Wednesday, March 11, 2009

தொலைந்து போன ‘பொன்னர் சங்கர்’

குங்குமம் வார இதழில் இருந்து கலெக்ட் செய்யப்பட்டு அழகாக ர‌சனையாக பைண்ட் செய்யப்பட்ட அந்த 'பொன்னர் சங்கர்' புத்தகத்தை மாமாவிடமிருந்து கெஞ்சி வாங்கினேன். அவர் இதைப்போன்ற பல புத்தகங்களை வைத்திருந்தாலும் அங்கேயே வீட்டிலேயே வைத்து படிக்க அனுமதித்திருந்தார். அவரில்லாத போதும் அவரின் அலமாரியின் சாவியைப் பெறும் அளவில் உரிமை பெற்றிருந்தேன். ஆனால் வெளியே கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆகவேதான் சூழல் கருதி அந்தக் கெஞ்சல்.

கல்லூரியின் அருகில் தங்கியிருந்த அறைக்கு கொண்டுவந்தேன். இரண்டு நாட்களில் ஒரே மூச்சில் படித்து முடித்து அந்த கேரக்டர்களின் நினைவுகளோடே பல நாட்களை கடத்திக் கொண்டிருந்தேன். அதன் காதல் காட்சிகளும், வீர தீரங்களும் ஒரு திரைப்படம் போல நெஞ்சத்தில் விரியும். இந்த சுகானுபத்தில் திளைத்துக் கொண்டிருந்த போது ஒரு நண்பர் அதை இரவல் கேட்க.. இன்பம் பரவுக என்ற எண்ணத்தில் தந்தேன். என் ஞாபக சக்தியில் இடி விழ.. சில வாரங்கள் கழித்து புத்தகம் எங்கே என்று தேடத்துவங்கியபோது யார், எப்போது வாங்கினார்கள் என்று மறந்து போக.. எல்லோரையும் விசாரிக்க விசாரிக்க ஏமாற்றமே.. என் மாமா சாண்டில்யனின் 'கடல்புறா' புத்தகத்தாலேயே தலையில் ஒரு போடு போடுவதாக கனவு வேறு. கேட்காத ஆள் கிடையாது. கல்லூரி பியூன் முதற்கொண்டு விசாரித்தாயிற்று. இன்று வரை யார் அதை வாங்கியது என்று தெரியவில்லை.

மெதுமெதுவாக இந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லியபோது ஆழமாக பார்த்துவிட்டு 'சரி, விடு.. பாத்துக்கலாம்' என்றார். அவர் திட்டியிருந்தால் கூட மனது ஆறியிருக்கும். அதன் பின்னரும் கூட அவர் சேகரித்திருக்கும் புத்தகங்களை உரிமையோடு எடுக்கவும் படிக்கவுமாக இருக்கும் ஒரே ஆள் இன்று வரை நான் மட்டும்தான். அவர் கலைஞரின் எழுத்துகளை எவ்வளவு காதலித்தார் என்பது எனக்குதான் தெரியும். அன்றே மனதுக்குள் ஒரு தீர்மானம் செய்தேன்.

kalaingar2

அதை சுமார் பதின்மூன்று வருடங்கள் கழித்து கொஞ்ச காலத்துக்கு முன்பாகத்தான் நிறைவேற்றினேன். பாரதி பதிப்பகம் செம்பதிப்பாக வண்ணப்படங்களுடன் தரமான தாளில் வெளியிட்ட தடிமனான 'பொன்னர் சங்கரை' வாங்கி என் மாமாவிடம் தந்த போது சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார். பதின்மூன்று வருடங்களாக மனதில் இருந்த ஒரு விஷயத்துக்கு பாதி ஆறுதல் அன்றுதான் கிடைத்தது.

டிஸ்கி : பரிசலின் இரவல் புத்தக நினைவுகளை படித்த‌தால் நினைவுக்கு வந்த ஒரு சம்பவம் இது. செல்வேந்திரனின் வித்தியாசமான நினைவுகளையும் இங்கே.. காணலாம்.

.

20 comments:

RAMYA said...

Me the first???

RAMYA said...

அட ஆமா நான்தான் மொதல்லே
சரி படிச்சுட்டு வாரேன்!!

RAMYA said...

//
மெதுமெதுவாக இந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லியபோது ஆழமாக பார்த்துவிட்டு 'சரி, விடு.. பாத்துக்கலாம்' என்றார். அவர் திட்டியிருந்தால் கூட மனது ஆறியிருக்கும். அதன் பின்னரும் கூட அவர் சேகரித்திருக்கும் புத்தகங்களை உரிமையோடு எடுக்கவும் படிக்கவுமாக இருக்கும் ஒரே ஆள் இன்று வரை நான் மட்டும்தான். அவர் கலைஞரின் எழுத்துகளை எவ்வளவு காதலித்தார் என்பது எனக்குதான் தெரியும். அன்றே மனதுக்குள் ஒரு தீர்மானம் செய்தேன்.
//

பரவா இல்லை சகோதரா எப்படியோ ரொம்ப கஷ்டப்பட்டு புத்தகம் வாங்கி மாமாவிற்கு கொடுத்து உங்கள் மனச்சுமையை இறக்கி விட்டீர்கள்.

ஆனா அந்த அருமையான புத்தகம் உங்களுக்கு கிடைச்சுதே அதுவே சந்தோஷம் தான்.

சரி நீங்க கொடுத்து இருக்கின்ற link பார்க்கறேன்.

வால்பையன் said...

இப்போ அந்த பொன்னர்-சங்கர் மாமாவிடம் இருக்கா? இல்லை இரவல் போயிருச்சா?

Mahesh said...

கொசுவத்திய பத்தவச்சது பரிசலா?

MayVee said...

எனக்கும் இதே மாதிரி அனுபவம் உண்டு.....

flash back நியாபகம் வந்துருச்சு

தாமிரா said...

நன்றி ரம்யா.!
நன்றி வால்.!

நன்றி மகேஷ்.!
நன்றி மேவீ.!

மாதவராஜ் said...

//என் மாமா சாண்டில்யனின் 'கடல்புறா' புத்தகத்தாலேயே தலையில் ஒரு போடு போடுவதாக கனவு வேறு.//

ரசித்தேன். ஆனால் கடல்புறாவைக்கூட படித்து விடலாமே?

தமிழ் பிரியன் said...

:)
பெயர் கொஞ்சம் நீளம் அதிகமோ???

தமிழன்-கறுப்பி... said...

அது என்னமோ தெரியலை புத்தகம் கடன் கொடுத்தா மட்டும் வாங்கினவங்களும் சரி கொடுத்தவங்களும் சரி மறந்துடறாங்க...

தமிழன்-கறுப்பி... said...

அது யாருங்க அது,
ஆதிமூலகிருஷ்ணன்..

மங்களூர் சிவா said...

12

எம்.எம்.அப்துல்லா said...

லக்கி,அபிஅப்பா, தாமிரா தப்பு..தப்பு...ஆதிமூல கிருஷ்ணன்னு எடுத்தக்கலாமா???

:)))

அது சரி said...

//
இதுவரை தாமிரா என்றறியப்பட்ட நான் இனி ஆதிமூலகிருஷ்ணன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டுள்ளேன். தொடரும் பார்வையாளர்களுக்காக இன்னும் ஒரு வாரத்திற்கு ‘தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்’ என்று குறிப்பிடப்படும். தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி நண்பர்களே.!
//

இது எதுக்குங்கண்ணா?? தாமிராவே நல்லா தான இருக்கு??

இனிமே உங்கள எப்படி கூப்பிடறது?? ஆ.மூ.கின்னு கூப்பிடலாமா? ஆமுகி!

:0))

அத்திரி said...

உங்க பேரு ரொம்ப ஷார்ட்டா இருக்கு.... இனிமே எப்படி ஆதிமூலகிருஷ்னண்.... ஷ்ஷ்ஷ்ஷ்.... ட்ய்பெ பண்றதுக்குள்ள மூச்சு வாங்குது.....

அத்திரி said...

//இனிமே உங்கள எப்படி கூப்பிடறது?? ஆ.மூ.கின்னு கூப்பிடலாமா? ஆமுகி!

:0))//

ரிப்பீட்டேய்.............

அத்திரி said...

கிருஷ்னண் அப்படினு பெயர் வர்றதுனாலத்தான் காதல் ரொம்ப பிடிக்கு)))))))))))))))தோ

அத்திரி said...
This comment has been removed by the author.
தராசு said...

ஹலோ,

என்ன நடக்குது தல,

பேர மாத்தறீங்க, டெம்பிளேட்ட மாத்தறீங்க, கொசுவத்தி பதிவு, தலைவர் படம், கலக்கறேள் ஆதிமூல கிருஷ்ணா (என்கிற) தாமிரா (என்கிற).......

ஸ்ரீமதி said...

:)))