Wednesday, March 18, 2009

நீ, நான்.. அவள்.! (150வது பதிவு)

டிஸ்கி : இது எனது நூற்றி ஐம்பதாவது பதிவு. இதுவரை எழுதியதில் உருப்படியானது எனக் கேட்டால் ஒரு பதினைந்தாவது தேறுமா என்றே சந்தேகமாக இருக்கிறது. அந்தப் பதினைந்தில் முதலிடம் எதற்குத் தருவீர்கள் என்று என்னை யாராவது கேட்டால் இதற்குத்தான் என்பேன். இந்த தமிழ்மண நட்சத்திர வாரத்தைப் பயன்படுத்தி இன்னும் நிறைய வாசகர்களிடம் கொண்டு செல்லும் நோக்கிலும், புதிய நண்பர்களுக்காகவும் இதை மீள்பதிவு செய்கிறேன். ஏற்கனவே வாசித்தவர்களையும் கவரும் நோக்கில் சில திருத்தங்களையும் செய்துள்ளேன். நன்றி.

மங்கையராய் பிறப்பது குறித்து பாரதி அதிசயத்திருக்கிறான். மேலோட்டமாக எதையும் சொல்லியவனில்லை அவன். உணர்வுப்பூர்வமாக சிந்தித்துப்பார்த்திருக்கக்கூடும். ஆண்களிடம் சிக்கி காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்டு, உரிமை மறுக்கப்பட்டு ஒரு கட்டத்தில் சிந்தனையே மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழ்ந்த பெண்ணினமாய் பிறக்க எந்த நியாயத்தினை கண்டு கொண்டான் அவன்.? பெண்களின் இந்த வேதனை நீதியற்ற திட்டமிட்ட செயல். மொழி, இனம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மனிதர்கள் காலங்காலமாய் தன்னைத்தானே ஒடுக்கிக்கொண்டும் அழித்துக்கொண்டும் உள்ளனர். அதைப்போன்றதே பெண்ணடிமைத்தனமும். அடிமைத்தனம் எல்லை தாண்டும்போது புரட்சி தோன்றும் என்பது விதி. அதுவே இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவர்கள் இன்னும் சில காலங்களில் தங்களை மீட்டெடுப்பார்கள். அதுவல்ல போற்றுதலுக்குரிய விஷயம். பிறகு எதை பாரதி குறித்திருக்கக்கூடும்?

ரசவாதம் என்பது என்ன.?

ஏதோ மகிழ்ச்சி அல்லது துக்கம்.. அதை வெளிப்ப‌டுத்த‌ வார்த்தைக‌ள‌ற்றுப் போகிற‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில். சிந்த‌னை தோற்று இப்ப‌டியே இருந்துவிட‌மாட்டோமா.. காத‌ல் போல‌.. தியான‌ம் போல.. என்று தோன்றுகிறது. வேறெதுவும‌ற்று ஒற்றைச்சிந்த‌னையில் மன‌ம் காற்றிலே மித‌க்கிற‌து. யாரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாத‌ வார்த்தைக‌ளில்லாத‌ உண‌ர்ச்சிப் பெருக்கு என்று வைத்துக்கொள்ள‌லாமா?

அப்ப‌டியொரு வாய்ப்பைப்பெறுகிறாள் பெண். அதன் உச்சமாக த‌ன்னுள்ளேயே அதை நிக‌ழ்த்துகிறாள். அதை அவ‌ளால் ம‌ட்டுமே உண‌ர‌முடிகிற‌து. அவ‌ளே நினைத்தாலும் கூட‌ அதை யாருட‌னும் ப‌கிர்ந்து கொள்ள‌முடிய‌வில்லை. காத‌ல் பெருக்கில் சில சமயங்களில் சொல்ல‌ முய‌ன்று தோற்றுக்கொண்டேயிருக்கிறாள். அதை உண‌ரும் வ‌ர‌ம் ஆணுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை. ப‌ரிதாப‌த்துக்குரிய‌வ‌ன் அவ‌ன். அவளோ சில‌ உயிர்த்துளிக‌ளில் இருந்து உயிரை சமைக்கத்துவங்குகிறாள். த‌னிமையில் சிரித்துக்கொள்கிறாள். சிலிர்த்துக்கொள்கிறாள். ம‌கிழ்ச்சியையும் சிரித்துதானே வெளிப்ப‌டுத்த‌வேண்டிய‌துள்ள‌து. குறுகுறுவென‌ உண‌ர்கிறாள். சிரிப்பு அள்ளிக்கொண்டு போகிற‌து..

த‌ன்னையே வேறாக‌ உண‌ர்கிறாள். அதுவ‌ரை உண‌விலே விருப்ப‌ம் கொள்ளாது தன்னை அழகிய மேனியளாய் வைத்திருந்த‌வ‌ள் த‌ன்னை தீராத‌ ப‌சிக்காரியாக‌ மாற்றிய‌து எதுவென‌ சிந்திக்க‌ த‌யாரா‌க‌யில்லாம‌ல் உண‌வை உண்டுகொண்டேயிருக்கிறாள். உண்டுமுடித்து கைக‌ழுவிக் கொண்டிருக்கும்போதே ப‌சியின் அடுத்த‌ கிள‌ர்ச்சியை உண‌ர்கிறாள் ஒருத்தி. அதுவ‌ரை எள்ளல்களைக் க‌ண்டுகொள்ளா‌து உண்டும‌கிழ்ந்த‌வ‌ள், உண‌வின்றிக்கிட‌க்கிறாள் இன்னொருத்தி நாட்க‌ண‌க்காய்.. நீரும்கூட‌ அடுத்த‌நிமிடமே ஒவ்வாது வாந்தியாக வெளியேறுகிற‌து. அடிவ‌யிற்றிலிருந்து கிள‌ம்பும் புல்ல‌ரிப்பு தலை வ‌ரை கிறுகிறுக்க‌ச்செய்கிற‌து. சாய்ந்துகொள்ள‌ க‌ண‌வ‌ன் தோள் தேடுகிறாள். கொடுப்ப‌வ‌ன் கொஞ்ச‌மாயேனும் பாக்கிய‌ம் செய்த‌வ‌ன்.

வ‌யிறு மேடுறுகிற‌து. த‌ன்னையே அதிச‌யித்துக்கொள்கிறாள், அற்ப‌ விஷ‌ய‌ங்க‌ளும் ஆர்வ‌த்தை தூண்டுகிற‌து. காந்த‌ள்ம‌ல‌ர் எப்ப‌டியிருக்கும் என்ற‌ ச‌ந்தேக‌ம் எழுகிற‌து. த‌க்காளி ஊறுகாய் எப்ப‌டியிருக்கும்? ஆரஞ்சு ஏன் இப்படி புளிக்கிறது? இர‌ண்டு கால்க‌ளிலும் கார‌ண‌மேயில்லாம‌ல் அரிப்பெடுக்கிற‌து. அவ‌ள் கைக‌ளைத்த‌டுத்து அந்த‌க்கால்க‌ளுக்கு ம‌ஞ்ச‌ள்பூசி ம‌கிழ்கிற‌வ‌னுக்கு சொர்க்க‌த்தின் க‌த‌வுக‌ளில் முத‌ல் தாள் திற‌க்கிற‌து. அதிகாலை விழிக்கும் வ‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ள் ஏன் இன்னும் உற‌ங்கிக்கொண்டிருக்கிறாள். இவ‌ள் என்ன நேற்று நான் கண்ட என் ம‌னைவிதானா? இவ‌ள் முக‌ம் நான் இதுவ‌ரை க‌ண்ட‌து போலில்லையே, சாள‌ர‌ங்க‌ள் அடைக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ அறையில் இவ‌ள் முக‌த்துக்கு ம‌ட்டும் எங்கிருந்து வ‌ருகிற‌து இந்த‌ ஒளி.?

எட்டும‌ணிவ‌ரைக்கும் இன்ப‌மாய் தூங்கு‌ப‌வ‌ளுக்கு என்ன‌வாயிற்று இன்று? நால‌ரை ம‌ணிக்கே என் கால்விர‌ல் ந‌க‌ங்க‌ளை முத்த‌மிட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாளே. அவ‌ள் கொஞ்ச‌கால‌ம் தேவ‌தையாய் வாழ‌ வ‌ர‌ம்பெற்ற‌வ‌ள். நீ அதிச‌ய‌த்துக்கொண்டே கிட... அற்ப‌ மானுட‌ன் நீ.! வேண்டுமானால் த‌வ‌மிருந்து சில‌ வ‌ர‌ங்க‌ளைப்பெற்றுக்கொள். அவ்வ‌ள‌வே உன‌க்கு வாய்த்த‌து. ஒவ்வொரு நாளும் வ‌ள‌ர்த்தெடுக்கிறாள். கால்க‌ளின் அரிப்பு நின்ற‌பாடில்லை. சிறிது வீக்க‌மும் தெரிகிற‌தே.. இன்னும் தலைசுற்றிக்கொண்டு வருகிறதே.. உமா இப்ப‌டியெல்லாம் சிர‌ம‌ப்ப‌ட‌வேயில்லையாமே.. ம‌ல்லாந்து ப‌டுக்கச்சொல்லி முதுகு வ‌லிக்கிற‌‌து. என் செல்ல‌த்துக்கு மூச்சு திண‌றுமோ? வ‌ல‌ப்புற‌மே சாய்ந்துப‌டுக்கிறாள். சில நிமிடங்களிலேயே எழ‌வேண்டும் போல‌யிருக்கிற‌து. ஒருக்க‌ளித்து எழுகிறாள். ப‌டுக்க‌வேண்டும் போல‌யிருக்கிற‌து.

இன்னும் எவ்வ‌ள‌வு தூர‌ம்தான் இந்த‌ வ‌யிறு வ‌ள‌ரும்? சுருக்க‌ங்க‌ள‌ற்ற ப‌லூனின் மேற்ப‌ர‌ப்பாய் தொட‌வும் ப‌ய‌மாயிருக்கிற‌து. அவ‌ள் உன்னை முத்த‌மிட்டு சிரிக்கிறாள். க‌ட்டிக்கொள் என்கிறாள். க‌ட்டிக்கொள்.. அது தேவ‌தை தானாக‌வே வ‌ழ‌ங்கும் வ‌ர‌ம். அந்த‌ மார்ப‌க‌ங்க‌ள் முன்ன‌ர் போல‌ இல்லையே.. கொஞ்ச‌ம் ப‌ய‌மாக‌வும் இருக்கிற‌‌து. ப‌ய‌ப்ப‌டாதே.. அவ‌ள் உன்னை அழைத்துச்செல்வாள்.

ஒரு பொன்நாளில் க‌த‌ற‌க்க‌த‌ற‌ பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். தேவ‌தை இப்போது அவ‌ளிட‌மிருந்து கொஞ்ச‌ம் இட‌ம்மாறி அவ‌ள் பிள்ளையைச்சேருகிற‌து. இப்போதும் பெருமை அவ‌ளுக்கே.. தேவ‌தையை பெற்ற‌வ‌ளாகிறாள். நீ அனைத்தையும் வேடிக்கைதான் பார்க்க‌முடியும். பிர‌ச‌வ‌ப்ப‌டுக்கையில் நைந்துகிட‌க்கும் அந்த‌ப்பெண்ணிட‌ம் இப்போது உன் ம‌னைவியைப்பார்ப்பாய். தேவதை அடையாளங்களற்ற அவளை கொஞ்ச‌ம் ப‌த‌ற்ற‌ம் த‌ணிந்து நெருங்கும் தைரிய‌ம் வ‌ரும் உன‌க்கு. சொர்க்கத்தின் மற்றொரு தாளும் திற‌க்க‌வேண்டுமெனில் அவ‌ளில் காய்ந்த‌ உத‌டுக‌ளில் முத்த‌மிட்டுக்கொள்.

வ‌லிக்குமோ என்று ப‌ய‌ந்துகொண்டிருந்த‌வ‌ளின் மார்புக‌ளிலிருந்து தானாக‌வே பால் க‌சியும். க‌ண்க‌ள் திற‌க்காத‌ சிசுவின் மென்மையான‌ உத‌டுக‌ளா அவ‌ளைக்காய‌ம் செய்ய‌ப்போகிற‌து.? வெட்குவாள்.. எப்போது க‌ற்றாள் இவ‌ள்.? குழந்தையை அரவ‌ணைக்க.. அவ‌ளின் கைக‌ளில் அது சிரிப்ப‌தைப்போலுள்ள‌து. மூன்றாம் நாள் வெந்நீர் குளித்துவ‌ருகிறாள். நீ கொஞ்ச‌ம் பெருமூச்சு விட்டுக்கொள்வாய். ஆட்க‌ளில்லாத‌ போது அருகில‌ழைத்து பிள்ளையை ம‌டியிலிட்டு உன் தோள் சாய்வாள். உன‌க்கு ம‌ற்றொரு வாய்ப்பு.

Couple%20and%20baby

வேலையை கார‌ண‌ம் காட்டி பிள்ளையின் மாத‌ வ‌ளர்ச்சியை க‌ண‌க்கிட்டுக்கொண்டிருப்பாய் நீ. அவ‌ள் பிள்ளையின் நொடிக‌ளோடு வாழ்ந்துகொண்டிருப்பாள். ம‌ல‌த்தை க‌ழுவிமுடியாம‌ல் துடை‌த்தெடுப்பாள். அது க‌ண்விழிக்கும் ஒவ்வொரு முத‌ல்நொடியிலும் இவ‌ள் முக‌ம் அதைப்பார்த்திருக்கும். பாலின் அள‌வை எப்போது க‌ண்டுகொண்டாள் இவ‌ள்? குடித்துக்கொண்டிருக்கும் குழ‌ந்தையை மார்பிலிருந்து பிடுங்கியெடுப்பாள். இன்னும் கொடுத்தாலென்ன‌ என்பாய் நீ. அல‌ட்சிய‌மாய் சிரிப்பாள். உனக்கு குழ‌ந்தை அழுவ‌து ம‌ட்டும்தான் தெரிகிற‌து. பரபரப்பாகிறாய். அவ‌ளுக்கு அத‌ன் அர்த்த‌ம் விள‌ங்குகிற‌து. அந்த‌ அழுகை மொழியினை எப்போது அறிந்தாள் இவ‌ள்?

எப்போது விக்க‌லெடுக்கிற‌து? எப்போது தும்ம‌ல் விழுகிற‌து? எப்போது எத்த‌னை சொட்டுக‌ள் எந்த‌ ம‌ருந்தென‌ தெரிகிற‌து அவ‌ளுக்கு.. எப்போது முக‌ம் பார்க்கிறாள் அந்த‌ குட்டித்தேவ‌தை? எப்போது கைகால்க‌ளை அசைக்கிறாள்? எப்போது கை நீட்டுகிறாள்? எப்போது முத‌ல்முறையாக‌ புர‌ள்கிறாள்? ஒரு பொருளை கைக‌ளால் எடுப்ப‌து எப்போது? விர‌ல்க‌ளால் எடுப்ப‌து எப்போது? ஒலிக்குறிப்புக‌ளை எப்போது உண‌ர‌த்துவ‌ங்குகிறாள்? எது அவ‌ளைச் சிரிக்க‌ச்செய்கிற‌து? ஏன் அந்த‌ முக‌ம் அழுகையை ஆர‌ம்பிக்க‌ எத்த‌னிக்கிற‌து? உன் குர‌லில் என்ன‌ மாய‌ம் வைத்திருக்கிறாய்.. அந்த‌ அழுகையையும் சிரிப்பாக‌ மாற்றுகிறாய். உணவு அவளை உறுத்துகிறதா? உடை அவளை உறுத்துகிறதா? காற்று அவளை உறுத்துகிறதா? தூசு அவளைத்தொடமுடியுமா? ஒரு குட்டி எறும்பும் அவளை நெருங்கமுடியுமா? எப்போது உறங்குவாள்? எப்போது விழிப்பாள்? நீ இரவுகளில் தூங்குகிறாயா? சில மாதங்கள் ஆகிவிட்டனவே.. கடிக்கிறாளா? இப்போது உன் மார்புகள் வலிக்கின்றனவா? அவளின் அடுத்தடுத்த உணவுகள் என்னென்ன? எப்போது உட்காரத்துவங்குவாள்? எழுவாள்? நடப்பாள்?

யார் இன்னும் தேவ‌தையாக‌ வாழ்கிறீர்க‌ள்? அவ‌ளா? நீயா? இருவ‌ருமேவா? அப்ப‌டியானால் நான் யார்? நான் என்ன‌ செய்ய‌வேண்டும்.?

என்னிட‌ம் ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கின்றன..
விடையாக‌ நீ ஒருத்தி இருக்கிறாய் .!

.

46 comments:

அ.மு.செய்யது said...

//அப்ப‌டியொரு வாய்ப்பைப்பெறுகிறாள் பெண். அதன் உச்சமாக த‌ன்னுள்ளேயே அதை நிக‌ழ்த்துகிறாள். அதை அவ‌ளால் ம‌ட்டுமே உண‌ர‌முடிகிற‌து. அவ‌ளே நினைத்தாலும் கூட‌ அதை யாருட‌னும் ப‌கிர்ந்து கொள்ள‌முடிய‌வில்லை.//

எப்படிங்க..லெஃப்ட், ரைட்டு , யூடர்னெல்லாம் போட்டு வெளிய வர்றீங்க..

பெண்ணியலைப் பற்றி கரைச்சி குடிச்சிட்டீங்க‌ போங்க...

அ.மு.செய்யது said...

//வ‌யிறு மேடுறுகிற‌து. த‌ன்னையே அதிச‌யித்துக்கொள்கிறாள், அற்ப‌ விஷ‌ய‌ங்க‌ளும் ஆர்வ‌த்தை தூண்டுகிற‌து. காந்த‌ள்ம‌ல‌ர் எப்ப‌டியிருக்கும் என்ற‌ ச‌ந்தேக‌ம் எழுகிற‌து. த‌க்காளி ஊறுகாய் எப்ப‌டியிருக்கும்? ஆரஞ்சு ஏன் இப்படி புளிக்கிறது? இர‌ண்டு கால்க‌ளிலும் கார‌ண‌மேயில்லாம‌ல் அரிப்பெடுக்கிற‌து.//

செம்ம ஃப்ளோ...தல..

அ.மு.செய்யது said...

//யார் இன்னும் தேவ‌தையாக‌ வாழ்கிறீர்க‌ள்? அவ‌ளா? நீயா? இருவ‌ருமேவா? அப்ப‌டியானால் நான் யார்? நான் என்ன‌ செய்ய‌வேண்டும்.? //

க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வ‌ரும‌ள‌வுக்கு இமை கொட்டாம‌ல் ப‌டித்து விட்டேன்.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

pappu said...
நான் ப்ளாக் உலகத்துக்கு வந்து ரொம்ப காலம் ஆயிடல. ஆனா, நான் வந்ததிலிருந்து இந்த மாதிரியான எழுத்துக்களை கண்டதில்லை. நல்லா இருக்கு, உணர்ச்சிப்பூர்வமா!
//

ஹிஹி.. டெக்னிகல் ஃபால்ட்.. ரெண்டாவது வாட்டி போஸ்ட் பண்ணினேன்..

நன்றி பப்பு.!
நன்றி செய்யது.! (ஆக்ஷுவலா பப்புதாம் மீத ஃபர்ஸ்ட்.!)

அ.மு.செய்யது said...

சில‌ வார்த்தைக‌ளை ஆல்டர் செய்து ம‌டித்து ஒன்றன் கீழ் ஒன்றாய் போட்டிருந்தால் ஒரு க‌விதை ரெடியாயிருக்கும்ல‌...

மாதவராஜ் said...

150க்கு வாழ்த்துக்கள்.

ரெயிலில் இருக்கிறேன்.லேப்டாப்பில் சார்ஜ் குறைவாக இருக்கிறது. பிறகு படிக்கிறேன்.

அ.மு.செய்யது said...

இந்த பதிவு புலம்பல் ரகம் இல்லை.

இந்த மாதிரி நம்மால எழுதமுடியலேன்னு மத்தவங்க பொறாம‌ப்பட்டு புலம்ப வைக்கும் ரகம்.

( ச‌மீப‌ கால‌ங்க‌ளில் நான் ப‌டித்த ப‌திவுக‌ளிலே இதான் டாப் கிளாஸ்...)

பை தி வே..வாழ்த்துக்க‌ள் ஃபார் 150.

கார்க்கி said...

மீள்பதிவு? ஃப்ரம் ஆதி?

Anonymous said...

150-க்கு வாழ்த்துக்கள் தல.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

மிகுந்த பாராட்டுக்கு நன்றி செய்யது.!

நன்றி மாதவராஜ்.!
நன்றி கார்க்கி.! (இதச் சொல்றது யாரு.?)

குசும்பன் said...

இந்த ஒரு பதிவு போதும் தாங்கள் தங்கமணி பற்றி எழுதும் பதிவுகள் எல்லாம் சும்மா கற்பனைகள் என்று புரிய!

அருமை!

//முதலிடம் எதற்குத் தருவீர்கள் என்று என்னை யாராவது கேட்டால் இதற்குத்தான் என்பேன்//

இந்த வரி படிச்சதுமே இந்த பதிவுதான் மீள் பதிவு செஞ்சு இருப்பீங்க என்றே வந்தேன்!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன்.! (தாங்கள் தங்கள் சுற்றம்சூழ.. என்று படிப்பது போல இருந்தது உங்கள் பின்னூட்டம்.. பழக்கமே இல்லையா? புதுமையாக இருந்தது பின்னூட்டம். அப்புறம் இன்னொரு விஷயம்.. இந்த ஒரு பதிவு மட்டும் கற்பனையாக இருக்கலாம் அல்லவா?.. அவ்வ்வ்..)

அத்திரி said...

உங்க பதிவிலே எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு இதுதாம்ணே........ 150க்கு வாழ்த்துக்கள்

இரா.சிவக்குமரன் said...

இது பத்தி சொல்ல வார்த்தைகளே இல்லீங்க.. ஒவ்வொரு தந்தையும் அனுபவபூர்வமா நெகிழ வேண்டிய அனுபவங்க!!

Thamizhmaangani said...

//என்னிட‌ம் ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கின்றன..
விடையாக‌ நீ ஒருத்தி இருக்கிறாய் .!//

எப்படிங்க இப்படியலாம் கலக்குறீங்க!! சூப்பர்ர்.

உங்களது 150வது பதிவுக்கு என் வாழ்த்துகள்!:)

ஸ்ரீதர் said...

மிக நல்ல பதிவு.என்னைப் போல புதிதாக வந்தவர்களுக்கு ,படிக்க விடுபட்டவர்களுக்கும் நல்லது.

வித்யா said...

ஏற்கனவே படித்ததுதான். வேறு தலைப்பில். ஆனாலும் எத்தனை முறை படித்தாலும் கிளாஸாக இருக்கு:)

வாழ்த்துக்கள் 150வது பதிவுக்கு:)

Mahesh said...

இதன் ஒரிஜினல் பதிவைப் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதை எழுதியவரிடம் பேசியிருக்கிறேன் என்றூ பெருமைப் பட்டிருக்கிறேன்.

150க்கு மிகச் சரியான மீள்பதிவு !!

வாழ்த்துகள் ஆதிமூலகிருஷ்ணன்!!
தமிழ்மண நட்சத்திரமாய் இருக்கும்போது 100 ஃபாலோயர்களும் 150வது பதிவும் வாய்த்ததற்கு வாழ்த்துகள் !!

ராஜ நடராஜன் said...

151 லிருந்து வாழ்த்துக்கள் தொடர்கிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

தாய்மையை கொண்டாடும் அருமையான வார்த்தைகள்.. நூற்று அம்பது பதிவுகள்.. வாழ்த்துக்கள் தோழரே..

முரளிகண்ணன் said...

150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

தாமிராவின் எழுத்துக்களா இவை?எழுத்துக்கள் ஆச்சரியம் மிகுந்தவை.

அனுஜன்யா said...

Congrats for 150th.
Very good post. Hadn't read the original post. Fantastic flow.

Pl.excuse-Font problem.

Anujanya

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அத்திரி.!
நன்றி சிவக்குமரன்.!
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி மாங்கனி.!

நன்றி வித்யா.!
நன்றி மகேஷ்.! (இதன் ஒரிஜினல் பதிவைப் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.// என்னை மிக பெருமைக்குள்ளாக்குகிறீர்கள்)

நன்றி நடராஜன்.!
நன்றி கார்த்திகை.!
நன்றி முரளி.!
நன்றி அனுஜன்யா.!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

எனக்கு நானே 25.!

மாசற்ற கொடி said...

அருமை. இந்த உணர்வை புரிந்து கொண்ட சில ஆண்களில் அதன் வீரியம் குறையாமல் எழுத்தில் கொண்டு வந்ததற்கு ராயல் salute !

நெகிழ்ச்சியுடன்
மாசற்ற கொடி

தருமி said...

மீள்பதிவாக்கி மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றிகள்.

அழகான பதிவு. தாய்மைக்கு உங்கள் பதிவு அர்ப்பணம்.

வெட்டிப்பயல் said...

Excellent Excellent...

Padichi kannu kalangiduchi... Star weekna ippadi thaan boss irukanum.

ithai print out eduthu kooda vechikalam. ethanai murai vena padikalam... Too good

ithe quality adutha postlayum ethir paarpen :)

வெட்டிப்பயல் said...

//இந்த ஒரு பதிவு மட்டும் கற்பனையாக இருக்கலாம் அல்லவா?.. அவ்வ்வ்..//

I dont think so... intha alavuku rasichi ezhuthara vishayam karpanaiya irukanumna neenga Stickeraa irukanum... I mean neenga kambara irukanum :) (Sticker : Ubayam Parisal)

rathnapeters said...

அருமை......நீங்கள் தானே அலிபாபாவும்....என்ற தலைப்பில் எழுதி வந்தது?

நீங்கள் தானே "சாருநிவேதிதா"?

தவறாக இருந்தால் மன்னிக்கவும்

ஊர் சுற்றி said...

அருமை தாமிரா,

நுண்ணுணர்வுகளையும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். மிகவும் சிந்திக்க வைத்த இடுகை இது.

தமிழன்-கறுப்பி... said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே...

பதிவு கட்டாயம் ஏதாவது சொல்லணுமா..?

உங்களுக்கு சொர்க்கத்துல முதலிடம்...!

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்..!

MayVee said...

nalla irukku thala

புன்னகை said...

வாழ்த்துக்கள் AMK 150 வது பதிவுக்கு
அப்புறம் இந்த மீள் பதிவுக்கு

narsim said...

150க்கு வாழ்த்துக்கள் ஆதி.. ஆம் இது உங்களின் சிறந்த படைப்பு.. அடுத்த படைப்பு வரும் வரை..

வாழ்த்துக்கள்

Joe said...

அற்புதமான நடை, அருமையான பதிவு!

அதிசயத்திருக்கிறான் --> அதிசயித்திருக்கிறான்.

உமா --> அம்மா?

பாபு said...

எல்லோரும் சொல்லிட்டாங்க, நான் என்ன சொல்றது?

புன்னகை said...

பெண்மையையும் தாய்மையையும் ஒரு ஆண் மகன் இத்தனை அருமையாக உள்வாங்கி, உணர்ந்து எழுதியிருப்பது, மிகவும் பெருமையாக இருக்கிறது! பதிவைப் படித்துவிட்டு, அழுதே விட்டேன்! மிகுந்த பாக்கியசாலி உங்கள் மனைவி :-)

ஸ்ரீமதி said...

150-ku vaazththugal.. :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

150 ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள்

ஏற்கனவே படித்திருந்தாலும், அலுக்காமல் மீண்டும் படித்தேன்.
ஒரு படி தேன்.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மாசற்றகொடி.! (புரித‌ல் ம‌கிழ்வைத்த‌ந்த‌து.. புக‌ழ்ச்சி கொஞ்சம் அதிக‌ம்தான்)

ந‌ன்றி த‌ருமி.!
ந‌ன்றி வெட்டிப்ப‌ய‌ல்.! (இந்த‌ குவாலிடி அடுத்த‌ ப‌திவுல‌யும் எதிர்பார்ப்பேன்// இதான‌ வாணாங்கிற‌து.. நா என்ன‌ வ‌ச்சுகிட்டா வ‌ஞ்ச‌க‌ம் ப‌ண்றேன்..)

ந‌ன்றி ர‌த்னா.! (தாமிரா என்ற‌ பெய‌ரில் அலிபாபாவும்108 அறிவுரைக‌ளும் என்ற‌ த‌லைப்பில் எழுதிக்கொண்டிருந்த‌து நான்தான். சூழ‌ல் கார‌ண‌மாக‌ பெய‌ர்மாற்ற‌ம். 'சாருநிவேதிதா'வா? என்ன‌ இது புதுக்க‌தையாக‌ இருக்கிற‌து.. அவ்வ்வ்வ்வ்..)

ந‌ன்றி ஊர்சுற்றி.!
ந‌ன்றி தமிழ‌ன்க‌றுப்பி.!
ந‌ன்றி மேவீ.!

ந‌ன்றி புன்ன‌கை.! (மிகவும் பெருமையாக இருக்கிறது! பதிவைப் படித்துவிட்டு, அழுதே விட்டேன்!// நெகிழ்ந்தேன்)

ந‌ன்றி ந‌ர்சிம்.!
ந‌ன்றி ஜோ.! (உமா.. அம்மா அல்ல‌து யாராக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம்..)

ந‌ன்றி ஸ்ரீம‌தி.!
ந‌ன்றி அமித்துஅம்மா.!

பாண்டி-பரணி said...

வாழ்த்துக்கள்!
இதன் முதல் பதிவை வாசிக்கவில்லை
மீள்பதிவுதான் நமது வலைப்பூவில் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று

மிக மிக அருமையான வார்த்தை கோர்வை excellent sir

மங்களூர் சிவா said...

150க்கு வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

மிக அருமை.

Joe said...

//
ந‌ன்றி ஜோ.! (உமா.. அம்மா அல்ல‌து யாராக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம்..)
//

எந்த பெயருமே இல்லாமல் செல்லும் இந்த பதிவு/கட்டுரை, திடீரென ஒரு பெயரை புகுத்தும்போது சற்று அபத்தமாக இருக்கிறது.

I mean, it flows so eloquently about a woman, how she transforms during her pregnancy, how she delivers, how she takes care of the baby, etc., and then suddenly there's a pronoun which doesn't fit in there at all. Hope you get my point! I didn't mean to be cocky!

It was by far the best article I had ever read in the last few months. You rock!