Tuesday, March 10, 2009

அலுவ‌ல‌க‌ மீட்டிங்கை ச‌மாளிப்ப‌து எப்ப‌டி?

ச்சின்னப்பையன் பிஸியாக வேலை செய்யும் அழகைப்பார்த்து ரொம்ப பொறாமையாக இருக்குதுங்க.. நமக்கும் அந்த மாதிரி ஒரு வேலை கிடைக்காதா என்று.! ரிசஷனுக்கும் நமக்கும் ஒன்றும் பெரிய சம்பந்தமில்லை எனினும் எதிர்பாராது நிகழ்ந்த பெரிய நிர்வாக மாற்றத்தால் ஏதோ புதிதாக வேலைக்கு சேர்ந்த மாதிரி ஓடி ஓடி வேலை செய்றதா இருக்குங்க.. ஒரு மெயில் கூட செக் பண்ணமுடியலன்னா பாத்துக்குங்களேன். எங்காவது இந்த மாதிரி அநியாயம் உண்டுமா? அட்லீஸ்ட் ஒரு ஒன் பாத்ரூம் போக எவ்வளவு நேரம் ஆகப்போகுது? ஆனாலும் இவ்ளோ பிஸியா இருக்கக்கூடாதுங்க..

வீட்டிற்குப் போனால் நாளைக்கு என்ன‌ ப‌திவு போட‌லாம் என்ற‌ எண்ண‌த்துக்குப் ப‌திலாக‌ இப்போதெல்லாம் நாளைக்கு மீட்டிங்கை எப்ப‌டி ச‌மாளிக்க‌லாம் என்ற எண்ண‌ம்தான் ந‌ம்மை ஆக்ர‌மிக்கிற‌து. மீட்டிங் பூத‌ம் க‌ன‌விலும் வ‌ருகிற‌து. இந்த‌ டென்ஷ‌னில் அழ‌காக‌ யோசித்து வைத்திருந்த‌ ப‌திவுக‌ளுக்கான‌ விஷ‌ய‌ங்க‌ளெல்லாம் ஃப‌னால் ஆகிவிட்ட‌து.

ஆக‌வே முக்கியப் பிரச்சினையான அலுவலக மீட்டிங்கை எப்ப‌டிச் ச‌மாளிக்க‌லாம்? என்ப‌து குறித்து இன்று பார்க்க‌லாம். வ‌ழ‌க்க‌ம்போல‌ டாப் 5 ம‌ட்டும்.

5. ஸாஃப்ட் காப்பி தேவைப்படும் இடங்களில் ஹார்ட் காப்பிகளையும், ஹார்ட் காப்பி தேவைப்படும் இடங்களில் ஸாஃப்ட் காப்பிகளையும் கொண்டு செல்லுங்கள். அப்போதுதான் மீட்டிங்கின் இடையிடையே பிரின்ட் எடுக்க வெளியே போகமுடியும். அந்த நேரத்தில் இவர்கள் போரடித்து நம்ம விஷயத்தை விட்டுவிட்டு டாபிக் மாறிவிடுவார்கள்.

மைனஸ் பாயின்ட் : மீட்டிங் முடிந்த‌ பிற‌கு மானேஜரிடம் பல்ப் வாங்க நேரிடலாம்.

4. எல்லோரும் வருவதற்கு முன்பே ஹாலுக்குள் போய் புரொஜக்டரில் ஏதாவது ஒயரை பிடுங்கிவிட்டு, மீட்டிங் ஆரம்பித்த பிறகு 'ஐயய்யே.. படம் தெரியமாட்டேங்குது' என்று ஐடி ஆட்களை கூப்பிட்டு அங்கேயே ரிப்பேர் பார்க்க வைத்து நேரத்தை கடத்துங்கள்.

மைனஸ் பாயின்ட் : ஐடி ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

3. மீட்டிங்கில் உங்கள் நேரம் வரும்போது த‌லையை சுத்தி, சுத்தி மூக்கைத் தொடுங்க‌ள். வேறு யாருக்கும் தெரியாத‌ தேவையே இல்லாத‌ உங்க‌ள் டிபார்ட்மென்ட் விஷ‌ய‌ங்க‌ளை எப்படியாவது உள்ளே நுழைத்து க‌தைய‌டியுங்க‌ள். அடுத்த மீட்டிங்கிற்கு கூப்பிடமாட்டார்கள்.

மைனஸ் பாயின்ட் : அடுத்த அப்ரைசலில் ஆப்பு வர வாய்ப்புள்ளது.

2. மீட்டிங்கில் இருக்கும் போது பிற‌ருக்கு தெரியாம‌ல் உங்க‌ள் ச‌க‌ ரேங்கில் இருக்கும் ந‌ப‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தெரிவ‌து போல‌ கொட்டாவி விடுங்கள். அவ‌ர்க‌ளுக்கும் கொட்டாவி ப‌ர‌வி சிக்க‌லில் மாட்டிக்கொள்வ‌தை ர‌சிக்க‌லாம்.

மைன‌ஸ் பாயிண்ட் : ப‌ல‌ரும் தூங்கிவிடும் ஆப‌த்துள்ள‌து.

1. எவ‌ர்கிரீன் ஐடியா.. வ‌யிற்றுவ‌லி! ம‌ட்ட‌ம் போட்டு விடுங்க‌ள். இல‌வ‌ச‌ இணைப்பாக‌ வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஜாலியாக பிளாகிங் ப‌ண்ண‌லாம்.

மைன‌ஸ் பாயிண்ட் : எல்லா மீட்டிங்குக‌ளிலிருந்தும் த‌ப்பிக்க‌ முடியாது.

டிஸ்கி : கொஞ்ச நாளாக கட்டுமான விஷயங்கள் தொடர்பாக நமது கவிதைக்கடையான 'முதல் முத்தத்'தை மூடி வைத்திருந்ததை அறிவீர்கள். அந்த வேலைகள் ஓரள‌வில் முடிந்துவிட்டபடியால் வியாபாரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. மேலே இடது புறம் படத்தை கிளிக் செய்து அங்கேயும் சென்று பின்னூட்டமிட்டு கடை கல்லாகட்ட வாழ்த்திச்செல்லவும்.


.

40 comments:

தராசு said...

me the first

பதிவை ப்டிச்சுட்டு வர்றேன்.

தராசு said...

//ஸாஃப்ட் காப்பி தேவைப்படும் இடங்களில் ஹார்ட் காப்பிகளையும், ஹார்ட் காப்பி தேவைப்படும் இடங்களில் ஸாஃப்ட் காப்பிகளையும் கொண்டு செல்லுங்கள். அப்போதுதான் மீட்டிங்கின் இடையிடையே பிரின்ட் எடுக்க வெளியே போகமுடியும். அந்த நேரத்தில் இவர்கள் போரடித்து நம்ம விஷயத்தை விட்டுவிட்டு டாபிக் மாறிவிடுவார்கள்.மைனஸ் பாயின்ட் : மீட்டிங் முடிந்த‌ பிற‌கு மானேஜரிடம் பல்ப் வாங்க நேரிடலாம்//

ம்ஹூம், இது சரிப்படுமானு தெரியல. ஏன்னா நெறய சமயங்கள்ல அப்புறமா சாப்ட்கு பதிலா ஹார்டையும் ஹார்டுக்கு பதிலா சாப்டையும் அனுப்ப் விடுங்கள்னு சொல்லிருவாங்க

ஷங்கர் Shankar said...

supernaa

தராசு said...

//எல்லோரும் வருவதற்கு முன்பே ஹாலுக்குள் போய் புரொஜக்டரில் ஏதாவது ஒயரை பிடுங்கிவிட்டு, மீட்டிங் ஆரம்பித்த பிறகு 'ஐயய்யே.. படம் தெரியமாட்டேங்குது' என்று ஐடி ஆட்களை கூப்பிட்டு அங்கேயே ரிப்பேர் பார்க்க வைத்து நேரத்தை கடத்துங்கள்.மைனஸ் பாயின்ட் : ஐடி ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்//

இது அழுகுனி ஆட்டம், மன சாட்சி ஒத்துகிட்ட மாத்திரம்தான் செய்ய முடியும்.

தராசு said...

//மீட்டிங்கில் உங்கள் நேரம் வரும்போது த‌லையை சுத்தி, சுத்தி மூக்கைத் தொடுங்க‌ள். வேறு யாருக்கும் தெரியாத‌ தேவையே இல்லாத‌ உங்க‌ள் டிபார்ட்மென்ட் விஷ‌ய‌ங்க‌ளை எப்படியாவது உள்ளே நுழைத்து க‌தைய‌டியுங்க‌ள். அடுத்த மீட்டிங்கிற்கு கூப்பிடமாட்டார்கள்.மைனஸ் பாயின்ட் : அடுத்த அப்ரைசலில் ஆப்பு வர வாய்ப்புள்ளது//

இது சரியானது. எல்லாத்தையும் பேசறது போல பேசணும், ஆனா என்ன பேசறம்னே தெரியக்கூடாது.

தராசு said...

//மீட்டிங்கில் இருக்கும் போது பிற‌ருக்கு தெரியாம‌ல் உங்க‌ள் ச‌க‌ ரேங்கில் இருக்கும் ந‌ப‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தெரிவ‌து போல‌ கொட்டாவி விடுங்கள். அவ‌ர்க‌ளுக்கும் கொட்டாவி ப‌ர‌வி சிக்க‌லில் மாட்டிக்கொள்வ‌தை ர‌சிக்க‌லாம்.மைன‌ஸ் பாயிண்ட் : ப‌ல‌ரும் தூங்கிவிடும் ஆப‌த்துள்ள‌து//

பலரும் தூங்கிட்டா அதுல என்ன ஆபத்து????

ஷங்கர் Shankar said...

\\\ மீட்டிங்கில் உங்கள் நேரம் வரும்போது த‌லையை சுத்தி, சுத்தி மூக்கைத் தொடுங்க‌ள். வேறு யாருக்கும் தெரியாத‌ தேவையே இல்லாத‌ உங்க‌ள் டிபார்ட்மென்ட் விஷ‌ய‌ங்க‌ளை எப்படியாவது உள்ளே நுழைத்து க‌தைய‌டியுங்க‌ள். அடுத்த மீட்டிங்கிற்கு கூப்பிடமாட்டார்கள்.

மைனஸ் பாயின்ட் : அடுத்த அப்ரைசலில் ஆப்பு வர வாய்ப்புள்ளது. \\\\

எதுக்கு அடுத்த அப்ரைசலில் ஆப்பு வர்ற வரைக்கும் வெயிட் பண்ணனும். இப்பல்லாம் மீட்டிங் முடுஞ்ச உடனே ஆப்பு ரெடியா வெளிய காத்துக்கிட்டு இருக்கும்!

தராசு said...

//எவ‌ர்கிரீன் ஐடியா.. வ‌யிற்றுவ‌லி! ம‌ட்ட‌ம் போட்டு விடுங்க‌ள். இல‌வ‌ச‌ இணைப்பாக‌ வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஜாலியாக பிளாகிங் ப‌ண்ண‌லாம்.மைன‌ஸ் பாயிண்ட் : எல்லா மீட்டிங்குக‌ளிலிருந்தும் த‌ப்பிக்க‌ முடியாது//

ஆனா, அதெப்படி வயிற்றுவலிக்கெல்லாம் உங்க ஆபீஸ்ல லீவு குடுக்கறாங்க.

கார்க்கி said...

என்னது இந்தியா சுதந்திர்ம் கிடைச்சிடுச்சா??????

சந்தனமுல்லை said...

:-)))) நல்ல டிப்ஸ்!

முரளிகண்ணன் said...

கலக்கல் தாமிரா.

வால்பையன் said...

ஐடியாவெல்லாம் நல்லா தான் இருக்கு!
ஆனா இங்கே எப்பாடா திண்ணை காலியாகுனு ஒரு கூட்டமா காத்துகிட்டு இருக்கு!
சின்ன தப்பு நடந்தாலும் உடனே லாங்லீவ் தான்!

cheena (சீனா) said...

மீட்டிங்க் சமாளிக்க இவ்வளவு கஷ்டப்படணுமா - ம்ம்ம் - எங்க மீட்டிங்கெல்லாம் அநாவஸ்யமா சமாளிப்போமே

அத்திரி said...

மீட்டிங்னா என்ன அண்ணே ???//

ஸ்ரீதர் said...

எப்படிங்க இப்படியெல்லாம் யோசனை வருது,நான் வேலை பார்கிரப்ப எல்லாம் என்னை மீடிங்க்ல வெச்சு நார் நாரா கிழிப்பானுவ, அப்பல்லாம் இது தோணாமப் போச்சே!

Mahesh said...

என்ன ஐடியாவோ?... வூட்ல பெர்மனெண்டா ப்ளாக் படிக்க உட்றப் போறங்க... பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பூ !!

வெயிலான் said...

இதெல்லாம் யோசிச்ச நேரத்துக்கு, மீட்டிங்ல என்ன கேட்பாங்கனு யோசிச்சிருந்தா நல்லாருந்திருக்கும்.

ஆனா எங்களுக்கு படிக்க பதிவு கிடைச்சிருக்காது ;)

ஸ்ரீமதி said...

ஹா ஹா ஹா நல்ல யோசனைகள் அண்ணா :)))

புன்னகை said...

//முன்பே ஹாலுக்குள் போய் புரொஜக்டரில் ஏதாவது ஒயரை பிடுங்கிவிட்டு, மீட்டிங் ஆரம்பித்த பிறகு 'ஐயய்யே.. படம் தெரியமாட்டேங்குது' என்று ஐடி ஆட்களை கூப்பிட்டு அங்கேயே ரிப்பேர் பார்க்க வைத்து நேரத்தை கடத்துங்கள்//

அதுதான் எங்க ஆபிஸ்ல் அடிக்கடி
புரொஜக்டர் அவுட் ஆப் போகஸ்
ஆகுதா

தாமிரா said...

நன்றி தராசு.! (எல்லாத்தையும் பேசறது போல பேசணும், ஆனா என்ன பேசறம்னே தெரியக்கூடாது.// சொந்த அனுபவமா பாஸ்.. பதிவர் மீட்ல பேசுவீங்களே அதே மாதிரியா.?)

நன்றி ஷங்கர்.! (எதுக்கு அடுத்த அப்ரைசலில் ஆப்பு வர்ற வரைக்கும் வெயிட் பண்ணனும். இப்பல்லாம் மீட்டிங் முடுஞ்ச உடனே ஆப்பு ரெடியா வெளிய காத்துக்கிட்டு இருக்கும்!// ஹிஹி..சூப்பர்)

நன்றி கார்க்கி.!
நன்றி சந்தனமுல்லை.!
நன்றி முரளி.!
நன்றி வால்பையன்.!
நன்றி சீனா சார்.!
நன்றி அத்திரி.!
நன்றி ஸ்ரீதர்.! (நான் வேலை பார்கிரப்ப எல்லாம் என்னை மீடிங்க்ல வெச்சு நார் நாரா கிழிப்பானுவ, அப்பல்லாம் இது தோணாமப் போச்சே!// இதுக்குதான் நாலு பேர விசாரிக்கணும்ங்கிறது..)

நன்றி மகேஷ்.! (என்ன ஐடியாவோ?..வூட்ல பெர்மனெண்டா ப்ளாக் படிக்க உட்றப் போறங்க..// ஏங்க நீங்க வேற பயமுறுத்தறீங்க‌)
நன்றி வெயிலான்.!
நன்றி ஸ்ரீமதி.!

தாமிரா said...

நன்றி புன்னகை.!

தராசு said...

//தாமிரா said...
நன்றி தராசு.! (எல்லாத்தையும் பேசறது போல பேசணும், ஆனா என்ன பேசறம்னே தெரியக்கூடாது.// சொந்த அனுபவமா பாஸ்.. பதிவர் மீட்ல பேசுவீங்களே அதே மாதிரியா.?)//

தல, நடேசன் பூங்கா பதிவர் சந்திப்புல நான் பேசவேயில்லையே. ஆனாலும் இந்த ஃபார்முலாவை நான் நிறைய மீட்டிங்ல பயன் படுத்தியதுண்டு.

அத்திரி said...

கட பக்கம் ஆளையே காணோமே....... மத்த கடயில உங்கள பாத்தேனே

அ.மு.செய்யது said...

நல்ல டிப்ஸ் தாங்க..

அப்படியே அந்த ஆன்சைட் கான் கால்ல இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு ஒரு பதிவு
போட்டீங்கன்னா பயனளிக்கும்.

" உழவன் " " Uzhavan " said...

ம் ஹூம்.. இதெல்லாம் வேலைக்காகாது.. எங்க டீம்ல யாரும் வயசானவங்க இல்ல எல்லத்தயும் நம்ப..
நம்ம முழிக்கிற ஒவ்வொரு முழிக்கும் என்னென்ன அர்த்தம்னு ஈசியா எல்லோரும் கண்டுபடிச்சிருவாங்க.

அன்புடன் அருணா said...

அடடா மீட்டிங்க்னா அவ்வ்ளோ பயமா???
அன்புடன் அருணா

ச்சின்னப் பையன் said...

ஹாஹா....

:-))))

ச்சின்னப் பையன் said...

//அட்லீஸ்ட் ஒரு ஒன் பாத்ரூம் போக எவ்வளவு நேரம் ஆகப்போகுது? //

ஹிஹி... இன்னிக்கு பாத்துட்டு நாளைக்கு சொல்றேன்....

:-)))

தாமிரா said...

சும்மா ஜாலிக்கு சொன்னேன் தராசு.. சீரியஸா எடுத்துக்கிட்டீங்களா?

நன்றி அத்திரி.!
நன்றி செய்யது.!
நன்றி உழவன்.!
நன்றி அருணா.!
நன்றி ச்சின்னவர்.!

MayVee said...

அய்யோ.....
இது தெரியாம நான் பல நேரங்களில் ரொம்ப detail ல பேசிடுவேனே....
சூப்பர் ideas

Kathir said...
This comment has been removed by the author.
Kathir said...

எதுக்குண்ணே வம்பு.....
மீட்டிங் போனோமா, எல்லோர் கூடவும் சேர்ந்து கும்மி அடிச்சோமா, பிஸ்கட்/காபி சாப்பிட்டோமா,
மீட்டிங் முடிஞ்சு வந்து எனக்கு ஒன்னியும் தெரியாது எல்லாம் அவங்கதான்னு (பக்கத்து டிப்பார்ட்மெண்ட் காரன் தான்) மினிட்ஸ் எழுதினோமான்னு இருந்தா பிரச்சனை வராதுண்ணே....

அது சரி said...

என்னவே...எனக்கு ஒரு வழி சொல்லும்...

மீட்டிங் அரேஞ்ச் பண்றதே நம்மளா இருந்தா என்ன பண்றது?

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம், எப்படி ரெஸ்ட்ரிக்‌ஷன் இருந்தாலும் அதையே வெச்சு நீங்க பதிவிடும் விதம் அலாதி.

தராசு said...

//தாமிரா said...
சும்மா ஜாலிக்கு சொன்னேன் தராசு.. சீரியஸா எடுத்துக்கிட்டீங்களா//

தல, வாழ்க்கையில கொஞ்சமாவது சீரியஸா இருந்திருந்தா என்கியோ போயிருப்பேன் தல. அதனால நமக்கு எப்பவுமே நோ ஃபீலிங்ஸ்.

ஆமா, அது என்ன பெயர் மாற்றப்போவதாய் ஒரு செய்தி வருதே, உண்மையா????

தாமிரா said...

நன்றி மேவீ.!
நன்றி கதிர்.! (அப்பிடித்தானே காலத்த ஓட்டிக்கினுருக்கோம்)
நன்றி அதுசரி.! (ஏன் இப்படி எல்லோரையும் கொடுமைப்படுத்தறீங்க.. வேலை செய்ய உடுங்க பாஸ்)

நன்றி அமித்து அம்மா.!

ஆமா, அது என்ன பெயர் மாற்றப்போவதாய் ஒரு செய்தி வருதே// ஆமாங்க.. அது ஒரு பெரிய கதை.!

SK said...

ரொம்ப நல்லா யோசிக்கறீங்க :)

மங்களூர் சிவா said...

:)))))))))
சூப்பர் ஐடியாங்ணா!!

மங்களூர் சிவா said...

//
ச்சின்னப் பையன் said...

//அட்லீஸ்ட் ஒரு ஒன் பாத்ரூம் போக எவ்வளவு நேரம் ஆகப்போகுது? //

ஹிஹி... இன்னிக்கு பாத்துட்டு நாளைக்கு சொல்றேன்....

:-)))
//

:)))))))

ROTFL

மறக்காம தாமிராவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியாவது தெரிவிச்சிடுங்க இல்லைனா ஏமாந்து பொசுக்குனு ஆயிடுவார்!!

மங்களூர் சிவா said...

40