Friday, February 13, 2009

வெயிலில் வழிந்த காதல்..


அமிழ்த்துகின்ற காதலிலும் புரிகிறது
இது காலமல்ல‌
இருப்பினும்
நான் வெடித்துப்போகும் ஆபத்திருக்கிறது
உன் கண்கள் அழைத்தாலும்
மொழிகள்
என்னோடு கண்ணாமூச்சி
விளையாடிக் கொண்டிருக்கின்றன‌
அந்த மாலையின்
இளவெயில் வேளையில்
பின்புற வாசற்படியில் பேசிக்கொண்டிருக்கிறோம்
நான் அந்த வெயிலில் இருந்துதான்
கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்தேன்
காதலைச் சொல்வதற்கான முதல் வார்த்தைகளை..
'எனக்கு உன்ன பிடிச்சிருக்கு'

பி.கு : எப்போவாவது வெளியிடும் குட்டிக் காதல் கவிதைகள் சிலபல வருடங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டிருந்த போது எழுதியவையே. இது காதலர்தின ஸ்பெஷலாக உங்களை மிரட்ட புதிதாக எழுதியதாகும். இதை 'யூத்ஃபுல்' விகடனில் வெளியிட்டு அவர்களும் வாசகர்களை மிரட்டியுள்ளனர் என்பது கூடுதல் செய்தி. நன்றிகள் விகடனுக்கு.. காதலர்தின வாழ்த்துகள் காதலிப்போருக்கு (கல்யாணமானவர்களுக்கு ஆறுதல் மட்டுமே)..

.

30 comments:

அத்திரி said...

நாந்தான் முதல்ல

அத்திரி said...

//(கல்யாணமானவர்களுக்கு ஆறுதல் மட்டுமே).. //


அண்ணிட்ட மாட்டி விட்டாத்தான் நீங்க அடங்குவீங்க

பாபு said...

நமக்கு கவிதை எல்லாம் கொஞ்சம் தூரம்
உங்கள் கவிதை யூதஃபுல் விகடனில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்

அத்திரி said...

//சிலபல வருடங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டிருந்த போது எழுதியவையேடிருந்த போது //

எப்போ டிப்ளமா படிக்கும் போதா........

அத்திரி said...

/இதை 'யூத்ஃபுல்' விகடனில் வெளியிட்டு அவர்களும் வாசகர்களை மிரட்டியுள்ளனர் என்பது கூடுதல் செய்தி.//

வாழ்த்துக்கள் அண்ணே

பரிசல்காரன் said...

அசடு வழியும் முகமின்றி... காதலுடன் கூடிய உங்கள் இன்னொரு முகம் தெரிகிறது. வாழ்த்துகள்!

பரிசல்காரன் said...

//பாபு said...

நமக்கு கவிதை எல்லாம் கொஞ்சம் தூரம்//

கொஞ்சம் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனுக்குப் பக்கத்துல வாங்க..

தாமிரா said...

நன்றி அத்திரி.. (எங்கியோ தொலைஞ்சு போயிட்டீங்களோன்னு பயந்துபோயிட்டேன்.. வில்லு படம் பாத்துட்டு நீங்க காசிக்கு போயிட்டதா யாரோ சொன்னாங்க..)

நன்றி பாபு.!

நன்றி பரிசல்.! (அசடா? அவ்வ்வ்வ்.. எங்கே? எப்போ? எதுக்கு? போட்டோவச்சொல்றீங்களா? அவ்வ்வ்..)

அத்திரி said...

//தாமிரா said...
நன்றி அத்திரி.. (எங்கியோ தொலைஞ்சு போயிட்டீங்களோன்னு பயந்துபோயிட்டேன்.. வில்லு படம் பாத்துட்டு நீங்க காசிக்கு போயிட்டதா யாரோ சொன்னாங்க..)//


தியேட்டருக்கு போய் படம் பாத்து ரொம்ப வருசமாச்சுண்ணே.....

புதுகைத் தென்றல் said...

காதலர்தின வாழ்த்துகள் காதலிப்போருக்கு (கல்யாணமானவர்களுக்கு ஆறுதல் மட்டுமே).. //

இதென்ன கொடுமை ஃப்ரெண்ட்,

கல்யாணத்துக்கப்புறம் காதலிப்பது தப்பா?

உரிமையோடும் அன்போடும் கல்யாணமானவர்கள் கொண்டாடுவதுதான் உண்மையான காதலர்தினம்.

தற்போது காதலிப்பவர்கள் அவர்கள் வெற்றிபெறுமா என்பது நிச்சய்ம் இல்லை. (வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்)

புதுகைத் தென்றல் said...

அசடு வழியும் முகமின்றி... காதலுடன் கூடிய உங்கள் இன்னொரு முகம் தெரிகிறது. //
:)))) என்னதான் ரமா அப்படி சொன்னாங்க,திட்டினாங்கன்னு பதிவு போட்டாலும் அவங்க மேல இருக்கற அன்பை எப்படியாவது காட்டிடுவாரு ஃப்ரெண்ட்.

கவிதை நல்லா இருக்குங்க
வாழ்த்துகள்!

புதுகைத் தென்றல் said...

கல்யாணமானவர்களுக்கு ஆறுதல் மட்டுமேன்னு சொன்னதை மட்டும்
வன்மையா கண்டிக்கிறேன்.

:)))

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் தாமிரா..விகடனில் வந்ததற்காக!

//இளவெயில் வேளையில்
பின்புற வாசற்படியில் பேசிக்கொண்டிருக்கிறோம்
நான் அந்த வெயிலில் இருந்துதான்
கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்தேன்
காதலைச் சொல்வதற்கான முதல் வார்த்தைகளை..
//

நல்ல ரசனையான வரிகள்!

அன்புடன் அருணா said...

விகடனில் வந்தததற்கு வாழ்த்துக்கள்....
அதென்னங்க கல்யாண்மானவங்க பார்ட்னர்ஸைக் காதலிக்க மாட்டாங்களா? அதென்ன ஆறுதல் மட்டுமே???
அன்புடன் அருணா

கார்க்கி said...

வாழ்த்துகள் சகா..

காதல்..ம்ம்..

பாபு.. (இது தெலுகு பாபு)

வோட்கா ஹாஃப் ஒக்கட்டி

புதுகைத் தென்றல் said...

வோட்கா ஹாஃப் ஒக்கட்டி//

okkati chaala karki. oka full kottesthe pothunthi.

:))))))))))

செல்வேந்திரன் said...

சிங்கம் களம் இறங்கிடுச்சி....

Anonymous said...

விகடனில் வந்தததற்கு வாழ்த்துக்கள் தாமிரா

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

தமிழ்ப்பறவை said...

good one.. and congrats...

ச்சின்னப் பையன் said...

//(கல்யாணமானவர்களுக்கு ஆறுதல் மட்டுமே)..
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தாமிரா said...

நன்றி புதுகைத்தென்றல்.!
நன்றி சந்தனமுல்லை.!
நன்றி அன்புடன்அருணா.!

நன்றி கார்க்கி.!
நன்றி செல்வா.!(ஆமா.. அதை மத்த‌ புலி, யானை எல்லாம் வேடிக்கை பாத்துதாம்.. போங்கையா அந்தால‌..)

நன்றி வேலன்.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி ச்சின்னவர்.!

ஆதவா said...

வாழ்த்துக்கள் விகடனில் வந்ததுக்கு.....

கவிதை நல்லா இருக்குங்க.... தலைப்பே நல்ல கவிதைதான்..

narsim said...

கல்யாணமானவர்களுக்கு ஆறுதல் மட்டுமே)..

.
//

என்னத்தச்சொல்ல..???

கவிதைகள்..விதை..கள்..ஊறும்

குசும்பன் said...

//நான் வெடித்துப்போகும் ஆபத்திருக்கிறது//

ஆமாம் தள உங்க வயிறும் வெண்பூவுக்கு போட்டியாக வீங்கிட்டேதான் வருது, இப்படியே போனா ஒரு நாள் வெடிச்சுடும் தள!

VASAVAN said...

//காதலர்தின வாழ்த்துகள் காதலிப்போருக்கு (கல்யாணமானவர்களுக்கு ஆறுதல் மட்டுமே)..//

கல்யாணத்திற்கு பிறகு (மனைவியை) காதலிக்கும் எங்களைபோல் நல்லவர்களுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம் என்று ஒரு வார்த்தை சேர்க்காமல் விட்டு விட்டீர்களே..??

வெண்பூ said...

கவிதைய விட அதற்காக நீங்க போட்டிருக்குற ஃபோட்டோ சூப்பரோ சூப்பர்...

MayVee said...

நல்ல இருக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

காதலர்தின வாழ்த்துகள் காதலிப்போருக்கு (கல்யாணமானவர்களுக்கு ஆறுதல் மட்டுமே).. .

அதானே
எங்க உங்க டச் விட்டுப்போச்சேன்னு பார்த்தேன்.

விட மாட்டீங்களே.

ஸ்ரீமதி said...

:))