Friday, February 27, 2009

சில நன்றிகள்.!

தமிழ்மண விருதுகள்

ஒரு வழியாய் தமிழ்மண விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்ப அதிர்ச்சியாய் ‘சிக்ஸ் சிக்மா: ஓர் அறிமுகம்’ என்ற எனது பதிவு அதற்குரிய பிரிவில் முதலிடத்தை வென்றுள்ளது. சில முக்கிய பதிவர்கள் போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்தது என் போன்றோர் வெல்ல வாய்ப்பாக அமைந்திருக்கலாம். இருப்பினும் உண்மையைச் சொல்வதாக இருந்தால் முதலிரண்டு இடங்களை விடவும் டாப் 10ல் ஒரு பதிவாவது, குறிப்பாக நகைச்சுவைப்பிரிவில் வரவேண்டும் என்றே நான் விரும்பினேன். அது நிகழவில்லை. இருப்பினும் குசும்பன், சுகுணாதிவாகர், டுபுக்கு, அபிஅப்பா, கார்க்கி போன்ற எக்ஸ்பர்ட்டுகளிடமே தோற்றிருக்கிறேன் என்பது பெருமையே. அந்த இடத்தை அடைய திறனும், உழைப்பும் இன்னும் தீவிரமாக வேண்டும் என்பதையும், செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் உணரமுடிகிறது. மேலும் டாப் 10ல் இரண்டல்லது 3 இடங்களையும் பிடித்த பரிசல்காரன், அப்துல்லா, இராம், ராமலக்ஷ்மி, புதுகைத்தென்றல், ரிஷான், உண்மைத்தமிழன் போன்ற பல பதிவர்களையும் பொறாமை வழியும் கண்களோடு பார்த்துகொள்கிறேன். அதிலும் டாக்டர் புரூனோ மூன்று பிரிவுகளிலுமே முதலிடங்களை வென்று சாதனை படைத்து பிரமிக்கவைக்கிறார். தமிழ்மணம், முதல் பத்து இடங்களை வென்றவர்கள், பங்கு கொண்டவர்கள், வாக்களித்தோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். நன்றி.

ஆஸ்கர் ரஹ்மான்

சரியான காலத்தை தவறவிட்டாலும் சில முக்கியவிஷயங்களை பகிர்ந்துகொள்ளாமல் அடுத்து பயணிக்கமுடியாது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ஒரு சிறந்தபடம் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை எனினும், இந்தியாவில் உள்ள அவலங்களை மட்டுமே படைப்புகளாக்குவதிலும், அதையே சிறப்பானவை எனக்கொண்டாடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. மேலும் களம் தவிர்த்து இது முழுக்க முழுக்க ஒரு ஆங்கிலப்படமே. ஆகவே ‘டைட்டானிக்’ 11 விருதுகளை வாங்கியதில் என்ன மகிழ்ச்சியோ அதே மகிழ்ச்சிதான் ‘ஸ்லம்டாக்’ 8 விருதுகளை வாங்கும் போதும் ஏற்பட்டது. ஆனால் ஒரு பெரிய கொண்டாட்டத்துக்கு உரிய செய்தி ஏதெனில் அதில் டெக்னிகல் பங்களிப்புகளைச் செய்த நமது கலைஞர்கள் மூன்று ஆஸ்கர்களை வென்றதுதான். அவர்கள் எந்த பிற தேச கலைஞர்களுக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகறிய ஓங்கி ஒலித்துவிட்டு வந்தது, நம்மை பெருமை கொள்ளச்செய்தது. நமது ஒளிப்பதிவாளர்கள் ஆங்கிலப்படங்களில் பணியாற்றினால் வருடாவருடம் ஆஸ்கரை நமக்கு ரிஸர்வ் செய்து விட வேண்டியதுதான். (அனைத்து தொழில்நுட்பங்களிலும் மிகச்சிறப்பாகவே இருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன், கதை மற்றும் இயக்கத்தைத்தவிர.) இந்த அரிய ஆரம்பத்தினை செய்துவந்த ஏஆர் ரஹ்மான், ரசூல் பூக்குட்டி இருவருக்கும் நாம் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இணைய இணைப்பு

அலுவலகத்தில் சமீபத்தில் சந்தித்திராத வகையில் நம்மை ‘மிதிச்சு நவுட்டி’க்கொண்டிருப்பதால் கடந்த சில நாட்களாக இணையத்தின் அருகில்கூட வர இயலவில்லை என்பதை அறிந்திருப்பீர்கள். மேலும் சில மாதங்களுக்கு இந்த இடைவெளி நீண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் துன்பத்திலும் ஒரு நற்செய்தியாய் வீட்டுக்கு ஒருவழியாய் இணைய இணைப்பு வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே மாலை நேரங்களில் மட்டும், ரமாவின் அனுமதி கிடைத்தால் தொடர்ந்து இயங்க வாய்ப்பிருக்கிறது. இந்த சிறிய இடைவெளியைக்கூட பொறுத்திருக்கமுடியாமல் தொலைபேசியிலும், மெயிலிலும் வந்து விசாரித்த அன்பு நெஞ்சங்களுக்கும் (நான் எதிர்பார்த்து ஒரே ஒருவர்தான் இன்னும் விசாரிக்கவில்லை, அவரே பின்னூட்டத்தில் ஒப்புக்கொண்டுவிடவும். இல்லாவிட்டால் நானே பெயரைச் சொல்லிவிட நேரும். ஜாக்கிரதை.!), சில பல காரணங்களுக்காக தொடர்ந்து என் பதிவுகளுக்கு லிங்க் கொடுத்து பெருமைசெய்யும் அன்பு உள்ளங்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றி.

அனுஜன்யா

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறை, ஆனால் ஒத்த ரசனை, அன்பு மனம். இந்த அரிய நட்புக்கூட்டத்தைத் தந்தது பதிவுலகம். அனுஜன்யாவின் சமீபத்திய சென்னை விசிட்டில் என்னையும் இணைத்துக்கொண்டு அன்பு செய்த அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றிகள்.

டிஸ்கி :
ஒரு வேளை இரவுகளில் தொடர்ந்து பதிவுகள் படையெடுக்கலாம். சில தலைப்புகளை முன்பே தருகிறேன்.. சும்மா ஜாலிக்காக.. யாராவது காப்பியடிச்சீங்கன்னு தெரிஞ்சது தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு.! ‘செல்வேந்திரனுக்காக..’ ‘குறும்படம் எடுப்பது எப்படி?-இறுதிப்பகுதி’ ‘எஸ்.. 5எஸ்’ ‘சொல்லாத வார்த்தைகள்’ ‘கையளவு மொக்கை’ ‘ரமா எழுதும் கடிதம்’..... எதை முதலில் எழுதலாம் என நீங்களே சஜஸ்ட் பண்ணுங்கள்.

.

52 comments:

Cable Sankar said...

வாழ்த்துக்கள் தாமிரா..உங்களது சிக்ஸ் சிக்மா முதலிடம் வந்திருக்கிறதை பார்த்து ரொம்ப சந்தோசம்

புன்னகை said...

வாழ்த்துக்கள் தாமிரா
இன்னும் விரிவா எழுதுவிங்க நினைச்சேன் அப்புறம் தான்
காப்பி ரைட்ஸ் ஞாபகம் வந்தது
பொதுவான குவாலிட்டி கண்ட்ரோல்
பத்தி எழுதுங்களேன்
(ங்கொயால நானே நேரம் இல்லைனு
சொல்லிகிட்டு இருக்கேன்)ன்றிங்களா
நேரம் கிடைக்கும் போது எழுதுங்க

புருனோ Bruno said...

//அவர்கள் எந்த பிற தேச கலைஞர்களுக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகறிய ஓங்கி ஒலித்துவிட்டு வந்தது, நம்மை பெருமை கொள்ளச்செய்தது.//
உண்மை

// நமது ஒளிப்பதிவாளர்கள் ஆங்கிலப்படங்களில் பணியாற்றினால் வருடாவருடம் ஆஸ்கரை நமக்கு ரிஸர்வ் செய்து விட வேண்டியதுதான். (அனைத்து தொழில்நுட்பங்களிலும் மிகச்சிறப்பாகவே இருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன், கதை மற்றும் இயக்கத்தைத்தவிர.)//

இதுவும் உண்மை. நல்ல கதையுள்ள படங்கள் தமிழில் வந்த போது (1990 வரை) தொழிற்நுட்ப நீதியாக கவனம் செலுத்த வில்லை.

தற்பொழுது கதையை தேட வேண்டி உள்ளது.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் தமிரா..

சிக்ஸ் சிக்மா பற்றி மிக அழகாக எழுதியிருந்தீர்கள். அதனால்தான் அதற்கு தமிழ்மணத்தின் முதலிடத்தைப் பெற்றது.

மேன் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் தாமிரா..

என்னுடைய சாய்ஸ் .. “சொல்லாத வார்த்தைகள்” இதுதான்.

செல்வேந்திரன் said...

அடடே வாழ்த்துக்கள் அண்ணா...

இங்க என் 'கொதவாளைலய சமுட்டுதானுவோ' அதாங் கொஞ்சம் தாமசம்.

எட்வின் said...

வாழ்த்துக்கள் அண்ணே...

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் தாமிரா அண்ணே..

முதன் முதலா உங்க கடைக்கு வந்திருக்கேன்.

அத்திரி said...

அண்ணே வாழ்த்துக்கள்............ நேற்று மதியம் உங்களுக்கு போன் செய்தேன் நீங்கள் கட் பண்ணிவிட்டீர்கள்..................

அத்திரி said...

அண்ணே கீழப்பாவூர் மேட்டரையும் சேத்து போடுங்க............

அனுஜன்யா said...

Six Sigma - ஸ்லம் டாக் போலவே முன்பே தெரிந்த run away winner. வாழ்த்துகள் தாமிரா. எனக்குத் தெரிந்து உங்கள் ATM மற்றும் குறும்படம் (1&2) இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை பதிவு. குசும்பன் மிகவும் உழைக்க வேண்டியிருக்கும் இதனை மிஞ்ச.

//(நான் எதிர்பார்த்து ஒரே ஒருவர்தான் இன்னும் விசாரிக்கவில்லை, அவரே பின்னூட்டத்தில் ஒப்புக்கொண்டுவிடவும். இல்லாவிட்டால் நானே பெயரைச் சொல்லிவிட நேரும். ஜாக்கிரதை.!), //

இப்படி போட்டுவிட்டு கீழேயே என் பெயர், புகைப்படம் (ரயில் நிலையத்தில் பார்த்திருக்கிறேன்) போட்டுவிட்டீர்கள். ஒப்புக்கொள்கிறேன், கூப்பிட்டு விசாரிக்கவில்லை. ஆனால், கார்க்கியிடம் விசாரித்தேன்.

நீங்கள் என்னை டார்ச்சர் செய்ததை என் பதிவில் எழுதியிருக்கிறேன். டைம் கெடைக்கும்போது வாங்க.

அனுஜன்யா

பாபு said...

வாழ்த்துக்கள்

‘ரமா எழுதும் கடிதம்’ நம்ம சாய்ஸ்

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் தாமிரா! உங்கள் அடுத்த பதிவுகளுக்காக வெயிட்டிங்!

கார்க்கி said...

நான் ஃபோன் பண்ணிவிட்டேம்ப்பா

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் தாமிரா

தாமிரா said...

இதெல்லாம் ரொம்ப அநியாயம்ங்க.. மற்ற பதிவுகளுக்குப் போய்தான் பின்னூட்டம் போடமுடியவில்லை. நம்ப பதிவுக்கு வருபவர்களுக்கு வருபவர்களுக்குக்கூட நன்றி சொல்லலைன்னா எப்பிடி? அந்த‌ள‌வு பிஸின்னு சொன்னா ந‌ம்ப‌வா போறீங்க‌..

நன்றி கேபிள்.! (பொறாமை லிஸ்ட்டில் உங்க‌ பெய‌ர் விட்டுப்போச்சு ச‌ங்க‌ர்)
ந‌ன்றி புன்ன‌கை.! (தொடர்ந்து துறைசார்ந்த விஷயங்களையும் அள‌வோடு எழுதுவேன்)
ந‌ன்றி டாக்ட‌ர்.!

ந‌ன்றி இராகவன்.! (உங்களைப்போன்றோரின் ஆத‌ர‌வே வெற்றிக்குக்கார‌ண‌ம் என்ப‌தை அறிவேன்)

ந‌ன்றி செல்வா.!
ந‌ன்றி எட்வின்.!
ந‌ன்றி செய்யது.! (தொட‌ர்ந்து வாருங்க‌ள் தோழ‌ரே!)
ந‌ன்றி அத்திரி.! (கீழ‌ப்பாவூர் மேட்ட‌ரை விட‌வே மாட்டீங்க‌ளா..)

ந‌ன்றி அனுஜ‌ன்யா.! (குசும்பன் மிகவும் உழைக்க வேண்டியிருக்கும் இதனை மிஞ்ச.// பாச‌த்துக்கும் ஒரு அள‌வில்லையா?)

ந‌ன்றி பாபு.!
ந‌ன்றி சந்தனமுல்லை.!
ந‌ன்றி கார்க்கி.!
ந‌ன்றி முர‌ளி.!

Massattra Kodi said...

வாழ்த்துக்கள் தாமிரா. "குறும்படம் எடுப்பது எப்படி?-இறுதிப்பகுதி" ஆவலுடன் waiting.

அன்புடன்
மாசற்ற கொடி

Anonymous said...

வாழ்த்துக்கள் தாமிரா..

Anonymous said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

25 போட்டாச்சு. அப்புறம் வாரேன்.

தாமிரா said...

அனுஜன்யா : டிஸ்கியிலேயே சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். உங்கள் அனுமதியில்லாமலேயே உங்கள் புகைப்படத்தை வெளியிட்டமைக்கு மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். இரவு 12 மணிக்கு உங்களை தொல்லை செய்ய விருப்பமில்லை..

நன்றி மாசற்றகொடி.!
நன்றி ஆனந்த்.! (என்ன ஆனந்த்.. இப்பிடி இறங்கிட்டீங்க.?)

Anonymous said...

தாமிரா said...
நன்றி ஆனந்த்.! (என்ன ஆனந்த்.. இப்பிடி இறங்கிட்டீங்க.?)
//
நண்பருக்காக இத கூட செய்ய மாட்டோமா? நாங்கெல்லாம்...சரி சரி பிறகு வர்ரேன்.

அனுஜன்யா said...

இதுக்கெல்லாம் எதுக்கு தாமிரா அனுமதி? என்னோட மிக மிக நெருக்கமான நண்பர் இந்த போட்டோ நல்லா இருக்கு; அதனால நீங்க யூத்தான் அப்பிடீன்னு கொள்கை அளவுல ஒப்புக்கொண்டிருக்கிறார். உங்களுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.

அனுஜன்யா

தராசு said...

வாத்துக்கள் தாமிரா,

உங்களின் நீண்ட மௌனம் கண்டு நானும் ஆச்சரியமுற்றேன்.

உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள என்னிடம் உங்களது எண் இல்லை.

உண்மையாக சொல்லப்போனால், இன்று காலை முதல்வேலையாக கணினியை திறந்தவுடன், "தாமிராவை காணவில்லை, தங்கமணியுடன் எஸ்கேப்பா?" என்று ஒரு பதிவு இட வேண்டும் என நினைத்தேன். ஆனால் சனிக்கிழமையானதனாலும், இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் உள்ள நேர வித்தியாசத்தில் நீங்கள் முந்திக்கொண்டு அறிவித்து விட்டீர்கள்.

மறுபடியும் தமிழ்மண விருதுக்காக வாழ்த்துக்கள்.

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் அண்ணே!

வெண்பூ said...

வாழ்த்துகள் தாமிரா...

Anonymous said...

வாழ்த்துக்கள் தாமிரா.

அனுஜன்யாவை இளமைத் தோற்றத்துடன் படம் எடுத்ததற்கு வாழ்த்துக்கள். போட்டோஷாப்பில் அடிட் செய்திருப்பது நன்றாகத் தெரிகிறது :-)))))

ச்சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள்!!!

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அண்ணே..!

தாமிரா said...

மேலான அன்புக்கு நன்றி தராசு.!
நன்றி தமிழ்பிரியன்.!
நன்றி வெண்பூ.!
நன்றி வேலன்.! (ஏன் இப்பிடி?)
நன்றி ச்சின்னவர்.!

தமிழன்-கறுப்பி... said...

அனுஜன்யா அங்கிளைப்பற்றி எனக்கு தெரியும் நீங்க வேற யாரோ படத்தை போட்டிருக்கிறிங்க...:)

தாமிரா said...

நன்றி தமிழன் கறுப்பி.!

ஆதவா said...

வாழ்த்துகள் தாமிரா... தமிழ்மண விருதுக்கு...

ரஹ்மான் பதிவும் கவர்ந்தது..

அனுஜன்யாவை எனக்குத் தெரியாது!!! இனிமேல் தெரிந்து கொள்கிறேன்..

அன்பு
ஆதவா

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் தாமிரா,
வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பரே :)

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள்

ஸ்ரீ said...

Congrats na. Unga pera pathadhum romba sandhosa patten :)

Ramesh said...

வாழ்த்து்கள் தாமிரா!

How to know, whether anyone voted for me? I did not bother to click the link to vote.

மிஸஸ்.டவுட் said...

வாழ்த்துக்கள் தாமிரா,
உங்க பதிவுகளை தவற விடாமல் படிக்கனும்னு தான் நினைக்கிறேன், எப்படியோ மிஸ் ஆயிடுதே! சிக்ஸ் சிக்மாவுக்கு விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

கும்க்கி said...

விருது வாங்கினதுக்கு நானும் ஒரு சலாம் போட்டுகிறேன் சார்..

கும்க்கி said...

ஒரு மிஸ்டு கால் கூடவா செய்யகூடாது....இருக்கட்டும் .ரொம்ப பயம் ஆகாது.

தாமிரா said...

நன்றி ஆதவா.!
நன்றி ரிஷான்.!
நன்றி டிவிஆர்.!
நன்றி ஸ்ரீ.!
நன்றி ரமேஷ்.! (அது முடியாதுனு நெனைக்குறேன்.. இருந்தாலும் யாராவது தெரிஞ்சவுங்கள கேட்டா பரவாயில்ல..)

நன்றி டவுட்.!
நன்றி கும்க்கி.! (என்னைப்பற்றிதான் தெரியுமே உங்களுக்கு..)

MayVee said...

அப்ப உண்மையிலே அனுஜன்யா அங்கிள் தானா??????

போட்டோ ல யூத் அக தான் இருக்காரு

MayVee said...

வாழ்த்துக்கள் தமிழ்மணம் விருதுக்கு........

MayVee said...

ARR யின் புகழ் மற்றும் வெற்றி மேம் மேலும் வளர
வாழ்த்துவோம்.......

(ARR நாம friend தான் .....
அன்று ரொம்ப கெஞ்சி கேட்டார்ன்னு ஒரு tune சொல்லி தந்தேன்......
அறியா சிறுவன் ....
அந்த tune யை வைச்சு ஆஸ்கார் வாங்கிட்டான்.....
சரி சரி....
ப்ரீ யா வுடுவோம்.....
என்ன இருதாலும் நாம பையன் தானே......
சொல்லி இருந்த நானே ஒரு நல்ல கார சந்தையில் இருந்து வாங்கி தந்து இருப்பேன்)

MayVee said...

சிக்ஸ் சிக்மா......

ada quality control ......
naama area.....

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள் தாமிரா..
அன்புடன் அருணா

வால்பையன் said...

உங்களுடய சிக்ஸ்சிக்மா மிக எளிமையான தொழில் நுட்ப பதிவு.

தகுதி உள்ள படைப்பு தான் முதலிடம் வரும். அதை தெரிந்து தான் நான் கலந்து கொள்ளவேயில்லை

பட்டாம்பூச்சி said...

பாராட்ட கொஞ்சம் லேட் ஆகிடுச்சு :)).கலக்கிடீங்க போங்க!!!

வாழ்த்துகள்!!!

Saravana Kumar MSK said...

//பாராட்ட கொஞ்சம் லேட் ஆகிடுச்சு :)).கலக்கிடீங்க போங்க!!!
வாழ்த்துகள்!!!//

Rippeettu.. :)