Monday, February 2, 2009

குட்டிக்கிருஷ்ண வடக்கேகூட்டால நாராயண மேனன்

".:பர்ஸ்ட் நேம், லாஸ்ட் நேம்" பிரச்சினை இருக்கா உங்களுக்கு? அட்லீஸ்ட் தெரியமா? வாங்க சொல்றேன் என் பிரச்சினையை..

   நானும் +2 வரைக்கும் படிச்சு, ஒரு டிப்ளமாவையும் முடிச்சு, பேச்சுலர் டிகிரிக்கும் போயி, மாஸ்டர் டிகிரியையும் வாங்கித்தொலைத்து.. இதுவரை ஏழு கம்பெனிகளில் ஆணிபிடுங்கி, எட்டாவது கம்பெனியிலயும் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன்ங்க.. இத்தனை வருஷத்துல ஒரு முன்னூத்தி முக்காலே அரைக்கால் அப்ளிகேஷன்களையும் நிரப்பித் தள்ளியிருக்கேன்ங்க.. ஆனாலும் பாருங்க ஒரு பெரிய சந்தேகம்..  எவனைக்கேட்டாலும் ஈன்னு இளிச்சுட்டுப்போயிடறான்.. இல்லேன்னா அப்போதைக்கு ஒரு பதில சொல்லிட்டு போயிடறான்.

  அரசு, தனியார் என அனைத்திலுமே இந்த பிரச்சினை உள்ளது. அந்த விண்ணப்ப படிவங்களை டிசைன் பண்றவங்களுக்காவது இது  தெரியுமான்னு சந்தேகமாத்தான் இருக்குது. கேள்வி ரொம்ப அடிப்படையானது.. கேட்டா சிரிக்கக்கூடாது..

விண்ணப்பங்களில் பெயரை எழுதுவது எப்படிங்க?

  ஒரு விண்ணப்பத்துல Name மட்டும் இருக்குது, இன்னொண்ணுல Fisrt name மற்றும் Last nameனு இருக்குது. அடுத்த விண்ணப்பத்துல முதலில் Sur name பிறகு First name. அடுத்ததில் First name, Middle name, Last name என்று வரிசையாக. வேறொன்றில் First name பிறகு Second name. அடுத்தது வேறொரு வரிசையில்.. இவையெல்லாம் என்ன? எனக்கு எத்தனை பெயர்கள் உள்ளன? எனது நிஜமான பெயர்தான் என்ன?

  Name, First name, Second name, Middle name, Last name, Sur name இவையெல்லாம் என்ன?

  ஒரு வழியாக சமீபத்தில்தான் ஒரு சரியான நபரை பிடித்து வைத்து விசாரித்தேன். அவர் எதையும் ஆராய்ந்து தெளிபவர் என்பதால் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அதை உங்களுக்கும் தருகிறேன்.

  Name மற்றும் First name என்பவை நீங்கள் இப்போது உங்கள் பெயரென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? அதேதான். அதாவது உங்கள் பள்ளிச்சான்றிதழ்களில் இருக்கும் பெயர், உங்கள் தந்தையாரின் இனிஷியல் நீங்கலாக.

  Second name அல்லது Middle name என்பது உங்கள் தந்தையாரின் முழு பெயர் ஆகும்.

 Last name அல்லது Sur name என்பது குழு பெயராகும் (அதாவது குடும்ப, இன, சாதிப் பெயர்கள்). இந்தப்பகுதியை தமிழர்களாகிய நாம் நம் தலைமுறையில் கூடுமானவரை தவிர்த்து வந்துவிட்டோம். இது ஒரு நல்ல காரியம் என்றும் கூறலாம். ஏனெனில் இந்தப்பகுதி வட மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் குழு அடையாள நோக்கில் இன்னும் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் எப்படி
 பயன்படுத்தப்படுகிறது என்பது எனக்குத் தெரியாது எனினும் நம்மிடம் எவ்வளவு மோசமான பிரிவினைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதை அறிவீர்கள். ராமலிங்கப்பிள்ளை, மாயாண்டித்தேவர், சுப்புணிஐயர், கனகுமுதலியார் என்ற பெயர்களை நீங்கள் இன்னும் மறந்திருக்க முடியாது.

   ஆகவே இனி Name மற்றும் First name மட்டும் கேட்கப்படும் இடங்களில் உங்கள் பெயரை மட்டும் எழுதுங்கள். ரொம்பவும் .:பீல் பண்ணினீர்கள் என்றால் தந்தையாரின் முதல் எழுத்தை புள்ளி வைத்து இறுதியாக சேர்த்துக்கொள்ளுங்கள் அல்லது புள்ளி வைக்காமல் முழுப்பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

   Second name அல்லது Middle name கேட்கப்படும் இடங்களில் முன்னதாக Name பகுதியில் தந்தையாரின் இனிஷியலையோ, பெயரையோ தவிர்த்துவிட்டு அதை இந்தப்பகுதியில் முழுப்பெயராக சேர்த்துக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் பெயர் இட்லி என்றும் உங்கள் தந்தை பெயர் சாம்பார் என்றும் கொண்டால் இந்த முறைப்படி 'இட்லி சாம்பார்' என்று உங்கள் பெயர் அழகாக வந்துவிடும். பின்னர் Last name அல்லது Sur name கேட்கப்பட்டால்
 காலியாக விட்டுவிடுங்கள். சில இடங்களில் கட்டாயப்படுத்துவார்கள், முடியாது என சண்டை போடுங்கள். இன்னும் சில இடங்களில் இதில்தான் உங்கள் தந்தை பெயர் வரவேண்டும் என உங்களை குழப்பிவிடுவார்கள்.. அவர்களுக்கு எடுத்துக்கூறி விளக்குங்கள்.

  இதை நான் எழுதுகையில் பின்புறம் இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் நண்பர் கேட்கிறார், "சிலர் தாயார் பெயரையும் இணைக்கவேண்டும் என்கிறார்கள், சிலர் தாய், தந்தை இருவரது பெயரின் முதல் எழுத்துகளையும் இரட்டை இனிஷியலாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் என்ன பண்ண வேண்டும்? அப்படியானால் என் பெயரை 'வடக்கே கூட்டால குட்டிக்கிருஷ்ண நாராயண மேனன்' என்று எழுதணுமா? அல்லது

 'குட்டிக்கிருஷ்ண வடக்கேகூட்டால நாராயண மேனன்' என்று எழுதணுமா?"

எனக்கு லேசாக தலையை சுற்றிக்கொண்டு வந்தது.

36 comments:

smile said...

இன்னொரு பிரச்சினை சொல்லாம விட்டுடிங்களே
நீங்க சொன்னது நம்ப ஊர் கணக்குப்படி
இதுக்கு எதிர்மாறானது வெளிநாட்டில்
முதல் பெயர் அப்பாவுடையது அடுத்த பெயர் நம்மளோடது
பாஸ்போர்ட்டில் நம்ம ஊர் முறை படி பேர் இருக்கும்
வெளிநாட்டில் உள்ளவர்கள் கூப்பிடும் பொழுது
ரெண்டாவது பேரை சொல்லி கூப்பிடறாங்க
ஆரம்பத்தில் இது புரியாம ரொம்ப சிரமம் பட்டாச்சி

பாபு said...

மிக சமீபத்தில் ஒரு விண்ணப்பம் நானும் எனது நண்பரும் பூர்த்தி செய்தோம் .ஆனால் எனக்கு சரியாக எனது பெயர் முதலிலும் எனது தந்தையின் பெயரை அடுத்தும் எடுத்து கொண்டவர்கள் ,என் நண்பருக்கு அப்படியே உல்டாவாக எடுத்து கொண்டார்கள் , இது எப்படி?

நிறைய பேருக்கு இந்த குழப்பம் உண்டு ,ஆளாளுக்கு ஒரு விளக்கம் வைத்திருக்கிறார்கள்

உபயோகமான பதிவு

முரளிகண்ணன் said...

super thamira

இய‌ற்கை said...

உப‌யோக‌மான‌ ப‌திவு.ஆனா namma naatilaye சில‌ இட‌ங்க‌ளில் அப்பா First name பேரை ஆக‌வும் ந‌ம் பேரை Second Name ஆக‌வும் எழுத‌ சொல்றாங்க‌.For Eg.Provident Fund form.

சந்தனமுல்லை said...

//குட்டிக்கிருஷ்ண வடக்கேகூட்டால நாராயண மேனன்//

:-)))

வால்பையன் said...

இரட்டை பெயர் உள்ளவர்களுக்கு தான் லாஸ்ட் நேம் கேட்கிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்தேன்.
உதாரணமாக முத்துகுமார் என்ற பெயர் முத்து என்றும் குமார் என்றும் அழைக்கபடுவதால் முதல் பெயர் முத்டு என்றும் கடைசி பெயர் குமார் என்றும் நினைத்து கொண்டிருக்கிறேன்.

(முத்துகுமாரை மறக்காமல் இருக்க ஒரு முயற்சி)

புதுகைத் தென்றல் said...

வெளிநாட்டில் உள்ளவர்கள் கூப்பிடும் பொழுது
ரெண்டாவது பேரை சொல்லி கூப்பிடறாங்க //

என் கணவரின் அண்ணன் மகளுக்கு அமெரிக்காவில் டெலிவரி ஆன பொழுது மிசஸ் சுப்ரமணியம்(சுப்ரமணிய அப்பா பெயர்) டெல்வர்ட் பேபி பாய்” என்றுதான் சொன்னார்களாம். அதைக் கேட்ட அத்தை (அண்ணி) பயந்து போனதாக சொன்னாங்க.

இதெல்லாம் நடக்குது. இந்தக் குழப்பம் நம்ம தங்க தமிழ் நாட்டுக்காரங்களுக்கு மட்டும்தான்னு நினைக்கிறேன்)!!??) மத்த ஊர்க்காரங்க தனது வீட்டுப்பெயர் அல்லது குடும்பப்பெயரை சேத்துக்குவாங்க.

எங்களுக்கும் இந்தப் பெயர்களால் பயங்கர குழப்பங்கள் வந்துச்சு.

Anonymous said...

சமயங்கள்ல நம்ம அப்பா பெயரச் சொல்லிக் கூப்பிடும் போது வேற யாரையோ கூப்பிடுறாங்கன்னு அவங்களையே மலங்க மலங்க பார்த்துட்டுருப்போமே.

வெண்பூ said...

நல்ல பதிவு தாமிரா..

//
மிக சமீபத்தில் ஒரு விண்ணப்பம் நானும் எனது நண்பரும் பூர்த்தி செய்தோம் .ஆனால் எனக்கு சரியாக எனது பெயர் முதலிலும் எனது தந்தையின் பெயரை அடுத்தும் எடுத்து கொண்டவர்கள் ,என் நண்பருக்கு அப்படியே உல்டாவாக எடுத்து கொண்டார்கள் , இது எப்படி?
//
மே பி.. உங்கள் நண்பர் இரண்டு பேர்களுக்கும் இடையில் கமா போட்டிருப்பார். உதாரணமாக "இட்லி சாம்பார்" என்றால் முதல் பெயர் இட்லி, கடைசி பெயர் சாம்பார் என்று அர்த்தம். அதுவே "இட்லி, சாம்பார்" என்று எழுதினால் முதல் பெயர் "சாம்பார்", கடைசி பெயர் "இட்லி" என்று அர்த்தம். இந்த வித்தியாசம் தெரிந்திருப்பது ரொம்ப முக்கியம்..

abdoul razack said...

i am in europe, here they had family name and name. here it is important to fill that family name. for example you fill your father name in family column, your wife or children will be called only in this name. so we indian write our family name and leave blanc in name column. people ask us why you dont have a name. the indian civil system should be changed according to international standard. that is the only solution to solve this kind of problem. i kerala they have a family name. they wont write address in the letter. family name and city code it will reach clearly

மணிகண்டன் said...

தாமிரா,

லாஸ்ட் நேம் ப்ளாங்கா எல்லாம் விடக்கூடாது. தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரைக்கும் பெரும்பாலானவங்க அப்பா பேர தான் கடைசி பெயரா வச்சிக்கறாங்க. அத மிடில் நேம்ல போட கூடாது. ஜாதி பேர வச்சிக்க சங்கடமா இருந்தா ஊரு பேர வச்சிக்கோங்க. தமிழ் பிராமன ஜாதில கோத்திரம்ன்னு ஒன்னு சொல்லுவாங்க. அத வச்சிக்கலாம். ஒவ்வொரு ஜாதிளையும் எதாவது ஒரு வழி நிச்சயம் இருக்கும். இந்தியாவுல கூட, வேற எங்கயும் இந்த அளவு பிரச்சனை கிடையாது. otherwise, use your village name.

வால்பையன் :- தாமிரா கஷ்டப்பட்டு விசாரிச்சு எழுதி இருக்காரு. அதுல வந்து ஏன். நம்ப ஊர விட்டு வெளில வந்தா நம்ப பேர நாறடிச்சுடுவாங்க.

புதுகை சார் :- இந்தியாவ தவிர, இந்த பிரச்சனை ஒரு சில scandinavian countries ளையும் இருக்கு. அங்க எல்லாம் சரியா பீட்டர், சன் of ராபர்ட் அப்படினே பேர எழுதிடறாங்க. (காதலா காதலா !). பையனுக்கு ஒரு பாமிலி நேம், மனைவிக்கு வேற, நமக்கு வேறன்னு இருக்கறபோது, நம்ப பாடு திண்டாட்டம் தான் ! ஒவ்வொரு எடத்துலயும் விளக்கமா சொல்லணும்.

இயற்கை :- எங்க அக்கா provident fund ஆபீஸ்ல வேல பாக்கறாங்க. சொல்லி புரிய வைக்க பாத்தேன். சான்சே இல்ல. If only the name column exists in the form, start with your own name followed by your fathers name. (my name would be manikandan srinivasan if my father's name is srinivasan and not the other way around).

Anonymous said...

:-)))

narsim said...

இப்பிடித்தான் ஒரு சர்தார்ஜி ஏதோ ஒரு பார்ம்ல செக்ஸ்:male/female அப்பிடினு இருந்த கட்டத்துல நுணுக்கி நுணுக்கி..Depends on availability ,னு எழுதிட்டானாம்

தாமிரா said...

விஷயம் தெரிந்தவர்கள் யாராவது இன்னும் தெளிவுபடுத்துவார்கள் என்று பார்த்தால் ஆளாளுக்கு மேலும் குழப்பத்தையும், அவர்கள் வியூவையும் தந்திருக்கிறீர்கள்.. நல்லது நடத்துங்கள்..

தாமிரா said...

நன்றி ஸ்மைல்.! (நீங்கள் என்ன நம்மூர் கணக்கு, வெளியூர் கணக்குன்னு பிரிக்கிறீங்களே.. அவ்வ்வ்வ்வ்வ்..)

நன்றி பாபு.! (ஆளாளுக்கு ஒரு விளக்கம் வைத்திருக்கிறார்கள். உபயோகமான பதிவு// இது இன்னும் தீர்வு த‌ர‌வில்லை என்றே நான் க‌ருதுகிறேன்)

நன்றி முரளி.!

நன்றி இயற்கை.! (என்ன‌தான் தீர்வு?)

நன்றி முல்லை.! (ரொம்ப‌ ப‌டிச்ச‌வுங்க‌ ஏதாச்சும் சொல்லாம‌ சிரிச்சுட்டு போனா எப்பிடி.?)

நன்றி வால்.! (சுத்த‌ம்.!)

நன்றி தென்றல்.! (எஸ்கேப்.?)

நன்றி வேலன்.! (நீங்க‌ளும் எஸ்கேப்பா?)

நன்றி வெண்பூ.! (யோவ் இதென்ன‌ புதுக்க‌தையா இருக்குது?)

நன்றி அப்துல் ரசாக்.! (பெரும்பாலான‌ நாடுக‌ளில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து என்ப‌தாலேயே 'குழு' அடையாள‌த்தை இன்ட‌ர்நேஷ‌ன‌ல் ஸ்டான்ட‌ர்டு என்று ஒப்புக்கொண்டு நாமும் அத‌ற்கு மாற‌த்தான் வேண்டுமா? முத‌லில் அப்படி எழுதுவதுதான் ச‌ரியா.?)

ந‌ன்றி ம‌ணிக‌ண்ட‌ன்.! (இறுதியி ஜாதி அல்ல‌து ஊர் பெய‌ரை வைக்க‌ச்சொல்கிறீர்க‌ள். ந‌ம‌து சிந்த‌னைக்கு இது எந்த‌ அள‌வு பொருந்தும்/ ஒப்பும் என‌ தெரிய‌வில்லை. மிடில் நேமாக‌ த‌ந்தை பெய‌ரை வைக்க‌க்கூடாது என்ப‌திலிருந்து முத‌ல் பெய‌ராக‌ இணைக்க‌ச்சொல்கிறீர்க‌ள் என‌த் தெரிகிற‌து. அது சரி என்பதற்கு ஏதாவ‌து ஆதார‌ம் காட்ட‌முடியுமா? ஏனெனில் ச‌ர்வ‌ நிச்ச‌ய‌மாக‌ இதுதான் ச‌ரி என்று யாரும் சொல்கிற‌ வ‌ழியாய் தெரிய‌வில்லை. அனைவ‌ரும் ஏற்றுக்கொள்ள‌ வ‌ச‌தியாக‌ இருக்கும்)

ந‌ன்றி ஆன‌ந்த்.!

ந‌ன்றி ந‌ர்சிம்.! (இங்க‌ என்ன‌ ந‌ட‌ந்துக்கினுருக்குது.. ஒம‌க்கு வெள‌யாட்டாப்போச்சா?)

வித்யா said...

\\எனக்கு லேசாக தலையை சுற்றிக்கொண்டு வந்தது.\\

லேசாதானா???

மணிகண்டன் said...

This is not any science where you say that something is right. Internationally, it is accepted that First name is the name given to you by parents and family name should ideally be the one which identifies the roots of your family ! And that is one of the reason on why caste was used in india.

Common standards :-

If the form only has a column called name

1 - Fill in your first name and then last name.

manikandan viswanathan

2 - If the form has first and last name columns, it is simple.

3 - If the form has first and sur name columns, it is simple

4 - if the form has first and family name columns, it is simple.

5 - if the form has expansion of initials, write your father name. (typical in india)

6. if you are living outside india, initial means the first letter of your first name. So, if anyone sends me a post, i would get it as M. Viswanathan instead V. manikandan (like we do in india )

Except for tamilians, indians from other states do not have any issues with it.

And there is isn't any need for us to change anything. Only thing we have to explain to others that our family name is typically our father's first name. And using our single family name, we can't do a family tree ! But if we want to follow internationally accepted notations, then we got to think about it while naming our kid and filling his forms. There is no right and wrong here !

ச்சின்னப் பையன் said...

:-)))))

http://www.boochandi.com/2008/10/last-name.html

Mahesh said...

உபயோகமான பதிவு தாமிரா. நீங்க சொல்லியிருக்கறது சரிதான்.

இன்னும் ஒரு பேர் விட்டுட்டீங்களே? Mother's maiden name னு சில இடங்கள்ல கேட்டிருப்பாங்க.. :)

MayVee said...

நல்ல பதிவு....
ஆனா நாம பெயரில் இரண்டு மதம் மற்றும் அதன் கிளை ஜாதியின் அடையாளம் இருக்கு...... அது சில இடத்தில சிக்கல் சன்முகனதனாய் வருதே...... என்ன செய்ய ....

அமுதா said...

நல்ல ப‌திவு. இருந்தாலும் இன்னும் குழப்பமாத் தான் இருக்கு.

தாமிரா said...

நன்றி வித்யா.!

நன்றி மணிகண்டன்.! (விளக்கத்துக்கு நன்றி. கடைசி பத்தியில் சரியான விளக்கம் இருப்பதாக கருதுகிறேன். இருப்பினும் நான் கேட்க வந்தது யாராவது உரிய நபர்களாலோ, நிறுவனத்தாலோ எழுத்தால் கூறப்பட்டுள்ளதா? அப்படிக்கூறப்பட வேண்டிய அவசியமில்லைடா லூசு.. எத்தினி வாட்டி சொல்றது என நீங்கள் கடுப்பாவது தெரிகிறது. பாருங்கள் என் நண்பர் கூறியதற்கும் உங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. நான் என்ன செய்யலாம்?)

நன்றி ச்சின்னவர்.! (உங்களோடதையும், அதன் தொடர்ச்சியாக இளாவுடையதையும், சமீபத்திய அப்துல்லாவுடையதையும் கண்டேன். இப்படி எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டிருந்தால் நான் என்னத்தைத்தான் எழுதுவதாம்? அவ்வ்வ்வ்)

நன்றி மகேஷ்.! (போருமய்யா.. எரியுற நெருப்புல நீர் வேறு எண்ணையை ஊத்தாதீரும்..)

நன்றி மௌவீ.! (அதானே, என்ன பண்ணலாம்?)

நன்றி அமுதா.! (எனக்கும்தான் என்று வேறு சொல்லணுமாக்கும்?)

அன்புடன் அருணா said...

அய்யோ அம்மா......ஆளை விடுங்கப்பா...தலை சுத்துது....
அன்புடன் அருணா

savuccu said...

நீண்ட நெடுங்காலமாக இருந்த ஐயப்பாடு!

ஒருவாறு விளக்கியிருக்கிறீர்கள்.

'இட்லி சாம்பார்' தான் கொஞ்சம் குழப்பம்!

"இட்லி சாம்பாரா? சாம்பார் இட்லியா?"

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா இருந்துச்சு

நான் இதை இதுவரை யோசனை பண்ணிக்கூட பார்த்ததில்லை.

ஓவ்வொரு தடவையும் எது முதல்ல எழுதணும் தோணுதோ, அதை எழுதிவிடுவேன்.

எல்லா இடத்திலேயும் சரியாத்தான் போயிட்டு இருக்கு. உங்க பதிவ படிச்சப்பின்னாடித்தான், இதெல்லாம் வேற பார்கணுமா அப்படின்னு தோணிச்சுங்க..

வீணாபோனவன் said...

A South Indian's registration in an US collage

(Looks long, but is very interesting and good)

"Your name?"

"Dinesh."

"How do you spell it?"

"D-I-N...."

"Slow, slow, T?"

"No, D."

"Is that T as in Tom, or D as in Dennis?"

"No, not Dennis, my name is Dinesh."

"I know that. I am asking you, is that a T as in Tom, or D as in as in Detroit?"

"I don't know who Tom is, and I haven't been to Detroit. I just came to the US from Madras."

"OK, OK, I know that. Is that T-I- or D-I- ?"

"D. D-I-. D-I-N-E-S-H."

"Is that your last name or first name?"

"Uh? Dinesh is my name."

"OK. What is your LAst name?"

"That is my first and last name. Dinesh."

"Then, is your name Dinesh Dinesh?"

"No. My name is Dinesh."

"But what is your LAST NAME? I am ASKING YOU ABOUT YOUR LAST NAME."

"I told you, Dinesh. I always had the same name, from birth till now.

DINESH. That's my name."

"OK, what is your family name?"

"Family? Family name? My family doesn't have a name."

"What do the neighbors call you?"

"Dinesh."

"Not you. Your whole family. What do they call your family?"

"Beedida bhat'rr."

"So, that is your family name. Do you understand?

"How do you spell that?"

"Spell what?"

"B.D. whatever you said, what your neighbors call your family."

"Oh, that ... Beedida bhat'rr.

"What do you need that for? It only means 'the brahmin who makes beedis.'"

"What are B-Ds?"

"Not B-D. Beedi, is like a cigarette, you see, they roll the tobacco in a leaf and tie a thread around it. 25 in a kattu."

"25 in a what?"

"Kattu, or katta, whatever. Like a bunch, you see. If there is even one less or one more, my father could always tell without counting. He then taught me how to do it."

"I am not worried about your 'cutter' or whatever.

What-is-your-last-name?"

"I told you, Dinesh."

"OK, OK, I don't want to go over this again. What is common to the names of all the members of your family?"

"They are all in Sanskrit. My first sister is Suneetha, the second sister is Sumathi ... "

"Not about the language. When you write your name, and your sister writes her name, what do you two have in common?"

"We have the same handwriting. Even my father can't tell our handwritings apart."

"Blast it! What is your father's name?"

"G.K.Nettar."

"What does G.K. stand for?"

"His name, Gopala Krishna."

"Then what is Nettar?"

"That is our house name."

"House name? Aha, does every one at your house have this name?"

"It is not our name. It is the name of our house. Strictly speaking, it should be Honnadka. But my father was too lazy to change it. My father was born in Honnadka, but, see, my grandfather was born in Nettar."

"What was his name?"

"I told you, G.K.Nettar."

"Your grandfather was also called G.K. whatever?"

"No. That is my father."

"Then what is your grandfather's name?"

"Govinda Bhat. See, my relatives still call me Mangalore Govinda.

Because it is a tradition to name the first son after his grandfather.

All the brothers of my father have done this. So, we have Honnadka Govinda, Jogibettu Govinda, Kanchodu Govinda, and I am Mangalore Govinda."

"So, then, your name is Mangalore Govinda, not Dinesh."

"No. My name is Dinesh. Mangalore Govinda is how my relatives call me.

That is not my NAme."

"What do they call your sister?"

"Ammanni."

"What? You said her name is Sooneetha."

"Yes, that is her name, Suneetha, but we call her Ammanni."

"Is that her nick-name?"

"No. she doesn't have a nick name. Only our neighbor's daughter has a nick name. She is called 'soote'. She is very active. That's why."

"What about your brother?"

"I have no brothers. But then, you can count all those Govindas as my brothers too. See, they are really kind of my brothers."

"OK, what are their names?"

"The oldest one, he is my big brother. He is called GovindaNNa."

"Govind Anna? Then Anna is his last name."

"No, ANNA, not anna. ANNA means big brother."

"What is his NAME?"

"His name is Govinda Bhat."

"Then your last name is But."

"Not but, Bhat, B-H-A-T. But that's not his name, you see."

"If that's not his name, what is it? Why does he have it in his name?"

"Bhat simply means he is a brahmin. He might as well write Rao,like his father does, or Sharma, like my father's second brother does."

"How does he write his name in official papers?"

"Nettar Govinda Bhat. That's how he writes it."

"How does his father write it?"

"Nettar Venkata Subba Rao."

"Aha, I can see now. Your father is G.K.Nettar, his brother is Nettar something Rao... your last name is then Nettar. Aha, I got it."

"But Nettar is not the last name. It is the house name."

"I don't care. Tell me one last time, what is YOUR last name?"

"But I told you, my last name is the same as my first name, my only name, Dinesh."

"Then, I am going to write Nettar here. I don't care if it is your house name, your grandfather' s name, your dog's name, whatever. It is your last name. How do you spell it? N-E-..."

"N-E-T-T-A-R."

"N-E-T-T-? Is that T as in Tom or D as in Dennis?"

"My name is Dinesh, not Dennis."

"AARRGGHHHHH. Do we have to go through this again? Here, write it down."

"That's it. From now on, you are Dinesh Nettar, Dinesh is your first name, and Nettar is your last name. OK?

அத்திரி said...

present thamira anna

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப அழகா “இட்லி,சாம்பாரோட” விளக்கியிருக்கீங்க.

இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருந்தது, அதுவும் பாஸ்போர்ட் அப்ளிகேஷன் எழுதும்போது ரொம்பவே நொந்துபோனேன்.

அதெப்படி சிக்ஸ் சிக்மாவுக்கும், சர் நேம், மிடில் நேமுக்கும் இட்லியையே உதாரணமா வைக்கிறீங்க.

இட்லி ரொம்ப புடிக்குமோ,
கிரைண்டர் எடுத்துட்டு வந்துட்டீங்களா ஊருலேருந்து.

ராம்.CM said...

இதுவரைக்கும் எனக்கு இது தெரியாது. நல்ல தகவல் தந்ததற்கு நன்றி தாமிரா.!

தாமிரா said...

நன்றி அருணா.!

நன்றி சவுக்கு.! (k போடப்படாதா? அதென்னடா பேரு சவுச்சுன்னு கொழம்பிட்டேன்)

நன்றி ராகவன்.!

நன்றி வீணா.! (ROTFL ஸ்டோரி.!)

நன்றி அத்திரி.!

நன்றி அமித்து.! (நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு.)

நன்றி ராம்.!

rathnapeters said...

பயனுள்ள பதிவு.........என்னுடைய passport இப்படித்தான் பில் அப் பண்ணதால என்னோட பேரே மாறி போச்சு.......

sayrabala said...

unmaithaan thamira intha kulappaththula naan pona masam rendu formaiye thappa ezhuthi kzhissu pottuten

nandri thala

ithellam ennaipola maraimandikku thevaiyaana pathivu

nandriyudan
bala

Indian said...

தாமிரா,

பட்டியல்ல கிவன் நேம (given name)விட்டுட்டீங்களே?

//என் கணவரின் அண்ணன் மகளுக்கு அமெரிக்காவில் டெலிவரி ஆன பொழுது மிசஸ் சுப்ரமணியம்(சுப்ரமணிய அப்பா பெயர்) டெல்வர்ட் பேபி பாய்” என்றுதான் சொன்னார்களாம். அதைக் கேட்ட அத்தை (அண்ணி) பயந்து போனதாக சொன்னாங்க.
//

பொதுவா, வெளிநாட்டில் நெருக்கமானவர்களைத்தான் முதற் பெயரில் அழைப்பார்கள். இல்லாவிட்டால் ஃபார்மலாக கடைசிப் பெயரில் அழைப்பார்கள்.

காட்டாக, ஒருவரின் பெயர் 'ஜார்ஜ் புஷ்' எனும்போது, அவர் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால் 'ஜார்ஜ்' என அழைக்கலாம். அவரே உங்களுக்கு பழக்கமில்லாமல் இருந்துவிட்டால் 'மிஸ்டர்.புஷ் ' என்று அழைப்பார்கள். பெண்களை 'மிசர்ஸ்.புஷ்' (காட்டாக லாரா புஷ் அவர்களை Mrs.Bush )அல்லது 'மிஸ்.புஷ்' (காட்டாக ஜென்னா புஷ் - Miss.Bush). இப்போதெல்லாம் மணமானாலும், மணமாகாவிட்டாலும் மிஸ்.புஷ் தான் (Ms.Bush).

பொதுவா நடுப்பெயர் ஏன் வருதுன்னா சில சமயம் தாத்தா/அப்பா பேரை முறையே பேரன்/மகனுக்கு வைப்பதால் அவர்களை வேறுபடுத்த நடுப்பெயர் உதவும். காட்டாக, அமெரிக்காவின் 41வது தலைவர்
George Herbert Walker Bush.

அவரின் மகன் அமெரிக்காவின் 43வது தலைவர் George Walker Bush.

மேலதிக தகவலுக்கு இங்கே மற்றும் இங்கே

செ. நாகராஜ் - C. Nagaraj said...

Maiden name any explanation,
For the credit card verification the tele exec asks what is your maother's maiden name. If i tell my mothers name that fellow repeats what is her maiden name ie before marriage. NAyway my mother's name is same before and after marriage i shot a letter to them and told them it is a single name and don't embarass me.

Sridhar Narayanan said...

:-) இன்னமும் இந்த பெயர் குழப்பம் இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் நிறையவே இருக்கிறது.

முதல் பெயர் = உங்கள் பெயர் என்பது சரியே.

குடும்பப் பெயர் = கேரளத்தில் வீட்டுப் பெயரை குடும்பப் பெயராக வைத்துக் கொள்கிறார்கள். வடநாட்டில் பல இடங்களில் சாதிப் பெயர் இருக்கும். சாதி என்பது ஒரு தொழிலினால் உருவானதால் அது பெரும்பாலும் தொழிலை முன்னிறுத்தி இருக்கும். முன்ஷி, சதுர்வேதி, த்விவேதி இந்த மாதிரி. சில சமயம் சிறப்பு தகுதிகளாக ஏதேனும் வைத்துக் கொள்வார்கள். இது ஒரு பாரம்பர்ய அடையாளமாக கொள்வார்கள். ’பாலேகர்’ என்றால் ஈட்டி எறிதலில் தேர்ச்சி பெற்றவர்கள். மேற்கத்திய நாடுகளில் குடும்பப் பெயர் கொண்டு அவர் வெள்ளையரா, கறுப்பினத்தவரா என்று அறிந்து கொள்ளலாம். சில கலப்பினத்தவர்கள் இரண்டு குடும்ப பெயர்களும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள். ஐஸ்வர்ய ராய்-பச்சன். சிலர் தங்கள் பின்னணி சுலபமாக தெரியாவண்ணம் குடும்பப் பெயரை மாற்றிக் கொள்வது கூட உண்டு.

குடும்பப் பெயர் (surname) என்பது பல இடங்களில் மிகவும் முக்கியம். அமெரிக்க வீசா-விற்கு நீங்கள் வேண்டினால், குடும்பப் பெயர் கட்டாயம் அளிக்க வேண்டும்.

நெருக்கமான நண்பர்கள் முதற்பெயரில் அழைக்கலாம். ஆனால் முன்பின் தெரியாதவரை மிஸ்டர். “குடும்பப் பெயர்” கொண்டு அழைப்பதே மரியாதையாக கருதுகிறார்கள். குடும்பப் பெயர் எப்படி உருவாகிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ‘மாறன்’.

முரசொலி மாறன் தனது பெயரில் ‘முரசொலியை’ புகழொட்டாக வைத்துக் கொண்டார். அவர் மகன்கள் ‘மாறனை’ தங்கள் surname-ஆக வைத்துக் கொண்டார்கள்.

Middle Name / Middle Initial பெரும்பாலும் ‘அவசியமாக’ கேட்கமாட்டார்கள். தந்தை பெயர் என்று தனியாக குறிப்பிட வேண்டி இருப்பதால் நான் ‘நடுப்பெயரை’ முற்றிலும் தவிர்த்துவிடுவேன்.

இன்னொரு வேடிக்கை தமிழ்ப் பெயர்களில் நான் பார்ப்பது, கணவன் பெயரை இனிஷியலாக மாற்றிக் கொள்ளும்போது அதுவே குடும்பப் பெயராகவும் மாறி விடும். கணவனுக்கு அவன் தந்தைப் பெயரும், மனைவிக்கு கணவனின் பெயரும் குடும்பப் பெயராக மாறிவிடும். :))

ஆதலால் ஒரு குடும்பப் பெயரை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்வது நலம்தான்.

ராஜ நடராஜன் said...

தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்.உள்ளே நுழையும் போது நாராயணனையும் மேனனையும் தான் குட்டுறதுக்கு கூப்பிடறீங்களோன்னு வந்தேன்.ஆனால் அடிப்படையையே அலசிட்டீங்க.நல்ல பதிவு.

பின்னூட்டம் பக்கம் வந்தா இத்தனை நாட்களா முதல் பெயருக்கும் இரண்டாம் பெயருக்கும் வித்தியாசம் தெரியாம பாஸ் க்கு யாருக்காவது (செக்ரட்டரி இல்லாத நேரங்களில்)கடிதம் தட்டச்சுனுமின்னா டபக்குன்னு முதலில் தெரியும் பெயரையே டொக் செய்த தவறுகள் புரிகிறது.