Saturday, February 7, 2009

என் பார்வையில் நான் கடவுள்.!

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு படத்தை இவ்வளவு சீக்கிரம் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நான் விரும்பிக்காத்திருந்த ஒரு படம். அதுதான் நம்ப பங்குக்கு ஒரு விமர்சனத்தை எழுதிவிடலாமேன்னு.. என்ன காசா.. பணமா.?

மைல் கல் படங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்க வேண்டிய படம், காலம் காலமாக சொல்கிறோமே கதை இல்லை, கதை இல்லை என்று.. அதே சப்பை காரணத்தால் நூலிழையில் இடத்தைத் தவறவிடுகிறது. படத்தின் ஒளிப்பதிவு நேர்த்தியும், இசையும், உருவாக்கமும் பிரமிக்க வைக்கிறது. வழக்கமாக நல்ல படங்களில் படத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இசையும், பாடல்களும் திணறுவதைத்தான் பார்த்திருக்கிறோம். இங்கே பாடல்களுக்கு ஈடு தர படம் திணறுவதைப்போல எனக்கு ஒரு எண்ணம்.

இதுவரை பார்த்திராத கதைக்களம். இன்னும் ஆழமான கதையை சொல்லியிருக்கலாமோ.? ஒரு அகோரி சூழல் காரணமாக தமிழகம் வருகையில், இங்கே மாற்றுத்திறன் கொண்டோரை கொடுமைப்படுத்தி, பிச்சையெடுக்க வைத்து தொழில் நடத்தும் இருவரை கொன்று (தண்டனை), அவர்களால் கொடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பார்வையிழந்த பெண்ணை கொன்று (விடுத‌லை) மீண்டும் காசி திரும்புகிறார். இப்ப‌டி நான் க‌தை சொன்னால் ந‌ல்லாயிருப்ப‌து போல‌ தோன்றுகிற‌தே..

பிர‌ச்சினை என்ன‌வென்றால் அவ‌ர் இவ‌ர்க‌ளையெல்லாம் எந்த‌ ஸ்ட‌டியும் ப‌ண்ணாம‌லேயே பார்த்த‌வுட‌ன் தெரிந்துகொள்வ‌துதான். ச‌ரி, அது அவ‌ர்க‌ளின் (நிஜ‌ சாமியார்க‌ள்**) த‌னித்திற‌ன் என்று வைத்துக்கொண்டாலும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு ஆயிர‌ம் பேரையாவது (ஒரு வாரம் விடுப்பில் வந்திருக்கும்போது) கொல்ல‌ வேண்டியிருக்கும் இல்லையா? அப்புறம் அவரை வரவைத்து அவர் மீது தமிழ் சினிமா டிபிக்கல் அம்மா பாசத்தை கொட்டி, அவர் மறுத்து, பின்னர் அவரது எள்ளலான ஒரே வசனத்தில் தெளிந்து, அவர் சுயம்பு என்பதை புரிந்து உஸ்ஸ்.. அவரது அப்பா அம்மா காரெக்டர்கள் இவ்வளவு சொம்பைத்தனமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டாம். ச‌ரி விடுங்க‌.. குற்ற‌ம் சொல்ற‌துன்னா ந‌ம‌க்கு அல்வா சாப்பிடுற‌ மாதிரி ஆச்சுதே..

ஒரு இய‌க்குன‌ரின் எல்லா ப‌ட‌ங்க‌ளுமே ந‌ம‌க்கு பிடித்திருக்க‌வேண்டும் என்றோ அவை த‌ர‌மான‌தாக‌ இருக்க‌வேண்டும் என்ப‌தோ க‌ட்டாய‌மில்லை அல்ல‌வா? பாலா உண்மையிலேயே பாராட்டப்ப‌ட‌வேண்டிய‌வ‌ர். இதைப்போன்ற‌ வித‌வித‌மான‌ க‌தைக்க‌ள‌ங்க‌ளையும், நேர்த்தியான உருவாக்க‌த்தையும் கொண்ட‌ இன்னும் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளை அவ‌ர் த‌ர‌ வேண்டும் என‌ வாழ்த்துவோம்.

என‌க்கு ப‌ர்ச‌ன‌லா என்ன‌ வ‌ருத்த‌ம்னா, ப‌ட‌த்தில் காட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ 'மாற்றுத்திற‌ன் ப‌டைத்த‌ ம‌னித‌ர்க‌ளை'ப்பார்க்கும் போதே ந‌ம‌க்கு அத‌ன் வீரிய‌ம் விள‌ங்கிவிடுகிற‌‌து. இதில் அவ‌ர்க‌ளை ஒரு கட்டத்தில் கொடுமைப்ப‌டுத்துவ‌து போல‌ காட்சிக‌ள் வேறு அமைக்க‌வேண்டுமா? 'அது நிஜ‌த்தில் ந‌ட‌ந்துகொண்டிருக்கிற‌து. நீங்க‌ள் காண‌ விரும்பாவிட்டால் அது இல்லை என்றாகிவிடாது' என்ப‌து ச‌ரிதான். இருப்பினும் பாலா போன்ற‌ இய‌க்குன‌ர்க‌ள் வ‌ச‌ன‌ங்க‌ளாலேயே தேவையான தாக்க‌த்தை ஏற்ப‌டுத்திவிட‌முடியும் என்றே ந‌ம்புகிறேன். இன்னொரு காட்சியில் வில்லன் ஒரு ஊன‌முற்ற‌ பெண்ணை க‌ல்லால் தாக்குவ‌து. அதை அவ்வ‌ள‌வு நீண்ட‌ நேர‌ம் காட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. மேலும் அந்த பெரிய கல்லால் அவ்வ‌ளவு தூரம் தாக்க‌ப்ப‌டும் பெண் உயிர்பிழைப்ப‌து அரிது என்ப‌தை யாரும் உண‌ர்வ‌ர். இவ்வ‌ள‌வுக்கும் அந்த‌ப்பெண்ணுக்கு அடுத்தும் காட்சிக‌ள் இருக்கின்ற‌ன‌. இந்த‌ இர‌ண்டு காட்சிக‌ளைத்த‌விர‌ வேறெதுவும் கொடூர‌க்காட்சிக‌ள் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.

ஆனால் இயற்கையினாலேயோ, மனிதர்களாலேயோ மிதமிஞ்சிய அளவில் உடல் பாதிக்கப்பட்ட 'மாற்றுத்திறன்' கொண்டோரை மிக அருகில் காணும் சகிப்புத்தன்மை வேண்டும். இது பெண்களுக்கான‌ படமில்லை, அப்படி இப்படி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இப்போது பிற படங்கள் மட்டும் பெண்கள் என்ன குறைந்த பட்சம் ஆண்கள் பார்ப்பது போலவா வந்துகொண்டிருக்கின்றன? குழந்தைகள் பார்க்க நேர்ந்தால் பயமோ, குழப்பமோ அவர்களுக்கு நேரிடலாம் என்பதால் தவிர்க்கலாம்.


பூஜாவையும், ஆர்யாவையும் ப‌ற்றி சொல்லாவிட்டால் நிறைவாக‌ இருக்காது. பூஜா என‌க்கு மிக‌ப்பிடித்த‌ ந‌டிகை. அவருக்கு இவ்வ‌ள‌வு ந‌டிக்க‌ வாய்ப்புள்ள‌ அரிய‌ கார‌க்ட‌ர் கிடைத்த‌தில் என‌க்கு ம‌கிழ்ச்சியே. அவரால் முடிந்தவரை அவ‌ர‌து ப‌ணியை மிக‌ச்சிற‌ப்பாக‌ செய்திருக்கிறார் என்றே ந‌ம்புகிறேன். எக்ஸ்ட்ரீம் என்று சொல்ல‌ இய‌ல‌வில்லை. அனுபவமின்மை, காட்சிக்கு காட்சி வேறுபடும் மேக்கப் போன்ற பிற‌ கார‌ணிக‌ள் த‌டையாக‌ இருந்திருக்க‌லாம். ஆர்யா.. ல‌க்கிய்ய்யா.. இப்ப‌டியொரு ப‌ட‌த்திலும் ஒரு ப‌க்கா க‌ம‌ர்ஷிய‌ல் ஹீரோவைப்போல‌ அத‌க‌ள‌ம் ப‌ண்ண‌ வாய்ப்புள்ள‌ க‌தாநாய‌க‌ ரோல். உட‌ல்மொழி, ந‌டை, க‌ம்பீர‌த்திலேயே பின்னுகிறார். ஆக்ரோஷ சண்டைக்காட்சிகள். (கமர்ஷியல் படங்களுக்கான வீரியமான சண்டைகாட்சிகளை எப்படி எடுப்பது என கற்றுக்கொள்ளுங்கள் அஜித்களே, விஜய்களே.. அதாவது அந்தப்படங்களின் இயக்குனர்களே, சண்டைகாட்சிகள் அமைப்போரே..) பாராட்டுக‌ள் பாலாவுக்குதான். முட்ட‌ள‌வு த‌ண்ணீரில் ந‌ட‌ந்துவ‌ருவ‌து, பாலையில் ந‌ட‌ந்துவ‌ருவ‌து, இள‌ம் காளைபோல‌ பாறைக‌ளில் தூள்ளிப்பாய்வ‌து என‌ ஆண்மைத்த‌ன‌ம் அள்ளிச்செல்ல‌ ஆர்யாவுக்கு லைஃப்டைம் காரெக்ட‌ர். சிற‌ப்பாக‌ செய்திருக்கிறார்.

நாமும் அதே மாதிரி ஒரு போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று உள்ளூர ஒரு விபரீத ஆசை. வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் என் தொப்பையை ஏக்க‌த்துடன் பார்த்துக்கொண்டேன்.

டிஸ்கி :
** போலிச்சாமியார்க‌ள் ப‌ல‌ரும் (நல்லவர்களையும் கெட்டவர்களையும் இனம் காணும் திறம் கொண்ட) நிஜ‌ சாமியார்க‌ளோடு ப‌ட‌மெங்கும் உல‌வுகிறார்க‌ள். 'போலி' ச‌ரி தெரியும். அதென்ன‌ 'நிஜ‌?'.. தெர்ல‌பா.. ப‌ட‌த்தில் அகோரிக‌ளையும், சாமியார் வேட‌த்திலிருக்கும் திருட்டுப்ப‌ச‌ங்க‌ளையும் வேறுப‌டுத்த‌வே அப்ப‌டிச்சொன்னேன். என்னைப்பொறுத்த‌வ‌ரை 'போலி'ன்னா 'போலி', நிஜ‌ம்னா 'லூசு' அவ்வ‌ள‌வுதான் வித்தியாச‌ம்.

.

36 comments:

முரளிகண்ணன் said...

நல்ல விமர்சனம் தாமிரா.

\\நாமும் அதே மாதிரி ஒரு போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று உள்ளூர ஒரு விபரீத ஆசை. வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் என் தொப்பையை ஏக்க‌த்துடன் பார்த்துக்கொண்டேன்.\\

இதுதான் தாமிரா டச்சா?

Vijay said...

படத்த பார்த்துட்டு வந்து பேசிக்கிறேன். ஆமா இந்த தொப்பை விவ(கா)ரம்.......எதாச்சும் நல்ல ஐடியா குடுங்களேன் தாமிரா.... ரொம்பதான் சோகமாக்குது மனச.. இல்ல?

Cable Sankar said...

//\\நாமும் அதே மாதிரி ஒரு போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று உள்ளூர ஒரு விபரீத ஆசை. வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் என் தொப்பையை ஏக்க‌த்துடன் பார்த்துக்கொண்டேன்.\\

எதுக்குங்க இந்த வீண் பரிட்சை.. நாமக்கெல்லாம் தொப்பைதான் அழகு..

ஷங்கர் Shankar said...

\\ ஒரு இய‌க்குன‌ரின் எல்லா ப‌ட‌ங்க‌ளுமே ந‌ம‌க்கு பிடித்திருக்க‌வேண்டும் என்றோ அவை த‌ர‌மான‌தாக‌ இருக்க‌வேண்டும் என்ப‌தோ க‌ட்டாய‌மில்லை அல்ல‌வா? பாலா உண்மையிலேயே பாராட்டப்ப‌ட‌வேண்டிய‌வ‌ர். இதைப்போன்ற‌ வித‌வித‌மான‌ க‌தைக்க‌ள‌ங்க‌ளையும், நேர்த்தியான உருவாக்க‌த்தையும் கொண்ட‌ இன்னும் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளை அவ‌ர் த‌ர‌ வேண்டும் என‌ வாழ்த்துவோம். \\\

விமர்சனம் கலக்கல்!.... பாலா போன்ற திறமையான இயக்குனர்கள் நிறையப்பேர் தமிழ் சினிமாவுக்கு தேவை ..

வெண்பூ said...

ம்ம்ம்.. படம் எதிர்பார்த்த அளவுக்கு வரலன்னு சொல்றீங்க.. ஆனா சொல்லி வெச்ச மாதிரி எல்லாரும் இது பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கான படம் இல்லைன்னு சொல்றீங்க.. அட் பார் வித் ஷகிலா படம்? :(

ஷங்கர் Shankar said...

இந்த பதிவின் Urlலை என்னுடைய பதிவில் இணைத்துள்ளேன்!
Naan Kadavul Reviews - நான் கடவுள் திரைவிமர்சனம்.

நன்றி தாமிரா

MayVee said...

என்ன செய்ய...... பத்து நாள் கழித்து கூட பார்த்து இருக்கலாம்.....
பாலாவுக்காக பிரஸ்ட் டே : பிரஸ்ட் ஷோ பார்த்தேன்.......
என்னக்கு என்னமோ பாலா டச் படத்துல இல்லை தோனுது......
ஒரு முன்று பக்க சிறு கதையை இரண்டரை மணி நேரத்துக்கு சொல்ல முயற்சி பண்ணி இருகாங்க.......சரியா சொல்லலே .....

MayVee said...

"நாமும் அதே மாதிரி ஒரு போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று உள்ளூர ஒரு விபரீத ஆசை. "
நானும் முயற்சி பண்ணினேன் ஆனால் கேமரா ரிப்பேர் ஆகிவிட்டது......

"வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் என் தொப்பையை ஏக்க‌த்துடன் பார்த்துக்கொண்டேன்."
இங்க மட்டும் சிக்ஸ் பக் ஆ வாழுது...... ஆனால் இது இளம் தொப்பை

இராகவன் நைஜிரியா said...

நான் கடவுள் பற்றிய நான்காவது விமர்சனம் படிக்கின்றேன். (கேபிள் சங்கர், அதிஷா, சரவண கார்த்திகேயன், நீங்கள்)

எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி ஒரு விசயத்தை சொல்லுகின்றீர்கள்..

திரைக்கதையில் பாலா கோட்டை விட்டுவிட்டார் என்று...

அப்ப நிச்சயம் அது சரியாகத்தான் இருக்கும்.

அனைவரும் புகழுவது, பூஜாவின் நடிப்பு, இசைஞானியின் பிண்ணனி இசை..

விமர்சனத்துக்கே விமர்சனமா... உருப்பட்டமாதிரிதான்...

பரிசல்காரன் said...

பதிவு அருமை என்பதெல்லாம் இருக்கட்டும். தலைப்பை மிக ரசித்தேன்..

உங்கள் பார்வையில் நீங்கள் கடவுள்தான்!!!

வெயிலான் said...

நல்ல விமர்சனம் தாமிரா!

Mahesh said...

படத்துல வன்முறை அளவுக்கதிகமா இருக்குன்னு எல்லாரும் சொல்றதைப் பாத்தா பாலா இந்தப் படத்துக்கு "நான் மனிதன்"னு பேர் வெச்சுருக்கலாம் :(

ச்சின்னப் பையன் said...

//என்னைப்பொறுத்த‌வ‌ரை 'போலி'ன்னா 'போலி', நிஜ‌ம்னா 'லூசு' அவ்வ‌ள‌வுதான் வித்தியாச‌ம்.
//

அப்படி போடு அருவாள!!!

அத்திரி said...

//வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் என் தொப்பையை ஏக்க‌த்துடன் பார்த்துக்கொண்டேன்//

எதுக்கு அண்ணே இவ்ளோ பெரிய பேராசை...................

அத்திரி said...

கீழப்பாவூர் மணி தியேட்டர்ல படம் பாத்த அனுபவத்தை எழுதப்போறீங்களா? இல்லையா?

Bleachingpowder said...

//பாடல்களும் திணறுவதைத்தான் பார்த்திருக்கிறோம். இங்கே பாடல்களுக்கு ஈடு தர படம் திணறுவதைப்போல எனக்கு ஒரு எண்ணம்.//

ரொம்ப சரி. எனக்கும் படம் பார்க்கும் போது இதே போல் தான் தோணியது.

அதே போல் அந்த மலையாள வில்லனை நிச்சயம் அகோரி திண்றிருப்பான் என்பது படம் பார்த்த எல்லாருக்கும் புரிந்திருக்க நியாமில்லை. அதே போல் அவன் நர மாமிசம் தவிர வேறு எதையும் உண்ணுவதில்லை என்றே தோனுகிறது. படத்தில் கூட அவன் சாப்பிடுவதாக எந்த காட்சியும் இல்லை.

பாவம் பயலுக்கு நல்ல பசி, அந்த நேரம் பார்த்து அந்த மலையாள வில்லன் மாட்டிகிட்டான் :))

//கமர்ஷியல் படங்களுக்கான வீரியமான சண்டைகாட்சிகளை எப்படி எடுப்பது என கற்றுக்கொள்ளுங்கள் அஜித்களே, விஜய்களே.. அதாவது அந்தப்படங்களின் இயக்குனர்களே//

ஹும்...ஐம்பது சுமோ, அருவாளோட நூறு பேர், பக்கத்துல ஹீரோயின் எல்லாம் இருக்கு போது ஹெலிக்காப்டர்ல இருந்து பாராஷூட் இல்லாமல் அப்படியே ஓடுக்கொண்டிருக்கும் ரயிலில் குதித்து, அங்கே இருந்து இன்னொரு டைவ் அடித்து அப்படியே ஏர்லையே நாலு கிலோ மீட்டர் ட்ராவல் பண்ணி. வில்லன்களை பார்த்தவுடன் அடிக்காமல் நாலு பஞ்ச் டயலாக் பேசி (அதையும் வில்லன்கள் பொறுமையாக கேட்பார்கள்) ஒரே அடியில் அத்தனை பேர்களையும் விழ்த்துவார்களே, இது பெரியதா? இல்லா பாலாவின் சண்டை காட்சிகள் பெரியதா? போங்க சார் காமெடி பண்ணாதீங்க?

விஜய், அஜித் இந்த படத்தை பார்த்தால் பாலாவிடம், என்ன சார் ஃபைட்டை இவ்வளவு சிம்பிளா வச்சுடீங்கனு தான் சொல்லுவாங்க.

//என்னைப்பொறுத்த‌வ‌ரை 'போலி'ன்னா 'போலி', நிஜ‌ம்னா 'லூசு' அவ்வ‌ள‌வுதான் வித்தியாச‌ம்//

இதை தவிர்திருக்கலாமே. இலையின் ஓரத்தில் நரகலை வைத்த மாதிரி இருக்கிறது. பாலா பேட்டியை படித்திருக்கிறீர்களா? பக்தி படம் எடுப்பது என் வேலையல்ல அதே நேரம் யாருடைய மனதையும் புண்படுத்துவதும் தேவையில்லாதது. பாலாவும் நாத்திகன் தான்.

சும்மா ஒரு வாதத்திற்கு சொல்கிறேன். பூஜா இந்து கடவுள் நம்மை காப்பற்றபடவில்லை என்றதும் தேவாலையத்திற்கு போய் ஆசி பெற்று வந்தவுடன் தான் கல்லால் அடிபட்டு பின்பு கழுத்தறுபட்டு சாகிறார். இதுக்காக இந்துவில் மதத்தில் இருந்து கிருத்துவ மதத்திற்கு போகிறவர்களுக்கு இது தான் கதி என்று பாலாவும், ஜெயமோகனும் உணர்த்துகிறார்கள் என்று கூறலாமா?

அருமையான விமர்சணம். வாழ்த்துகள்.

கார்க்கி said...

@ப்ளீச்சிங்க்,

நீங்களுமா சகா? விஜய்க்கு அஜித்துக்கும் முன்னாலே அந்த பாணி சண்டையை அதிகம் பயன்படுத்தியவர் யாரென்றும் சொலியிருக்கலாமே? முதலில் கமரிஷியல் படத்தை புரிந்துக் கொள்ளுங்கள். அது உண்மையில் நடக்காததை காண்பிக்க வேண்டும்னெறே மக்கள் விரும்புகிறார்கள். அதையும் இது போன்ற படங்களையும் ஒப்பிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள். அது வேறு இது வேறு

கார்க்கி said...

படம் பார்த்துட்டேன். நாளை விமர்சணம்

Bleachingpowder said...

//கார்க்கி said...
@ப்ளீச்சிங்க்,

நீங்களுமா சகா? விஜய்க்கு அஜித்துக்கும் முன்னாலே அந்த பாணி சண்டையை அதிகம் பயன்படுத்தியவர் யாரென்றும் சொலியிருக்கலாமே?
//

ஹிஹிஹி....யார சொல்றீங்கனு புரியலையே தல :))))

//அதையும் இது போன்ற படங்களையும் ஒப்பிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள். //

சரி சரி வுடுங்க தல. என் வீக்னஸ் என்னன்னு உங்களுக்கு நல்லா தெரியும், அதனால ஐயா சரண்டர் :)

வால்பையன் said...

//என்னைப்பொறுத்த‌வ‌ரை 'போலி'ன்னா 'போலி', நிஜ‌ம்னா 'லூசு' அவ்வ‌ள‌வுதான் வித்தியாச‌ம்.//

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

வால்பையன் said...

இந்த படத்தின் உதவி இயக்குனர் என்னுடய நண்பர்.
அவர் முன்னரே சொல்லிவிட்டார்.

படம் ஒடுவது கடினம் என்று!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///முரளிகண்ணன் said...
நல்ல விமர்சனம் தாமிரா.
\\நாமும் அதே மாதிரி ஒரு போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளூர ஒரு விபரீத ஆசை. வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் என் தொப்பையை ஏக்க‌த்துடன் பார்த்துக்கொண்டேன்.\\
இதுதான் தாமிரா டச்சா?///

ஒரு ரிப்பீட்டு போட்டுக்குறேன்..

டைப்பிங் வேலையை மிச்சப்படுத்திய முரளிக்கு நன்றி..

அப்புறம் தாமிரா அந்த தொப்பை மேட்டர் உண்மைதானா..? அப்ப நானெல்லாம்..?

தாமிரா said...

நன்றி முரளி.!

நன்றி விஜய்.! (நானே நொந்துபோய் கிட‌க்கேன், இந்த‌ ல‌ட்ச‌ண‌த்துல‌ ஐடியா வேணுமா ஒங்க‌ளுக்கு?)

நன்றி கேபிள்.! (ஒங்க‌ கூட‌ போட்டி போட‌முடியு‌மாண்ணே.. இந்த விஷயத்துல?)

நன்றி ஷங்கர்.! (உங்க‌ள் ப‌திவுல‌ கொடுக்க‌ப்ப‌ட்ட‌ இணைப்புக்கு ந‌ன்றிண்ணே)

நன்றி வெண்பூ.! (பெண்க‌ளுக்கு வேண்டாம்னு சொல்ல‌லியே..)

நன்றி மேவீ.!

நன்றி ராகவன்.!

நன்றி பரிசல்.! (இதெல்லாம் ப‌ளிச்சுன்னு ப‌ட்டுடுமே உங்களுக்கு..)

நன்றி வெயில்.!

நன்றி மகேஷ்.!

நன்றி ச்சின்னவர்.!

நன்றி அத்திரி.! (கூடிய‌ சீக்கிர‌ம் எழுதிட‌லாம்ணே..)

நன்றி பிளீச்சிங்.! (டிஸ்கியில் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌‌து ப‌ட‌த்தோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்தி பார்க்க‌ அல்ல‌, அது என‌து சொந்த‌க் க‌ருத்து. எதைப்ப‌ற்றி எழுதினாலும் ந‌ம‌து விருப்ப‌ங்க‌ளையும் திணிக்க‌ முய‌ல்வ‌து இய‌ல்புதான் இல்லையா.?)

நன்றி கார்க்கி.! (பிளீச்சிங் இய‌ல்பாக‌த்தான் சொல்ல‌ வ‌ந்திருக்கிறார். உங்களுக்குத்தான் விஜ‌ய் என்ற‌ வார்த்தையைப் ப‌டித்தாலே உண‌ர்ச்சி கொப்புளிக்கிற‌து.. கொஞ்ச‌ம் அட‌க்குங்க‌ள் தோழ‌ர்)

ந‌ன்றி வால்.!

ந‌ன்றி உண்மைத்த‌மிழ‌ரே.! (புரொபைலில் போட்டோ பார்க்கிறீர்க‌ளே.. இந்த‌ இளைஞ‌ருக்கா(?) தொப்பை இருக்கும் என‌ ந‌ம்புகிறீர்க‌ள்.? சும்மா லுலுலாய்க்கு.. உங்க‌ளை ஒரு ச‌ந்திப்பில் ஒளிந்திருந்து க‌வ‌னித்துள்ளேன். உங்கள் தொப்பை இர‌ட்டை வெண்பூக்க‌ளுக்கு ச‌ம‌மாக‌த்தான் உள்ள‌து.. ஒண்ணும் சொல்ற‌துக்கில்லே.. சீனிய‌ராப்பபோயிட்டீங்க‌.. ஹிஹி..)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தாமிரா ஸார்..

தங்களுடைய பதிவில் முகப்புப் பக்கத்திலேயே பின்னூட்டம் இட்டவர்களின் பெயர்களை அறிய முடியவில்லை..

இதனை தயவு செய்து மாற்றவும்.

தெரியவில்லையெனில் பதிவர் ஜாக்கி சேகரை அணுகுங்கள். அவர் மிகச் சமீபத்தில்தான் இதனைத் தனது பதிவில் திருத்தியுள்ளார்.

தாமிரா said...

என்னடா இது எவ்வளவு ஹிட் பதிவுன்னாலும் அதிகபட்சம் 500, 600 ஹிட்டைத்தாண்டாது நம்மோடது. ஆயிரம் தாண்டி போய்க்கொண்டிருக்கிறதே என 'ஃபீட்ஜிட்டை' பார்த்தால் ஷங்கர்நியூஸில் இருந்து கூட்டம் பிச்சுக்குது. நன்றி ஷங்கர்.! அவ்வப்போது பிடிச்சிருந்தா பிற பதிவுகளுக்கும் லிங்க் குடுமய்யா.. (அவுரு பதிவுல நன்றிப் பின்னூட்டம் போடமுடியல.. மக்கர் பண்ணுது..)

தாமிரா said...

பெயர் தெரிதல் பிரச்சினையை சீக்கிரமா சரி பண்ணிடுறேன்.. தமிழன், நன்றி.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாமிரா டச்சோடு வந்த பாலா பட விமர்சனம்.

இப்படி ட்ரைலர் ஓட்டினா எப்படி இருக்கும்.

கும்க்கி said...

என் பார்வையில் நீங்களும் கடவுள்தான்...
(அர்த்தங்களாயிரம்)

தமிழ்நெஞ்சம் said...

Hi நண்பர் தாமிரா,

இந்தப் பிழை குறித்து உங்களுக்காக சிலநேரம் கூகிளில் தேடினேன். அந்தச் சுட்டி இதோ

http://blog.higopi.com/2007/01/blog-post.html

//
பதிவின் பின்னூட்டங்களில் பின்னூட்ட‌மிடுப‌வ‌ரின் பெய‌ர் '))')) said... இவ்வாறு தெரிவ‌த‌ற்கு தீர்வு வேண்டும்.

Elango's said...

I made a mistake of reading this review and he gave out everything about the movie including the climax. The first rule of thumb is not to give out any spoilers and spoil the potential viewers experience.

Saravana Kumar MSK said...

படம் எனக்கு பிடித்திருந்தது.. :)

ஷங்கர் Shankar said...

// தாமிரா said...
என்னடா இது எவ்வளவு ஹிட் பதிவுன்னாலும் அதிகபட்சம் 500, 600 ஹிட்டைத்தாண்டாது நம்மோடது. ஆயிரம் தாண்டி போய்க்கொண்டிருக்கிறதே என 'ஃபீட்ஜிட்டை' பார்த்தால் ஷங்கர்நியூஸில் இருந்து கூட்டம் பிச்சுக்குது. நன்றி ஷங்கர்.! அவ்வப்போது பிடிச்சிருந்தா பிற பதிவுகளுக்கும் லிங்க் குடுமய்யா.. //

சரிங்க தாமிரா சார்.

// (அவுரு பதிவுல நன்றிப் பின்னூட்டம் போடமுடியல.. மக்கர் பண்ணுது..) //

இதுவரை பிரச்சனை வந்ததேயில்லை!

தாமிரா said...

நன்றி அமித்து.!

நன்றி கும்க்கி.!

நன்றி தமிழ்நெஞ்சம்.!

நன்றி இளங்கோ.! (அய்யயோ கோச்சுக்காதீங்க‌..)

நன்றி சரவணா.!

மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...

இந்த படத்தின் உதவி இயக்குனர் என்னுடய நண்பர்.
அவர் முன்னரே சொல்லிவிட்டார்.

படம் ஒடுவது கடினம் என்று!
/

இல்லையே டிவிடி ஸ்டக் ஆகாமா ஓடிச்சே!

படம் ஓகே.

அமர பாரதி said...

படத்தை விடுங்க.

//'மாற்றுத்திற‌ன் ப‌டைத்த‌ ம‌னித‌ர்க‌ளை// இப்படி புதுசு புதுசா வார்த்தகளைக் கண்டுபிடித்து தமிழை வளர்க்க வேண்டுமா? இந்த மூன்று வார்த்தைகளையும் படம் சம்பந்தப்பட்ட "கன்டெக்ஸ்ட்" இல்லாமல் உபயோகப்படுத்தும் போது அதே பொருள் தருகிறாதா?

தாமிரா said...

அமரபாரதி.. புதிய வார்த்தைகளை கண்டு பிடித்து தமிழை வளர்க்கும் நோக்கமெல்லாம் எனக்கு இல்லை. எனது அனைத்து பதிவுகளிலும் சரளமாக பிறமொழிச்சொற்களை கலந்து எழுதுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழை தவறில்லாமல் எழுத வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம். 'மாற்றுத்திறன் படைத்தோர்' என்ற வார்த்தை இப்போது மிகப்பரவலாக பயன்படுத்தப்படுகிற வார்த்தையாக இருப்பதாலும், 'ஊனமுற்றோர்' போன்ற பிற சொற்களை நான் கடுமையாக உணர்வதாலும் மட்டுமே அவ்வாறு எழுத நேர்ந்தது. எவ்வித பின்புலம் இல்லாமலும் அந்த வார்த்தை அவர்களையே குறிக்கும் எனவும், மேலும் அவர்களை பாசிட்டிவ் கண்ணோட்டத்தில் பார்க்க உதவும் எனவும் நம்புகிறேன். நன்றி.