Monday, March 23, 2009

த்ரீ இன் ஒன்.. (23.03.09)

எப்போதுமே எந்தக்காரியத்தையுமே மிக மெதுவாகவும், தாமதமாகவும் செய்வதே என் வழக்கம். இதனால் பலமுறை ரயிலைத்தவற விட்டிருக்கிறேன்.. வாய்ப்புகளையும்.! வழக்கமாக இரண்டு நாளைக்கு ஒரு பதிவு என்பதாய் எழுதிக் கொண்டிருந்தவன் நட்சத்திர வாய்ப்புக்காக ஒரு நாளில் இரண்டு பதிவுகள் என்று திட்டமிட்டேன். இரண்டு நாளைக்கு ஒரு பதிவு போடுவதற்கே நாக்கு வெளியே வந்துவிடும். எப்படி ஒரு நாளில் இரண்டு பதிவு போடுவது என்ற பயமும் வந்தது. புதுகைத்தென்றலே துணை என்று களத்தில் இறங்கி, ஆச்சரியகரமாக அதை கிட்டத்தட்ட நிறைவேற்றவும் செய்துவிட்டேன். ஒருநாள் மட்டும் பதிவிட இயலாது போய்விட்டது. ஒரு மீள்பதிவையும் கணக்கில் சேர்த்தால் 10 பதிவுகள் இட்டிருக்கிறேன் (இதைக் கணக்கில் கொள்ளாமல்). மிகுந்த பாராட்டுகளையும், புதிய நண்பர்களையும் பெற்றுத்தந்த சில நல்ல(?) பதிவுகளும் அதில் இருந்தது எனக்கு கூடுதல் மகிழ்வைத்தந்தது. ‘மோகம் 30 நாள்’, ‘நீ நான் அவள்’, ‘தேர்த்திருவிழா’ போன்றவை நல்ல பெயரைத் பெற்றுத்தந்தன. ‘யேய்.. சைலன்ஸ்’, ‘ரமா எனும் சுனாமி’ ஆகியவை மிகுந்த ஹிட்டுகளைப் பெற்றுத்தந்தன. ஆனால் ‘பெரியாரைப் பிழையாமை’ என்ற பதிவுக்கு நான் பெண்களிடமிருந்து கருத்துகளை மிகவும் எதிர்பார்த்தேன். அது நடக்காதது ஒரு சிறிய ஏமாற்றத்தைத் தந்தது. மற்றபடி ஓரளவு சிறப்பாகவே நட்சத்திரவாரத்தை கடந்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இத்தனை பதிவுகள் போட்டு டயர்டாகிவிட்டதால் நாலு நாளைக்கு வலைப்பூவுக்கு விடுப்பு விடலாம் என்றிருக்கிறேன் (என்ன மகிழ்ச்சிதானா?) மீண்டும் ஒருமுறை தமிழ்மணத்துக்கு நட்சத்திர வாய்ப்புக்காக என் மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

********

என் பதிவுகளில் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்ற சந்தேகம் அவ்வப்போது எனக்கு எழுவதுண்டு. சமயங்களில் அப்படி ஏதும் இல்லை என்று நான் உணரும் போது நாமெல்லாம் அவசியம் எழுதித்தான் ஆகவேண்டுமா என்ற எண்ணமும் கூடவே ஏற்படும். சமீபத்தில் ஒரு பிரபல எழுத்தாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது இதுகுறித்துக் கருத்துக்கேட்டேன். ‘உள்ளடக்கத்தை / செய்தியைப் பற்றி அதிகம் கவலை தேவையில்லை நண்பரே.. படிப்பவரை தொடர்ந்து தன்பால் ஈர்த்து வைத்துக்கொள்வதே படைப்பின் வெற்றியும், பிரதானமான விஷயமும் ஆகிறது. அது வசீகரமான மொழிநடையினாலேயே சாத்தியமாகிறது’ என்றார். உள்ளடக்கத்தைப் பற்றி இவ்வாறு அவர் கூறியதும் உண்மையில் மிக மகிழ்ந்துபோனேன். தொடர்ந்து தயங்காது எழுதுவது என்றும் முடிவு செய்தேன்.. (ம்ஹூம்.. அவர் யாரென்றெல்லாம் சொல்லமுடியாது. அவருக்கு ஒரு ஆபத்து வருவதை நான் விரும்பவில்லை)

********

என்ன இந்த ‘த்ரீ இன் ஒன்’ முழுதுமே பதிவுகள் குறித்ததாய் அமைந்துவிட்டது? இந்தப்பகுதியும் பதிவு குறித்ததுதான்.  சரி ‘பதிவுகள் ஸ்பெஷல்’ என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதுவரை பதிவை வெளியிடும் முன்னர் அதை யாரிடமும் காண்பித்து கருத்துக் கேட்டதில்லை நான். முதல் முறையாக சூழல் காரணமாகவும், பதிவின் சப்ஜெக்ட் காரணமாகவும் சமீபத்தில் ஒரு பதிவு குறித்து கருத்து கேட்க நேர்ந்தது. ஸ்பீக்கர் போனில் என்னை வைத்துக் கொண்டே அவர் அதை அவரது மனைவியிடம் காண்பித்து விவாதித்து கருத்துக் கூறினார். அதன்படி பதிவில் நான் சிறு மாற்றமும் செய்தேன். விஷயம் அதுவல்ல.. இது போல ஆரோக்கியமான விவாதம் நிகழ்த்துமளவில் ஒரு திறன்மிக்க தோழியை மனனவியாய் பெற்ற அவரின் அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன். நான் ஒருமுறை என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த பதிவர் எவ்வளவு லக்கி இல்ல.? நீண்டநாட்கள் கழித்து பொறாமை என்ற ஒரு உணர்வு எழுந்தது என் நெஞ்சில்..

டிஸ்கி : பெயர் முற்றிலுமாக ஆதிமூலகிருஷ்ணன் என்று மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்  கொள்கிறேன். தொடர்ந்த ஆதரவை எதிர்பார்க்கிறேன். நன்றி.

.

32 comments:

ஆயில்யன் said...

//என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது//

கரீக்டாத்தான் சொல்லியிருக்காங்க !

உங்க வீட்ல புளி இல்ல முதல்ல அதை வாங்கி வந்து வீட்ல வைக்கணும்தானே! அதை விட்டுட்டு இன்னொருத்தரு எம்புட்டு லக்கின்னா அவுரு வீட்ல ஏற்கனவே புளி இருந்திருக்கும் அதனால ரொம்ப ஃப்ரீயா உக்காந்திருப்பாரு :))))))))

இந்த நட்சத்திர வாரத்தில் அழகாய் திட்டமிட்டு அருமையான பதிவுகளை வழங்கி சென்றமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...! :

ஆயில்யன் said...

////என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது////

பிளாக் டைட்டிலுக்கு மேட்ச் பண்ணிட்ட்டீங்க நட்சத்திர வாரத்தில்

இதையெல்லாம் தாங்கிக்கிட்டு இருக்காங்களே...!

அண்ணி நொம்ப்ப நல்லவங்க :))

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது//

கரீக்டாத்தான் சொல்லியிருக்காங்க !

உங்க வீட்ல புளி இல்ல முதல்ல அதை வாங்கி வந்து வீட்ல வைக்கணும்தானே! அதை விட்டுட்டு இன்னொருத்தரு எம்புட்டு லக்கின்னா அவுரு வீட்ல ஏற்கனவே புளி இருந்திருக்கும் அதனால ரொம்ப ஃப்ரீயா உக்காந்திருப்பாரு :))))))))

இந்த நட்சத்திர வாரத்தில் அழகாய் திட்டமிட்டு அருமையான பதிவுகளை வழங்கி சென்றமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...! :///
மறுக்கா கூவிக்கிறேன்..:)

தமிழ் பிரியன் said...

அந்த பதிவைக் காட்டும் மேட்டர்.. எனக்கும் அதே கதி தான் நடந்தது... ஆனால் அதற்காக வருத்தப்பட வில்லை... அவர்களின் ஆர்வம் வேறாக இருக்கும்.

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
அந்த பதிவைக் காட்டும் மேட்டர்.. எனக்கும் அதே கதி தான் நடந்தது... ஆனால் அதற்காக வருத்தப்பட வில்லை... அவர்களின் ஆர்வம் வேறாக இருக்கும்.
//

ஒ...!

தம்பி நீங்க வேற ஆர்வமா இருந்திருக்கீங்களா..!

கானா பிரபா said...

;) கடந்த நட்சத்திரவாரமே கலக்கலா இருந்துச்சு, நீங்க வீட்ல புளி வெளியில புலியா பாஸ்

அனுஜன்யா said...

நட்சத்திர வாரம் அமர்க்களம்தான். என்ன ஸ்லாக் ஓவர்களில் பெவிலியன் பக்கம் சென்று விட்டீர்கள். But on the whole, you made the most of it. வாழ்த்துகள்.

மனைவி நமது பதிவுகளைப் படிக்காமல் இருப்பதில் நிறைய சவுகரியங்கள் இருக்கு. நம்ம மேல இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளலாம் :)

அனுஜன்யா

எட்வின் said...

கடைசியாக புளி வாங்கினீர்களா இல்லையா ... :)

Same blood...

பாபு said...

பதிவு எழுதினா எல்லாம் வயிறு நிறையாது என்று சொல்லிட்டாங்களா?

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//அவுரு வீட்ல ஏற்கனவே புளி இருந்திருக்கும் //

ஆஹா சூப்பர் !

தண்டோரா said...

சுலக் ஷ்னா டெல்லி கணேஷிடம் சங்கீதம் கற்று கொள்ள உட்காருவாரே..சிந்துபைரவி..ஞாபகம் வந்தது..

புதுகைத் தென்றல் said...

புதுகைத்தென்றலே துணை என்று களத்தில் இறங்கி//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குசும்பன் said...

என்னது உங்க ஸ்டார் வாரம் முடிஞ்சுபோச்சா? ஒன்ஸ்மோர் எல்லாம் கேட்கமுடியாதா?

**********************
அனுஜன்யா said...
மனைவி நமது பதிவுகளைப் படிக்காமல் இருப்பதில் நிறைய சவுகரியங்கள் இருக்கு. நம்ம மேல இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளலாம் :)

அனுஜன்யா//

யூத்து யூத்துன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?

Mahesh said...

//என் பதிவுகளில் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்ற சந்தேகம் அவ்வப்போது எனக்கு எழுவதுண்டு. //

அப்பொ நானு? :(

குசும்பன் said...

//‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ //

ஏன் அப்படி சொன்றார்கள் என்று தெரியுமா? பித்தளை விளக்கை பலபலப்பாக்கனும் என்றால் புளி போட்டு வெளக்கனும், பித்தளை பாத்திரம் போல் இருக்கும் நீங்க ஸ்டார் வாரத்தில் ஜொலி ஜொலிக்க உங்கள புளிபோட்டு விளக்க கேட்டு இருக்காங்க...அவுங்களை போய்:(

ஸ்ரீமதி said...

:))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்ஸ் அண்ணாவின் முதல் கமெண்டுக்கு கன்னா பின்னாவென்று மறுமொழிகிறேன்.

குறிப்பு: பெ. பிழையாமை இன்னமும் படிக்கவேயில்லை பாஸ் நான்.

எம்.எம்.அப்துல்லா said...

//அந்த பதிவர் எவ்வளவு லக்கி இல்ல.? //


இத க்ளூன்னு நெனச்சு படிக்கிறவங்க லக்கிலுக்குன்னு தப்பா புரிஞ்சுக்கப் போறாங்க...அவரு திருப்பூர் மாவட்டத்துல இருக்குறவரு

:)

புருனோ Bruno said...

//ஏன் அப்படி சொன்றார்கள் என்று தெரியுமா? பித்தளை விளக்கை பலபலப்பாக்கனும் என்றால் புளி போட்டு வெளக்கனும், பித்தளை பாத்திரம் போல் இருக்கும் நீங்க ஸ்டார் வாரத்தில் ஜொலி ஜொலிக்க உங்கள புளிபோட்டு விளக்க கேட்டு இருக்காங்க...அவுங்களை போய்:(//

அய்யோ அய்யோ !!!

ramachandranusha(உஷா) said...

ஆனால் ‘பெரியாரைப் பிழையாமை’ என்ற பதிவுக்கு நான் பெண்களிடமிருந்து கருத்துகளை மிகவும் எதிர்பார்த்தேன். அது நடக்காதது ஒரு சிறிய ஏமாற்றத்தைத் தந்தது//

ஆதி, வருத்தப்படாதீங்க, அங்கிட்டு ஒரு பின்னுட்டம் போட்டாச்சு :-)

ramachandranusha(உஷா) said...

நான் ஒருமுறை என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த பதிவர் எவ்வளவு லக்கி இல்ல.? நீண்டநாட்கள் கழித்து பொறாமை என்ற ஒரு உணர்வு எழுந்தது என் நெஞ்சில்///

ஐய்யயோ, ஒரு உறையில ரெண்டு கத்தி இருக்கக்கூடாது சாமியோ! அப்பாலிக்க நம்ம இஷ்டத்துக்கு எழுத விடாம, அறிவுரைகள் ஆரம்பிக்கும். ரமா படிக்காதது உங்கள் நல்வினைன்னு நினைச்சிக்குங்க.

அனுஜன்யா said...

@ குசும்பன்

ஆம், பால்ய விவாகம்.

pappu said...

அடுத்தவங்கள நம்ம சரக்க படிக்க வைக்கிறத மாதிரி கஷ்டம் உலகத்துல இல்ல. நானும் ரெண்டு மூணு பேர்ட்ட ட்ரை பண்ணி கடைசில இதுக்கு உங்கள மாதிரி பதிவர்கள நம்பலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஆயில்யன்.! (நட்சத்திர வாரம் முடிந்த மகிழ்ச்சியில் வந்து பாராட்டியது போல தெரிகிறதே..)
நன்றி தமிழ்.!

நன்றி கானாபிரபா.! (ஹை.. பெரியாளுங்கல்லாம் என் பதிவுக்கு வர்றாங்க போலயிருக்குதுபா..)
நன்றி அனுஜன்யா.!

நன்றி எட்வின்.!
நன்றி பாபு.!

நன்றி பாஸ்கர்.!
நன்றி தண்டோரா.!

நன்றி தென்றல்.!
நன்றி குசும்பன்.!

நன்றி மகேஷ்.! (நம்ப ரெண்டு பேருக்கும் சேத்துதான் அவுருகிட்ட ஐடியா கேட்டேன் தல..)
நன்றி ஸ்ரீமதி.!

நன்றி அமித்துஅம்மா.!
நன்றி அப்துல்லா.!
நன்றி டாக்டர்.!

நன்றி உஷா.!
நன்றி பப்பு.! (இப்பிடில்லாம் மிரட்டுனா மட்டும் வந்துடுவனா என்ன..)

அன்புடன் அருணா said...

//பெயர் முற்றிலுமாக ஆதிமூலகிருஷ்ணன் என்று மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//

புதுப் பெயருக்கும் நட்சத்திர வாரத்துக்கும் வாழ்த்துக்கள்....

அன்புடன் அருணா

வால்பையன் said...

//என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது.//

நானும் ஒருமுறை பிரிண்ட் எடுத்து வந்து, புளிக்கு பதிலாக எண்ணை வாங்கியாந்து பார்த்தால் அந்த பிரிண்ட் அவுட் குப்பை தொட்டியில்

அவ்வ்வ்வ்வ்வ்வ்

ச்சின்னப் பையன் said...

அந்த பெரிய எழுத்தாளர் யாருன்னு சொல்லுங்க... அவரை ஒரு கை பாத்துடலாம்...

ஹிஹி...

Itsdifferent said...

Please help what you can.
http://indiasudar.wordpress.com/2009/03/23/ka-visit-report-govt-higher-primary-school-kaverinagara-near-hoodi-circle-bangalore/

அது சரி said...

//
நான் ஒருமுறை என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது
//

இன்னுமா நீங்க புளி வாங்கலை?? ஏங்க ஒங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? இனிமே புளியெல்லாம் வாங்கிட்டு, பாத்திரம் எல்லாம் கழுவி வச்சிட்டு நைட்டு பன்னிரண்டு மணிக்கு மேல எழுதுங்க‌
:0))

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் ஆதிமூலகிருஷ்ணன்..

இந்த வாரம் அனைத்துமே கலக்கல் பதிவுகள்..

இருந்தாலும் "நீ நான் அவள்" மாஸ்டர் பீஸ்...

ஆயில்யன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
நன்றி ஆயில்யன்.! (நட்சத்திர வாரம் முடிந்த மகிழ்ச்சியில் வந்து பாராட்டியது போல தெரிகிறதே..)
///


ஓ......!

மை காட்.....


ஆயில்யன் ஆபிசில பிசின்னா இந்த உலகம் நம்பமாட்டிகிதே :((

நானும் வேலை பார்க்கிறேன்! வேலை பார்க்கிறேன்!
வேலை பார்க்கிறேனாக்கும்!

:))))


(அனேகமா அண்ணி பின்னூட்டம் படிச்சிருப்பாங்க அத்தோட ரியாக்‌ஷன் தானே இது!)

இனியவன் said...

நண்பரே,

இன்றிலிருந்து நானும் உங்களை படிக்க ஆரம்பித்து விட்டேன்.