Thursday, March 19, 2009

மோகம் 30 நாள்.!

டிஸ்கி : எனக்கே கொஞ்சம் கலவரமாகத்தான் இருக்கிறது. தலைப்பு கொஞ்சம் டூ மச்சாக இருக்கிறதோ? அதுவும் நட்சத்திர வாரத்தில்.! நமக்கு ஒழுங்கா நூறடி ரோட்டிலேயே சலம்பாம நடக்கத்தெரியாது. இந்த லட்சணத்துல கயித்து மேல பயணமா? பார்ப்போம்..


கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
(குறள் : 1092)

என்ன சொல்கிறது வள்ளுவம்? தலைவன் அறியாமல் அவனை விழுங்கும் தலைவியின் சிறு பார்வை மட்டுமே காமத்தின் பாதியளவு கூட இல்லை.. அதை விடவும் பெரிது என்கிறது. வெறும் பார்வைக்கு மட்டுமே இவ்வளவு எனில்.. அடுத்து.. அதற்கடுத்து.. எவ்வளவு பெரிய விஷயம் இது.!

‘இத்தப்போயி எவண்டா 30 நாள்னு சொல்லிக்கினான்? கையில கெடச்சான்னா தாராந்துடுவான் மவனே.?’

‘லூஸ்ல வுடு மாமே.. இதுல வேறெதுனாக் கீதானு பாக்குணும்.. ஏதா பொடி வெச்சி சொல்லிட்டிருப்பானுங்கோ..’ என்று கண்ணன் என்னை அமைதிப்படுத்தினான்.

என்ன இந்த காமம்? 60 வருட வாழ்நாளில் முப்பதே நாட்களில் விடைபெற்றுச் செல்லுமளவில் ஒரு சிறிய விஷயம்தானா.? இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.? நகர மறுக்கும் வருடங்களில் கோரத்தவம் கொண்டது இந்த அற்ப வரத்துக்காகவா.? தெரியாதப் பொருளைத் தெரிந்து கொள்ளும் வரையிருந்த ஆர்வம் தெரிந்ததும் வடிந்துபோவது இதற்கும் பொருந்துமா.? செவி கேட்கும் மொழி வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்க உடல் கேட்கும் மொழிக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? காதோடு காதாய் கிசுகிசுத்துக் கொண்ட அந்த அற்புதம் வெறும் நீர்க்குமிழிதானா? மோகம் 30 நாள் மட்டும்தானா.?

நேற்று நான் 90யை நெருங்கிக்கொண்டிருந்த போது 270யை தாண்டிக்கொண்டிருந்த கண்ணனின் சொற்பொழிவு இதோ..

‘மாப்ள.. கலியாணம் ஆவுற வரைக்கும் காஞ்சு கெடக்குறோமா? ஆவுதுன்னு வெச்சுக்கோ.. அன்னிக்கிருந்தே கணக்குல வெய்யி.. ஒரு பேச்சுக்கு சொல்லுதேன்.. நுப்பதாவது நாளே உண்டாயிட்டான்னு வெச்சுக்கோ.. போச்சா.. அப்பாலிக்கு டாக்டரு, டெஸ்ட்டுக்குன்னு அலைவியா? அவன் முத மூணு மாசம் வாணாம், கடேசி மூணு மாசம் வாணாம்பானா? நடுவாலிக்கா நீயே பக்கத்துல போக மாட்டியா.. புள்ள பொறந்தப்பொறவு எவுனும் சொல்லாமலே மூணு மாசம் போ மாட்டியா? அப்பாலிக்கா ரெண்டாவுது இப்ப வாணானு அவ சொல்லுவாளா.? அப்போ அதச்செய்யி, இதச்செய்யாத, அதப்பண்ணு, இதப்பண்ணாத ஒரு பெரிய லிஸ்டே இருக்குமா? என்னத்த.. அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிப்போயிருமா? இன்னொண்ணு பிளான் பண்ணினன்னு வெய்யி அடுத்தால இன்னும் மூணு வருசம் ஓடிருமா? எல்லாம் முடிஞ்சு பாக்கும் போது நீ ஓஞ்சி போயிடுவயா? இப்ப கணக்குப் பாரு.. எவ்ளோ நாளு.. அந்த முத முப்பது நாளுதானே.. அதான் மோகம் நுப்பது நாளு.. அதுனால ‘போனா வராது, விடிஞ்சா இருக்காது.’ கவனமா இருந்துக்கோ.. அப்பயே ஜாலி பண்ணிக்கோன்றேன் நா.. இப்டிதான் நா திங்க்  பண்ணிகினுருக்கேன்.. நீ இன்னா சொல்ற.?’

விட்டால் ஆன்மீக உரையைத் தொடரக்கூடும் என்பதால் கைத்தாங்கலாக அவனை படுக்க வைத்துவிட்டு நானும் சோபாவிலேயே சரிந்தேன்..

இவன் கூறும் நாள்கணக்குதான் அந்த பழமொழிக்குப் பொருத்தமாக இருக்கிறது.  எனினும் இன்னொரு கோணமும் இருக்கிறது.  அது ‘தேவை’  என்ற பசி நோக்கில் மட்டுமே இருக்குமானால் முப்பது நாளென்ன, மூன்றே நாட்களில் கூட வடிந்துபோகலாம். ஆனால்  ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்..  பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே.. 

kaamam

ரமாவை கனவில் எதிர்பார்த்துக் கொண்டே தூங்கிப்போனேன்.

.

130 comments:

கார்க்கி said...

ரெடி..ஸ்டார்ட்.. அட்டாக்..

பாபு said...

நாங்கெல்லாம் ரொம்ப யோசிக்கிற ஆள் கிடையாது,
அடுத்தவங்க என்ன சொல்றாங்கன்னு கவனிச்சுக்கிறேன்

Anonymous said...

ஆதி,

நான் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக இருக்கிறது.

பொருத்தமான கவிதை.

தராசு said...

//60 வருட வாழ்நாளில் முப்பதே நாட்களில் விடைபெற்றுச் செல்லுமளவில் ஒரு சிறிய விஷயம்தானா.?//

இல்லை

தராசு said...

//இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.? //

இல்லை

தராசு said...

//நகர மறுக்கும் வருடங்களில் கோரத்தவம் கொண்டது இந்த அற்ப வரத்துக்காகவா.? //

இல்லை

satheeskannan said...

//‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’//
poetic. :)

தராசு said...

//தெரியாதப் பொருளைத் தெரிந்து கொள்ளும் வரையிருந்த ஆர்வம் தெரிந்ததும் வடிந்துபோவது இதற்கும் பொருந்துமா.? //

இல்லை

தராசு said...

//செவி கேட்கும் மொழி வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்க உடல் கேட்கும் மொழிக்கு இவ்வளவு அற்ப ஆயுளா?//

இல்லை

தராசு said...

//காதோடு காதாய் கிசுகிசுத்துக் கொண்ட அந்த அற்புதம் வெறும் நீர்க்குமிழிதானா? //

இல்லை

தராசு said...

//மோகம் 30 நாள் மட்டும்தானா.?//

ஆமாம்.

ஏன் இதுக்கு மட்டும் ஆமான்னு கேக்கறீங்களா,

காமம் வெறும் ஒரு இச்சை என்றால் அது 30 நாள் மட்டும்தான்.

ஆனால், இது ஒரு உறவின் அடித்தளம். தன்னைவிட உடலாலும், உள்ளத்தாலும், உணர்வாலும் முற்றிலும் வேறுபட்ட ஒரு உயிரோடு முழுமையாக பகிர்ந்து கொள்ளப் படும் ஒரே ஒரு உணர்வு காமம் மட்டும் தான். எனவேதான் இந்த ஒரு விளையாட்டு மாத்திரம் எத்தனை தரம் விளையாடினாலும் சலிக்காது. மேலும் பிரபஞ்சத்திலேயே இந்த ஒரே விளையாட்டில் மட்டும்தான் விளையாடும் இரண்டு ஆணிகளுமே வெற்றியடையும்.

தராசு said...

//கார்க்கி said...
ரெடி..ஸ்டார்ட்.. அட்டாக்..//

அட்டாக் பண்ணிட்டேன் தல.

எம்.எம்.அப்துல்லா said...

உங்கள் பதிவு தொடர்பாக எனக்குத் தோன்றும் விஷயங்களை பின்னூட்டமாக இடுவதைவிட தனிப்பதிவாகவே இடுகிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

// தராசு said...

அட்டாக் பண்ணிட்டேன் தல.

//

வரவர இந்த யூத்தோட(தராசு) அலும்பு தாங்கலப்பா

:)

வெயிலான் said...

// இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.? நகர மறுக்கும் வருடங்களில் கோரத்தவம் கொண்டது இந்த அற்ப வரத்துக்காகவா.? தெரியாதப் பொருளைத் தெரிந்து கொள்ளும் வரையிருந்த ஆர்வம் தெரிந்ததும் வடிந்துபோவது இதற்கும் பொருந்துமா.? செவி கேட்கும் மொழி வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்க உடல் கேட்கும் மொழிக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? காதோடு காதாய் கிசுகிசுத்துக் கொண்ட அந்த அற்புதம் வெறும் நீர்க்குமிழிதானா? //

அதி அற்புதமான சொல்லாடல்கள். நல்ல பதிவு ஆதிமூலகிருஷ்ணன்.

narsim said...

//எம்.எம்.அப்துல்லா said...
// தராசு said...

அட்டாக் பண்ணிட்டேன் தல.

//

வரவர இந்த யூத்தோட(தராசு) அலும்பு தாங்கலப்பா
//

ஏகப்பட்ட யூத்து இருக்காங்கன்னு பேர பிராக்டெட் பண்ற அளவுக்கு நக்கல் உங்க ஒருத்தருக்கு தான்ணே வரும்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன இந்த காமம்? 60 வருட வாழ்நாளில் முப்பதே நாட்களில் விடைபெற்றுச் செல்லுமளவில் ஒரு சிறிய விஷயம்தானா.? இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.? நகர மறுக்கும் வருடங்களில் கோரத்தவம் கொண்டது இந்த அற்ப வரத்துக்காகவா.? தெரியாதப் பொருளைத் தெரிந்து கொள்ளும் வரையிருந்த ஆர்வம் தெரிந்ததும் வடிந்துபோவது இதற்கும் பொருந்துமா.? செவி கேட்கும் மொழி வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்க உடல் கேட்கும் மொழிக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? காதோடு காதாய் கிசுகிசுத்துக் கொண்ட அந்த அற்புதம் வெறும் நீர்க்குமிழிதானா? மோகம் 30 நாள் மட்டும்தானா.?

யோசிக்க வைக்கும் கேள்விகள் ரசிக்கத்தக்க வகையில்.

ஆனால் ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல்
மிகவும் ரசனை....

narsim said...

ஆதி, முந்தைய பதிவில் நான் சொன்னதுபோல்..இந்தப் பதிவுதான் சிறந்தது..அடுத்து வரும் வரை..

மிக தேர்ந்த வார்த்தைகள்.. மனதின் மொழிமாற்றங்கள்..

புதுகைத் தென்றல் said...

கயிறு மேல பதமா நடந்ததுக்கு என் பாராட்டுக்கள்.

வார்த்தைகளை ரசித்தேன்.
// ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் //

இது மிக அருமை.

திருமணத்திற்கு பிறகும் காதல்
மிச்சம் இருக்கவேண்டும்.

புதுகைத் தென்றல் said...

ரமாவைத்திட்டி நேற்று போட்ட பதிவின் பின்விளைவுகளால் இன்றைக்கு இப்படி ஒரு பதிவுன்னு புரியுது ஃப்ரெண்ட்.

:))))))))

புதுகைத் தென்றல் said...

ஏகப்பட்ட யூத்து இருக்காங்கன்னு பேர பிராக்டெட் பண்ற அளவுக்கு நக்கல் உங்க ஒருத்தருக்கு தான்ணே வரும்..//

:)))))))))))))))))

முரளிகண்ணன் said...

வித்தை காட்டியிருக்கிறீர்கள், கயிற்றின் மீது நடந்து.

வித்யா said...

அருமையான பதிவு:)))

வால்பையன் said...

அவுங்க சொன்ன அர்த்தமே வேற
மோகம்னா வெட்கம்னு சொல்ல வர்றாங்க!
முதல் முப்பது நாள் முகம் பார்த்து கூட பேசாமல் இருட்டில் வாழ்ந்த வாழ்க்கை போய் வெளிச்சத்தில் முகம் பார்த்து பேசுவது வேற வாழ்க்கை போல தானே!

(இப்படி நாங்களே எல்லா பழமொழிக்கும் அர்த்தம் சொல்லிகுவோம்)

ஆசை அறுபது நாள்!

கொஞ்சம் யோசிக்கவிடுங்க!
ஃப்ரெஷ்ஷா இருக்குற மூளை! யோசிச்சா சீக்கிரம் சூடாயிடுது!

குசும்பன் said...

//கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது. //

ரைட்டு விடு, இனி இந்த பக்கம் வரவில்லை!

காச வெட்டிப்போட்டு உறவை முறிச்சுப்போம்!

குசும்பன் said...

ஜல்சா மட்டுமே காமத்தில் வருமா?

இல்லை சில்மிசங்களும் காமத்தில் வருமா?

அளவிள்ளா டவுட்டோடு
அப்பாவி சிறுவன்

குசும்பன் said...

இந்த பதிவுக்கு என்னுடைய ஆசான் வலையுலக வாஸ்த்யானர் சுந்தர்ஜி
வந்து பதில் சொல்வார்!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

புதுகைத் தென்றல் said...
ரமாவைத்திட்டி நேற்று போட்ட பதிவின் பின்விளைவுகளால் இன்றைக்கு இப்படி ஒரு பதிவுன்னு புரியுது ஃப்ரெண்ட்


REPEATEEEEEEEE

குசும்பன் said...

மை வாஸ்த்யாயனர் குரு கம்மிங்!!!
சுந்தர்ஜி வருகிறார்! பராக் பராக் பராக்!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அடப் பாவி குசும்பா... இதுல என்னை ஏன்யா இழுத்து விடறீங்க :)

மீ த எஸ்கேப் :)

ஸ்ரீதர் said...

Great,simply great.

தராசு said...

narsim said...
//எம்.எம்.அப்துல்லா said...
// தராசு said...

அட்டாக் பண்ணிட்டேன் தல.

//

வரவர இந்த யூத்தோட(தராசு) அலும்பு தாங்கலப்பா
//

ஏகப்பட்ட யூத்து இருக்காங்கன்னு பேர பிராக்டெட் பண்ற அளவுக்கு நக்கல் உங்க ஒருத்தருக்கு தான்ணே வரும்..

அப்துல்லா அண்ணே,

இப்பவாவது ஒத்துகிட்டீங்களே, நாங்கெல்லாம் யூத்துண்ணு, டேங்சு

கார்க்கி said...

// குசும்பன் said...
மை வாஸ்த்யாயனர் குரு கம்மிங்!!!
சுந்தர்ஜி வருகிறார்! பராக் பராக் பராக்!//

மை என்று அவரை உங்களுக்கு மட்டும் உரிமை கொண்டாடுவதை கண்னடிக்கிறேன்.. சாரி கண்டிக்கிறேன்..

கார்க்கி said...

/
அப்துல்லா அண்ணே,

இப்பவாவது ஒத்துகிட்டீங்களே, நாங்கெல்லாம் யூத்துண்ணு, டேங்//

அட நீங்க வேற தல.. அனுஜன்யான்னு ஒருத்தர்.. உங்கல விட ரெண்டு வயசு பெரியவரு.. அவரே யூத்னு சொல்லிட்டு திரியறாரு

கார்க்கி said...

// குசும்பன் said...
ஜல்சா மட்டுமே காமத்தில் வருமா?

இல்லை சில்மிசங்களும் காமத்தில் வருமா?

அளவிள்ளா டவுட்டோடு
அப்பாவி சிறுவ//

ஜல்சான்னா என்னங்க?

அளவில்லா ஆசையோடு,

அனுபவிக்காத சிறுவன்

பரிசல்காரன் said...

ஒரு மனுஷன் அவ்ளோ அருமையா கத்தி மேல நடக்கற மாதிரி ஒரு பதிவப் போட்டுட்டு ஒக்கார்ந்த்ருக்காரு. இப்படித்தான் கிண்டலடிக்கறதா?

ஆதி... நீங்க கவலைப்படாதீங்க..


ஃபினிஷிங் நல்ல முறையில் வந்திருக்கிறது. கவிதையை சரிவரப் பொருத்திவிட்டீர்கள்..

அறிவே தெய்வம் said...

மோகம் முப்பது நாள்.. ன்னு முதல் முப்பது நாளும் நம்ம பயலுக்கு கண்ணுதெரியாது, காதும் கேட்காது, மயங்கிக் கிடப்பான். ’அவங்க’சொல்றத மட்டும் கேட்பான். யார் என்ன சொன்னாலும் ஏறாது. நியாயம், அநியாயம் தெரியாது.

அப்புறமா கொஞ்சமா ’மப்பு’ தெளிஞ்சவுடன் பிரச்சனைகள், வரவர தெளிவாயிடுவான்.
அப்புறம் அவங்க சொல்றத முழுசா கேட்கமாட்டான்.
அதுதான் மோகம் முப்பது நாள்.

அனுபவித்திருக்கிறீர்களா?? இல்லயென்றால் நண்பர்களைக்
கேளுங்கள்.

கார்க்கி said...

/ பரிசல்காரன் said...
ஒரு மனுஷன் அவ்ளோ அருமையா கத்தி மேல நடக்கற மாதிரி ஒரு பதிவப் போட்டுட்டு ஒக்கார்ந்த்ருக்காரு. இப்படித்தான் கிண்டலடிக்கறதா?

ஆதி... நீங்க கவலைப்படாதீங்க..


ஃபினிஷிங் நல்ல முறையில் வந்திருக்கிறது. கவிதையை சரிவரப் பொருத்திவிட்டீர்கள்/

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் கும்மியடி கும்மியடின்னு குசும்பன் அண்ணா சொல்லியிருக்காரு

கார்க்கி said...

/ வால்பையன் said...
அவுங்க சொன்ன அர்த்தமே வேற
மோகம்னா வெட்கம்னு சொல்ல வர்றாங்க//

என்ன தல? காலைலேவா?

கார்க்கி said...

//‘மாப்ள.. கலியாணம் ஆவுற வரைக்கும் காஞ்சு கெடக்குறோமா//

இப்ப எல்லாம் யாருங்க அது வரைக்கும் வெய்ட் பண்றாங்க?

ஆவ்வ்வ்வ் அவசரப்பட்டுட்டேனோ

இரா.சிவக்குமரன் said...

///‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’'அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே.. '///

அற்புதமான சிந்தனை தாமிரா!! நானும் கிட்ட தட்ட இத ஒட்டி யோசிச்சிருக்கேன்!!

குசும்பன் said...

//நேற்று நான் 90யை நெருங்கிக்கொண்டிருந்த //

ஆமா அப்படியே அக்தர் பெளலிங்க பேஸ் செஞ்சு 90ய நெருக்கிக்கிட்டு இருந்த மாதிரி பில்டப்ப பாரு, அடிச்சது டாஸ்மாக் சரக்கு....

ஆமா அது என்னா சரக்கு உள்ளே போனா மட்டும் காமம் எல்லாருக்கும் கொப்பளிக்குது:))

குசும்பன் said...

//ஃபினிஷிங் நல்ல முறையில் வந்திருக்கிறது. கவிதையை சரிவரப் பொருத்திவிட்டீர்கள்//

ஆமாங்க அந்த இமேஜில் சரியாகதான் பொருத்தியிருக்கிறார்!

குசும்பன் said...

கார்க்கி said...
ஜல்சான்னா என்னங்க?
அளவில்லா ஆசையோடு,
அனுபவிக்காத சிறுவன்//

ஜல்சான்னா ரெண்டு கருங்கல்ல எடுத்து அதுக்கு நடுவில் உன் 'விரலை' வைத்து நச்சுன்னு அடிப்பாங்க! அதுதான் ஜல்சா!

குசும்பன் said...

//ஆசை அறுபது நாள்!//

ஆயகலைகள் 64 என்று சொல்றாங்க அப்ப மீதி நான்கை என்ன செய்வது? சாய்சில் விட்டுவிடவேண்டியதுதானா?

குசும்பன் said...

//நகர மறுக்கும் வருடங்களில் கோரத்தவம் கொண்டது இந்த அற்ப வரத்துக்காகவா.? தெரியாதப் பொருளைத் தெரிந்து கொள்ளும் வரையிருந்த ஆர்வம் தெரிந்ததும் வடிந்துபோவது இதற்கும் பொருந்துமா.? செவி கேட்கும் மொழி வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்க உடல் கேட்கும் மொழிக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? காதோடு காதாய் கிசுகிசுத்துக் கொண்ட அந்த அற்புதம் வெறும் நீர்க்குமிழிதானா? மோகம் 30 நாள் மட்டும்தானா.? //

அடிச்ச 90 என்னமா வேலை செய்யுது!

குசும்பன் said...

இரா.சிவக்குமரன் said...
அற்புதமான சிந்தனை தாமிரா!! நானும் கிட்ட தட்ட இத ஒட்டி யோசிச்சிருக்கேன்!!//

இத ஒட்டியா? எங்கங்க ஒட்டினீங்க?
அப்படியே பக்கத்தில் இவரு போட்டோவையும் ஒட்டிவிடுங்க!

அ.மு.செய்யது said...

//என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது.//

ஃபைனல் டச்...அற்புதம்.

குசும்பன் said...

//லூஸ்ல வுடு மாமே.. இதுல வேறெதுனாக் கீதானு //

கீதாவ பார்கனுமா? அவ்வ்வ் அது யாரு கீதா?

கார்க்கி said...

/
ஆமா அது என்னா சரக்கு உள்ளே போனா மட்டும் காமம் எல்லாருக்கும் கொப்பளிக்குது://

னீங்க்தான் சரக்கே அடிக்க மாட்டிங்களே. அப்புறம் என்ன செய்வீங்க தல?

குசும்பன் said...

// இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.?//

காத்துன்னா காத்து உங்க வீட்டு காத்து எங்க வீட்டு காத்து இல்ல....ஒரு 29வருடம் காத்து இருக்கிறேன்! அதுவரை ஒன்லி தியரி!

அ.மு.செய்யது said...

கைவசம் நிறைய தியரிகளும், அனுபவங்களும் வச்சிருக்கீங்க...

தேவைப்படும் போது வாங்கிக்கறேன்..இப்போ நோட் பண்ணிக்கிறேன்.

கார்க்கி said...

//குசும்பன் said...
//ஆசை அறுபது நாள்!//

ஆயகலைகள் 64 என்று சொல்றாங்க அப்ப மீதி நான்கை என்ன செய்வது? சாய்சில் விட்டுவிடவேண்டியதுதானா//

அய்யோ அய்யோ.. சின்னப்பையன் எனக்கே தெரியுது.. உஙக்ளுக்கு தெரியலைஒயா.. 64 எல்லாம் 6.4 நாள்லே ஆயிடும்..

குசும்பன் said...

கார்க்கி said...
னீங்க்தான் சரக்கே அடிக்க மாட்டிங்களே. அப்புறம் என்ன செய்வீங்க தல?//

அடங்கொன்னியா? சரக்கடிச்சா ஏன் காமம் கொப்பளிக்குதுன்னு கேட்டா? சரக்கடிக்காம என்ன நீ செய்வேன்னு கேட்கலாமா? சரி அதவிடு

என் ரூமில் ஒரு பெருசு இருந்துச்சு ரெண்டு பெக் அடிச்சதும் அதுக்கு லேப்டாப்பி “பலான படம்” பார்த்தா தான் அடுத்த ரவுண்டே போவும்:))
செம காமெடியாக இருக்கும்!

கார்க்கி said...

//
காத்துன்னா காத்து உங்க வீட்டு காத்து எங்க வீட்டு காத்து இல்ல....ஒரு 29வருடம் காத்து இருக்கிறேன்! அதுவரை ஒன்லி தியரி//

தோடா.. அப்ப பொறந்ததிலிருந்தே இதுக்கு வெய்ட்டிங்கா? நீ எவ்ளோ பரவாயில்ல கார்க்கி

குசும்பன் said...

//அ.மு.செய்யது said...
கைவசம் நிறைய தியரிகளும், அனுபவங்களும் வச்சிருக்கீங்க...//

போலீஸ் வலைவீசி தேடிக்கிட்டு இருந்த அந்த புக் பிரிண்டர் இவர்தானா? போலீஸில் போட்டுக்கொடுத்தா சன்மானம் ஏதும் கிடைக்குமா?

கார்க்கி said...

//என் ரூமில் ஒரு பெருசு இருந்துச்சு //

அவரும் பெருசா?

//ரெண்டு பெக் அடிச்சதும் அதுக்கு லேப்டாப்பி “பலான படம்” பார்த்தா தான் அடுத்த ரவுண்டே போவும்:))
செம காமெடியாக இருக்கும்!//

பலான படம் எப்படி காமெடியா இருக்கும்? காம நெடியா இல்ல இருக்கும்?

குசும்பன் said...

கார்க்கி said...
தோடா.. அப்ப பொறந்ததிலிருந்தே இதுக்கு வெய்ட்டிங்கா? நீ எவ்ளோ பரவாயில்ல கார்க்கி///

பாலாஜி பிரண்டு! இதை சொல்லலாமா?:))

கார்க்கி said...

/
பாலாஜி பிரண்டு! இதை சொல்லலாமா?://

தல நீங்களுதான்.. இல்லையா? ஒரு 10 நிமிட் பிரேக்.. இதோ வறேன்

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நம்ப நல்ல பதிவுன்னு நினைச்சா அதுல வந்து கும்மினாத்தாம்பா இவுங்களுக்கு திருப்தி.. அழகா ஆரம்பிச்சுவெச்சுட்டு எஸ்கேப் ஆயிட்டானா.. கார்க்கி.!

நன்றி கார்க்கி.!
நன்றி பாபு.!
நன்றி தராசு.! (மொத்தமா இல்லைன்ற வேண்டியதுதானே.. ஏன் இப்பிடி கவிதை மாதிரி.. அப்புறம் அதென்ன //இரண்டு ஆணிகளுமேவா//..)

நன்றி சதீஷ்.!
நன்றி அப்துல்.!
நன்றி வெயிலான்.! (நீங்களும் கொஞ்சம் சொல்லை ஆட வெக்கிறதுதானே..)

நன்றி நர்சிம்.! (மனதின் மொழிமாற்றங்கள்.. ஹிஹி.. ஆமா, இங்க்லிஷ் டூ தமிழ்)

நன்றி அமித்து.!
நன்றி தென்றல்.!
நன்றி முரளி.!
நன்றி வித்யா.!
நன்றி வால்.!

நன்றி குசும்பன்.! (ரைட்டு விடு, இனி இந்த பக்கம் வரவில்லை!///
அடிச்ச 90 என்னமா வேலை செய்யுது!///
ரசித்துச் சிரித்தேன்..)

நன்றி ஜ்யோவ்ராம்.! (ஒண்ணும் சொல்லாம போயிட்டீங்க..)
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி பரிசல்.!
நன்றி அறிவேதெய்வம்.!
நன்றி சிவக்குமரன்.!

குசும்பன் said...

//கார்க்கி said...
ஒரு 10 நிமிட் பிரேக்.. இதோ வறேன்
// இதுக்கே 10 நிமிட பிரேக்கா? அய்யோ அய்யோ!!! :))))

குசும்பன் said...

//நன்றி//

நன்றி போட்டா படம் வேண்டும் என்றால் முடியும், எங்க கும்மி முடியாது!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

ஒரு நன்றி பின்னூட்டம் போடுறதுக்குள்ள என்னடா இவ்வளவு பேரு படிச்சு வாழ்த்தியிருக்காங்களான்னு நினைச்சு விநாடி நேரம் சந்தோஷப்பட்டுட்டேன்.. ரொம்ப நாளாச்சில்ல கும்மியடிச்சு..‌

குசும்பன் said...

// தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...
நம்ப நல்ல பதிவுன்னு நினைச்சா //

உங்களை யாரு இப்படி தப்பு தப்பா நினைக்க சொன்னது.. (நான் சொன்ன தப்பு தப்பா என்பது பதிவில் இருக்கும் ”மேட்டரை”)

குசும்பன் said...

//விநாடி நேரம் சந்தோஷப்பட்டுட்டேன்//

ஒரு விநாடி நேரத்தை 5 விநாடி அப்புறம் இப்படியே நேரத்தை அதிகரிக்கும் டெக்னிக்கை கத்துக்கிட்டு ...உங்களை எப்பொழுதும் சந்தோசமாகவே வைத்திருக்க வேண்டும் என்று காமதேவன் அருள் புரிவாராக!!!!

குசும்பன் said...

//நன்றி ஜ்யோவ்ராம்.! (ஒண்ணும் சொல்லாம போயிட்டீங்க..)//

அவரு பல விசயத்தை சாட்டில் சொல்லி இருக்கிறார்!! இரவு அனுப்புகிறேன்!!!

Mahesh said...

உங்களோட ஹால்மார்க் பதிவு!!

உங்களோட இந்தப் பதிவெல்லாம் படிச்சப்பறம் நானெல்லாம் எழுதித்தான் ஆகணுமான்னு கேள்வி வந்தது. கண்ணைத் தொடச்சுக்கிட்டு சரி.... இன்பமும் துன்பமும் தொடர்வதுதான் இயற்கை...நம்ம பணியைச் செய்வோம்னு முடிவு பண்ணிட்டேன்.

குசும்பன் said...

ரொம்ப நாளாச்சில்ல கும்மியடிச்சு..‌//

நாளைக்கு லீவ் எனக்கு, எங்கடா குசும்பனை கானும் என்று நீங்க கவலைப்படக்கூடாது பாருங்க! அதான் நாளைக்கும் சேர்த்து இந்த கும்மி!!!

குசும்பன் said...

Mahesh said...
உங்களோட இந்தப் பதிவெல்லாம் படிச்சப்பறம் நானெல்லாம் எழுதித்தான் ஆகணுமான்னு கேள்வி வந்தது.//

எல்லோரும் வேண்டாம் என்று சரியாக பதில் சொல்லி இருப்பார்களே!!!

குசும்பன் said...

கார்க்கி போன அடுத்த நிமிடம் ஆதி கம்மிங்! எங்கயோ இடிக்குதே!!!

கார்க்கி said...

//குசும்பன் said...
கார்க்கி போன அடுத்த நிமிடம் ஆதி கம்மிங்! எங்கயோ இடிக்குதே!//

நகர்ந்து உட்காருங்கோ.. எதாச்சும் பைப்பா இருக்கா போது

குசும்பன் said...

ஒரு 90 அடிச்சுட்டு போட்ட பதிவில் ஒரு 90 பின்னூட்டம் கூட வரவில்லை என்றால் அந்த 90க்கும் இழுக்கு, ஆதிக்கும் இழுக்கு!

ஆகவே 90 அடிக்கும் வரை கும்மிங்!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

ஸாரி குசும்பன் ஆப்பிஸ்ல வேலயும் பாத்துகிட்டு கும்மியடிக்க கம்பெனி குடுக்க முடியல.. தனியாளா காப்பியாத்திக்கிட்டிருக்கீங்க பாருங்க..

நன்றி மகேஷ்.! (ROTFL.. கமென்ட்)

கார்க்கி said...

// குசும்பன் said...
ஒரு 90 அடிச்சுட்டு போட்ட பதிவில் ஒரு 90 பின்னூட்டம் கூட வரவில்லை என்றால் அந்த 90க்கும் இழுக்கு, ஆதிக்கும் இழுக்கு!

ஆகவே 90 அடிக்கும் வரை கும்மிங்//

எனக்கு 90 வேண்டாம்..பியர் போதும்.. ம்முடிந்தால் சை டிஷ்ஷாக ஒரு ஃபிகர்

கார்க்கி said...

யோவ் ஆதி.. இங்க ஒருத்தன் கஷ்டப்பட்டு கம்பெனி கொடுக்கறது கண்ணுக்கு தெரியலையா?

குசும்பன் said...

//தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...
ஸாரி குசும்பன் ஆப்பிஸ்ல வேலயும் பாத்துகிட்டு கும்மியடிக்க கம்பெனி குடுக்க முடியல.. தனியாளா காப்பியாத்திக்கிட்டிருக்கீங்க பாருங்க..//

அல்லோ!! இது உங்க பதிவு! நீங்க வேடிக்கைதான் பார்க்கனும்!!! ஓக்கேவா?

தனியாலா?தனியா நின்னே 28 வருடம் போச்சு! இது பெருசா தல!!!

குசும்பன் said...

//எனக்கு 90 வேண்டாம்..பியர் போதும்.. ம்முடிந்தால் சை டிஷ்ஷாக ஒரு ஃபிகர்//


தொட்டுக்க பொண்ணா? அடிங்க!
சின்ன பையன் என்பதை சொல்லாமல் சொல்ற!!!:)

குசும்பன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
உங்கள் பதிவு தொடர்பாக எனக்குத் தோன்றும் விஷயங்களை பின்னூட்டமாக இடுவதைவிட தனிப்பதிவாகவே இடுகிறேன்.//

ஒரு 64 பாகம் தொடராக வருவது போல் எழுதுங்க!!! அப்பதான் சுந்தர்ஜி ரெக்கார்டை முறியடிக்கலாம்:)))

குசும்பன் said...

//முரளிகண்ணன் said...
வித்தை காட்டியிருக்கிறீர்கள், கயிற்றின் மீது நடந்து.//

கயிறை இன்னும் மேல ஏத்தியே கட்டவில்லை தரையில் கிடந்தபொழுதே நடந்துவிட்டார்!!!
ஆகையால் இதை ஒத்துக்கமுடியாது!!!

குசும்பன் said...

//ஃப்ரெஷ்ஷா இருக்குற மூளை! யோசிச்சா சீக்கிரம் சூடாயிடுது!//

சமையல் செய்ய வாங்கி வந்த ஆட்டு மூளை எப்படி பாஸ் சூடாகும் நீங்க யோசிச்சா?

குசும்பன் said...

//நன்றி வெயிலான்.! (நீங்களும் கொஞ்சம் சொல்லை ஆட வெக்கிறதுதானே..)//

அவருதால் அருமையான சொல்லாடலடலலட்லல் என்று என் பல்லையே ஆடவிட்டுவிட்டார், இது பத்தாதா?

குசும்பன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அடப் பாவி குசும்பா... இதுல என்னை ஏன்யா இழுத்து விடறீங்க :)

மீ த எஸ்கேப் :)//

குருவே நீங்க ஒரு ”அனுபவ” குவியல்! உங்களிடம் குவிந்து கிடக்கும் ”அனுபவங்களை” சொன்னால் கொஞ்சம் எல்லோருக்கும் யூஸ்புல்லா இருக்குமே என்ற ஒரு நல்லெண்ணத்திதான்!

குசும்பன் said...

//பரிசல்காரன் said...
ஒரு மனுஷன் அவ்ளோ அருமையா கத்தி மேல நடக்கற மாதிரி ஒரு பதிவப் போட்டுட்டு //

தாமிரா நீங்க கயிறு மேலன்னு சொல்லி இருக்கீங்க, பாருங்க அந்த கயிறை எடுத்து கத்தியா மாத்த பரிசல் ஆர்வமா இருக்கார்:))
எம்புட்டு பாசம் உங்க மேல அவருக்கு!

குசும்பன் said...

// ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. //

வேஸ்டுன்னு சொல்லிடமாட்டாங்க!

கார்க்கி said...

இங்கேயும் தனியா ஆடறீங்கலே குசும்பா

குசும்பன் said...

//இன்னொண்ணு பிளான் பண்ணினன்னு வெய்யி அடுத்தால இன்னும் மூணு வருசம் ஓடிருமா? //

தல இதுக்கு எல்லாம் டெக்னிக்கலா பிளான் பன்னுவது எப்படி சிக்ஸ்சிக்மா, 5c, போன்று பதிவு ஏன் நீங்க எழுத கூடாது!
எழுதுங்க தல! எழுதுங்க!

இப்படிக்கு உசுப்பேத்துவோர் சங்கம்

குசும்பன் said...

//கார்க்கி said...
இங்கேயும் தனியா ஆடறீங்கலே குசும்பா//

தொட்டில் பழக்கம் சுடுகாடுமுட்டும்!:))

(என்னா முட்டும் என்று கேட்கபிடாது)

கார்க்கி said...

/(என்னா முட்டும் என்று கேட்கபிடா//

தொட்டிலேவா?

குசும்பன் said...

//ரமாவை கனவில் எதிர்பார்த்துக் கொண்டே தூங்கிப்போனேன். .//

நல்லவேளை கனவில் வரவில்லை!

என்று முடிச்சு இருந்தால் எப்பொழுதும் போல் தங்கமணி பதிவாக ஆயிருக்கும் நானும் வந்து கும்மியிருப்பேன்!!!

குசும்பன் said...

90

குசும்பன் said...

வாழ்கையில் 90 அடிக்காத என்னை உங்க பதிவில் 90 அடிக்கவைத்துவிட்டீர்கள் ஆதி!

குசும்பன் said...

சொன்ன வாக்கை காப்பாறிய திருப்தியேடு போகிறேன்! பை பை!

கார்க்கி said...

/ குசும்பன் said...
வாழ்கையில் 90 அடிக்காத என்னை உங்க பதிவில் 90 அடிக்கவைத்துவிட்டீர்கள் ஆ//

அதுவும் ராவா..

கார்க்கி said...

/ குசும்பன் said...
சொன்ன வாக்கை காப்பாறிய திருப்தியேடு போகிறேன்! பை பை//

bag bag

அனுஜன்யா said...

நல்ல பதிவு. ஆனா 'நல்லா இருக்குன்னு' சொல்ல பயமா இருக்கு. ஒரு பக்கம் 'குழுமம்' ; இன்னொரு பக்கக் 'குசும்பம்';

ஆனாலும் அப்துல் உன்னத் தனியா 'கவனிக்க' வேண்டிய வேளை வந்துடிச்சி. மத்தவங்க கவனிக்காம போயிடுவாங்களோன்னு 'அக்கறையோடு' திரும்ப எடுத்துக் கொடுத்த 'நர்சிம்' மற்றும் 'ரிபீட்' போட்ட புதுகை தென்றல். உங்களையும் கவனிக்க வேண்டியதுதான் :) நர்சிம், தராசு வயசு ஜஸ்டு இருபத்து மூணா?

தாமிரா, மிக நல்ல பதிவு. மொக்கை எழுதி வீணாப் போகாதே.

அனுஜன்யா

ஜீவன் said...

ஒருபெண்ணின் மீதான மோகம் முப்பதுநாள் இருக்கலாம்!

ஆனால்! அன்பு மனைவி மீதான மோகமானது..... அன்பின் பரிமாற்றத்தில் முத்தமிட்டு கொள்வதைபோல! ''அது'' அன்பும் ''தெம்பும்'' இருக்கும் வரை ஆயுள் முழுவதும்
தொடரும்..........

கார்க்கி said...

/
தாமிரா, மிக நல்ல பதிவு. மொக்கை எழுதி வீணாப் போகாதே//

என்ன தல? அப்ப மொக்கை எழுதினா வீணா போயிடுவாங்களா?

ஆமாம் யார் அந்த வீணா? போனா போறாங்க.. நான் மொக்கைதான் போடுவேன்..

கார்க்கி said...

/நர்சிம், தராசு வயசு ஜஸ்டு இருபத்து மூணா?//

ஆமாம்.. ஜஸ்ட் 23.. அவர் பையன்னுக்கு ஜஸ்ட் 23 தான் தல

கார்க்கி said...

100 அடிக்க எத்தனை மொக்கை கமென்ட் போட வேண்டியிருக்கு?

கார்க்கி said...

அப்பாடா 100

குசும்பன் said...

//தாமிரா, மிக நல்ல பதிவு. மொக்கை எழுதி வீணாப் போகாதே.

அனுஜன்யா//

மொக்கை எழுதுறவங்க எல்லாம் அப்ப வீணா போனவங்களா? எப்படி இப்படி ஈட்டி மாதிரி ஒரு வார்த்தைய மொக்கையாக எழுதுபவர்கள் மீது வீசலாம்????

தமிழ்மணமே அனுஜன்யாவை சஸ்பெண்ட் செய்!!!

(இப்ப எல்லாம் சஸ்பெண்ட் செய்ய சொல்லிதான் போராடனுமாம்!)

டிஸ்கி: இதில் எங்குமே சிரிப்பான் போடவில்லை ஆகையால் சீரியஸ் பின்னூட்டம்!

குசும்பன் said...

//தாமிரா, மிக நல்ல பதிவு. மொக்கை எழுதி வீணாப் போகாதே.

அனுஜன்யா//

தமிழ்மணமே மதமாற்ற தடை சட்டம் போல் பின்நவீனத்துவ மாற்ற தடை சட்டம் கொண்டுவந்து, அனுஜன்யாவை ஒரு வருடம் தடை செய்!!!

போராடுவோம் போராடுவோம்! இறுதி வரை போராடுவோம்!!

அனுஜன்யா said...

எலேய், இன்னமும் இருக்கீங்களா? தொண்ணுறுல அவுட் ஆகி,'பை பை' சொல்லிட்டுப் போயிட்டீங்கன்னு நெனச்சேன்.

மொக்கைகளின் இரட்டைக் குழல் பீரங்கிகளா நீங்க இரண்டு பேரும்? பழுத்த இலக்கிய வாதிகளான பரிசல், நர்சிம் மற்றும் பின் நவீன விருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஆதி இவங்க உங்களைக் கவனித்துக் கொள்வார்கள்.

வீணாபோனவன் அப்பிடின்னு ஒரு பெரிய, நல்ல, கவிஞர் இருக்கார். அதனால வீணாப்போனாலும் நல்லதுதான்.

ஆண்ட்ரு சுபாசு said...

http://karuvarayilirunthu.blogspot.com/2009/03/blog-post_8286.html

Anonymous said...

//‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே.. //
பிரமாதம் ஆதி!!!
உங்கள் ஆவது பதிவையும் விஞ்சி விட்டது இது.

Anonymous said...

மன்னிக்கவும்.
150 ஆவது என்று இருக்க வேண்டும்..

அத்திரி said...

//‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே.. //

இது அற்புதமான வரிகள்

அத்திரி said...

நான் எழுத நினைத்ததை எல்லோரும் சொல்லிட்டாங்க.........

வனம் said...

வணக்கம் தாமிரா

\\என் கனவுகளுக்கான நிஜம் இவள்\\

எங்க இருந்து யா பிடிக்குற வார்த்தைகளை

//இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.? //
இங்கு நானும் முரண்படுகின்றேன்

பி.கு --
(என்னதான் சாமியார் வாழ்கை என்றாலும் எனக்கும் இருக்குபா உணர்வுகள் )

நன்றி
இராஜராஜன்

வனம் said...

அச்சச்சோ மறந்துட்டேன்

பேற மாத்திட்டியாம்ல

சரி ஆதி..........

வெட்டிப்பயல் said...

Pathivu arumai...

Jeevan pinnootamum Arumai...

மங்களூர் சிவா said...

// ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் //

மிக அருமை.

தமிழ் பிரியன் said...

மிகச் சிறந்த நட்சத்திரப் பதிவு! இதிலுமாயா கும்மி அடிப்பீங்க... என்ன கொடும இதெல்லாம்.. :) கமெண்ட் போடும் நல்லுள்ளங்கள் காணாமல் போய் விடுவார்கள்.

அது சரி said...

//
மாப்ள.. கலியாணம் ஆவுற வரைக்கும் காஞ்சு கெடக்குறோமா? ஆவுதுன்னு வெச்சுக்கோ.. அன்னிக்கிருந்தே கணக்குல வெய்யி.. ஒரு பேச்சுக்கு சொல்லுதேன்..
//

தாமிரபரணி மண்ணின் மணம் மணக்கிறது....நல்ல பதிவு அண்ணாச்சி...

Anonymous said...

கண்ணன் கருத்து அப்படியே எடுத்துக்கலாம்...

நல்லா கரீட்டாதான்பா சொல்ற...

கடைசியாய்...

//////ஆனால் ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே.. //////

இதுப்போல இருந்துவிட்டால் 30 என்ன 300 வருடங்கள் கூட இருக்கலாம்!

நல்ல பகிர்வுபா!

புருனோ Bruno said...

// ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே.. //

நச்

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அனுஜ‌ன்.! (மொக்கை எழுதி வீணாப் போகாதே.// அவ்வ்வ்வ்..)
நன்றி ஜீவ‌ன்.! (அழ‌காச் சொன்னீங்க‌..)
நன்றி சுபாசு.!
நன்றி ச‌தான‌ந்த்.!
நன்றி அத்திரி.!
நன்றி ராஜராஜன்.!
நன்றி வெட்டிப்ப‌ய‌ல்.!
நன்றி மங்களூர் சிவா.!
நன்றி த‌மிழ்பிரிய‌ன்.!
ந‌ன்றி அதுச‌ரி.!
ந‌ன்றி ஷீ‍நிசி.!
ந‌ன்றி புரூனோ.!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நைன்டியைத் தாண்டியவுடனும் நிறுத்தாமல் போட்டுத்தாக்கிய குசும்பன், கார்க்கிக்கு நன்றி..

///தமிழ்மணமே அனுஜன்யாவை சஸ்பெண்ட் செய்!!!

போராடுவோம் போராடுவோம்! இறுதி வரை போராடுவோம்!!

எலேய், இன்னமும் இருக்கீங்களா? ////

ROTFL..

நந்தா said...

இவ்வளவு அருமையான பதிவுக்கு எக்கச்சக்கமான மொக்கை கமெண்டுகள். சம்பந்தப்பட்டவர் மன்னிக்க. எல்லா பதிவுகளையும் கும்மியாகவேதான் அணுக வேண்டுமா என்ன?

தாமிரா மிகச் சிறப்பாய் வந்திருக்கிறது பதிவு. வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

நந்தா said...
இவ்வளவு அருமையான பதிவுக்கு எக்கச்சக்கமான மொக்கை கமெண்டுகள். சம்பந்தப்பட்டவர் மன்னிக்க. எல்லா பதிவுகளையும் கும்மியாகவேதான் அணுக வேண்டுமா என்ன?//

அப்படி எல்லாபதிவுகளையும், எல்லா பதிவர்களையும் நான் அனுகவில்லை!
எல்லாபதிகளிலும் அருமை, சூப்பர், கலக்கிட்டீங்க என்று என்னால் பின்னூட்டம் போடமுடியாது போட்டது இல்லை, அப்படி போட்டால் சம்மந்தபட்ட பதிவரே என்ன ஆச்சு உடம்பு சரி இல்லையா என்று கேட்கிறார்கள். ஆகையால் நண்பர்கள் பதிவில் மட்டும் தான் கும்மி அடிக்கிறேன்! இதுவரை சம்மந்தப்பட்டவர்கள் எவரும் உன் கமெண்டால் என் பதிவின் தரம் குறைந்துவிட்டது என்று சொல்லியது இல்லை!

குசும்பன் said...

தாமிரா அவர்களும் அப்படி நினைத்து இருந்தால் சொல்லிவிடவும் அனைத்து கமெண்டுகளையும் டெலிட் செஞ்சுவிடுகிறேன்!

நந்தா said...

குசும்பன் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம். என் மனதில் வரிசையாய் பின்னூட்டங்களைப் படித்த உடன் தோன்றியது அதுதான். அதை அப்படியே பதிவு செய்தேன்.

அப்படியே பார்த்தாலும் பதிவரே சும்மா இருக்கும் போது அப்படி பண்ணக் கூடாது, இப்படி பண்ணக் கூடாதுன்னு எல்லாம் சொல்ல வர வில்லை.

ஜஸ்ட் தோணியதைச் சொன்னேன். அவ்வளவுதான்.

cheena (சீனா) said...

முப்பது நாளுக்கான விளக்கம் நன்று நன்று

தமிழன்-கறுப்பி... said...

\\
ஆனால் ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது
\\

இந்த வரிகள் - பொருந்துதல்

படம் - புரிதல்

கடைசி வரி -காத்திருத்தல்

அந்த படமும் கவிதையும் பொருத்தமாய் இருக்கிறது...


பதிவு பளிச்சிடுகிறது...!

தமிழன்-கறுப்பி... said...

125th

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அட அட.. இதை எப்டி மிஸ் பண்ணேன்... :)

ரொம்ப உபயோகமான தகவல்கள் எல்லாம் இருக்கு.. நன்றிங்க்ணே.. :))

//‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே.. //

இது சூப்பரு அண்ணாச்சி.. :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன்.! (தாமிரா அவர்களும் அப்படி நினைத்து இருந்தால் சொல்லிவிடவும் அனைத்து கமெண்டுகளையும் டெலிட் செஞ்சுவிடுகிறேன்!// ஏன் இந்த கொலவெறி.. அவுரு ஏதோ இந்தப்பதிவ மட்டும் படிச்சுட்டு நம்பளப்பத்தி தப்பா நெனச்சுட்டாருன்னு நெனைக்குறேன். இதுக்குப்போயி.. நம்பள்லாம் சீரியஸாகலாமா? காஞ்சு போன நதியெல்லாம் வத்தாத நதியப்பாத்து ஆறுதலடையும்.. அந்த நதியே காஞ்சு போயிட்டா.. அவ்வ்வ்வ்வ்வ்)

நன்றி நந்தா.! (அப்படியே பார்த்தாலும் பதிவரே சும்மா இருக்கும் போது..// பதிவர் எப்பயுமே சும்மாதான் இருகிறார் என்பதை கண்டுபிடித்ததோடு அல்லாமல் அதை வெளியிலும் சொன்ன நந்தாவை வன்மையாக கண்டிக்கிறேன்.. அப்புறம் நாயத்த ஆரு வேணா சொல்லலாம் தல.. ஹிஹி..)

ஆதிமூலகிருஷ்ணன் said...

முந்தைய பின்னூட்டத்துக்கு கொஞ்சம் சீரியஸாகவே பதில் தரலாம் என நினைக்கிறேன். பின்னூட்டங்களே ஒரு பதிவரை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான மிக முக்கியமான விஷயமாக நான் கருதுகிறேன். கும்மி என்பதையும் நான் வரவேற்கிறேன். கும்மியில் வெறும் எண்களை போடுவதையும், ஒரே வரியை பலமுறை பேஸ்ட் செய்வதையும் தவிர்க்கலாம். சில சமயங்களில் பின்னூட்டங்கள் சுமையாகவும் அமைந்துவிடுகின்றன. ஆனால் குசும்பனின் பின்னூட்டங்களை என்றுமே நான் அவ்வாறு கருதியதில்லை. அவரது ஒவ்வொரு பின்னூட்டங்களையும் பத்திரிகைகளில் வெளியாகும் ஒவ்வொரு ஜோக்குக்கு நிகராகவே நான் கருதுகிறேன். கருத்துப்பகிர்வுக்கு நந்தா, குசும்பன் இருவருக்கும் மீண்டும் என் நன்றி.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சீனா.!
நன்றி தமிழன்.!
நன்றி சஞ்சய்.!

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...

ஆஹா அருமை . இதுவரை அறியாத தகவல் . பகிர்வுக்கு நன்றி !