Tuesday, March 3, 2009

மதிப்பற்ற செயலை நீங்கள் செய்கிறீர்களா?

‘மதிப்புள்ள காரியங்களை மட்டுமே செய்ய முயலுங்கள்’ என்று புதிய மேலாளர் நேற்று எங்களை நிற்க வைத்து அறிவுரை கூறியபோது ‘அப்படியானால் இவ்வளவு நாள் நாங்கள் மதிப்பில்லாத காரியங்களையா செய்துகொண்டிருந்தோம்?..விட்டேனா பார், அதெப்படி எங்களைப்பார்த்து இவ்வளவு நாட்கள் மதிப்பில்லாத காரியங்களைச் செய்து வந்ததாக கூறலாம்?’ என்று எங்களுக்கு கோபமெல்லாம் வரவில்லை. ஏனெனில் கொஞ்சம் முன்கதையாக சில விஷயங்களை விளக்கினால் அவர் சொன்னது சரிதான் என்பதை உணரமுடியும். முன்னதாக அவர் சொன்ன மதிப்பு (Value) என்பதை நீங்கள் மரியாதை (Respect) என்று அர்த்தம் கொள்ளவில்லைதானே?

இவ்வளவு நேரத்துக்கு இது ஒரு துறை சார்ந்த பதிவு என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள். நீங்கள் நினைப்பது சரிதான்.. உங்களிடம் நல்ல மதிப்பு, மரியாதை மட்டுமல்லாமல் தமிழ்மண விருதையும் வாங்கித் தந்த துறை சார்ந்த பதிவுகளை கொஞ்ச நாளாக கண்டு கொள்ளாமலே இருந்ததை கண்ணன் சுட்டிக்காட்டியபோது ‘அப்படியெல்லாம் ஒன்றும் திட்டமிட்டுச் செய்யவில்லை, மாசம் ரெண்டு எச்சரிக்கை, ரெண்டு அனுபவங்கள், ரெண்டு மொக்கை, ஒரு சினிமா, ஒரு துறை சார்ந்த பதிவுன்னு கரெக்டாதானே போய்க்கினுருக்குது’ என்று சொன்னேன். அதற்கு அவன்.... சரி வெட்டிப்பேச்சு வேண்டாம்.. இந்தப் பதிவே வெட்டிச்செயல்கள் குறித்ததுதான்.

‘நுண்ணிய செயல்காணும் திட்டம்’ (Micro level process mapping), ‘மதிப்பற்ற செயல்கள்’ (NVA - Non Value added Activities) போன்ற பல வார்த்தைகளைக்கூறி உங்கள் அலுவலகத்திலும் மானேஜரோ, ட்ரெய்னரோ அவ்வப்போது ‘வார்த்தைஜாலம்’ காட்டிக்கொண்டிருப்பாங்களே.. ‘என்ன எழவுடா இது? அவ்வப்போது எதுனா புதுசா தெரிஞ்சிக்கினு வந்து நம்பள கலாய்க்கிறதே இவுனுக பொழப்பாப்போச்சிது’ன்னு நீங்களும் பொலம்பியிருப்பீங்களே.. வாங்க என்னன்னு பார்ப்போம். எனது முந்தைய டெக்னிகல் பதிவுகளை படித்திராதவர்கள் எதற்கும் முன்னாடியே சைட் லேபிளில் போய் ‘டெக்னிகல்’ என்பதை கிளிக் செய்து படித்துவிட்டு வந்துவிடுவது நல்லது. ஏனெனில் சில பல பழக்கப்பட்ட வார்த்தைகளை விளக்கவேண்டிய அவசியமில்லாமல் தொடர்ந்து உபயோகிக்க வசதியாகயிருக்கும்.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருக்குறான்.. சை.! ஒரு ஊர்ல ஒரு கொசுவத்தி கம்பெனி இருக்குது. அங்கு என்ன செயல்கள் நடக்கின்றன என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? ‘கொசுவத்தி தயாரிப்பு என்ற செயல் நடக்கிறது’ என்பீர்கள். நோ நோ.. அது பத்தாது எனக்கு. டீடெயிலா சொல்லணும்.. பர்சேஸ்க்கு ஒரு டீம் இருக்குது. அவர்கள் போய் கொசுவத்திக்கு தேவையான கெமிக்கல்ஸ், மற்றும் இதர பொருட்களை வாங்கி வருகிறார்கள். அதை ஸ்டோர்ஸில் இருப்போர் வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டு தினம் தேவைப்படும் அளவை தயாரிப்புக்கு தருகிறார்கள். தயாரிப்பில் இருப்போர் மெஷின்களையும் கருவிகளையும் பயன்படுத்தி அதை கொசுவத்திகளாக மாற்றுகிறார்கள். குவாலிட்டியில் இருப்போர் கொசு சாகிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க கொசுவத்தியை கொளுத்தி வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். டெஸ்பாட்ச்சில் இருப்போர் அதை அழகாக பேக்கிங் செய்து வைக்கிறார்கள். விற்பனைப்பிரிவில் இருப்போர் எப்படியாவது அந்த கொசுவத்தியின் புகழைப்பாடி மயக்கி கஸ்டமர்களை அழைத்து வருகிறார்கள். பைனான்ஸில் இருப்போர் ராஜா மாதிரி வரவு செலவுகளைப் பார்த்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான ராஜா (முதலாளி) லாபத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார். அடேங்கப்பா.. ஒரு கொசுவத்தி கம்பெனியிலேயே எவ்வளவு வேலை நடக்கிறது என்கிறீர்களா? ம்ஹூம்.. நீங்கள் செய்தது ஒரு பறவைப் பார்வை(Bird view)யில் செயல்களைக் காணுதல்(Process mapping). எனக்கு இதுவும் பத்தாது.. இன்னும் கூர்ந்து கவனித்து துல்லியமாக எத்தனை செயல்கள் (Micro level process mapping) நடக்கிறது என சொல்லவேண்டும்.

உதாரணமாக ஒரே ஒரு காரியத்தைப் பார்ப்போம். கொசுவத்தி ரெடியாக இருக்கிறது வண்டியில் ஏற்றவேண்டியதுதான் பாக்கி. பில்லை அதனுடன் அனுப்பவேண்டும். பில்லை(Invoice) தயாரிப்பவரிடம் ஒரு லிஸ்ட் இருக்கும். எந்த மாடல் கொசுவத்தி என்ன விலை என்று.. அதை செக் பண்ணி அவர் பில்லை தயாரிப்பார். பின்னர் அது கையெழுத்துக்காக பைனான்ஸுக்கு போகும்.. அங்கு ஒருவர் உட்கார்ந்து கொண்டு விலை சரியா என்று செக் பண்ணுவார். பிறகே கையெழுத்தாகும். பிறகு வண்டியில் ஏற்றும் போது இன்னொருமுறை பில்லை டெஸ்பாட்சில் இருப்பவர் செக் பண்ணுவார். அவரின் பணி பில் இருக்கிறதா, ஆர்டர் பண்ணிய அளவு சரியாக இருக்கிறதா என்பதை பார்ப்பதாகத்தான் இருக்கவேண்டுமே தவிர விலை சரியாக இருக்கிறதா என லிஸ்ட்டை வைத்துக்கொண்டு பார்ப்பதாக இருக்கக்கூடாது. அப்படி அவரும் அந்த வேலையைச்செய்தால் எதற்காக ஒரே காரியத்தை மூன்று பேர் செய்ய வேண்டும் என்பதே இங்கு எழும் மிக முக்கியமான கேள்வி.

அந்த மூவரில் இருவர் செய்வது நிறுவனத்திற்கு எந்த விதத்திலும் பயன் தராத பயனற்ற, மதிப்பற்ற (NVA) செயலாகும். மூலப்பொருள் விலை, தயாரிப்புச்செலவு, பணியாள் ஊதியம், வந்தது, போனது எல்லாமும் பொருளின் இறுதி விலையில் வைக்கப்படுகிறது. அப்படியானால் நீங்கள் செய்யும் செயலின் மதிப்பு என்பது பொருளின் விலையில் ஒரு பகுதியாக இருக்கிறது. நீங்கள் ஒரு தேவையற்ற காரியத்தை செய்துவிட்டு அதற்கான விலையையும் கஸ்டமரின் தலையில் கட்டுகிறீர்கள் என்பதே இதன் சாராம்சம். இந்த சப்ஜெக்ட் கடலைக்காடு போன்றது. நாம் ஒரு செடியை மட்டுமே பிடுங்கியுள்ளோம். தேவைப்பட்டால் சமயம் வரும்போது மீண்டும் தோண்டலாம்..

.

28 comments:

Mahesh said...

மொத... மொத... மொத,,,,

Mahesh said...

அப்பாடா... பஷ்ட்டு... :))

Mahesh said...

இப்ப QC ல இருந்து Process Re-engineering போயிட்டீங்களா? நல்ல அறிமுகம்... எளிய உதாரணங்கள்...

முரளிகண்ணன் said...

அருமையாக இருக்கிறது தாமிரா. தொடருங்கள். கடலைக்காடு முழுவதையும் காட்டுங்கள்

புதுகைத் தென்றல் said...

அப்படியானால் நீங்கள் செய்யும் செயலின் மதிப்பு என்பது பொருளின் விலையில் ஒரு பகுதியாக இருக்கிறது. நீங்கள் ஒரு தேவையற்ற காரியத்தை செய்துவிட்டு அதற்கான விலையையும் கஸ்டமரின் தலையில் கட்டுகிறீர்கள் என்பதே இதன் சாராம்சம்.//

புரியுது ஃப்ரெண்ட்,

தயாரிப்பு விலை குறைவா இருந்தாலும் வி்ளம்பரம் தரகு விலை எல்லாம் சேர்த்து விற்கப்படும் போது அதன் விலை 3 மடங்காகும்னும் அயித்தான் சொல்லியிருக்காரு.

புதுகைத் தென்றல் said...

value addes service charge அப்படின்னு சொல்லி ஹலோ ட்யூன், எஸ்.எம்.எஸ் இத்யாதிகளுக்கு நம்ம கிட்ட கட்டணத்தை வசூலிக்கறாங்களே இதுவும் இந்த கணக்கில் வருமா?

வால்பையன் said...

தொழில்துறை மற்றும் மேலாண்மை சார்த்த விசயங்களை மிக எளிமையாக விளக்குகிறீர்கள்.
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,
தொடருங்கள் நண்பரே!

இரா.சிவக்குமரன் said...

//நீங்கள் செய்யும் செயலின் மதிப்பு என்பது பொருளின் விலையில் ஒரு பகுதியாக இருக்கிறது. நீங்கள் ஒரு தேவையற்ற காரியத்தை செய்துவிட்டு அதற்கான விலையையும் கஸ்டமரின் தலையில் கட்டுகிறீர்கள் என்பதே இதன் சாராம்சம்.// வேலையே செய்யாம வேலை செய்ஞ்சதா கணக்கு காட்டுற மக்களோட சம்பளத்தையும் இந்த லிஸ்ட்ல கூட்டுங்க..

Indian said...

very good.

ஸ்ரீதர் said...

ok ok .enakku ellaam thelivaaka purinchittuthu.

தராசு said...

அருமை தல,

கடலைக் காட்டை பார்க்க ஆசையா இருக்கு.

அனுஜன்யா said...

பயனுள்ள பதிவு. எளிமையாக விளக்கி புரிய வைக்கும் எழுத்து. தொடருங்கள் தாமிரா.

அனுஜன்யா

narsim said...

//நாம் ஒரு செடியை மட்டுமே பிடுங்கியுள்ளோம். தேவைப்பட்டால் சமயம் வரும்போது மீண்டும் தோண்டலாம்.. .//

நச்..

தாமிரா said...

தேவைதான் எனக்கு.! பாருங்க வழக்கமா வர்றவிங்க கூட வர்ல.. காத்தாடுது.
சரி இதையெல்லாம் ஒரு பொது சேவையா லாபநோக்கு இல்லாமல் செய்யவேண்டியதுதிருக்குது.. ஹும்..!

நன்றி மகேஷ்.! (இன்னும் குவாலிட்டிதான் பாஸ்.. இந்த பதிவில் உள்குத்து இருக்குது கவனிச்சீங்களா?)

நன்றி முரளி.!
நன்றி தென்றல்.!
நன்றி வால்.!
நன்றி புதுவை சிவா.!
நன்றி இந்தியன்.!
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி தராசு.!
நன்றி அனிஜன்யா.!
நன்றி நர்சிம்.!

பரிசல்காரன் said...

அண்ணனுக்கு நெக்ஸ்ட் இயர் தமிழ் மண விருது ரிசர்வுடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு!

//நாம் ஒரு செடியை மட்டுமே பிடுங்கியுள்ளோம். தேவைப்பட்டால் சமயம் வரும்போது மீண்டும் தோண்டலாம்.. //

தாமிரா டச்! :-)

Truth said...

நல்லா இருக்கு தாமிரா. நீங்க எப்படிப் பட்ட ஆணிய புடுங்குறீங்க? (என்னவா வேளை செய்றீங்க :-) )
உங்களுடைய 'நாங்கள் உடற்பயிற்சி செய்த லட்சணம்' படிச்சேன். வயிரு குலுங்க சிரிச்சேன். அம்பத்தூர்லயா இருக்கீங்க? நானும் அங்குட்டு தான் இருக்கேன்.

Mahesh said...

/நன்றி மகேஷ்.! (இன்னும் குவாலிட்டிதான் பாஸ்.. இந்த பதிவில் உள்குத்து இருக்குது கவனிச்சீங்களா?)//

துறை சார்ந்த பதிவுங்கறதால நான் கொஞ்சம் கண்டுக்கிட்டாலும் அப்பறம் சே சே அப்பிடி இருக்காதுன்னு விட்டுட்டேன் :)

தலைப்பு, கொசுவத்தி... ரெண்டுமே சரிக் குத்துதான் :))))))

தாமிரா said...

நன்றி பரிசல்.! (என்னா மாதிரி கிரியேட்டிவிட்டி/ டைமிங்ய்யா உமக்கு.. இன்னும் நிறைய சாதிப்பீர்கள்)

நன்றி முல்லை.!
நன்றி ட்ரூத்.! (எனக்கு பிடிச்ச பதிவுகளில் அதுவும் ஒண்ணு.! அப்புறம் அம்பத்தூரிலிருந்து பெருங்குடிக்கு ஜாகை மாறி ரொம்ப வருஷம் ஆயிடுச்சுங்க)

நன்றி மகேஷ்.! (யோவ்.. சரியான பேக்குய்யா நீரு.. நா சொன்னதே வேற..)

MayVee said...

தாமிர.....
கலக்குறிங்க .......
JURAN , TAGUCHI rangeக்கு பதிவு போடுறிங்க ......

பதிவு உலகத்தின் quality குரு தாமிர வாழ்க

MayVee said...

"Mahesh said...
இப்ப QC ல இருந்து Process Re-engineering போயிட்டீங்களா? நல்ல அறிமுகம்... எளிய உதாரணங்கள்..."

no magesh process re-engineering is a part of QC......

process re-engineering is done to maintain the standard or the quality of the process in order to match with the bench marked process method....

quality process of job process actually leads to attain the desired quality in the final commodity......

so BPR is a part of QC

MayVee said...

அதாவது.....
காலைல உங்க வீட்டுல tiffun நல்ல இல்லாட்டி ......
ஆபீஸ் ல உங்க subordinate உங்க கிட்ட இருந்து திட்டு வாங்குவர் ல ......

உங்க வீடு ல tiffun நல்ல பண்ணின உங்க subordinate escape ல .....

அதுக்கு பேர் தான் process re - engineering

வாழவந்தான் said...

நல்ல பதிவு
தகவல்களுக்கு நன்றி

வாழவந்தான் said...

மொத்த கடலைகாட்டையும் அறுவடை செய்து குவிண்டால் கணக்குல சாகுபடி பண்ணுவோம்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த சப்ஜெக்ட் கடலைக்காடு போன்றது. நாம் ஒரு செடியை மட்டுமே பிடுங்கியுள்ளோம். தேவைப்பட்டால் சமயம் வரும்போது மீண்டும் தோண்டலாம்.. .


தோண்டுங்க தோண்டுங்க
நாங்க பின்னாடியே வந்து தண்ணி ஊத்தறோம்.

மங்களூர் சிவா said...

26

மங்களூர் சிவா said...

நல்ல அறிமுகம்... எளிய உதாரணங்கள்...

மங்களூர் சிவா said...

அருமையாக இருக்கிறது தாமிரா. தொடருங்கள்.