Thursday, February 12, 2009

லாரா கிராஃப்ட் : ஒரு சாதனைப்பயணம்

நான் அந்த சின்ன மலைக்குன்றிலிருந்து பார்த்தபோது தூரத்தில் மலைக்காடுகளின் ஊடே ஒளிந்திருந்த அந்த பாழடைந்த கோயிலும் அதன் முன்னே அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருந்த சிவன் சிலையும் தெரிந்தது. இவ்வளவு தூரத்திலிருந்தே தெளிவாக தெரிவதிலிருந்து அந்த சிலை எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை உணரமுடிந்தது. பைனாகுலர்ஸ் மூலமாக பார்த்தபோது அந்தக்கோயிலை மறைத்தவாறு
ஒரு மிகவும் சிதிலமடைந்த மண்டபத்தை காணமுடிந்தது. மண்டபத்தின் சுவர்களிலும், மேற்புறத்திலும் செடிகொடிகள் அடர்ந்திருந்தன. சிதிலமடைந்திருந்த தூண்கள். நேரத்தைப்பார்த்துக்கொண்டேன். விரைந்து செல்லவேண்டும், நேரம் குறைவாகவே உள்ளது. நான் தேடிக்கொண்டிருப்பது அந்தக்கோயிலுக்கு அடியில்தான் புதையுண்டுள்ளதா? அடர்ந்த காடுகளுக்குள் விரைந்தேன். நான் மண்டபத்தை அடைந்தபோது சூரியன் சாயத்தொடங்கியிருந்தது. மண்டபத்தின் பிரமாண்ட கதவுகள் அடைபட்டிருந்தன. அருகிலிருந்த அந்த லிவரை இயக்கிப்பார்த்தேன். ம்ஹூம்.. முடியவில்லை. மண்டபத்தை எப்படித்தாண்டிச்செல்வது? தூரத்துக்குன்றிலிருந்து பார்த்தபோது பளீரென்ற நீல வானமும், பச்சைப்பசலேன்ற மரங்களுமாய் இயற்கை அழகு கொஞ்சிய இடம் இப்போது இருள் கவியத்துவங்கியதால் மர்மதேசமாக மாறத்துவங்கியிருந்தது. உள்ளுணர்வு எச்சரித்தது. ஆபத்து சூழ்ந்திருக்கிறது, விரைந்து மண்டபத்தை கடந்து கோயில் வாசலுக்கு செல்லும் வழியைத்தேடு. துப்பாக்கியை தொட்டுப்பார்த்துக்கொண்டேன். க்ர்ர்ர்ர்ர்.. சற்றும் எதிர்பாராத விதமாய் ஒரு ஜாகுவார் அந்த பெரிய மரத்துக்குப்பின்னாலிருந்து பாய்ந்தது. விலகி தூர விழுந்தேன். எழுந்து துப்பாக்கியை எடுப்பதற்குள் இன்னொன்றும் கண்கள் பளபளக்க பாயத்தயாராக இருப்பதைக்கண்டேன். ம்ஹூம்.. இது சண்டைக்கான நேரமில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய தூணில் கால்வைத்து அருகில் அதைவிட சற்று பெரிய தூணில் தாவி ஏறினேன். அதற்கும் அடுத்த தூணில் ஏறிவிட்டால் பாதுகாப்பாக இருக்கும். அட அந்ததூணில் இருந்து ஒரு மரத்துண்டு மண்டபத்தின் மேற்கூரைக்குசெல்கிறதே.. ஏறிவிட்டால் உள்புறமாக இறங்குவதற்கு வழி ஏதும் இருக்கிறதா எனப்பார்க்கலாம். இதிலிருந்து அந்தத்தூணுக்கு தாவிவிடமுடியமா? தூணின் உச்சத்திலிருந்து யோசித்துக்கொண்டிருந்தேன். கீழே தூணுக்கு அடியில் பசியுடன் ஜாகுவார்கள் உறுமிக்கொண்டே அலைந்துகொண்டிருந்தன..மேற்கண்ட பத்தி ஒரு கதை. இதைப்போன்ற ஒரு ரிஸ்கியான திரில் பயணத்தை தன்னந்தனியாக உங்களால் மேற்கொள்ளமுடியுமா?

என்னால் அதிகபட்சமாக ஒரு பௌர்ணமி நாளில் பைக்கில் தனியாக சென்னையில் இருந்து கிளம்பி மகாபலிபுரம் சென்று இரவு நேரத்தில் (எட்டுமணி) கடற்கரையில் அமர்ந்தவாறே நிலா பின்னணியில் கடற்கரைக்கோயிலை ரசித்துவிட்டு வரமுடியும். எட்டரைக்கெல்லாம் கிளம்பினால்தான் 11 மணிக்கு வீடு வந்து சேரமுடியும். இதற்கும் ஆர்சி புக், லைசென்ஸ், இன்ஷ்யூரன்ஸ், ஹெல்மெட் எல்லாவற்றையும் செக்பண்ணி எடுத்துக்கொண்டு, வண்டி கண்டிஷன், நமது கண்டிஷன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் கிளம்பவேண்டும். அப்படியும் வீடு வந்தவுடன் நிற்கமுடியாத அளவில் முதுகு வலிக்கும். நமது ஃபிட்டை நினைத்து புல்லரித்துக்கொண்டே தூங்கிவிடலாம். இதுதான் நம்மால் முடிந்த அதிக பட்ச சாதனை, திரில், அட்வென்சர் எல்லாம்.இந்த ட்ரெக்கிங், ட்ரெக்கிங் அப்பிடிங்கிறாங்களே அப்பிடின்னா என்ன.? நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய மனுஷங்க என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்.. சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு தொப்பையை வளர்த்துக்கொண்டு.. திரில்லிங்கா எங்காவது போய் வரலாமய்யா.. ஏற்பாடு பண்ணுங்களேன். பெருசுங்கதான் இப்பிடின்னா ஸ்ரீ, கார்க்கி போன்ற சின்னப்பசங்களோ சோம்பல்ஸ் திலகங்களாக இருக்கின்றன. (என்னை விட தொப்பை இந்த இருவருக்கும் அதிகமென்கிற வரலாற்று உண்மையை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.) ஆனால் ‘இன்னைக்கு செஷன் வச்சுக்கலாமா’ என்று போன் செய்தால் போதும். மாற்றுக்கருத்தே இருக்காது. ‘சைட்டிஷ் நோட் பண்ணிக்குங்க.. ஆறு மணிக்கெல்லாம் டாண் என்று வந்துடுவேன்’ என்பார்கள். அவ்வளவு சுறுசுறுப்பு. சரி, பேச்சு திசை மாறிப்போகிறது. விஷயத்துக்கு வருவோம்.மேற்சொன்ன கதை, “லாரா கிராஃப்ட் - டோம்ப் ரைடர் : அண்டர்வேர்ல்ட்” கம்யூட்டர் கேமில் வரும் ஒரு காட்சி. ஏற்கனவே நான் எழுதிய ‘கால் ஆஃப் டியூட்டி’ கேமைப்பற்றிய பதிவைக்கண்டிருப்பீர்கள். அதைப்போலவே இன்னொரு அற்புதமான கேம் இது. அது ஷூட்டர் வகையைச்சார்ந்தது. போர், வன்முறை என தவிர்க்க நினைப்பவர்கள் ‘டோம்ப் ரைடர்’ போன்ற அட்வென்சர் வகைகளை தேர்ந்தெடுக்கலாம். இதில் மேலும் மேலும் மெருகேறிவரும் கிராபிக்ஸ் சாதனைகளை கண்டு உணரலாம். லாராவின் டிஸைன், லாரா சுற்றுப்புறத்தோடு கொள்ளும் தொடர்பு (Interaction) பிரமிக்கத்தக்க அளவில் உள்ளது. விதம்விதமான அட்வென்சர்ஸ்.. நல்ல கோர்வையான கதை. தேவையான இடங்களில் Save points. பல இடங்களில் சுவாரசியமான புதிர்கள். குறைந்த பட்சம் 10 மணி நேரங்களில் முடித்துவிடக்கூடிய அளவில் எளிமை. நீங்களும் முயற்சித்துப்பாருங்கள். சினிமா வேறு. கேம் வேறு. டிவியை மொக்கையாக பார்த்துக்கொண்டிருப்பதைவிட மூளைக்கு சரியாக வேலைகொடுக்கும் கேம்கள் ஆயிரம் மடங்கு உயர்ந்தவை என கருதுகிறேன். உட்கார்ந்தே விளையாண்டாலும் அட்லீஸ்ட் மனதளவிலாவது ஒரு நீண்ட சாதனைப்பயணம் மேற்கொண்ட திருப்தி கிடைக்கும். வேறு வழி.?

.

23 comments:

தராசு said...

மீ த ப்ர்ஷ்டு,

படித்து விட்டு வருகிறேன்.

கார்க்கி said...

விளையாட்டு புள்ள

தராசு said...

//டிவியை மொக்கையாக பார்த்துக்கொண்டிருப்பதைவிட மூளைக்கு சரியாக வேலைகொடுக்கும் கேம்கள் ஆயிரம் மடங்கு உயர்ந்தவை என கருதுகிறேன். உட்கார்ந்தே விளையாண்டாலும் அட்லீஸ்ட் மனதளவிலாவது ஒரு நீண்ட சாதனைப்பயணம் மேற்கொண்ட திருப்தி கிடைக்கும்.//

வழி மொழிகிறேன்.

ஒருமுறை (ஒரே ஒருமுறை) உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தபொழுது, சிக்ஸ் சிக்மா பதிவு பற்றியும், அடுத்ததாக TPM பற்றி எழுதுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்த்தோமே, எதாவது எழுதப் போகிறீர்களா தலைவரே???

தராசு said...

//கார்க்கி said,

விளையாட்டு புள்ள//

ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா, ஆரம்பிச்சுட்டாய்ங்க

அசோசியேட் said...

இந்த விளையாட்ட ஆபிஸ் நேரத்துல்ல வெளையாண்டா இன்னும் த்ரில் ஆ இருக்குமுன்னு......

Cable Sankar said...

தாமிரா.. உடனடியாக அந்த கேமின் பைரஸி டிவிடியை எனக்கு அனுப்பவும்..

அது சரி என்ன கூப்பிடாமல்லாம் செஷன் வச்சிக்கிறது ஞாயமா..?

Mahesh said...

இதெல்லாங் கூட வெளாடுவீங்களா என்ன? நீங்க பெரியூட்டுப் புள்ள. என்னென்னமோ வெளாடுறீங்க. நாங்க இங்க வார இறுதில பாட்மின்டன் மட்டும்தான்.

//ஆனால் ‘இன்னைக்கு செஷன் வச்சுக்கலாமா’ என்று போன் செய்தால் போதும். மாற்றுக்கருத்தே இருக்காது. ‘சைட்டிஷ் நோட் பண்ணிக்குங்க.. ஆறு மணிக்கெல்லாம் டாண் என்று வந்துடுவேன்’ என்பார்கள். //

ROTFL :))))))))))))))

வெண்பூ said...

பதிவின் முதல் பேராக்ராஃப் அருமை தாமிரா.. கதை எழுத வராதுன்னு பொய் சொல்லிட்டு திரியுறீங்க..

narsim said...

//என்னால் அதிகபட்சமாக ஒரு பௌர்ணமி நாளில் பைக்கில் தனியாக சென்னையில் இருந்து கிளம்பி மகாபலிபுரம் சென்று இரவு நேரத்தில் (எட்டுமணி) கடற்கரையில் அமர்ந்தவாறே நிலா பின்னணியில் கடற்கரைக்கோயிலை ரசித்துவிட்டு வரமுடியும்//

நல்ல ரசனை தல‌

எம்.எம்.அப்துல்லா said...

நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய மனுஷங்க என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்..

//

ஏஞ்சாமி...நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீகளோ அதத்தான் நாங்களும் பண்ணுறோம் :)

எம்.எம்.அப்துல்லா said...

ஆனால் ‘இன்னைக்கு செஷன் வச்சுக்கலாமா’ என்று போன் செய்தால் போதும். மாற்றுக்கருத்தே இருக்காது.

//

ஒரு ஸ்பீக்கர் வாங்கித் தர்றேன் :))

narsim said...

//இந்த ட்ரெக்கிங், ட்ரெக்கிங் அப்பிடிங்கிறாங்களே அப்பிடின்னா என்ன.? நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய மனுஷங்க என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்.. சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு தொப்பையை வளர்த்துக்கொண்டு.. //

//ஒரு ஸ்பீக்கர் வாங்கித் தர்றேன் :))//

அப்துல்லாண்ணே பதில் சொல்லிட்டாரு..புரிஞ்சவங்க சிரிச்சுக்கோவ்வ்வ்வ்

தாமிரா said...

நன்றி தராசு.! (துறை சார்ந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பிருந்தும் அவ்வப்போது எழுதவேண்டும் என திட்டமிட்டும் எழுதாமலிருக்கிறேன். விரைவில் அடுத்து எழுதுவேன்.. உங்களை நாடு கடத்திட்டதா கேள்விப்பட்டேன்)

நன்றி கார்க்கி.!
நன்றி அசோசியேட்.!
நன்றி கேபிள்.! (எங்கங்க.. வாங்கி வெச்சுக்கிட்டு கூப்பிட்டாலும் யாரு வர்றா? இதெல்லாம் சும்மா கற்பனைங்க..)

நன்றி மகேஷ்.! (பெரியூட்டுப்புள்ளயா? ஏதாவது சொல்லிறப்போறேன். 'கால் ஆஃப் டியூட்டி' பார்க்கவும்)

நன்றி வெண்பூ.! (எங்க போயிடப்போறது. கொஞ்ச நாளைக்கு முன்னர் எழுதிய 'கற்பகம்' சிறுகதையையும் அதற்கு வந்த பின்னூட்ட ஆதரவையும் பார்த்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்)

நன்றி நர்சிம்.!
நன்றி அப்துல்.! (வாங்கித்தரவும்.. புலம்பறதுக்கு வசதியாக இருக்கும், தொண்டத்தண்ணியெல்லாம் வத்திப்போகுது)

அனுஜன்யா said...

முதல் பத்தி செம்ம விறு விறு. அப்புறம் வழக்கமான நகைச்சுவை. நெஜமாகவே முதல் பத்தி பாணியில் ஒரு கதை எழுதுங்க தாமிரா.

மகேஷ் போலவே நானும் ROTFL அந்த 'சைடு டிஷ்' சமாசாரத்துக்கு :)))

இந்த வாரம் நிறைய கலக்கல் பதிவுகள். நீங்க, கார்க்கி, நர்சிம், வெண்பூ, பரிசல் எல்லாருமே செம்ம பார்ம்.

அனுஜன்யா

Anonymous said...

இதுல நர்சிம்மையும் அப்துல்லாவையும் ஏன் வம்புக்கிழுக்கிறே?

ராஜ நடராஜன் said...

பச்சப் புள்ள விளையாட்டு,பெருசுகளோட சரக்கு...

வித்தியாசமான ரசனைதான்!

gulf-tamilan said...

எங்கு தரவிறக்கம்? செய்ய முடியும் ? லிங்க் கொடுக்கவும்.

மங்களூர் சிவா said...

விளையாட்டு புள்ள

மங்களூர் சிவா said...

/
பெருசுங்கதான் இப்பிடின்னா ஸ்ரீ, கார்க்கி போன்ற சின்னப்பசங்களோ சோம்பல்ஸ் திலகங்களாக இருக்கின்றன. (என்னை விட தொப்பை இந்த இருவருக்கும் அதிகமென்கிற வரலாற்று உண்மையை இங்கே சொல்லிக்கொள்கிறேன்
/

மாப்பு வெச்சிட்டார்யா ஆப்பு :))

தாமிரா said...

அனுஜன்யா said...
முதல் பத்தி செம்ம விறு விறு. அப்புறம் வழக்கமான நகைச்சுவை. நெஜமாகவே முதல் பத்தி பாணியில் ஒரு கதை எழுதுங்க///

சும்மாயிருக்கிற‌வ‌னை ஏங்க‌ சீண்டி விடுறீங்க‌.. அப்புற‌ம் நான் க‌தை எழுதிவெச்சுக்கிட்டு காத்திருப்பேன்.. பார்க்க‌ ஒரு நாதி வ‌ராது.. க‌டை காத்து வாங்கும்.. இது தேவையா என‌க்கு?

ந‌ன்றி அனுஜ‌ன்யா.! (கார்க்கி, நர்சிம், வெண்பூ, பரிசல் எல்லாருமே செம்ம பார்ம். // ச‌ரியா சொன்னீங்க‌..)

ந‌ன்றி வேல‌ன்.! (கொஞ்ச‌ம் பெரிய‌வ‌ராச்சேன்னு ஒங்க‌ளை விட்டுப்புட்டேன்..)
ந‌ன்றி ந‌ட‌ராஜ‌ன்.!
ந‌ன்றி க‌ல்ஃப்.! (8 ஜிபி வ‌ரும்கிற‌துனால‌ சான்ஸே இல்லை..)

ந‌ன்றி ம‌ங்க‌ளூர்.! (ஒங்கூர்ல‌ ஏதோ பிர‌ச்சினையாமே.. இப்ப‌ எப்பிடி இருக்குது..)

சந்தனமுல்லை said...

முதல் பகுதி நல்லாருந்துது!

Vijay said...

எப்பா, அந்த ஏழாவது ஆளு வந்து இருக்கேம்பா. எனக்கு டிவி கேம் கம்பியூட்டர் கேம விட PSP கேம் தான் ரொம்ப புடிக்கும்.(டிவி ரிமோட், கம்பியூட்டர் மவுஸ் எல்லாம் நம்ம கிட்ட யாரு தராங்க? PSPன்னா அட்லீஸ்ட் பையன் விளையாண்டுட்டு வுட்டு எறிஞ்ச ஒடனே ஏதோ காசு கொடுத்து வாங்கின பாவத்துக்கு கொஞ்ச நேரம் நோண்டிக்கிட்டு இருக்கலாம்...)

பாபு said...

//திரில்லிங்கா எங்காவது போய் வரலாமய்யா.. ஏற்பாடு பண்ணுங்களேன். //


முடிஞ்சா என்னையும் சேர்த்துக்கங்க