Sunday, February 22, 2009

நினைத்தாலே ந‌ட‌க்கும்.!

என்னடா இது நினைத்தாலே இனிக்கும் மாதிரி 'நினைத்தாலே ந‌ட‌க்கும்', புதுமையா இருக்கேன்னு நினைக்கிறீங்களா? அல்லது ஏதாவது 'சூ.. மந்திரகாளி' மேட்டர் என நினைக்கிறீர்களா? அதெல்லாமில்லைங்க.. இது ஒரு தன்னம்பிக்கை தரக்கூடிய பதிவு. படிச்சு முடிச்சுட்டு தன்னம்பிக்கை வந்ததான்னு மறக்காமச்சொல்லிட்டுப்போங்க.. முன்னாடியே ஒண்ணு சொல்லிடறேன்.. இந்த தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை, தும்பிக்கை பதிவெல்லாம் எனக்கு பிடிப்பதேயில்லைங்க.. அந்த மாதிரி பதிவுகளோ, புத்தகங்களோ நான் படிப்பதேயில்லை. அதுனால நான் அதப்பத்தி எழுதக்கூடாதுன்னு ஒண்ணும் சட்டமில்லையே.. பாருங்க அதான் சனிக்கிழமை இரவு போஸ்ட் பண்றேன்.

'மனம் போல் வாழ்வு' என்ற வார்த்தைகள் மிகவும் தடித்த எழுத்துகளில் ஃபிரேம் செய்யப்பட்டு அந்த பெரிய வீட்டின் ஹாலில் நுழைந்தவுடனே அனைவரது கண்களில் படும்படி மாட்டப்பட்டிருக்கும். அது என் தாத்தாவின் வீடு. நான் குழந்தையாக இருக்கும் போதிலிருந்து அதை கவனித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது அதன் அர்த்தம் விளங்கவில்லை. விளையாட்டுப்பிள்ளையாக இருந்தபோது 'அதென்ன? மனம்போன போக்கில் வாழ்வதா?' என்று கிண்டல் பண்ணி சிரித்துக்கொள்வேன். இப்போது கொஞ்சம் விளங்கத்துவங்கியுள்ளது...

படிப்பினால் என்ன பிரயோஜனம்? என்ற அரிய சிந்தனை படிக்கும் போதுதான் வரும்ங்க.. எனக்கும் அப்படித்தான். +2வில் அந்த சிந்தனை வந்ததால் அதைத்தவிர அனைத்திலும் கவனம். ஜஸ்ட் பாஸ் பண்ணினால் போதும் என்ற நினைப்பு. அதுதான் நடந்தது 40%. கல்லூரித்துவக்கத்தில் காதல் சிந்தனை. சிறப்பாக நடந்தது காதல். பாடங்களில் ஆரம்ப செமஸ்டர்களில் அதே 40%. காதலை காப்பாற்றவும், வேறு சிந்தனை மாற்றத்திலும் கடைசி வருடத்தின் தேர்வுகளின் சில நாட்களுக்கு முன்னால் ஞானோதயம். ஆபத்து.. 80% த்தை தாண்ட வேண்டும். நடந்தது, நம்புங்கள் 82%.

பெற்றோர்களின் மனப்போராட்டத்தில் காதலை மனதளவில் விட்டுத்தந்தேன். நடந்தது.. வாய்ப்பே இல்லாமல் விட்டுப்போயிற்று. ஏதாவது ஒரு வேலை, கொஞ்ச நாள் இந்த ஊரை விட்டுச்செல்லவேண்டும். நினைத்தேன்.. நடந்தது. ஊரைவிட்டு வந்தேன். நினைத்தது போலவே 'ஏதோ' வேலைதான். சிந்தனையற்ற சில வருடங்கள். ஒன்றுமே நிகழவில்லை.

ம்ஹூம்.. என்னடா இது? நமக்கு பின்னர் வந்தவனெல்லாம் பைக் வைத்திருக்கிறான். நாமும் வாங்க வேண்டும் என நினைத்தேன். நடந்தது. 2000 வாக்கில் நிகழ்ந்த செல்போன் புரட்சியின் போதே அதை வாங்க வேண்டும் என நினைக்கவுமில்லை. வாங்கவும் முடியவில்லை. பின்னர் தாமதமாக நினைத்தேன், வாங்கினேன். அடடா.. வயதாகிக்கொண்டே போகிறதே? கைநிறைய சம்பளம் வேணுமே.. நல்ல வேலை? நினைத்தேன். நடந்தது. கம்ப்யூட்டர் வேணுமே.. நடந்தது. திருமணம்? நடந்தது. என் நண்பர்களெல்லாம் எங்கே தொலைந்து போனார்கள்? மனம்விட்டு பழக ரசனையான நண்பர்கள் வேண்டுமே.. நினைத்தேன். கிடைத்தார்கள்.

நினைப்பதெல்லாமே நடந்தது.. நடக்கும், எண்ணிய எண்ணியபடி நடக்கும்.! எண்ணினால் மட்டுமே நடக்கும். சிறப்பானவற்றையே எண்ணியிருங்கள். சிறப்பாக வாழ்ந்திருங்கள். மனம் போல் வாழ்வு.!

டிஸ்கி : நாம் நம்மைப்பற்றி எண்ணுவது மட்டும்தான் நடக்கும். அடுத்தவர்களைப்பற்றி எண்ணிவிட்டு நடக்கலையே என்று என்னிடம் சண்டைக்கு வரக்கூடாது. குறிப்பாக 'தங்கமணி நன்றாக சமைக்கவேண்டும், சாந்தமானவராக மாறவேண்டும்' என்பது போன்ற எண்ணங்கள் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.

.

65 comments:

MayVee said...

naan th 1st

MayVee said...

will comment after reading ....

MayVee said...

"நினைத்தாலே ந‌ட‌க்கும்.!"

அதுக்கு கால் வேண்டாமா?????
நினைத்தாலே போதுமா .........

MayVee said...

"என்னடா இது நினைத்தாலே இனிக்கும் மாதிரி 'நினைத்தாலே ந‌ட‌க்கும்', புதுமையா இருக்கேன்னு நினைக்கிறீங்களா? அல்லது ஏதாவது 'சூ.. மந்திரகாளி' மேட்டர் என நினைக்கிறீர்களா? அதெல்லாமில்லைங்க.. "
அப்புறம்... வேற என்னங்க..???

MayVee said...

"இது ஒரு தன்னம்பிக்கை தரக்கூடிய பதிவு."
இந்த காமெடி தான் உங்களிடம் என்னக்கு பிடித்தது......

Anonymous said...

80% த்தை தாண்ட வேண்டும். நடந்தது, நம்புங்கள் 82%,
//
தாமிரா, நம்பிட்டோம்ல.

MayVee said...

"படிச்சு முடிச்சுட்டு தன்னம்பிக்கை வந்ததான்னு மறக்காமச்சொல்லிட்டுப்போங்க.. "
சாரி .... என்னக்கு மறதி ஜாஸ்திங்க.....

MayVee said...

"முன்னாடியே ஒண்ணு சொல்லிடறேன்.. இந்த தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை, தும்பிக்கை பதிவெல்லாம் எனக்கு பிடிப்பதேயில்லைங்க.. "
அட பாவமே ....
ஏன் இந்த கோல வெறி....

MayVee said...

"அந்த மாதிரி பதிவுகளோ, புத்தகங்களோ நான் படிப்பதேயில்லை. அதுனால நான் அதப்பத்தி எழுதக்கூடாதுன்னு ஒண்ணும் சட்டமில்லையே.. "
அதானே.....
சட்டம் உங்கள் கையில் .....

MayVee said...

"பாருங்க அதான் சனிக்கிழமை இரவு போஸ்ட் பண்றேன்."
wy this specification ......

MayVee said...

"'மனம் போல் வாழ்வு' என்ற வார்த்தைகள் மிகவும் தடித்த எழுத்துகளில் ஃபிரேம் செய்யப்பட்டு அந்த பெரிய வீட்டின் ஹாலில் நுழைந்தவுடனே அனைவரது கண்களில் படும்படி மாட்டப்பட்டிருக்கும்."
என்னக்கும் அந்த வரிகள் பிடிக்கும்

MayVee said...

" அது என் தாத்தாவின் வீடு. நான் குழந்தையாக இருக்கும் போதிலிருந்து அதை கவனித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது அதன் அர்த்தம் விளங்கவில்லை. "
:-))

அத்திரி said...

// குறிப்பாக 'தங்கமணி நன்றாக சமைக்கவேண்டும், சாந்தமானவராக மாறவேண்டும்' என்பது போன்ற எண்ணங்கள் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.//


உங்க பதிவ படிச்சதுக்கப்புறமும் அப்படி நினைப்பாங்களா நம்ம மக்கள்???????/

MayVee said...

"விளையாட்டுப்பிள்ளையாக இருந்தபோது 'அதென்ன? மனம்போன போக்கில் வாழ்வதா?' என்று கிண்டல் பண்ணி சிரித்துக்கொள்வேன். இப்போது கொஞ்சம் விளங்கத்துவங்கியுள்ளது..."
அப்பாடா

அத்திரி said...

உங்களின் பல கருத்துக்களில் உடன் படுகிறேன்..........அவ்வ்வ்வ்வ்வ்

MayVee said...

"படிப்பினால் என்ன பிரயோஜனம்? என்ற அரிய சிந்தனை படிக்கும் போதுதான் வரும்ங்க.. "
நான் எல்லாம் எப்போ படித்தேன்.....
சும்மா கிளாஸ்க்கு போயிட்டு வருவேன் ....

அத்திரி said...

//80% த்தை தாண்ட வேண்டும். நடந்தது, நம்புங்கள் 82%,
///
தாமிரா, நம்பிட்டோம்ல.//


ஆமால்ல.................... நம்பிட்டோம்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல

MayVee said...

"எனக்கும் அப்படித்தான். +2வில் அந்த சிந்தனை வந்ததால் அதைத்தவிர அனைத்திலும் கவனம். ஜஸ்ட் பாஸ் பண்ணினால் போதும் என்ற நினைப்பு. அதுதான் நடந்தது 40%. கல்லூரித்துவக்கத்தில் காதல் சிந்தனை. சிறப்பாக நடந்தது காதல். பாடங்களில் ஆரம்ப செமஸ்டர்களில் அதே 40%. காதலை காப்பாற்றவும், வேறு சிந்தனை மாற்றத்திலும் கடைசி வருடத்தின் தேர்வுகளின் சில நாட்களுக்கு முன்னால் ஞானோதயம். ஆபத்து.. 80% த்தை தாண்ட வேண்டும். நடந்தது, நம்புங்கள் 82%."
வேற வழி....
நம்பிட்டேன்....

T.V.Radhakrishnan said...

///நினைப்பதெல்லாமே நடந்தது.. நடக்கும், எண்ணிய எண்ணியபடி நடக்கும்.! எண்ணினால் மட்டுமே நடக்கும். சிறப்பானவற்றையே எண்ணியிருங்கள். சிறப்பாக வாழ்ந்திருங்கள். மனம் போல் வாழ்வு.!///

நம்பிட்டோம்ல

MayVee said...

"பெற்றோர்களின் மனப்போராட்டத்தில் காதலை மனதளவில் விட்டுத்தந்தேன். "
நல்ல விஷயம் பண்ணிங்க ....

where is the party.....

MayVee said...

"சிந்தனையற்ற சில வருடங்கள். ஒன்றுமே நிகழவில்லை."
மன்மதன் அந்த வருடங்களில் துங்கி விட்டார் என்று நினைக்கிறேன் .....

MayVee said...

"ம்ஹூம்.. என்னடா இது? நமக்கு பின்னர் வந்தவனெல்லாம் பைக் வைத்திருக்கிறான். நாமும் வாங்க வேண்டும் என நினைத்தேன். நடந்தது. 2000 வாக்கில் நிகழ்ந்த செல்போன் புரட்சியின் போதே அதை வாங்க வேண்டும் என நினைக்கவுமில்லை. வாங்கவும் முடியவில்லை. பின்னர் தாமதமாக நினைத்தேன், வாங்கினேன்."
இருக்கிறவன் வடை சுடுறான்.....

MayVee said...

"அடடா.. வயதாகிக்கொண்டே போகிறதே? கைநிறைய சம்பளம் வேணுமே.. நல்ல வேலை? நினைத்தேன். நடந்தது. கம்ப்யூட்டர் வேணுமே.. நடந்தது. திருமணம்? நடந்தது. என் நண்பர்களெல்லாம் எங்கே தொலைந்து போனார்கள்? மனம்விட்டு பழக ரசனையான நண்பர்கள் வேண்டுமே.. நினைத்தேன். கிடைத்தார்கள்."
belATED வாழ்த்துக்கள்......

MayVee said...

"நினைப்பதெல்லாமே நடந்தது.. நடக்கும், எண்ணிய எண்ணியபடி நடக்கும்.! எண்ணினால் மட்டுமே நடக்கும். சிறப்பானவற்றையே எண்ணியிருங்கள். சிறப்பாக வாழ்ந்திருங்கள். மனம் போல் வாழ்வு.!"
ஆமாங்க.
நாம வாழ்க்கையை நாம் வாழ்தலே போதும்....
மனம் போல் வாழ்க்கை தானுங்க ...

MayVee said...

nalla padivu....
:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பாசிடிவ் எண்ணம் கொண்ட பதிவாக.. .. இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லி இருக்கலாம் நண்பா..

RAD MADHAV said...

"மனம் போல் வாழ்வுன்னு பெரியவங்க சொன்னது, மனசு போறபடி நாம போறதுக்கில்ல. நல்ல மனசு இருக்குறவங்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும்."

இத நீங்க சீரியஸ் ஆஆ ஆ ஆ...... சொல்றீங்களா, இல்ல மொக்க போட்டேங்களா....

ரசிக்கும்படி இருக்கிறது.

பிளஸ் டூ வில் நாப்பது, கல்லூரியில் (அதுவும் காதலிக்கும் போது) எண்பத்தி இரண்டு. (இதுல ஏதோ உள்குத்து இருக்குது, இருந்தாலும் நம்புறோம்)

இத படிச்சுட்டு எம் பிரண்ட்ஸ் நாலு பேரு, சண்டே அதுவுமா, பைக் எடுத்துட்டு சுத்த கிளம்பிட்டாங்க. அதா ரூட்டு போட்டு விட்டீங்களே. லவ் பண்ணா எண்பத்தி ரெண்டுன்னு. நல்லா இருங்க ராசா.... நல்லா இருங்க...

புதுகைத் தென்றல் said...

enna nalla pathivu potalum kattakadesilyavathu thangs pathi oru panch sollati (thamira special :)) )thamiravuku saapitahu jeeranam aagathu pola.

:))

அன்புடன் அருணா said...

பாவம்பா ரமா.....பதிவிலியே இப்படி வார்றீங்களே...நேரில் ?????அவங்களை உங்களுக்கு எதிரா ஒரு வலைப்பூ ஆரம்பிக்கச் சொல்லப் போறேன்...
அன்புடன் அருணா

vinoth gowtham said...

//'தங்கமணி நன்றாக சமைக்கவேண்டும், சாந்தமானவராக மாறவேண்டும்' //

இது மூட நம்பிக்கை ..

Rajeswari said...

//நினைப்பதெல்லாமே நடந்தது.. நடக்கும், எண்ணிய எண்ணியபடி நடக்கும்.! எண்ணினால் மட்டுமே நடக்கும். சிறப்பானவற்றையே எண்ணியிருங்கள். சிறப்பாக வாழ்ந்திருங்கள். மனம் போல் வாழ்வு.!//

நல்ல இருந்தது
தத்துவம் நம்பர் 1008..

ச்சின்னப் பையன் said...

//இந்த தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை, தும்பிக்கை பதிவெல்லாம் எனக்கு பிடிப்பதேயில்லைங்க.. அந்த மாதிரி பதிவுகளோ, புத்தகங்களோ நான் படிப்பதேயில்லை//

ஏன்யா... நீங்க அதெல்லாம் படிக்க மாட்டீங்க.. நாங்க மட்டும் படிக்கணுமா??? முதியாது... பதிக்க மாத்தேன்... போ

:-)

இளைய பல்லவன் said...

//

vinoth gowtham said...
//'தங்கமணி நன்றாக சமைக்கவேண்டும், சாந்தமானவராக மாறவேண்டும்' //

இது மூட நம்பிக்கை ..
//

நான் மறுக்கிறேன்.

நம்பினார் கெடுவதில்லை. ஆகவே நம்பிக்கை நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்.

நம் தலைமுறையில் இல்லாவிட்டால் கூட அடுத்த தலைமுறையாவது நன்றாக இருக்க வேண்டுமென்று தலைவர் தாமிரா சொன்னதை நம்புவோம் !!!

எம்.எம்.அப்துல்லா said...

//நினைப்பதெல்லாமே நடந்தது.. நடக்கும், எண்ணிய எண்ணியபடி நடக்கும்.! எண்ணினால் மட்டுமே நடக்கும். சிறப்பானவற்றையே எண்ணியிருங்கள். சிறப்பாக வாழ்ந்திருங்கள். மனம் போல் வாழ்வு.!
//


அப்படியே இதை என் குரலில் நீங்கள் உங்களுக்கு படிச்சுக்கங்க அண்ணே

வாழ்க வளமுடன்.

எம்.எம்.அப்துல்லா said...

//ஏன்யா... நீங்க அதெல்லாம் படிக்க மாட்டீங்க.. நாங்க மட்டும் படிக்கணுமா??? முதியாது... பதிக்க மாத்தேன்... போ

:-)
//

haa...haaa...haaaaaa

சரவணகுமரன் said...

எண்ணம் போல் வாழ்க்கை என்பது நிஜம் தான்...

தாரணி பிரியா said...

தங்கமணியை பத்தி ஏதாவது சொல்லலை அப்படின்னா தூக்கம் வராது போல :)

தமிழன்-கறுப்பி... said...

ரொம்பத்தெகிரியமான டிஸ்கி...:)

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருங்கண்ணே...

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

பாபு said...

ரொம்ப லேட்--ஆ வந்திருக்கேன்
எனக்கு அந்த டிஸ்கி
பிடிச்சிருந்தது

ஸ்ரீமதி said...

:))

புன்னகை said...

//சிறப்பானவற்றையே எண்ணியிருங்கள். சிறப்பாக வாழ்ந்திருங்கள். மனம் போல் வாழ்வு!//
மறுக்க இயாலாத உண்மை!

தராசு said...

வந்துட்டார்யா,,, அடுத்த அப்துல் கலாம், "கனவு காணுங்கள் இளைஞர்களே" ன்ற மாதிரி, "நம்புங்கள் நல்லவர்களே" ங்கறாரு, நம்பறோம்.

"ஊழல் இல்லா இந்திய நிர்வாகமும், மாசில்லாத நீரும் காற்றும், குழிகளில்லா சாலைகளும், பூத்துக்குலுங்கும் சோலைகளும், கடமை மறவா காவல் துறையும், பிளாஸ்டிக் பைகளில்லா நகர்புறமும், சுத்தம் நிறைந்த வீதிகளும், சுகாதாரமான சுற்றுப்புறமும், மக்கள் நலனை சிந்திக்கும் அரசியல் வாதிகளும், சாதிகள் இல்லா சமுதாயமும், வியாபாரமில்லா ஆன்மீகமும்,கலப்படமில்லா மளிகைச் சாமான்களும், கடுகளவாவது கதை என்ற ஒன்று காணப்படும் டாக்டர் விஜய் படமும், தங்கமணியை நொங்கு எடுக்காத தாமிரா பதிவும்" இந்த தலிமுறையில் எங்களுக்கு கிடைக்காவிட்டாலும் அடுத்த தலைமுறையிலாவது எங்கள் சந்ததிக்கு கிடைக்கும் என நம்புகிறோம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசிலே வெச்சிங்களே தாமிரா பன்ச்

ரசித்தேன்.

நடக்கும், எண்ணிய எண்ணியபடி நடக்கும்.! எண்ணினால் மட்டுமே நடக்கும்.
எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு
மிகையற்ற உண்மை இது.

நையாண்டி நைனா said...

ஆமா விகடன்லே உங்க பேருலே ஒரு கதை வந்திருக்கே அது நீங்களா?

நானும் வாழ்த்துகிறேன்.

வால்பையன் said...

நீங்க இந்த மாதிரி எழுதுவிங்கன்னு நினைச்சேன்.

எழுதீட்டிங்க!

Saravana Kumar MSK said...

//குறிப்பாக 'தங்கமணி நன்றாக சமைக்கவேண்டும், சாந்தமானவராக மாறவேண்டும்' என்பது போன்ற எண்ணங்கள் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.//

ROTFL..
:))))))))))))

Saravana Kumar MSK said...

// அன்புடன் அருணா said...
பாவம்பா ரமா.....பதிவிலியே இப்படி வார்றீங்களே...நேரில் ?????அவங்களை உங்களுக்கு எதிரா ஒரு வலைப்பூ ஆரம்பிக்கச் சொல்லப் போறேன்...
அன்புடன் அருணா//

அட.. இது சூப்பரா இருக்கே..

Saravana Kumar MSK said...

Me the 50 ;)

பட்டாம்பூச்சி said...

நான் கூட நீங்க என்னுடைய பதிவு ஒன்றிற்கு பின்னூட்டம் போடற மாதிரி நினைத்தேன்.பார்க்கலாம் நடக்கிறதா என்று ;-).

அட சும்மா வாங்க பாஸு.இந்த
பதிவு உங்க ஏரியாதான்.

ப்ரியா said...

கார்க்கி குடுத்த லிங்க் ல இருந்து இங்க வந்தேன்.

//'தங்கமணி நன்றாக சமைக்கவேண்டும், சாந்தமானவராக மாறவேண்டும்//
:-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் திரு. தாமிரா

http://thooya.blogspot.com/ (இதுல பார்த்தேன்)

மணிகண்டன் said...

தாமிரா - தமிழ்மண விருதுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

ரோஜா காதலன் said...

தமிழ்மணவிருது பெற்ற தாணைத்தலைவா ! வாழ்த்துக்கள் !

ரோஜா காதலன் said...

நல்ல பதிவு...

Mahesh said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் தாமிரா !!!!

மேலும் பல சிகரங்களைத் தொடுங்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

தமிழ்மணவிருதுக்கு வாழ்த்துகள் அண்ணே. நீங்களும், குசும்பனும் முதல் இடம் பெற்றது நான் பெற்ற சந்தோஷத்தை அளித்து விட்டது. இப்டியே பிக்கப் பண்ணி போய்க்கிட்டே இருங்க
:)

Anonymous said...

வாழ்த்துகள் தல

தாமிரா said...

பதிவு போட்டு ஒரு வாரம் ஆகப்போவதால் எல்லோருக்கும் தனித்தனியே நன்றி சொல்லி இடத்தை நிரப்பாமல் அனைவருக்கும் மொத்தமாக ஒரே பின்னூட்டத்தில் மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்மணவிருது உங்களால் சாத்தியமாயிற்று. தொடர்ந்து உங்கள் ஊக்கத்தை எதிர்நோக்கி அன்புடன் தாமிரா.

சந்தனமுல்லை said...

ரொம்ப பாசிடிவ் பதிவு! அந்த டிஸ்கி கொஞ்சம் இல்லை..ரொம்பவே ஓவர்! :-)

வனம் said...

வணக்கம் தாமிரா

ம்ம்ம் நல்லாத்தான்யா போகுது.

எனக்கு இஞ்ச கொஞ்சம் அதிக வேலை அதான் என்னால் தொடர்ந்து படிக்க இயலவில்லை

நானும் நிணைக்கின்றேன் ஆனால் முடியவில்லை, அதான் வலைப்பூ தொடங்கிவிட்டு இன்னும் ஏதும் வலையேற்றாமல் இருக்கின்றேன்

பார்க்களாம்
நன்றி
இராஜராஜன்

மங்களூர் சிவா said...

சூப்பர்ணா!

மங்களூர் சிவா said...

/
குறிப்பாக 'தங்கமணி நன்றாக சமைக்கவேண்டும், சாந்தமானவராக மாறவேண்டும்' என்பது போன்ற எண்ணங்கள்
/

மேற்கே சூரியன் உதிச்சாலும் இதெல்லாம் நடக்காதுன்னு தெரியாதா என்ன???

aathishankaran said...

ரொம்ப நல்ல இருந்துச்சு ....
தன்னம்பிக்கை வந்துச்சோ இல்லையோ "மனம் போல் வாழ்வு" கு என்ன அற்தம் நு புரிஞ்சுது :)