Friday, March 6, 2009

த்ரீ இன் ஒன்..

 

நான் அந்த விஷயத்தை சொன்னபோது கண்ணன் விழுந்து விழுந்து சிரித்தான். ஒண்ணுமில்லைங்க.. நேற்று நான் ரொம்ப சூப்பரா ஒரு பதிவு எழுதியிருந்தேன்ங்க.. (அப்பிடியான்னு ஆச்சரியப்படக்கூடாது). அதை ஒரு பெரிய பின்நவீனத்துவ ரேஞ்சுக்கு உருவகப்படுத்தி நம்ப 'ரெகுலர் கஸ்டமர்களெ'ல்லாம் போட்டு வறுத்துட்டாங்க.. புர்ல புர்லன்னு பொலம்பல் வேறு. எனக்குன்னா ஒரே அழுவாச்சியா போச்சுது.

அதெப்படி புரிலன்னு சொல்லலாம், அதை விளக்கி இன்னொரு பதிவுப்போடப்போறேன்னு சொன்னதுக்குதான் கண்ணன் அப்படிச் சிரித்தான்.

'இன்னாடா நீ வேற கடுப்பேத்துற.. இப்ப என்ன.. அந்தக்கதையை விளக்கமா சொல்லப்போறேன்னுதானே சொல்றேன் அதுக்கு என்ன இளிப்பு?'

'போடா போய் புள்ள‌குட்டிய படிக்கவைய்டா.. நீ எழுதுன எல்லாமே எல்லாருக்குமே புரிஞ்சா மாதியும், சரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டா மாதியும், இது மட்டும் ஜஸ்ட் மிஸ்ஸான மாதியுமில்ல பேசுற.. புர்ஞ்சுதோ, புர்லயோ அடுத்து என்ன மொக்க போடலான்னு பாப்பியா? அத விட்னு வெளக்குறாராமாம்..'

******

சமீபத்தில் நர்சிம் எழுதிய 'பின்பற்றுபவர்கள்.. முன்பற்றும் பரிசல்' என்ற பதிவில் மூத்த(ஹிஹி) பதிவர் உண்மைத்தமிழன் ஒரு பின்னூட்டமிட்டுள்ளார்.

'வால்பையன், பரிசல், நர்ஸிம், அப்துல்லா, வெண்பூ, தாமிரா, வெயிலான், கார்க்கி, புதுகைத் தென்றல் என்ற இந்தக் குழுமத்தின் வளர்ச்சியும், எழுச்சியும்தான் வலைப்பதிவுலகத்தின் மிக முக்கியமான காலக்கட்டம். ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் சிறந்து விளங்க ஆசைப்படாமல், தங்களது கூட்டணியை முன்வைத்தே அனைத்துப் பதிவுகளையும் படைத்ததுதான் சிறப்பு...'

என்று நீ..ள்கிறது அந்த பின்னூட்டம். எனக்கு இந்த பின்னூட்டம் மிகவும் மகிழ்வைத் தந்தது. இந்த குழுவில் இன்னும் சிலரை அவர் குறிப்பிடாது விட்டிருந்தாலும் அது அவர்களையும் கண்டிப்பாக குறிப்பதாகவே நான் கருதுகிறேன். இந்த புகழ்ச்சி ஊக்கத்தைத் தருகிறது. நன்றி உண்மைத்தமிழன்.

ஆனால் அதில் ஒரு சிறிய மாற்றுக்கருத்து எனக்கு இருக்கிறது. அவர் சொன்னதைப்போல கூட்டணியின் நட்பை விட்டுத்தராமல் குழுவாகவே இயங்கி வந்தாலும், அவரவருக்குரிய தனித்தன்மையை நிரூபிக்கவும் போராடிவருகிறோம் என்றும், பொறாமையில்லாத பிறர் வெற்றியையும் தனதாய் மகிழ்கிற மனமிருக்கும் அதே வேளையில் கடும் போட்டியும் ஒவ்வொருவருக்கிடையேயும் இருக்கிறது என்றும் அது எங்களை மேலும் செதுக்குவதாக அமையும் என்றும் நான் எண்ணுகிறேன். சரிதானே தோழர்ஸ்.?

நேரமின்மையால் எங்களுக்குப்பிறகு வந்த பதிவர்களை கூர்ந்து கவனிக்கமுடியாமல் இருக்கிறேன். நண்பர்களாவது அதைச்செய்து இந்தக்குழுவில் புதியவர்களை இணைத்து இன்னும் போட்டியை வலுவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

******

சமீபத்தில் டிவியில் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. டைட்டில் முடிந்து காட்சி ஆரம்பிக்கிறது. ஹீரோ அறிமுகம். ஒரு பெரிய ஆற்றங்கரையில் தண்ணீரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். பக்கத்தில் ஒரு மீனவர் மீன் பிடித்துச் செல்கையில் அவரை மறித்து அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி அந்த மீன்களை மீண்டும் ஆற்றிலேயே விடுகிறார். (ஷூட்டிங்கில் எவ்வளவு நேரம் ஆகியதோ.. அதற்குள் எல்லா மீன்களும் இறந்து சொத் சொத்தென தண்ணீரில் விழுந்தன). மீனவர் புல்லரித்துப் போய் ‘ஏன் தம்பி பணம் கொடுத்து வாங்கி மீனை தண்ணீரிலேயே விடுறீங்க?’ என்று கேட்க, ‘உனக்கு மீனை விற்றால் மகிழ்ச்சி, இந்த மீன்களுக்கு தண்ணீரில் இருந்தால் மகிழ்ச்சி. எனக்கு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தால் மகிழ்ச்சி’ என்று வசனம் வேறு. இது பரவாயில்லை.. இனிதான் விஷயமே..

அடுத்த காட்சி. ஹீரோயின் அறிமுகம். ஒரு ஏல நிறுவனம் கூண்டுக்குள்ளிருக்கும் ஜோடிப்புறாவை ஏலம் விட ஹீரோயின் அதை பெரிய விலை கொடுத்து வாங்கி வெளிவந்து அந்தக் கூண்டைத் திறந்து புறாக்களை பறக்கவிடுகிறார்.(நல்ல வேளையாக புறாக்கள் பறக்கின்றன.) பக்கத்திலிருப்பவர் ‘ஏன்மா இப்படி பண்ற?’ என்று கேட்க அதே மகிழ்ச்சி வசனம் ரிப்பீட்டு. ஹீரோ கொஞ்ச தூரத்தில் இருந்து புல்லரித்தவாறே கவனித்துக்கொண்டிருக்கிறார். எனக்கு அதற்கு மேலும் அதைப்பார்க்க துணிவில்லாததால் சானல் மாறினேன்.

மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.. பார்த்தது கையளவு, பார்க்காதது உலகளவு (என்னது? மொக்கைதான்).

.

43 comments:

ஸ்ரீமதி said...

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி நாந்தான் முதல்ல :))

ஸ்ரீமதி said...

நேத்து போட்ட கத நல்லா தான் அண்ணா இருந்தது :))

ஸ்ரீமதி said...

பின்னூட்டம் நானும் பார்த்தேன்... :)) உங்கள் கருத்து உண்மை அண்ணா.. :)) மற்றும் வாழ்த்துகள் இன்னும் வளர.. :))))

ஸ்ரீமதி said...

ஏதாவது தெலுங்கு படமா?? இல்ல தமிழே இப்படியா?? (சாரி அதிகம் படம் பார்த்ததில்ல அதான்.. :(( )

ஸ்ரீமதி said...

மற்றபடி, பதிவு சூப்பர்.. :))) முதல் முதல்ல உங்க பதிவுல முதல் பின்னூட்டம் போட்டதும் மகிழ்ச்சி.. :))) (யப்பா எத்தன முதல் :O)..

எம்.எம்.அப்துல்லா said...

//நேரமின்மையால் எங்களுக்குப்பிறகு வந்த பதிவர்களை கூர்ந்து கவனிக்கமுடியாமல் இருக்கிறேன். நண்பர்களாவது அதைச்செய்து இந்தக்குழுவில் புதியவர்களை இணைத்து இன்னும் போட்டியை வலுவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் //

அ.மு.செய்யது , சகோதரி வித்யானு புது ஆளுங்களும் நம்ப குழுவில் இணைந்து ரொம்ப நாளாச்சு

:)

ஸ்ரீமதி said...

//எம்.எம்.அப்துல்லா said...
//நேரமின்மையால் எங்களுக்குப்பிறகு வந்த பதிவர்களை கூர்ந்து கவனிக்கமுடியாமல் இருக்கிறேன். நண்பர்களாவது அதைச்செய்து இந்தக்குழுவில் புதியவர்களை இணைத்து இன்னும் போட்டியை வலுவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் //

அ.மு.செய்யது , சகோதரி வித்யானு புது ஆளுங்களும் நம்ப குழுவில் இணைந்து ரொம்ப நாளாச்சு

:)//

அப்போ நானு??? :(((((

தமிழ் பிரியன் said...

நானும் சமீபத்தில் அந்த படத்தைப் பார்க்க நேர்ந்த அவலத்தை யாருக்கும் சொல்ல மாட்டேனே,... ;-0

தமிழ் பிரியன் said...

///ஸ்ரீமதி said...

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி நாந்தான் முதல்ல :))//
காலைல ஆபிஸ் வந்ததும் கும்மியா? என்ன கொடுமய்யா இதெல்லாம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பாபு said...

உள்ளேன் ஐயா

கார்க்கி said...

//அ.மு.செய்யது , சகோதரி வித்யானு புது ஆளுங்களும் நம்ப குழுவில் இணைந்து ரொம்ப நாளாச்சு

:)//

அப்போ நானு??? :(//

நீ எப்பவோ ஒருக்கேனு சொல்றாரு..

நீயெல்லாம் இருக்கனு தெரிஞ்சா அவரு அபப்டி சொல்லியிருக்கவே மாட்டாரு.. போ போ போய் வேலையை பாரு

அ.மு.செய்யது said...

//கடும் போட்டியும் ஒவ்வொருவருக்கிடையேயும் இருக்கிறது என்றும் அது எங்களை மேலும் செதுக்குவதாக அமையும் என்றும் நான் எண்ணுகிறேன். சரிதானே தோழர்ஸ்.? //

நிச்சயமாக..மாற்று கருத்து இல்லை.

ஆரோக்கியமான போட்டிகள் தான் பதிவுலக வளர்ச்சிக்கு வித்திடும்.

புதுகைத் தென்றல் said...

அவரவருக்குரிய தனித்தன்மையை நிரூபிக்கவும் போராடிவருகிறோம் என்றும், பொறாமையில்லாத பிறர் வெற்றியையும் தனதாய் மகிழ்கிற மனமிருக்கும் அதே வேளையில் கடும் போட்டியும் ஒவ்வொருவருக்கிடையேயும் இருக்கிறது என்றும் அது . சரிதானே தோழர்ஸ்.?//

மத்தவங்களைப்பத்தி தெரியலை ஃப்ரெண், எனக்கும் உங்களுக்கும் தங்கமணி, ரங்கமணி மேட்டர்ல கண்டிப்பா போட்டி. :))))))))


எங்களை மேலும் செதுக்குவதாக அமையும் என்றும் நான் எண்ணுகிறேன்//

வழிமொழிகிறேன்.

அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...

அ.மு.செய்யது , சகோதரி வித்யானு புது ஆளுங்களும் நம்ப குழுவில் இணைந்து ரொம்ப நாளாச்சு..//

கண்கள் பனிக்கின்றன அப்துல்லா அண்ணே !!!!!

அனுஜன்யா said...

ஒரு புர்லக்கே இத்தினி பீலிங்க்சுனா, எனக்கு வெண்பூவும், நீயும் எத்தினி தபா சொல்லியிருப்பீங்க? பில்டிங் சும்மா ஸ்ட்ராங்கா நிக்கல?

த்ரி இன் ஒன் நல்லா இருக்கு. இதுதான் பத்தி எழுத்தின் துவக்கமா? வாழ்த்துகள்.

ஆமா, ஒரு குருப்பா இருந்தாலும், தனித்தன்மை இருப்பதை மறுக்க முடியாது. போட்டி வேண்டும். ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உண்மைத் தமிழன் குறிப்பிட்ட அனைவருக்கும் தனித் தனி எழுதும் நடையும், தொகுதியும் (பின்தொடரும் நண்பர்கள்), எழுது களமும் இருப்பதை மறுக்க முடியாது. பொதுவானது அவ்வப்போது அடிக்கும் கும்மியும், மொக்கைகளும். whats wrong in it!

//பார்த்தது கையளவு, பார்க்காதது உலகளவு (என்னது? மொக்கைதான்).//

ஹா ஹா.

அனுஜன்யா

அனுஜன்யா said...

கார்க்கி, சும்மா ஸ்ரீமதியைக் கலாய்க்காதே! She is a phenom ! எத்தனைப் பெண் பதிவர்களுக்கு நூறு (கிட்டத்தட்ட) பி.தொ. இருக்கிறார்கள்?

ஸ்ரீ, இதுக்காக எல்லாம் வருத்தப்பட்டு வேலை செய்யப் போய் விடாதே. அப்புறம் இந்தியாவின் GDP தாங்க முடியாமல் எகிறிவிடும். :))

அனுஜன்யா

தாமிரா said...

நன்றி ஸ்ரீமதி.! (ஏதாவது தெலுங்கு படமா?? இல்ல தமிழே இப்படியா??// தமிழ்தாங்க.. //அதிகம் படம் பார்த்ததில்ல அதான்.. // அப்படியே மெயின்டய்ன் பண்ணுங்க.. அதான் உங்களுக்கு நல்லது)

நன்றி அப்துல்.! (அ.மு.செய்யது , சகோதரி வித்யானு புது ஆளுங்களும் நம்ப குழுவில் இணைந்து ரொம்ப நாளாச்சு// ..மேலும் லிஸ்ட் தந்தால் படிக்கவும் இணைப்புத் தரவும் வசதியாக இருக்கும் தல..)

நன்றி தமிழ்.!

நன்றி பாபு.!

நன்றி கார்க்கி.!

நன்றி செய்யது.. வாழ்த்துகள்.!

நன்றி தென்றல்.!

நன்றி அனுஜன்யா.! (எனக்கு வெண்பூவும், நீயும் எத்தினி தபா சொல்லியிருப்பீங்க?// என்ன பழிவாங்கலா? அவ்வ்வ்வ்வ்வ்..
// பில்டிங் சும்மா ஸ்ட்ராங்கா நிக்கல? // ROTFL..)

சந்தனமுல்லை said...

:-)

அறிவிலி said...

அய்யய்யோ!! புரிஞ்சுருச்சு...

கும்க்கி said...

:-))

கும்க்கி said...

ஒரு சினிமாவ முழுசா பார்த்து விமர்சனம் எழுத மாட்டீங்களா..?
நம்மாளுங்க எவ்ளோ டமில் சிலிமா பார்த்து எழுதி தள்ளிட்டேயிருக்காங்க...

தாமிரா said...

நன்றி முல்லை.!
நன்றி அறிவிலி.! (ரசனையான கமென்ட்..)
நன்றி கும்க்கி.!

எம்.எம்.அப்துல்லா said...

//அப்போ நானு??? :(((((

March 6, 2009 9:42 AM

//


அட நீயும்தான் :))))

Kathir said...

//ஒண்ணுமில்லைங்க.. நேற்று நான் ரொம்ப சூப்பரா ஒரு பதிவு எழுதியிருந்தேன்ங்க.. (அப்பிடியான்னு ஆச்சரியப்படக்கூடாது)//

நல்லா தான் இருந்ததுங்க...
தஙகமணி பற்றிய கும்மிகளுக்கு நடுவுல இது போலவும் எழுதுங்க அண்ணே...

:))

வித்யா said...

அப்துல்லா அண்ணே உங்க பாசத்த நான் என்னன்னு சொல்லுவேன். கூப்பிட்டு கொ.ப.செ பதவி குடுத்தீங்க. இப்போ குரூப்ல வேற சேர்த்துக்கிட்டீங்க. அந்த அளவுக்கு நான் வொர்த் இல்லன்னாலும் ஏதோ உங்க பேர கெடுக்காம இருக்கேன்:)

தராசு said...

அப்ப நீங்கெல்லாம் ஒரு குரூப்பாத்தான் திரியறீங்களா?

நடத்துங்க, நடத்துங்க

புருனோ Bruno said...

//ஆனால் அதில் ஒரு சிறிய மாற்றுக்கருத்து எனக்கு இருக்கிறது. //

எனக்கும் இருக்கிறது !!! நான் சொன்னால் அது எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்று சந்தேகம் இருந்ததால் சொல்லவில்லை :) :)

வெயிலான் said...

// பொறாமையில்லாத பிறர் வெற்றி //

இதே வார்த்தையைத்தான் நேற்று உண்மைத் தமிழனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னேன்.

Mahesh said...

அண்ணே... நேத்து உங்க பதிவைப் பாத்துட்டு (படிச்சு புரியலன்னா பாத்த மாதிரிதானே அர்த்தம்?) கண்ணுல தண்ணி கட்டிடுச்சு... எப்பிடி இருந்த ஆளு இப்பிடி ஆயிட்டாரேனுதான்...

இஎதப் பதிவுல மொத பாரா படிச்சுட்டு... அய்யய்யோ எங்க விளக்கிடுவாரோன்னு பயந்தேன்... நல்ல வேளை.. தப்பிச்சோம் :))

ரெண்டாவது செய்தி - hats off !!

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்று கேட்க அதே மகிழ்ச்சி வசனம் ரிப்பீட்டு. ஹீரோ கொஞ்ச தூரத்தில் இருந்து புல்லரித்தவாறே கவனித்துக்கொண்டிருக்கிறார். எனக்கு அதற்கு மேலும் அதைப்பார்க்க துணிவில்லாததால் சானல் மாறினேன்.

நீங்களுமா தாமிரா, நானும் அதை பார்த்து தொலைச்சு அதுக்கு மேல பார்க்க முடியாம சேனல் மாற்றினேன்

'போடா போய் புள்ள‌குட்டிய படிக்கவைய்டா.. நீ எழுதுன எல்லாமே எல்லாருக்குமே புரிஞ்சா மாதியும், சரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டா மாதியும், இது மட்டும் ஜஸ்ட் மிஸ்ஸான மாதியுமில்ல பேசுற..

:)-

தாமிரா said...

நன்றி கதிர்.!
நன்றி வித்யா.!
நன்றி தராசு.!
நன்றி புரூனோ.!
நன்றி வெயிலான்.!

தாமிரா said...

நன்றி மகேஷ்.! (இன்னும் உள்ளூர ஒரு ஓரத்துல விளக்கப்பதிவு போட்டுறலாமான்னுதான் நினைச்சிக்கிட்டு இருக்கேன்.. எதுக்கும் ஜாக்கிரதையாக இருக்கவும். ஆமா.. ஹாட்ஸ் ஆஃப் எதுக்கு? எழுதாததற்கா?)

நன்றி அமித்து அம்மா.! ( நானும் அதை பார்த்து தொலைச்சு.. ஹஹா..)

ச்சின்னப் பையன் said...

1. ஹாஹா....
2. சூப்பர். வாழ்த்துகள்...
3. முழு விமர்சனம் எழுதாததை கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன்....

Vijay said...

இப்போ புர்து தல. (வேணாந் தல, விட்ரு தல, வெ(வி)ளக்கல்லாந் வேணாந் தல…..ம்ம்ம்…அழ்துருவேன்.,,,,

Anonymous said...

:)

வால்பையன் said...

//குழுவாகவே இயங்கி வந்தாலும், அவரவருக்குரிய தனித்தன்மையை நிரூபிக்கவும் போராடிவருகிறோம் என்றும், பொறாமையில்லாத பிறர் வெற்றியையும் தனதாய் மகிழ்கிற மனமிருக்கும் அதே வேளையில் கடும் போட்டியும் ஒவ்வொருவருக்கிடையேயும் இருக்கிறது என்றும் அது எங்களை மேலும் செதுக்குவதாக அமையும் என்றும் நான் எண்ணுகிறேன். சரிதானே தோழர்ஸ்.?//


அதே அதே அதே!

சரியான புரிதல்! மேலும் மகிழ்ச்சியை தந்தது.சந்தோசத்தை கொண்டாட உடனே ஒரு கட்டிங் போட்டாகனும் வரட்டா!

வால்பையன் said...

//எங்களுக்குப்பிறகு வந்த பதிவர்களை கூர்ந்து கவனிக்கமுடியாமல் இருக்கிறேன். நண்பர்களாவது அதைச்செய்து இந்தக்குழுவில் புதியவர்களை இணைத்து இன்னும் போட்டியை வலுவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.//

நமக்கு பாலோயரக்கி இருப்பவர்களுக்கு நாமும் பாலோயராகி விட்டால் எதுவும் மிஸ்ஸாகாது. என்ன சிலரது கவிதைகள் தான் டவுசரை கிழிக்குது.

வால்பையன் said...

//மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.. பார்த்தது கையளவு, பார்க்காதது உலகளவு (என்னது? மொக்கைதான்).//

மாற்றி போடுங்க

படித்தது கையளவு!
பார்க்காதது உலகளவு!

Iyarkai said...

:-))

Boston Bala said...

---மீபத்தில் டிவியில் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. ---

என்னபடம் :)

மங்களூர் சிவா said...

/
பார்த்தது கையளவு, பார்க்காதது உலகளவு (என்னது? மொக்கைதான்).
/

கரெக்க்ட்டு!

இராகவன் நைஜிரியா said...

// சமீபத்தில் டிவியில் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. //

நல்ல வேலை எனக்கு இந்த கஷ்டம் இல்லை...

வருவது ஒரே ஒரு தமிழ் சேனல்தான்.

// நான் அந்த விஷயத்தை சொன்னபோது கண்ணன் விழுந்து விழுந்து சிரித்தான். //

விழுந்து விழுந்து சிரிச்ச போது அடிகிடி படல இல்லீங்க..

//ஒண்ணுமில்லைங்க.. //

ஒண்ணுமில்லாததற்கே விழுந்து விழுந்து சிரிச்சாருங்களா?

// எனக்குன்னா ஒரே அழுவாச்சியா போச்சுது.//

அழப்பிடாது.. கண்ண தொடச்சுங்கோங்க... இது என்ன சின்னப் பிள்ளையாட்டம்..

தாமிரா said...

நன்றி ச்சின்னவர்.!
நன்றி விஜய்.!
நன்றி ஆனந்த்.!
நன்றி வால்.!
நன்றி இயற்கை.!
நன்றி பாலா.! (முதல் கனவே.. என்று நினைக்கிறேன்)
நன்றி மங்களூர்.!
நன்றி இராகவன்.!