Thursday, March 5, 2009

ஒரு முன்னிரவுப்பொழுதும் அருகே ஓர் இளம்பெண்ணும்..

lovers

எதிர்பாராத தருணங்களை அற்புதக் கணங்களாக்கும் மாயத்தை இந்த வாழ்க்கை வழிநெடுக செய்துகொண்டேதான் இருக்கிறது.  அந்த மொட்டை மாடியின் விளிம்புச்சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருக்கும் அவ‌னுக்கு 23 வ‌ய‌து இருக்கலாம். நில‌வு இவ்வ‌ள‌வு வெளிச்ச‌மாக‌வும் கூட‌ இருக்குமா? இந்த‌ வெளிச்ச‌த்தில் த‌டையின்றி புத்த‌கம் வாசிக்க‌லாம் போல‌ இருக்கிற‌தே? இந்த‌ ம‌ய‌க்கும் ம‌ண‌ம் எங்கிருந்து வ‌ருகிற‌து?

அவ‌ள் சாப்பிடக் கீழே போக‌லாம் என்று அவ‌னை அழைத்த‌போது மெலிதாக‌ ம‌றுத்தான். கொஞ்ச‌ம் நேர‌ம் ஆக‌ட்டும். அவ‌னுக்குப் ப‌சியில்லை.. இர‌வு முழுதும் இப்ப‌டியே இருந்துவிட்டாலும் கூட‌ அவ‌னுக்கு ப‌சியெடுக்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே. இன்னொரு விதத்தில் இந்த மகிழ்ச்சியை இழக்க அவனுக்கு மனமில்லை. இந்த குளிர்ந்த இரவில், தென்றல் தீண்டியதால் அலைபாயும் கூந்தலுடன் அவனருகே இருக்கும் அவளுடன் கழியும் இந்த பொழுதை, கீழே சென்றால் மீண்டும் தொடர இயலாமல் போகலாம். உண்மையில் அவ‌ளுக்கும் ப‌சியில்லை. அவ‌னுட‌ன் மிக‌ மெலிதாக கிசுகிசுப்பாக பேசிக்கொண்டிருக்கும் இந்த‌ நேர‌த்தின் அரிய‌ த‌ன்மையை அறிந்திருந்தாள்.

மேக‌ங்க‌ளே இல்லாத‌ வான‌ம். என்ன‌ இன்று இந்த‌ முழு நிலா இவ்வ‌ள‌வு பெரிதாக‌ இருக்கிற‌து? இவ‌ள் இந்த நிலவொளியில் நின்று கொண்டிருக்கும் இந்த‌க் காட்சியை வ‌ரையும‌ள‌வில் ந‌ம‌க்கு திற‌னிருக்கிற‌தா என்று அவனுள் ஒரு எண்ண‌ம் வ‌ந்து சென்ற‌து. தொட்டுக்கொள்ள‌முடியாத‌ இடைவெளி அவ‌ர்க‌ளுக்கிடையே இருந்த‌து. ஆனால் மெலிதாக‌ பேசிக்கொள்வது தெளிவாக கேட்கும் இடைவெளியாக அது இருந்த‌து.

அவ‌ளுக்கு 20 வ‌ய‌து நிர‌ம்பியிருக்கலாம். அரிதாக‌ இன்று இந்த‌ நீல‌நிற‌ தாவ‌ணியை அணிந்திருக்கிறாள். இவ‌ன் வ‌ந்திருப்ப‌தால் கூட‌ இருக்க‌லாம். மாலையில் வ‌ந்த‌வ‌ன் இன்று இர‌வு த‌ங்க‌ நேரிடும் என்று அவ‌னும் நினைத்திருக்க‌வில்லை. அவ‌ளும் நினைத்திருக்க‌வில்லை. அவ‌ள‌து தாவ‌ணியின் நிற‌ம் இந்த‌ இர‌வோடு க‌ல‌ந்திருந்த‌து. க‌றுப்பு வெள்ளை ஓவிய‌ம் போல‌ இருந்தாள்.  அந்த‌ச்சூழ‌லிலேயே எந்த‌ வ‌ண்ண‌ங்க‌ளும் க‌வ‌ன‌ம் க‌லைப்ப‌தைப்போல‌ இல்லாதிருந்த‌தை உண‌ர்ந்தான். நிமிட‌ங்க‌ளாக‌ மௌன‌ம் நில‌விக்கொண்டிருந்த‌து. க‌டைசியாக‌ என்ன‌ பேசினாள்? அவ‌ன் கைக‌ளை மார்புக்குக் குறுக்காக‌ இறுக்கிக்க‌ட்டிக்கொண்டு பெருமூச்சொன்றை வெளிப்ப‌டுத்தினான். என்ன‌ என்ப‌தைப்போல‌ அவ‌ள் அவ‌னைப் பார்த்தாள். அவ‌ள் க‌ண்க‌ள் ப‌ளப‌ள‌வென‌ மின்னுகிற‌து. அந்த‌க்க‌ண்க‌ளில் குறிப்பு எதுவும் உள்ள‌தா? 

ஏன் இவ‌ன் மீது என‌க்கு இந்த‌ ஈர்ப்பு? அவ‌ளுக்குள்ளும் இவ‌ன் ம‌ன‌தின் அதே எண்ண‌ங்க‌ளே ஓடிக்கொண்டிருந்த‌து. எது இவ‌ன்பால் என்னை ம‌ய‌க்கி இழுக்கிற‌து. புரிய‌வில்லை அவ‌ளுக்கு. யுக‌ம் தோறும் ஆணும் பெண்ணும் ஒருவ‌ரையொருவ‌ர் உள்வாங்கிக்கொள்ள‌ விழையும் அதே உண‌ர்வுதானா? ப‌ல்கிப்பெருக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே பார்வையைத்தான் இவ‌ன் மேல் நானும், என் மீது அவ‌னும்
வீசிக்கொண்டிருக்கிறோமா? அப்ப‌டியெனில் இது ஏன் இன்னொருவ‌ன் மீது எனக்குத் தோன்ற‌வில்லை? ச‌மூக‌ ஒழுக்க‌ங்க‌ள் என்ற‌ மாயையில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌தால் நான் செய்த‌ தேர்வா இவ‌ன் என‌க்கு? ச‌மாதான‌மாக‌வில்லை அவ‌ள் ம‌ன‌து.

'சாப்பிட‌ப்போக‌லாம் பாஸ்கி'  என்றபடி அவள் அவ‌ன் கைக‌ளைப் ப‌ற்றினாள்.

.

37 comments:

அனுஜன்யா said...

Me the first

அனுஜன்யா said...

இது தாமிரா பதிவுதானே? அனுஜன்யா கவித மாதிரி ஒண்ணுமே புரியல பாசு. நல்லா எழுதியிருக்கீங்கன்னு புரியுது.

அனுஜன்யா

RAD MADHAV said...

KalanKaaththaala olunga vela paakka vida mattengale???? 'Mood' yengengeyooo suththa aarampichiruchu?
Innaikku pulappu poni aanappulathaan?
Ippa romba santhosam thaane???
:-))

புதுகைத் தென்றல் said...

எதிர்பாராத தருணங்களை அற்புதக் கணங்களாக்கும் மாயத்தை இந்த வாழ்க்கை வழிநெடுக செய்துகொண்டேதான் இருக்கிறது. //

ஆமாம் தாமிரா,

உங்களுடைய இந்தப்பதிவும் அதுல ஒண்ணு.

வரிகள் உணர்த்திய உணர்ச்சிகள் அற்புதம்.

கார்க்கி said...

என்னங்க சொல்ல வர்றீங்க? என் மரமண்டைக்கு புரியல..

இரா.சிவக்குமரன் said...

என்னங்க சொல்ல வர்றீங்க?

narsim said...

எது இவ‌ன்பால் என்னை ம‌ய‌க்கி இழுக்கிற‌து. புரிய‌வில்லை அவ‌ளுக்கு. யுக‌ம் தோறும் ஆணும் பெண்ணும் ஒருவ‌ரையொருவ‌ர் உள்வாங்கிக்கொள்ள‌ விழையும் அதே உண‌ர்வுதானா? ப‌ல்கிப்பெருக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே பார்வையைத்தான் இவ‌ன் மேல் நானும், என் மீது அவ‌னும்
வீசிக்கொண்டிருக்கிறோமா? அப்ப‌டியெனில் இது ஏன் இன்னொருவ‌ன் மீது எனக்குத் தோன்ற‌வில்லை? ச‌மூக‌ ஒழுக்க‌ங்க‌ள் என்ற‌ மாயையில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌தால் நான் செய்த‌ தேர்வா இவ‌ன் என‌க்கு? ச‌மாதான‌மாக‌வில்லை அவ‌ள் ம‌ன‌து.
//

நச் தாமிரா.. அடுத்த கட்டம்??

பரிசல்காரன் said...

//அனுஜன்யா said...

இது தாமிரா பதிவுதானே? அனுஜன்யா கவித மாதிரி ஒண்ணுமே புரியல பாசு. நல்லா எழுதியிருக்கீங்கன்னு புரியுது.

அனுஜன்யா//

ஹா..ஹா..ஹா....

தாமிரா said...

நன்றி அனுஜன்யா.! (முதல்ல பின்னூட்டம் போடுறவங்க கண்டிப்பா பாராட்டிதான் எழுதுணும்னு தெரியாதா? என்னங்க நீங்க.. பெரும்பாலும் அந்த ஃபீல்தான் அடுத்து வரும் பின்னூட்டங்களை தொற்றிக்கொள்ளும்.. பாருங்க.. கார்க்கியை.! இனி எல்லோரும் வரிசையா கலாய்க்கப் போறாங்க.. நானேதோ.. அழகான ஒரு காதல் காட்சியை விளக்கிய மகிழ்ச்சியில் சந்தோஷமா இருக்க எல்லோரும் போட்டு மொத்தப் போறாங்க.. நீங்க இன்னும் ஒருபடி மேலப்போயி பின்நவீன (உங்க) ரேஞ்சுக்கு ஒப்பிட்டுத்தாக்கிட்டீங்களே.. அவ்வ்வ்வ்..)

தாமிரா said...

நன்றி மாதவ்.!
நன்றி தென்றல்.!
நன்றி கார்க்கி.!
நன்றி சிவக்குமரன்.!
நன்றி நர்சிம்.! (ச‌மீப‌த்தில் உண்மைத்த‌மிழ‌னின் ஒரு பின்னூட்ட‌த்தை உங்கள் பதிவில் க‌ண்டேன். ந‌ல்லாயிருந்த‌து இல்ல?)
நன்றி பரிசல்.!

RAD MADHAV said...

Summa iruntha sanga oothi vittuputtu nanri yaa?
Thalaiva, Inga moonu naal leave.
Naangallam enna pannurathu.
Indha maathiri post ellam pottu enga pinju manasa noga vidureengala, idhu niyaayammaa???????

ஸ்ரீமதி said...

:))

தராசு said...

என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது, ஆனா என்ன சொல்றீங்கன்னு தெரியல,

தாமிரா said...

கூல். கூல்.. மாதவ்..

நன்றி ஸ்ரீமதி.

அனைவருக்கும் :
இணைக்கப்பட்டுள்ள படத்தில் கூர்ந்து அவள் தோளில் சாய்ந்திருக்கும் அவனை கவனித்துவிட்டீர்கள்தானே.. ரசித்துவிட்டீர்கள்தானே..

தாமிரா said...

நன்றி தராசு.!

ஸ்ரீமதி said...

//இணைக்கப்பட்டுள்ள படத்தில் கூர்ந்து அவள் தோளில் சாய்ந்திருக்கும் அவனை கவனித்துவிட்டீர்கள்தானே.. ரசித்துவிட்டீர்கள்தானே..//

யாழ்???

எம்.ரிஷான் ஷெரீப் said...

அழகான வரிகள்.
தொடரட்டும் !

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு தாமிரா..நீங்கள் சொல்லாமல் விட்டதுதான் நிறைய அர்த்தங்கள் தருகிறது..இல்லையா?! :-)

தாமிரா said...

ஸ்ரீ : என்னங்க நீங்க? நான் இடது தோளைச்சொன்னேன்ங்க..

நன்றி ரிஷான்.! (நம்ப கடைப்பக்கமெல்லாம் வர்றீங்களா?)

நன்றி சந்தனமுல்லை.! (மகிழ்ச்சியான பின்னூட்டம். இதை நான் சொன்னா நம்ப டீம்ல கிண்டல் பண்ணுவாய்ங்க.. தேவையா எனக்கு?)

வெயிலான் said...

மிகவும் நன்றாக இருக்கிறது சகோதரரே!

இப்படி பதிவுகளும் அடிக்கடி எழுதுங்கள்.

ஸ்ரீமதி said...

அச்சச்சோ ஆமா... :)) சாரி அண்ணா.. :((

மணிகண்டன் said...

தாமிரா, இப்படி சஸ்பென்சா கதையா விட்டுடீங்களே ?

என்ன ஸ்டைல் சாப்பாடுன்னு சொல்லி இருந்தா நல்லா இருந்து இருக்குமே ! வெளிநாட்டுல இருந்துகிட்டு சாப்பாடு ஒழுங்கா கிடைக்காத எங்கள இதுக்கு மேல வெறுப்பேத்த வேண்டாம்ன்னு விட்டுட்டீங்களா ?

மிஸஸ்.டவுட் said...

ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கிய கவிதையைப் படித்த உணர்வு இந்தப் பதிவில் .நல்ல ரசனை ! எந்த வரிகளை மேற்கோள் காட்டவென்று தெரியவில்லை...எல்லா வரிகளும் நன்றே.பதிவை வாசிக்கும் போது கொஞ்சம் சோகம் இழையோடுவது போன்றதோர் உணர்வு.அது ஏன்? (தங்கமணி பதிவுகளின் டச் காணோமே என்றிருக்குமோ?!)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு பதிவா நெனைக்காம, மொத்தமும் வார்த்தைக் கோவைகளா பார்த்தா இது ஒரு அருமையான பதிவு.

வழக்கமான தாமிரா டச் இதுல தெரியல.

யுக‌ம் தோறும் ஆணும் பெண்ணும் ஒருவ‌ரையொருவ‌ர் உள்வாங்கிக்கொள்ள‌ விழையும் அதே உண‌ர்வுதானா? ப‌ல்கிப்பெருக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே பார்வையைத்தான்//
சூப்பர்

எதிர்பாராத தருணங்களை அற்புதக் கணங்களாக்கும் மாயத்தை இந்த வாழ்க்கை வழிநெடுக செய்துகொண்டேதான் இருக்கிறது
...ம்
ஆரம்பமே அசத்தலாய்

தாமிரா said...

நன்றி வெயிலான்.!
நன்றி ஸ்ரீ.! (பரவால்லபா)

நன்றி மணிகண்டன்.! (யோவ்.. நா எவ்ளோ அளக்கா லவ் பத்தி பீல் பண்ணிக்கினுருக்கேன். நீ துன்ற நெனப்புலயே இருக்கியே.. பட் ஐ லைக் திஸ் அப்ரோச்.. பாத்ரூம் வழியா எகிறி குதிச்சா கூட சாப்புடற இடத்துக்கு போயிடலாம் இல்ல பாஸ்!)

நன்றி அமித்து அம்மா.! (கொஞ்சம் சீரியஸா திங்க் பண்ணிருக்கேன்ல.. அதான் காமெடி டச் வேணாமேன்னு..)

எம்.எம்.அப்துல்லா said...

வந்ததுக்கு அட்டெண்டன்ஸ மட்டும் போட்டுக்கங்க. ஒன்னியும் புர்யல....நானு வர்ட்டா...பை

:))

MayVee said...

:-))

Saravana Kumar MSK said...

நம்ம தாமிரா அண்ணாவா இது??

Saravana Kumar MSK said...

அழகியல் வரிகள் இருந்தபோதும், இந்த கடைசி வரிகள்

//ப‌ல்கிப்பெருக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே பார்வையைத்தான் இவ‌ன் மேல் நானும், என் மீது அவ‌னும் வீசிக்கொண்டிருக்கிறோமா? அப்ப‌டியெனில் இது ஏன் இன்னொருவ‌ன் மீது எனக்குத் தோன்ற‌வில்லை? ச‌மூக‌ ஒழுக்க‌ங்க‌ள் என்ற‌ மாயையில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌தால் நான் செய்த‌ தேர்வா இவ‌ன் என‌க்கு?//

பல நுண் கேள்விகளை எழுப்புகிறது.

Saravana Kumar MSK said...

//யுக‌ம் தோறும் ஆணும் பெண்ணும் ஒருவ‌ரையொருவ‌ர் உள்வாங்கிக்கொள்ள‌ விழையும் அதே உண‌ர்வுதானா? ப‌ல்கிப்பெருக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே பார்வையைத்தான் இவ‌ன் மேல் நானும், என் மீது அவ‌னும்
வீசிக்கொண்டிருக்கிறோமா? அப்ப‌டியெனில் இது ஏன் இன்னொருவ‌ன் மீது எனக்குத் தோன்ற‌வில்லை? ச‌மூக‌ ஒழுக்க‌ங்க‌ள் என்ற‌ மாயையில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌தால் நான் செய்த‌ தேர்வா இவ‌ன் என‌க்கு?//

யோசிக்க யோசிக்க நுண்ணரசியல்கள் புலப்படுகிறது..
ஒருவேளை அண்ணன் பைத்தியக்காரன் இங்கு வந்தால், இன்னும் சிலவும் சொல்லக்கூடும்.

கும்க்கி said...

அனுஜென்யா சென்னை வந்து ரொம்ப கெடுத்துவச்சிட்டார் போல்ருக்கே...
கவிதைகளுக்குண்டான வரிகள்...கதையாய்..அழகு.

Anonymous said...

:))

மணிகண்டன் said...

****
நன்றி மணிகண்டன்.! (யோவ்.. நா எவ்ளோ அளக்கா லவ் பத்தி பீல் பண்ணிக்கினுருக்கேன். நீ துன்ற நெனப்புலயே இருக்கியே.. பட் ஐ லைக் திஸ் அப்ரோச்.. பாத்ரூம் வழியா எகிறி குதிச்சா கூட சாப்புடற இடத்துக்கு போயிடலாம் இல்ல பாஸ்!)
****

நீங்க யூத் ஸ்டைல்ல பதிவு போட்டீங்க. நான் யூத் ஸ்டைல்ல பின்னூட்டம் போட்டா புரிஞ்சிக்க முடியல ! ஒரே ஒரு scenario தரேன். ஒருத்தன் புதுசா கல்யாணம் ஆகி இருக்கான். அவனோட கம்பனில அவன மட்டும் வெளிநாடு விரட்டி விட்டுட்டாங்க. அப்ப இந்த பதிவ படிச்சுட்டு இப்படி ஒரு பின்னூட்டம் போட்டா !

Kathir said...

ரொம்ப ரசித்தேன் அண்ணே.
நல்லா இருக்கு...

:))

Vijay said...

//சந்தனமுல்லை said...
நல்லாருக்கு தாமிரா..நீங்கள் சொல்லாமல் விட்டதுதான் நிறைய அர்த்தங்கள் தருகிறது..இல்லையா?! :-)
March 5, 2009 2:20 PM
நன்றி சந்தனமுல்லை.! (மகிழ்ச்சியான பின்னூட்டம். இதை நான் சொன்னா நம்ப டீம்ல கிண்டல் பண்ணுவாய்ங்க.. தேவையா எனக்கு?)//

நீங்க வேற முல்லை. தாமிரா வேணூம்னா சொல்லாம விடறாரு. அதுக்கு மேல தெரியாமதான இப்பிடி கொடுமை எல்லாம் நடக்குது. இத வேற ஆதரிச்சிடீங்களா. அய்யோ.. தாமிரா இன்னும் 2 பதிவாவது இந்த ரேஞ்சுல போடாம விடமாட்டாரு பாருங்க… சும்மா டமாசு தாமிரா. வரிகள் உண்மையிலேயே அற்புதம். மொத்தமா புரியாட்டியும், பிட் பிட்டா புர்துபா.

ஸ்ரீதர் said...

என்னமோ சொல்ல வரீங்க....ஆனா..என்னன்னுதான் புரியல தாமிரா.அடுத்த பார்ட் வருமா ? பாதில முடிஞ்ச மாதிரி இருக்கேன்னு கேட்டேன்.

மங்களூர் சிவா said...

ஸ்ஸப்ப்ப்ப்பா.............