Monday, March 16, 2009

எஸ்.. 5 எஸ்.!

முன்குறிப்பு 1 : எதிர்பாராத ஒரு தருணத்தில் நட்சத்திர வாய்ப்பை வழங்கி பெருமைப்படுத்திய தமிழ்மணத்திற்கு மனமார்ந்த நன்றி.. இந்த நேரத்தில் இதுபோன்ற அடையாளங்களும், அதிக ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் போன்ற விஷயங்களும் தொடர்ந்து எழுத ஊக்கமாக அமைகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஊக்கமே வெற்றிக்கான காரணமாக அமைகிறது. அது நீங்கள் தருவது. சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள் ஆயிரம்..

முன்குறிப்பு 2 : எப்படியும் இன்னும் ஒருவாரகாலத்துக்கு முடிந்தவரை மொக்கைதான் போடப்போகிறோம். அதனால் இன்று மட்டும் கொஞ்சம் டெக்னிகல் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

5 S என்றால் என்ன?

நேரமாக நேரமாக டென்ஷன் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அழுகையே வந்துவிடும் போலயிருந்தது. குளித்து அவசர அவசரமாக கிளம்பியதில் வேர்த்து கன்னங்களில் வியர்வை வழிகிறது. கசகசப்பு. அரைமணி நேரமாகத் தேடியும் கிடைக்கவில்லை பைக் சாவி.. கோபத்தில் ரமாவைக் கத்தினேன். ‘எங்கே போய்த் தொலைந்தது?’ இடுப்பில் கைவைத்துக் கொண்டு பதிலுக்குக் கத்தலாமா, அல்லது உதவி செய்யலாமா என்ற குழப்பத்தில் என்னைப் பார்க்கிறாள் ரமா.

வீட்டையே தலைகீழாக புரட்டிப் பார்த்தாயிற்று. டாய்லெட்டில் கூட செக் பண்ணியாச்சு. ‘அங்கே எப்படிங்க போகும்? இன்னிக்கு ஒரு நாள் ஆட்டோவில் போய்த் தொலைங்க.. சாய்ங்காலம் தேடி எடுத்து வைக்கிறேன்’

ஏன் இந்த நிலை? மேலும் இந்தத்தேடலில் ஷெல்ஃபில் இருந்து ஒரு குப்பைக்கூளமே தரைக்கு இறங்கியிருந்தது. மேஜையின் இரண்டு ட்ராயர்களும் கவிழ்த்துப் போடப்பட்டிருந்தன. இதற்குள்ளாகவா இவ்வளவு பொருட்கள் இருந்தன? இவையெல்லாம் என்ன? எதற்காக காலங்காலமாக இங்கே தூங்கிக் கொண்டிருக்கின்றன? இந்த ஷெல்ஃபிலும், மேஜையிலுமே இவ்வளவு பொருட்கள் என்றால் இந்தப்பரணில் அடுக்கப்பட்டிருக்கும் அட்டைப்பெட்டிகளில் என்னென்னவெல்லாம் இருக்கும்?

1. பிரித்தெடுங்கள் (Sorting - Classify) அத்தனையையும்.. நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும், விஷயமும் இந்த இயற்கையிலிருந்தே பெறப்பட்டன. அது எதுவாயினும் அதை பயனுள்ளதாக்குங்கள், முழுதுமாக பயன்படுத்துங்கள். பயன்படுத்தப்பட்ட, காலங்கடந்த விஷயங்களை / முடிந்து போன விஷயங்களின் எச்சங்களை உடனே அப்புறப்படுத்துங்கள். உடைந்து போன கடிகாரங்கள், மேஜை விளக்குகள், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து நீங்கள் பெறப்போவது என்ன? நிஜமான பிரித்தெடுத்தலை நீங்கள் செய்வீர்களானால் இவ்வளவு இடம் இருந்ததா இந்த வீட்டில் என அதிர்வீர்கள்.

2. பிரித்தெடுத்தலில் தேவையற்ற விஷயங்களை நீக்கியதோடு தேவையான பொருட்களை ஒருவித ஒழுங்கோடு ‘இது இங்கே..’ என்ற கோட்பாட்டுடன் வைத்துள்ளீர்கள். பாராட்டப்படவேண்டிய விஷயம். இதை எப்போதுமே மீறாதீர்கள். இனி சாவியைத்தேட வேண்டிய அவசியம் இருக்காது உங்களுக்கு. இதுவே ஒழுங்கு (Straighten - Configure) எனப்படுகிறது.

3. தேவைப்படும் இடங்களையும், பொருட்களையும் தேவையான இடைவேளையில் தவறாது சுத்தம் (Shine - Clean) செய்யுங்கள்.

4. யார், எதை, எப்படிச் செய்வது என்பதை திட்டமிட்டு வழிமுறைப்படுத்திக் (Systemize - Conformity) கொள்ளுங்கள். அது வெளிப்படையானதாக இருக்கட்டும்.

5. மேற்கண்ட நான்கு விதிகளையும் தவறாது (Sustain - Custom and practice) கடைபிடியுங்கள். விதிமீறல்களையும், வழுவல்களையும் நீங்களும் செய்யாதீர்கள். பிறரும் செய்யாமல் கண்காணியுங்கள்.

இப்போது தெரிந்திருக்கும் 5S என்பது ஒரு தொழில்நுட்பம் (Technical) அல்ல.. ஒரு சித்தாந்தம் (Philosophy) அவ்வளவே.. இது ஜப்பானியர்களிடமிருந்து உலகெங்கும் பரவிய ஒரு செய்தி. S என்ற ஒலிக்குறிப்பில் ஆரம்பமாகும் ஐந்து ஜப்பானிய சொற்களிலிருந்து உருவானதே இது. அதன் மிக நெருங்கிய அர்த்தம் தரும் ஐந்து ஆங்கிலச் சொற்களே மேலே நீங்கள் கண்டது. இதை நாம் ஜப்பானியர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.. வள்ளுவம் காட்டாத சித்தாந்தம் ஏதும் இருக்கிறதா என்ன.?

சரி ஒருவழியாய் 5S தெரிந்துகொண்டாயிற்று.. என்ற மகிழ்வுடன் நீங்கள் அலுவலகம் சென்றால் அங்கு உங்கள் மானேஜர் ‘ஹிஹி.. நாம் ஃபாலோ செய்யவேண்டியது 5S அல்ல.. 5C’ என்று உங்களைக் கலவரப்படுத்த முயல்வார். பயப்படாதீர்கள், அது சும்மா டுபாக்கூர்.. இதையே வேலைகெட்ட ஒருவன் வேறு சொற்களால் அலங்கரித்துச் சொன்னதுதான் அது. (நம் இயக்குனர்கள் தெலுங்குப்படத்தை அப்படியே ஷாட் தப்பாமல் தமிழில் எடுத்துவிட்டு இயக்குனர் என்று பெயரைப் போட்டுக் கொள்வதில்லையா.. அது போல..) ஒவ்வொரு S உடனும் C என்று ஆரம்பிக்கும் சொல்லை இணைத்துள்ளேன் பாருங்கள். அவைதான் 5C.. அவ்வளவுதான்.!

.

69 comments:

Anonymous said...

வாழ்த்துகள் அண்ணா:)

ஸ்ரீமதி said...

நட்சத்திர வாழ்த்துகள் அண்ணா :))

மாதவராஜ் said...

நட்சத்திரப் பதிவாளருக்கும், நட்சத்திரப் பதிவுக்கும் வாழ்த்துக்கள்.

narsim said...

ஆரம்பமே அசத்தல்.. நட்சத்திரம் மின்ன வாழ்த்துக்கள்

T.V.Radhakrishnan said...

வாழ்த்துகள்

Cable Sankar said...

நிஜமாகவே நல்ல பதிவு ஆதி..

பரிசல்காரன் said...

வாழ்த்துகள் ஆதி... டெக்னிகல் விஷயங்களில் நீங்கள் பயங்கர ஸ்ட்ராங் ஆச்சே.. கலக்குங்க..

ஆமா பேர் மாற்றம், ஸ்டார் எல்லாத்துக்கும் வீக் எண்ட் பார்ட்டி உண்டுதானே?

ஸ்ரீதர் said...

congrats thamira.

ஆயில்யன் said...

5 s கான்செப்ட் சிம்பிளா சொல்லிட்டீங்க சூப்பரூ! :)))


நட்சத்திர வாழ்த்துக்கள்!

கலக்குங்க :)))

பாபு said...

செயகேத்சு,சுட்சுகே,செய்ரி என்று எந்த மொழியில் சொன்னாலும் நீங்கள் சொல்வதுபோல
//இதை நாம் ஜப்பானியர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.. வள்ளுவம் காட்டாத சித்தாந்தம் ஏதும் இருக்கிறதா என்ன.?//

வழிமொழிகிறேன்.
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்கள்

அனுஜன்யா said...

வள்ளுவரே உங்களைப் பத்தி முதல் குறளில் சொல்லியிருக்காரு :)

தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துகள். ஆரம்பமே டெக்னிகல் பதிவு என்றாலும் Simple & Compact :)

கலக்குங்க.

அனுஜன்யா

ambi said...

குட் ஸ்டார்ட்.

வளவளன்னு சொல்லாம ரொம்ப ஜிஸ்ட்டா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

இந்த வாரம் இன்னும் டெக்னிக்கலா எதிர்பார்க்கலாமா?

குசும்பன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்


ஆதிமூலகிருஷ்ணன் என்ற பெயரின் கூட்டுதொகை 1 வருகிறது ஆகவே இனி வரும் காலங்களில் நட்சத்திரமாக இல்லை சூரியனாக ஜொளிக்கப்போகிறீர்கள்!!!

உங்களை சுற்றி ஜொளிக்குதே ஜொளி ஜொளிக்குதே என்று கோபியர் கூட்டம் சுற்றி வரும்:) என்று நம்மவூர் ஆழ்வார் சொல்கிறார் நண்பரே!!!

5c எல்லாம் வேண்டாம் எனக்கு ஒரு
1C கொடுத்தாப்போதும்:)

வெயிலான் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஆதிமூலகிருஷ்ணன்!

ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.

மாசற்ற கொடி said...

வாழ்த்துக்கள்.

"(நம் இயக்குனர்கள் தெலுங்குப்படத்தை அப்படியே ஷாட் தப்பாமல் தமிழில் எடுத்துவிட்டு இயக்குனர் என்று பெயரைப் போட்டுக் கொள்வதில்லையா.. அது போல..) ஒவ்வொரு S உடனும் C என்று ஆரம்பிக்கும் சொல்லை இணைத்துள்ளேன் பாருங்கள். அவைதான் 5C.. அவ்வளவுதான்.!"

கலக்கல்.

அன்புடன்
மாசற்ற கொடி

கே.ரவிஷங்கர் said...

தாமிரா நல்ல இருக்கு.

என்ன கொடுமைன்னா இதெல்லாம் நம்ம கிட்டேயே இருக்கு,ஆனா ஜப்பான்காரன் கிட்ட கத்துக்க வேண்டியிருக்கு. தேவையா?அவன் இத structure பண்ணி வச்சுருக்கான். நாம வைக்கல. எப்படி?

1.அவ்வையார் -”செய்வன திருந்தச் செய்”.சரியா செய்யலேன்னா-நஷ்டம்,
திறமை குறைவு,பாதுகாப்புமின்மை,
கஸ்டமர் சர்வீஸில் பழுது,

திருந்தச் செய்தால் - அதற்குரிய இடத்தில் சாவியை மாட்டி வைப்பது. (அதனால் அரைமணி நேரமாகத் தேடியும் கிடைக்கவில்லை பைக் சாவி)(everthing in the world has its own place) Even this whole universe is also in a order).

கடைசியாகத் தேடி போக வேண்டிய இடத்திற்கு அவசரமாகப் பறப்பாய்(பாதுகாப்புமின்மை)பிறகு-ICU? operation? செலவு?

அடுத்து சரியான நேரத்திற்க்கு போகாமல்,லேட்டாகப் போய் - மூடி விட்டார்கள் அல்லது
அனுமதியில்லை அல்லது ரயில் போய் விட்டது. இதனால் - நஷ்டம்(பணம்/எனர்ஜி/நேரம்/பெட்ரோல்/டிக்கெட் etc., etc.,)

அடுத்து ஒரு பைக் சாவியை சரியாக வைக்க துப்பில்லை -திறமை குறைவு/சோம்பேறித்தன்ம்.do not know how to manage things.

2.சுத்தம் சோறு போடும்.

3.சோம்பித் திரியேல் (சோம்பல் படாம
சாக்ஸ்/சாவி,செல்/பர்ஸ்..etc.,etc.
அதுக்குன்னு உள்ள இடத்துல வைச்சு
பழகு.)
4.சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

3.cleaniness is next to godliness

// தேவையற்ற விஷயங்களை நீக்கியதோடு //

இதில் ஒன்று விடுபட்டு விட்டது.

சில பொருட்கள் தேவையா இல்லையா
என்று தெரியாது.அந்த பொருட்களை
pendingல் சில காலம் (அப்போது விளங்கிவிடும்) வைத்திருந்து
அப்புறப்படுத்தலாம்.

நன்றி.

சந்தனமுல்லை said...

நட்சத்திரம் மின்னட்டும்.. வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாழ்த்துகள்.

அறிவிலி said...

நட்சத்திர பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.

5S க்கான் ஓரிஜினல் ஜப்பானிய வார்த்தைகள்
Seiri,Seiton,Seiso,Seiketsu,Shitsuke.

நீங்கள் எழுதியிருப்பதைவிட இந்த வார்த்தைகளால் பெரிய உபயோகம் ஒன்றுமில்லை. ஆனால் நேர்முகத்தேர்வில் கேள்வி கேட்டால் தேவைப்படலாம்.

அடுத்தது டி.பி.எம், லீன் 6 சிக்மா என்று தொடருமா?

(இந்த துறை பதிவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கூட்டு பதிவு கூட இத்ற்கென்றே தொடங்கலாம்.)

இரா.சிவக்குமரன் said...
This comment has been removed by the author.
இரா.சிவக்குமரன் said...

நம்மளோட தினசரி நடவடிக்கைகள்ல இருந்து இப்பிடி ஒரு விஷயமா!!! ம்ம்ம்ம் அரச மரத்த சுத்தி வந்து அடிவயித்த தொட்டு பாத்தாளாம்... எல்ல்லாருக்கும் பொறக்குமா புள்ள?!!

ரமேஷ் வைத்யா said...

ஆதிமூல கிருஷ்ணன், எப்போதுமே நட்சத்திரம்தான் என்பதால் இப்போது விசேஷ வாழ்த்துகள் இல்லை.
ஒரு சிறு திருத்தம். Drawஎர் என்பது டிரா.

ஆண்ட்ரு சுபாசு said...

நல்ல பதிவு ..இத்தகைய பதிவுகளை ..அவ்வப்போது இட்டு செல்லவும் ..மொக்கைகளுக்கு நடுவே..

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தூயா.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி மாதவராஜ்.!
நன்றி நர்சிம்.!
நன்றி TVR.!
நன்றி கேபிள்.!
நன்றி பரிசல்.! (உண்டு)
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி ஆயில்யன்.!
நன்றி பாபு.!
நன்றி முரளி.!
நன்றி அனுஜன்யா.! (ஆமா அவுரு என்னைப்பத்திதான் எழுதியிருக்காரு..)
நன்றி அம்பி.! (டெக்னிகல் பதிவு.. மாதம் ஒண்ணுதான்)
நன்றி குசும்பன்.! (கோபியர் கூட்டமா.? வ்வ்வ்வ்..)
நன்றி வெயிலான்.!
நன்றி மாசற்ற‌கொடி.!
நன்றி ரவிஷங்கர்.! (சரியா சொன்னீங்க..)
நன்றி சந்தனமுல்லை.!
நன்றி ஜ்யோவ்ராம்.!
நன்றி அறிவிலி.! (நான் எழுதிய பதிவுகளிலேயே மிக அதிக ஹிட்ஸ் வாங்கியது 'லீன் என்றால் என்ன?', தமிழ்மணம் விருது வாங்கித் தந்தது 'சிக்ஸ்சிக்மா : ஓர் அறிமுகம்'. துறை சார்ந்தவை என்ற லேபிளை கிளிக் செய்து, படித்துக் கருத்துக்கூறுங்கள்)
நன்றி சிவக்குமரன்.!
நன்றி ரமேஷ்வைத்யா.!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சுபாசு.! (வாத்து முட்டை இடுவது மாதிரியா? செய்துகொண்டுதான் இருக்கிறேன் தோழரே.!)

Anonymous said...

வாழ்த்துக்கள் ஆதி.

'a place for everything and everything in its place'

இதுதான் ஆதி பாடம்.

RAD MADHAV said...

பேர்ல இவ்வளவு வில்லங்கம் இருக்குன்னு இப்பத்தான் தெரியுது.
பேர தாமிரா னு, வச்சாலும், ஆதிமூல கிருஷ்ணன் னு மாத்துனாலும், நீங்க ஒரு தங்க தாமர தான் தல. :-)
பேசாம சுருக்கமா AMK னு வச்சுக்கலாம்ல,
East to call & remember.
ஒண்ணு மட்டும் உண்மை. பேர மாத்துனதும் நெறையா வித்தியாசம் தெரியுது. :-))

கார்க்கி said...

வாழ்த்து சொல்ல வரல.. வாத்தியார் என்ன சொல்றாருன்னு கேட்க வந்தேன். துறை சார்ந்த பதிவுகள் எப்போதும் எனக்கு பிடிக்கும். டாக்டர் மாத்ரூபூதம் இருந்த வரைக்கும் அவரது துறை சார்ந்த விஷயங்கள் தெரிந்துக் கொள்வதில் அத்தனை விருப்பம் எனக்கு. :)))

Anonymous said...

வாழ்த்துக்கள் தல

புதுகைத் தென்றல் said...

சந்தோஷமா இருக்கு ஃப்ரெண்ட்.

இந்த வார நட்சத்திரமா ஜொலிப்பதற்கு என் வாழ்த்துக்கள்.

தங்கமணி பத்தின பதிவை போட மறந்திடாதீங்க!!!

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் ஆதிமூல கிருஷ்ணன்..

அ.மு.செய்யது said...

உங்கள் எஸ் 5 சித்தாந்த விளக்கம் அருமை...

கொஞ்சம் வித்தியாசமான பதிவு..

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் அண்ணே!

தமிழ் பிரியன் said...

நானும் அவ்வப்போது இந்த S5 ல் 4 வரை பாலோ செய்கின்றேன்.. ஆனா அந்த வழக்கமா செய்வது வர மாட்டுது. :(

" உழவன் " " Uzhavan " said...

இப்படி ஒரு பதிவு போடுவீர்கள் என்று தெரிந்திருந்தால், எங்க ஆபிஸில நடந்த 5S ட்ரெய்னிங்கிற்கு போயிருக்கவே மாட்டேன். (ட்ரெயினிங்ல மொக்க போட்டாங்க) :-))
நட்சத்திர வாழ்த்துக்கள்!

அன்புடன்
உழவன்

ச்சின்னப் பையன் said...

ஆரம்பமே அசத்தல்.. நட்சத்திரம் மின்ன வாழ்த்துக்கள்...

விவேக் said...

வாழ்த்துக்கள் நண்பரே !! வளர்க !!

Karthik said...

நட்சத்திர வாழ்த்துகள்..!
:)

Suresh Kumar said...

ஆரம்பமே அசத்தல்.. நட்சத்திரம் மின்ன வாழ்த்துக்கள்...

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தாமிரா. ஆனாலும் ஒரு சந்தேகம். இப்போது தானா நீங்கள் நட்சத்திரம் ஆனீர்கள் என்று.......
ஏற்கனவே கேள்விப்பட்ட தான்; ஆனால் உங்கள் பாணியில் சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது. தங்கமணி பாவம்; இதிலும் அவரை விட மாட்டீர்களா?

மங்களூர் சிவா said...

நட்சத்திர வாழ்த்துகள் அண்ணா :))

மங்களூர் சிவா said...

ஆரம்பமே அசத்தல்..

மங்களூர் சிவா said...

டெக்னிகல் விஷயங்களில் நீங்கள் பயங்கர ஸ்ட்ராங் ஆச்சே.. கலக்குங்க..

மங்களூர் சிவா said...

5 s கான்செப்ட் சிம்பிளா சொல்லிட்டீங்க சூப்பரூ! :)))

மங்களூர் சிவா said...

தொடர்ந்து கலக்குங்கள்

மங்களூர் சிவா said...

குட் ஸ்டார்ட்.

மங்களூர் சிவா said...

வளவளன்னு சொல்லாம ரொம்ப ஜிஸ்ட்டா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

இந்த வாரம் இன்னும் டெக்னிக்கலா எதிர்பார்க்கலாமா?

மங்களூர் சிவா said...

50

ஷைலஜா said...

நட்சத்திர வாழ்த்துகள்!

ஷைலஜா said...

நட்சத்திர வாழ்த்துகள்!

pappu said...

இதெல்லாம் தொடர்ந்து செய்ய முடியுதா?
நீங்க management guya?

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் தாமிரா என்கிற
ஆதிமூலகிருஷ்ணன் அவர்களே!

தமிழன்-கறுப்பி... said...

நல்ல ஆரம்பம் சுருக்கமா நறுக்குன்னு சொல்லியிருக்கிறிங்க... !

மணிகண்டன் said...

தமிழ்மண நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

இப்படி எல்லாம் பிரிச்சி வச்சா தேடும்போது கிடைக்காது !

செய்யற போதே வேலை எல்லாம் திருந்த செஞ்சா என்னைய மாதிரி ஆளுங்களுக்கு வேலை கிடையாது. அதுனால இந்த டெக்னாலஜி - தத்துவமும் ஆகியவற்றை முதாளித்துவ பயங்கரவாத மாநாட்டின் மூலமா எதிர்க்கலாம்ன்னு இருக்கேன்.

அமர பாரதி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தாமிரா.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வேலன் அண்ணே.!
நன்றி மாதவ்.! (ரொம்ப புகழறீங்க..)
நன்றி கார்க்கி.! (அதானே பார்த்தேன்.. அந்த சப்ஜெக்டுலயும் எழுதலாம்னு ஐடியா இருக்குது.. என்னா சொல்றீங்க..)
நன்றி ஆனந்த்.!
நன்றி தென்றல்.! (மெயின் டிஷ் இல்லாமலா.? உண்டு பிரெண்ட்..)
நன்றி செய்யது.!
நன்றி தமிழ்.!
நன்றி உழவன்.! (அப்படியே கொஞ்சம் பின்னாடி போய் சிக்ஸ்சிக்மாவும் கத்துக்கங்க.. இன்னொரு ட்ரெய்னிங் போக வேண்டியதிருக்காது..)
நன்றி சின்னவர்.!
நன்றி விவேக்.!
நன்றி கார்த்திக்.!
நன்றி சுரேஷ்.!
நன்றி சதானந்தன்.!
நன்றி மங்களூர்.!
நன்றி ஷைலஜா.!
நன்றி பப்பு.! (அதெல்லாம் ஊருக்கு மட்டும்தான் ஃபிரெண்ட்)
நன்றி தமிழன்கறுப்பி.!
நன்றி மணிகண்டன்.! (நானும் மாநாட்டுக்கு..)

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமரபாரதி.!

புருனோ Bruno said...

வாழ்த்துக்கள்

ஊர் சுற்றி said...

வாழ்த்துக்கள் தாமிரா (sorry) ஆதிமூல கிருஷ்ணன். உங்க்கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம். வாங்க வந்து கலக்குங்க. :)

நசரேயன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.. நல்ல பயனுள்ள பதிவு

Kasilingam said...

Greetings to Star from another mech engineer. Do write more sci-tech posts.

வெட்டிப்பயல் said...

Nalla pathivu Krish...

Practicala puriyara maathiri attakaasama sollirukeenga. pathivai rendu murai padichen :)

மிஸஸ்.டவுட் said...

5 s கலக்கல் . தாமிரா ஏன் ஆதிமூல கிருஷ்ணன் ஆனார்?இதான் உங்க சான்றிதழ் பெயரா ?ஜொலிக்கட்டும் நட்சத்திரம்.

கீழை ராஸா said...

நட்சத்திரப் பதிவருக்கு நல்வாழ்த்துக்கள்...

அப்புறம் ஒரு சின்ன சந்தேகம்...

தமிழ்மணத்திலே நான் ஒரு நட்சத்திர பதிவரா வரலைன்ன்னா என் பேரை மாத்திக்கறேன்னு சொன்னா ஒரு லாஜிக் இருக்கு...

ஆனா தமிழ்மணத்திலே நட்சத்திர பதிவரா ஆனதினாலே பேரை மாத்திருக்கீங்களே...?

இதைப்பத்தி...?

cheena (சீனா) said...

அன்பின் தாமிரா - அல்ல - ஆதிமூலகிருஷ்ணன் - நடசத்திரப் பதிவருக்கு நல்வாழ்த்துகள்

அமுதா said...

நட்சத்திர வாழ்த்துகள்

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!