டாண்டுகள், விளக்குகள், பெட்டிகள், வண்டிகள், கூட்டம்) இல்லாமல் எப்படி ஷூட்டிங் செய்கிறார்கள் என்று உங்களை கேலி செய்து அவமானப்படுத்திவிடுவார்க‌ள்.

  அடுத்து உங்க‌ள் திரை‌க்க‌தை சொல்வ‌தைப்போல‌ வ‌ரிசைக்கிர‌ம‌மாக‌ காட்சிக‌ளை எடுக்க‌த்துவ‌ங்குங்க‌ள். அதே காட்சியை மீண்டும் மீண்டும் ந‌டிக்க‌ச்சொல்லி காமிராவை வேறு வேறு ஆங்கிளில் வைத்து எடுத்துக்கொள்ளுங்க‌ள். அப்போதுதான் எடிட்டிங்கில் ஜும்மா வேலைகள் காட்டி பிரமாதப்படுத்த வசதியாக இருக்கும். நீண்ட காட்சிகளாக இல்லாமல் குட்டிகுட்டி காட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்று பிறகு சொல்கிறேன். இப்போது உங்களுக்கு ஒரு பிரச்சினை துவங்கியிருக்கும். அதாவது பர்ஃபாமென்ஸ். நீங்கள் எவ்வளவு விளக்கமாக கூறினாலும் உங்கள் தம்பி (ஹீரோ) சோகமாக சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற‌ காட்சியில் சொதப்பிக்கொண்டிருப்பார். நான்கு நாள் தாடி வைத்துக்கொண்டு சிகரெட்டை ஒழுங்காக பிடித்தாலும், முகத்தில் சோகம் மட்டும் வராது. காமிராவை பார்க்காதே என்று எத்தனை தடவை சொன்னாலும் அரை நிமிடம் நடித்துவிட்டு எப்பிடிடா என்று நம்மை/காமிராவைப் பார்த்து வழிவார். எப்பிடியாவ‌து போராடி அவர் த‌ண்ணிய‌டிப்ப‌தை வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவ‌‌தாக‌ கூறி ப‌ய‌முறுத்தி அவரை சோக‌மாக்கி காட்சியை எடுங்க‌ள். அது சோக‌த்துக்குப் ப‌திலாக‌ கோப‌ உண‌ர்ச்சியாக‌ மாறியிருக்கும். க‌தையில் உண‌ர்ச்சி மாறினால் ப‌ர‌வாயில்லையா என்று யோசித்துக்கொண்டு எடுத்துத் தொலையுங்க‌ள். இப்போது உங்கள் அசிஸ்டென்ட் நண்பர் 'இவனைப் போட்டதுக்குப் பதிலா நானே நல்லா நடிச்சிருப்பேன்டா' என்பார். இந்த வசனத்தை உங்கள் பிராஜக்ட் முழுவதும் கேட்க வேண்டி வரும் என்பதால் டக்கென்று ஒரு ஐடியா பண்ணி ஒரு காரெக்டரில் நடிக்க அவரை கமிட் பண்ணி நடிக்கச்சொல்லி காமிராவை அவரைப் பார்த்து திருப்பிவிடுங்கள். மூஞ்சி வேர்த்து வழிக்கு வந்துவிடுவார்.

   இத‌ற்குள் எடுத்த‌ காட்சியை உட‌னுக்குட‌ன் ஓட‌ விட்டு கிளான்ஸ் பார்த்துக்கொள்ளுங்க‌ள். ஏனெனில் முகத்தை எடுக்கச்சொன்னால் மூக்குக்கு கீழே எடுத்து வைத்திருப்பார் உங்கள் அசிஸ்டென்ட். முழு உருவத்தை எடுக்கச்சொன்னால் மண்டை மட்டும் இருக்காது. அவர் ரொம்பப்படுத்தினால் காமிராவை நீங்களே பிடித்துக்கொண்டு ஃபீல்டை அவரை பார்க்கச்சொல்லுங்கள்.

   வேறு பைக்குக‌ள், சைக்கிள்க‌ள் ஃபீல்டில் இருந்தா க‌வ‌ன‌ம். டக்கென்று எடுத்துச்சென்றுவிடுவார்கள், நீங்கள் காட்சியை திரும்ப எடுக்கவேண்டிவரும். இப்ப‌டியே கொஞ்ச‌ நேர‌ம் போராடிக்கொண்டிருந்த‌தில் காமிராவில் பேட்ட‌ரி ப‌டுத்திருக்கும். எரிச்ச‌லில் வீட்டுக்குப்போய் சார்ஜ் போட்டுக்கொண்டு, சாப்பிட்டுவிட்டு, அப்ப‌டியே எடுத்த‌ கிளிப்பிங்ஸை அன்லோட் ப‌ண்ணிவிட்டு வ‌ர‌லாம் என‌ கிள‌ம்பிவிடுங்க‌ள், வேறு வ‌ழியில்லை. ந‌டிக‌ர்களை மாலை 4 ம‌ணிக்கு ரெடியாக‌ச்சொல்லி எச்ச‌ரித்துவிட்டு செல்லுங்க‌ள்.

   எல்லோரும் ரெடியானவுடன், 'நான்கு ம‌ணிக்கு வ‌ர‌முடியாதுடா. ஃப்ரெண்ட்ஸ் 'ச‌த்ய‌மில்' டிக்கெட் போட்டுருக்காங்க‌' என்பார் உங்க‌ள் த‌ம்பி. 'வெளாடுறியா.. மிதிச்சு ந‌வுட்டிருவேன் உன்ன..' என்று மிர‌ட்டி அழைத்துச்செல்லுங்க‌ள். இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் வேறு கும்ப‌‌ல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் விஷ‌யத்தை சொல்லியும் சொல்லாம‌லும் அவ‌ர்க‌ளை கிளிய‌ர் ப‌ண்ணும் போது மணி ஐந்தாயிருக்கும். இப்போது உங்க‌ள் அசிஸ்டென்ட், 'பாருடா.. காலையிலே சூரிய‌ன் இவ‌ன் முக‌த்ல‌ ப‌ளிச்சுன்னு அடிச்சுது.. இப்போ ட‌ல்லா இருக்குது' என்று டெக்னிக‌ல் ச‌ந்தேக‌த்தை கிள‌ப்புவார். ப‌ர‌வாயில்லை, அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம் சாதார‌ண‌ம் என்று ஷூட்டிங்கைத் துவ‌க்கிவிடுங்க‌ள். ஆறு மணிவ‌ரைதான் முடியும். பார்த்தால் 10% கூட‌ முடிந்திருக்காது.

   ம‌றுநாள் ம‌திய‌த்துக்கு மேல் அரை நாள் லீவு போட்டு வ‌ந்து மின்ன‌ல் வேக‌த்தில் முடித்துவிட்டால் என்ன‌ என்று தோன்றும். நான்கை‌ந்து பேர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டிருப்ப‌தால் அது நிச்ச‌ய‌ம் முடியாது. பொறுமை ரொம்ப‌ அவ‌சிய‌ம். அடுத்த‌ ஞாயிறு பார்க்க‌லாம் என்று 'பேக்க‌ப்' செய்துவிடுங்க‌ள். அடுத்த‌ ஞாயிற‌ன்று ம‌ற‌ந்துபோய் உங்க‌ள் த‌ம்பி எழுந்த‌வுட‌ன் ப‌ள‌ப‌ள‌வென்று ஷேவ் செய்திருப்பார். அன்று அவ‌ர் போட்டிருந்த‌ ச‌ட்டையை ஒருவாரம் கழித்து இன்றுதான் சோப்பு நீரில் ஊற‌ வைத்திருப்பார் உங்க‌ள் த‌ங்க‌ம‌ணி. அவர்களை நம்பாத ஒரு வேலையிலும் கச்சிதமாக தலையிட்டு தொல்லைதர அவர்களை மாதிரி வேறொருவர் உளரோ.? உங்க‌ளுக்கு லேசாக‌ த‌லை சுற்றிக்கொண்டு வ‌ரும்.

    வேறு வ‌ழியில்லாம‌ல் அந்த‌க்காட்சியை மீண்டும் ஷூட் செய்வீர்க‌ள். அல்ல‌து அந்த‌க்காட்சியை ப‌ட‌த்திலிருந்தே தூக்கிவிடுவீர்க‌ள். இவ்வாறு உங்க‌ள் ப‌ட‌ப்பிடிப்பு இர‌ண்டு மாத‌ங்க‌ள் இனிதே ந‌ட‌க்கும்.


                          (பாலு மகேந்திராவா? அடிங்க்... நான் தான்)

எடிட்டிங் & பின்னணி :

   இது முத‌லில் எளிதாக‌ தோன்றினாலும் பின்ன‌ர் உங்க‌ள் மூளையை சூடாக்கி, முதுகைப் ப‌த‌ம்பார்க்கும் வேலையாகும். எடுத்து வைத்த ஷாட்கள் நூற்றுக்க‌ண‌க்கில் 'த‌ம்ப்நெயிலில்' பார்க்கும் போது ஒன்று போல‌வே தோன்றி எதை வைப்ப‌து எதை அழிப்ப‌து என‌ திண‌ற‌வைக்கும். ஒரே காட்சியை துண்டு துண்டாக‌ வெட்டி குழ‌ப்ப‌த்துக்கு ஆளாகுவீர்க‌ள். சேஃப்டிக்கு காப்பி காப்பியாக‌ போட்டு ஃபைல்ஸ் நிர‌ம்பி வ‌ழியும். பாதி வேலை ந‌ட‌ந்துகொண்டிருக்கும் போது 'போன‌ ஞாயித்துக்கிழ‌மை ஊதாக‌ல‌ர் பேண்டுல‌ எடுத்த‌ சீன் எங்க‌யிருக்கு? அதுதான் இருக்கிற‌துலேயே ந‌ல்லா வ‌ந்திருந்த‌து.. காங்க‌லியே?' என்று அசிஸ்டென்ட்டுட‌ன் ச‌ண்டை போடுவீர்க‌ள். டைரியில் உள்ள‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கும் ஷாட்க‌ளில் ந‌டிக‌ர்க‌ள் பேசியுள்ள‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌மேயிருக்காது. எல்லாத்தியும் ம்யூட் ப‌ண்ணி புதுசா பேச‌ வ‌ச்சிடலாம் என‌ முடிவு செய்வீர்க‌ள். ஏதாவது பழைய/ அல்லது ஆங்கில படங்களின் பின்னணி இசையை 'லவுட்டி' குறைந்தபட்சம் இசையிலாவது தரத்தை சேர்த்துவிடுங்கள். ஒரே காட்சியில் ஷாட்கள் பளிச்சென்றும், இருளாகவும் டக்கென்று மாறுவது போல தோன்றினால் விட்டுவிடுங்கள். கலர் கரெக்ஷன் எல்லாம் நம்ம படத்துக்கு
 கொஞ்சம் ஓவர்.  ஒரு வ‌ழியாக‌ காலையில் ஆர‌ம்பித்த‌ வேலை இர‌வுக்குள்  முடிவுக்கு வ‌ரும்.

க‌டைசியில்,

'பிச்சைக்காரர்களின் கொடுமையான வாழ்க்கை, வில்லன்கள்.. முடிவில் ஒரு அகோரிச்சாமியார் அவர்களை கொன்று தின்கிறான்' என்று பிரமாண்டமாக நீங்கள் யோசித்துவைத்த கதை..  

  கோயில் வாசலில் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட்டுவிட்டு, நம் ஹீரோ  கடையில் போய் சிக்கன் 65 தின்கிறான்' என்று சிம்பிளாக வந்திருக்கும். கவலைப்படாதீர்கள்.. கோயிலுக்குப் போய் வரும் ஒருவன் எப்படி நான்‍வெஜ் சாப்பிடலாம் என்ற அரிய விவாதத்தை ந‌ம் ப‌ட‌ம் ஏற்ப‌டுத்த‌லாம். ந‌ல்ல‌ ம‌ன திட‌ம் உள்ள‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு மட்டும் ப‌ட‌த்தை போட்டுக் காட்டுங்க‌ள். விம‌ர்ச‌ன‌த்தை காதில் வாங்கிக் கொள்ளாம‌ல் அடுத்த‌ ப‌ட‌த்துக்கு இன்னும் முன்னெச்செரிக்கையுட‌ன் ஏற்பாடுக‌ளை க‌வ‌னிக்க‌த்துவ‌ங்குங்க‌ள்.

கிளைமாக்ஸ் :

    பட‌த்தின் கிளைமாக்ஸ் அப்ப‌வே முடிஞ்சு போச்சு. இது ப‌திவின் கிளைமாக்ஸ். 'குறும்படம்' எடுப்பதைப்பற்றி இன்னும் நிறைய‌ தெரிந்துகொள்ள‌‌ விரும்பினால் த‌குந்த‌ 'பார்ட்டி'க்கான ஏற்பாடுக‌ளுட‌ன் த‌னிமெயிலுக்கு வ‌ர‌லாம்.

தொட‌ரும்..


(இப்போ எதுக்கு தொட‌ரும்? அதான் முடிஞ்சு போச்சேங்கிறீங்க‌ளா? முத‌ல் பாக‌த்தின் முத‌ல் ப‌குதியைப் பாருங்க‌ள். இதைப்பற்றி எழுத ந‌ம‌க்கு என்ன‌ த‌குதியிருக்கிற‌து என்று கேட்டுள்ளார்க‌ள். ஆக‌வே நாம் குறும்ப‌ட‌ம் எடுத்த‌ நிஜ‌ அனுபவ‌த்தைச் சொல்ல‌ வேண்டாமா? அதுதான் அடுத்த‌ ப‌குதியில்..)

37 comments:

MayVee said...

me th 1st

MayVee said...

me th 2nd too..
will comment after readin

பரிசல்காரன் said...

சீரியஸாவே உங்ககிட்ட சரக்கிருக்கும் போல.. சபாஷ்! (சரக்குன்னதும் கிண்டலா யாராவது பின்னூட்டினா ஒத விழும்!)

‘அங்கே’ எடுக்கப்பட்ட புகைப்படங்களை சரியான பதிவிற்கு சரியாக உபயோகப் படுத்திக் கொண்டதில் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் பத்திரிகையாளர் தெரிகிறார். சபாஷ் நெ.2!

புதுகைத் தென்றல் said...

சரக்குன்னதும் கிண்டலா யாராவது பின்னூட்டினா ஒத விழும்!)

avvvvvvvvvvvv

சந்தனமுல்லை said...

ரொம்ப பெரிய பதிவா இருக்குது..
//பாருடா.. காலையிலே சூரிய‌ன் இவ‌ன் முக‌த்ல‌ ப‌ளிச்சுன்னு அடிச்சுது.. இப்போ ட‌ல்லா இருக்குது' என்று டெக்னிக‌ல் ச‌ந்தேக‌த்தை கிள‌ப்புவார்//
:-))

//சேஃப்டிக்கு காப்பி காப்பியாக‌ போட்டு ஃபைல்ஸ் நிர‌ம்பி வ‌ழியும். //

அட ஆமா..என்னை மாதிரி சாதாரண போட்டோகிராபருக்குத்தான் இந்தஹ் நிலமைன்னு நினைச்சேன்!!

புதுகைத் தென்றல் said...

பதிவை படிச்சிட்டு வர்றேன்.

இப்போதைக்கு ப்ரசண்ட் சார்.

(பாலு மகேந்திரா மாதிரி அந்த போட்டோ ஜூப்பருங்க)

இயக்குநர் இமயம்னு சொன்னதுக்கு ரொம்ப நக்கல்னு சொன்னீங்க. இப்படி எல்லாம் போட்டோ மட்டும் எடுத்து போடலாமாக்கும்

:))

புதுகைத் தென்றல் said...

யூத்ஃபுல்விகடனில் இணைப்பு த‌ர‌ப்ப‌ட்ட‌ ஒரு ப‌திவு. //

ஆஹா பாராட்டுக்கள்.

என்னோட பதிவுக்கும் பேரண்ட்ஸ் கிளப்பிலிருந்தும் இணைப்பு கொடுத்திருக்காங்க

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே படத்துல கும்கிக்கு பக்கத்துல இரண்டு சிங்குகள் இருக்காங்களே யாரு??? மன்மோகன் சிங்கும்,மணீந்தர் சிங்குமா??

எம்.எம்.அப்துல்லா said...

// (பாலு மகேந்திராவா? அடிங்க்... நான் தான்)

//

பாதி மகேந்திரா !!!\

:))))

அனுஜன்யா said...

தாமிரா,

என்ன சொல்ல! நான் சமீபத்தில் படித்த பதிவுகளிலேயே இந்த இரு பதிவுகள் போல் சிரித்தது எதற்கும் இல்லை. அலுவலகத்தில் ஏற்கெனவே 'கழண்ட' இமேஜ்.

இவ்வளவு நகைச்சுவை உணர்வுடன் சொல்ல தனித்திறமை வேண்டும் தாமிரா. Really hats off to you. இந்த இரு பதிவுகள் மற்றும் உங்கள் ATM மகாலக்ஷ்மி பதிவுகளைப் பாதுகாப்பாக வையுங்கள். உங்களுக்கே பின்னாட்களில் ஆச்சரியமாக இருக்கும்.

முதலில் சில வரிகளை சுட்டிக்காட்ட நினைத்தேன். முடியல. மொத்தப் பதிவும் அட்டகாசம்.

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

பாராட்டுக்கள்

அசோசியேட் said...

பார்ட் ஒண்ணு பார்ட் ரெண்டு - அப்படீன்னு குறும்பு படம் -சாரி குறும்படம் சம்பந்தமா பார்ட் பார்ட்டா அலசி எங்கள சிரிக்க வச்சதுக்கு தலவணங்குறேங்க !!

MayVee said...

nalla irukku....
ரொம்ப சிரித்துவிட்டேன்....
போட்டோ ல அவ்வளவு பேர் இருக்காங்களே.....
அதுல யார் கேமரா மேன்

Truth said...

தாமிரா,
கொஞ்சம் நாளாத்தான் உங்க பதிவுகளை படிச்சிக்கிட்டு இருக்கேன். ரொம்ப நல்லாயிருக்கு.
எனக்கும் சின்ன வயசுல இருந்து படம் புடிக்க ரொம்ப ஆசை. நடிகர்கள் பிரச்சனைல தான் நானும் முழிச்சிக்கிட்டு இருக்கேன்.
கூடிய சீக்கிரம் ஒரு படம் எடுத்து வெளியிடறேன் :-)

குசும்பன் said...

// (படமெடுக்குற இயக்குனரையே படமெடுக்கறாங்கப்பா)//

ஓஸ்கார் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் இல்லை) அவார்ட் கொடுக்கும் பொழுது நடிகர் நடிகைகள் கொடுக்கும் போஸுக்கு போட்டியால்ல இருக்கு!

***************************
//நாம் குறும்ப‌ட‌ம் எடுத்த‌ நிஜ‌ அனுபவ‌த்தைச் சொல்ல‌ வேண்டாமா? //

கார்கி அந்த ஊட்டி பிகரோடு செஞ்ச கில்மாவை MMS செஞ்சிங்க ஓக்கே!
இப்படி பப்ளிக்கா போட்டா தமிழ்மணம் உங்களை தூக்கிடும் அண்ணாச்சி!

(இருந்தாலும் அந்த குறும்படத்தில் அந்த கிள்மாவுக்கு சில குளோசப் காட்சிகள் வைத்திருக்கலாம்)

தாமிரா said...

நன்றி மேவீ.!

நன்றி பரிசல்.! (காதைக்கொண்டாங்க ஒரு ரகசியம். ஆபீஸில் அப்லோட் பண்ண முடியாது என்பதால், எழுதி மெயில் பண்ணுவது மட்டும்தான் என்வேலை. போட்டோவை இணைத்தது நண்பர் பண்ணிய குறும்பு. ஆகவே உங்கள் பாதி பாராட்டு நண்பரைச்சார வேண்டியது.)

வாங்க தென்றல்.! (பாலு மகேந்திரா போட்டோவை ஊட்டி சுற்றுலாவில் யாரோ எடுத்தாங்க‌.. யாருபா அது? பாதி புக‌ழ் என் காமிராவுக்குதான் என்ப‌து சிற‌ப்பு)

நன்றி முல்லை.! (ஸாரி பார் தி ரொம்ப பெரிய பதிவு.. இவ்வளவுக்கும் இரக்கமில்லாமல் நிறைய எடிட் பண்ணிதான் போட்டேன்)

தாமிரா said...

வாங்க‌ அப்துல்.! (ஒண்ணு செல்வேந்திர‌சிங்.! இன்னொண்ணு.. சிரிக்காதீங்க.. ஊர‌றிஞ்ச பரிசல்சிங்.!)

நன்றி அனுஜன்யா.! (உங்க‌ள் புக‌ழ்ச்சியிலிருந்து நீங்க‌ள் எவ்வ‌ள‌வு ர‌சித்திருக்கிறீர்க‌ள் என்ப‌து புரிகிற‌து. இது எனது மிகப் பெருமையான நேரங்களில் ஒன்று.)

ந‌ன்றி முர‌ளி.!
ந‌ன்றி அசோசியேட்.!
ந‌ன்றி மேவீ.!

ந‌ன்றி ட்ரூத்.! (இங்க‌ பாருங்க‌ப்பா ஒருத்த‌ரு கிள‌ம்பியிருக்காரு.!//கூடிய சீக்கிரம் ஒரு படம் எடுத்து வெளியிடறேன் :-)// எடுங்க‌.. ஆனா வெளியிட‌ற‌துக்கு முன்னாடி யோசிச்சுக்குங்க..)

குசும்பன் said...

//மறக்காமல் திரைக்கதை, வசனம் எழுதிவைத்த டைரி எடுத்துக்கொள்ளுங்கள். //

படத்துக்கு வசனமாங்க முக்கியம்:))

தாமிரா said...

நன்றி குசும்பன்.! (யோவ், ஏதாவது தெரிஞ்சாமாதிரி டுபாக்கூர் விட்டுகிட்டிருக்காதீங்க.. அப்புறம் ஏதாவது சொல்லிறப்போறேன்)

ராஜ நடராஜன் said...

குறும்பு படம் ஏதாவது சொல்றீங்களோன்னு நினைச்சு வந்தா நெசமாவே குறும்படம் எடுக்கத்தான் கத்துக்கொடுக்கிறீங்க.புதிய கலைஞர்கள் உருவாக வாழ்த்துக்கள்.

Anonymous said...

//'பிச்சைக்காரர்களின் கொடுமையான வாழ்க்கை, வில்லன்கள்.. முடிவில் ஒரு அகோரிச்சாமியார் அவர்களை கொன்று தின்கிறான்' என்று பிரமாண்டமாக நீங்கள் யோசித்துவைத்த கதை..

கோயில் வாசலில் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட்டுவிட்டு, நம் ஹீரோ கடையில் போய் சிக்கன் 65 தின்கிறான்//

யோவ் தாமிரா உனக்குள்ள உறங்கிகிட்ருக்க கலைஞன உசுப்பி விட்டது யார்?

கார்க்கி said...

/கார்கி அந்த ஊட்டி பிகரோடு செஞ்ச கில்மாவை MMS செஞ்சிங்க ஓக்கே!
இப்படி பப்ளிக்கா போட்டா தமிழ்மணம் உங்களை தூக்கிடும் அண்ணாச்சி//

என் ரசிகைகள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்த முனையும் உங்கள் போக்கை கடுமையாக கண்டிக்கிறேன். அது அந்த பெண்ணின் கையில் இருந்த கார் கீயோட செய்த விளையாட்டு என்று மாற்றி போடுமாறு கட்டளையிடுங்க தாமிரா..

கார்க்கி said...

/இயக்குநர் இமயம்னு சொன்னதுக்கு ரொம்ப நக்கல்னு சொன்னீங்க. இப்படி எல்லாம் போட்டோ மட்டும் எடுத்து போடலாமாக்கு//

அத ஏன் கேட்கறீங்க? இப்படித்தான் வேணும்னு தொல்லை பண்ணாரு. என்ன செஞ்சும் இவர இயக்குனரா காட்ட முடியல. அப்புறமா முகத்த இருட்டுல எடுத்து ஒப்பேத்தியது நான் தான்..

Mahesh said...

ஆஹா... இம்புட்டு வேலை இருக்கா? படிச்சு சிரிச்சு ரொம்ப ரசிச்சேன்.

நானும் போன வருஷம் டுபுக்கு எடுத்த குறும்படத்தைப் பாத்துட்டு என் பொண்ணு சஹானா பேர்ல ஒரு குறும்படம் எடுத்தேன். 3 ராகங்களை பேஸ் பண்ணி. ஆனா கடைசில எனக்கே சகிக்கல. ஆட்டையக் கலைச்சுட்டு, இன்னும் நல்லா ஒர்க் பண்ணி அடுத்த படம் 100 நாள் ஓட்டலாம்னு விட்டுட்டேன்.

தாமிரா said...

நன்றி நடராஜன்.! (என்ன‌ங்க‌ இப்பிடிக்குழ‌ப்புறீங்க‌.. நானே ஜாலிக்காக‌ ஒரு ப‌திவு எழுதினா நீங்க‌ அதை சீரிய‌ஸா க‌த்துக்குடுக்குறீங்க‌ன்றேங்க‌ளே.. என்ன‌ ப‌ண்ண‌லாம்.)

எனக்கே குழப்பமாக இருப்பதால் இது மொக்கைப்பதிவா அல்லது சீரியஸ் பதிவா என்ற தீர்பை வழங்கும் படி மூத்த பதிவர்கள் வேல‌ன், அனுஜ‌ன்யா ஆகியோரைக் கேட்டுக்கொள்கிறேன்.

தாமிரா said...

வாங்க‌ வேல‌ன்.! (எப்புடி?)

வாங்க‌ கார்க்கி.! (குசும்ப‌ர் போட்ட‌ போடுல‌ எப்பிடி அட‌ங்கிட்டாரு பார்த்த‌ல்ல‌..)

வாங்க‌ ம‌கேஷ்.! (அவ‌னா நீயி..)

அப்பிடியே மீ த‌ 25.!

Truth said...

// எடுங்க‌.. ஆனா வெளியிட‌ற‌துக்கு முன்னாடி யோசிச்சுக்குங்க..)

யோசிக்கனுமா என்ன? இளையதளபதி, சின்னத்தளபதி, வீரத்தளபதி, பேரரசு (இவருக்கு என்ன பட்டப் பெயர்?), யோசிச்சிருந்தா, நமக்கு முறையே ATM, பழனி, நாயகன், கூகிள் மேப்ஸ் எல்லாம் கிடைச்சிருக்குமா?

மருபடியும் சொல்லுங்க, யோசிக்கனுமா? ;-)
ஒரு புதுத்தளபதி :P உருவாகறத நீங்க தடுக்கிறத நான் வன்மையா கண்டிக்கிறேன் :D

RAMASUBRAMANIA SHARMA said...

உப்பு, புளி, மிளகா எல்லாம் சரியாத்தேங் இருக்கு....சர்த்தேன்...

ச்சின்னப் பையன் said...

அட்டகாசமா விளக்கிட்டீங்க...

அனுபவப் பதிவுக்கு வெயிட்டிங்...

தராசு said...

வாழ்த்துக்கள் தலைவரே,

தாமிரா பக்கம்னு நிரந்தரமா ஒரு பக்கத்தை விகடன் வாராவாரம் ஒதுக்க வாழ்த்துகிறேன்

வால்பையன் said...

//யூத்ஃபுல்விகடனில் இணைப்பு த‌ர‌ப்ப‌ட்ட‌ ஒரு ப‌திவு. விக‌ட‌னுக்கு ந‌ன்றி.//

வாழ்த்துகள் நண்பரே!

வால்பையன் said...

//அவர் த‌ண்ணிய‌டிப்ப‌தை வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவ‌‌தாக‌ கூறி ப‌ய‌முறுத்தி அவரை சோக‌மாக்கி காட்சியை எடுங்க‌ள்.//

இப்படியெல்லாம் பயமுறுத்தற மாதிரி இருந்தால் எனக்கு எந்த வேடமும் வேண்டாம், சொல்லிபுட்டேன்

வால்பையன் said...

//த‌குந்த‌ 'பார்ட்டி'க்கான ஏற்பாடுக‌ளுட‌ன் த‌னிமெயிலுக்கு வ‌ர‌லாம். //

மெயில்லயே பார்ட்டியா?

மங்களூர் சிவா said...

/
'பிச்சைக்காரர்களின் கொடுமையான வாழ்க்கை, வில்லன்கள்.. முடிவில் ஒரு அகோரிச்சாமியார் அவர்களை கொன்று தின்கிறான்' என்று பிரமாண்டமாக நீங்கள் யோசித்துவைத்த கதை..

கோயில் வாசலில் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட்டுவிட்டு, நம் ஹீரோ கடையில் போய் சிக்கன் 65 தின்கிறான்' என்று சிம்பிளாக வந்திருக்கும்.
/

ஹா ஹா
:))))))))))))

மங்களூர் சிவா said...

/
பரிசல்காரன் said...

(சரக்குன்னதும் கிண்டலா யாராவது பின்னூட்டினா ஒத விழும்!)
/

கிண்டல் இல்லாம பின்னூட்டறேன் அண்ணன்கிட்ட நிறைய சரக்கிருக்கு.
:))

சுரேகா.. said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


சி....ர்.....ரி.....த்.........து.....க்.....கொண்டே இருக்கிறேன்.

சூப்பர் தாமிரா!

அந்த எடிட்டிங் மேட்டர் அனுபவமிருக்கு! அல்மோஸ்ட் உண்மை! :))))))

தாமிரா said...

நன்றி ஷர்மா.!
நன்றி ச்சின்னவர்.!
நன்றி தராசு.! (இதே பின்னூட்டத்தை எல்லோருக்கும் போடறீங்க போலயிருக்கு..ஹிஹி)

நன்றி வால்.!
நன்றி மங்களூர்.! (அப்ப‌ப்ப‌ காணாபூடுறியே த‌ல‌..)

ந‌ன்றி சுரேகா.!