Monday, February 16, 2009

குறும்படம் எடுப்பது எப்படி? (பகுதி 3)

பகுதி 1 பகுதி 2

முதலிரண்டு பாகங்களில் ஒரு குறும்படம் எடுப்பதற்கான அடிப்படைத்தேவைகள் என்ன? கதை, நடிகர்கள், லொகேஷன் போன்றவற்றை எப்படி முடிவு செய்வது? பின்னர் எப்படி ஷூட்டிங் நடத்துவது? நடிகர்களிடம் எப்படி உணர்ச்சிகளை கொப்பளிக்கச்செய்வது? அதற்கும் பின்னர் எடிட்டிங் மற்றும் பிற்சேர்ப்பு விஷயங்களைச் செய்வது எப்படி என்பதெல்லாம் குறித்து விளக்கமாக பார்த்தோம். இருப்பினும் அது தியரி மட்டுமே என்பதாகவும், செய்முறை உதாரணம் வேண்டுமென்பதாகவும் சில நண்பர்கள் விரும்பினார்கள். ஆகவே எப்படி ஒரு குறும்படம் எடுக்கப்படுகிறது என்பது குறித்த நமது சொந்த அனுபவத்தையே நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக்கொண்டு தொடருங்கள்..

முதலில் நமக்கு ஏன் இந்த விபரீத எண்ணம் தோன்றியது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சென்னை எனில் அலுவலகம், வீடு இவ்விரண்டு இடங்களுக்கும் செக்குமாடு போல சுற்றிக்கொண்டிருக்கவே நமக்கு நேரம் சரியாக இருக்கும். போதாததற்கு இப்போ பிளாக் வேறு இருக்கிறது. ஆனால் இத்தனை நீண்ட விடுப்பில் முழு சுதந்திரத்தோடு ஊருக்கு வந்திருக்கிறோம். பொங்கல் கொண்டாடி முடித்தாயிற்று. ரமாவை தாயார் வீட்டுக்கு அனுப்பியாயிற்று. என்ன பண்ணலாம்.? ஊரிலிருக்கும் பால்ய நண்பர்களில் பாதிப்பேரைக்காணவில்லை. மீதியிருப்போர் வயலுக்கும் வேலைக்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். நண்பரிடமிருந்து வாங்கிச்சென்ற காமிராவில் வீடு, ஊரைச்சுற்றியுள்ள பூக்களையும், காட்சிகளையும் படம் எடுக்கத்தொடங்கினோம். அதையும் மீறி போரடிக்கத்துவங்கிய போதுதான் இந்த விபரீத எண்ணம் தோன்றியது. அன்றிலிருந்து 'இங்க லீவுல வந்திருக்கும்போதாவது வீட்ல இருந்தமா? ரெஸ்ட் எடுத்தமான்னு இல்லாம ரெண்டு பேரும் காமிராவை வெச்சுக்கிட்டு என்ன பண்ணிக்கிட்டு கிடக்கிறீங்கன்னு..' என்று தினமும் அம்மாவிடம் பாட்டு வாங்கிக்கொள்ளுமளவு பிஸியாக ஆயாச்சு.

அரிதிலும் அரிதாக நமது தம்பியும் அதே போல நீள்விடுப்பில் வந்திருந்தது வசதியாகிவிட்டது. அவரும் மிக போரடித்து இருந்ததின் விளைவாக‌ காமிராமேன் மற்றும் அசிஸ்டெண்ட் இயக்குனர் என்ற பதவிகள் வழங்கப்பட்டன. இந்த பணிக்கு படத்தின் பெயராக முதலில் 'கற்பகம்' என்பதாக முடிவு செய்திருந்ததால் 'பிராஜக்ட் கற்பகம்' என்று பெயரிடப்பட்டது. (நமது காதல் நினைவுகளால் எப்படியாவது இப்படி ஒரு பெயரை படத்துக்காவது வைக்க முயற்சிப்போம், அது டிஸ்கஷனில் தோல்வியடைந்து பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிடும்) இனி..

டிஸ்கஷன் :

முந்தைய பாடங்களில் சொன்னது போலவே இதுதான் மிக சிக்கலான பகுதியாக இருந்தது எங்கள் பிராஜக்டில். பிறகு நானே மிகுந்த சிந்தனை வயப்பட்டு எங்களிடம் உள்ள வசதிகளை கணக்கில் கொண்டு ஒரு கதையை உருவாக்கினேன். சிரிப்புக்கதை இல்லை என்பதால் சிரிக்காமல் சீரியஸாக கேட்டுக்கொண்டு வரவும்.

ஒரு ஊரில் முத்து முத்து என்று ஒரு விவசாயி இருக்கிறான்.. (அதற்குள் என்ன சிரிப்பு?). அவன் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு குடும்பத்தொழிலான விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கிறான். வீடு, வாசல், தோட்டம், வயல்கள் என ஓரளவு வசதியான விவசாயிதான். அவனுடன் பத்தாங்கிளாசில் ஒன்றாக படித்த பக்கத்து ஊரைச்சேர்ந்த அவனின் நண்பன் தொடர்ந்து நன்கு படித்து முன்னேறி இப்போது சென்னையில் பணிபுரிந்துகொண்டிருக்கிறான். அவன் ஏதோ உறவினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஊருக்கு வருகிறான் மனைவி பிள்ளைகளுடன். (நல்லா கவனிக்கவும், பொங்கல் லீவெல்லாம் இல்லை) சரி இதெல்லாம் முக்கியமேயில்லை.. இது கதையின் பின்புலம்தான், இது ஸ்கிரீனில் வராது. இனிதான் கதையே..

சென்னையிலிருந்து வந்த முத்துவின் தோழன் (சுந்தர்) தனது 12 வயது மகளான பிரியாவுடன் பைக்கில் முத்துவின் ஊரைக்கடந்து இன்னொரு உறவினர் வீட்டுக்கு செல்லக்கூடிய சூழல். அப்படியே நண்பனையும் பார்த்துவிட்டுப்போக திட்டமிட்டு நண்பன் வீட்டுக்கு வருகிறான். முன்பே திட்டமிட்டிருந்ததால் முத்துவின் 12 வயது மகனான கணேஷுக்கு பரிசாக ஒரு பெரிய ரிமோட் காரை வாங்கிக்கொண்டு வருகிறான். நண்பனைப்பார்த்து மகிழ்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பிரியாவை கணேஷுக்கு பரிசளிக்கச்சொல்கிறான். அவளும் அதை அவனிடம் தந்து எப்படி விளையாடுவதென அவனுக்குச் சொல்லித்தந்து விளையாடிக்கொண்டிருக்கிறாள்.

சிறுவர்கள் விளையாட, பெரியவர்கள் இருவரும் நீண்ட பிரிவுக்குப்பின் நேர்ந்த சந்திப்பாதலால் தன்னை மறந்த மகிழ்ச்சியில் உரையாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீண்டும் கிளம்ப இரண்டு மணி நேரமாகிறது. (இதுதான் கதை நிகழும் நேரம்) விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அப்படியே தோட்டத்திற்கு சென்று புளியமரத்தடியில் விளையாடுகிறார்கள். புளியமுத்துக்களை வைத்து ஒரு விளையாட்டை பிரியாவிற்கு சொல்லித்தருகிறான். அது அவளை மிகவும் கவருகிறது. பின்னர் வீடு திரும்புகிறார்கள். அதற்குள் சுந்தரும் ரெடியாகியிருக்க கிளம்ப ஆயத்தமாகிறார்கள். வண்டியில் ஏறி வண்டி கிளம்புகையில் தன்னிடமிருந்த சில புளியமுத்துக்களை கணேஷிடம் தருகிறாள் பிரியா. 'அவனோ இது உனக்குதான்' என்று தன்னிடமிருந்த மீத முத்துக்களையும் சேர்த்து திருப்பியளிக்கிறான். பிரியாவிடமும் கணேஷிடமும் ஒரு புதிய நட்பைப்பிரிகிற துக்கம் நிழலாட வண்டி கிளம்புகிறது.. (எப்புடி..? எந்த ரிமோட் காரும், புளியங்கொட்டைகளுக்கு ஈடு ஆகாது என்று கதையின் அடிநாதத்தை பிடித்துவிட்டீர்கள்தானே.? புல்லரித்திருப்பீர்களே..)

இரண்டு நாட்கள் டிஸ்கஷனுக்குப்பின்னர் நான் முதலில் திங்க் பண்ணிய கதை மேற்கண்டவாறு ஒருவழியாக ரெடியானது. கதையில் திருப்தியடைந்த அசிஸ்டென்ட் (தம்பி) திரைக்கதை, வசனத்தை நீயே பார்த்துக்கொள் என்று பிற ஏற்பாடுகளை கவனிக்கச் சென்று விட்டார். ஒரு டைரியில் அழகான கையெழுத்துடன் ஆரம்பிக்கப்பட்டு அடித்து அடித்து எழுதி சுமாரான‌ கையெழுத்துடன் தொடர்ந்து இறுதியில் கோழி கிறுக்கலில் திரைக்கதை, வசனம் எழுதிமுடிக்கப்பட்டது.

நடிகர் தேர்வு :

அடுத்து எங்களுக்கு சவாலாக அமைந்த விஷயம் நடிகர்கள் தேர்வு. மொத்தம் நாலே காரெக்டர்கள். 35 வயதில் கிராமத்து ஆள் ஒருவர், சிட்டி ஆள் ஒருவர், 12 வயதில் கிராமத்துப்பையன் ஒருவன், சிட்டி சிறுமி ஒருத்தி. ம்ஹூம் முடியலை.. தம்பியின் நண்பர் ஒருவரையும், அவரது அண்ணன் பையன் ஒருவனையும் கிராமத்து போர்ஷனுக்கு பிக்ஸ் பண்ணினோம். அவர்களும் சண்டேஸ் மட்டும்தான் கால்ஷீட் தரமுடியும் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார்கள். ஆள் கிடைக்காத லட்சணத்தில் நடிப்புச்சோதனையெல்லாம் பண்ணவில்லை. அப்படியே பிக்ஸ் பண்ணிவிட்டேன். சிட்டி போர்ஷனுக்குதான் ஆளே கிடைக்கவில்லை. நான் நினைத்தமாதிரி முகமே கிடைக்கவில்லை. உறவுகளில் சிறுமிகள் சோதனையாக 10 வயதுக்கு கீழாகவோ 15 வயதுக்கு மேலாகவோ இருந்தனர்.


தொடரும்..

(ஸாரி பிரெண்ட்ஸ், 3 பாகத்தில் முடிச்சுடலாம்னுதான் நினைச்சேன்.. பாருங்க எவ்வளவு பெருசாப்போயிடுச்சுன்னு. அடுத்த பாகத்தில் கண்டிப்பாக முடிச்சுடுறேன்)

20 comments:

தாமிரா said...

கவனித்துக்கொண்டிருக்கிறேன்.. ரெகுலர் கஸ்டமர்களாவது ஒழுங்கா ஓட்டு போட்டு விடவும். பின்னாடி சிக்கலாகிவிடும்.. பாத்துக்கங்க..

கார்க்கி said...

போட்டாச்சு..போடாச்சு

முரளிகண்ணன் said...

டன்

எம்.எம்.அப்துல்லா said...

ம் //(ஸாரி பிரெண்ட்ஸ், 3 பாகத்தில் முடிச்சுடலாம்னுதான் நினைச்சேன்.. பாருங்க எவ்வளவு பெருசாப்போயிடுச்சுன்னு. அடுத்த பாகத்தில் கண்டிப்பாக முடிச்சுடுறேன்)
//

அண்ணே,இப்படி பாகத்த கூட்டிக்கிட்டே போனீங்கண்ணா வில்லு மாதிரி ஆயிரும் சொல்லிட்டேன் :)

எம்.எம்.அப்துல்லா said...

//கவனித்துக்கொண்டிருக்கிறேன்.. ரெகுலர் கஸ்டமர்களாவது ஒழுங்கா ஓட்டு போட்டு விடவும். பின்னாடி சிக்கலாகிவிடும்.. பாத்துக்கங்க..

//

போட்டுத் தொலஞ்சாச்சுய்யா

:)

கார்க்கி said...

//அண்ணே,இப்படி பாகத்த கூட்டிக்கிட்டே போனீங்கண்ணா வில்லு மாதிரி ஆயிரும் சொல்லிட்டேன் //

பதிவு சூப்பர்னு சொல்றீங்களாண்ணா?

வெண்பூ said...

அடப்பாவி.. இத்தனை நாள் கழிச்சு ஊருக்கு போனவரு குழந்தை கூடவும் தங்கமணி கூடவும் நேரம் செலவழிக்காம இப்படியெல்லாம் வேஸ்ட் பண்ணியிருக்கீரு.. உம்மையெல்லாம்...

anna said...

தமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers

அனுஜன்யா said...

ஆஜர். இந்த மாதிரி 'தொடரும்' போட்டு பதிவுகளின் எண்ணிகையை அதிகரிக்கும் உத்தி கண்டிக்க்.. சாரி, பாராட்டப்படுகிறது. அப்புறம், பதிவு நல்லாவே இருக்கு, உண்மையாகவே.

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

:)))பதிவு நல்லா இருக்கு, உண்மையாகவே. :))

சந்தனமுல்லை said...

//இந்த பணிக்கு படத்தின் பெயராக முதலில் 'கற்பகம்' என்பதாக முடிவு செய்திருந்ததால் 'பிராஜக்ட் கற்பகம்' என்று பெயரிடப்பட்டது//

7G ரெயின்போ காலனி!!

சந்தனமுல்லை said...

//அடுத்த பாகத்தில் கண்டிப்பாக முடிச்சுடுறேன்//

நம்பறேன்..அந்த குறும்படம் ரிலீஸ் ஆகுமா..அடுத்த பாகத்தில்?? :-)

தாமிரா said...

வில்லுங்கிறீங்க..
உண்மையாகவே, உண்மையாகவேன்னு அழுத்தி அழுத்தி சொல்றீங்க..

வர்ற கூட்டத்த பார்த்தாதான் தெரியுதே.. சரி,சரி..
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. ஒண்ணு நல்லாருந்தா இன்னொண்ணு புட்டுக்குது, என்ன பண்றது.? அதுக்காக ஆரம்பிச்சத முடிக்காம உட்டுறமுடியமா? வருது அடுத்த பாகம், ரெடியாக இருந்துக்குங்க..

தாமிரா said...

நன்றி கார்க்..
நன்றி முரளி..
நன்றி அப்பு..
நன்றி வெண்பூ..
நன்றி அண்ணா..
நன்றி அனுஜ்..
நன்றி ஸ்ரீ..
நன்றி சந்தனா..

இளைய பல்லவன் said...

ஏண்ணே, குறும்படம் எடுப்பதைப் பற்றி நெடுந்தொடர் எழுதுவது எப்படின்னு ஒரு பதிவும் போட்ருவீங்கள்ல?
(அப்பாவியாக கேட்பதற்கு எப்படி ஸ்மைலி போடுவது?)

Truth said...

எனக்கு கதை தான் புரியல :-)
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்டு போஸ்டு.

ச்சின்னப் பையன் said...

போட்டாச்சு... போட்டாச்சு...

MayVee said...

ஹ்ம்ம்....
ஏன்னுங்க நான் நல்ல நடிப்பெனுங்க.....

குசேலன் படத்தையும் எதோ விக்ரமன் படத்தையும் சேர்ந்து படிச்ச மாதிரி இருக்கு உங்க கதை....
கதைலே chemistry, civics, maths போன்றைவை எதுயுமே இல்லை
நல்ல இருக்கு பதிவு

MayVee said...

"தாமிரா said...
கவனித்துக்கொண்டிருக்கிறேன்.. ரெகுலர் கஸ்டமர்களாவது ஒழுங்கா ஓட்டு போட்டு விடவும். பின்னாடி சிக்கலாகிவிடும்.. பாத்துக்கங்க.."
நான் புது customer ....
உங்க கடை ல அக்கௌன்ட் open பன்னுலமா

கும்க்கி said...

ஒஹோ...