Thursday, February 12, 2009

தமிழ்மணம் 'விருதுகள் 2208'


தமிழ்மணம் 'விருதுகள் 2008' ஆரம்பிச்சப்போ ரொம்ப ஆவலா கலந்துகிட்டவன் நான். முதல் அறிவிப்புல, 'முதல் கட்ட வாக்கெடுப்புக்கு ஏழே நாள்.. இதோ துவங்கிரும். மறுநாளே இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு அதுக்கு ஏழே நாள்தான். உடனே முடிவு.. ஜல்தி ஜல்தி.. பொங்கலுக்குள் விருதுகளும், பரிசுகளும்'னு ஒரே பரபரப்பு. என்னாங்கடா இது நம்மூரில இவ்வுளவு ஃபாஸ்டா ஒரு காரியமான்னு நானும் பிரமிச்சுப்போயிட்டேன்.

அப்புறம் பாத்தா வாக்கெடுப்பு துவங்கறதுக்குள்ளேயே இதோ அதோன்னு.. இழுத்தடிச்சு.. ஆரம்பிச்சு.. வாக்கெடுப்ப நீட்டிச்சு.. அப்புறம் நீ...ட்டிச்சு.. அறிவிப்பு வெச்சு, கடைசியில அதுவும் காணாமப்போயி.. நாட்கள் வாரமாகி வாரங்கள் மாதங்களாக.. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடக்குமா? ஆயிரம் சொன்னாலும் நம்ப படைப்பு வருதோ இல்லியோ.. டாப் 10 பட்டியல்னா ஒரு கிளுகிளுப்புதான் இல்லியா? யாரு யாரு இடம்பிடிச்சிருக்கான்னு பார்க்க ஆர்வம் இருக்காதா.? அடப்போங்கப்பா.. 2009 பொங்கலுக்குள்ளயாவது அடுத்த அறிவிப்பு வருமா?

டிஸ்கி :

சும்மானாச்சுக்கும்.. தமிழ்மணத்தை சீண்டி நாளாவுதுல்ல.. நமக்கு புடிச்ச பொழுது போக்கு இல்ல.. அதான்.! இன்னிக்கு போட்ட பதிவு அவ்வளவா ஹிட் ஆவலே..(எனக்கு ரொம்ப புடிச்ச மேட்டருங்க.. அதான் நமக்கு புடிச்சிருந்தா கவுத்திடுவீங்களே.. தெரியாததா எனக்கு) அதான் ஜாலியா இந்த மொக்கைப்பதிவு. (உடனே இது மட்டும்தான் மொக்கையா என்று சிலர் சண்டைக்கு வருவாங்களே.. சரிப்பா, இதுவும்.!)

.

19 comments:

gulf-tamilan said...

ஆமா எப்ப விருது தராங்க???
உங்களுக்கு கிடைக்குமா?

இராகவன் நைஜிரியா said...

// அடப்போங்கப்பா.. 2009 பொங்கலுக்குள்ளயாவது அடுத்த அறிவிப்பு வருமா? //

என்ன சொல்ல வர்றீங்க...

2009 பொங்கல் முடிஞ்சு போச்சுங்க.. அது முடிஞ்சு 1 மாசம் ஆச்சுங்க..

பதிவு கூட போடாம ரொம்ப நாள் லீவு போட்டீங்க இல்ல.. மறந்துடுச்சா?

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

இராகவன் நைஜிரியா said...

// "தமிழ்மணம் 'விருதுகள் 2208'" //

2008 - வேண்டுமென்றே 2208 என்று சொல்லுகின்றீர்களா.. புரியவில்லை

தமிழன்-கறுப்பி... said...

:))

வால்பையன் said...

2208 எதாவது உள்குத்தா?

ச்சின்னப் பையன் said...

//தமிழ்மணம் 'விருதுகள் 2008' ஆரம்பிச்சப்போ ரொம்ப ஆவலா கலந்துகிட்டவன் நான்.//

ஹிஹி... நான் பங்கேற்கவேயில்லை... அதனால்தான் தாமதமாயிட்டிருக்கோ.... :-)))

மங்களூர் சிவா said...

2009 பொங்கல் முடிஞ்சு போச்சுங்க.. அது முடிஞ்சு 1 மாசம் ஆச்சுங்க..

மங்களூர் சிவா said...

/
"தமிழ்மணம் 'விருதுகள் 2208'"
/

:)))))))))

Mahesh said...

சீண்டுங்க... சீண்டுங்க... நாங்க வேடிக்கை பாக்கறோம் :))))))))))

MayVee said...

:-))

தாமிரா said...

மொக்கைப்பதிவென்பதால் எல்லோருக்கும் தனித்தனி நன்றிகள் கிடையாது.. மொத்தமா அனைவருக்கும் நன்றி.! ஆர்வக்கோளாறுல வீட்டுக்குப்போற நேரத்துல அவசர அவசரமா போட்டுட்டு போனதால 2010 பொங்கல், 2009 பொங்கல்னு ஆயிருச்சு.. ஹிஹி..

எம்.எம்.அப்துல்லா said...

தமிழ்மணம் விருதை அறிவிக்கும்வரை பதிவு எழுதா போராட்டம் துவங்கி இருக்கேன்.

(அப்பாடா!எழுத ஒரு மேட்டரும் இல்லாம ஈ ஓட்டிக்கிட்டு இருந்தேன்.இனிமே இதச் சொல்லி கொஞ்ச நாளைக்கு ஓட்டிக்கலாம்)

:)))

ஸ்ரீமதி said...

:))

கோவி.கண்ணன் said...

:)

விருதுகள் எப்போதும் ஆள் இருக்கும் போது கொடுக்கப்படமாட்டாதுன்னு வரைமுறை இருக்கே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் திரு. தாமிரா


தமிழ்மணத்துல வரலனா என்ன
அதான் நீங்க விகடன்ல வந்துட்டீங்களே.

இன்னும் பல படைப்புகள காண வாழ்த்துகிறேன்.

சந்தனமுல்லை said...

:))

Namakkal Shibi said...

:))

சூப்பரு!

வெண்பூ said...

நாங்கல்லாம் அந்த விருதையே கண்டுக்கல.. இதுல உங்க பதிவையா கண்டுக்கபோறோம்...