Thursday, March 12, 2009

தாமிரா இனி.. ஆதிமூலகிருஷ்ணன்

நல்ல வாசிப்பனுவமும் / தொடர்ந்த வாசிப்பனுபவமும் இல்லாமல் எழுதாதீர்கள் எழுதாதீர்கள் என்று அண்ணன்மார்கள் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்..  இல்லையெனில் நல்ல பேர் கிடைப்பது ரொம்ப சிரமம் என்கிறார்கள்.. அது நிஜம்தான் போலிருக்குது. ஆமாங்க.. என் கதையில் அது நிஜமாகப் போய்விட்டதே.!

வாசிப்பனுபவம் இல்லாததால் இவ்வளவு நாட்கள்  எழுதி எழுதி நல்ல பேர்தான் இன்னும் கிடைத்தபாடில்லையெனிலும் ஒரு நல்ல ‘பெயர்’ கூட கிடைக்காமல் சிக்கலாகிவிட்டது. ‘தாமிரா’ என்ற வசீகரமான இந்த பெயரை நான் எனக்கு வைத்துக் கொண்டபோது அது விதவிதமான உணர்வுகளையும், திருப்தியையும் தந்தது. அப்போது எழுத்துத்துறையிலும், சினிமாத்துறையிலும் பரவலாக  இயங்கிக்கொண்டிருக்கும் திரு. தாமிராவை நான் அறிந்திருக்கவில்லை. ஆனந்தவிகடனில் தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருபவரும், தமிழ் சினிமாவில் சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘ரெட்டைச்சுழி’ என்ற படத்தை இயக்கிவருபவருமான தாமிராவை நல்ல வாசிப்பனுபவம் இருந்திருக்குமானால் நான் அறிந்திருக்கக்கூடும், இந்த சூழல் ஏற்பட்டிருக்காது. முதலில் இந்தச் சிக்கலை அறிய வந்தபோது வருத்தமும், குழப்பமும் ஏற்பட்டது. ஆனால் பல்லாண்டுகளாக கலைத்துறையில் இயங்கி வருபவரது புகழ் இடம்மாறி என்னை வந்துசேரத் துவங்கியபோது அதன் சங்கடத்தை உணர்ந்தேன். (என்னைச் சேரவேண்டிய கண்டனம் அவருக்குச் சென்றதா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்). இந்தச்சூழலிலும் தொலைபேசியில் அழைத்து அன்புடன் பேசிய தாமிராவின் கண்ணியம் பாராட்டுக்குரியது. அவரும் தாமிரபரணிக்கரையினிலிருந்தே வந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். அவருக்கு நம் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறான சூழலில் நான் பெயர் மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். மேலும் தாமதம் செய்வது இருவருக்கும் நல்லதல்ல என்பதையும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் பெயர் மாற்றும் வைபவத்தில் நண்பர்கள் சிலரையும் கலந்தாலோசித்தேன். காதுகுத்தி, கிடா வெட்டாத குறையாக பெயர்சூட்டும் வைபவம் சிறப்பாக நடந்தேறியது. திருமணத்துக்கு முந்தைய நாளிரவில் நிகழும் நண்பர் குழுவின் கொண்டாட்டங்களைப் போல கொண்டாடித் தள்ளிவிட்டார்கள். என்னென்ன விதவிதமான பெயர்கள் என்கிறீர்கள்.. எடுத்து விட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். நமது நண்பர்களின் கற்பனா திறனை சினிமா உலகம் இழந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்வேன். ‘ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது மணக்கும்’ என்று ஒருவர் கூறி புல்லரிக்க வைக்க நான் அவரை முறைத்தேன். ‘உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல.. கொசுவத்தியை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது கொசுவை விரட்டும் என்று சொல்றதுதானே’ என்றேன்.

ஒருவர் இப்போ குட்டி பத்மினி இல்லையா அதுமாதிரி குட்டித் தாமிரா என்று வைத்துக் கொள்ளலாம் என்கிறார், இன்னொருவர் தாமிராக்குட்டி என்கிறார். அடுத்தவர் நம் தாமிரா அவரை விட குறைந்தவர் இல்லை.. ஏன் குட்டி? பெரிய தாமிரா என்று வைக்கலாம் என்கிறார். இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன் என்று நாம் கூறவும் ஊர் பெயர், பெற்றோர் பெயர் என் நிஜப்பெயர் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அடித்து ஆசுபதாலன் என்கிறார் ஒருவர். ஊஹூம்.. நல்ல இலக்கியப்பெயராக வைக்கலாம் என்று திருநெல்லை பாணபத்திர செம்பா புலவர் (செம்பு=தாமிரா) என்கிறார் இன்னொருவர். நான் இதை கொஞ்சம் நகைச்சுவையாக கூறினாலும் எனக்காக விதவிதமாக மெனக்கெட்ட நண்பர்களின் அன்பு உண்மையில் பெருமைகொள்ளச் செய்தது. இந்தக்கதையைப் பேசினால் ஒரு நாவலே எழுத வேண்டியிருக்கும் என்பதால் மேல்கதையை பிறிதொரு சமயம் பார்க்கலாம்.

DSC04211

இறுதியாக நண்பர்கள் எல்லோரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டபடி இனி எனது சொந்தப் பெயரான ஆதிமூலகிருஷ்ணன் என்பதையே எனக்குரிய எழுத்துக்கான அடையாளமாகவும் மனப்பூர்வமாக ஏற்கிறேன். தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்குகிறேன். நன்றி.

டிஸ்கி : வலையுலகில் புதிய பெயருக்கு போதுமான அறிமுகம் நிகழும் வகையில் மேலும் ஒரு வார காலத்துக்கு “தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்” என்று தொடர்ந்து பின்னர் ஆதிமூலகிருஷ்ணன் என்பதை முழுமையாக ஏற்க இருக்கிறேன்.. 

108 அறிவுரைகளையும் தாண்டி சென்று கொண்டிருப்பதால் வேலையோடு வேலையாக வலைப்பூவின்  தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது. பிடித்திருக்கிறது என்று பின்னூட்டம் போட்டுச்செல்லவும்.  ஒத்துழைப்பு நல்கிய / நல்கிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நன்றி சொன்னால் அது சிறுமை.

.

72 comments:

வெயிலான் said...

// பிடித்திருக்கிறது என்று பின்னூட்டம் போட்டுச்செல்லவும். //

என்ன செல்ல மிரட்டலா? நீங்க சொல்லாட்டியும் பெயர் பிடித்திருக்கிறது.

வார்ப்புரு மிகவும் தூங்கி வழிந்த நிலையிலிருக்கிறது. மாற்றினால் நன்றாக இருக்கும்.

அத்திரி said...

//காதுகுத்தி, கிடா வெட்டாத குறையாக பெயர்சூட்டும் வைபவம் சிறப்பாக நடந்தேறியது. திருமணத்துக்கு முந்தைய நாளிரவில் நிகழும் நண்பர் குழுவின் கொண்டாட்டங்களைப் போல கொண்டாடித் தள்ளிவிட்டார்கள்.//

என்னை அழைக்காததற்கு என் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்....பெயர் பெரிதா இருக்கு,...கொஞ்சம் சுருக்குங்களேன்...

வெயிலான் said...

நீங்க எடுத்த படங்கள் என் Profileஐ அலங்கரிக்கிறது.

நன்றி! சொன்னால் அது சிறுமை :)

புதுகைத் தென்றல் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ஆதிமூலகிருஷ்ணன் இம்மாம் பெரிய பேரை டைப்ப்பறதுக்குள்ள கை வலிக்குது ஃப்ரெண்ட்.

சார்ட்டா ஆதின்னு வெக்கலாமே!!

(பேர் வைக்கற ஃபங்கஷனுக்கு என்னிய கூப்பிட்டிருந்தா நல்ல நல்ல பேரா செலக்ட் செஞ்சு கொடுத்திருப்பேன்)

புதுகைத் தென்றல் said...

இம்புட்டு நாளா தாமிரான்னே பழகிட்டோம். அந்தப் பேரும் வர்றமாதிரி
புதுப்பேர் யோசிங்களேன் ஃப்ரெண்ட்.

T.V.Radhakrishnan said...

பிடித்திருக்கிறது

Mahesh said...

வாழ்த்துகள் ஆதிமூலகிருஷ்ணன் !!

அசத்துங்க !!

குசும்பன் said...

வாழ்த்துக்கள் ஆதிமூலகிருஷ்ணன், குழந்தைக்கு பெயர் எல்லாம் வெச்சாச்சு அந்த கோணி ஊசி எடுத்து காது குத்துங்கப்பா!!!

muru said...

//108 அறிவுரைகளையும் தாண்டி சென்று கொண்டிருப்பதால் வேலையோடு வேலையாக வலைப்பூவின் தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது//

தாமிராவைத்தேடி வந்தால் ஆதிமூலகிருஷ்னணா? என்று குழப்பமடைபவர்களை 108 அறிவுரைகள் என்ற தலைப்பைப் பார்த்து தவிப்பாருவார்கள். அதை சில மாதங்களுக்கு மாற்ற வேண்டாமே,

எம்.எம்.அப்துல்லா said...

எஸ்.ராமகிருஷ்ணன் மாதிரி நீங்க ஆதிமூலகிருஷ்ணன்...அட நல்லாத்தாய்ய்யா இருக்கு :)

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

மாற்றங்கள் என்பது மட்டுமே மாறாதவை.. புதிய மாற்ற‌ங்களை விரைந்து ஏற்பீர்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.!


நன்றி வெயிலான்.! (விட்கெட்ஸ் பாதிக்கப்படாமல் டெம்ப்ளேட் மாற்ற முடிந்தால் சொல்லுங்களேன்)

நன்றி அத்திரி, நன்றி புதுகைத்தென்றல்.!
(அனைவரும் என்னை இனி ஆதி என்றழைக்கலாம்.. தாமிராவை விட சின்னதுதான்.. //அந்தப் பேரும் வர்றமாதிரி
புதுப்பேர் யோசிங்களேன் ஃப்ரெண்ட்.// நாலு நாளா மண்டைய உடைச்சுக்கிட்டோம் பிரென்ட்.. மு.டி.ய.ல..)

நன்றி டிவிஆர்.!
நன்றி ம‌கேஷ்.!

நன்றி குசும்பன்.! (ஏற்கனவே படுத்தினது பத்தாதாக்கும்..)

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முரு.!
(தாமிராவைத்தேடி வந்தால் ஆதிமூலகிருஷ்னணா? என்று குழப்பமடைபவர்களை 108 அறிவுரைகள் என்ற தலைப்பைப் பார்த்து// உண்மையில் நல்ல யோசனைதான்.. அடிக்கடி சேஞ்ச் பண்ணினால் நல்லாயிருக்காதே..)

நன்றி அப்துல்.! (யோவ் உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியல..)

சந்தனமுல்லை said...

:-)

ஸ்ரீமதி said...

நல்ல பெயர் அண்ணா... :)) (எனக்கு பிரச்சனையே இல்ல.. நீங்க எந்த பெயர் மாத்தினாலும், எத்தனை முறை மாத்தினாலும்.. அண்ணாங்கற வார்த்தை இருக்கற வரைக்கும்.. ;)))))

மற்றபடி,

//(விட்கெட்ஸ் பாதிக்கப்படாமல் டெம்ப்ளேட் மாற்ற முடிந்தால் சொல்லுங்களேன்)//

விட்கெட்ஸ் பாதிக்காம டெம்ப்ளேட் மாத்த முடியாது அந்த கோட் எல்லாத்தையும் ஒரு Notepad-ல save பண்ணி வெச்சிகிட்டு நீங்க டெம்ப்ளேட் மாத்தினதும் திரும்ப add பண்ணிக்கலாம்..

Saravana Kumar MSK said...

ண்ணா.. ரொம்ப பெரிய பேருங்க்ணா.. கஷ்டமா இருக்கு..

ஆதி - ஷார்ட்டா ஸ்டைலா
ஆதி மூல கிருஷ்ணன் அப்படியே கொஞ்சம் மாற்றி ஆதி நாராயணன் - (அறிந்தும் அறியாமலும் பிரகாஷ்ராஜ் மாதிரி)

ஆதி தாமிரா - இது எப்படி இருக்கு??

//பிடித்திருக்கிறது என்று பின்னூட்டம் போட்டுச்செல்லவும்.//
உங்களுக்காக "பிடித்திருக்கிறது" என்று சொல்கிறேன்..

கார்க்கி said...

நீங்க சொன்ன மாதிரி நம்ம கடைல ஃபோட்டோவோட வெளமப்ரம் போட்டாச்சு. 50% செக்காகவும், 50% கேஷாகவும் கொடுத்திடுங்க. ப்ளாக்கா இருந்தாலும் பரவாயில்லை...

பாசகி said...

ஹைய்யயோ ஹைய்யயோ பிடிச்சிருக்கு, எனக்கும் உங்க 'புலம்பல்(கள்)' பிடிச்சிருக்கு...

எப்போங்க சாக்லெட் தருவீங்க :)

புதுகைத் தென்றல் said...

என்ன ஆனாலும் சரி ப்ரெண்ட்.

தாமிராங்கற பேரும் வர்றமாதிரி புது பேர் வைச்சுக்கோங்க.

இப்படி பேர மாத்தணும். உங்க ஐடியாக்களை கொட்டுங்கன்னு பதிவுலகத்துல கேட்டிருந்தா நிறைய சொல்லியிருப்பாங்களே!!

பைத்தியக்காரன் said...

புது பேரு...

புது வலைப் பூ தலைப்பு...

புது ஸ்டைலு...

கலக்கறே தாமிரா @ ஆதிமூலகிருஷ்ணன் :)

ஒரு சின்ன டவுட் நண்பா...

ஆதி - மூலம் இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றுதானே?

சரி, சரி, ரிஷிமூலம், நதிமூலம் மட்டுமல்ல, ஆதிமூலமும் பார்க்கக் கூடாது :)

வாழ்த்துகள் நண்பா

அனுஜன்யா said...

உன்னைய ரோசாப்பூவோட ஒப்பிட்டதற்கு.... ஷார்ட்டா பேர திட்டக் கூட முடியல :)

வாழ்த்துகள் நண்பா. இந்த வாரத்துக்குள் நூறு தாண்டுவதற்கும் advanced வாழ்த்துகள்.

அனுஜன்யா

அறிவிலி said...

வாழ்த்துக்கள் ஆ.மூ.கி

செல்வேந்திரன் said...

காசிரங்கா காட்டில் ஜெ. உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்த பொழுதொன்றில் மத்தகம் 'ஆதிமூலமே'யென்றலரிச் செத்ததும் அதன் பின் நீண்ட விவாதங்களில் 'முடியலத்துவம்' உட்பட அனைத்துத் தத்துவங்களும் கலந்துகொண்டு கந்தல் ஆன கதையின் ஊடாக நோக்கும்போது மொத்தத் தமிழினமும் இனி ஆதிமூலமென்று அலரும் சாத்தியக்கூறுகளைக் கணிக்க முடிகிறதென்றாலும் பெயர்களின் மீதான நெடும் விவாதங்களைத் தவிர்க்கும்பொறுட்டு உரையை முடிக்கிறேன்.

பாபு said...

வாழ்த்துக்கள் ஆ.மூ.கிருஷ்ணன்

பரிசல்காரன் said...

அருமை ஆதி!

(அப்துல்லாவின் கமெண்டைப் பார்த்து அடுத்தது எஸ்.ரா. உங்களுக்கு அலைபேசுவார் என்று நினைக்கிறேன்!)

பரிசல்காரன் said...

ஹை! நான் 25ஆ?????

பரிசல்காரன் said...

//கார்க்கி said...
நீங்க சொன்ன மாதிரி நம்ம கடைல ஃபோட்டோவோட வெளமப்ரம் போட்டாச்சு.
//

யாரு சொன்ன மாதிரி?????

பரிசல்காரன் said...

நம்ம வூட்லயும் போஸ்டர் ஒட்டியாச்சு ஆதி! பார்ட்டி எப்போ?

பாலகுமார் said...

உலகத்துலேயே நமக்கு ரொம்ப பிடிச்ச பெயர், நம்ம சொந்த பெயர் தான்னு நிரூபிச்சுட்டீங்க :) வாழ்த்துகள் """ஆதிமூலகிருஷ்ணன்""" .

[ "தாமிரா" வில் நெல்லை மணம் அடிச்சுது . ம்ம்ம்ம்ம்ம்ம் :( .... ]

...பாலகுமார்...

அகநாழிகை said...

நண்பா.. வாழ்துக்கள்.. ஏற்கனவே பலமுறை தொடர்பு கொண்டும் பதில் அளிக்காத காரணம் இதுதானா..? புதுபெயருடன்.. (பதிவுகளில்) புகுந்து விளையாடுங்க...

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

பரிசல், கார்க்கி..

என்னதான் ஜாலி பண்ணிக்கொண்டிருந்தாலும் போட்டோவுடன் உங்கள் பதிவுகளில் விளம்பரம் பார்த்த போது கொஞ்சம் நெகிழ்ந்தேன்..

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சந்தனமுல்லை.!
நன்றி ஸ்ரீமதி.! (டிரை பண்றேன் தோழி)

ஆதின்னு சொல்லிப்பாரு சரவணா.. நல்லாயிருக்கும்.. அவ்வ்வ்.. படுத்தாதீங்கப்பா..

ந‌ன்றி பாச‌கி.! (பேரு ந‌ல்லாருக்குன்னு சொல்ற‌வ‌ங்க‌ளுக்கு உண்மையிலேயே சாக்லெட் குடுக்க‌லாம்னு தோணுது)

தாமிரா என்று தொட‌ர்வ‌தில் நிறைய‌ சிக்க‌ல்க‌ள் இருக்கின்றன தென்றல்.. பிளீஸ்.!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன இது இன்ப அதிர்ச்சி.. நம்ப கடைக்கெல்லாம் கூட வருவீங்களா? வாங்க பைத்தியக்காரன்.! ('ஒரு முன்னிரவுப்பொழுது' பதிவுல என்னை மக்கள்ஸ் கலாய்ச்சத பாத்தீங்களா? நீங்க ஒண்ணுமே சொல்லலியே)

நன்றி அறிவிலி.!

நன்றி செல்வா.! (அடுத்த முறை பார்க்கையில் சோடா வாங்கித்தரப்படும்)

நன்றி பாபு.!
நன்றி பாலகுமார்.!
நன்றி அகநாழிகை.!

narsim said...

வாழ்த்துக்கள் ஆதிமூலகிருஷ்ணன்.. இனி வெகுஜன ஊடகங்களில் பார்க்கலாம்..

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் ஆதி மூல கிருஷ்ணன்

Karthik said...

கார்க்கியோட ப்ளாக்கிலிருந்து வர்றேன். பேர் நல்லா இருக்கு. ஆனால் கொஞ்சம் பெரிசா இல்லை?

எனிவே, வாழ்த்துக்கள்! :)

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் தாமிரா...

புலம்பல்கள்....

உங்ககிட்ட இந்த மாதிரி ஒரு நெகடிவ் தலைப்பை எதிர் பார்க்கவில்லை.

கார்த்தால கணினியை திறந்தா புலம்பல்கள் (வீட்ல இருக்கு அது வேற விசயம்) எப்படி இருக்குன் என்று நினைச்சு பாருங்களேன்.

இன்னும் ஒரு பாசிடிவ் தலைப்பா யோசனைப் பண்ணி வையுங்களேன்.

Mahesh said...

//நல்ல வாசிப்பனுவமும் / தொடர்ந்த வாசிப்பனுபவமும் இல்லாமல் எழுதாதீர்கள் எழுதாதீர்கள் என்று அண்ணன்மார்கள் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.. இல்லையெனில் நல்ல பேர் கிடைப்பது ரொம்ப சிரமம் என்கிறார்கள்.. //

அய்யய்யோ... அப்ப நானெல்லாம் எழுதணும்னு நினைச்சு கூடப் பாத்திருக்கக்கூடாதோ? என்ன பாவம் பண்ணுச்சோ தமிழ் பதிவுலகம்? ஆமா.. நானும் கொஞ்ச நாள்ல இதுமாதிரி பேர் மாத்தறேன்னு அறிவிப்பு குடுக்க வேண்டி வருமா? (டேய்... உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெர்ல?...)

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அனுஜன்யா.!
நன்றி நர்சிம்.! (எப்பிடி இப்பிடில்லாம்..)
நன்றி முரளிகண்ணன்.!
நன்றி கார்த்திக்.!
நன்றி இராகவன்.! (சிந்திக்கிறேன் பாஸ்.!)

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மகேஷ்.!
(ஆமா.. நானும் கொஞ்ச நாள்ல இதுமாதிரி பேர் மாத்தறேன்னு அறிவிப்பு குடுக்க வேண்டி வருமா?// அதெல்லாம் நல்லா எழுதுறவங்களுக்குதான்.. அப்ப ஒனக்கு எதுக்குடாங்கறீங்களா? சும்மா லூஸ்ல உடுங்க பாஸ்..)

பாசகி said...

//...பேரு ந‌ல்லாருக்குன்னு சொல்ற‌வ‌ங்க‌ளுக்கு உண்மையிலேயே சாக்லெட் குடுக்க‌லாம்னு தோணுது//

அடடா சாக்லெட்(வடை) போச்சே :)

'புலம்பல்'களுக்கு பதிலா பேரு நல்லாருக்குனு சொல்லிருக்கலாமோ...

Raju said...

அந்த தாமிராவின்நிஜப்பெயர் செல்வக்குமார் தானே? சரி இதுவரை எந்த பதிவிலும் உங்கள் பெயர் ஆதிமூலக்க்ரிஸ்ணன் என்று சொல்லவில்லை? சிவாஜி வில்லன் பெயர் ஆதி? புலம்புவார்கள் வில்லன்கள். கிருஷ்ணன் எனபது பிரபல வலை பதிவர்களின் பெயராக உள்ளது.

மின்னுது மின்னல் said...

ரைட்டு..

நோட் பண்ணிட்டேன் :)

நிஜமா நல்லவன் said...

ஒரு சில மாதங்களுக்கு முன் விகடனில் தாமிரா என்ற பெயரில் வந்த சிறுகதையை நீங்க எழுதியதாகவே நினைத்துக்கொண்டிருந்தேன்..!

நிஜமா நல்லவன் said...

/நல்ல வாசிப்பனுவமும் / தொடர்ந்த வாசிப்பனுபவமும் இல்லாமல் எழுதாதீர்கள் எழுதாதீர்கள்/

இதை கடைபிடிச்சி இருந்தா நான் எல்லாம் ப்ளாக் ஆரம்பிச்சி இருக்கவே முடியாது...:)

ச்சின்னப் பையன் said...

வாழ்த்துகள் ஆதிமூலகிருஷ்ணன் !!

அசத்துங்க !!

MayVee said...

"பிடித்திருக்கிறது என்று பின்னூட்டம் போட்டுச்செல்லவும்."

nice name to the new born baby.....

சரி அப்ப இனிமேல்
ஆதிமூலகிருஷ்ணன் புலம்பல்கள்.!ah

MayVee said...

"நிஜமா நல்லவன் said...
ஒரு சில மாதங்களுக்கு முன் விகடனில் தாமிரா என்ற பெயரில் வந்த சிறுகதையை நீங்க எழுதியதாகவே நினைத்துக்கொண்டிருந்தேன்..!"


நானும் தான்

pappu said...

ஆதிமூலகிருஷ்ணன். நடுல மூலமா? ஹி,... ஹி... பேர்ல கேட்டேனுங்க.... நல்ல பேரு... கலக்குங்க...

மாதவராஜ் said...

உங்களையும்,எழுத்துக்களையும் பிடித்துவிட்டால், பெயரும் தன்னாலேயே பிடித்துப் போகும்.

கும்க்கி said...

50:50
வரவேற்ப்பும் எதிர் ஆலோசனைகளும்.
அட்லீஸ்ட் டெம்ப்ளேட் மாற்றப்படும் என நம்பப்படுகிறது.
என்ன இருந்தாலும் மனசு முழுமையாக ஏற்றுக்கொள்ள நாளாகும்.
வழக்கம் போல “பரவால்ல”

ஸ்ரீதர் said...

உங்கள் பெயர் ஓகே.ஆனால் புலம்பல்கள் என்பதை விட வேறு ஏதாவது வைத்திருக்கலாமே தாமிரா.sorry எனக்கு உங்கள் பழைய பேர் மிகவும் பிடித்திருந்தது.வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

///‘ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது மணக்கும்’ என்று ஒருவர் கூறி புல்லரிக்க வைக்க//

உண்மைய சொன்ன ஏங்க கோவிச்சிகிறிங்க!

ரமேஷ் வைத்யா said...

ஆதிமூலகிருஷ்ணன்... வித்தியாசமான, கேட்சியான, நினைவில் நிற்கக் கூடிய இனிய பெயர்.
இதை விட்டுவிட்டு முதலில் தாமிரா என்று வைத்துக்கொண்டதே தவறு. தொடர் வெற்றிகளுக்கு அண்ணனின் அட்வான்ஸ் வாழ்த்துகள். (அட்வான்ஸ் எங்கே என்றெல்லாம் கேட்கப்பிடாது)

வெட்டிப்பயல் said...

பூவை பூனும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் ;)

ஆதிமூலகிருஷ்ணன் எழுதறதுக்கு கொஞ்சம் பெருசா இருக்கே, இதை சுருக்கி, கிருஷ்னு சொல்லலாமா? ஏன்னா ஒவ்வொரு இடத்துலயும் உங்க பேரை டைப் பண்ணி சொல்றதுக்கு கொஞ்ச சோம்பேறி தனமா இருக்கும்.

Massattra Kodi said...

மிகவும் பொருத்தமான பேர்தான். ரங்கமணிகள் எல்லோரும் "ஆதிமுலமே" ன்னு உங்களை நம்பித்தானே இருக்காங்க !

இந்த வித்தியாசமான இயற்பெயருக்கு என்ன காரணம் ? (இதை வெச்சு ஒரு பதிவு போட்டால் அதுக்கு நான் பொறுப்பல்ல)

வாழ்த்துக்கள்! பேர் ரொம்ப நல்லா இருக்கு. (யாருக்குத்தான் சாக்லேட் ஆசை இல்லை ?)

அன்புடன்
மாசற்ற கொடி

இரா.சிவக்குமரன் said...

சொந்த பேருல இருக்கிற சந்தோஷம் புனை பெயருல வராதுங்க. சுஜாதா ஒரு கற்றதும் பெற்றதும்ல சொல்லி இருப்பாரு.. இந்த பேரு கொஞ்சம் வயசான பெருசு மாதிரி இருந்தாலும் நிஜமா நல்லா இருக்குங்க..

விஜய் ஆனந்த் said...

அப்போ சுப்பையா???

:-))))).....

எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்!!!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராஜு.!
நன்றி மின்னல்.!
நன்றி நிஜமாநல்லவன்.!
நன்றி ச்சின்னவர்.!
நன்றி மேவீ.!
நன்றி பப்பு.!

நன்றி மாதவராஜ்.!
நன்றி கும்க்கி.!
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி வால்பையன்.!
நன்றி ரமேஷ்வைத்யா.!
நன்றி வெட்டிப்பயல்.!
நன்றி மாசற்றகொடி.!
நன்றி சிவக்குமரன்.!

நன்றி விஜய்ஆனந்த்.! (மெயில் ஐடியை வைத்து கேட்கிறீர்கள் என எண்ணுகிறேன். சுப்பையா என்பது என் தந்தையாரின் பெயர்.)

Kathir said...

//இந்த பேரு கொஞ்சம் வயசான பெருசு மாதிரி இருந்தாலும் நிஜமா நல்லா இருக்குங்க.//

ஆமாங்க...

பரிசல் அண்ணே பதிவுல, நீங்க பேரு மாத்தப்போற செய்தி படிச்சவுடனே நீங்க "ராமதாசன்" ன்னு வைப்பீங்கன்னு நினைச்சேன்...


(பேருல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி, ஒரு கால் மாறிப் போச்சு......)

:)))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எழுத்தாளரும், இயக்குநருமான தாமிராவே போன் செய்தாரா..? ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதா..? நான் பேசி சமாளித்திருப்பேனே..?

இந்தப் பெயர் கடவுளின் பெயராக இருந்தாலும், உங்களின் உண்மையான பெயராக இருந்தாலும் எனக்கென்னவோ இதனையும் சுருக்கி ஆதிகிருஷ்ணா என்றோ, தாமிரகிருஷ்ணா என்றோ வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது..

Anonymous said...

வாழ்த்துக்கள் தாமிரா(எ)ஆதிமூலகிருஷ்ணா

தராசு said...

வாழ்த்துக்கள் தல,

எப்படியோ கடசியில சொந்தப் பேருல வந்துட்டீங்க, ஆமா உங்க பாஸ்போர்ட்ல இவ்வளவு நீள பெரையும் உங்க இனிஷியலோடு சேர்த்து எப்படி எழுதறீங்க????

புருனோ Bruno said...

//திருநெல்லை பாணபத்திர செம்பா புலவர் //

இது டாப் !!

கார்க்கி said...

//வந்துட்டீங்க, ஆமா உங்க பாஸ்போர்ட்ல இவ்வளவு நீள பெரையும் உங்க இனிஷியலோடு சேர்த்து எப்படி எழுதறீங்க????//

அதெல்லாம் அவங்களே பிரிண்ட் பண்ணிடுவாங்க.. இவரு எழுத தேவையில்ல

அருண்மொழிவர்மன் said...

உண்மையில் நான் கூட ஆனந்தவிகடனில் எழுதும் தாமிராவும் நீங்களும் ஒருவர் என்றுதான் நினைத்திருந்தேன்

தொடரவிருந்த குழப்பத்தை தவிர்த்ததற்கு நன்றிகள்

கோவி.கண்ணன் said...

ஆமூகி க்கு வந்தனங்கள். அட சுறுக்கமாக வைத்தாலும் நல்லா இருக்கு, பரிந்துரையில் இதையும் பரீசிலனை பண்ணிக் கொள்ளுங்கள். இட் இஸ் டூ லேட்டா....
:)

கிரி said...

வாழ்த்துக்கள் ஆதிமூல கிருஷ்ணன்

ஊர் சுற்றி said...

நட்சத்திரமாக மாறியதற்கு வாழ்த்துக்கள் ஆதிமூல கிருஷ்ணன் அவர்களே!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கதிர்.!
நன்றி உண்மைத்தமிழன்.! (உரிமையான ஈடுபாட்டுக்கு நன்றி அண்ணன்.!)
நன்றி வேலன்.!
நன்றி தராசு.!
நன்றி டாக்டர்.!
நன்றி கார்க்கி.!
நன்றி அருண்மொழி.!
நன்றி கோவிஜி.!
நன்றி கிரி.!
நன்றி ஊர்சுற்றி.!

velumani1 said...

அப்பாடா ! இனிமே ஊர்ல தண்ணி, சாப்பாட்டு பிரச்னை ஏதும் வராது.
ஏனா? அதான் பேர் மாறிடுச்சில்ல?

பார்வையாளன் said...

"நல்ல வாசிப்பனுவமும் / தொடர்ந்த வாசிப்பனுபவமும் இல்லாமல் எழுதாதீர்கள் எழுதாதீர்கள் என்று அண்ணன்மார்கள் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்."

அப்படி சொன்ன அண்ணன்மார்கள், மிஷ்கின் விவாகரத்துக்கு பின் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு விட்டார்கள்..

படித்து எழுவதற்கு , இலக்கியம் என்பது எக்ஸாம் அல்ல... வாசித்து எழுத , பதிவுகள் என்பது நோட்ஸ் அல்ல என சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

வாசிப்பு அனுபவத்தை விட வாழ்க்கை அனுபவம்தான் இப்போதைய பாஷன்..

பெயர் மாற்றியதற்கு பின் இருக்கும் நல்லெண்ணத்தை பாராட்டுகிறேன்...