Tuesday, February 17, 2009

ஐ மிஸ் யூ ரமா..

டியர்,

'மதுரக்கார மச்சானுக்கு' பாடல் இப்போதெல்லாம் டிவியில் ஒலிப்பதேயில்லை.. நித்யஸ்ரீயின் 'கானமழை'தான் பொழிகிறது பிளேயரில்..நீயில்லை ரமா..

முந்தைய தடவையின் 2.50 பாக்கியை நான் மற‌ந்து போவதால் தவறாது வந்துவிடுகிறார் அயர்ன் செய்து தருபவர்.. உடை எப்போதும் தயாராக இருக்கிறது.. நீயில்லை ரமா..

வீட்டின் பின்புறம் தவளைகளும், வீட்டினுள்ளே பல்லிகளும் பயம் மறந்து சுதந்திரமாக உலாவருகின்றன.. நீயில்லை ரமா..

த‌டையேதும் இல்லாம‌ல் தூக்கம் வரும் வரை புத்த‌க‌ங்க‌ள் வாசிக்க‌முடிகிற‌து.. நீயில்லை ர‌மா..

அலுவ‌ல‌க‌த்தில் எவ்வ‌ள‌வு நேர‌ம் தாம‌த‌மானாலும் எந்த‌ யோச‌னைக‌ளும் இல்லாம‌ல் இருக்க‌முடிகிற‌து.. நீயில்லை ர‌மா..

ஷாப்பிங் தொல்லையில்லை, தொணதொணப்பில்லை, வாக்குவாதமில்லை..
படுக்கும்போது லேசாக பசிப்பதைப்போல தோன்றினாலும் சாப்பிட எதுவுமே இருப்பதில்லை.. நீயில்லை ரமா..

க‌ண்க‌ள் ப‌னிக்கிற‌து.. ஐ மிஸ் யூடி..

(உன் வ‌ர‌வின் வ‌ழி பார்த்திருக்கும்)

அப‌லைக்க‌ண‌வ‌ன்.
.

39 comments:

வெண்பூ said...

Me the first...

வெண்பூ said...

//
க‌ண்க‌ள் ப‌னிக்கிற‌து
//

இதயம் இனிக்கலையா?

வெண்பூ said...

//
படுக்கும்போது லேசாக பசிப்பதைப்போல தோன்றினாலும் சாப்பிட எதுவுமே இருப்பதில்லை.. நீயில்லை ரமா..க‌ண்க‌ள் ப‌னிக்கிற‌து.. ஐ மிஸ் யூடி..
//
கொய்யால.. அப்பவும் சாப்பிட ஒண்ணுமில்லன்னா மட்டும்தான் தங்கமணி ஞாபகம் வருதா உமக்கு?

வெண்பூ said...

//
(உன் வ‌ர‌வின் வ‌ழி பார்த்திருக்கும்)அப‌லைக்க‌ண‌வ‌ன்
//

ஹி..ஹி.. வந்தப்புறம் என்ன மாதிரி பதிவு வரும்னு தெரியாதா?

முரளிகண்ணன் said...

:-)))))))))))))

after

:-(((((((((((((

அருண் said...

இது சந்தோசத்துல எழுதினதா, இல்ல துக்கத்துல எழுதினதா?

அனுஜன்யா said...

என்னா சீனு போடறாங்கப்பா! நாளைக்கு திரும்ப வராங்களாக்கும் :)))

அனுஜன்யா

MayVee said...

chanceye illai....
sema touching aa irukku.....

இராகவன் நைஜிரியா said...

தாமிரா கிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு பதிவா..

ஓன்னுமே புரியல...

பின்னூட்டத்த படிச்ச பிறகு தான் புரிஞ்சது...

C-in-C (Commander in Chief) ஊர்லேயிருந்து வராங்க போலிருக்கு..

ச்சின்னப் பையன் said...

// வெண்பூ said...
//
க‌ண்க‌ள் ப‌னிக்கிற‌து
//

இதயம் இனிக்கலையா?
//

repeatttttteee

கும்க்கி said...

குத்தும்..எதிர்க்குத்தும் ஒன்னா இருக்கே....எங்கியோ ஒதைக்குதே...

தமிழன்-கறுப்பி... said...

இந்த சீனுக்கெல்லாம் உமக்கு ஒரு நாளைக்கு இருக்கு...:))

அத்திரி said...

இதுல ஏதும் உள்குத்து இல்லையே....அண்ணி இதுக்கெல்லாம் அசரமாட்டாங்கன்னு நினைக்கிறேன்

வால்பையன் said...

நம்பமுடியவில்லை
வில்லை
ல்லை
லை...............

Rajeswari said...

இதோ அண்ணிக்கு உடனே போன் பண்றேன்

எம்.எம்.அப்துல்லா said...

சொல்ல ஒன்றும் இல்லை.

இதுவும் கடந்து போகும்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

இளைய பல்லவன் said...

ஆ....

புதுகைத் தென்றல் said...

ஹி..ஹி.. வந்தப்புறம் என்ன மாதிரி பதிவு வரும்னு தெரியாதா?//

:)))))))))))))))))

புதுகைத் தென்றல் said...

இல்லாதப்பா ஒரே ஃப்லீங்க்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கும், வந்ததுக்கப்புறம் ஃபைட்டிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா மாறிடும்.

அதுவும் சூப்பர், இதுவும் சூப்பர் ஃப்ரெண்ட்.

(இந்த விஷயத்துல நீங்க எனக்கு சரியான ஃப்ரெண்ட் தான்)

வெயிலான் said...

இப்பதிவை எழுதியது தாஆ...மிராவாஆஆ.....

ஸ்ரீமதி said...

அண்ணா சூப்பர் :))))

கார்க்கி said...

கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
என்னை ஏமாற்றி கோமாளியாக்கும்
அறிவை நீ ந்மபு..( ஓ சாரி.. தாமிரா கடைன்னு மறந்து போச்சு)

90ஐ நீ ந்மபு..

RAMYA said...

தாமிரா படிக்க நல்லா இருந்துச்சு!!

ஆனா நிஜமாவே அவ்வளவு சோகமா??
இதை படிச்சுட்டு ரமா வந்துட்டாங்களா ?????

பாபு said...

என்னடா தங்கமணி பதிவெல்லாம் வரதில்லையே அப்படின்னு நினைக்கும்போது,இந்த பதிவு வருகிறது.
இதை எழுதறப்ப என்ன நிலைல இருந்தீங்க அதை சொல்லுங்க முதல்ல

Pattaampoochi said...

அதானே பார்த்தேன்.எங்க திருந்திடீங்களோன்னு அவசரப்பட்டு ஓடி வந்து உங்க பதிவை படிக்க ஆரம்பிச்சேன்.
அப்பா கூட உங்க உள்குத்து புரியல சாமியோவ்.
எந்த சேதாரமும் இல்லாம அக்காகிட்ட இருந்து தற்காத்துக்கொள்ளும் போர்க்கால நடவடிக்கை என்று பிறகு புரிந்து கொண்டேன்.

தாரணி பிரியா said...

நல்லா இருக்கே. இப்படி எல்லாம் கூட யோசிப்பிங்களா என்ன‌

செல்வேந்திரன் said...

வெயிலானின் அதே அபிப்ராயம். ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு அதிர்ச்சியில்...

கும்க்கி said...

மக்கள்ஸ் பாவம் அநியாயத்துக்கு ஏமாந்துபோறாங்க..இதுல இருக்க உள்குத்து புரியாத மாதிரி எழுதியிருக்கதுதான் தோஸ்த் சிறப்பே.

RAD MADHAV said...

"வெங்கட்ராமா, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும், இதுல ஏதோ 'உள் குத்து' இருக்கு".

சாமி' யில் விவேக் காமெடி.

சூப்பர்.... வஞ்சப்புகழ்ச்சி' 'உள் குத்து' மற்றும் வாழை பழத்தில் ஊசி குத்துவது' என்பதை தமிழ் அகராதியில் இனி மாற்றி இந்த கவிதையை போட வேண்டும்.

'மனைவிகளின் கொசுக்கடி தாங்காமல் மென்டலாகத் திரியும் கோடான கோடி அப்பாவிகளுக்கு இது ஒரு நல்ல ((டார் டாய்ஸ், ஜம்போ, குட் நைட், மார்ட்டின்) சமர்ப்பணம். வாழ்த்துக்கள். கலக்குங்க ராசா கலக்குங்க...

தாமிரா said...

நன்றி வெண்பூ.! (சாப்பிட ஒண்ணுமில்லன்னா மட்டும்தான் தங்கமணி ஞாபகம் வருதா உமக்கு?// இந்த விஷயத்துல மட்டும் நாம கொஞ்சம் வீக்காப்போயிட்டமோண்ணே..)

நன்றி முரளி.!
நன்றி அருண்.! (இது சந்தோசத்துல எழுதினதா, இல்ல துக்கத்துல எழுதினதா?// எனக்கே தெர்லயே பிரதர்.!)

நன்றி அனுஜ‌ன்யா.! (இல்லையில்லை.. இன்னும் ஒரு மாசத்துக்கு மேலேயாகும்ங்க.. யாரோ நா பதிவெழுதறத பத்தி அவங்ககிட்ட போட்டு குடுத்திட்டதா நியூஸ் வந்துச்சு.. அதான் இப்பிடி..)

நன்றி மேவீ.!
நன்றி ராகவன்.! (எனக்கும் ஒண்ணும் புர்ல பாஸ்..)

நன்றி ச்சின்னவர்.!
நன்றி கும்க்கி.! (வேணும்னேதான் குத்து, உள்குத்து ரெண்டையும் மிக்ஸ் பண்ணி அடிச்சேன்.. எப்பிடியிருக்கு?)

நன்றி தமிழன்.!
நன்றி அத்திரி.!
நன்றி வால்.!
நன்றி ராஜி.! (எத்தனை பேர் இப்பிடி கெளம்பியிருக்கீங்க..)

நன்றி அப்துல்.! (உங்களோடதை ரொம்ப டச்சிங்கான பின்னூட்டமாக நான் கொள்கிறேன்)

நன்றி பல்லவன்.!
நன்றி தென்றல்.! (இல்லாதப்பா ஒரே ஃப்லீங்க்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கும், வந்ததுக்கப்புறம் ஃபைட்டிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா மாறிடும்.
(இந்த விஷயத்துல நீங்க எனக்கு சரியான ஃப்ரெண்ட் தான்)/// சரியா சொன்னீங்க பிரெண்ட்.!)

நன்றி வெயில்.!
நன்றி ஸ்ரீ.!

தாமிரா said...

நன்றி கார்க்கி.!

நன்றி ரம்யா.! (இத விட எம்மாம் ஃபீலிங்ஸ் காட்டினாலும் வரமாட்டாங்க.. அவ்வளவு திமிர் பிடிச்சவுங்க..)

நன்றி பாபு.! (இதெல்லாமா பப்ளிக்ல கேப்பாங்க.. போங்க பிரதர்)

நன்றி பட்டாம்பூச்சி.! (இவ்வளவு சீக்கிரம் திருந்திட்டா எப்பிடி? அப்புறம் தாமிராவைப்பார்த்து ஊர் சிரிக்காது?..)

நன்றி பிரியா.!
நன்றி செல்வா.! (பெரிய ஆளுங்கல்லாம என்பதிவுக்கு வர்றாய்ங்கப்போவ்..)

நன்றி கும்க்கி.! (இதெல்லாம் வெளியச்சொல்லப்புடாது..)

நன்றி மாதவ்.! (அதுசரி, நீங்களும் நம்ப கேஸ்தானா?)

அன்புடன் அருணா said...

எதுவும் உள்குத்து எதுவும் இல்லையென்று அப்படியே நம்புகிறேன்....நடத்துங்க...நடத்துங்க...
அன்புடன் அருணா

அமிர்தவர்ஷினி அம்மா said...

=இருந்தா கொடைச்சல் பதிவு போடுங்க, இல்லைனா பனிக்கிற்து பதிவு போடுங்க,

என்னவோ போங்க பாஸ்
ரெண்டுமே நல்லாதான் இருக்கு

Saravana Kumar MSK said...

அவ்வ்வ்வ்..
எழுதினது நீங்கதானா..

Saravana Kumar MSK said...

//வெண்பூ said...
//க‌ண்க‌ள் ப‌னிக்கிற‌து//
இதயம் இனிக்கலையா?//

he..he..he.. rippeettu.. ;)

தாமிரா said...

நன்றி அருணா.!
நன்றி அமித்து.!
நன்றி சரவணா.!

தேனியார் said...

பஸ் ஏத்திவிட்டுட்டு, ஜனகராஜ்மாதி குதிச்சதா பதிவர்கள் சொல்றத நெஜமாவே நாங்க நம்பல.

ப்ரியா said...

இத படிச்சுட்டு அவங்க என்ன சொன்னாங்க??