Tuesday, February 3, 2009

ஏடிஎம்மிற்குள் லட்சுமி பூஜை.!

மிகுந்த அவசரத்திலும் இன்று காலை அலுவலகம் செல்லும் வழியில் நான் கணக்கு வைத்துள்ள வங்கியின் ATM ல் பணம் எடுப்பதற்காக நின்றேன். மாதத்துவக்கம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆகவே மாதத்துவக்கத்தில் பணம் எடுப்பது அதுவும் குறிப்பாக பீக் நேரத்தில் எடுப்பதை தவிர்த்துவிடுவேன். இருப்பினும் இன்று ஒரு அவசர தேவை.

வெளியே நின்ற ஏழு பேருடன் எட்டாவதாக நின்று கொண்டேன். கியூவில் நிற்பதை இந்த வேக உலகில் எவ்வளவோ தவிர்த்து வந்துள்ளோம். இருப்பினும் இதுபோன்ற சிக்கல்கள் இன்னும் மீதமிருக்கின்றன. உள்ளே சென்றவர்கள் அவ்வளவு லேசில் வெளியாவதாக தெரியவில்லை. கண்ணாடிக்கதவுகள் என்பதால் உள்ளே என்ன செய்கிறார்கள் என்பதை ஓரளவு தெரிந்துகொள்ளமுடிந்தது.

ஒருவர் நிதானமாக அன்னநடையில் மெஷின் அருகே செல்கிறார். சென்றபிறகு, பேண்ட் பாக்கெட்டுக்குள் சிக்கிக்கொண்ட பர்ஸை மிக‌ சிர‌ம‌ப்ப‌ட்டு (க‌ண்டிப்பாக‌ உத‌விக்கு ஆள் தேவைப்ப‌ட்டிருக்கும்? இவ‌ர் ஒருநாளில் எத்த‌னை முறை பாக்கெட்டிலிருந்து பர்ஸை வெளியே எடுக்க‌க்கூடும்?) வெற்றிக‌ர‌மாக‌ எடுத்துமுடித்தார். பிற‌கு அடுத்த‌ போராட்டம், ப‌ர்ஸிலிருந்து கார்டை வெளியே எடுப்ப‌து. அதுவும் சுப‌மாக‌ முடிந்து கார்டை மெஷினில் திரும்பிவருமா என்ற ஒருவித‌ ச‌ந்தேக‌த்துட‌னே செருகினார். பின்ன‌ர் ஏதோ ஒவ்வொரு முறையும் மெஷின் ஏதோ வெவ்வேறு த‌க‌வ‌ல்க‌ளை கேட்ப‌தைப்போல‌ அது என்ன‌ கேட்கிற‌து என்ப‌தை நிதான‌மாக‌ வாசித்து முடித்து பின் ந‌ம்ப‌ரை அடிக்கிறார். மேலும் சில‌ போராட்ட‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் ஒரு சீட்டு வெளியே வ‌ருகிற‌து. அதாவ‌து ப‌ண‌ம் எவ்வ‌ள‌வு இருக்கிற‌து என்ப‌தைத்தான் இவ்வ‌ள‌வு நேர‌ம் சோதித்திருக்கிறார், இனிமேல்தான் அடுத்த‌ ர‌வுண்டே போக‌ வேண்டும். பின்ன‌ர் மீண்டும் கார்டைச்செருகிய‌து, பின் ந‌ம்ப‌ரை அடித்து எவ்வ‌ள‌வு ப‌ண‌ம் எடுக்க‌ வேண்டும் என்ப‌தை முடிவு செய்து அதை அடித்து எடுத்துவிட்டு, அது ச‌ரியாக‌ இருக்கிற‌தா என‌ இர‌ண்டு முறை எண்ணிப்பார்த்து.... ஆவ்வ்வ்வ்வ்வ்.. கொட்டாவி விடுகிறீர்க‌ளா? ப‌ர‌ப‌ர‌ப்பான‌ காலை நேர‌த்தில் என்ன‌ தோன்றும் உங்க‌ளுக்கு? நிச்சயமாக அவர் பயன்படுத்திய நேரத்தில் இருப‌து மெஷின்களில் பணம் எடுத்திருப்பேன். கொலைவெறியாகிப்போனேன்.

சில அறிவுரைகள் அல்லது வேண்டுகோள்கள் :

1. இணைய வசதியுள்ளோர் பெரும்பாலான‌ முக்கிய‌ வ‌ர‌வு செல‌வுக‌ளை இணைய‌த்திலேயே முடித்துவிடுங்க‌ள்.

2. பீக் நேர‌த்தை ATM செல்ல‌ தேர்ந்தெடுக்காதீர்க‌ள்.

3. அப்படிச்சென்றால் முன்ன‌மே எவ்வ‌ள‌வு ப‌ண‌ம் இருக்கிற‌து, எவ்வ‌ள‌வு எடுக்க‌ப்போகிறோம் என்ப‌தை முடிவு செய்துகொண்டு செல்லுங்க‌ள்.

4. மெஷின் அருகே செல்லும்முன் கார்டை எடுத்து த‌யாராக‌ வைத்திருங்க‌ள்.

5. அது உங்க‌ள் முக‌வ‌ரிச்சான்று போன்ற‌வ‌ற்றையெல்லாம் கேட்ப‌தில்லை. கார்டை போட்ட‌வுட‌ன் பின் ந‌ம்ப‌ரை அடித்துவிடுங்க‌ள்.

6. அது சிக்ஸ் சிக்மாவையும் தாண்டிய‌ செய் நேர்த்தியுட‌ன் செய‌ல்ப‌டுகிற‌து. கோடி முறைக‌ளில் ஒரு முறை அது ஒரு நோட்டை அதிக‌மாக‌வோ, குறைவாக‌வோ த‌ர‌க்கூடும். ஆக‌வே எண்ணிப்பார்க்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. அப்படியும் ச‌ந்தேக‌ம் வ‌ந்தால் அடுத்த‌வ‌ருக்கு வ‌ழியை விட்டு விட்டு நீங்க‌ள் ஓர‌மாக‌ சேர்போட்டு அம‌ர்ந்து பணத்தை எண்ணிப்பார்க்க‌லாம்.

7. இர‌ண்டாவ‌து முறையாக‌ கார்டை செருகி க‌ண‌க்கு ச‌ரியாக‌ க‌ழிந்திருக்கிற‌தா என்று மெஷினை சோதிக்காதீர்க‌ள்.

8. அடுத்து ஆட்க‌ள் நின்று கொண்டிருக்கையில், ந‌ண்ப‌ருக்கு எப்ப‌டி ப‌ண‌ம் எடுப்ப‌து என்று ப‌யிற்சி வகுப்பு ந‌ட‌த்திக்கொண்டிருக்காதீர்க‌ள். காத‌லியிட‌ன் ரொமான்ஸ் ப‌ண்ணிக்கொண்டிருக்காதீர்க‌ள். ம‌னைவியை உள்ளே அழைத்துச்சென்று 'நான் இர‌ண்டு அழுத்துவேன், நீ பூஜ்ய‌த்தை அழுத்த‌ வேண்டும்' என்று விளையாடவோ, 'பாலுக்கு இவ்வளவு, மளிகைக்கு எவ்வளவு?' என்று க‌ண‌க்கிட்டுக்கொண்டிருக்க‌வோ செய்யாதீர்க‌ள்.

9. இறுதியாக‌, இங்கேயாவ‌து கொஞ்ச‌ம் சுறுசுறுப்பாக‌ இருங்கள்.

ப்ப்ப‌டுத்தாதீர்க‌ள்.. பிளீஸ்..!

.

53 comments:

கார்க்கி said...

ங்கொய்யால.. இதெல்லாம் ரொம்ப ஓவரு.. நான் போற ஏ.டி.எம்மில் நூறு ரூபாய் நோட்டு மட்டும்தான் இருக்கு. எனக்கு 20000 வேணும்.. என்ன செய்யறது? நாலு தடவ போட்டுதான் எடுப்போம்..

கார்க்கி said...

இருந்தாலும் நீங்க சொல்ர மாதிரி ஆட்களும் இருக்காங்கதான் சகா :)))

இய‌ற்கை said...

காலைல‌யே ரொம்ப‌ டென்ச‌ன் ஆயிட்டீங்க‌ போல‌:‍)ஆனாமெசின் கூட‌ ப‌ரிச்ச‌ய‌ம் இல்லாத‌வ‌ங்க‌ இப்ப‌டி த‌டுமாற‌ற‌து இய‌ல்புதானே?

Mahesh said...

அண்ணே.. நான் பலதடவை அவதிப்பட்டு நொந்து நூலாகியிருக்கேன்... ஆனா நீங்க எழுதியிருக்கறது கொஞ்சம் கூட மிகையே கிடையாது.

பர்ஸ்லேருந்து கார்டை எடுக்கறதை விட, அந்தக் கார்டை பேங்க் குடுத்த சின்ன கவர்ல வெச்சுருப்பாங்க. அந்த கவர் மூலைலயே பின் நம்பரையும் எழுதி வெச்சுக்கிட்டு... அது எவ்வளவு அபாயகரமானது :((

Saravana Kumar MSK said...

செம கடுப்பு போல..

//அது சிக்ஸ் சிக்மாவையும் தாண்டிய‌ செய் நேர்த்தியுட‌ன் செய‌ல்ப‌டுகிற‌து. கோடி முறைக‌ளில் ஒரு முறை அது ஒரு நோட்டை அதிக‌மாக‌வோ, குறைவாக‌வோ த‌ர‌க்கூடும்..//

இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமா என்ன?

Saravana Kumar MSK said...

குறைவாக பணம் வந்து தந்து பேங்கில் புகார் தந்த அனுபவங்களை கேள்விப்பட்டு இருக்கிறேன். கொஞ்ச காலத்திற்கு முன் SBI-இல் இப்படி நிறைய புகார்கள் வந்ததாக கேள்வி..

புதுகைத் தென்றல் said...

ரெம்ப டென்ஷனா பாஸ்,

சில ஏ டி எம் மிஷின்கள் டச் ஸ்க்ரீன் வ்சதி கொண்டது. அதில் நிமிட நேரத்திற்குள் கேட்கும் தகவல்கள் கொடுக்கப்படாவிட்டால் அம்புட்டுதான். திரும்ப மொதல்லேர்ந்து ஆரம்பிக்கணும். இது வயதானவர்களுக்கு(ஏன் சில இளைஞர்களுக்கு கூட) ரெம்பவே கஷ்டம்.

புதுகைத் தென்றல் said...

அந்தக் கார்டை பேங்க் குடுத்த சின்ன கவர்ல வெச்சுருப்பாங்க//

அதான் சேப்டியாம். அதையும் பர்சுக்குள்ள வெச்சு வெச்சு எடுக்க அப்பப்பா.

ஒரு முறை ஒரு வயதானவருக்கு உதவப்போயி வெளியே இருந்தவங்க என்னியத்தான் திட்டித் தீத்தாங்க. ஏதோ என்னாலதான் தாமதமாச்சுன்னு :(

புதுகைத் தென்றல் said...

ப்ப்ப‌டுத்தாதீர்க‌ள்.. பிளீஸ்..!//

இதை ஒவ்வொரு ஏ டி எம் வாசலிலும் எழுதி வைச்சாலும் தப்பில்லை.

புதுகைத் தென்றல் said...

ஆனாலும் தாமிரா உங்க பதிவுகள்
சமீபகாலமா டூ மச்சா சூப்பரா இருக்குங்க.

கும்க்கி said...

இந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம்னுதான கார்டையும் பின் நெம்பரையும் எங்கிட்ட குடுத்துட்டு போங்க....எவ்வளவு வேணுமின்னு லெட்டர் போட்டிங்கன்னா நா மனியார்டர் அனுப்புறேன்னேன்.
கேட்டாத்தான....நோ டென்ஷன் ப்ளீஸ்.

Vee said...

/ங்கொய்யால.. இதெல்லாம் ரொம்ப ஓவரு.. நான் போற ஏ.டி.எம்மில் நூறு ரூபாய் நோட்டு மட்டும்தான் இருக்கு. எனக்கு 20000 வேணும்.. என்ன செய்யறது? நாலு தடவ போட்டுதான் எடுப்போம்../

karthi, ithan thappu. u have to be considerate. if you need 20000 and need to make 4 withdrawals do it when there is no crowd or go to the bank to withdraw and if people are waiting you should not be doing that. u will feel the pain when someone else does that.

குப்பன்_யாஹூ said...

mostly dont go to ATM between 28th to 3rd date.

and try to go ATM between 5 am to 6 am or 11 pm to 12 pm.

பாச மலர் said...

இது பெரிய அவஸ்தைதான்...

ஆனாலும் நான் தலைப்பைப் பாத்துட்டு நிஜம்மாவே பக்தியோ வேற எதுவோ முத்திப் போய் யாரோ ஏடிஎம்முக்குப் பூஜை செய்துட்டாங்களோன்னு பயந்தே போயிட்டேன்.

mayavi said...

blog ezutha neram irukka ungalukku ATMil nikka time illaya.... ATM ellam varathu ku munnadi eppadi panam edupinga??? counter slip token vangi panam edutha alunga thaane ellam... ethoo antha 5 minsil periya rocketikku codea eluthi irukaa poringa.... valkayil porumai..thevai..aduthavrgaloda.. iyalamai.. pathi kova pada kudathu...

smile said...

நீங்க சொல்றத ஒதுக்க வேண்டிய உண்மை தான்
ஆனா எல்லா பேங்க்கின் ஏ.டி.எம்மும் ஒரே மாதிரியான
ஏ.டி.எம்கள் இல்லை அதனால கொஞ்சம் தடுமாற்றம் அடைய தான் வேண்டியிருக்கு

இராகவன் நைஜிரியா said...

பயங்கரமான அனுபவம்தான்.

இந்த கஷ்டங்களுக்காகத்தான், இந்தியாவில் இருந்தவரை, நான் பணம் எடுக்கப் போனதில்லை...

எல்லாம் தங்ஸ் பாத்துப்பாங்க... நாம வேணுங்கற பணத்த, காரணத்த சொல்லி (அ) கண்டுபிடிச்சு அவங்ககிட்ட இருந்து வாங்கிறதுதான்.

MayVee said...

இன்னொரு கொடுமை இருக்குங்க... உள்ளே போனபின் மொபைல் போன்ல மணைவி கிட்ட பேசி எவ்வளவு காசு எடுக்கும்னு பேசுவாங்க பாருங்க...... தாலி அருதுரும்.

ஆனா நான் எப்போ போனாலும் நோ காசு நு atm சொல்லுது... அல்லது நெட்வொர்க் problem நு சொல்லுது ..... இதை first change பண்ணும்

அன்புடன் அருணா said...

"ஏடிஎம்மிற்குள் லட்சுமி பூஜை எப்போ ஆரம்பிக்கும்னு கடைசி வரை மூச்சு விடாமல் படித்தேன்...இப்படி ஏமாத்திட்டீங்களே?
அன்புடன் அருணா

கும்க்கி said...

வர வர உங்களுக்கு பொருமை சாஸ்தியாய்ட்டே போகுதுன்னு பிரியுது.ஹி....ஹி.

முரளிகண்ணன் said...

:-)))

Anonymous said...

தாமிரா,

ஜெய மோகனோட அனுபவத்தப் பாருங்க

ச்சின்னப் பையன் said...

:-))))

RAMASUBRAMANIA SHARMA said...

இதெல்லாம் அறிவியல் முன்னேற்றத்துக்கான இம்சைகள்...எனக்கும் இது போல் பல அனுபவங்ள் உண்டு...its all in the game and let us sail with the tide...that's all...

RAMASUBRAMANIA SHARMA said...

இதெல்லாம் அறிவியல் முன்னேற்றத்துக்கான இம்சைகள்...எனக்கும் இது போல் பல அனுபவங்ள் உண்டு...its all in the game and let us sail with the tide...that's all...

வால்பையன் said...

நான் கார்டை தூக்கு ஆத்துல வீசிட்டேன்!
அவசர தேவைக்கு கைமாத்து!
நிதான தேவைக்கு காசோலை!

களப்பிரர் said...

ங்கொய்யால.. இதெல்லாம் ரொம்ப ஓவரு...
நான் பைக்குல எங்கயாச்சும் போகயில எப்ப எப்ப வேர்க்குதோ அப்ப அப்ப ATM இருக்குற ரூம்ல தான் ரெண்டு நிமிஷம் ரெஸ்ட் எடுப்பேன். நீ வேகமா காசு எடுத்துட்டு டாஸ்மார்க் க்கு தான போற ??? அப்புறம் என்ன...

கார்க்கி said...

/karthi, ithan thappu. u have to be considerate. if you need 20000 and need to make 4 withdrawals do it when there is no crowd or go to the bank to withdraw and if people are waiting you should not be doing that. u will feel the pain when someone else does that//

என்னங்கண்ணா.. நைட்டுல பேங் இருக்காது.. மாசத்துல ஒரு தடவைக்கு மேல பேங்க்குக்கு வந்தா காசாம். ஏ.டி.எம்மில் ஆயிரம் ரூபாய் இல்லாதது என் தப்பா? வரிசையில் நிக்கற கஷ்டம் எனக்கும் தெரியும். ஆனா அதுக்காக உள்ள இருக்கற எல்லொரையும் குறை சொல்ல முடியுமா? ஒரு நாள் வரும் உங்களுக்கும். அவசரமா 40000 எடுக்கனும்னு, அப்ப தெரியும் உங்களுக்கு

SanJaiGan:-Dhi said...

:))))))

//இணைய வசதியுள்ளோர் பெரும்பாலான‌ முக்கிய‌ வ‌ர‌வு செல‌வுக‌ளை இணைய‌த்திலேயே முடித்துவிடுங்க‌ள்.//

அதான் நடந்துட்டு இருக்கு.. நான் ATM பக்கமெல்லாம் போறது ரொம்ப அபூர்வம்.. மொத்தம் 10 முறை கூட பயன்படுத்தி இருக்க மாட்டேன்.. :)

தாமிரா said...

நன்றி கார்க்கி.! (செய்யிறதையும் செஞ்சுபுட்டு வீ சொல்றதுக்கு பதில் வேற சொல்றியா? என்ன பண்ணலாம்?)

நன்றி இயற்கை.! (பழக்கமில்லாதவங்களை நிச்சயம் பொறுத்துக்கொள்ளலாம் சார்)

நன்றி மகேஷ்.! (பேங்க் குடுத்த சின்ன கவர்ல வெச்சுருப்பாங்க// அநியாயம்ங்க..)

நன்றி சரவணா.!

நன்றி தென்றல்.! (ஒரு முறை ஒரு வயதானவருக்கு உதவப்போயி வெளியே இருந்தவங்க என்னியத்தான் திட்டித் தீத்தாங்க.// உதவுகையில் சில சமயங்களில் இது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.) (ஆனாலும் தாமிரா உங்க பதிவுகள் சமீபகாலமா டூ மச்சா சூப்பரா இருக்குங்க// ஹிஹி.. ரொம்ப புகழறீங்க.. பெசல் நன்றிங்க..)

நன்றி கும்க்கி.! (இந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம்னுதான கார்டையும் பின் நெம்பரையும் எங்கிட்ட குடுத்துட்டு// இது நல்ல ஐடியாவா இருக்குதே.!)

நன்றி வீ.! (சொல்லிப்பிரயோஜனம் இல்லீங்க.. கீழ பாத்தீங்கல்ல..)

நன்றி குப்பன்.!

நன்றி பாசமலர்.!

நன்றி மாயாவி.! (ஆமா.. போன் வர்றதுக்கு மின்னாடி லெட்டர் போட்டோம், கார் வர்றதுக்கு மின்னாடி நடந்து போனோம், ம்.. வேற.. அட போங்கப்பா.!)

நன்றி ஸ்மைல்.!

நன்றி ராகவன்.! (எல்லாம் தங்ஸ் பாத்துப்பாங்க..// வெளங்கிரும்.!)

நன்றி மேவீ.! (பேட் லக்.. என்னைப்போலவே.!)

நன்றி அருணா.! (நீங்க நெனச்சாமாதிரியும் எங்காச்சும் நடந்திருக்கும். நம்ம ஊரப்பத்தி என்ன நினைச்சீங்க.?)

நன்றி முரளி.!

நன்றி வேலன்.!

நன்றி ச்சின்னவர்.!

நன்றி ஷர்மா.!

நன்றி வால்.! (உண்மையிலேயே உருப்படியான காரியம். நான் கிரெடிட் கார்டை அப்படித்தான் தலைசுற்றி வீசினேன்)

நன்றி களப்பிரர்.! (மன்னிச்சுக்கிடுங்கண்ணே.. நீங்க இருக்கிற‌து தெரியாம ஏதேதோ எழுதிப்புட்டேனே.. சே.!)

தாமிரா said...

வாங்க சஞ்சய்.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இறுதியாக‌, இங்கேயாவ‌து கொஞ்ச‌ம் சுறுசுறுப்பாக‌ இருங்கள்.ப்ப்ப‌டுத்தாதீர்க‌ள்.. பிளீஸ்..!

உங்க அவசரம் புரியுது பாஸு

உங்க அவசரத்துக்கு உடன்பட்டு

நான் மீ த 100 போடறேன்

(வேறு யாராவது வந்து 32 - 99 போட்டுடுங்கப்பா)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு முறை ஒரு வயதானவருக்கு உதவப்போயி வெளியே இருந்தவங்க என்னியத்தான் திட்டித் தீத்தாங்க. ஏதோ என்னாலதான் தாமதமாச்சுன்னு :(//

புதுகை அக்காவுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கு.

Vinitha said...

நல்ல ... கண் திறக்கும் பதிவு!

பினாத்தல் சுரேஷ் said...

நாம எவ்ளோ சுறுசுறுப்பா இருந்து என்ன, நம்ம தலையெழுத்து எவனாச்சும் ஒரு மாக்கான் இருக்கற நேரத்துலதான் க்யூவில நிக்கவேண்டி இருக்கும்.

தாமிரா said...

வாங்க அமித்து.!

வாங்க வினிதா.! (உங்க புரொபைல் படம் வித்தியாசமான அழகு, ரசனை.!)

வாங்க சீனியர்.! (பார்த்து ரொம்ப நாளாச்சு பினாத்தலாரே, எழுதுறீங்களா? லீவு உட்டுருக்கீங்களா?)

Vee said...

/ என்னங்கண்ணா.. நைட்டுல பேங் இருக்காது.. மாசத்துல ஒரு தடவைக்கு மேல பேங்க்குக்கு வந்தா காசாம். ஏ.டி.எம்மில் ஆயிரம் ரூபாய் இல்லாதது என் தப்பா? வரிசையில் நிக்கற கஷ்டம் எனக்கும் தெரியும். ஆனா அதுக்காக உள்ள இருக்கற எல்லொரையும் குறை சொல்ல முடியுமா? ஒரு நாள் வரும் உங்களுக்கும். அவசரமா 40000 எடுக்கனும்னு, அப்ப தெரியும் உங்களுக்கு /
கார்த்தி ,புரியுது. ஆனா இதெ பொழப்பா இருப்பானுங்க சில பேரு. நீங்க அப்டி இல்லனு நம்புறேன்.
ஒரு நாள் நான் மூனு தடவை வரிசைல நின்னேன் 12000 எடுக்க.

/ நாம எவ்ளோ சுறுசுறுப்பா இருந்து என்ன, நம்ம தலையெழுத்து எவனாச்சும் ஒரு மாக்கான் இருக்கற நேரத்துலதான் க்யூவில நிக்கவேண்டி இருக்கும். /

இதுதான் Murphy's law.

ராம்.CM said...

நல்லா சொன்னீஙகப்பா..!
நானும் அனுபவித்ததுண்டு இது போன்ற அனுபவங்களை....

வெயிலான் said...

நாங்களெல்லாம் வங்கியில பணமே விட்டு வைக்கிறதில்லை. அதனால ஏடிஎம் போற வேலையில்லை.

படங்கள் இன்னும் வந்து சேரவில்லை.

பரிசல்காரன் said...

இந்த அறிவுரைகளை ப்ரிண்ட் எடுத்து ஒவ்வொரு ஏ.டி.எம்மிலும் வைக்கலாம் போல. நல்லாயிருந்துச்சு தாமிரா. அதுவும் அந்தக் கடைசி அறிவுரை (இங்கேயாவது சுறுசுறுப்பா இருங்க) நச்...

ஸ்ரீமதி said...

:))

மணிகண்டன் said...

//அது சிக்ஸ் சிக்மாவையும் தாண்டிய‌ செய் நேர்த்தியுட‌ன் செய‌ல்ப‌டுகிற‌து. கோடி முறைக‌ளில் ஒரு முறை அது ஒரு நோட்டை அதிக‌மாக‌வோ, குறைவாக‌வோ த‌ர‌க்கூடும்..//

கோடி முறைக‌ளில் ஒரு முறையா எனக்கு இரண்டு முறை நடந்து இருக்கு ! அதுவும் ஒரு ஆறுமாத காலத்துக்கு உள்ளாக ! பிரச்சனை என்னனா, நான் போன ATM க்கு அது சிக்ஸ் சிக்மால வேல பாக்கறதுன்னு தெரியலயாம்.

சிக்ஸ் சிக்மா ஒரு நிறுவனத்துல உள்ள செயல்பாடுக்கு தான் தருவாங்க. அத எப்படி இப்படி பொதுப்படுத்தி சொல்றீங்க.

நமக்கு கியூ நிக்கற பொறுமை கிடையாது. முன்னாடி இருக்கறவன் என்ன பண்றான்.. ஏன் இவ்வளவு மெதுவா மூவ் ஆகுது. இதே சிந்தனை தான் ! அந்த மனநிலைல எத பாத்தாலும் இப்படி தான் தோணும் ! (என்னையும் சேத்து தான் சொல்றேன் ). உண்மையில பொறுமையா நில்லுங்கன்னு தான் வாசகம் ஓட்டனும்.

தாமிரா said...

நன்றி வீ.!
நன்றி ராம்.!
நன்றி வெயிலான்.!
நன்றி பரிசல்.!
நன்றி ஸ்ரீமதி.!

மணிகண்டன் said...

கோடி முறைக‌ளில் ஒரு முறையா எனக்கு இரண்டு முறை நடந்து இருக்கு ! அதுவும் ஒரு ஆறுமாத காலத்துக்கு உள்ளாக ! //

ஒன்னு சொல்ல மறந்துட்டேன். அந்த ரெண்டு முறையும் என்னோட அக்கௌன்ட்ல இருந்த பணம் எல்லாம் கொடுத்துடுச்சு. ஆனா நான் தான் கொஞ்சம் அதிகமா எதிர்பார்த்தேன்.

செல்வேந்திரன் said...

ஓர‌மாக‌ சேர்போட்டு அம‌ர்ந்து பணத்தை எண்ணிப்பார்க்க‌லாம். // இதுக்கு எல்லா ஊர்லயும் 'குசும்புன்னு' பேரு
காத‌லியிட‌ன் ரொமான்ஸ் ப‌ண்ணிக்கொண்டிருக்காதீர்க‌ள். // அங்கயுமா... பண்ணுதானுவோ.... ?!

பாபு said...

எங்க ஆபீஸ் இருக்க ATM ல டெய்லி நூறு நூறா எடுத்து செலவு பண்றவன் எல்லாம் இருக்கான்.என்ன பண்றது??

இம்சை அரசி said...

நல்லா சொன்னீங்கண்ணா... எனக்கு ஒரே எரிச்சலா வரும். உள்ள போயி கார்ட பிடுங்கி நானே எடுத்துக் குடுத்துடலாம் போல தோணும்...

அனுஜன்யா said...

hilarious ! என்னகென்னவோ இதுல உங்க டென்ஷன் தெரியல. பிரமாதமான நகைச்சுவை உணர்ச்சி மட்டும் தெரியுது. கவுண்டமணி ஸ்டைல். கலக்கல் பதிவு.

அனுஜன்யா

Truth said...

// ப்ப்ப‌டுத்தாதீர்க‌ள்.. பிளீஸ்..!

ஹ ஹ ஹ... நானும் இதில் பல முறை தவிச்சிருக்கேன்.

மங்களூர் சிவா said...

50

மங்களூர் சிவா said...

ங்கொய்யால.. இதெல்லாம் ரொம்ப ஓவரு..

மங்களூர் சிவா said...

//
கும்க்கி said...

இந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம்னுதான கார்டையும் பின் நெம்பரையும் எங்கிட்ட குடுத்துட்டு போங்க....எவ்வளவு வேணுமின்னு லெட்டர் போட்டிங்கன்னா நா மனியார்டர் அனுப்புறேன்னேன்.
//

ரிப்பீட்டு

:))))))))))))

மங்களூர் சிவா said...

//அது சிக்ஸ் சிக்மாவையும் தாண்டிய‌ செய் நேர்த்தியுட‌ன் செய‌ல்ப‌டுகிற‌து. கோடி முறைக‌ளில் ஒரு முறை அது ஒரு நோட்டை அதிக‌மாக‌வோ, குறைவாக‌வோ த‌ர‌க்கூடும்..//

கோடி முறைக‌ளில் ஒரு முறை எனக்கும் நடந்து இருக்கு !